Skip to content
Home » தேவதையாக வந்தவளே 37

தேவதையாக வந்தவளே 37

தேவதை 37

அப்படியே ஒரு வாரம் கடந்து சென்றிருக்க. அவள் கிரஷுக்கு வந்து சேர்ந்தார் அவளுடைய தந்தை. திடீரென்று அவள் தந்தையை பார்த்ததும். முதலில் அதிர்ந்தாள். பிறகு எப்படி இவர் இத்தனை வருடங்கள் கழித்து தன்னை கண்டுபிடித்து வந்திருக்கிறார்??, என்று சந்தேகம் எழுந்தாலும். அவருக்கு தெரிவித்தது யாராக இருக்கும் என்று ஓரளவிற்கு அவளால் கணிக்க முடிந்திருந்தது.

கேமராவை பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவியின் முகத்தில் திடீரென்று தோன்றிய அதிர்ச்சியை பார்த்தான். முன் வாசல் கேமராவை பார்த்ததும் தெரிந்தது அவள் யாரை பார்த்து அதிர்ச்சியுற்றால் என்று. மாலினியின் தந்தையை பார்த்ததும் அவனுக்கு புரிந்து விட்டது. இது யாருடைய வேலையாக இருக்கும் என்று. அவனால் செய்ய முடியாததை மாலினியின் தந்தையை வைத்து காயை நகர்த்த எண்ணுகிறான் அந்த ஆகாஷ் என்று புரிந்த நொடி.

வேகமாக தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருந்தான்.

“எவ்வளவு திமிரு இருந்திருக்கும் உனக்கு??. அவன் மேல பழியை போட்டு டைவர்ஸ் கொடுத்துட்டு முகத்தில் தாலிய விட்டு எறிஞ்சுது இதுக்குத்தானா??, இன்னொருத்தனோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்கறதுனால தானா??”.

நாக்குக்கு நரம்பு இல்லை தான். ஆனால் எதுவென்றாலும் பேசி விடுவார்களா இவர்கள்??. அவர் தன்னுடைய தந்தை தான் அதற்காக தன்னைப் பற்றி இழிவாக பேசும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது?? உதடுகள் துடித்தாலும் வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. ஏதோ உதடுகள் ஒட்டிக்கொண்டது போல தோன்றியது.

“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு வீணா அவன் மேல பழிய போட்டு, அவனை அசிங்கப்படுத்தி அவன ஒன்னும் இல்லாம ஆகிட்டு. நீ பாட்டுக்கு ஜம்முனு குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கியா?? “, அவர் குரலில் இருந்த ஆவேசம் அவளை வதைத்து கொண்டிருந்தது.

“நான் உங்களுடைய மகள். நான் இப்படி செய்வேனா?? “, என்று ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் என்ன இது பேச்சு??..சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். குழந்தைகள் பயத்துடன் பார்த்தனர். அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அவளைப் பற்றிய விஷயங்கள் எதுவும் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அவளுடைய தந்தையே அவளை கீழிறக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். தவறாக சிந்தித்து தன்னை தவறாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் தான் பேசவில்லை என்றால் தன்னை மற்றவர்களும் தவறானவளாகவே சித்தரித்து விடுவர் என்று அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவர் இன்னும் வார்த்தைகளைக் கக்கினார்.

“எவ்வளவு கேவலமான பிறவி . நீ இப்படி கேவலமானவளா இருந்திருப்பேன்னு தெரிஞ்சிருந்தா. உன்ன பெத்துக்காமலே இருந்திருப்பேன்”, என்றார்.

“போதும் நிறுத்துங்கப்பா விட்டா பேசிக்கிட்டே போறீங்க??, உங்க கூட தான் நான் இருந்தேன். இந்த குழந்தை யாருன்னு உங்களுக்கு தெரியாதா??. இல்ல மறந்துட்டீங்களா??, இந்த குழந்தையோட வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னது நீங்க. நீங்க வெளியே போக சொல்லலனா உங்க வீட்ல உங்களுக்கு மகளா நான் இப்பயும் இருந்து இருப்பேன். அவர் இந்த குழந்தையோட தந்தை. குழந்தை என்கிட்ட அட்டாச் ஆயிட்டாள். என்னாலயும் அவள விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது. அதனால நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஏன் அந்த ஆகாஷ் தப்பெல்லாம் பண்ணிட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கலையா??, . அவன் எடுத்த வீடியோ எல்லாம் நீங்களும் பார்த்தீங்க தானே??, அப்படி இருந்தும் ஏதோ நான் பழி போட்ட மாதிரி பேசுறீங்க??. கோர்ட்டில் ஊர்ஜிதமாகி அவனுக்கு தண்டனை கிடைச்சதுல??. அவன் பண்ண தப்புக்கு அவனுக்கான தண்டனை அவனுக்கான இலப்பு எல்லாம் நியாயமானது தான். அவன் உங்களுடைய பிசினஸ் பார்ட்னரோட பையன்றதுக்காக அவனுக்காக சப்ப கட்டு கட்டிட்டு வரீங்க. நான் உங்க பொண்ணுன்றத மறந்துட்டு பேசுறீங்க. நான் அப்பழுக்கில்லாதவனு காட்டுவதற்கு ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதும். ஆனா என்ன பத்தி தவறா பேசுறவங்களுக்கு அதை காட்ட வேண்டிய அவசியம் இல்ல. இவள் என்னோட குழந்தை, என் கணவரோட குழந்தை, எனக்கு முதல் குழந்தை. என் குழந்தையை அளிக்கும்போது அப்பயும் நீங்க அவனுக்கு தானப்பா பேசினீங்க. இப்பயும் அவனுக்காக பேசிக்கிட்டு வந்து நிக்கிறீங்க. அதான் தலைமுழுகிட்டிங்கல்ல. நான் எக்கேடு கெட்டுப்போனா உங்களுக்கு என்ன??, உங்களுக்கு இருக்கிறது ஒரே பையன் அவனை மட்டும் பார்த்துட்டு போங்க”, என்றாள் மாலினி .

“என்னடி திமிரா பேசுற?, புதுசா ஒருத்தன் கெடச்சிட்டான்னு கொழுப்பு எடுத்து போயி பேசுறியா? “.

“நிறுத்துங்கப்பா, அவர் ஒன்னும் யாரோ கிடையாது. என்னோட புருஷன். எனக்கு தாலி கட்டினவர், நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் . நீங்க பார்த்து கட்டி வச்சவன் என்ன அழகுல இருந்தாருன்னு தான் ஊருக்கே தெரியுமே??, உங்களுக்கும் தெரியுமே?, என்ன மட்டும் இல்லாம இன்னும் நிறைய பெண்களை தப்பா வீடியோ எடுத்துட்டு இருந்தவன். அவனுக்கு சப்பக்கட்டு கட்டிக்கிட்டு என்ன தப்பா பேசிகிட்டு இருக்கீங்க. நீங்க அப்பான்றதுக்காக எல்லாத்தையும் என்னால பொறுத்துக்கிட்டு இருக்க முடியாது. என் புருஷன பத்தி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள மாதிரியும், அந்த பொறுக்கி மாதிரியும் நினைச்சீங்களா??, அவர் ஒரு ஆண் தேவதை. ஒரு நாளாவது எனக்கு நீங்க தாயா இருந்திருப்பீங்களா??, ஆனால் அவர் எனக்கு கணவனா மட்டும் இல்ல தாயாவும் இருக்கிறார். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கன்னா கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவேன்”, என்றாள் மாலினி ஆவேசமாக. அந்த வார்த்தையில் அவருக்கு கோபம் பெருக்கெடுத்தது.

“ஏய், என் கழுத்து புடிப்பியா?” என்று அவள் கழுத்தை பிடிக்க வர. அவர்கள் இருவருக்கும் இடையே வந்து நின்றவன், அவர் நெஞ்சின் மீது கையை வைத்து அவரை பின்னால் தள்ளி நிறுத்தினான் அரவிந்த். அவள் அதிர்ந்து தான் பார்த்தாள் அவனை. எத்தனை வேகத்தில் அவன் வந்திருந்தால், இவ்வளவு சீக்கிரமாக அவனால் அவன் அலுவலக இடத்திலிருந்து வந்திருக்க முடியும் என்று அவளால் உணர முடிந்தது. அவள் வயிறு கலங்கியது அவனின் பாதுகாப்பிற்காக அவனின் நலனுக்காக.

“மிஸ்டர் இன்னொரு வார்த்தை என் மனைவியை பத்தி தப்பா பேசினா அவ்வளவுதான். நீங்க பேசிட்டு இருக்கவன், என்ன தப்பு பண்ணான்னு கோர்ட்ல நிறுவனமாகி தானே அவங்களுக்கு டைவர்ஸ் கொடுத்து இருக்காங்க. இது என்னோட மகள்.. இன்னொருத்தரோட மகளை தன் பொண்ணு மாதிரி பாத்துக்குற ஒரு பொண்ண பெத்து வச்சுட்டு. அவளோட அருமை தெரியாம இருக்கீங்க. என்னோட மகளுக்காக நான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்களுக்கும் அந்த பொறுக்கிக்கும் இவளோட அருமை தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு தெரியும். என் பொண்ணுக்கும் தெரியும். உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நீங்க கிளம்பலாம். என் மனைவியை பார்த்துக்க எனக்கு தெரியும். இன்னொரு வாட்டி இங்க வந்து இதே மாதிரி நியூசன்ஸ் பண்ணுனீங்கனா, நான் உங்க மேல சட்ட ரீதியா ஆக்சன் எடுக்க வேண்டியதா இருக்கும். இத்தனை குழந்தைகள் இருக்கிற இடத்தில வந்து கத்தி ஆர்ப்பாட்டம் பண்றீங்கன்னு கேச பைல் பண்ணுவேன். என் மனைவியை தவறா பேசுனதுக்கும் உங்க மேல வழக்கு போட என்னால முடியும். இன்னும் ரெண்டு செகண்ட் நீங்க இங்க இருந்தாலும். உங்கள போலீஸ்ல ஒப்படைக்க வேண்டியதா இருக்கும்”, என்று கர்ஜனையாக பேசினான்.

அவனை யார் என்று ஆழ்ந்து பார்த்தார். ‘இவன் இவன்??, என்று சிந்தித்தார். “என்ன மிஸ்டர் என்ன உங்களுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா என்னோட அம்மாவை உங்களுக்கு நல்லா தெரியும். தி கிரேட் பிசினஸ் மேக்னட் விசாலாட்சியோட ஒரே பையன் அரவிந்த் மகாராஜன். அவங்களோட பெயரை பேக்ரவுண்ட்ல யூஸ் பண்ணாம நானும் என்ன உயர்த்திக்கிட்டு தான் இருக்கேன். என்னோட ஒரே மனைவி மாலினி. எங்களோட ஒரே பொண்ணு ஷாலினி. இதுக்கு மேலயும் உங்களுக்கு ஏதாவது டவுட் வேணுமா,, எக்ஸ்பிளனேஷன் வேணுமா என்கிட்ட மோதணும்னு நினைக்காதீங்க. உங்க எக்ஸ் மாப்பிள்ளைக்கு நடந்தது தான் அப்புறம் உங்களுக்கும் நடக்கும். மாலினிக்காக தான் உங்கள விட்டு வச்சிருக்கேன். தேவையில்லாம அதை நீங்களே கெடுத்துக்காதீங்க “, என்றான்.

அவ்வளவு நேரம் கத்திக் கொண்டிருந்தவர். அமைதியாக அடங்கி வெளியில் செல்லப் போனார். தலை குனிந்து அவர் வெளியில் நடப்பதை புரியாமல் பார்த்தாள் மாலினி. பிசினஸ் மேக்னட் விசாலாட்சியை அவருக்கு தெரியும். பல கம்பெனிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர். அவருடைய மகன். என்று சிந்தித்தபடியே அவனை திரும்பி பார்த்தார். அவன் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவருடைய பேட்டியை செய்தித்தாளில் படிக்கும் போது அவர் குடும்ப அங்கத்தினரின் பெயரையும் புகைப்படத்தையும் போட்டு இருந்தார்கள். அரவிந்த் மகாராஜன் தாயை சார்ந்து இல்லாமல், எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் தொழிலில் கொடிகட்டி பறப்பதாக அவனின் புகைப்படமும் பெரியதாகவே போடப்பட்டிருந்தது. ஆகாஷ் சொன்னது, ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணி இருக்காள். கீழ் ஜாதி காரனை கல்யாணம் பண்ணி இருக்காள். போன கொஞ்ச நாளிலேயே இவ்வளவு பெரிய குழந்தையை வச்சுக்கிட்டு இருக்காள். உங்க குடும்பம் மானம், நம்ம ஜாதி எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டாள். அது மட்டுமா?, ஏற்கனவே வயித்துல புள்ளைய சுமந்து கிட்டு தான் இங்க இருந்து போயிருக்காள். ரெண்டரை வயசு பொண்ண வச்சிருக்காள். அப்படின்னா என்ன அர்த்தம்?? எனக்கு துரோகம் பண்ணி இருக்காள் “, என்று அவரை நன்றாக முடுக்கி விட்டிருந்தான்.

அவருக்கு பத்தி கொண்டு வந்தது. தலைமுழுகி இருந்தவர் புறப்பட்டு விட்டார் அவளை கேள்வி கேட்பதற்காக அவமானப்படுத்துவதற்காக. ஆனால் அவள் கையில் வைத்திருக்கும் குழந்தை. அவருக்கு தெரிந்த குழந்தைதான் அதன் அழகு அதன் தீட்சண்யம் அவரால் இன்னும் மறக்க முடியாதது தான். அது அவளுடைய குழந்தை இல்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவன் சொன்னதை மட்டும் நம்பி வந்திருக்கக் கூடாது. விசாலாட்சி உடைய பூர்வீகம் ஜாதி எல்லாம் அவருக்கு தெரியும். அவருடைய கணவரின் ஜாதியை பற்றியும் அவருக்கு தெரியும். அதனால் அவர்களுக்குள் பெரிதாக பாலம் இல்லை என்றும் தெரியும். விசாலாட்சி ஒன்றும் அவர் ஊரை சேர்ந்தவர் இல்லை. ஆனால் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர் தான். அவரைப் பற்றி நன்றாகவே கேள்விப்பட்டிருக்கிறார். அவர்களுடன் மோதினால் தன்னால் பிழைக்க முடியாது என்பதும் தெரியும். யோசித்துக் கொண்டே நடந்தவர். திரும்பி அவனைப் பார்த்தார்.

அவன் அவரை முறைத்து கொண்டு நின்று இருந்தான். அவன் பார்வையே, நான் சொல்பவன் இல்லை செய்து காட்டுபவன் என்று உணர்த்திக் கொண்டிருந்தது. மிடறு விழுங்கினார் .

“இனிமே என் பொண்டாட்டியை தேடி வந்திராதீங்க. உங்களோட ஸ்தானத்தையும் உங்க பொண்டாட்டியோட ஸ்தானத்தையும் கூட என்னால என் மனைவிக்கு கொடுக்க முடியும்”, என்று அழுத்தமாக உச்சரித்தான். என் மனைவிக்கு நீங்கள் தேவையே இல்லை என்று வாய்மொழியாக உணர்த்திக் கொண்டிருந்தான். அவள் கண்கள் கலங்கியது. அவளுக்கு முன்னால் கேடயமாக நிற்கிறான். அவனைத் தாண்டித்தான் அவளை நெருங்க முடியும் என்று ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு செயலிலும் காட்டிக் கொண்டிருக்கிறான். அவளுக்கு விசாலாட்சி யார் என்று தெரியாது. ஆனால் அந்த பெயருக்கு தன் தந்தை பொட்டி பாம்பாக அடங்கி செல்வது புரிந்தது. இது எல்லாவற்றையும் விட அவளுடைய கணவன் அவளுக்காக நின்றது தான் முதன்மை பெற்றிருக்க. கேவி அழுது கொண்டே அவன் முதுகில் தஞ்சம் அடைந்திருந்தாள் பாவையவள். ஏதோ ஒரு நீண்ட படம் பார்ப்பது போல அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளை பயப்படக்கூடாது என்று அறைக்குள் அனுப்பி டிவியை சத்தமாக போட்டு விட்டு அங்கு ஒரு டீச்சரை நிறுத்திவிட்டு இன்னொரு டீச்சரும் இரண்டு ஆயமாக்களும் வெளியில் வந்திருந்தனர்..

படம் பார்ப்பதற்காக அல்ல மாலினிக்கு துணைக்கு நிற்பதற்காக. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக அவர்கள் பார்க்கும் மாலினியை அவர்களுக்கு தெரியும். அங்கு இருப்பவர்கள் எல்லாம் ஜாதி பார்ப்பவர்கள் இல்லை. அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. அவர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்கள் ஜாதியோ அல்லது அவர்கள் இனத்தின் மக்களோ அவர்களுக்கு உதவி செய்ய வில்லை. இதோ இந்த மாலினி தான் உதவி செய்தாள். கஷ்டம் என்று நின்றாலும் தயங்காமல் கையில் இருப்பதைக் கொடுப்பாள். அவர்கள் ஒன்றும் இரண்டாவது திருமணம் தவறு என்று சொல்பவர்களும் இல்லை. கண்ணியமாக திருமணம் செய்து கொண்டு தானே வாழ்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது??.

யாரும் அவளைத் தவறாக பார்க்கவில்லை.ஆனால் அவளுக்கு??.அவளுடைய அந்த செயல், பேச்சு எல்லாம் அரவிந்தனின் இதழ்களில் நிம்மதியை பரப்பி இருந்தது..

பயந்து கொண்டு இருந்த தன் மகளை ஒரு கையால் தூக்கியவன். திரும்பி தன் மனைவியை மறுக்கையால் அணைத்துக் கொண்டான். அங்கு நின்றிருந்தவர்களை பார்த்தவன்.

“நம்மள உடைக்கணும்னு நினைக்கிறவங்க இப்படித்தான் ஏதாவது கண்டதையும் பேசிட்டு போவாங்க. உங்களுக்கு ஏதாவது விளக்கம் வேணும்னா சொல்லுங்க??, நான் என்னோட ரிஜிஸ்டர் மேரேஜ் சர்டிபிகேட் காட்டுறேன். ஆனா ஒரு வார்த்தை என் மனைவியை பத்தி தப்பா பேசக்கூடாது. நினைக்கவும் கூடாது. அப்படி நினைக்கிறவங்க இந்த வேலையை விட்டு போய்க்கிட்டே இருக்கலாம்”, என்றான் அழுத்தமாக

6 thoughts on “தேவதையாக வந்தவளே 37”

  1. Kalidevi

    Super aravind . oru appa va ponna pathi yosikama avan ena la pannanu therinjitu thirupium vanthu ponna kutram solra appa neengala tha irupinga nalla irukanumnu ninaikama ippadi vanthu pesuringa
    . but aravind sonnan paru supera unga edathulaum unga wife edthulaum na irupen en wife ku nu wow great aravind . ipo malini aravind ah nall purinji vachi irukanu veli padutita crt timing la

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *