Skip to content
Home » தேவதையாக வந்தவளே 36

தேவதையாக வந்தவளே 36

தேவதை 36

மனைவியின் பார்வையில் தெரிந்த மாற்றத்தை அரவிந்த் புரிந்து கொண்டாலும். அவளை நெருங்க முயற்சிக்கவில்லை. அந்த ஐந்து நாட்களுக்கு பிறகு அவன் தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான். அவர்கள் இருவரின் வாழ்க்கையும் வழக்கமானது. மறு வாரம் சனி ஞாயிறு அன்று வந்த லோகநாதனிடம் மாலினி விஷயத்தை பகிர்ந்து கொள்ள. தன் மகன் தானும் இல்லாமல் மிக சிரமப்பட்டு இருக்கிறான் என்று புரிந்தது.

“ஏன் அரவிந்த் எனக்கு உங்க எல்லாரையும் விட தொழில் ஒன்னும் முக்கியமில்லையே. நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் எங்க இருந்தாலும் ஓடி வந்து இருப்பேன்“, என்றார்.

“முதல்ல கூப்பிடலாம்னு தான் அப்பா நினைச்சேன். ஆனா கொஞ்சம் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒன்னு உங்கள கஷ்டப்படுத்த வேணாம்னு யோசிச்சேன். இரண்டாவது என்கிட்ட என் பொண்ணு ஒட்டிக்கிட்டு இருக்காள். உங்கள பாத்தா உங்க கிட்ட வந்துருவாள். அவளுக்கான எல்லாத்தையும் நான் பார்த்து பார்த்து செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை மிஸ் பண்ண எனக்கு தோணல“, என்று கூறி முடித்து விட.

அதற்கு மேல் அவர் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மனைவியை அழைத்துக்கொண்டு பெரிய வளாகத்திற்கு வந்திருந்தான். எல்லா பொருட்களும் ஒருங்கே கிடைக்கும் இடம். ஷாலினி இப்பொழுது தாய்க்கு கை வலிக்கிறது என்றால் அரவிந்திடுமும் செல்ல பழகி இருக்க. மூவருமாக ஷாப்பிங் மாலை சுற்றி வந்தனர். தேவையான பொருட்களை வாங்கியபடி. உணவு உண்பதற்காக ஒரு கடைக்குள் வந்து அமர்ந்து விட்டனர்.

ஷாலினி ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று கேட்க. மாலினி அவளை அழைத்துச் சென்றாள்.அரவிந்த் உணவை வரவைத்துவிட்டு மகள் மனைவிக்காக காத்துக் கொண்டிருந்தான். மகளுக்கான அனைத்தையும் செய்து விட்டு, அவளை தூக்கிப் பிடித்தபடி வெளியில் வந்து உணவு விடுதியை நோக்கிய நடக்க ஆரம்பித்தவளின் முன்பு வந்து நின்றான் ஒரு நெடியவன் .

முதலில் கோபம் வந்து நிமிர்ந்து பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.

“என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு என்னோட இமேஜையே அழிச்சிட்டு, நீ மட்டும் குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கியா?? “, வன்மமாக வந்தது ஆகாஷிடம் இருந்து வார்த்தைகள்.

அவனை அந்த நேரத்தில், அந்த இடத்தில் சற்றும் எதிர்பார்க்காததால், தடுமாறி போனாள் மாலினி. அதுவும் நீண்ட வருடங்கள் கழித்து. குழந்தை அழ தயாராக இருந்தது. அவனை பார்த்து பயந்தாள். அவனின் உருவம் அப்படி உயரம் மட்டும் அல்லாமல். மலைமாடு போல உடலையும் வளர்த்திருப்பான். பத்தாததற்கு தாடி மீசை என்று காடு போல அதையும் வளர்த்து வைத்திருந்தான். அவனை பார்க்க மாலினிக்கே பயம் வந்தது என்றால், சிறு குழந்தை பாவம் என்ன செய்வாள்??.

“உன்ன நிம்மதியா வாழ விட மாட்டேன் டி. என் வாழ்க்கையை சிதைச்ச உன்ன சின்னா பின்னமா ஆக்கல, என் பேரு ஆகாஷ் இல்ல”, என்றான்.

“வேற பேர நான் சஜஸ்ட் பண்ணவா? “, அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள்

இருவருக்கும் இடையே வந்து புகுந்தபடி கேட்டான் அரவிந்த் . அவனைப் பார்த்ததும் மாலினிக்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்குத்தான் அவளின் கடந்த காலம் தெரியுமே அதனால் கணவனை எண்ணி பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரவிந்தை பார்த்ததும் ஆகாஷின் கண்களில் பயம் தெரிந்தது.“என்னடா முறைக்கிற?. வேற பேரு மாத்தறதுக்கு நான் ஒரு நல்ல பேரை சஜஸ்ட் பண்றேன். வெச்சிக்கிறியா?? “, என்று கேள்வி எழுப்பினான்..

“அரவிந்த் தேவை இல்லாம எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வராத. இவள் என்னுடைய எக்ஸ் ஒய்ஃப். யாரோ ஒரு பொண்ணு கிட்ட போய் நான் பேசல”, என்றான் அவன்.

“அவள் உனக்கு எக்ஸ் வைஃப். ஆனா அவள் என்னோட வைஃப். உனக்கு எக்ஸ் ஆயிட்டவள், இப்போ உனக்கு யாரோ தான். என் மனைவி என் குழந்தை கிட்ட நீ பேசுறதுக்கு என்னால அலோ பண்ண முடியாது. அதுவும் அவளை பழி வாங்க போறியா?? “, என்று தோரணையாக கேட்டபடியே பின்னால் அடி எடுத்து வைத்து மாலினியின் அருகில் வந்து. அவளை தன் தோள்வலைவில் நிறுத்திக் கொண்டவன்.

“ஷி இஸ் மை ஏஞ்சல். அவள தொடனும்னு நினைச்சா கூட ,ஆளே இல்லாமல் ஆக்கிடுவேன். அவளுக்கு நீ செஞ்சதுக்கு தான் உன்னோட பிசினஸை டவுன் பண்ணேன். திரும்பவும் அவளை நீ நெருங்கனும்னு நினைச்சா உன்னையே இல்லாம ஆக்கிருவேன். பரவாயில்லையா??? “, நிதானமாக கேட்டான் அரவிந்த்.மாலினி அதிர்ந்து போய் அவனை திரும்பி பார்த்தாள்

“என்ன கூறிக் கொண்டிருக்கிறான் இவன்??. இவர்கள் இருவரும் முன்பே பரீட்சைமானவர்களா? “.

“வாட் இவள் உன்னோட மனைவியா?. என்னுடைய எக்ஸையா நீ திருமணம் பண்ணிக்கிட்ட? “.

“எக்ஸ், வைய், இஸட் எல்லாம் எனக்கு தெரியாது. நான் என்னோட குழந்தையோட அம்மாவை திருமணம் பண்ணிக்கிட்டேன்”, என்றான் அரவிந்த்.

“புரியல இந்த குழந்தை உன் குழந்தையா?. அப்ப இவளுக்கும் உனக்கும் இல்லிகல் காண்டக்ட்டா?? “.

“சாவடிச்சிடுவேன் டா, இன்னொரு வாட்டி என்னோட வைஃப் பத்தி தப்பு தப்பா பேசினா உன் வாயை இல்லாம ஆக்கிடுவேன். அவள பத்தி பேசுற அருகதை உனக்கு இல்ல. நீ டைவர்ஸ் பண்ண அடுத்த நிமிஷம் நான் இவளை திருமணம் பண்ணிக்கிட்டேன். இது எங்களோட குழந்தை. ஒரு ஏஞ்சலோட வாழ உனக்கு கொடுப்பினை இல்லை. அவளோட அருமை உனக்கு தெரியல எனக்கு தெரிஞ்சதுனால கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”, என்றான் அவன் கூலாக.

“ஆனா ஒரு குழந்தையோடு தானே அவள் வீட்டை விட்டு வெளியே போனா? இதுக்கு தானா அப்ப குழந்தையோட வீட்டை விட்டு வெளியே போனது??. எப்படி கால்குலேட் பண்ணி பார்த்தாலும் இந்த குழந்தை இவளோட குழந்தையா இருக்க வாய்ப்பு இல்லையே??”, என்று கேட்டான் ஆகாஷ். “இந்த கால்குலேஷன் உனக்கு எதுக்கு ஆகாஷ்??. இவள் என்னோட மனைவி. நான் தாலி கட்டின சட்டபூர்வமான மனைவி. நாங்க எப்ப குழந்தை பெத்துக்கிட்டா உனக்கு என்ன??, உனக்கு தான் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணிட்ட இல்ல. அவள நெருங்க நினைக்காத. அப்புறம் உரு தெரியாம அழிச்சிடுவேன்”, அதற்கு மேல் பேசிக் கொண்டிருந்தால் அவன் நிறைய கிளருவான் என்று தோன்றியது. ஒரு விரலை நீட்டி எச்சரித்து. மாலினியை அணைத்தார் போலவே அழைத்து வந்துவிட்டான்.அவள் திகைப்பிலிருந்து விலகாமல் இருக்க. உணவை பேக் செய்து தன் காருக்கு கொண்டு வந்து கொடுக்கச் சொன்னவன். பணத்தை செட்டில் செய்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு காரில் வந்து அமர்ந்து விட்டான். அவளுக்கு இன்னும் அதிர்வு அடங்காமல் இருக்க. அவன் அவளைப் பிடித்து உலுக்கினான்.

“என்ன பண்ணி வெச்சி இருக்கீங்க??, அவனோட மோதுனீங்களா??, அவனோட பிசினஸ் இல்லாம பண்ணீங்களா??, உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?, உங்களுக்கு அவனை முன்னாடியே தெரியுமா?“, என்று அவள் கேள்விகளை அடக்கி கொண்டே இருக்க.

“எனக்கு அவனை முன்னாடி எல்லாம் தெரியாது. இப்ப சமீபத்துல தான் அவன ஒன்னும் இல்லாம ஆக்கணும்னு இங்க இருந்து காய நகர்த்தி அவனோட பிசினஸை லாசுக்கு கொண்டு போய் அதை டேக் ஓவர் பண்ணேன். ஆனா அதுக்கு நேரடி பங்குதாரராக நான் இல்ல. எத்திராஜ் தான் இருக்கான். நான் சைலன்ட் பார்ட்னரா மட்டும்தான் இருக்கேன்”.

“அவனோட பிசினஸ் உங்களுக்கு எதுக்கு?“. “அவனோட பிசினஸ் லாஸ்ல தான் போயிட்டு இருக்கு. கோர்ட்ல நீ சொன்னதுனால அவனுடைய இமேஜ் ஸ்பாயில் ஆயிடுச்சு. யாருமே அவனுக்கு பொண்ணு கொடுக்கல. ஆனா ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒரு பொண்ண கட்டிக்கிட்டு வந்து அவளையும் வெச்சு சித்திரவதை தான் செஞ்சுகிட்டு இருக்கான். அட்லீஸ்ட் காசு இல்லாம போனா திமிரு கொஞ்சம் அடங்கும்னு நினைச்சேன். பணம் இருக்கிறதுனால தானே நிறைய பொண்ணுங்கள போகபொருளா நினைக்கிறான். வீட்ல இருக்குற பொண்டாட்டியோட அருமை தெரியல. பணம் இல்லனா சோத்துக்கு சிங்கி அடிச்சா எல்லாத்தையும் சுருட்டி கிட்டு சும்மா இருப்பான்”, என்றான்.

“ஆனா உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? “.

“என் பொண்டாட்டிய வருந்த வச்சவனை நான் வருத்தப்பட வைக்க வேண்டாமா?“.. “ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகுது. அவன் சொல்றத பார்த்தா ரொம்ப நாள் மாதிரி தோணுது”, என்றாள் மாலினி.

“இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஒன் இயர் ஆக போகுது”, என்றான்.

“அப்படின்னா என்ன கண்காணிச்சுட்டு இருக்கும்போது இந்த வேலையும் பண்ணி இருக்கீங்க? “. “உன்ன பத்தி தெரிஞ்சுகிட்ட பிறகு இந்த வேலையை பண்ணேன்”. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது. ஆர்டர் செய்த உணவுவர. அதைப் பெற்றுக் கொண்டவன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

“அவன் ஒரு நாகப்பாம்பு கொத்தாம விடமாட்டான்”,: என்றாள் மாலினி.

“அவ நாக பாம்பா இருந்துட்டு போகட்டும். நான் கருடனா இருந்துட்டு போறேன். அவன் கொத்தறதுக்கு முன்னாடி அவன தூக்கிட்டு போயிடுவேன்”.

“உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு”, என்றாள் மாலினி.

“அவன் என்னை நெருங்குறதுக்கு முன்னாடி நான் அவன தூக்கிடுவேன். அவன கண்காணிக்கிறதுக்கு ஆள் போட்டு இருக்கேன்”, என்று தன் அலைபேசியை எடுத்து ஆகாஷை பற்றிய வீடியோக்களை காட்டினான்.

“ஏண்டா அவன் சென்னைக்கு வந்து இருக்கான். நீ என்ன புடுங்கிக்கிட்டு இருக்க??. அவன கண்காணிக்க சொல்லித்தானே உனக்கு மாசம் மாசம் காசு கொடுத்துட்டு இருக்கேன்”, என்று காட்டமாக கேட்டான்.

“பாஸ் அவன் சென்னைக்கு வந்திருக்கான்னு நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்புனேன்”, என்றான் அவன்.

“மயி”… என்று கெட்ட வார்த்தைகளில் அவன் வசைபாட அவள் அதிர்ந்து காதை பொத்திக் கொண்டாள்.

“மெசேஜ் நான் பார்க்கலைன்னா கால் பண்ணி சொல்ல தெரியாதா உனக்கு??. அந்த தீவட்டிதடியன இங்க பார்த்தவுடனே எனக்கு உன்ன தாண்டா வெட்டி போடணும்னு தோணுச்சு. இனிமே மெசேஜ் எல்லாம் அனுப்பாத அப்டேட் எல்லாத்தையும் கால் பண்ணி சொல்லு”, என்று சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தான் .அவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க. அவள் புறம் திரும்பினான்.

“நீங்க,, நீங்க என்ன இவ்வளவு அசிங்கமா பேசுறீங்க? “.

“இதைவிட அசிங்கமா கூட பேசுவேன். ஆனா தப்பு செய்றவங்க கிட்ட தான்.

“உங்கள பத்தி நான் ஒரு கண்குலூசனுக்கு வரும்போது நீங்க வேற வேற முகத்தை மாத்திக்கிட்டே இருக்கீங்க. நீங்க உண்மையிலையே யாரு?. இதெல்லாம் எதுக்காக பண்றீங்க?. என்னோட வாழ்க்கையை பத்தி உங்களுக்கு தெரியுமா?? எதுக்காக தேவை இல்லாம அவன் கிட்ட போய் மோதுறீங்க? “, பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாக இருந்தது.

“நாங்க என்ன பிசினஸ் பண்றோம்னு தெரியுதுல. நான் பக்கா லோக்கல் ஆளு தான். பணம் இருக்கிறதுனால கொஞ்சம் பெரிய மனுஷ தோரணை அவ்வளவுதான். தூத்துக்குடி சைடுல எல்லாம் இதைவிட இன்னும் வண்ட வண்டையா பேசுவோம். ஹார்பர்ல போய் பாரு, இதைவிட மோசமா பேசுவாங்க. நீ இன்ஜினியரிங் முடிச்சுட்டு ஐ. டி கம்பெனில வேலை செஞ்சதுனால ஐ ஃபையா இருந்திருப்ப. நாங்க பண்ற ஃபிஷ் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் மார்க்கெட்டிங் பிசினஸ்க்கு லோக்கலோட லோக்கலா தரமட்டமா இறங்கி தான் ஆகணும். இல்லன்னா பொழைக்க முடியாது. இங்க மட்டும் என்ன?? எல்லாத்தையும் நாங்க சப்ளை வாங்குறோம். அதை ஹை கிளாஸு க்கு கொடுத்தாலும், மீனை வாங்குறவங்க கிட்ட அவங்க பாஷையில பேசினா தான் வேலையே நடக்கும்”, அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க. அவன் கூற வருவது அவளுக்கு புரிந்தது.

“அப்படினா நீங்க? “, என்று அவள் தயங்கி நிறுத்த. அவன் ஒரு இனத்தின் பெயரைக் கூறி.

“உனக்கு அதுல ஏதாவது பிரச்சனையா? “, என்று கேட்டான்.

“இல்ல”, என்று மெதுவாக அவள் இடமும் வலமும் தயக்கத்துடன் தலையாட்டினாள்.

“ஏற்கனவே நீ என்னைய நெருங்க விட மாட்ட. இனிமேல் அவ்வளவுதான் பக்கத்துல கூட உட்கார விடமாட்டபோல??. ஆனா உன்கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல. இதுவரைக்கும் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரல. இப்ப மறைக்க கூடாதுன்னு தோணுது. நான் மட்டும் இல்ல, உன் கையில இருக்க அந்த குழந்தை அவளும் எங்க இனம்தான்”, என்றான் சிரித்துக் கொண்டே. அவள் மிடறு விழுங்கினாள். அவள் ஜாதி எல்லாம் பார்ப்பது இல்லை தான். ஆனால் புதிதாக தெரிந்த அந்த விஷயம் அவளுக்கு சற்று நெருடலாக தான் இருந்தது. அவள் முன்னேறிய சமூகத்தை சேர்ந்தவள் அவன் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவன். ஆனால் அதே முன்னேறிய சமூகத்தை சேர்ந்தவன் அவளை எவ்வளவு பாடுபடுத்தினான். மனிதத் தன்மை என்பது தான் முக்கியமே தவிர, ஜாதி இல்லையே??. அவள் ஜாதியில் பிறந்தவன் நல்லவனோ, ஒழுக்கமானவனோ இல்லையே. அவளுடைய தந்தை தம்பி என்று யாரும் அவ்வளவு நல்லவர்கள் இல்லையே??. எந்த ஜாதியாக இருந்தால் என்ன??, இவனைப் போல ஒருவனை பார்க்க முடியுமா அவளால். எந்த ஜாதியாக இருந்தாலும் அவன் தான் உன்னுடைய கணவன். அவள் கையில் மகளாக இருப்பவளும் அதே இனத்தை சேர்ந்தவள் தானே??. அவளை உன்னால் பிரிந்து இருக்க முடியுமா??, அல்லது ஒதுக்கி வைக்க தான் முடியுமா??. எப்போதிலிருந்து நீ இப்படி ஜாதியை பார்க்க ஆரம்பித்தாய் மாலினி?. அவள் மனதிலும் சிறு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்க.

அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தாலும், அவள் முகத்தை அவதானித்துக் கொண்டுதான் இருந்தான். அவளுடைய இனம் அவனுக்கும் தெரியும். எப்போது என்றாலும் தெரிந்து தான் ஆக வேண்டும் மறைக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை. இரண்டு நாள் யோசனையுடனே சென்றது போல தோன்றியது. மூன்றாம் நாள் அவள் சகஜம் ஆகிவிட்டாள் ஆனாலும் அவனிடம் வந்து நின்றாள்..

“ஆகாஷ் பிரச்சனை நமக்கு தேவை இல்ல, அதில் நீங்க தலையிட வேண்டாம். அப்படியே விட்டுடுங்க நாம நம்ம வாழ்க்கையை பார்த்துட்டு போகலாம். எத்திராஜ் அண்ணன கூட அந்த பிசினஸை கைமாத்தி விட்டுட சொல்லுங்க”, என்று கூறினாள்.

“ஹலோ ஹலோ அவன் பிசினஸ் லாஸ்ல போயிட்டு இருந்தது. அதனால டேக் ஓவர் பண்ணோம் அவ்வளவுதான். எதுக்கு நான் அதை விடனும்??அவனையும் ஒரு கை பார்க்க முடியும்.அவனோட பிசினஸையும் எங்களால சக்சஸ்புல்லா நடத்த முடியும். உங்க அப்பா பிசினஸ்ல கை வைக்கல”, என்று கூறிவிட்டான்.

அதற்கு மேல் அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளும் அமைதியாக அதை கடக்க தான் எண்ணினாள்.

5 thoughts on “தேவதையாக வந்தவளே 36”

  1. Kalidevi

    wow, avana ippadi alicha tha malini illana ethana ponnunga life ah spoil panuvanu theriyathu so aravind sonna mari panna tha adanguvan kandipa ipove evlo thimira pesuran paru inum adangama irukama jail poitu vanthum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *