தேவதை 34
கிரஷுக்கு அழைப்பு விடுத்து அவளுக்கான விடுமுறையை அவனே கூறினான். அவனுடைய மேனேஜருக்கும் பார்த்து கொள்ள சொல்லி கூறியவன். தனக்கான விடுமுறையை கூறினான். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டபடி அவளைப் பார்க்க. ஓய்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்தாள் மாலினி. உறக்கமா மயக்கமா என்று தெரியாத நிலைதான். திரும்பி மகளைப் பார்க்க.
அவள் விளையாட்டு சாமான்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் உயரத்திற்கு மடிந்து அமர்ந்தவன்.
“ஷாலு குட்டி, அம்மாவ பாத்துக்கோ நான் உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சமைச்சு கொண்டு வரேன்“, என்றான்.அவள் புரிந்தது போல தலையாட்ட குழந்தை எங்கும் சென்று விடக்கூடாது என்று வெளிக் கதவை சாத்திவிட்டு சமையலறைக்கு சென்றவன். மூவருக்குமான உணவை தயார் செய்தான். குழந்தைக்கும் அவனுக்கும் இட்லி செய்துவிட்டு. பச்சரிசி வறுத்து மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் கஞ்சி செய்தான். பால்குடிப்பதற்கே அவள் சிரமப்பட்டாள். கண்டிப்பாக இட்லியை மென்று அவளால் சாப்பிட முடியாது என்று தோன்றியது. பிறகு மருத்துவருக்கு அழைப்பு விடுத்து விட்டு மதியத்திற்கும் சேர்த்து ஒரு சாப்பாட்டை கிளறி வைத்துவிட்டு மாலினியின் அறைக்குள் வந்தான்.
குழந்தை அங்கு இல்லை பதறிவிட்டான். வெளிக் கதவை கூட சாத்தி தானே வைத்திருந்தேன். இங்கும் அங்கும் அலைபுருதளோடு அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்ல போக.
“ப்பா”, என்று ஒரு ஈன ஸ்வரம். அறையின் உள்ளே தான் கேட்டது திரும்பி பார்த்தான். குளியலறை வாசலில் உடையை தூக்கிப் பிடித்தபடி அவனை உருத்து விழித்துக் கொண்டு நின்று இருந்தாள் ஷாலினி.
ஒரு நிமிடத்தில் நெஞ்சில் நீர் வற்றிவிட்டது அவனுக்கு.அவளைப் பார்த்த நொடி தான் வயிற்றில் பாலை வார்த்தது போல ஒரு உணர்வு. அவளை நோக்கி நடந்து செல்லும் போது தான் அவள் அழைத்த
‘ப்பா’ அவனுக்கு உரைத்தது.
“குட்டி, என்ன அப்பான்னு கூப்பிட்டீங்களா? “, என்று கேட்டபடியே அவளை அணைக்க போக. அவன் முன்னால் அவன் நெஞ்சில் கையை வைத்து தடுத்தவள்.
‘கக்கா ‘ என்றாள். அப்பொழுதுதான் அவள் டாய்லெட் போய்விட்டு கழுவ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு உரைத்தது. இவ்வளவு நாள் எல்லாவற்றையும் மனைவியே பார்த்துக்கொள்ள அவளுக்கு அது தெரிந்திருக்கவில்லை. இப்போதும் தன்னை ஆசையாக அவள் அப்பா என்று அழைக்கவில்லை என்றாலும் அழைத்து இருக்கிறாள் அல்லவா???. அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. உள்ளே சென்று பார்த்தான். சரியான இடத்தில் அவள் இருந்திருந்தாள்.
அப்படி பழக்கப்படுத்திய தன் மனைவியை திரும்பி பார்த்தான். மனதினுள் அவளைக் கொஞ்சினான். குழந்தையை சுத்தம் செய்தவன். அப்படியே ஹீட்டரை போட்டுவிட்டு. அவளை அப்படியே காக்க குளியல் குளிக்க வைத்து அழைத்து வந்து அவளுக்கு உடை அணிவித்து விட்டான். அப்பொழுது சரியாக அழைப்பு மணி ஒலித்தது. பிளாட்டின் கதவை திறக்க அங்கே பெண் மருத்துவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
“மிஸ்ஸஸ் மாலினி”, என்று அவர் தயக்கத்துடன் நிறுத்த.“எஸ் டாக்டர் நான்தான் போன் பண்ணேன். என்னோட மனைவி தான். அதிகப்படியான டெம்பரேச்சர். அன்கான்ஷியஸா வேற இருக்காங்க”, என்று கூறியபடியே உள்ளே அழைத்துச் சென்றான்.
மருத்துவர் பரிசோதிப்பது கூட தெரியாமல் இருந்தாள். “எப்போதிலிருந்து இப்படி இருக்காங்க டெம்பரேச்சர் ரொம்ப அதிகமா இருக்கு?, குழந்தையை அவங்க கிட்ட விடாதீங்க. பிளட் டெஸ்ட் எடுக்கணும். இப்படியே இருந்தா சரி இருக்காது ட்ரிப்ஸ் ஏத்துறது நல்லது. நான் அவங்களுக்கு இன்ஜெக்ஷன் போடுறேன். நீங்க ஏதாவது ஒரு ஹாஸ்பிடல்ல சேர்த்திருங்க. இல்ல என்னோட டிஸ்பென்சரில கூட அழைச்சிட்டு வாங்க“, என்று கூறியவர்.
அவளுக்கான மருந்து மாத்திரைகளை கொடுக்க. ஆம்புலன்ஸை வரவேற்று ஸ்ட்ரக்சனில் மனைவியை படுக்க வைத்தவன். அந்தப் பெண் மருத்துவர் டிஸ்பென்சரிக்கே அழைத்துச் சென்றான். குழந்தை அவன் கையிலே தான் இருந்தது. எத்தனை நாட்களாக இதற்காக அவன் ஏங்கி இருப்பான். ஆனால் இப்பொழுது அதை முழுதாக அனுபவிக்க முடியவில்லை. மனைவியின் உடல்நிலை முதன்மை பெற்றிருந்தது.
குழந்தைக்கு அவளுக்கும் வேண்டிய இரு உடைகளை எடுத்துக் கொண்டவன் டவல் உட்பட தேவையான பொருட்களையும் எடுத்து வந்திருந்தான். பரிசோதனைகள் எல்லாம் முடியும் வரை கூட அவளுக்கு விழிப்பு தட்டவில்லை. டெங்கு என்ற பரிசோதனை முடிவுகள் வர.
நல்லவேளை ஆக மருத்துவமனையில் சேர்த்து விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். எந்த வகையான காய்ச்சல் என்று தெரிந்ததும் அதற்கான மருத்துவத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார் மருத்துவர்.
அது பெரிய மருத்துவமனை எல்லாம் இல்லை மூன்று படுகைகளை கொண்ட ஒரு அறை இரண்டு தனி தனி படுக்கைகளை கொண்ட தனி தனி அறை. இவன் தனி அறையை எடுத்துக் கொண்டு மனைவியை பார்த்துக் கொண்டே அமர்ந்து விட்டான். அன்றைக்கு அவன் சமைத்து வைத்த உணவை எடுத்து வந்து விட்டான்.
ஆனால் அடுத்த நாள் குழந்தைக்கு வெளியில் தான் வாங்கி தர வேண்டும். அது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது. மாலினிக்கும் பிடிக்காது. என்ன செய்வது தந்தையை துணைக்கு அழைத்து விடலாமா??. என்று அவன் சிந்திக்கும் போது தான். அவர் தொழில் ரீதியாக வட மாநிலம் சென்று இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இந்நேரம் தங்கை உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால். அவளை தனியாக விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. இரவு உணவிற்கு உயர் தர ஹோட்டலில் இருந்து அவனுக்கும் குழந்தைக்கு வேண்டியதை இருக்கும் இடத்திற்கு வர வைத்தவன். மனைவியை அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டே இருந்தான். மாலை மங்கு போது. காய்ச்சல் சற்று மட்டு பட்டு இருந்தது. இரண்டு நாள் ஏனும் அங்கு இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட்டார். அதன் பிறகும் உடல் சோர்வு இருக்கும் என்று கூறினார்.
கிரஷில் இருக்கும் ஆசிரியருக்கு அதை தெரிவித்து விட்டான். மூன்று நாட்களுக்கு அவரையே பார்த்துக் கொள்ள கூறினான். இரவு ஒன்பது மணியை தாண்ட குழந்தை தூக்கத்தில் சொருகினாள். மதியமே அவன் மடியில் தான் உறங்கினாள். ஆனால் இப்பொழுது தாய் மடியை தேடினாள். பொறுமையாக குழந்தைக்கு புரிய வைக்க முயன்றான். ஆனாலும் அழுதால் அரற்றினாள். ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து தோளில் போட்டு தட்டி உலாத்தியப்படியே உறங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவளும் லேசில் உறங்கவில்லை. நேரம் சென்று கொண்டே இருக்க. மெல்ல பாடலைக் கூட பாடினான். அவ்வளவாக குரல் வளமும் ராகமும் இல்லை என்றாலும். தாலாட்டுப் பாடலுக்கு அதெல்லாம் அவசியமற்றதல்லவா??.
“கண்ணே கலைமானேகன்னி மயிலெனக் கண்டேன்உனை நானே அந்திப் பகல் உனை நான்பார்க்கிறேன் ஆண்டவனைஇதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோராரிராரோ ஓராரிரோ”….
ஆராரிராரிராரோ மட்டும் ராகம் இடித்துக் கொண்டிருக்க. அதுதான் மாலினிக்கு லேசான துயில் கலைப்பு ஏற்பட்டது. நன்றாக கண்களை விரித்து பார்த்தாள் மாலினி. ஆனாலும் தெளிவில்லாமல் இருந்தது. புது இடம் பரிச்சயமாகத சூழல். ஆனால் குரல் மட்டும் வெகு பரிச்சயமான குரல். அரவிந்த் குழந்தையை தூங்க வைப்பதில் மும்முரமாக இருக்க அவளை கவனிக்கவில்லை. ஆனால் அவள் அவனை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தாள். குழந்தையை பார்த்தாள். அவன் தோளில் நன்றாக உறங்கி இருப்பது கூட தெரியாமல் அவளை இன்னும் தட்டிக் கொடுத்தபடி பாட்டு பாடி கொண்டு இருந்தான். அவளுடைய கணவன். நன்றாக கண்களை விரித்து பார்த்தாள். யார் சொன்னார்கள் ஆண்களிடம் தாய்மை இல்லை என்று??. ஆண்களிலும் தாய் இருக்கிறார்கள் என்று அவனைப் பார்த்து தெரிந்து கொண்டாள். குழந்தையை ஊன்றி கவனிக்கும்போது தான் அவள் வேறு உடையில் இருப்பது தெரிந்தது. எத்தனை மாதங்களாக இந்த நாளுக்காக அவன் ஏங்கி இருப்பான்??. இன்று அவன் நினைத்ததை சாதித்து விட்டான் என்ற எண்ணம் அவள் இதழ்களை லேசாக விரிய வைத்திருந்தது புன்னகையாள். ஏதோ ஒரு ஊந்துதலில் அவள் புறம் திரும்பியவன். அவள் விழி விரித்து இருப்பதை பார்த்துவிட்டு அவசரமாக அவளை நெருங்கினான்.
“மாலினி இப்ப ஓகேவா?. ஷாலு குட்டி உங்க அம்மா கண்ணு முழிச்சுட்டாங்க பாரு? “, என்று மகளை திருப்பும் போது தான் அவள் உறங்குவது தெரிந்தது.
“பரவால்ல நான் பாடின இந்த கேவலமான பாட்டுக்கு என் பொண்ணு தூங்கி இருக்காளே? “, என்று சிரித்துக் கொண்டு அவனை அவனே கிண்டல் அடித்தான்.
ஆனால் அவள் சிரிக்கவில்லை. அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மாலினி”, என்று அவள் கண்ணுக்கு முன்னால் தன் கையை ஆட்டினான்.“ம்ம்ம், உண்மையிலேயே ரொம்ப நல்லா பாடுனீங்க? “, என்றாள். அவள் இதழ் விரித்து.
“ அப்படியா அப்ப உன்னையும் பாடி தூங்க வைக்கவா? “, என்று அவன் புன்னகை மாறாமல் கேட்டான்.
“உங்களோட பாட்டுல தான் எனக்கு விழிப்பு தட்டிச்சு? “, என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.
“நீ என்ன சொல்ல வர கேவலமா பாடி உன்னோட மயக்கத்தையே தெரிய வச்சிட்டேன்னு சொல்ல வரியா??. அப்ப யாரெல்லாம் மயங்கி இருக்காங்களோ அவங்கள எல்லாம் பாடி பாடியே எழுப்பி விடலாம் அப்படித்தானே??”, இலகுவாக கேட்டான்.அதற்கு அவள் வெறும் புன்னகையை மட்டும் பதிலாக கொடுக்க. குழந்தையோடு அவள் அருகில் சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன். அவள் தலையை பாதுரமாக தடவி கொடுத்தான்.
“இப்போ உடம்பு எப்படி இருக்கு? “, என்று கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் கையை வைத்து பார்த்தான். அவள் மெல்ல இரு பக்கமும் தலையை ஆட்டி பரவாயில்லை என்று கூற.“ரொம்ப பயந்துட்டேன்டி“, என்றான் நிறுத்தி நிதானமாக.
“நீங்க பயந்தீங்களா? “, என்று அவள் கேள்வி எழுப்பினாள்.
“நான் மட்டும் இல்ல பாப்பாவும் ரொம்ப பயந்துட்டாள். நானும் தான் உனக்கு ஏதாவது ஆயிடுமோனு ரொம்ப பதறிட்டேன். நீ கண் விழிக்கவே இல்லை ரொம்ப பயமாயிடுச்சு. டாக்டர் வேற உனக்கு டெங்குன்னு சொன்ன உடனே இன்னும் பதட்டம் அதிகம் ஆயிடுச்சு. அதுக்கு இப்ப மெடிசன்ஸ் இருக்குதான். ஆனாலும் சில பேர அது நம்மகிட்ட இருந்து பிரிச்சிடுதே. எங்க உன்னை இழந்திருவேன்னு பயந்துட்டேன். தனியா குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன பண்ணுவேன்னு கலக்கிட்டேன்”, என்று அவன் பேசிக் கொண்டே இருக்க.
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்க”, என்றால் அவள் மெல்லிய குரலில். தலையை வருடி கொடுத்துக் கொண்டிருந்தவன் அப்படியே கரத்தை இறக்கி அவள் கன்னத்தை லேசாக கிள்ளினான்.
“யார் இருந்தாலும் என் மாலு குட்டி மாதிரி வருமா??. ஷாலு மட்டும் நீ இல்லாம இருக்க மாட்டான்னு நினைச்சியா??, நானுமே நீ இல்லாம இருக்க மாட்டேன். எமன் கிட்ட வந்து போராடுவேன். போர் கொடி நாட்டுவேன். உண்ணாவிரதம் போராட்டம் ஏதாவது செஞ்சு உன்னை மீட்டு கொண்டு வந்துருவேன். சத்தியவானுக்கு சாவித்திரி இருந்த மாதிரி, இந்த மாலினிக்கு இந்த அரவிந்த் இருப்பான் “, என்றான் வீர வசனமாக.
அவன் பேச்சில், உண்மையில் அவள் அவனுக்கு மடிந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். இவன் ஏன் தனக்கு முன்பே பரிட்சயமாகவில்லை??. இவன் ஏன் தன்னை முதல் திருமணம் செய்யவில்லை??. இவன் ஏன் தனக்கு முதல் கணவனாக வரவில்லை??. இப்படி எத்தனை முறை நினைத்தாளோ அவள் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வர. அதை தன் கரம் கொண்டு துடைத்து விட்டான் அரவிந்த்.
“என்னோட மாலு எப்பயும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். கோபம் கூட படலாம் ஆனால் அழக்கூடாது. இப்போ உனக்கு கோபத்தை வர வைக்கிறேன் பாரு“, என்றவன். தன் ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து யோசிப்பது போல பாவனை செய்துவிட்டு. அவள் புறம் கண்களை சிமிட்டியபடி திரும்பியவன்.“மாலு, ஷாலு, ஆலு, ரைமிங்கா இன்னொரு ஒரு குட்டி டாலு கொண்டு வரலாமா? “, என்று கண்ணடித்து கேட்க முதலில் அவள் புரியாமல் விழித்தாள். அந்த மாலுவும் ஷாலுமும் அவளுக்கு புரிந்தது. ஆலு??, என்று முதலில் யோசித்தாள். அது அவன் பெயரை தான் குறிப்பிடுகிறான் போல என்று பிறகு புரிந்து கொண்டாள்..
டாலு??, என்று சிந்தித்தவள் அடுத்த குழந்தைக்கு தான் அவன் அடி போடுகிறான் என்று தெரிந்து போய் கோபமாக அவனை முறைத்து பார்த்தாள்.
“எவ்வளவு உடம்பு சரியில்லைன்னாலும் இதுல மட்டும் தெளிவா இரு”, என்று மீண்டும் அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளி கொஞ்சினான்.
அவள் தடுக்கவும் இல்லை, அவனை முறைக்கவும் இல்லை. கோபம் கொள்ளவும் இல்லை. கண்களை சிமிட்டியபடி அவ்வப்போது தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருகிலேயே நீளமாக போடப்பட்டிருந்த பெஞ்சில் மகளைப் படுக்க வைத்து தலையணையை அழைப்பாக கொடுத்துவிட்டு சேரை இழுத்து போட்டு மனைவியின் அருகில் அமர்ந்தான். காலையிலிருந்து நடந்த சம்பவத்தை ஷாலினியின் அழைப்பை சில்மிஷங்களை, அழுகையை என்று ஒவ்வொரு பரிமாணத்தையும் குழந்தையைப் போலவே அவளுக்கு விளக்கி கூறிக் கொண்டிருந்தான். அதில் அவனுக்கு ஷாலினியே தெரிந்தாள். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்துக் காட்டினான்.
“முதல் முறையா அப்பானு கூப்பிட்டாள். ஆனா என்னால அதை ரசிக்க முடியல?. ஆனாலும் கொஞ்சி தூக்க போயிட்டேன். அப்புறம் தான் கக்கான்னா”, என்று அழகான புன்னகையை வெளிப்படுத்தினான்.
“சும்மா சொல்லக்கூடாது சரியான இடத்துல கரெக்ட்டா போய் இருந்தா. இல்லன்னா பாத்ரூமில் கழுவி விட வேண்டியது இருந்திருக்கும். அதுக்கு உன்ன தான் நான் பாராட்டியாகணும். நீ நல்லா பழக்கப்படுத்தி இருக்க அவள. அடுத்த குழந்தையையும் பழக்கப்படுத்தி விட்டுடு”, சைக்கிளை கேப்பில் கடாவையும் வெட்டினான் .
சோர்வு அதிகப்படியாக அவளை ஆட்கொண்டிருந்ததால். அவன் பேசுவதற்கெல்லாம் பதில் கூற முடியவில்லை. அவன் கடா வெட்டியதற்கும் திருப்பி கொடுக்க முடியவில்லை. அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டே அவன் பேசுவதை கேட்டு உள்வாங்கிக் கொண்டு இருந்தாள். அவன் விளையாட்டு போல சொன்னாலும் மிக சிரமப்பட்டு இருக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. ஒரு தாயாக ஷாலினியை மட்டுமல்ல, செய்யாத அவளையும் பார்த்துக் கொண்டான் என்பது அவளுக்கு புரிந்தும் புரியாமலும் தான் இருந்தது இப்பொழுது அவன் சொல்லும்போது. மிக மிக தெளிவாக புரிந்தது. அவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட பிடித்தங்கள். முதல் முறையாக காதலாக மாறியது.
முதல் காதல் அவளுக்கு. ஆனால் அவனுக்கு அது இரண்டாவது காதல். ஆனாலும் உண்மையாக அவளை காதலிக்கிறான் இன்னும் அதை அவளிடம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவளுக்கு முதல் காதல் அவன் மீது ஏற்பட்டு விட்டது . கணவன் என்ற ஒருவனிடம் அவளுக்கு காதல் என்னால் வரை ஏற்பட்டதில்லை. வெறுப்பு மட்டுமே மண்டி கிடந்தது. இரண்டாம் கணவன் தான், ஆனால் அவளுக்கு அவன் முதல் காதலன். பேச்சால் செய்கையால், உணர்வுகளால், தாய்மையால், அவள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டான் அந்த காதலன். கணவனாகிய பிறகு காதலன் ஆகிறான்.
Malini ku aravind mela nambikai mattum illa kadhal um vandhuduchi .shalini yum avan ah appa nu koopitu ta ah
Interesting
ipo puriyutha malini avan unaumkolanthaium eppadi pathukuran unaku na eppadi thudkiran paru . kandipa malini ku lice vanthuduchi
😍😍😍😍😍💖💖💖💖💖💖