Skip to content
Home » நிழல் தேடும் நிலவே…9

நிழல் தேடும் நிலவே…9

அப்பா என்ன மன்னிச்சிருங்க அப்பா என்ற  தமிழரசனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார் சங்கரன் .கார்த்திக் உன்னோட தம்பி இந்த வீட்ல இருந்தால் இருந்துட்டு போகிறான் ஆனால் இனிமேல் அவன் என்கிட்ட பேசக்கூடாது. அதை மட்டும் சொல்லி விடு. உன் அம்மாவுக்காக தான் அவன் இந்த வீட்டில் தங்குவதற்கு நான் அனுமதிக்கிறேன் என்றவர் சென்றுவிட பாவம் தமிழரசன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். தம்பியை சமாதானம் செய்வதற்கு கார்த்திகேயனுக்கு தான் போதும் போதும் என்றானது.

அவனும் பல இடங்களில் வேலைக்கு முயற்சி செய்து பார்த்தான். ஆனால் ஒரு இடத்திலும் வேலை கிடைத்த பாடில்லை. வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுகிறோமே என்ற நினைப்பு அவனை வாட்டியது.

என்ன கார்த்தி ரொம்ப வருத்தமா இருக்கிறாய் என்ற உமையாளிடம் வருத்தமா இல்லாமல் சந்தோஷமா வா அம்மா இருக்க முடியும் என்ற கார்த்திகேயன் மனசு ரொம்ப வேதனையா இருக்குமா. 28 வயசு ஆயிடுச்சு இன்னும் அப்பாவோட காசுல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கேன்.

அப்பா அவரோட பென்ஷன் பணத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார். அது உங்களோட சேவிங்க்ஸ்காக கொஞ்சம் வச்சுக்கலாம்னு நினைச்சிருப்பார் இல்ல நான் பாவிம்மா எல்லாம் என்னால் தான் என்று அழுதான் கார்த்திகேயன். என்னப்பா இப்படி அழற  நீ ட்ரை பண்ணு கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும் என்றார் உமையாள் .

எங்கம்மா எங்கே போனாலும் உனக்கு ஏன் வேலை போச்சுன்னு கேக்குறானுங்க காரணம் சொன்னால் கழுத்தை புடிச்சு வெளியில தள்ளாத குறையா விரட்டி விட்றானுங்க என்ன பண்ணட்டும் என்றான் கார்த்திகேயன்.

அப்பாவோட ரிட்டயர்மென்ட் செட்டில்மெண்ட் பணம் கொஞ்சம் இருக்கு அதை வேண்டுமானால் வாங்கி தருகிறேன் நீ ஏதாவது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுகிறாயா கார்த்திக் என்றார் உமையாள்.

வேண்டாம் அம்மா அது அப்பாவோட உழைப்பு .கீர்த்தனா வேற கல்யாண வயசுல இருக்கிறாள். இப்போ நான் பிசினஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி என்னுடைய நேரம் சரியில்லாமல் அந்த காசு மொத்தத்தையும் இழந்து விட்டேன்னா தங்கச்சியை எப்படிம்மா கல்யாணம் பண்ணி கொடுக்கிறது வேண்டாம்மா என்றான் கார்த்திகேயன்.

உன்னோட கல்யாணம் என்று அவர் ஏதோ சொல்ல வர முடிஞ்சு போன கதையை பத்தி பேசி என்னவாக போகுது என்றவன் கையில் இருந்த பத்திரிகை ஒன்றை தன் தாயிடம் நீட்டினான். எனக்கு நிச்சயம் பண்ணின தேதியில் இன்னொருத்தன் கூட அவளுக்கு கல்யாணமாம் இந்த பத்திரிகை கொடுக்கும் போது கூட என்னை அவமானப்படுத்தி தான் கொடுத்துட்டு போனாள் .

ரஞ்சனி என்கிற ஒருத்தி என் வாழ்க்கையில இருந்தாள். இப்போ இல்லை அது முடிஞ்சு போன அத்தியாயம் அதை பத்தி திரும்ப நினைக்க கூட நான் விரும்ப வில்லை என்றவன் எழுந்து சென்று விட்டான். மகனின் வேதனையை உணர்ந்த அந்த தாய் தானும் கண்ணீர் வடித்தார். நான்கு பிள்ளைகளைப் பெற்றேன் மூத்தவனின் வாழ்க்கையோ இப்படி இருக்கிறது என்று நொந்து கொண்டார்.

நீங்க சங்கரன் தானே என்ற சந்திரனிடம் ஆமாம் நீங்கள் சந்திரன் தானே என்றார் சங்கரன். எப்படி இருக்க சங்கரா என்ற சந்திரனிடம் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க பா என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  இருவரும் பால்ய நண்பர்கள்.பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்து கொண்டிருப்பதால் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். உனக்கு எத்தனை பசங்க இருக்காங்க சங்கரா என்று சந்திரன் கேட்க நான்கு பசங்க. இரண்டு பையன்கள், இரண்டு பொண்ணுங்க என்றவர் மூத்தவன் ரொம்ப நல்ல பையன் நல்ல வேலையில் இருந்தான். அங்கே ஏதோ ஒரு பொண்ணுக்கு உதவி பண்ண போறேன்னு சொல்லிட்டு இவனோட வேலை போயிடுச்சு.

வேலை போனாலும் போச்சு அதுக்கப்புறம் ரெண்டு மாசமா அவனும் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கான் எங்கேயுமே கிடைக்க வில்லை .ரொம்ப வேதனையா இருக்கு வேலை போனதுனால அவனோட கல்யாணமும் நின்னு போச்சு என்று சங்கரன் புலம்பினார். என்னப்பா சொல்லுற வேலையில்லாததுனால கல்யாணம் நின்று போச்சா என்ற சந்திரனிடம் கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடந்த கதையை கூறினார் சங்கரன்.

ரொம்ப கொடுமைப்பா அந்த பொண்ணு உன் பையனை நெஜமாவே காதலிச்சாளா வேலை போயிடுச்சு என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக கல்யாணத்தை நிறுத்திருந்தால் என்ன பொண்ணு அவள் என்றார் சந்திரன் .

மனுஷங்களை யாரும் நினைக்கிறாங்க சந்திரா நாமதான் மனுஷங்க முக்கியம் என்று நினைக்கிறோம் ஆனால் மத்தவங்க எல்லாரும் பணம் முக்கியம் தானே நினைக்கிறாங்க என்றார். அது என்னவோ உண்மைதான் சங்கரா என் பொண்ணுக்கு கூட ஒரு நல்ல வரன் வந்துச்சு அவங்க கேட்ட அளவுக்கு வரதட்சணையை செய்ய முடியாமல் போனதால் அவளோட கல்யாண பேச்சு நின்று போச்சு. அந்த பையனுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்குன்னு சொன்னாள். பாவம் என் பொண்ணு மனசுக்குள்ளே போட்டு புளுங்கிட்டு இருக்கிறாள். வெளியில சொல்லவும் முடியல எங்கே வெளியில் சொன்னால் நானும் ,என் மனைவியும் வேதனைப்படுவோம் என்று சோகத்தை தனக்குள்ளே போட்டு புதைச்சுட்டு இருக்கிறாள்.

உனக்கு என்ன நல்ல வேலையில் தானே இருந்த 50 பவன் போடுவது என்ன சிரமமா என்ற சங்கரனிடம் நீ வேற சங்கரா எனக்கு வேலை போய் கிட்டத்தட்ட அஞ்சு ,ஆறு வருஷமா வீட்லதான் இருக்கிறேன் .

என் பொண்ணு தான் பாவம் கஷ்டப்பட்டுட்டு இருக்கிறாள். படிப்பு முடிச்சதுல இருந்து நாலு வருஷமா அவள் தான் வேலைக்கு போய் என் குடும்பத்தை கொஞ்சமாவது  சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம பாத்துட்டு இருக்கிறாள் என்றார் சந்திரன்.

இப்பதான் நான் ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியில் வேலை பார்த்துட்டு இருக்கேன் என்ற சந்திரன் சங்கரா உன் பையன் எந்த வேலையாக இருந்தாலும் பார்ப்பாரா என்று கேட்டார். அதெல்லாம் என் பையன் இந்த வேலை தான் பெரிய வேலை அந்த வேலை தான் சின்ன வேலை அப்படி எல்லாம் பார்க்கிற பையன் கிடையாது. அவன பொறுத்த அளவுல இப்போதைக்கு அவனால எதுவும் வீட்டுக்கு கொடுக்க முடியலை என்று நொந்து நொந்து அதிக நேரம் வீட்டுக்கு வருவதே இல்லை.

சரியா சாப்பிடறதும் இல்லை மனசு வேதனையா இருக்கு அவன் கிட்ட எவ்வளவோ பேசி பாத்துட்டேன் நீ சம்பாதிச்சு எத்தனை முறை நாங்கள் எல்லாம் சாப்பிட்டு இருக்கோமே கார்த்தி கொஞ்ச நாள் அப்பா உன்னை தாங்க மாட்டேனா என்று கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் இதுதான். ஒரு மூட்டை தூக்கி நான் ஒரு 100 ரூபாய் கொண்டு வந்து உங்க கையில் கொடுத்துட்டு சாப்பிட்டால் தான் அப்பா எனக்கு செரிமானம் ஆகும் என்று சொல்லி விட்டான். என்ன பண்ணுறது என் பொண்டாட்டி தான் வற்புறுத்தி அவனை சாப்பிட வைக்கிறாள். மூன்று வேளை சாப்பிடுகிற பையன் ஒருவேளை தான் சாப்பிடுகிறான். எனக்கு வேதனையா இருக்கு நான் அவன்கிட்ட எவ்வளவு சொல்லிட்டேன் அப்பா உன்னை தாங்க மாட்டேனா  தம்பி என்று. அதற்கு அவன் என்ன தெரியுமா சொன்னான். ஒரு வயசுக்கு மேல உங்க முதுகுல நான் சவாரி பண்ணிட்டு இருந்தால் அது உங்களுக்கு பண்ணுற துரோகம் அப்பா என்று சொல்லி விட்டான்.என்ன பண்ணுறது என்று நொந்து கொண்டார் சங்கரன்.

எங்க செக்யூரிட்டி ஏஜென்சியில் ஒரு வேலை காலியா இருக்கு தம்பி வேண்டும் என்றால் வந்து சேரட்டும் என்றார் சந்திரன்.சரி சந்திரா நான் அவன் கிட்ட கேட்டு பார்க்கிறேன் என்றார் சங்கரன். சரி சந்திரா நாம அடிக்கடி மீட் பண்ணலாம் என்ற சங்கரன் நண்பனின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.

மகா என்ற சித்தார்த்திடம் என்ன வேண்டும் உங்களுக்கு என்றாள் மகாலட்சுமி. இப்ப கூட ஒன்றும் கெட்டு போக வில்லை என் கூட வரேன்னு சொல்லு நாம எங்கேயாவது போயிடலாம் இல்லனா நான் எங்க அம்மா, அப்பாவை முழுசா உதறி தள்ளிட்டு வந்துடுறேன் உன் வீட்டோட வந்து இருக்கேன். நம்ம ரெண்டு பேரும் உன் வீட்டை பார்த்துக்கலாம் என்ற சித்தார்த்தை முறைத்தவள் சார் உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா உங்க அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவங்க சம்மதம் கிடைக்கவே கிடைக்காதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் உங்க வீட்டில் உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க உங்களை நம்பி ஒரு பொண்ணு வரப் போகிறாள். அவளை பாதியில் விட்டுட்டு என் கூட ஓடி வரேன்னு சொல்றீங்க அந்த பொண்ணு எத்தனை கனவுகளோடு உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு வந்து இருப்பாள் . அதனால ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை விட்ருங்க உங்க வாழ்க்கையை பார்த்துட்டு நீங்க போங்க என்றாள் மகாலட்சுமி.


எப்படி மகா உன்னால இப்படி பேச முடியுது அப்போ நீ என்னை காதலிக்கவே இல்லையா என்றான் சித்தார்த். உங்க மேல ஆசைப்பட்டது ,உங்களை காதலிச்சது, உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு கனவு கண்டது உண்மைதான் நான் எதையும் மறுக்க வில்லை ஆனால் நிதர்சனம் அதை நம்ம உணர்ந்தே ஆகணும் மிஸ்டர் சித்தார்த்.

எல்லோரோட காதலும் இங்கே கைகூடி வருவது இல்லையே சொல்லப்போனால் இப்போதைக்கு பணம் இருக்கிறவனோட காதல் மட்டும் தான் ஜெயிக்கும் என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.

அவன் தான் நொந்து போனான்.

…. தொடரும்….

4 thoughts on “நிழல் தேடும் நிலவே…9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *