தேவதை 35
இரவு செவிலியர் அவளுக்கு வேண்டிய ட்ரிப்சைய்யும் மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு சென்றார். அவன் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான். அவள் கண்கள் மெல்ல சொருக ஆரம்பித்தது. அவன் தன் பேச்சை நிறுத்திவிட்டு. மகள் அருகில் சென்று அவளை ஒட்டினார் போல படுத்து கொண்டவன். மனைவியை பார்த்துக் கொண்டே உறக்கத்தை தழுவினான்…
மீண்டும் விடியலில் அவள் துயில் களைய. திரும்பி தன் கணவனை பார்த்தாள். அவளைப் பார்த்தாற் போல ஒடுங்கி படுத்திருந்தவன் மகளை இறுக்கமாக தன் கைவலைவிற்குள் பிடித்திருந்தான். அதற்கும் அருகில் சிறு தலையணை வேறு, மகள் விழுந்து விடக்கூடாது என்று. அந்த சிறிய இடத்தில் இரண்டு பேர் படுவதே சிரமம். அதில் தலையணையை வேறு வைத்திருக்கிறானே என்று சிந்தனை தோன்றியது அவளுக்கு. இதற்கு குழந்தையை சுவரின் பக்கம் படுக்க வைத்திருந்தால், இந்த சிரமம் இருந்திருக்காதே இவனிடம் காலையில் இதை கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கணவனையும் மகளையும் அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தாள். பார்க்க பார்க்க சலிக்கவில்லை அவளுக்கு.
அவன் இரவில் கூறியது வேறு ஞாபகம் வந்தது.‘டாலு’ எந்த பெயரின் சுருக்கமாக இருக்கும்?? என்று சிந்தித்தாள். எதுவும் புலப்படவில்லை. ஷாலினியின் உண்மையான பெயர் ரியாவாக இருந்தாலும். அவள் மனதில் இருந்த பெயரை அந்த குழந்தைக்கு ஷாலினி என்று வைத்திருந்தாள். தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் வைக்க வேண்டும் என்று நினைத்த பெயர் அது. அவளிடம் ரியாவுக்கான பர்த் சர்டிபிகேட் இருந்திருக்கவில்லை. பள்ளியில் சேர்க்கும்போது வாங்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று நிறைய பேரிடம் விசாரித்துக் கொண்டே இருந்தாள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே அதற்குள் ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
குழந்தைக்கு பர்த் சர்டிபிகேட் வாங்குவது என்றால் கணவனின் பெயர் குறிப்பிட வேண்டும். ஆகாஷின் பெயரை குறிப்பிட அவளுக்கு விருப்பமில்லை. விவாகரத்தான பிறகு குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சிங்கிள் மதர் என்று கூறி அவள் பெயரையே முன்னிறுத்தி வாங்க நினைத்து இருந்தாள். ஆனாலும் குழந்தை எங்கே பிறந்தது எப்படி பிறந்தது என்று கேள்விகள் எழுமே அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு. எத்தனையோ நாட்கள் அதை எண்ணி குழம்பி தவித்து இருக்கிறாள். ஆனால் இப்பொழுது அதற்கான கஷ்டம் எதுவுமே அவளுக்கு இல்லை. இவன் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணம் தோன்றியது.
தங்கையின் குழந்தையாக ரியா என்ற பெயரில் ஒரு பர்த் சர்டிபிகேட் இருக்கிறதே அதை என்ன செய்வான்??. அது இருந்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் ஷாலினியின் தந்தை வந்து கேட்டால் கொடுத்தாக வேண்டும் அல்லவா??. அவன் அன்று என்னவோ கூறினானே ???. நம் குழந்தையாக தான் இவள் இனிமேல் வளர்வாள் என்று??, அதற்காகத்தானே அவளும் இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள். அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே டாலுவுடையை ஃபுல் ஃபார்ம் என்னவாக இருக்கும் என்ற யோசனையும் அதிகமாகவே எழுந்தது.டி என்று ஆரம்பிக்கும் ஒவ்வொரு பெயராக சிந்தித்துப் பார்த்தாள். அவளுக்கே இப்போது அவன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசை துளிர்க்க ஆரம்பித்தது. தன் எண்ணம் போகும் போக்கை எண்ணி வியந்தவள். தன்னையே மானசிகமாக கடிந்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். ஆனால் அவள் பார்வையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்ட நேரம் இப்படி ஏதேதோ சிந்தனையில் இருந்தவள். பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.காலையில் அவள் கையை யாரோ பிடிக்கும் போது தான். சுய உணர்வு வந்து பார்த்தாள். குழந்தையின் பார்வையை மறைத்தார் போல் பிடித்து வைத்திருந்தான் அரவிந்த். அவள் கையில் ஏதோ ஒரு இஞ்செக்சன் ஏற்றப்பட்டது. அவள் பார்வை கணவனின் புறம் திரும்பியது . அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளும் இதழ் பிரித்தாள். செவிலியர் நகர்ந்ததும் அவள் நெற்றியில் கரத்தை வைத்து பார்த்தான்.
விடியலில் இதே போல ஒரு உணர்வு தோன்றியது அவளுக்கு. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் கனவு போல தெரிந்தது. இதோ இப்பொழுது இந்த ஸ்பரிசம். அது அவள் கணவனுடையது என்று எடுத்துக் கூறியது.
“எப்படி இருக்கு மாலினி?. இப்போ ஓகே தானே??. ஃபீவர் குறைஞ்ச மாதிரி தான் எனக்கு பீல் ஆகுது உனக்கு எப்படி தோணுது? “, என்று பரிதவிப்புடன் கேட்டான் அரவிந்த்.
“பரவால்ல கொஞ்சம் தெளிவா தான் இருக்கு. உடல் வலி சூடு இதெல்லாம் கொஞ்சம் குறைஞ்சா மாதிரி தான்
தோணுது“, என்றாள் மெல்லிய குரலில். மீண்டும் அவள் அருகிலேயே மகளை வைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டான். அவள் தாயிடம் செல்ல போக.
“ இல்லடா அம்மாவுக்கு ஜுரம் உடம்பு வலிக்குது நீங்க அப்பா கிட்டே இருங்க. அம்மா இங்க இருந்து உங்கள பாக்குறேன்”, என்று கூறி விட்டாள்..
தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதை மகள் புரிந்து கொண்டாள் போலும் . அமைதியாக தந்தையின் மடியிலேயே அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனை பார்த்தவள்.
“நேத்து ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். இதுபோல எனக்கு ஆனது இல்லை இதுதான் முதல் முறை. குழந்தை என்ன செய்யுமோனு தான் ரொம்ப பயந்தேன். ஆனா நீங்க அவள மட்டும் இல்லாம என்னையும் நல்லா பாத்துக்கிட்டிங்க. ஆனா தனியா கஷ்டப்பட்டு இருப்பீங்க”, என்று அவள் பேசிக் கொண்டே போக அவள் உதட்டின் மீது விரலை வைத்தான்.
“ குழந்தை இருக்கறதுனால கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. அதுவும் இவள் என்கிட்ட வர மாட்டாள் இல்லையா??. உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா உடனே புரிஞ்சுகிட்டாள். முதல்ல அப்பாவ கூப்பிடலாம்னு நினைச்சேன் அவர் ஊருக்கு போயிருக்காருன்னு அப்புறம் தான் ஞாபகம் வந்தது.. எதிர் வீட்ல உதவி கேட்கலாம்னு கூட யோசிச்சேன். ஆனா நாம இனிமே இப்படித்தான் காலம் முழுக்க இருக்கணும். அப்ப யாராவது நமக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா??. தனியா போராடலாம்னு முடிவு பண்ணிட்டேன். உனக்குஒன்னும் இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் எனக்கு சுவாசம் சிராச்சு”.
” எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது??“, என்று மாலினி கேட்க அவன் புருவம் இடிங்கியது. என்ன கேட்கிறாள் என்று புரியவில்லை.
“எங்க வீட்ல எங்க அப்பா தம்பி யாருமே இப்படி இல்ல. உடம்பு சரியில்லை என்றால் ஹாஸ்பிடல் கூட கூட்டிட்டு போக மாட்டாங்க. அம்மா மட்டும்தான் என்ன பார்த்துப்பாங்க. ஒரு ஆணா இருந்துகிட்டு ஈகோ இல்லாம எப்படி இருக்கீங்க? “.
“இப்பொழுது தான் அவள் கூற வருவது அவனுக்கு புரிந்தது.“ நான் தான் என் கதைய சொல்லி இருக்கேனே?? இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல, என் தங்கச்சியை நான் தான் பாத்துக்கிட்டேன். ஒரு காலம் வரைக்கும் அப்பா பாத்துக்கிட்டாரு ஒரு வயசுக்கு மேல நான் தான் அவளை பாத்துக்கிட்டேன். அவள் உடம்பு சரி இல்லாம போகும்போது. நான்தான் இதெல்லாம் பண்ணுவேன். அவ இல்லனாகும் போது என்னோட ஒரு உறுப்பை இழந்துட்ட மாதிரி தோணுச்சு. அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது அந்த பீல் இருந்தது. ஆனா இனிமே அவள் திரும்பி வராத இடத்துக்கு போயிட்டான்னு தெரியும் போது சத்தியமா என்னால தாங்கிக்கவே முடியல. ஆனால் வாழ்க்கை இது தான் இல்லையா??. ஒருத்தருடைய இழப்பை தாண்டி தான் நம்ம முன்னேறி வாழ்ந்தாகணும். அது காதலாக இருக்கலாம் இல்ல உயிர் போகும் நிலையாக இருக்கலாம். உனக்கு ஒன்னு தெரியுமா??, சாதனா வயசுக்கு வந்ததை கூட என்கிட்ட தான் முதல்ல சொன்னா. அதுவும் பயந்து போய் என்கிட்ட காட்டினாள்??. நான் என் அத்தை கிட்ட வீடியோ கால் மூலமாக கேட்டு தெரிஞ்சுக்கிட்டு தான் அவள் வயசுக்கு வந்ததை அவள் கிட்டயே சொன்னேன். பெண்ணா இல்லாம, குழந்தையும் பெறாம, என்னோட ஒன்பது வயசுல இருந்து என் தங்கச்சிக்கு தாயா நான் தான் இருக்கேன். என் தங்கச்சியை காப்பாத்தாம விட்ட வருத்தம் இருக்கு. இவளை பார்த்ததுக்கு அப்புறம். இவளையாவது நல்லபடியா வளர்க்கணும்னு முடிவெடுத்தேன். உன் விஷயத்துல நான் உன்னை வற்புறுத்தி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுக்காக சாரி “, என்று பொறுமையாக கேட்டான்.
‘ரொம்ப சீக்கிரம் கேக்குறீங்க”, என்று அவள் சிரித்துக் கொண்டே கூறினாள். அவளுக்குத்தான் அந்த வருத்தம் இப்பொழுது இல்லையே ஏக்கங்கள் மட்டும் தானே இப்பொழுது மிச்சம் இருக்கிறது. அவள் இரவில் நினைத்தது போல அவன் தாயுமானவன் தான். தங்கைக்கு தாயாக இருந்தவன். இப்பொழுது மனைவிக்கும் மகளுக்கும் தாயாக இருக்க முயற்சித்து வருகிறான்.
” எனக்கு அதனால வருத்தம் இல்ல மாலினி. ஒரு நல்ல துணை அமைவதெல்லாம் வரம் தான். அப்படி பார்த்தா நீ எனக்கு கிடைச்ச வரம். என்னோட தங்கை குழந்தைக்கு ஒரு நல்ல தாயா இருக்க. என்னோட குழந்தைக்கும் நல்ல தாயாக இருப்ப என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு “, அவன் இருக்கமாக பேசிக் கொண்டிருக்க.
அதை எப்படி மாற்றுவது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க. அவன் ஆர்டர் செய்த ஃபுட் வந்தது. முதலில் குழந்தைக்கு ஊட்டி விட்டான் பிறகு அவளுக்கு ஊட்டி விட எத்தனித்தான்.
“ இல்ல பெட்ட மட்டும் கொஞ்சம் தூக்குங்க நானே சாப்பிடுகிறேன் ”, என்றால் அவள்.
“ நோ நோ வாய்ப்பு கிடைக்கும் போது அதை விடக்கூடாது இது எனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு இதுக்கப்புறம் இது எப்ப கிடைக்குமோ?. நான் இந்த சான்ச விடுறதா இல்ல நான்தான் ஊட்டி விடுவேன். உனக்கு ஹை டெம்பரேச்சர் இல்ல கை காலெல்லாம் நடுங்கும். ஒழுங்கா இட்லியை வாய்க்கு எடுத்துட்டு போக முடியாது “, அவன் பேசிக்கொண்டே தடுக்க தடுக்க அவள் வாயில் இட்லியை திணித்து இருந்தான். அவள் அதிர்ந்து விழித்து பார்க்க
“மென்னு சாப்பிடு”, என்றான்.“ இதுக்காக எனக்கு உடம்பு சரியில்லாமல் போகணும்னு சொல்ல வரீங்களா? “, அவள் தின்று கொண்டே கேட்க.
“ எனக்கு சான்ஸ் கிடைக்கும்னா??, எதுவா இருந்தாலும் எனக்கு பரவால்ல “, என்றான். அவள் முறைத்து பார்க்க அவன் கண் சிமிட்டினான். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வதாகவும் தொடர்ந்து கொடுக்கும் மாத்திரை மருந்துகளை சாப்பிடும் படியும் பரிந்துரைத்தார்
“அதெல்லாம் நான் நல்லா பாத்துக்குறேன் டாக்டர் என்று கூறினான். அன்று முழுவதும் கூட வெளியில் இருந்து உணவை வர வைத்தவன். அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான். முதல் என்றால் அவளுக்கு சலிப்பு தட்டி இருக்கும் ஆனால் இப்பொழுது கேட்க கேட்க சலிக்கவில்லை அவளுக்கு. மாலையில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தான். அவள் அறையில் அவளுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்தான். இரவு உணவை அவனை பரிமாறி இருவருக்கும் கொடுத்து விட்டு. போர்வையை எடுத்து வந்து அந்த அறையில் கீழே போட்டு அங்கேயே படுத்துக் கொண்டான்.
“ நீங்க ஏன் இவ்ளோ கஷ்டப்படுறீங்க எனக்கு இப்ப பரவால்ல நீங்க அங்க போய் படுத்துக்கோங்க “, என்றால் அவள் தயக்கத்துடன்.
” அப்ப கூட உன் கட்டில்ல இடம் கொடுக்க மாட்ட இல்ல? “, என்றவன் கேட்டு வைக்க அவள் கீழ் உதட்டை கடித்த படி தலை தாழ்த்தினாள்.
“ நான் காலையிலேயே உனக்கு சொன்னேன் கிடைக்கிற சான்ஸ் எல்லாம் விட மாட்டேன். நாளைக்கு நைட்டு இங்கதான் படுப்பேன். உனக்கும் எனக்கும் கூட நாளைக்கு லீவு தான் சொல்லி இருக்கேன்”, என்ற போர்வையில் படுத்தவன் இன்னொரு போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டான்.
அவள் மனதில் அவன் வந்து விட்டான் ஆனால் அவனோடு வாழ்வது என்பது அவளுக்கு சாத்தியப்படாத ஒன்றாக தான் தோன்றியது. அதற்காக காலம் முழுவதும் அவனை இப்படியே வைத்திருக்க போகிறாயா??. அவள் மனசாட்சி அவளை கேள்வி கேட்டது. வேறு திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டான் அவளுக்காக காத்துக் கொண்டே இருக்கிறேன் என்கிறான். அவள் மனம் இறங்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிறான். அப்படி சொல்லித்தான் திருமணமே செய்தான்.
ஆனால் தாம்பத்தியம் என்ற ஒன்று அவளுக்கு பிடிக்காத ஒன்றாக மாறிவிட்டது??. அதை எப்படி மாற்றுவது??. இருவரின் வாழ்க்கையை பற்றியே சிந்தித்துக் கொண்டு உறங்கியும் போனாள். மறுநாள் அவள் எழுந்தும்போது அவன் இருந்திருக்கவில்லை. சிரமப்பட்டு இறங்கியவளுக்கு இன்னுமே உடலில் சோர்வை தெரிந்தது. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வரும்போது. அறையினுள் நுழைந்தான் அரவிந்த். இருவருக்குமான தேநீர் கோப்பையை நீட்டினான்.
புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள். இருவரும் சேர்ந்து தேனீரை மட்டுமல்லாமல் தத்தமது துணையை கீழ் பார்வையால் பார்த்துக் கொண்டே பருகினார்கள். அவளை வம்படியாக அமர்த்தி வைத்துவிட்டு குழந்தைக்கு தேவையான அனைத்தையும் அவனே செய்தான். உணவுகளையும் அவனே செய்து பரிமாறினான். அவள் சிரமப்பட்டு சமையலறைக்கு சென்றாள். ஆனால் உண்மையில் அவளுக்கு கை நடுக்கம் தான் காணப்பட்டது. வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு அத்தியாவசியம் என்பதை அத்தருணத்தில்தான் அவள் உணர்ந்து கொண்டாள். இந்நேரம் அவன் இல்லை என்றால் தன்னைவிட தன் குழந்தை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பாள் என்று தோன்றியது. மனதில் இருப்பதை மறைக்காமல் கூறினாள். பார்வதி வந்து என்ன ஏது என்று கேட்டு. பிறகு விஷயம் அறிந்ததும் சற்று கோபத்துடன் அவர்களை திட்டிவிட்டே சென்றார்.
லோகநாதன் ஊருக்கு சென்றிருப்பதால் அவருக்கு அந்த விஷயம் தெரியவில்லை. அந்த வார விடுமுறை அவர் வரவும் இல்லை. அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் ஆகிவிட. அப்பொழுதும் அவளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர்கள் இருவருக்கும் தேவையானதை அரவிந்த் பார்த்து பார்த்து செய்தான். தாய் மகள் இருவரும். அதை நன்றாக அனுபவித்தார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் இருந்தது. அது ஷாலினி தந்தையுடனும் பழகிவிட்டு இருந்தாள். அந்த ஐந்து நாட்களில் மாலினியின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டான் அரவிந்த்.
apram varatha entha husband ippadi pathukitta oruthi manasula utkarama poiduvana athuvum aravind utkaralana eppadi
Aravindh iyal ba endha polithanam um illama kattura anbu ah la malini manasukula varama irundha than aachiriyam yae
Super super😍😍
💝💝💝😍😍💖💖💖💖💖