Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-9

நிலவோடு கதை பேசும் தென்றல்-9

      💟-9 

   அவந்திகாவை  தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று தன்ஷிகாவும் வந்தாள். தாவணியில் தன் வீட்டில் நுழைந்து சுற்றி பார்த்தவள் ஒரு அறையை கண்டு மாமா இந்த அறை சூப்பர் இருக்கு… என்று சொல்ல சிரித்தான்.

     அதை கலைக்கும் விதமாக   “அவந்திகா இந்த ரூம் உங்களோடதா?” என்றதும்

    “நீ சூப்பர் சொன்னா இந்த ரூம் எனக்கும் பிடிக்குமா போ அங்க” என்று சொல்லி அவந்திகா எதிரே இருக்கும் அறைக்கு சென்றாள்.

    கவியரசன் தன்ஷிகா சொல்லிய அறையை தான் தேர்ந்து எடுத்து இருந்தான். அவந்திகா வந்து அவளுக்கு பிடித்த வகையில் அலங்கரிக்கப்பட்ட நினைத்து வெறுமையாக இருக்க அவளோ தன்ஷிகா மீது கோவத்தை காட்டி செல்ல கவியரசன் அமைதியாக விட்டு விட்டான்.

  தன்னோடு வாழ்பவள் அவந்திகா அவளுக்கு பிடித்ததை இருக்கட்டும் என்று இருந்தான்.

    தன்ஷி பரீட்சை ரிசல்ட் காத்திருக்க அவந்திகா கவியரசன் வாழ்வில் நட்பு தாண்டி போக கவியரசன் முயன்றான்.

     இந்த ஒரு வாரத்தில் அவந்திகாவை அழைத்து ஊர் சுற்றி காட்டினான். நல்ல ஹோட்டல் படம் கேளிக்கை இடம் என்று திரிய கவியரசன் மனம் மாறியது.

   எதற்கு எடுத்தாலும் முகவாட்டத்திலே காரியம் சாதிக்கும் அவந்திகா பார்க்க அவனுக்கு பாவமாக தான் தோன்றியது.

    அன்று ஒரு நாள் தங்கள் வாழ்வின் அடுத்த பிரிவுக்கு செல்ல ஆயுதமாக சொல்லி அறையை ஏற்பாடு செய்ய அவந்திகா தயாராக அலங்கரித்து நின்றாள். 

   கவியரசன் மனம் ஆணாக அவளை நாடிய நேரம்  தோட்டத்தில் இருந்த பசு, மாட்டு தொழுவத்தில் கதற, பணியாட்கள் கதவை தட்டினார்கள். கவியரசன் வேலையாட்கள் மாடு கண்று ஈன்றெடுக்க போராடுவதை சொல்ல “வர்றேன்” என்று கிளம்ப ஆயத்தமானான்.

    “மன்னிச்சுடு அவந்திகா… நான் இந்த நேரம் போய் பார்க்கறேன் கோமாதாவுக்கு ஆறுதலா தடவி விட்டா யாரையும் பார்த்து பயப்படாது. இல்லைனா மாடு எல்லாரையும் பார்த்து மிரளும் நம்மளையும் பயமுறுத்தும். முதல் பிரசவம் அதான்” என்று கவியரசன் முறுவலித்து கிளம்ப அவந்திகா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மூடிய கதவை வெறித்தாள்.

    ‘இப்ப இந்த பசு குட்டி போடறது தான் முக்கியம் இவருக்கு… சே..’ என்று சலித்து கொண்டு நிற்க கவியரசன் வருவான் என்று காத்திருந்து நேரமாக அவந்திகா உறங்கி போனாள்.

    அடுத்த நாள் காலை வீட்டில் அவந்திகா வந்த ராசி மாடு பெண் கன்று ஈன்றதை எண்ணி அப்பத்தா கடம்பம் பால் வத்த வைத்து சீனி போட்டு கொடுத்தார்.

   “சே எனக்கு இந்த பால் வாடையே பிடிக்காது என்று தட்டி விட அப்பத்தா அவளையும் கவியரசன் இருவரையும் பார்த்து சென்றுவிட்டார்.

   “பிடிக்கலை என்றால் சொல்ல வேண்டியது தானே தட்டி விடாதே அப்பத்தா பெரியவங்க அவங்களுக்கு இப்படி நடந்து கொண்டது சரியில்லை” என்றதும் முகம் திருப்பி செல்ல கவியரசன் அந்த கடம்பம் பாலை எடுத்து கொண்டு அவந்திகாவின் அம்மா வீட்டுக்கு சென்றான்.

    இவனை வரவேற்றது அவந்திகா தாயார் தான். தன்ஷிகா பள்ளிக்கு ரிசல்ட் வர சாக்லேட் எடுத்து அங்கே சென்றதாக சொல்ல நிம்மதி ஆனான். அவனுக்குமே தன்ஷிகாவை பார்க்க மனமில்லை. அவர்கள் கொடுத்த குலோப் ஜாமூன் எடுத்து கிளம்பினான்.

     தன்ஷிக்கு கடம்பம் பிடிக்கும் என்றது அறிந்தவனாள் அதன் பிறகு கடம்பம் பாலை கூட தவிர்த்தான்.

   மனதில் அவந்திகாவுக்கு பிடிக்காதது தனக்கு பிடிக்காது என்று எண்ணி கொண்டான்.

     வீட்டிற்கு வந்தால் அவந்திகா முகத்திருப்பி கொண்டு இருந்தாள். அவளுக்கு தான் ஒரு அழகி எப்படியும் கவியரசன் தன் பின்னால் வருவான் என்று அவனை தவிர்க்க அவனுக்கும் பணிகள் அதிகமாக இருந்தது. வேண்டுமென்றே அவன் தீண்ட இவள் விலக செய்ய முதல் தாம்பத்தியம் சண்டையோடு துவங்க மனமின்றி இருக்க 15 நாட்கள் இதில் போனது தான் மிச்சம்.

    அடுத்து ஒரு வெளி ஊருக்கு சென்றவன் கையில் பட்டு சேலையும் நகையும் வாங்கி வர அவந்திகா மனம் கொஞ்சம் சரிய, சண்டை சரியாக போனது.

     அன்றைய பொழுது தான் சிரித்து பேச அவந்திகா விருப்பு வெறுப்பை சொல்லி இருந்தாள். மருந்துக்கும் கவியரசன் விருப்பம் அறிந்து கொள்ள வில்லை.

மதியம் உணவு பரிமாற ஒருவன் எங்கிருந்தோ வந்து கவியரசன் கிணற்றில் ஒரு சிறுமி தவறி விழுந்ததாக சொல்ல உணவு உண்டு கொண்டு இருந்த கவியரசன் கையை உதறி தண்ணீரில் அலம்பி அப்படியே ஓடினான்.

    அரிசி சாதம் அவந்திகா பட்டு சேலையில் இருக்க ஓடும் அவனை குரோதத்துடன் கண்டாள்.

    அங்கே கவியரசன் வர குழந்தை கட்டிலில் பாதி கிணற்றில் தூக்கியபடி இருக்க பதறி அவனும் இழுக்க கொஞ்ச நேரத்தில் குழந்தையை காப்பாற்றி அதன் பின்னரே கவியரசன் நிம்மதி கொண்டான். 

    இதுவரை அந்த ஊரில் சில குழந்தைகள் இப்படி இறந்திருக்க இன்று அவன் கிணற்றில் உயிர் பிழைத்த திருப்தி அவனுள் நிம்மதி தர கிளம்பினான். 

    அங்கே வீட்டுக்கு வந்த பொழுது ஹாலில் சாதம் சிதறி இருக்க பட்டு சேலை ஒரு புறம் வீசியெறிந்த நிலையில் கண்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

     “என்னமா என்னாச்சு ?” என்றதும்

     “அன்றைக்கு மாடு சொல்லி போனிங்க இன்னிக்கு கிணற்றில் யாரோ விழந்திட்டாங்க ஒடறிங்க… இங்க ஒருத்தி இருக்கிறதே உங்க கண்ணுக்கு தெரியலை அப்படி தானே” என்றதும்

    கவியரசன் திருமண நாளில் இருந்து தான் இதே தவறு செய்கின்றோம். முதலில் தன்ஷிகா என்று இருந்தாலும் தற்பொழுது சூழ்நிலை தானே தன்னை இப்படி தடுத்தது. இதில் தன் தவறு இல்லை என்று யோசித்தான்.

    “அவந்திகா  நம்ம வயலில் இருக்கற கிணற்றில் நாராயனா அண்ணா குழந்தை மா அதான் உடனே போனேன்”

    “எனக்கு எந்த விளக்கமும் வேணாம்… அன்னிக்கு மாடு கன்று போட்டுச்சுனு போனிங்க… உங்க அப்பத்தா கிழவி கடம்பம் பாலை எனக்கு பிடிக்கலை தெரிந்து மூஞ்சுக்கு நேரா நீட்டுது. இன்னிக்கு யார் பெத்த குழந்தையோ அது கிணற்றில் விழுந்துடுச்சுனு போறிங்க இல்லை சும்மா தான் கேட்கறேன் அந்த குழந்தை இருந்தா என்ன செத்தா உங்களுக்கு என்ன?  நம்ம வாழ்க்கை இங்க ஊஞ்சலில் கிடக்கு ?” என்றதும் அடித்திருந்தான்.

     “என்ன தூக்கி வளர்த்த அப்பத்தா கிழவி சொல்ற சரி கிழவி தான் ஆனா அவங்களுக்கு என்று மரியாதை இல்லை… அன்றைக்கே தட்டி விடற இன்னிக்கு மட்டு மரியாதை இல்லாம பேசற… 

   ஒரு குழந்தை உயிருக்கு போராடிட்டு இருக்கு சொன்னா செத்தா எனக்கு என்ன கேட்கற… உன்னை பொண்ணு பார்க்க அவரும் தானே வந்தார் அது நினைப்பில்லை… நீ எல்லாம் என்ன மனிஷியோ” என்றவன் எதிர் அறைக்கு சென்று விட்டான்.

    அடி வாங்கிய அவமானம் கண்ணில் தெரிய மனதில் ‘என்னை எத்தனை பேர் காதல் சொல்லி வந்தவர்களை எனக்கு தகுதி இல்லை சுத்த விட்டேன். உன்னை ஆசைப்பட்டுச்சு பாரு மனசு அதுக்காக தான் அடி வாங்கியும் சும்மா இருக்கேன். நீயே என்கிட்ட கெஞ்சினா தான் உனக்கு அவந்திகா கிடைப்பா… என்று படுத்து கொண்டாள்.  

    மனம் குரங்காக தாவ அவளின் போனில் ஒரு எண்ணிற்கு… “உனக்கு இன்னமும் என்னை பிடிக்குமா எந்தளவு என்று கேட்க பதில் அந்த எண்ணில் இருந்து வர முகமெங்கும் கர்வ சிரிப்பில் அவந்திகா பதில் அனுப்ப அந்த எண்ணும் பதில் அனுப்பியது. தொடர்ச்சியாக இங்கு பதில் வர அங்கே கவியரசன் தன்னை தானே திட்டி கொண்டு இருந்தான்.

  ‘சே அவளே திருமணம் ஆகி ஆசை, கனவு, தேக்கி வச்சி என்னோட பேச இருக்கறவ அது புரிந்தும் கல்யாணம் ஆகி ஒன்று சேராம அவளையும் அடித்து இருக்கேன். என் மேல தான் தப்பு. எந்த சூழ்நிலை காரணமாக போனாலும் அவளை அணைத்து ஆறுதல் கொடுக்காம நான் இப்படி நடந்தா பாவம் அவ என்ன செய்வா ? என்று யோசித்தவன் நாளைக்கு அவளிடம் பேசி புரிய வைக்கனும். இப்படி எண்ணி அவன் உறங்கிட அவந்திகா விடிய விடிய அந்த எண்ணில் பேசி எழுந்தது 10  மணி அளவில் தான்.

கவியரசன் தான் அடித்ததில் அழுது அழுது கண் வீங்கி இருப்பதாக எண்ணி கொண்டான்

   கவியரசன் பேச போக அவந்திகா முறுக்கி கொண்டு செல்ல இரு தினமும் அறைக்குள்ளே முடங்கினாள். 

போன் மட்டும் எடுத்து கொண்டு…

 உணவும் நேரத்திற்கு எடுத்து அறைக்கு சென்றிட கவியரசன் கணவன் என்று உணவு பார்த்து பரிமாற வேண்டும் என்றோ இல்லாமல் இருக்க அவனாகவே அறைக்குள் நுழைந்தான்.

  ” சாரி மா அடித்தது தப்பு தான். ஒரு கணவனா உன்னிடம் இணக்கமா நடக்காம அடிக்க மட்டும் உரிமை எடுத்துட்டேன். தப்பு தான். ஆனா நீ செய்ததும் தப்பில்லையா…. நீயும் நானும் இயல்பா பேசலை…  தாலி கட்டியதும் உடலை மட்டும் பரிமாற இது என்ன அந்த காலமா… 

  பெண் நீ உன்னோட இத்தனை நாள் பெண்மையை உன் விருப்பம் இல்லாம தாலி கட்டிட்டேனேனு ஒரே காரணத்துக்காக எடுத்துக்க மனமில்லை டா. உன்னை புரிந்து இயல்பா வரும் அன்னியோன்யத்தில் நம்மை நாம் தொலைக்கனுமே தவிர கட்டாயத்தில் வாழ கூடாது. அதனால தான் பார்க்கிறேன். 

  உன்னை அடித்தது தப்பு தான் ஆனால் உன்னை விட்டு விலக செய்யலை. உனக்குண்டான மதிப்பு தான் தர்றேன்.” என்றதும் எங்கோ பார்த்தபடி அவந்திகா யோசித்தாள்.

  ஒரு ஏளன பார்வை உதிர்த்தவள் அவள் பாட்டிற்கு செல்ல கவியரசன் உடைந்து போனான்.

     தான் விலக கவியரசன் கெஞ்ச அவந்திகா மனம் குரூரமாக மகிழ்ந்தது

1 thought on “நிலவோடு கதை பேசும் தென்றல்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *