Skip to content
Home » தேவதையாக வந்தவளே 40

தேவதையாக வந்தவளே 40

தேவதை 40

“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க அரவிந்த்?“, என்று இடுப்பில் கையை வைத்து முறைத்து கொண்டு இருந்தாள் மாலினி .

அவன் ‘ஈ ஈ’ என்று இளித்தபடி தலையை சொரிந்தான்.

“இதுதான் நீங்க ரூம சுத்தம் பண்ற அழகா?“, என்று அவள் கேட்டு வைக்க.

“இல்ல மா அன்னைக்கு வீடு ஷிஃப்ட் பண்ணும் போது நீ ரொம்ப ஜாக்கிரதையா எடுத்துட்டு வந்த இந்த பெட்டிய பார்த்தேனா?? அதான் ஒரு க்யூரியாசிட்டில அதுக்குள்ள என்ன இருக்குன்னு திறந்து பார்க்க முயற்சி பண்ணிட்டேன். தப்புதான்”, என்றபடி அவன் அதை ஓரம் வைத்தான்.

நம்பர் லாக் செய்து இருந்தது. அவன் விதவிதமான நபர்களை போட்டு பார்த்தான். அவளே உள்ளே வந்து. அந்த பெட்டியை திறந்து காட்டினாள். ஷாலினி அவளுக்கு கிடைத்த அந்த நாளை தான் அவளுடைய பிறந்தநாளாக அவள் கொண்டாடுகிறாள். அதையே பதிவு செய்து ஷாலினியின் பிறப்பு சான்றிதழையும் வாங்கி இருந்தான் அரவிந்த். அவள் திறந்து காட்ட ஆர்வமாக பார்த்தவனுக்கு சப், என்று ஆகிவிட்டது. அதில் ஷாலினியுடைய உடைகளும் அவள் காலில் அணிந்திருந்த கொலுசு, கையில் மாட்டி இருந்த கருப்பு கயிறு, அருணா கொடி என்று பத்திரமாக அவள் வைத்திருந்தாள்

.“ம்ப்ச்” என்று சலித்தபடி அந்த பெட்டியை மூடினான்.

“வேற அதுல என்ன இருக்குன்னு நினைச்சீங்க? “, கேட்டுக் கொண்டே அவள் கட்டிலின் மீது அமர.

“எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ண முடியல. ஆனா பெருசா ஏதாவது இருக்கணும்னு நினைச்சிட்டேன்”, என்றான் அரவிந்த்.

“என்னோட முன்வாழ்க்கை சம்பந்தமான்னு நினைச்சீங்களா? “.

“ச்சீச்சீ அந்த திருட்டு பயலுடையத நீயேன் வச்சிருக்க போற??. ரொம்ப யோசிச்சேன். எதுவுமே எனக்கு வரலைன்றது தான் உண்மை. உங்க அம்மா ஞாபகார்த்தமா, இல்ல உன்னோட படிப்பு சம்பந்தப்பட்டது, இல்ல உன்னோட பழைய விஷயங்கள்ள ஏதாவது”, என்று அவன் அடுக்கிக் கொண்டே போனான்.

“என்ன நீங்கதான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா இல்லைன்னு இன்னைக்கு தோணுது”, என்றாள்.

“ஏய் அப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துராத. பாப்பாதா இருக்கும்னு தோணுச்சு. ஆனா அவளோட பழைய திங்ஸ் எல்லாம் வெச்சிருப்பன்னு நினைக்கல”, என்றான் அவன் அவசரமாக.

“கிழிச்சீங்க, அதுதான் மாட்டிகிட்டீங்க இல்ல, அப்புறம் என்ன? “, என்று அவள் எழுந்த போக.

அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் எதிர்பாராததால் கட்டிலில் மீது இருந்த அவன் மீதே விழந்தாள். அவளை தன்னோடு அணைத்து கொண்டான் அரவிந்த்.

“வெளிய கதவு திறந்து இருக்கு”, என்றாள் மாலினி.

“நாம ரூமுக்குள்ள தான் இருக்கோம்”, என்றான் அரவிந்த்

.“ஹால்ல தான் ஷாலினி விளையாடிட்டு இருக்காள்”, என்றாள்.

“அவள் விளையாடிகிட்டு தானே இருக்காள்?“.

“விளையாடாதீங்க அரவிந்த். ஒரு பொம்பள பிள்ளைக்கு தகப்பனா நடந்துக்கோங்க”, என்று அவனிடமிருந்து விலகினாள்.

“அடிப்பாவி பொம்பள பிள்ளைக்கு தகப்பன் எல்லாம் அவன் பொண்டாட்டிய கொஞ்சவே கூடாதா? “, என்று அவனும் எழுந்தபடி கேட்டான்.

“கொஞ்சலாம் ஆனா பகல்ல கொஞ்ச கூடாது”, என்றாள் மாலினி.

“சரிங்க மேடம், நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் மேடம்”, என்று அவன் தன் வாயில் வலது கையை பவ்யமாக வைத்துக்கொண்டு , இடது கையை கட்டிக் கொண்டபடி, சற்று குனிந்து கூறினான். மீண்டும் செல்ல எத்தனித்தவளை இழுத்துப் பிடித்து நிறுத்தினான்.

“இன்னைக்கு குழந்தையா சீக்கிரம் தூங்கிடுச்சுடு”, என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான்.அவள் இரு பக்கமும் தலையாட்டி சிரித்துவிட்டு அங்கிருந்து கடந்து சென்றாள்.சமையலறைக்கு வந்தவளுக்கு தன் கணவனின் ஞாபகங்கள் தான் மேலெழுந்து நின்றது.

“உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல, ஒரு ஐடியா குடேன்”, என்று அவளிடமே கேட்டு நின்றவனின் ஞாபகங்கள் அவள் நெஞ்சில் எழுந்து நின்றது.

அதை நினைத்துப் பார்க்கும்போது அவளுக்கு இன்றும் சிரிப்பு வந்தது.அவன் மீண்டும் அந்த பெட்டியை திறந்து பார்த்து. ஆழ்ந்த பெருமூச்சு இழுத்து விட்டு.

“ஒரு நிமிஷம்னாலும் நாம இவளை போய் தப்பா நினைச்சுட்டோமே? “, என்று அவன் பின்னந்தலையில் அவனே அடித்துக் கொண்டான். அவன் பலவற்றை சிந்தித்தாலும் அதில் ஒரு வேலை ஆகாஷ் கட்டிய தாலியாக இருக்குமோ?’ என்று ஒரு நிமிடம் சிந்தித்தான் அல்லவா??. இருக்காது என்று அவன் மனமே கூறினாலும். இப்பொழுது அந்த ஒரு நிமிட சிந்தனையை நினைத்து வருந்தினான். குழந்தையுடையதாக தான் இருக்கும் என்று அவன் மனம் கூறினாலும். நீண்ட வருடங்கள் கழித்து அதை பார்த்ததும் திறக்க வேண்டும் என்று ஆவல் வந்துவிட்டது. பொங்கல் வருவதால், வீட்டை சுத்தம் செய்யும் பொறுப்பை அவனே எடுத்துக்கொண்டு. சமையல் வேலையை அவளிடம் கொடுத்துவிட்டு, சுத்தம் செய்கிறேன் என்று பாட்டை ஓட வைத்து மீண்டும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை??. அதற்காக வாழாமல் இருந்துவிட முடியுமா என்ன??. ஒரு உடை கிளிந்து இருந்தால் இன்னொரு உடையை அணிந்து கொள்வதில்லையா?. ஒரு வாழ்க்கை சரி இல்லை என்றால் இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?. அதுவும் தவறாக மாறிவிடாமல் காத்துக் கொள்வது தான் அதி முக்கியமானது.குழந்தையை மடியில் கிடத்தி உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். அரவிந்த் அறைக்குள் நுழைந்தான். அவளை அவன் அறைக்கு வர வைக்கவில்லை. அவள் அறைக்கு அவன் வந்து விட்டான் தன் உடமைகளுடன்.

அவளையை கன்னத்தில் கையை வைத்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவள் முகத்தில் பல பாவங்களை காட்டினாலும் அவன் நகர மாட்டேன் என்று அமர்ந்திருந்தான்..

“உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு ஒரு ஐடியா குடேன்? “, என்று மீண்டும் கேட்டான்.

“யாரு??, உங்களுக்கு நான் ஐடியா கொடுக்கணுமா?? அதான் என்ன கரெக்ட் பண்ணி வச்சிருக்கீங்களே, இன்னும் என்ன கரெக்ட் பண்ணனும்? “, என்று கேட்டாள் மாலினி.

“இது பத்தல இன்னும் டீப்பா கரெக்ட் பண்ணனும். அரவிந்த் அரவிந்துன்னு என்ன மட்டுமே ஜெபிச்சிட்டு இருக்குற அளவுக்கு கரெக்ட் பண்ணனும்”, என்றான்..

“ஏற்கனவே அப்படித்தான் இருக்கேன்”, என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..

“என்ன, என்ன சொன்ன உன் மனசுக்குள்ள?? “, என்று கேட்டபடி அவளை நெருங்கி அவள் அருகிலேயே அமர்ந்தான்..

Xஒன்னும் இல்லை”, என்றாள்..

“ஏற்கனவே அதை தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தானே சொன்ன? “, என்று அவன் சிரித்தபடியே சரியாக கேட்டான். அவள் சத்தமாக சிரித்தாள்.

“எனக்கு உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு தோணுச்சு?, உங்களுக்கு உண்மையிலேயே மனசுல இருப்பதெல்லாம் படிக்க தெரியுமா? “, என்று அவள் ஆவலாக கேட்க. ஆமாம் என்று ஒத்துக் கொண்டு விட்டான். அவளுக்கு அதில் பெரிதாகவே சிரிப்பு வந்தது. குழந்தை உறங்கியது தெரிந்த பிறகு அவர்கள் கச்சேரியை ஆரம்பித்து இருந்தார்கள்.

அவளுடைய முந்தைய வடுக்கள் இல்லாமல் அவன் பார்த்துக் கொண்டான். அது அவள் மனதில் தோன்றாமல் அவள் தன்னை காத்துக்கொண்டாள்.

வலிக்கச் செய்யும் உணர்வுகள் நினைவுகள் எதற்கு. தன் முன்னால் நிஜமாக சந்தோஷம் இருக்கும் போது. அதுபோல நேரங்களில் அவள் அவனைத் தவிர வேறு எதை பற்றியும் சிந்திப்பதில்லை. அப்போது மகளைப் பற்றிய சிந்தனை தோன்றினாலும். அவனே அதை ஓரம் நிறுத்தி விடுவான். சில நேரங்களில் அவர்களுக்கு இடையூறாக மகள் சினுங்குவாள். மாலினி அவசரமாக எழப்போவாள். அவளை அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு அவனே மகளை தோள் சுமந்து தூங்க வைப்பான்.

குழந்தைக்கு மட்டுமல்ல அவளுக்கும் தாயுமாகினான்.அவர்கள் வாழ்க்கையில் லோகநாதனை தவிர வேறு யாருக்கும் இடம் இருந்திருக்கவில்லை. மாலினியின் சொந்தங்களும் தூரமாக அவள் நிறுத்தி வைத்து விட.அவனுடைய தாயையும் அவன் தூரமாக நிறுத்தி வைத்திருந்தான். அவனுக்கு திருமணமானது தெரிந்ததும் அரவிந்தின் தாய் மாமா சசிக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.

தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்ட பிறகு. எட்வடை தேடி செல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனே ஒரு நாள் அரவிந்திற்கு அழைப்பு விடுத்து அவன் வீடு தேடி வந்திருந்தான்.குழந்தையை பார்த்ததும் துணுக்குற்றான். தன் முதல் மனைவியின் சாயலாக இருக்கும் குழந்தையை அள்ளி தூக்கி எடுத்தவன். குழந்தை அப்படியே சாதனா மாதிரியே இருக்காள்? “, என்று அவனே கேட்டு விட. அவர்கள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.மகன் அவனிடமிருந்து சினுங்கிக் கொண்டு தாயை தேடி ஓடினாள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்களாவது நல்லபடியா வாழ்றீங்க. நான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லனும்னு வந்தேன்”, என்றான் எட்வர்ட். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவள் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட. அவன் பேச்சை ஆரம்பித்தான்.

“எங்க அப்பா ஒரு வாட்டி பேசிட்டு இருந்தத நான் அசந்தர்ப்பமாக கேட்டேன். அவர பாக்குறதுக்கு சந்தேகப்படுற படியா வீட்டுக்கு இரண்டு பேர் வந்தாங்க. சாதனா இறப்பப்போ நான் அவங்கள அப்பா கூட பார்த்து இருக்கேன். அதுக்கப்புறம் பார்த்ததில்லை. ரொம்ப நாள் கழிச்சு அவங்க வீட்டுக்கு வந்திருக்கிறதும். அப்பா அவங்கள தனியா கூட்டிட்டு போய் பேசுறதும். அப்பா அவங்க கிட்ட காசு கொடுத்து அனுப்புவதையும் கவனிச்சேன். ஏதோ எனக்கு சரியா படல. அதுக்கப்புறம் கண்காணிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் எனக்கு திடுக்கிடும் சம்பவம் தெரிஞ்சுது. சாதனாவோட இறப்புக்கு எங்க அப்பா தான் காரணம்னு நிறுத்தி அரவிந்த் நிமிர்ந்து பார்த்தான். அவன் சலனம் இல்லாமல், எட்வர்ட் சொல்வதை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத்தான் அந்த விஷயம் எல்லாம் தெரியுமே.

“இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றேன் சாதாரணமா இருக்கீங்க. அதுதான் நீங்க போலீஸ்ல உங்க அப்பாவ ஒப்படைச்சிட்டிங்களே. சோ சாதனாவோட சாவுக்கு நீங்க நியாயம் வாங்கி கொடுத்துட்டீங்கன்னு தானே அர்த்தம்”, என்றான் அரவந்த்.

“ஆனா அவளை காப்பாத்தாம விட்டுட்டேனே?. என்ன நம்பி அவள் காதலிச்சாள். நீங்களும் என்ன நம்பி தான் அவளுக்கு கட்டி கொடுச்சீங்க. ஆனா எங்க அப்பா சொத்துக்காக இவ்வளவு பெரிய தப்பு பண்ணுவார்னு எனக்கு தெரியாம போச்சு”, என்று அவன் குலுங்கி அழுதான். அரவிந்த் எழுந்து சென்று அவன் தோளை தட்டிக் கொடுத்தான்.

“அப்படிப் பார்த்தால் நானும் என் தங்கச்சியை காப்பாத்தாம தான் விட்டுட்டேன்”, என்றான் அரவிந்த்.

“எனக்கு அது ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா அதுக்குள்ள ஜெயில நடந்த ஒரு பிரச்சினையில் கைதிகளுக்குள்ள நடந்த சண்டையில அப்பாவை கொன்னுட்டாங்க”, என்று கூறினான். அதற்கும் அவன் சலனம் இல்லாமல் தான் இருந்தான். கேட்டுக் கொண்டிருந்த மாலினிக்கு அதிர்ச்சியின் உச்சகட்டமாக இருந்தது.

“என்ன சொல்கிறான் இவன்??. சாதனாவின் இறப்பிற்கு தண்டனை கிடைத்து விட்டது என்று பார்த்தால். இது கடவுள் அவனுக்கு கொடுக்கும் தண்டனையா, ஆனால் தன் கணவன் எதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்கிறான்??. தனக்கு ஏற்பட்ட அதிர்வு அவனுக்கு ஏன் ஏற்படவில்லை??. ஒருவேளை அவனுக்கு எல்லாம் முன்பே தெரிந்திருந்ததோ??. இல்லை இவன் கொடுத்த தண்டனையா??. அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கிளம்புகிறேன் என்று எழுந்து நின்றான்.

“சாப்பிட்டு போங்க எட்வர்ட். என்னோட மனைவி நல்லா சமைப்பாள். நீங்க உங்க அப்பாவுக்கு நியாயமான தண்டனை வாங்கி கொடுத்து இருக்கீங்க. அந்த விதத்துல நீங்க சாதனாவுக்கு நல்லது தான் பண்ணி இருக்கீங்க”, என்றான்.

“அரவிந்த் என்னோட வாழ்க்கை நிம்மதி எல்லாம் அவளோடு போயிடுச்சு. பணம் பணம்னு பண பேய்க்கு என்ன கட்டி வச்சிருக்கார் எங்க அப்பா. பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைங்க தலையிலன்னு சொல்லுவாங்க. எங்க அப்பா செஞ்ச பாவத்தை நான் இப்ப அறுவடை செய்யுறேன். உங்களை நேரில் பார்த்து சொல்லனும்னு தோணுச்சு. அதான் வந்தேன். போயிட்டு வரேன் அரவிந்த், போயிட்டு வரேன் சிஸ்டர். என் சாதனாவ நல்லா பாத்துக்கோங்க”, என்றவன் ஓங்கி குரல் கொடுக்க. உள்ளே இருந்து அவள் அவசரமாக வெளியில் வந்தாள். சாப்பிட்டு போகும்படி அவளும் கூற. இன்னொரு நாள் வருவதாக கூறி சென்று விட்டான் எட்வர்ட். ஆழ்ந்த பெருமூச்சை விட்டவள். தன் கணவனின் புறம் திரும்பினாள்.

“என்ன இதெல்லாம், கடவுளே அவங்களுக்கு தண்டனை கொடுத்துட்டாங்களா? “, என்று அவளும் அவசரமாக கேட்க.

“கடவுள் எந்த காலத்தில் தண்டனை கொடுத்திருக்கிறார்? “, என்று அழுத்தமாக கேட்டான் அரவிந்த்.

“அப்படின்னா இது? “, என்று அவள் கேள்வியாக நிறுத்தினாள் மாலினி.

“அவன் பங்குக்கு, அவங்கப்பன தண்டிச்சுட்டான். என் பங்குக்கு என் தங்கச்சியோட சாவுக்கு நான் நியாயம் வாங்கி தர வேண்டாமா?”, என்று கேட்டான்.

“கொலை பண்ணீங்களா? “, என்று அவள் பயத்துடன் கேட்க.

“அவன் சொல்லிட்டு போனத கேட்கலையா??, ஜெயில்ல நடந்த சண்டையில செத்துட்டதா தானே சொன்னான். நீ என் மேல பழிய போடுற? “, என்றான் அரவிந்த்.

“இதெல்லாம் நமக்கு தேவை இல்லாத பிரச்சனை. உங்களை நம்பி நான் மட்டும் இல்ல, உங்க பொண்ணு இருக்காள். வயித்துல உங்க பையனும் இருக்கான் மறந்துடாதீங்க“, என்றாள் மாலினி. “கவலைப்படாத மாலு குட்டி”.

“கொலையை பண்ணிட்டு எப்படி கூலா பேசுறீங்க? “, என்று கேட்டாள்.

“அடிப்பாவி இவளே போலீஸ்க்கு போன் பண்ணி, நான் தான் கொலை பண்ணேன்னு சொல்லுவாள் போல??. அவன் பையனே வந்து சண்டையில செத்துட்டதா சொல்லிட்டு போறான். என் பொண்டாட்டிக்கு என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்னு தான் உன்கிட்ட சொன்னேன். இல்லன்னா இத்தனை மாசம் உன்கிட்ட சொல்லாம தானே இருந்தேன்”, என்று அவன் செல்லம் கொஞ்சீனான்.

“இது மட்டும் தான் உங்க வேலையா?, இல்ல ஆக்சிடென்ட்ல இறந்து போன ஆகாஷ், அதுவும் உங்க வேலை தானா?? “.“ஏம்மா சில பேரைக்காவது கடவுள் தண்டிக்கட்டுமே, எல்லா பழியையும் என் மேல போடாத”, என்றான்.

அவள் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டாள். கடவுளே தன் கணவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.

அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. பழைய கசப்புகளை மறந்து. புதிய வாழ்க்கையை தொடங்கி. மூவராக இருந்த வர்கள் நால்வராக மாற இருந்தார்கள். அவ்வப்போது லோகநாதன் வந்து மட்டும் குறையவில்லை.

5 thoughts on “தேவதையாக வந்தவளே 40”

  1. Aravindh Malini shalu kutty oda sethu oru new member um add aagi irukaga la avanga family .
    Edward ku ippo than unmai therinchi iruku pavam than avan nallavan than but what to do sila neram nallavanga la irundha kooda kasta tha anubavaikiraga than ah

  2. Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *