Skip to content
Home » நிழல் தேடும் நிலவே 11

நிழல் தேடும் நிலவே 11

கோபமாக வீட்டிற்குள் நுழைந்தாள் மகாலட்சுமி. மகா என்று வந்த சந்தியாவிடம் என்னம்மா என்று அவள் எரிந்து விழவுமே மகள் ஏதோ கோபமாக இருக்கிறாள் என்று உணர்ந்த தாய் மனது ஒன்னும் இல்லமா நீ போ என்று அவளை அனுப்பி வைத்தது.

என்னாச்சு சந்தியா என்ற சந்திரனிடம் என்னன்னு தெரியலை மகா கொஞ்சம் கோவமா இருக்காள் என்ன ஏதுன்னு அப்புறமா கேட்போம் என்றார் சந்தியா.

அவன் மேல இருந்த கோவத்துல அம்மாவ கத்திட்டோமே என்று நினைத்த மகாலட்சுமி அம்மா என்று வந்தாள் .என்ன மகா டீ குடிக்கிறியா என்ற சந்தியாவிடம் சாரிம்மா என்றாள் மகாலட்சுமி . எதுக்குடா ஏதாவது வேலை டென்ஷன்ல வந்துருப்ப விடு என்றார் சந்தியா.

வேலை டென்ஷன் இல்லமா அந்த சித்தார்த்தோட தொல்லை தாங்க முடியலை என்றாள் மகாலட்சுமி. என்ன பண்ணுறான் அவனுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே அப்பறம் என்னவாம் என்ற சந்தியாவிடம் அவனுக்கு அவன் பொண்டாட்டியை பிடிக்கலையாம். நான்தான் வேண்டுமாம் எங்கேயாச்சும் ஓடி போயிடலாம்னு சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் என்றாள் மகாலட்சுமி.

எனக்கு வேலைக்கு போகவே பிடிக்கலம்மா நம்ம வீட்டோட சூழ்நிலை இந்த வேலையை விட முடியாது அதனாலதான் நான் அங்கே வேலைக்கு போயிட்டு இருக்கேன் என்றாள் மகாலட்சுமி.

கவலைப்படாதே மகா நான் அப்பாகிட்ட சொல்கிறேன் அவரை கூட்டிட்டு போய் நீ அவன்கிட்ட பேசு அவனை ஒதுங்க சொல்லிடுவோம் ஒன்றும் பிரச்சனை இல்ல என்ற சந்தியா அந்த அம்மா மட்டும் அதிகப்படியான வரதட்சனை கேட்கலைன்னா அவனுக்கே உன்னை கல்யாணம் பண்ணி வச்சி இருப்போம் என்ன பண்றது நம்ம வீட்டோட நிலைமை இப்படி இருக்கு என்று புலம்பினார்.

லட்சுமி மா என்ற சந்திரனிடம் சொல்லுங்க அப்பா என்றாள் மகாலட்சுமி. அம்மா சொன்னாங்க மதியானம் நீ சொன்ன விஷயத்தை பத்தி அப்பா ஒரு முடிவு எடுத்தால் நீ அதுக்கு சம்மதிப்பாயா என்றார் சந்திரன்.

என்ன முடிவு அப்பா என்ற மகாலட்சுமியிடம் இனிமேல் அந்த பையன் உன்னை தொந்தரவே பண்ண கூடாது அப்படின்னா நீ உனக்குனு ஒரு வாழ்க்கையை வாழணும்மா. உனக்கு கல்யாணம் ஆயிட்டால் அவன் உன்னை தொந்தரவு பண்ண மாட்டான் என்றார் சந்திரன்.

என்னப்பா பேசுறீங்க நம்ம வீடு இப்போதைக்கு  இருக்கிற சூழ்நிலைக்கு எனக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைப்பீங்க தங்கச்சியோட படிப்பு முடியல என்று அவள் கூறிக் கொண்டிருக்கையில் நம்ம நிலைமை புரிஞ்சு வர்ற மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிப்பியா லட்சுமி என்றார் சந்திரன்.

புரியலப்பா என்ற மகாலட்சுமியிடம் என் நண்பன் சங்கரனோட பையன் தான் நான் உனக்காக பார்த்திருக்கிற மாப்பிள்ளை. நிறைய படிச்சிருக்காரு அவருக்கும் என்ன மாதிரி வேலை போயிருச்சு அதனால இப்ப எங்க செக்யூரிட்டி ஏஜென்சி ல தான் வேலை பார்க்கிறார்.

அவரை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா லட்சுமி என்ற சந்திரனிடம் நல்லா இருக்கே என் பொண்ணுக்கு நல்ல வேலையில இருக்குற மாப்பிள்ளையை பார்க்காமல் ஒரு செக்யூரிட்டி கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க என்றார் சந்தியா. அந்த பையனோட வீட்லயே போய் பேசி அடிச்சு பேசி ஏதாவது செய்து இந்த நேரம் இவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருந்திருக்கலாம் உங்களோட அலட்சியத்தினால் தான் என் மகளை இன்னைக்கு ஒரு செக்யூரிட்டிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொல்றீங்க என்று பொரிந்து தள்ளினார் சந்தியா.

அம்மா என்ன பேசுறீங்க அப்பாவை இப்படி காயப்படுத்திக்கிட்டு இருக்கீங்க என்ற மகாலட்சுமியிடம் என்னடி காயப் படுத்தி விட்டேன். நீ ஆசைப்பட்டவன் கூட உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வக்கில்ல இந்த மனுஷனுக்கு இப்பதான் செக்யூரிட்டி ஏஜென்சியில ஒருத்தனை பிடிச்சு விட்டு வந்து இவன் தான் மாப்பிள்ளை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் . இவர் செக்யூரிட்டி வேலை பார்க்கிறதே எனக்கு அவமானமா இருக்கு. இந்த லட்சணத்துல என் மகளுக்கு வரப் போற  மாப்பிள்ளையும் செக்யூரிட்டியாம் என்றார் சந்தியா.

இந்த செக்யூரிட்டி வேலை இருக்கு அதனால தான் இன்னைக்கு கொஞ்சம் நம்மளால குடும்பத்தை கஷ்டம் இல்லாமல் ஓட்ட முடியுது. இந்த வேலை நான் பாத்துட்டு இருக்கறதுனால தான் இதுல வர சம்பளத்தை வைத்து இந்த குடும்பத்தை காப்பாற்றலாம்னு நம்பிக்கை வந்து என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்ற ஒரு எண்ணம் வந்திருக்கு. பார்க்கிற வேலையை தப்பு சொல்லாதே சந்தியா எந்த வேலையா இருந்தால் என்ன உழைச்சு தான் சாப்பிடுறேன். அடுத்தவனை ஏமாத்தி சாப்பிட வில்லை என்றார் சந்திரன்.

நீங்க உழைச்சு சாப்பிடுங்க இல்ல அடுத்தவனை ஏமாற்றி சாப்பிடுங்க அது பிரச்சனை இல்ல என் மகளை நல்ல உத்தியோகத்தில் இருக்கிற நல்ல மாப்பிள்ளைக்கு தான் நான் கட்டி வைப்பேன் நீங்க காட்டுற இடத்தில எல்லாம் என் மகளை கட்டி வைக்க முடியாது என்றார் சந்தியா.

என் நண்பனோட குடும்பம் நல்ல குடும்பம் சந்தியா அங்கே கல்யாணம் பண்ணிட்டு போனால் நம்ம மகாலட்சுமியோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். பணம், காசு முக்கியம் இல்ல சந்தியா நல்ல குடும்பமா இருக்கிறது தான் முக்கியம். அந்த பையனும் நல்ல பையன் பொறுப்பான பையன் அவனை கல்யாணம் பண்ணிட்டால் நம்ம லட்சுமி சந்தோஷமா இருப்பாள் என்றார் சந்திரன்.

என்ன பொல்லாத சந்தோஷம்.  நான் வாழ்ந்துட்டு இருக்கேன் பார்த்தீங்களா அஞ்சுக்கும் ,பத்துக்கும்  அல்லோலப் பட்டு கிட்டு ஒரு வாழ்க்கை இது போல் தான் வாழுவாள். நல்ல புடவை கட்ட முடியாமல், நல்ல நகை நட்டு போட முடியாமல், என் பொண்ணுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க முடியாமல் இதே மாதிரியான ஒரு கேவலமான வாழ்க்கையை தான் என் மகளும் வாழ்ந்து கிட்டு இருப்பாள் .

நான் தான் இப்படி நாசமா போயிட்டேன் என் மகளாவது நல்ல வாழ்க்கை வாழனும் என்றார் சந்தியா. என்ன பேசற சந்தியா நான் மேனேஜரா இருக்கும் போது நீ ஆசைப்பட்டபடி வாழலையா நகை நட்டு போட்டுகிட்டது இல்லையா , நினைச்ச நேரத்துல நினைச்ச புடவை எடுத்து கட்டிக்க தான் இல்லையா ஏன் இப்படி தப்பு தப்பா பேசுற உன்னை  என்ன குறையா  நான் வெச்சிருந்தேன் ஏதோ என்னோட போறாத காலம் வேலை போச்சு நம்ம பொண்ணோட வருமானத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை. இப்பொழுது இருக்கிற வேலை உனக்கு பிடிக்கல தான் ஆனாலும் நம்ம உழைச்சி தானே சாப்டுட்டுக் கொண்டு இருக்கோம் என்றார் சந்திரன்.

அப்பா ,அம்மா போதும் நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இப்ப என்ன பிரச்சனை அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளையை உங்களுக்கு பிடிக்க வில்லை அவ்வளவு தானே அம்மா சரிம்மா உங்களுக்கு பிடிக்காத ஒருத்தரை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அது மட்டும் இல்ல எனக்கும் இப்போதைக்கு  கல்யாணம் பண்ணிக்கிற மனநிலை இல்லை அதனால என்னை விட்டுருங்க என்றாள் மகாலட்சுமி.

லட்சுமி அப்பா சொல்லுறதை கேளுமா உனக்கான ஒரு நல்ல வாழ்க்கையை தான் அப்பா அமைச்சு கொடுப்பேன் என்ற சந்திரனிடம் எனக்கு தெரியும் அப்பா நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை கிட்ட எந்த குறையும் நான் சொல்ல மாட்டேன் அவர் செக்யூரிட்டியா இருந்தால் என்ன இல்லை ஒரு மூட்டை தூக்கி பிழைக்கிறவனாக   இருந்தால் கூட எனக்கு பிரச்சினை இல்லை .அவர் என் அப்பா பார்த்த மாப்பிள என் வாழ்க்கையை எங்க அப்பா தப்பான ஒருத்தர் கிட்ட ஒப்படைக்க மாட்டார் ஆனால் அம்மாவோட சம்மதமும் ரொம்ப முக்கியம் அம்மா சம்மதம் இல்லாமல் என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அது மட்டும் இல்ல எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கப்பா என்னால உடனே கல்யாண வாழ்க்கை உள்ளே போக முடியாது என்றாள் மகாலட்சுமி.

சரிமா நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்லு உங்க அம்மாகிட்ட சொல்லு நம்ம நிலைமைக்கு தகுந்த மாதிரி தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளனும். விரலுக்கேத்த வீக்கம் தான் இருக்கணும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சந்திரன்.

அம்மா உங்க கிட்ட நான் திரும்பவும் சொல்கிறேன் அப்பாவை இனிமேல் காயப்படுத்தாதீங்கம்மா அவர் ரொம்ப நல்லவரு என்ற மகாலட்சுமியிடம்  எனக்கு தெரியும் மகா உன் வேலை ஏதோ அதை மட்டும் பாரு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் சந்தியா.

…. தொடரும்….

2 thoughts on “நிழல் தேடும் நிலவே 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *