தேவதை 38
ஒரு ஆசிரியர் முன் வந்தார் சிறிய பெண் தான். “சார் எங்களுக்கு மாலினி மேம் பத்தி தெரியும். நீங்க அவரோட கணவன்றதும் தெரியும். இப்ப வந்தவர தான் எங்களுக்கு யாருன்னு தெரியல?? இவங்க அப்பான்னு சொல்லலனா எங்களுக்கு அது கூட தெரிஞ்சிருக்காது. இரண்டாவது திருமணம் பண்ணுறது தவறு இல்லையே சார்??. அவங்க சொன்னதுல இருந்தே தெரிஞ்சிருச்சு அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்காங்கன்னு உங்கள பத்தி சொன்னதுலையும் புரிஞ்சிருச்சு நீங்க அவங்களை எவ்வளவு நல்லா பாத்துக்கிறீங்கன்னு. ஒரு பொண்ணுக்கு நல்ல கணவன் தான் சார் வேணும். அவங்க எத்தனையாவது கணவனா இருந்தாலும் சரி”, என்றாள் அந்த பெண்.
அதில் அரவிந்தின் இதழ்கள் விரிய துடிக்க. மாலினி நிமிர்ந்து அந்த பெண்ணை பார்த்தாள்.
“ஆமா மேம், எங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை. நாங்க வேலை செய்ய வந்தோம். குழந்தைகளை பார்த்துக்கிறோம். நீங்க சம்பளம் கொடுக்குறீங்க அது போதும் ஏதாவது உதவினாலும் உங்க கிட்ட தான் நாங்க கேட்கப் போறோம். இரண்டாவது திருமணம் தப்பு இல்ல மேடம். அதுவும் சார் மாதிரி ஒரு கணவன் கிடைச்சா. நான் கூட பண்ணிப்பேன். இரண்டாவதா வர்றது முதல் பேய்யை விட பிசாசா இருந்திட போகுதுன்ற பயம் தான் இங்க நிறைய பெண்கள் துணிஞ்சு அந்த செயலை செய்ய விடாமல் பாத்துகிட்டு இருக்கு. இன்னொன்னு குழந்தைகளுக்காக”, என்று சிரித்துக் கொண்டு கூறினாள்.
அவளுடைய குடும்ப கஷ்டம் மாலினிக்கு தெரியும் குடிகார கணவன் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான் அவள் வருமானத்தில் தான் அவள் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் 12-வது வரை படித்தவள் தான். சிறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு அந்த படிப்பு போதும் என்று நினைத்துதான். அவளை வேலையில் அமர்த்தி இருந்தாள் மாலினி. ஆனால் அதற்கான படிப்பை மட்டும் ஆறுமாத மானிட்டசரி வகுப்பில் சேர சொல்லி அவளே பணத்தையும் கட்டி இருந்தாள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே அவர்கள் அங்கே அமர்ந்து அதையும் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவள் தேவதை தான்.
“நீ என்னத்துக்கு மா அழுவுற??. ஜாதியை பத்தி பெருசா பேசிட்டு போறாரு. நல்ல மனுஷங்க எந்த ஜாதில பிறந்தா என்னமா?. என் புருஷன் செத்து பதினஞ்சு வருஷம் ஆகுது. என் பிள்ளைகளுக்காக வாழ்ந்தேன். எத்தனை பார்வைகளை கடந்து அப்படி தனியா வாழ்ந்து இருப்பேன் எனக்கு தான் தெரியும். ஆனா இன்னைக்கு எல்லாரும் என்னை அம்போன்னு விட்டுட்டு போயிடுச்சுங்க. இந்த பிள்ளைகளை பார்த்து தான் மனச தேத்திக்கிறேன். நீ கவலைப்படாம வேலைய பாருமா. ராஜா மாதிரி புருஷன் இருக்கும் போது. எதுக்காக கவலைப்படுற?? “, என்றார்.
குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் காப்பாளி பெண்மணி. அவள் மிடறு விழுங்கினாள். அவர்கள் கலைந்து சென்றார்கள். கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்துவிட்டு. அவள் திரும்பி கணவனை பார்த்தாள்.
“ரொம்ப வேகமா வண்டி ஓட்டிட்டு வந்தீங்களா? “, தயக்கத்துடன் கேள்வி எழுப்பினாள்..
“மனைவி எப்பயும் மனைவியா தான் சிந்திப்பாள் போல”, என்றான் உதடு பிரித்து சிரித்தபடியே. அவள் அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தலையை கோதினான். அதிலேயே ஆமாம் என்று பொருள் இருந்தது.
“நீ அந்த ஆகாஷ்க்கு கூட தைரியமா பதில் சொல்லிடுவ, ஆனா உன் அப்பாவ பார்த்தவுடனே நடுங்குவேன்னு தோணுச்சு. அதான். ஆனா பரவால்ல எனக்காக சப்போர்ட் பண்ணி பேசின அப்படியே மனசு குளு குளுன்னு குளிர்ந்திருச்சு. கடைசியா நீ பேசினது என் காதுல இனிமையான தேன் பாய்ந்தது போல இருந்துச்சு”, என்றான்.
அவளுக்கு தேவைப்படும் என்று கிரஷுக்கு மிக அருகில் அவன் இடத்தை பார்த்து இருந்தாலும் வேகமாக வந்தால் மட்டும் தான், அவனால் அந்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்திருக்க முடியும்.
“தேங்க்ஸ்னு ஒரு வார்த்தைல சொல்ல நான் விரும்பல”, என்றாள் மாலினி.
“முத்தம் கொடுத்து சொன்னா கூட அக்சப்ட் பண்ணிக்க நான் தயாரா இருக்கேன்”, என்றான் கள்வனாக சிரித்துக் கொண்டே. அவள் முகத்தில் புதிதாக ஒரு வெட்கம் அவன் கண்களுக்கு தவறாமல் பட்டது. உதட்டை மடித்து கடித்தபடி அதை தனக்குள் அடக்கியவள். தனக்குள் எழும்பும் அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“எல்லாத்தையும் உனக்குள்ள வச்சுக்கணும் புதைச்சுக்கணும்னு அவசியம் இல்ல மா. இரண்டாவது திருமணம் அல்லது இன்னொரு வாழ்க்கையோ தப்பில்லை. இனி உனக்காக இந்த புருஷன் இருக்கேன். என்கிட்ட ஷேர் பண்ணலாம். அது நல்லதோ கெட்டதோ இல்ல உன்னோட மனசுல இருக்குற எந்த விதமான உணர்வுகளையும் நீ என்கிட்ட ஷேர் பண்ணலாம்”, என்றான்.
“எனக்கு ஒன்னும் இல்லைங்க. உண்மையை சொல்லனும்னா வார்த்தை இல்லைங்க”, என்றால் அவள் நெகிழ்வாக.
“உன்னால இன்னைக்கு வேலை பார்க்க முடியுமா??, இல்லனா இவங்கள பாத்துக்க சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பலாமா? “, என்று கேட்டான்.
அவளுக்கும் அது தான் சரி என்று தோன்றியது.
ம்ம்ம், என்று தலையாட்டினாள். கிரஷை பொறுப்பான ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு. அவன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பவில்லை. திரையரங்கிற்கு கிளம்பினான். அங்கு செல்லும் வரையிலும் அவளுக்கு அது தெரியவில்லை. வீடு போகும் வழியில் இல்லாமல் மாறி போகும் போதும் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை அவன் மீது அவளுக்கு வந்து விட்டிருந்தது. அவன் அதை வர வைத்திருந்தான் என்றும் சொல்லலாம். இந்த படம் உன்னுடைய எல்லா கவலைகளையும் போக்கிவிடும் நான் உன் கூட இருக்குற வரைக்கும். நீ எதுக்காகவும் கவலைப்பட வேண்டாம் வா ஜாலியா என்ஜாய் பண்ணலாம். நானும் எல்லாத்தையும் மறந்து சிரிக்கணும்”, என்றான்.
“நானும்’ என்ற வார்த்தையை அவள் அமைதியாக அவனுடன் நடந்தால் அவனுக்காக. ஒரு வாரம் முன்பு வந்திருக்கும் காமெடி திரைப்படம் தான் அது. உண்மையில் அந்த படம் முழுவதும் சிரிப்புதான். அனைத்தையும் மறந்து இருவரும் திரைப்படத்தை பார்க்க. குழந்தை கூட என்ன புரிந்ததோ சிரித்துக் கொண்டிருந்தவள் அப்படியே அவர்கள் மீது படுத்து உறங்கி விட்டாள். படத்தை முடித்துக் கொண்டு ரெஸ்டாரன்ட் வந்து சாப்பிட்டார்கள். அதன் பிறகு சவுகார்பேட்டையை ஒரு நடை நடந்து இரண்டு துணிகளை எடுத்து கொண்டு வீட்டிற்கும் வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகும் அவன் யோசனையோடு இருந்தாள்.“என்ன ஆச்சு என்ன யோசனை? “, என்று தயக்கத்துடன் கேட்டாள்..
“ஒன்னும் இல்ல முத்தம் தருவியா மாட்டியான்னு யோசிச்சிட்டு இருக்கேன்? “, என்று அவன் இலகுவாக கூற. தன்னை திசை திருப்புவதற்காகவே கூறுகிறான் என்று அவளுக்கு தோன்றியது.
“விளையாடாதீங்க, விஷயத்துக்கு வாங்க”, என்றாள்.
” விளையாடலமா உண்மையா தான் சொல்றேன் எனக்கு உணர்வுகள் வந்தா உன்கிட்ட தான சொல்ல முடியும் “, என்றான் சிரித்துக் கொண்டே. அவள் அவனை விழி உயர்த்தி மிரட்சியுடன் பார்க்க. அவள் கன்னத்தை லேசாக தட்டினான்.“
“உன்னோட லைஃப்ல என்ன நடந்ததுன்னு எனக்கு ரொம்ப டீப்பா தெரியாது. அது உனக்கு மட்டும் தான் தெரியும் நீ வெளியே எக்ஸ்பிரஸ் பண்ணுது கண்டிப்பா கம்மியா தான் இருந்திருக்கும். தாம்பத்தியம்னாலே பயப்படற உன் பார்வை எனக்கு வேற எதையோ புரிய வைக்குது. ஆனா நீ பயந்துகிட்டே இருக்கிற வரைக்கும் எதுவுமே நடக்காது. எந்த ஒரு செயலையும் பயத்தை ஓரம் வச்சுட்டு ஒரு ஸ்டெப் எடுத்து வச்சா மட்டும் தான். நாம பயந்தது சரியானதா இல்ல தவறான தான நமக்கு தெரிய வரும் “. அவன் எத்தனையோ முறை விளையாட்டாக கேட்டு விட்டான்.
அவ்வப்போது விளையாட்டு போல கேட்டாலும் அவன் உணர்வுகளை தான் அவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கும் பொருந்தே தான் இருந்தது. அந்த ஐந்து மாதங்களில் அவனை அவளும் புரிந்து கொண்டு விட்டாள். ஆனாலும் சிறு தயக்கம் இருந்தது. எச்சிலை உள் கூட்டி விழுங்கி கொண்டு இருக்க. அவள் நின்று கொண்டிருக்க. அவள் தாடையில் கையை வைத்து தன்னை உயர்த்தி பார்க்க வைத்தான்.
“என்னோட ஸ்பரிசம் உனக்கு அருவருப்பா இருக்கா??”, என்று கேட்டான்.
அவள் இல்லை என்பது போல தலையாட்டினாள்.
“என்ன பாத்தா உனக்கு பயமா இருக்கா? “. இம்முறை அவள் வேகமாக தலையாட்டினாள்.
“ தாம்பத்தியம் எப்படி இருக்குமோன்னு நினைச்சு பயப்படுறியா?, இல்ல நான் உன்ன சரியா கையாள மாட்டேன்னு நெனச்சு தயங்குறியா? “. அதற்கு அவள் தலையை தாழ்த்தினாள் பதில் கூறவில்லை.
“சோ உனக்கு இது தான் பிரச்சனை? “, என்று அவன் எதையோ கூற வர.
“உங்களுக்கு இது முதல் திருமணம் ஆனா எனக்கு இது இரண்டாவது. நான் தான் கெட்டுப் போனவள் கன்னி பொண்ணு இல்ல. நான் செகண்டண்ட்”, என்று தன் கீழ் உதட்டை மடித்து கடித்த படி அவள் தன் அழுகையை கட்டுப்படுத்த முற்பட.
அவள் உதட்டை மெல்ல விடுவித்தவன். அவள் கன்னத்தை கையில் ஏந்திய படியே அவள் இதழில் மென்மையான முத்தத்தை பதித்தான். அவள் கண்கள் அனிச்சை செயலாக தானாக மூடிக்கொண்டது. அவனிடமிருந்து விலகவும் இல்லை, அவனை தடுக்க நினைக்கவும் இல்லை. அவர்கள் இருவரையும் தொல்லை செய்யாமல் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை விட்டுப் பிரிந்தான். அவள் இன்னுமே கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். அவள் இரண்டு கண்களிலும் முத்தம் பதித்தான். அவள் உடல் சில்லிட்டு அடங்கியது. அவள் நெற்றியில் முத்தம் பதித்தான் அவள் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கி அவன் நெஞ்சை நினைக்க. அவளிடமிருந்து பிரிந்து நின்றான் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“ உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம். அதுக்காக அழாத. என்னோட மனைவி இனி எதுக்காகவும் கலங்கக்கூடாது “, மனைவி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறினான்.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்குறீங்களா?”, அவள் தயங்கியபடி கேட்டாள்.
“கொஞ்சம் என்ன, எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோ. என்ன பொறுத்த வரைக்கும் நீ என்னுடைய ஏஞ்சல் தான். வாழ்க்கை வாழலாம் மாலினி. தயக்கத்தினால அப்படியே ஒதுங்கி போயிடக்கூடாது. வாழ்ந்து பார்த்தா தான் அதை இனிக்குதா கசக்குதான்னு தெரியும். ரிலாக்ஸா இரு நான் உன்ன போர்ஸ் பண்ண மாட்டேன். ஆனா உன்னோட பார்வை எனக்கு உணர்த்தும் போது. நானா திரும்பவும் உன் கிட்ட வரேன் “, என்று கூறிவிட்டு அவள் கன்னத்தில் லேசாக இரண்டு தட்டு தட்டி விட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
அவனுடைய இந்த செயல் கூட அவளுக்கு ஏனோ மிக மிகப் பிடித்திருந்தது. இனி ஒரு வாழ்க்கை ஒரு தாம்பத்தியம் என்று அவள் கற்பனையில் கூட எண்ணி பார்க்கவில்லை. ஆனால் அவள் வாழ்க்கை இவனோடு பிணைக்கப்பட்டு விட்டது. அது குழந்தைக்காகவே என்றாலும் அதை அவளும் ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும். கஷ்டத்திலும் ஆபத்திலும் அனுசரணையாக இருக்கும் கணவன் எத்தனை பேருக்கு வாய்ப்பான்??. இப்படி ஒருவனை மேலும் கஷ்டப்படுத்த வேண்டுமா??. என்று அவள் மனம் சிந்திக்க தொடங்கியது. அவன் சொல்வது போல வாழ்ந்து பார்த்தால் தானே, வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரியும். அவனுடன் இருக்கும் இந்த வாழ்க்கை அவளுக்கு இனிக்கத்தான் செய்து கொண்டிருந்தது. யார் கண்டார்கள் தாம்பத்தியத்தில் அவளின் பயத்தை கூட அவன் போக்கி விடுவானோ என்னவோ??. காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி அணிவகுத்தது. அவனைப் பார்த்த முதல் நாளிலிருந்து இன்று வரை அவளுக்கு தெரிந்த அரவிந்த் வரிசையாக வளம் வந்து சென்றான். அவனை நினைக்கும் போது மனதில் இளம் தென்றல் வீசுவதை அவளால் உணர முடிந்தது.
ம்மா, என்று மெல்லிய குரலில் மகளை திரும்பி பார்த்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். இவன் தன் வாழ்க்கையில் வந்து வசந்தத்தையும் சேர்த்து இழுத்து வந்திருக்கிறாள். இவளை மட்டும் அல்ல அவனையும் இழக்க முடியாது என்று மனம் எடுத்துக் கூறியது. குழப்பங்கள் எல்லாம் அகன்று தெளிவடைவது போல தோன்றியது. மகளைக் கட்டி அணைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனாள். …….
காலையில் அவள் தெளிவாக வந்தாள். அவனை எதிர்நோக்கி ஆவலாகவும் காத்திருந்தாள். ஆனால் அவன் குழப்பத்தை தத்து எடுத்துக் கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு எதுக்கு இப்படி குழப்பமா இருக்காரு??, நாம நேரம் கேட்டதுனாலயா, இல்ல வேற ஏதும் பிரச்சனையா??, ஒரே நைட்ல வேற என்ன பிரச்சனை வரப்போகுது நீதான் காரணமா இருப்ப. உனக்கு நல்ல கணவன் கிடைச்சிருக்காரு ஆனாலும் நீ நேரம் கேட்டுகிட்டே இருப்ப. உனக்கு நான் இருக்கேன் துணையா உனக்கு நான் இருக்கேன்னு அவரும் எத்தனை வாட்டி தான் உனக்கு ப்ரூவ் பண்ணிகிட்டே இருப்பாரு?? “, அவள் மனம் ஏதோ கிளறிக் கொண்டிருக்க அவனை பரிதவிப்பாக பார்த்து இருந்தாள். அவளைப் பார்த்ததும் புன்னகைக்க முயன்றான். ஆனால் அந்த புன்னகையில் உயிர்ப்பு இல்லை என்று தெரிந்தது மாலினிக்கு. தாமிரையாக மலர்ந்திருந்த முகம் தன்னுடைய வாடிய பதனத்தால் வாடிவிட்டது என்று தெரிந்த நொடி. வேகமாக அவளை நெருங்கியவன்.
“என்ன ஆச்சு என் மாலு குட்டிக்கு? “, என்று மீண்டும் அவள் கன்னத்தை தட்டினான். இப்பொழுது அவன் முகத்திலும் பேச்சிலும் உதட்டிலும் அரவிந்த் மீண்டு இருந்தான். அவளுக்கும் அவளுடைய பழைய அரவிந்த் தெரிந்தான். ‘ இல்ல நீங்க ஏதோ சோர்வா இருக்க மாதிரி தோணுச்சு? “, என்று அப்பொழுதும் தயக்கத்துடனே கேட்டாள்.
“இல்ல உங்க அப்பா வாயை அடைகிறதுக்காக. நான் எங்க அம்மாவ பத்தி எக்ஸ்போஸ் பண்ணிட்டேன். கண்டிப்பா எங்க அம்மாவுக்கு இந்த விஷயம் போயிடும்னு எனக்கு தோணுது”, என்றான்.“ என்ன பண்ண போறீங்க? “, என்றாள் அவள் கலக்கமாக. “ என்ன பண்றது, எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணி தானே ஆகணும் மாலினி. ஃபேஸ் பண்ணலாம்”, என்றான் தோள்களைக் குலுக்கி புன்னகை முகமாக.
“ ஆமா எப்படி உங்க அம்மா பேரு எடுத்ததும் எங்க அப்பா ஆஃப் ஆயிட்டாரு? “, முதல் நாள் எழுந்த சந்தேகத்தை அவள் அப்பொழுது கேட்டாள்.
ama eppadi athu erkanave unga amma va avarku theriuma . kandipa malini aravind ah sikram ethupanu therium aravind solra mari ethaium vazhntha thana therium bayanthu poi apadiye iruntha ethum theiryathu bayanthu angeye iruka kd=udathu malini
Super super😍😍
Aravindh avanga amma ah va nenachi ipadi sogam aagura alavuku ah andha amma terror piece
💖💖💖💖💝
Athaane, enna visayama irukkum 🙄🙄🙄🙄🙄🙄