Skip to content
Home » நிழல் தேடும் நிலவே…

நிழல் தேடும் நிலவே…

என்னாச்சு கார்த்திக் என்ற உமையாளிடம் அம்மா தம்பியை பார்க்க கூட விடமாட்டேன் என்று சொல்லி விட்டாங்க அம்மா. நானும், வக்கீல் சாரும் எவ்வளவோ பேசி பார்த்துட்டோம் . தம்பியை போக்ஸோ  சட்டத்தில் உள்ளே வெச்சே தீருவேன் என்று அந்த இன்ஸ்பெக்டர் பிடிவாதமா இருக்கிறார்.

எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்றுமே தெரிய வில்லை என்றான் கார்த்திகேயன். உமையாள்  பூஜையறையில் அமர்ந்து அழ ஆரம்பித்தார் . கடவுளே என்ன பாவம் செய்தோம் மூத்த பையனோட வாழ்க்கை தான் இப்படி ஆயிடுச்சு என்றால் சின்ன பையன் இப்படி தேவையில்லாத வேலை பாத்துட்டு வந்து நிற்கிறானே ஏன் என் குடும்பத்தை இப்படி சோதிக்கிறிங்க என்று அழுது கொண்டிருந்தார்.


அண்ணா என்ன ஆச்சு உங்க மாப்பிள்ளை என்னென்னமோ சொன்னாரு உங்க கல்யாணம் நின்று போயி தம்பி ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து பிரச்சினையாச்சுன்னு பக்கத்து வீட்டு ராஜு அண்ணன் சொன்னதாக உன் மாப்பிள்ளை தான் சொன்னாரு என்றாள் அமிர்தா.

ஆமாம் அமிர்தா என்ற கார்த்திகேயன் நடந்த எல்லா நிகழ்வுகளையும் கூறினான். என்ன அண்ணா இது அந்த ரஞ்சனி உங்களை காதலிச்சு தானே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாள். அப்புறம் என்ன பிரச்சினை அவளுக்கு என்றாள் அமிர்தா.

“காதல் அதெல்லாம் வெறும் பொய் அமிர்தா பணம் மட்டும்தான் இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்குது பணம் தான் இன்னைக்கு தம்பியோட வாழ்க்கையும் ஜெயில்ல போட்டு சீரழிக்குது “என்று கூறிய கார்த்திகேயன் உடைந்துவிட்டான்.

அண்ணா தயவு செஞ்சு அழாதீங்க அண்ணா தம்பியை எப்படியாவது வெளியில எடுத்திடலாம் உங்க மாப்பிள்ளையும் வேலை விட்டு நேராக நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காரு என்றாள் அமிர்தா . சரிமா நீ அம்மா கூட உட்கார்ந்துரு அம்மா பாவம் அழுதுட்டே இருக்காங்க என்ற கார்த்திக்கிடம் சரிங்க அண்ணா என்றவள் தன் தாய் அருகில் சென்று அம்மா ப்ளீஸ் அழாதீங்க என்றாள் .

அமிர்தாவை கட்டிக்கொண்டு அழுதார் உமையாள்.  என்ன பாவம் பண்ணினோம் அமிர்தா நம்ம குடும்பத்தை கடவுள் இப்படி சோதிக்கிறார் என்ற உமையாளிடம் அம்மா அழாதீங்கம்மா எல்லாம் சரியா போய்டும் என்றாள் அமிர்தா.

எப்படிம்மா சரியாகும் தம்பி மேல போக்ஸோ சட்டத்துல வழக்கு பதிவு பண்ண போறேன்னு அந்த இன்ஸ்பெக்டர் உறுதியாக சொல்லி இருக்கிறார் என்று அண்ணன் சொன்னானே என்று அழுத  உமையாளிடம் அம்மா கடவுள் நம்மளை கைவிடமாட்டார் அம்மா நம்புங்க என்றாள் அமிர்தா .

அப்பா இப்போ மட்டும் நீங்க தமிழரசனை வெளியில் விட சொல்ல வில்லை  அப்படின்னா நான் என் கழுத்தை அறுத்துட்டு செத்துருவேன் என்றாள் சித்ரா. ஏய் என்னடி டிராமா பண்ணுறியா என்ற சுந்தரத்திடம் சத்தியமா இல்லப்பா மாமா கிட்ட சொல்லி இப்பவே தமிழை வெளியில் விட சொல்லலைன்னா கண்டிப்பா என் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என்று அங்கு இருந்த அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள் சித்ரா .

நீங்க மட்டும் இப்ப மாமாவுக்கு போன் பண்ணலேன்னா என் கழுத்தை அறுத்துக்குவேன் என்று மீண்டும் தன் தந்தையை மிரட்டினாள்  சித்ரா.

உன்னால ஆனதை பார்த்துக்கோ என்ற சுந்தரம் அவள் கையில இருந்த கத்தியை பறிக்க வர முதலில் தன் கையை அறுத்தாள். கையில் இருந்து ரத்தம் வழிவதை கண்ட சரஸ்வதி பதறினார்.

என்னடி பண்ணிட்டு இருக்க என்ற சரஸ்வதியிடம் அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க இப்போது கையை தான் அறுத்தேன் இன்னும் ரெண்டு நிமிஷத்துல அவர்  மாமாவுக்கு போன் பண்ணி தமிழை விட சொல்லலைன்னா அடுத்து என் கழுத்தை தான் அறுப்பேன் என்றாள் சித்ரா.

ஒழுக்கங்கெட்ட நாயே நீ செத்து தொலைடி என்ற சுந்தரத்திடம் என்னங்க நமக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு அவளை சாகக் கொடுத்துட்டு நாம யாருக்காக வாழ போகிறோம் தயவு செய்து என் தம்பிக்கு போன் பண்ணுங்க அந்த பையனை விட சொல்லுங்க அது தான் அவனை அடிச்சாச்சே அவன் கிட்ட இனிமேல் சித்ரா இருக்கிற திசை பக்கம் கூட தலை வச்சு படுக்க மாட்டேன் என்று எழுதி வாங்கிட்டு அனுப்பி விட்டுருங்க .

என் பொண்ணு எனக்கு உயிரோட வேண்டும் என்று அழுதார் சரஸ்வதி.  முதலில் உன்னை தாண்டி கொல்லனும் ஒத்த பொண்ணை பெத்து அவளை ஒழுங்கா வளர்க்க தெரியாத துப்பு கெட்டவளே என்று மனைவியை அவர் வசை பாட அப்பா போன் பண்ணுறீங்களா இல்லையா என்று சித்ரா மீண்டும் மிரட்டினாள்.

உன்ன மாதிரி ஒரு தருதலையை பிள்ளையா பெத்ததுக்கு இன்னும் நான் என்ன எல்லாம் அனுபவிக்கனுமோ என்று நொந்து கொண்ட சுந்தரம் தன் மைத்துனன் செழியனுக்கு போன் செய்தார்.

என்ன அத்தான் விளையாடுறீங்களா அவன் மேல எப்ஐஆர் பைல் பண்ண போறேன் என்ற செழியனிடம் மாப்பிள்ளை நான் சொல்கிறேன்ல அவனை விட்டு விடு ஆனால் அவன் கிட்ட எழுதி வாங்கிட்டு அனுப்பு.

இங்கே உன் அக்கா பொண்ணு பண்ணுற டார்ச்சர் தாங்க முடிய வில்லை . கையை அறுத்துக்கிட்டாள்.  கழுத்தை அறுத்துக் கொள்வேன்னு சொல்லி மிரட்டுகிறாள்.  உங்க அக்கா வேற அழுகிறாள். ஒத்த பொண்ணை பெத்து அவளை சாக கொடுத்து விட்டு அப்புறம் நாங்க யாருக்காக வாழனும் சொல்லு இனிமேல் அவனை இவளும் பார்க்க மாட்டாள்.  அவனும் இனிமேல் இவள் இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுக்க கூடாது என்று எழுதி வாங்கிட்டு அவனை அனுப்பி விடு என்றார் சுந்தரம்.

சரிங்க அத்தான் என்ற செழியனும் போனை வைத்துவிட்டு கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்து வந்து தமிழரசனை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

உன் தம்பி கிட்ட தெளிவா சொல்லிரு அவன் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கான். இனிமேல் சித்ரா இருக்கிற திசைப் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்க கூடாது மீறி எங்க வீட்டு பொண்ணு மேல கைய வைக்கனும்னு நினைச்சானு வை அவன் உடம்புல உயிர் இருக்காது என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் செழியன்.

தமிழரசன் உடலில் உயிர் மட்டும் தான் இருந்தது அவனால் நடக்கக்கூட முடியவில்லை அவனை ஒரு மருத்துவமனையில் சேர்த்தான் கார்த்திகேயன். அவனது  கை கால் எலும்பெல்லாம் உடைக்கப்பட்டு இருந்தது . பாவம் அவனால் எழுந்து நடக்கவே சிரமமாக இருந்தது.

இதெல்லாம் தேவையாடா படிக்கிற வயசுல என்னடா காதல் அப்படியே காதலிச்சாலும் அந்த பொண்ணு கூட தப்பா நடந்துகிட்டு அவ வயித்துல புள்ளையை கொடுக்குற அளவுக்கு அப்படி என்னடா நீ பெரிய மனுஷன் ஆயிட்ட என்ற கார்த்திகேயனிடம் அண்ணா சத்தியமா நாங்க தெரிஞ்சு எந்த தப்பும் செய்ய வில்லை. அது தெரியாமல் நடந்த தப்பு அண்ணா என்னை மன்னிச்சிருங்க அண்ணா என்ற தமிழரசனிடம் என்கிட்ட மன்னிப்பு கேட்டு என்னடா ஆகப்போகுது. இப்போ பாரு உன்னோட அவசரத்தினால் உன் வாழ்க்கையில என்ன எல்லாம் நடந்துச்சுன்னு அப்பா வேற ரொம்ப கோவமா இருக்காரு அவரை எப்படி சமாதானப்படுத்த போகிறேன்னு எனக்கு தெரியலை என்றான் கார்த்திகேயன்.

என்ன மன்னிச்சிடுங்க அண்ணா என்ற தமிழரசனின் தலையை தடவிக் கொடுத்தவன் முதல்ல ரெஸ்ட் எடுடா உனக்கு உடம்பு சரி ஆகட்டும் என்ற கார்த்திகேயன் தம்பியின் அருகிலே அமர்ந்தான் .

என்ன தம்பி சொல்றீங்க இது எப்படி சரியா வரும் என்ற சந்திரனிடம் எனக்கு வேற வழி தெரிய வில்லை அங்கிள் எப்படியும் எங்க அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்பாதிக்க மாட்டாங்க.  உங்க குடும்பம் இப்போதைக்கு இருக்கிற சூழ்நிலையில் எங்க அம்மா கேட்கிற வரதட்சணையை உங்களாளையும் செய்ய முடியாது அதனாலதான் சொல்கிறேன் நானே மகாவுக்கு எல்லாம் போட்டு கல்யாண செலவு மொத்தத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்  . நீங்கள் தான் எல்லாமே செலவு பண்றது மாதிரி காட்டிக்கோங்க என்றான் சித்தார்த்.

தம்பி தப்பா நினைக்காதீங்க எங்க குடும்பத்துல இப்போதைக்கு நீங்க சொல்கிற அளவுக்கு சீர்  எல்லாம் செஞ்சு என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க வசதி இல்லை தான் அதுக்காக உங்ககிட்டயே வாங்கி அதை உங்களுக்கே போடுற அளவுக்கு நாங்க ஒன்னும் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்க வில்லை தம்பி. எங்களை பிச்சைக்காரங்க  மாதிரி நினைக்காதீங்க நீங்க போடுற பிச்சை எனக்கு வேண்டாம். என் பொண்ணு லட்சுமி அவளுக்கு நீங்க தான் வேண்டும் என்று சொல்லட்டும் என் தலையை அடமானம் வைத்து கூட உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்னோட செலவுல ஆனா நீங்கள் காசு கொடுத்து அதை வைத்து இந்த கல்யாணம் நடக்க வேண்டாம் தம்பி. தயவு செஞ்சு கிளம்புங்க என்றார் சந்திரன்.

…. தொடரும்….

4 thoughts on “நிழல் தேடும் நிலவே…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *