தேவதை 39
“எங்க அம்மாவோட ஸ்டேட்டஸ் அதுபோல. எங்க அப்பாவோட கேஸ்ட்ட தான் நான் என் பேருக்கு பின்னாடி வச்சுக்கிட்டு இருக்கேன். எங்க அம்மாவோட கேஸ்ட், உங்க கேஸ்ட் விட கொஞ்சம் ஹை கிளாஸ். உங்க அப்பா அதுக்கு தான் முதல்ல மீசைய முறுக்கிட்டு வந்தார். அது தெரிஞ்ச உடனே அமைதி ஆயிட்டார். இரண்டாவது அவங்களோட பணம். பணம் எல்லா பிணங்களை மட்டும் எழுப்பாது. சில பிணங்களை, சாரி, சிலபேர் வாயை மூட வைச்சுரும்”, என்றான்.
“என்னால உங்களுக்கு நிறைய கஷ்டம் நீங்க ஏன் ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணி இருக்க கூடாது?“.
“நான் இப்பயும் ஒரு நல்ல பொண்ண தான் கல்யாணம் பண்ணி இருக்கேன். எத்தனை பேர் மாலினி இன்னொருத்தர் குழந்தையை தன் குழந்தையா வளர்க்கறாங்க??. எங்கம்மா அவங்க பெத்த குழந்தையையே வளர்க்கல. உங்க அம்மாவும் அப்பாவும் அவங்க பெத்த பொண்ணையே அம்போன்னு விட்டுட்டாங்க. இந்த குழந்தைக்கு நான்தான் பிளட் ரிலேஷன் உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனா நீ எவ்வளவு அன்பா, எவ்வளவு உயிரா அவளை பாத்துக்கிட்டேன்னு, எனக்கு மட்டும்தான் தெரியும். உன்ன கேள்வி கேட்கலாம் கோபப்படலாம்னு வந்த நானே உன்னோட அன்புல உருகிட்டேன். இதே அன்பு எனக்கும் வேணும்னு ஆசைப்பட்டேன். காதலும் வேணாம், கல்யாணமும் வேணாம், எந்த கத்திரிக்காயும் வேணாம்னு இருந்தவன். உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன்“, என்றான் அரவிந்த். அவளுக்கு இது புது விஷயம் கண்களை அகல விரித்து அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
“ சும்மா சும்மா அதிர்ச்சியாகாத, அப்ப வந்து நான் உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டா நீ வரமாட்ட. உன்னோட ஒரே வீக்னஸ் ஷாலினி மட்டும் தான் அதனால அவள காட்டி கிட்டத்தட்ட கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”, என்று சாதாரணமாக கூறியபடியே அவள் கலக்கி வைத்திருந்த தேநீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தான். அவள் மிடறு விழுங்கினாள்.
“நீங்க உண்மையாவா சொல்றீங்க?, இல்ல எனக்காக பொய் சொல்றீங்களா? “, அவள் தட்டு தடுமாறி கேட்டாள். குடித்துக் கொண்டிருந்தவனுக்கு புறை ஏறியது.
“ உன்ன இம்ப்ரஸ் பண்றதுக்காக சொல்றேன்னு நினைக்கிறியா??, ஐ மீன் நேத்து கேட்டேனே அதுக்காக”. அவன் பேசியது அவளுக்கு புரியவில்லை புருவங்களை சுருக்கினாள். அது அவனுக்கு புரிந்தது.
“இல்ல காதல்னு சொன்ன உடனே என்னை நீ ஹஸ்பண்டா ஏத்துப்ப. ஐ மீண் என் கூட பெட்ட ஷேர் பண்ணிப்பேன்னு நினைச்சு உன்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்னு நினைச்சியா? “, என்றவன் அழுத்தமாக கேட்டான்.
“இல்ல இல்ல அவ்வளவு சீப்பா நான் உங்களை நினைக்கல “, என்றாள் அவசரமாக.
“தேங்க் காட் பயந்துட்டேன் நானு. தப்பு என்னுடையதுதான் கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகுது எப்பயாவது சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் போது உன்கிட்ட நான் அதை எக்ஸ்போஸ் பண்ணி இருக்கணும். நான் செயல்லையே காட்டினதுல நீ புரிஞ்சுகிட்டு இருப்பேன்னு நெனச்சேன். லவ் மேக் பண்ணதுக்கு அப்புறமா எக்ஸ்போஸ் பண்ணலாம்னு ஒரு தாட் இருந்துச்சு. பட் நீ புத்திசாலி புரிஞ்சுகிட்டு இருப்பன்னு நினைச்சேன்“. தன்னை இவன் காதலிக்கிறானா???, கண்ணீர் வரத்தயாராக இருந்தது.
“ கமான் மாலினி இதுக்கும் அழுகையா??, ஞாயமா உன்னை ஒருத்தன் இவ்வளவு விரும்புறானா நீ சந்தோஷம்தானே பட்டு இருக்கணும்?”. அவள் கண்ணீரைத் துடைத்து விட அவன் கரங்களைக் கொண்டு செல்ல. கதவு தடதட என்று தட்டும் சத்தம். அவள் புருவம் சுருக்கி இவ்வளவு காலையில் யார் இப்படி தட்டுகிறார்கள் என்று பார்த்தாள். ஆனால் அவனுக்கு யார் வந்திருப்பார்கள் என்று சொல்லாமலேயே தெரிந்தது. அவள் கதவை நோக்கிச் செல்ல அவன் அவளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான். தான் திறப்பதாக ஜாடை காட்டி விட்டு அவனே கதவை நோக்கி முன்னேறினான்.
“எங்க அவள்? “, என்று குக்குரல் இட்டபடியே உள்ளே நுழைந்தார் விசாலாட்சி.சமையலறையில் இருந்து அவள் பரிதவிப்புடன் வெளியில் வர. கையைக் கட்டிக்கொண்டு அவன் சாதாரணமாக தன் தாயின் பின்னோடு வந்தான்.“நேத்தே உங்களை எதிர்பார்த்தேன் மாம். ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க”, என்றான் நக்கலாக.
“என்னடா விளையாடுறியா??, உன்னை அருமை பெருமையா வளர்த்தேன். உனக்காக என் அண்ணன் பொண்ண பார்த்து வச்சிருக்கேன். நீ என்னனா யாரோ ஒரு செகனண்ட்ட கட்டிக்கிட்டு வந்திருக்க. கட்டிக்கிட்டு வந்தியா இல்ல வெச்சிக்கிட்டு இருக்கியா??, நம்ம ஸ்டேட்டஸ் அளவுக்கு கூட அவங்க ஸ்டேட்டஸ் கிடையாது”, என்று கத்தினார்.
“அப்ப ஸ்டேட்டஸ் இருந்திருந்தா செகண்ட் மேரேஜ் தப்பில்லையா மாம். ஆனா என் ஸ்டேட்டஸ் அளவுக்கு இருக்கு மாம். உங்க ஸ்டேட்டஸ் பத்தி நான் எப்பயுமே கவலை படல”, என்றான்..அவன் மிகக் கூலாக பேசிக்கொண்டு இருந்தான். அவள் வயிற்றில் தான் பயப்பந்து உருள ஆரம்பித்தது.
“இவளைப் பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு வெளியே போகச் சொல்லு . இவள் இங்கேயே இருந்தான்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”, என்றார் ஆங்காரமாக.
“ லீகலா தாலியும் கட்டி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கேன். அவள் என்னோட மனைவி. அவள் இங்கதான் இருப்பாள். உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க தாராளமா வெளிய போகலாம்”, என்றான்
. “ஏன்டா, திமிரா??. உனக்கு வேற எவளுமே கிடைக்கலையா??, இந்த, இந்த எச்சில் பொருள் தான் கிடைச்சுதா? “, என்று கேட்டார் .அந்த வார்த்தையில் மாலினி உடைந்து விட்டாள்.
அவன் ஆவேசமாக “நிறுத்துங்க நாக்க அடக்கி பேசுங்க. அப்புறம் நான் அம்மான்னு பாக்க மாட்டேன். என்ன பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு என் மனைவியை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவள் இப்ப என்னோட மனைவின்றத மறந்துடாதீங்க”.
“உண்மையை தானே சொல்றேன். அவள் எச்சில் ஆகாதவளா??, வயித்திலேயே குழந்தை கலஞ்சிருக்கு, குழந்தையோட வந்தவளை தானே கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்க. முதல் புருஷன் அவளை தொடாம இருந்தான்னு சொல்ல வரியா??, அதுவும் அவன் ஒரு கேடுகெட்டவன். இவளையே வீடியோ எல்லாம் வேற எடுத்து வெச்சிருந்தானாமே அத வித்து காசு பார்த்தானோ என்னவோ??, எங்கெங்கெல்லாம் இவளோட வீடியோ இருக்கோ யாருக்கு தெரியும்? “.“
அவன் தான் கேடுகெட்டவன். இவள் இல்ல. இவள் என்னோட மனைவி. நியாயமா பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஒரு பொண்ணா இருக்குற நீங்களே துணை நிற்காமல் அவளை இழிவா பேசுறீங்க. உங்ககிட்ட நான் கருத்துக்கணிப்பு கேட்கல. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு, என்ன பண்ண கூடாதுன்னு. என் மனைவி எப்படிப்பட்டவனு எனக்கு தெரியும். உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவளோட வீடியோ எங்கேயும் இல்லை அப்படி இருந்தாலும் நான் அதை கிளியர் பண்ணிடுவேன்”.
“ உனக்கு அசிங்கமா இல்லையா இத சொல்றதுக்கு? “.
” இல்ல”, நெஞ்சை நிமிர்த்தி கைகளை கட்டிக் கொண்டு கூறினான்.“உங்கள நான் வாழ விட மாட்டேன். இவளை எப்படி தூக்குறதுன்னு எனக்கும் தெரியும்டா”, என்றார் அவர் ஆங்காரமாக.“அவள் என் குழந்தையோட அம்மா. அவள நெருங்கனும்னு நினைச்சீங்கன்னா கூட , உங்கள அளிக்கவும் நான் தயாரா இருப்பேன்”, என்று அவன் ஆவேசமாக பேச. மாலினி முன்னாள் வந்து அவன் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தாள். வேண்டாம் என்று தலையாட்டினாள்.
“எத காட்டி மைக்குனாளோ தெரியலையே,, இப்படி தல அசைப்புக்கு அடங்குறானே?, என் பையனை முந்தானைல சுருக்கி வச்சிருக்கிறாளே இப்படி பொட்டி பாம்பா அடங்கி கிடக்கிறானே? “, அவர் ஆற்றாமையுடன் பொறுமினார்..
“மேம் ப்ளீஸ், ரொம்ப ரொம்ப அதிகமா பேசுறீங்க. என்ன பத்தி உங்களுக்கு தெரிய வேணாம். அவங்க சொல்ற மாதிரி என் கணவருக்கு தெரிஞ்சா போதும்”, என்றாள் மாலினியும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
“இன்னொருத்தன் கிட்ட படுத்துட்டு என் பிள்ளை கல்யாணம் பண்ணிக்கிட்டியே, உனக்கு அசிங்கமா இல்ல”.
“இல்ல மேம். அவன் கூட இருந்துகிட்டு இவர் கூடவே இருந்தா தான் தவறு. அவன் நல்லவனாக இருந்து அவரை விட்டு பிரிச்சு வந்து இவர் கூட இருந்தா தான் தவறு. எனக்கு டைவர்ஸ் ஆகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது. எங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகுது. உங்க மகனை நான் முறைப்படி திருமணம் செஞ்சு இருக்கேன். அவர் என்னோட கணவர்”.
“எத்தனையாவது கணவர்? “, என்றார் அவர் கிண்டலாக .
“எத்தனையாவது கணவரா இருந்தாலும் அவர் மட்டும் தான் இப்ப எனக்கு கணவரா இருக்காரு”, அழுத்தமாக கூறினாள் மாலினி.
“இரண்டாவது வந்த சிறுக்கிக்கு இவ்வளவு பேச்சாகாது”, என்று அவளை அடிக்க கை ஓங்கினார் விசாலாட்சி. அவள் அமைதியாக நிற்க. மீண்டும் அவளுக்கு கேடயமாக அவன் தான் மாறினான். அப்பொழுது சரியாக ஷாலினி அங்கு அழுது கொண்டே வர.
“எவனோ ஒருத்தனோட குழந்தைக்கு நீ அப்பனாக நான் விடமாட்டேன்”, என்று அவர் ஆவேசமாக அந்த குழந்தையை நெருங்கப் போக. அரவிந்த் அவசரமாக குழந்தையை நெருங்க. மாலினியும் பதட்டத்தோடு குழந்தையை நோக்கி ஓடினாள். குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் ஓங்கிய கை அப்படியே நின்றது.
“என்னோட தங்கச்சி எனக்கு பிறந்து இருக்காள் மாம். எவனோட குழந்தையோ கிடையாது. என்னோட குழந்தை”, என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக. இல்லை என்று அடித்துக் கூற அவராலும் முடியவில்லை. அப்படியே நிரஞ்சனாவை உரித்து வைத்து பிறந்திருந்தாள். எவனுக்கோ பிறந்திருந்தால் இப்படி பிறந்திருக்க முடியாது.
அவர் மிடறு விழுங்கினார். அவன் குழந்தையை கையில் ஏந்தினான்.
“என் தங்கச்சிக்கு தான் ஒரு நல்ல அம்மா இல்லாம போய்ட்டாங்க. ஆனா என் தங்கச்சி மாதிரியே இருக்கிற என் பொண்ணுக்கு ஒரு நல்ல அம்மா கிடைச்சிருக்காள். அவள நான் இழக்க மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் சரி. அவள நீங்க நெருங்க விட மாட்டேன். நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவள் ஓடி போக மாட்டாள். எங்க ரெண்டு பேருக்கும் பாலமே ஷாலினி தான். ஒருவேளை இவளுக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆச்சுனா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன். ஆனா நான் சாகறதுக்கு முன்னாடி கண்டிப்பா உங்க உயிரையும் எடுத்துட்டு தான் சாவேன்”, என்றான் அரவிந்த்.
அவருக்கு படபடப்பாக ஆனது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் வாழ்க்கையில் முதல் முறையாக பேச்சுகழற்று நின்றார். அப்படியே அச்சு அசலாக தன் பெண்ணை போல, தன்னைப்போல இருக்கும் குழந்தையை பார்த்ததும் அவருடைய ஆணவம் கூட அடங்கியது எனலாம். இத்தனைக்கும் நிரஞ்சனாவின் குழந்தையை அவர் பார்க்கவே இல்லை. அவள் இறப்பிற்கும் செல்லவில்லை. குழந்தை இறந்து விட்டதாகத்தான் அவர் கேள்விப்பட்டார். நிரஞ்சனாவின் கணவனும் வேறு திருமணம் செய்து கொண்டான் என்று அவருக்கு தெரியும். என்னதான் கோபம் இருந்தாலும் அவரும் தாய் தானே மகளின் மீது கோபம் அதிகமாகவே இருந்தது, அதைக் கொட்டி தீர்த்தார். அதன் பிறகு வருத்தம் இருந்தது. அதை அவர் வெளிகாட்டவில்லை என்பதுதான் உண்மை. இறந்துவிட்டால் என்று தெரியும் போது அவர் செல்லவில்லை என்றாலும் தனையறையில் இன்று வரை அழுது கொண்டிருப்பது அவர் மட்டுமே அறிந்த ஒன்று
“நிரஞ்சனாவே எனக்கு பொண்ணா வந்து பிறந்து இருக்கா. நிரஞ்சனாவ தான் என்னால காப்பாத்த முடியாம போச்சு. ஆனால் என் பொண்ண நான் உயிர் கொடுத்தாவது காப்பாத்துவேன். என் தங்கச்சிக்கு கிடைக்காதது எல்லாம் என் பொண்ணுக்கு கிடைக்க வைப்பேன். அது காதலாக இருந்தால் கூட”, என்று அழுத்தமாக கூறினான்.அவர் அப்படியே தன் பாதங்களை எடுத்து வைத்து பின்னால் சென்றார்.
“உங்க ரெண்டு பேருக்கும், எப்படி இப்படி குழந்தை? “, என்று அவர் தயக்கத்தோடு நிறுத்தினார்.“ஜெனிடிகலா அவங்க பாட்டி மாதிரியும் அவங்க அத்தை மாதிரியும் பிறந்து இருக்கா,, என்ன பண்ண சொல்றீங்க? “, என்று தன் மகளை கொஞ்சினான்.
“எனக்கு கூட என் அம்மா பாசம் கிடைக்கல, ஆனால் என் பொண்ணு எனக்கு அம்மாவா இருப்பாள்”, என்று அவள் தாடையில் கையை வைத்து ஆட்டியபடி சொன்னான். விசாலாட்சியின் கண்கள் லேசாக கலங்க அதை காட்டிக்கொள்ள முடியாமல் வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியில் சென்றார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை நெருங்கியவன்.
“சாரி என்னால தான் இதெல்லாம் கேட்க வேண்டியதா போயிடுச்சு. ஐ அம் ரியலி சாரி”, என்றான்.
“எங்கப்பா பேசினதை விட கம்மி தான்”, என்றாள்.அவனை சாதாரணமாக பார்த்துக் கொண்டு. அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
“நான் இதைவிட ரொம்ப எதிர்பார்த்தேன். எங்கப்பா வருவாருன்னு நான் எதிர்பார்க்கல அதனாலதான் அந்த நேரத்துல என்னால சரியா ரியாக்ட் பண்ண முடியல. ஆனா உங்க அம்மாவை பத்தி நீங்களும் உங்க அப்பாவும் கொடுத்த பில்டப்ல நான் இவங்கள இவங்களோட வார்த்தைகளையும் எதிர் பார்த்து தான் இருந்தேன்”, என்றாள் மாலினி .
அவன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.“நான் எப்ப என்னோட திருமண வாழ்க்கையை முறிக்கணும்னு முடிவெடுத்து செயல் படுத்தினேனோ. அப்போதுல இருந்து இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் எனக்கு சாதாரணமா ஆயிடுச்சு, வலிக்கும் தான் ஆனா எனக்கான மருந்து தேடுங்க அப்பத்தான் இவ கிடைச்சா. என்னுடைய எல்லா மன வலிக்கும் ஆறுதலா தேவதையா. இதுல வேடிக்கை என்னன்னா என்னோட தப்பு எதுவுமே இல்ல. தப்பு முழுக்க என்னோட முன்னால் கணவனுடையதா இருந்தாலும் என்ன சில பேர் தப்பா தான் பேசினாங்க. பெண்ணா பிறந்துட்டேன்ல எல்லாரும் என்னதான் இழிவா பேசுறாங்க. இப்ப ரெண்டாவது கல்யாணமும் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்பயும் இப்படி பேச தான் செய்வாங்க”. அவன் அவளை காதலாக பார்த்தான்.
“உள்ள வரலாமா”, என்று பார்வதியின் குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர். அவர் அனைத்தையும் கேட்டு விட்டார் என்று புரிந்தது. தன் தாய் கத்தியது அவ்வளவு சத்தமாக அல்லவா??.
“கவலைப்படாதீங்க உங்க வாழ்க்கைய பத்தி கேள்வி கேட்க வரல. உங்க வாழ்க்கைய நல்லபடியா வாழுங்க. நீ இல்லாத நேரத்தில் கூட உன் மனைவியும் குழந்தையும் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் பார்த்துக்கிறேன் அரவிந்தா “, என்று கூறினார். அவன் வேகமாக சென்று அவரைக் கட்டி அணைத்துக் கொண்டான். மகள் சினுங்கினாள். அவளை கீழே இறக்கி விட்டான் அவள் தாயிடம் ஓடினாள்.
“உங்க அங்கிள் பாத்துட்டு சண்டைக்கு வரப்போறாருடா? “, என்று பார்வதி கூரிய எதையும் அவன் கண்டு கொள்ளவில்லை.
” பெத்தா தான் மகனா அத்தை நீங்க அவரை மகனா தான நினைக்கிறீங்க? “, என்று பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் பார்வதியின் மருமகள். பலர் அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன சிலர் புரிந்து கொள்கிறார்கள் அல்லவா, இப்போது கணவன் மனைவி இருவருக்கும் நிம்மதியாக உணர்ந்தார்கள். பெற்றவர்களே இழிவாக பேசும் போதும், தவறாக புரிந்து கொள்ளும்போது. சுற்றி இருப்பவர்கள் துணையாக நிற்கும் போது அது ஆறுதலாக தான் இருந்தது.
ஆண்களுக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் கேள்வி கேட்காத இந்த சமூகம். பெண்களுக்கு மறு திருமணம் என்பதை கேள்வி கேட்கிறது அவர்களின் பெண்மையை பரீட்சித்து பார்க்கிறது. தவறு அவர்களிடம் இல்லாத போது இது விதி என்று சொல்ல முடியாது சமுதாயத்தின் சதி என்று தான் சொல்ல முடியும்.
Super sis….. Pondati setha purushan puthu mappilai aagalam…. Athey oru ponnuku panna… Intha ***** ketta samuthayam thappatha pesum… Athukaga feel pannama thatti vittutu nama namma life ah happy ah valanum…. Pesuravanag yarum namma kooda vanthu vala porathu illa… Rendu naal gossip pesuvanga.. Apram avanga life ah paathutu poiduvanga… So ponnunga sec mrg panndrathu avlooo periya kola kutram illaaa🎊🎊🎊🎊
Super super👍 👏👏👏
Malini visalatchi ku aravindh oda bathil adi ah vida kudutha bathil than nethi adi
😍😍😍
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr