💖24
தர்ஷனின் அடக்கப்படாத கோவத்தில் மாறியிருந்தான். அவனின் கோவம் எதிரிகளுக்கு ஆபத்து என்று அறியாத மகேஷ் இருந்தான்.
தலைக்கு முட்டு கொடுத்து கன் வைத்தவன் ”என் பொறுமை போயிட்டு இருக்கு கவின்… உங்க வொய்ஃப் மட்டும் பார்த்துட்டேன் இவனுங்களுக்கு பரலோகம் ரூட் போட்டுடலாம். ஏன் கவின் இப்பவே சூட் பண்ணிடலாமா? இங்க இருக்கற சர்கள் தான் உங்க வொய்ஃப் இருப்பாங்க பிறகு தேடிக்கலாம்” என்றதும்
”தர்ஷன் சார்.. எனக்கு அவளோட வாழணும் எனக்கு அவ வேணும் ஏதாவது விபரீதம் நடந்துட்டா நான் உயிரோட வாழறதில் அர்த்தம் இல்லை ” என்றவன் தர்ஷன் தோளை தொட தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்.
கதவை தட்டும் ஓசை கேட்க தர்ஷன் தனது கன் எடுத்து பழையபடி வைத்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விடுத்து, கதவை திறக்க அங்கே மகேஷ் நின்றிருந்தான்.
”எனக்கு ஓகே.. ஃபிரெஷ் பீஸ் என்பதால் பேசியதை விட ஒரு லட்சம் பணத்தை அதிகமா கொடுத்துட்டு பொருளை எடுத்துக்கோ.. இன்னிக்கு நைட் ரூம் நம்பர் 306 பக்கத்து பில்டிங் தங்கம் 3 ஸ்டார் ஹோட்டல்” என்று கீ கொடுக்க அறையை எட்டி பார்த்தான்.
அங்கே பாத்ரூமில் கவின் மற்றும் தர்ஷனால் இறந்த ஒருவனும் இருக்க, கட்டிலில் அந்த சிறுமி பெட்ஷீட் அணிந்து சுற்றி இருப்பதை கண்டு மகேஷ் கிளம்பினான்.
தர்ஷன் அந்த நிமிடம் அவனை கொல்லாதது அவன் நல்ல நேரம் போல..
தர்ஷன் முதலில் தன்ஷிகா கவினோடு அனுப்பி விட்டு அடுத்து ஒரு கை பார்க்க வேண்டும் என்றிருந்தான்.
மகேஷ் தனது இடத்திற்கு வந்தவன் தர்ஷன் முகத்தினை மட்டுமே இமை மூடி யோசிக்க அதில் காமம் கொள்ளும் போதை என்பதே மருந்துக்கும் இல்லாமல் போக, அவனின் முகத்தில் ஏதோ ஒரு கோவம் வெறி என்று இருந்தது. ஆசையை தீர்த்து கொள்ளும் முகத்தில் இந்த உணர்வு எதற்கு?
ஒரு இரவுக்கு 3 லட்சம் பணம் கொடுத்து, ஒரு கிராமத்து பெண்ணை புணர இருக்கும் வேகம் அது அல்ல.. என்னவோ ஒன்று இடிக்க யோசித்தவன் தனது முன்னால் இருக்கும் தலையாக கருதும் ஒருவனுக்கு கால் செய்து சந்தேகத்தினை சொல்ல அவனோ ”சந்தேகம் எல்லாம் எதுக்கு பணதிமிரில் ஊறி இருக்கறவனுக்கு, பணக்கார பசங்களுக்கு அதெல்லாம் பணம் பெரிய விஷயம் இல்லை.. அள்ளி கொடுப்பானுங்க ஆனா கண்ணில் கொஞ்சம் கூட ஆசை காமம் இல்லையா? அவ அவ கார் பைக் வச்சி அழகா இருந்தா காதல்னு விழுறாளுங்க. இதெல்லாம் மேட்டரா” என்றான்.
”இல்லை.. அவன் என்னை ஒரு மாதிரி தான் லுக் விட்டான். எனக்கு வேற அந்த ரூம்ல இருக்கற குட்டி பொண்ணை பாதுகாப்பா வச்சி இருந்தான். என்னமோ சொந்த தங்கை போல அதான் டவுட்” என்று எடுத்து சொன்னான்.
”இந்த விஷயம் இடிக்குதே? இரு நம்ம பாண்டியனுக்கு போனை போட்டு கேட்கறேன்.” என்று காண்பராஸ் போட அதுவோ இறந்தவன் சடலத்தில் பாக்கெட் போனில் ரிங் அடிக்க கவின் எடுத்தான்.
தர்ஷனிடம் கொடுக்க எடுத்தவன் மௌனமாக இருக்க
”யோவ் பாண்டி அந்த மகேஷ் கூட்டிட்டு வந்த பொண்ணுக்கு டீல் பேசின பார்ட்டி எப்படிப்பட்ட ஆளு? கொஞ்சம் சந்தேகமா இருக்காம் மகேஷ்க்கு?” என்றார்.
”தெரிலை.. நீ வா எப்படிப்பட்டவன் என்று என்னை நேரில் பார்த்து சொல்லு” என்று சொல்லி அணைத்தவன்.
”கவின் எனஃப்.. சந்தேகம் வந்துடுச்சு. நீங்க என்ன செய்யாறீங்க தங்கம் 3 ஸ்டார் ஹோட்டலில் போயி உங்க தன்ஷிகாவை கூட்டிட்டு போங்க.. மற்றதை நான் பார்த்துக்கறேன்” என்றான் தர்ஷன்.
”எப்படி தர்ஷன் போவேன்? இங்க ஸ்கூல் குழந்தை இருக்கு.. இன்னும் யாரு யாரோ… எனக்கு தன்ஷிகா கூட வாழணும். அதுக்காக நான் செல்பிஷ் இல்லை.. என்ன ஆனாலும் எனக்கு ஓகே முதலில் இந்த கும்பலை நானும் தாக்க நிற்கறேன் எல்லாம் நல்ல படியா முடிந்தா என் தன்ஷிகா கூட வாழறேன்.. இல்லையா அவ நினைவோட போகட்டும் என் உயிர்” என்று சொல்லி முடிக்க தர்ஷன் அவனை தட்டி கொடுத்தான்.
”இந்த நல்ல மனசுக்கு, நிச்சயம் உங்க தன்ஷிகா கூட உங்க லைப் அமையும் நான் கேரண்டி” என்றவன் கதவை திறந்து செல்ல, அதற்குள் சில இடங்களில் இருந்து சிலர் அவனை நெருங்க வ,ர தர்ஷன் அவர்களை பார்த்தும் பாராதது போல சென்றான்.
நொடியில் இரும்பு கொண்டு அடிக்க போக, நழுவி போனவன் கைகள் மற்றவர்களை தாக்க அங்கே இருக்கும் சிலர் வந்து கொண்டு இருந்தார்கள்.
வெளியே திடீரென குரல் வேறு தோரணை கொடுக்க கவின் திறந்து பார்த்தவன் பின்னால் வந்த இருவரை பிடித்து அடிக்க துவங்கினான்.
மாறி மாறி அடித்திருருக்க, தர்ஷன் தான் கவினை முதலில் தன்ஷிகா இருக்கும் இடம் போ வேற இடம் மாற்றிடாங்க கண்டு பிடிப்பது கஷ்டமா போயிடும். கோ எட்” என்றான்.
தர்ஷன் சொல்லியது போல சாவி எடுத்து செல்ல போக தர்ஷன் பின்னால் ஒருவன் மீண்டும் ஒரு கத்தி எடுத்து குத்த வர, அவனை அடிக்க தர்ஷன் திரும்பினான்.
கவின் கத்த துவங்க புல்லட் ஒன்று அந்த தடியனை துளைத்து போனது. தர்ஷன் யார் அது என்று திரும்ப அங்கே தர்ஷனின் நண்பன் ரூபன் சிரித்து நின்றான்.
தர்ஷன் அவனை கண்டு ”மச்சி அந்த ரூம்ல ஒரு ஸ்கூல் பொண்ணு இருக்கு. ட்ரக்ஸ் செலுத்தி அவளை யூஸ் பண்ணிருக்காங்க அந்த குழந்தையை கூட்டிட்டு உடனடியாக ஹாஸ்பிடலுக்கு போ… இங்க நான் பார்த்துப்பேன்” என்றதும் ரூபன் அறையை ஒதுக்கி பார்க்க பெட்ஷீட் போர்த்தி அச்சிறுமியை தூக்கி கொண்டு சென்றான்.
கவினுக்கு பாதி நிம்மதி வர அடுத்து தன்ஷிகா காப்பாற்ற போனார்கள் இருவரும்.
அங்கே மகேஷ் ஏற்கனவே சுத்தி கொண்டு இருக்க, தர்ஷன் பார்த்ததும் பின்னால் ஓட எட்டி பிடித்தவன் ”மவனே.. எங்க ஓடற” என காலை குறிபார்த்து சுட, மகேஷூக்கு முட்டியில் இருந்து தோட்டா சிதறி குருதி வழிந்தது.
அதே நேரம் ஒரு 306 அறைக்கு காவல் இருந்த சக தடியன்கள் வந்து சேர ஒவ்வொருத்தனுக்காக ஒரு புல்லட் இறங்கினான்.
முதுகில் இருந்த கன் லோட் காலியாக காலில் இருந்ததை ஒற்றை காலை மடக்கி எடுத்து கவின் அருகே வரும் எல்லோரையும் சுட்டான்.
கதவின் மீது சாய்ந்து சத்தம் கேட்கும் தன்ஷிகா கதவை திறக்கும் திருகில் கையை வைக்க அது திறக்கவும் வெளியே வந்து நின்றாள்.
அங்கே மகேஷ் கவின் என்றிருக்க கவினை கண்டவள் நிம்மதி வந்து அவனை தேடி ஓடி வர, மகேஷ் இவளின் வருகையில் மேலும் ஆத்திரம் கொண்டவன் நடக்க முடியாது தவித்து, அங்கே இருந்த கத்தியினை எடுத்து கவின் மீது வீசி எறிய, கவின் மீது படாமல் பாதுகாத்து கொள்ள தன்ஷிகா முன் வந்தாள்.
அவள் வரவும் கத்தி பாயவும் சரியாக போனது.
இருவரும் ஒரு சேர பார்வையில் தழுவி நிற்க அங்கே குருதி வடிய வயிற்றை பிடித்து கீழே சரிந்தாள் அவள்.
ஆம் அவளே தான்..
அழகான வாழ்வை தொலைத்து தனது தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டி கொண்டு, தனது தங்கைக்கு அன்னையாக இருக்க வேண்டியவள்.
கணவன் தன்னை மன்னித்து ஏற்றுக்க வந்தும், தான் அதற்கு தகுதி இழந்ததை உணராது, இன்று காலையில் மகேஷ் பேசிய அலட்சிய பேச்சில் தான் அவளின் அடிமுட்டாள் தனம் புரிந்தது.
தர்ஷன் கடைசியாக மகேஷ் கத்தி வீசியதை கண்டு அருகே வந்தவன், நெற்றி பொட்டில் வைத்து சுட அவனின் மூளை சிதறி சென்று தெளித்தது.
ஓரளவு மற்றவர்கள் அமைதியாகி அங்கே சிதறி ஓடினார்கள்.
”எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது ஆனா அதை நானே அழிக்க பார்த்து தான் பொண்ணு பார்க்கும் பொழுது உங்களை அலட்சியம் செய்தேன். ஆனால் உங்களை பார்த்த பிறகு மகேஷ் எனக்கு தகுதி இல்லை என்று தான் மனசார உங்களை கல்யாணம் செய்தேன்.
நீங்க ஒதுங்கி போனதும் எனக்கு என் அழகில் கர்வம் வந்து, அவனோட பேசினேன் அதான் நான் செய்த தப்பு. ஒரு கட்டதில் நீங்க என்னோட சேர துடிக்கும் சமயம் நான் கருவுற்றது தெரிந்து எனக்கே பயம் வந்துடுச்சு. சரி மகேஷ் கூடவே தான் என் வாழ்க்கை அமையணும் என்று இருந்தேன். ஆனா அவன் என்னோட எப்படி பேசினா நான் அவன் சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று சரியா யோசிச்சு பேசி, என் கையால என் குழந்தையை கலைக்க வைத்தான். எந்த தாயும் செய்ய துணிய மாட்டா. என் சுயநலம் என் கண்ணை மறைச்சிடுச்சு. மகேஷோட வாழுற வாய்ப்பா முட்டாளா இருந்துட்டேன்.
அதுக்கு பிறக்கும் கூட நீங்க என்னை ஏற்றுக்க வர தான் வந்தீங்க. அதுகுள்ள அவன் என்னை வீடியோ எடுத்து வைத்ததும் எனக்கு என் மானம் போக கூடாது என்று தான் எந்த அக்கா செய்ய கூடாததை செய்தேன். உனக்கு மயக்கம் கொடுத்தா உனக்கு தெரியாது என்று தான் அப்படி.. என் வாழ்க்கை சீராகும் இருந்தேனே தவிர உன் வாழ்க்கை படுகுழிக்கு போகும்னு மறந்த முட்டாள்.
அது எவ்ளோ பெரிய தப்பு என்று இப்போ புரியுது. ஐந்து வருஷம் அதுக்கும் உன் மேல தான் கோவபட்டேன். அரசு உன் மேல ஆசைப்பட்டு என் மேல உதாசீனம் படுத்தினார் என்று. ஆனா அவர் செய்ததில் இருந்த நியாயம் புரியும் நேரம் நான் இனி வாழ முடியாது.
சாதாரணமா உலகத்தில் நடமாட கூட எனக்கு தகுதி இல்லை என்று புரிந்து போச்சு.
உன்னை கல்யாணம் செய்ய உன்னிடம் அனுமதி கேட்பார் நீ அதுக்கு மறுத்துடுவா என்று தான் நிம்மதியா கோவிலில் இருந்தேன். இவர் உனக்கு தெரியாம தாலி கட்டி விடுவார் என்று நினைச்சு பார்க்கலை.
உன்னை வெறுப்பெற்ற தான் அவர் என்னோடவும் வாழறதா உனக்கு ஒரு காட்சிக்கு தோன்ற அன்னிக்கு கோவிலில் வந்த உடனே அவரோட நெருக்கமா இருந்த மாதிரி பேசினேன். ஆனா அவர் என்னை திட்டி மனுஷியா கூட மதிக்கலை.. அதான் உண்மை.
உன்னை கவினை கஷ்டப்படுத்தியதற்கு நான் செய்த தப்பை சரி செய்ய தான். நான் உன் உயிரை காப்பாற்றிடேன் தன்ஷி.
நீ மன்னிக்கற அளவுக்கு நான் உனக்கு கெடுதல் செய்யலை.. அதை விட அதிகமா.. ஆனா இப்போ உன்னை காப்பாற்றி.. ஆஹ்.. விட்டதில் எனக்கு ஒரு திருப்தி. நீங்க மன்னிகலை என்றாலும் நான் நிம்மதியா தான் சாக போறேன்” என்று தன்ஷிகா மடியில் இறக்க துடிக்கும் அவந்திகா கவியரசனை பார்க்க அவனோ யார் செத்தால் எனக்கு என்ன என்ற விதத்தில் தான் நின்றுயிருந்தான்.
”தன்ஷி அப்பா அம்மாவிடம் கூட மன்னிப்பு கேட்டதா சொல்லிடு அவர்கள் எப்படியும் கவலைப்பட மாட்டாங்க,.. எனக்கு தெரியும்….. அவங்க பொண்ணு கடைசி நிமிஷத்திலயாவது நல்லவளா போனதா இருக்கட்டும்” என்று சொல்ல தன்ஷிகா அவளின் அக்காவை கிழி கிழி என திட்ட காத்திருந்தவளுக்கு இனி என்ன பேசவோ திட்டவோ துளியும் எண்ணமில்லை.
இனி முடிந்தவையை பேச அதுவும் உயிர் செல்கின்ற தருணத்தில் திட்ட யாருக்கு தான் மனம் வரும்.
தன்ஷிகா கவியரசனை பார்க்க கவியரசன் என்னை என்ன பண்ண சொல்ற என்பது போல பார்க்க.
சில விநாடியில் உயிர் சுவாசம் போனது.
அவந்திகா நிலை குத்திய பார்வையை பார்த்த படி சரிந்தாள்.
“ஹலோ முதலில் இங்க இருந்து கிளம்புங்க… கவின் பிடி நாம வந்த விமல் பைக் எடுத்துட்டு கிளம்பு” என்று தர்ஷன் சாவியை தூக்கி போட தன்ஷி லாவகமாக பிடித்து சாவியை பார்த்து தர்ஷனை கண்டாள்.
“இன்னமும் என்ன கிளம்பு” என்று தர்ஷன் கத்தினான்.
“அவர் தர்ஷன் சார் தானே” என்று தன்ஷிகா சொன்னவள் தர்ஷன் அருகே இருந்தவன் அங்கிருந்த கம்பியால் தலையில் அடிக்க பார்க்க தர்ஷன் கையால் தடுக்க அடி கையில் பட சுதாரித்த தன்ஷி கவினை அழைத்து ஓடினாள்.
“ஏய் தர்ஷன் வரட்டும் சுயநலமா எப்படி போக” என்று கவின் அடம் பிடித்தான்.
“கவின் அவரு தர்ஷன் சார். அவர் தானா வந்துவிடுவார்…. நாம இருக்கறது தான் அவருக்கு இடஞ்சல் நாம போயிட்டா அவருக்கு ஈஸி” என்று என்றவள் அவளாக ஒரு பைக் லெப்ட் ரைட் என்று சாவி கொண்டு திருட அது திறந்தது.
“நாங்க வந்த பைக் இது இல்லை அது நம்பர் ” என்று கவின் தேடினான்.
“அடேய் நல்லவனே உட்காரு அப்பறம் பைக் திரும்ப கொடுத்துக்கலாம்” என்று அவள் அமர்ந்து அவனை பின்னால் அமர சொல்ல கவின் ஏறி அமர்ந்து கொண்டான்.
தர்ஷனோ தன்ஷி ‘தர்ஷன் சார்’ என்றதும் தான் கெஸ்ட்டாக சென்ற, ஏதோ ஒரு கல்லூரியில் பயின்ற மாணவியாக இருக்கும் என்றெண்ணி எட்டி பார்க்க அவளின் பைக் சீறி பாய, சிரித்தவன் அடுத்து அடிதடியில் தன்னை சண்டையில் பொருத்திக் கொண்டான்.
“அவர் யாருனு தெரியுமா” என்றான் கவின்.
“அசிஸ்டண்ட் கமிஷனர் தர்ஷன் தானே? சென்னையில் அவரை தெரியாதவங்க இருப்பாங்களா அவர் எங்க காலேஜிக்கு வந்திருக்கார்.” என்று ரூபன் போகும் பொழுது பேசிய மருத்துவமனை பற்றி தன்ஷிகாவிடம் சொல்லி அங்கே போக சொன்னான்.
Super super super super super super super super super super
👌👌👌👌👌👌