என்னங்க , கார்த்தி இங்கே வா என்ற உமையாளின் சத்தத்தில் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் கார்த்திகேயன். அங்கு பார்த்தால் அவனது தம்பி தமிழரசனோ கழுத்தில் மாலையுடன் ஒரு பெண்ணின் கைபிடித்து நின்றான். ஒரு பெண்ணை அழைத்து வந்திருந்தான் அவள் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட தாலி ஒன்று இருந்தது என்னடா இது என்ற சங்கரனிடம் அப்பா இவள் சித்ரா என்னோட மனைவி என்றான் தமிழரசன்.
அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சங்கரன் .என்னடா பண்ணிட்டு வந்திருக்க உன் அண்ணனுக்கு இப்பதான் கல்யாணம் பேசி முடிச்சு கல்யாணம் வரை போய் கல்யாணம் நின்று போன தூக்கத்தில் இருக்கிறோம் . நீ என்னடான்னா காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து இருக்க என்று மகனை அடித்தார் சங்கரன். அப்பா நானும் ,சித்ராவும் லவ் பண்றோம் அவள் வீட்டில் அவளுக்கு வேற கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க எனக்கு வேற வழி தெரியலப்பா என்றான் தமிழரசன் .
என்னடா வழி தெரியலை என்ற சங்கரன் மேலும் அவனை அடிக்க அங்கிள் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க அவரை ஏன் அடிக்கிறீங்க என்றாள் சித்ரா. சித்ரா கொஞ்சம் வாய மூடு என்ற தமிழரசனிடம் இல்ல தமிழ் அவர் உங்களை அடிச்சுக்கிட்டே இருக்காரு என்றாள் சித்ரா. சித்ரா ப்ளீஸ் என்று மனைவியை அடக்கியவன் அப்பா ப்ளீஸ் எங்களை புரிஞ்சுக்கோங்க என்று தந்தையின் காலில் விழ அவரோ அவனை உதறிவிட்டு தள்ளி நின்றார். என்ன காரியம்டா பண்ணி இருக்க வீட்டில் அண்ணன் இருக்கும்போது நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற என்ற உமையாளிடம் அம்மா எனக்கு வேற வழி தெரியலம்மா என்று அவன் ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய நபரோ ஓடி வந்து சித்ராவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து ஓடுகாலி நாயே என்னடி பண்ணிட்டு இருக்க உனக்கு அங்கே நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்க இந்த அன்னக்காவடி பயலை கூட்டிட்டு ஓடி வந்துட்டே என்று மகளை அடித்துக் கொண்டிருந்தார்.
அப்பா போதும் நிறுத்துங்க யார் அன்னக்காவடி அவர் என்னோட புருஷன் என்ற சித்ராவின் கன்னத்தில் மேலும் அறைந்தார் சித்ராவின் தாய் சரஸ்வதி. என்னடி நாயே யாரை பார்த்து என்ன பேசுற கொஞ்சம் கூட மரியாதை இல்லையா அவர் உன்னோட அப்பா என்ற சரஸ்வதியிடம் தெரியும் அம்மா ஆனால் தமிழ் என்னோட கணவர் என்றாள் சித்ரா .
அவளது கன்னத்தில் மீண்டும் அடித்த சரஸ்வதி இவன் கட்டின தாலி உன் கழுத்துல இருந்தா தானடி புருஷன் என்று மகளின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க செல்ல அவரது கையை பிடித்து தடுத்தான் தமிழரசன். என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்ற தமிழரசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சரஸ்வதியின் கணவன் சுந்தரம்.
என்னடா யார் கையை பிடிக்கிற அன்னக்காவடி நாயே என் பொண்ணை ஏமாத்தி கடத்திட்டு போயி கல்யாணம் பண்ணிட்டா உன்ன சும்மா விட்ருவோமா இந்த கல்யாணமும் செல்லாது இவளும் உனக்கு பொண்டாட்டி இல்ல என்ற சுந்தரம் தன் மைத்துனன் இன்ஸ்பெக்டர் செழியனை பார்க்க அவரோ வந்து தமிழரசனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றார். நாங்கள் மேஜர் என்ற தமிழரசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் செழியன் நீதாண்டா மேஜர் அவள் மைனர் தான் மைனர் பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணதுக்கு என்ன தண்டனை தெரியுமா என்ற செழியனிடம் மாமா எனக்கு 18 வயசு ஆயிடுச்சு என்றாள் சித்ரா.
அப்படியா ஆகலைன்னு நாங்க ப்ரூப் காட்டுவோம் இவனை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி பேர்க்காமல் விடமாட்டேன் ஏழு வருஷம் போக்சோ சட்டத்துல போட்டு உள்ள வைக்கல என் பேரு செழியனே இல்ல என்று கூறிவிட்டு அவனை சிறையில் அடைத்தார் செழியன்.
அப்பா என்ற கார்த்திகேயனிடம் என்னப்பா என்றார் சங்கரன். வாங்கப்பா போலீஸ் ஸ்டேஷன் போலாம் என்ற கார்த்திகேயனிடம் அந்த நாய் எப்படி போனால் என்ன தருதலை பையன் அண்ணங்காரன் இருக்கும்பொழுது இவனுக்கு என்ன அவசரம் அவன் எப்படியோ போய் தொலையுறான் என்ற சங்கரன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.
என்னங்க அப்படி சொல்லாதீங்க அவன் நம்ம பையங்க என்ற உமையாளிடம் பையனா அவனா அவனுக்கும் அந்த நினைப்பு இருந்தால் எவளோ ஒருத்தியை தாலி கட்டி கூட்டிட்டு வந்து இருப்பானா என்ற சங்கரன் இடிந்து போய் அமர்ந்து விட்டார்.
அப்பா என்னது நம்ம வீட்டு வாசல்ல போலீஸ் ஜீப் என்றபடி வீட்டிற்குள் நுழைந்தாள் கீர்த்தனா. மகளிடம் நடந்த விஷயங்களை கூறினார் உமையாள் . அப்பா என்ன இது தமிழண்ணா ஏன் இப்படி ஒரு காரியம் பண்ணினான் என்ற கீர்த்தனாவிடம் அவன் உனக்கு அண்ணனும் கிடையாது அவன் இனிமேல் எனக்கு பிள்ளையும் கிடையாது அவனை பத்தி இனிமேல் இந்த வீட்ல யாரும் பேச வேண்டாம் என்று கூறிய சங்கரன் எழுந்து தன் அறைக்குள் அடைந்து கொண்டார்.
கார்த்தி அப்பா என்று உமையாளிடம் அம்மா நீங்க பொறுமையா இருங்க நான் ஸ்டேஷன்க்கு போய் என்ன ஏதுன்னு பார்க்கிறேன் என்று கார்த்திகேயன் கிளம்பினான்.
இன்ஸ்பெக்டர் செழியனும் தமிழரசனை அடி வெளுத்து விட்டார். நடந்து முடிந்த கல்யாணம் செல்லவே செல்லாது உன்னை என்ன பண்ண போறேன் பாரு என்று அவனை அடித்த அடியில் அவன் உடம்பில் உயிர் மிஞ்சியதே பெரிய விஷயம். அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு அவன் அழுது கொண்டிருந்தான்.
இந்த சித்ராவோ அவளது வீட்டில் அவளது தந்தையால் அடித்து வெளுக்கப்பட்டாள். அவளது கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்தார் சுந்தரம். என்னடி எவனோ ஒருத்தன் கட்டுன இந்த கயிறு தாலி ஆயிருமா. அவனை சும்மா விடமாட்டேன் உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிக் கொடு இல்லைனா அவனை ஸ்டேஷனில் கொன்னுட்டு தற்கொலை பண்ணி செத்துட்டான்னு சொல்லிடுவேன் என்று மகளை மிரட்டினார். அப்பா அப்படி எதுவும் பண்ணிடாதீங்கப்பா என்ற சித்ராவிடம் அப்போ உனக்கும் ,அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிக் கொடு என்றார். சித்ராவோ அப்பா எப்படிப்பா பாவம் அது என்னால முடியாதுப்பா என்று அழுதாள் . சித்ராவை பிடித்து சுவற்றில் தள்ளினார். அம்மா என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் கீழே விழ அவளது காலுக்கு கீழே உதிரம் பெருகியது. சித்ரா என்னாச்சுடி என்று பதறிய சரஸ்வதி என்னங்க நம்ம பொண்ணை தூக்குங்க என்று சொல்ல அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சென்று சித்ராவை பரிசோதித்துப் பார்க்கையில் அவளது கரு கலைந்து விட்டது என்று மருத்துவர் கூறினார். என்ன சொல்றீங்க டாக்டர் என்னோட பொண்ணு என்ற சரஸ்வதியிடம் ஆமாம் உங்க பொண்ணு மூணு மாசம் கர்ப்பமாக இருந்திருக்காங்க என்று மருத்துவர் சரஸ்வதியின் தலையில் இடியே இறக்கினார் அதைக் கேட்டு துடித்துப் போனார் சரஸ்வதி.
அந்த செய்தி வேறு செழியனுக்கு தெரிய இங்கே தமிழரசனோ அடி உதையில் செத்து கொண்டிருந்தான்.
என்ன சார் இப்படி போட்டு அடிச்சிருக்கீங்க என்ற கார்த்திகேயனிடம் உன் தம்பி பண்ண கேவலமான காரியத்துக்கு உன் குடும்பத்தையும் அடிச்சு உதைக்கனும் அவன மட்டும் அடிச்சிருக்கேன்னு நெனச்சு சந்தோஷப்படு என்றார் இன்ஸ்பெக்டர் செழியன் . இதோ பாருங்க இன்ஸ்பெக்டர் அப்படி எல்லாம் பேசாதீங்க என்று வக்கீல் ஏதோ சொல்ல வர இந்த பையனால் அந்த பொண்ணு கர்ப்பமா இருந்திக்காள். ஒரு மைனர் பொண்ணு ரேப் பண்ணி இருக்கான் இவனை என்ன பண்றது என்றார் .
அந்த பொண்ணு சொன்னாளா ரேப் பண்ணானினான்னு ரெண்டு பேரும் சேர்ந்து தப்பு பண்ணி இருக்கலாமே என்ற கார்த்திகேயனிடம் அவன் ரேப் பண்ணினானோ இல்ல அந்த பொண்ணு இவனோட சேர்ந்து தப்பு பண்ணிச்சோ அதெல்லாம் பிரச்சனை இல்லை அவளுக்கு வயசு 17 இவனுக்கு 20 அப்ப இவன போக்ஸோல உள்ள வைக்க தான் போறேன் என்றார் செழியன்.
சார் அந்த பொண்ணுக்கு 18 வயசு முடிஞ்சு ரெண்டு மாசம் ஆகுது என்ற கார்த்திகேயனிடம் அப்படியா சரி அவளுக்கு 18 ஆச்சுன்னு நீ சொல்ற ஆனாலும் நான் 18 ஆகல பதினேழு தான் ஆகுதுன்னு டூப்ளிகேட் சர்டிபிகேட் ரெடி பண்ணுவேன் உன் தம்பியை சும்மா விடமாட்டேன் இவனை போக்சோல உள்ள வைக்கிறது வைக்கிறதுதான் யார் வீட்டு பொண்ணு மேல கை வச்சிருக்கான். உன் தம்பி இந்த அன்னக்காவடி பையனுக்கு என் அக்கா பொண்ணு மேல ஆசையா இவனை சும்மா விடவே முடியாது இன்னும் உன்னால ஆனதை பாத்துக்கோ என்றார் இன்ஸ்பெக்டர் செழியன்.
கார்த்திகேயனும், வக்கீலும் எவ்வளவோ பேசியும் இன்ஸ்பெக்டரிடம் காரியம் ஆகவில்லை .அவரும் கேசை கோர்ட்டில் பாத்துக்கலாம் என்று சொல்லி சென்றுவிட்டார். என் தம்பியை பார்க்கணும் என்ற கார்த்திகேயனிடம் அதெல்லாம் முடியாது கிளம்பு என்று அவனை விரட்டி விட்டார் இன்ஸ்பெக்டர் செழியன்.
…. தொடரும்….
Interesting ah poguthu ..
வார்த்தைகள் கையாண்ட விதத்தில் ஒரு பக்குவம் தெரிகிறது ..மேலும் எழுதுங்கள்
Thanks dear
Thanks dear
Interesting ah pothu story. Intha panam tha kadhal serkum pirikum apadi varuthu papom panam tha jeikumanu
Nice epi👍
Intresting spr going sis….
காசு இருந்தா தான் எல்லாமே பண்ண முடியும்