Skip to content
Home » பிரியமானவளின் நேசன் 11

பிரியமானவளின் நேசன் 11

நேசன் 11


பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே கருணையின் பிறப்பிடமாக மலை நம்பிக் கோவில் வீற்றிருக்கும் அழகேத் தனி.


மனத்திற்க்கு இரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் 2 கிலோமீட்டர் சென்றதும், மலைப்பாதை தொடங்க அங்கு மேடும், பள்ளமுமாகவே இந்த மலைப்பாதை பார்ப்பதற்கு கடினமான தோற்றம் கொண்டிருந்தாலும் மலைக் காடுகளின் பசுமை வாசனையும், குளுமையான மூலிகைக் காற்றும் மலையேறுவோருக்கு கொஞ்சமும் கூட சோர்வையோ, களைப்பையோ அளிப்பதில்லை. அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச்செய்கிறது.

கோடையில் ஈர்க்கும் மலை நம்பிக் கோவிலானது ஆன்மீக சுற்றுலாவிற்கும் பெயர் போனது. கோடைக்காலங்களில் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வயநாடு போன்ற புகழ் பெற்ற மலைபகுதிகளுக்கு செல்லவே விருப்பம் தெரிவிப்பார்கள். அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

அப்படியான அருவியினை காணும் படி சில மைல் தூர அளவில் மரத்திலான வீட்டின் சாளரத்தின் வழியே அருவி நீரை ரசித்து பார்த்திருந்திருந்தனர் நேசனும் பிரியவாகினியும்.


அன்று அந்த காணொளியைப் பார்த்த பிறகு வீட்டிற்கு திரும்பிய அனைவருக்கும் நேசன் இன்ப அதிர்ச்சியை தந்திருந்தான்.

வீட்டின் வாயிலில் நின்றபடியே சாஷாவை நோக்கி கைகளை விரித்தான். விழி விரித்து ஆவென்று அனைவரும் பார்க்க சாஷா பாய்ந்து வந்து அணைத்து கொண்டாள்.

அவனின் உடல் பயத்தில் விரைத்தது இருப்பினும் அமைதியாக இருந்துக் கொண்டான். ருத்ராவோ கேலி பேசினான்.


“வாரே வாவ் மிஸஸ் லவ்ஸ் க்ரேஸை பாத்துக்கற வேலை உங்களுக்கு இனி மிச்சம். எத்தனை பேர் இருகாங்க. இப்ப புதுசா மிஸ்டர் லவ்ஸூம் ஜாயின் பண்ணியாச்சு. இனி அவனே வாக்கிங் ஜாக்கிங் எல்லாம் கூட்டிப் போயிருவான்”


“கொஞ்சம் சும்மா இருங்க அத்தான் அவரே பயந்து போய் நிக்ராரு”


“அதலாம் பழகிடும் விடுங்க” என்றவன் அலர்விழியிடன் வம்பிலுத்தபடியே சமையலறைக்குச் சென்றிருந்தான்.


அறைக்கு வந்த இருவரும் மௌனத்தை கட்டிக்கொண்டு நிற்க அவர்களின் ஊடலை சாஷா வந்து பிரித்து வைத்தாள். அவனின் மடியில் உரிமையாய் அமர்ந்துக் கொண்டாள்.


“உங்ககிட்ட இந்த மாற்றம் எதிர்பாக்கல நேசன் பட் ரொம்ப ஹாப்பியா இருக்கு”


“சாரி பிரியா உன்னை வார்த்தையாலே ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். அன்னைக்கு சாஷாக்கு முத்தம் கொடுத்ததை ச்சீனு சொன்னேன் அதுக்கு பிறகு நீ லிப் டச் பண்ண விடலை நான் அதை சரியாக புரிஞ்சிக்க கூட இல்லை. ரியலி சாரி. ஐ திங்க் வி நீட் சம் ப்ரைவேசி”


“ஓகே இந்த ஒர்க் விஷயமா ஒரு சின்ன மீட்டிங் இருக்குங்க. அதை முடிச்சிட்டு போகலாம். எனக்கும் உங்களோடு நிறைய பேசனும் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணணும்”

வெட்கப்புன்னகையுடன் உரைத்திருந்தாள்.
இருவரின் நேத்திரங்களும் நேசத்தோடு தழுவிக் கொண்டன.

அன்று மாலையே நண்பர்களுடன் வேலை விஷயமாகப் பேசி வந்தவளை பூங்காவிற்கு அழைத்து வந்திருந்தான் நேசன்.


அந்த நேரத்தில் ஒரு இளம் வாலிபன் அவனின் செல்ல பப்பியோடு பூங்கா வாயிலில் நின்று ஒரு பெரியவரிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தான்.

கையிலோ சுருட்டு உதட்டு வளைவு வழியே புகைச் சுருள் சுருளாக வெளியேற பிரியவாகினி கோவத்துடன் அந்த வாலிபனை நோக்கி சென்றிருந்தாள். என்ன ஏதென்று அறியாது பின்னோடு வந்த நேசன் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த வாலிபனின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.


“ஹலோ யாருங்க நீங்க? எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலே கை வைப்பீங்க? இப்பவே போலிஸ் கம்ப்ளைண்ட் பண்ரேன்”


“ஓ தாராளமா பண்ணுங்க மிஸ்டர். IPC Section 289 and Prevention of Cruelty to Animals Act 1960 Section 11 இது ரெண்டுக்கும் கீழே உன்னை தான் அரெஸ்ட் பண்வாங்க”


“மேடம் என்ன சொல்றீங்க? நான் என்ன தப்பு செய்தேன்?”

பம்மிக்கொண்டுப் பேசினான்.


“உனக்கு சென்ஸ் இருக்கா மேன்? பூங்காக்கு கூட்டிட்டு வரும் போது நாய்க்குட்டிக்கு முகவாய் போடாமல் வந்தது உன் தப்பு அதை விட்டு ஒன்னும் அறியாத ஜீவனை மிதிக்கிற. ஸ்மோக் பண்ற இதுக்கு எல்லாம் சட்டத்தில் தண்டனை இருக்கு தெரியுமா தெரியாதா?”


அவள் கேட்ட விதத்தில் பயந்து போன அந்த வாலிபன் மன்னிப்பு கேட்டுப் புகைச்சுருளை தூக்கி எறிந்து விட்டு நடையைக் கட்டினான்.

நடந்த அத்தனையையும் பார்த்திருந்த நேசன் அதிர்வுடன் அப்படியே நிற்க


“சாஷாவை அடிக்கும் போதே உங்ககிட்ட இதை சொல்லியிருக்க முடியும். பட் எனக்கு நம்பிக்கை இருந்தது நீங்க புரிஞ்சிப்பீங்கனு” என்றவாறு அவனை இழுத்துக் கொண்டு போனாள் பிரியவாகினி.


வீடு வந்தவர்கள் பெரியவர்களிடம் சொல்லி மகிழுந்திலேயே பேசியபடி வந்து சேர்ந்தது தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலைமுகட்டின் மலை கோவிலை.


அருவியின் அழகை ரசித்தவாறு அமர்ந்திருந்தவர்கள் அருகில் ஒரு பஞ்சவர்ணக் கிளி வந்தமர்ந்தது. அதன் அழகை ரசித்தபடி நேசன் நிழற்படம் எடுக்க பிரியவாகினியோ அங்கிருந்த ஓவியப் பலகையில் கிளியை தூரிகைக் கொண்டு தீட்ட ஆரம்பித்தாள்.

அவள் செய்வதைப் பார்த்த நேசன் ஓவியம் முடிவுறும் போது அவளைப் பாராட்டினான்.


“வாவ் பிரியா ரொம்ப அழகா நேச்சுரலா வரைஞ்சிருக்க. இந்த ஓவியத்திற்கே உயிர் கொடுத்திருக்க நீ”

சிலாகித்து நேசன் பேச, புன்னகையுடனே மறு மொழியளித்தாள்


“இது வெறும் உயிரற்ற ஓவியங்க. ஆனால் இதைப் படைச்ச கிரியேட்டர பாருங்களேன் எவ்வளவு அழகாக அதன் வண்ணங்களையும் அதோட இயல்பையும் படைச்சிருக்காரு. என்னையே பாராட்ர நீங்க அந்த கிரியேட்டரை கொண்டாட வேண்டாமங்க” என்று வினவினாள்.


“இதலாம் தானா உருவான உயிரினங்கள். உடனே எல்லாத்துக்கும் கடவுள் தான் காரணம்னு வந்து நிக்காத பிரியா” சற்றே சலிப்புடன் பதிலளித்தான்.


“ஆமாங்க நீங்க பிரபஞ்ச பரம்பரை அப்படியே வானத்தில் இருந்து பொதக்கடீர்னு கருந்துளை வழியா குதிச்சு பிறந்தீங்க. அப்படி தானே”


“இப்ப ஏன் இப்படி பேசுற பிரியா? எனக்கு கடவுள் மேலே நம்பிக்கை இல்லை போதுமா…. அப்படி ஒருத்தர் நிஜமாவே இருந்திருந்தா இத்தனை வருஷம் எங்களை கஷ்டப்படுத்திருப்பாரா?”


“எல்லாத்துக்கும் கடவுள் தான் காரணம்னு சொல்லாதனு என்னை சொல்லிட்டு இப்ப நீங்களே அதை தானே பண்றீங்க”


“…….”


“என்ன பேச்சை காணும்? சொல்லுங்க. ஆ..வு..ன்னா எல்லாம் இந்த கடவுளாளேனு சொல்றீங்க. கடவுள் யாரையும் இங்கு அடிமை மாதிரி நடத்தலங்க. எல்லாருக்கும் அவங்க அவங்க வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்கும் கருத்து சுதந்திரம் தந்திருகாங்க. நாம சந்தோஷமா இருக்கிறதும் கஷ்டப்படுவதும் நாமளே எடுக்கும் முடிவுகளாலே தானே தவிர அதற்கு காரணம் கடவுள் இல்லை.என்ன ஆனாலும் அவர் நம்ம கூடவே தான் இருக்கார் ஆனால் அதை நாம தான் புரிஞ்சிக்கிறது இல்லை”


“அப்ப ருத்ராக்கு ஆபத்து வரும் போது ஏன் தடுக்கல? அவன் கதறி அழுதது அவருக்கு கேக்கலனு சொல்ல வரியா?”


“இல்லை. அவங்க அவங்க எடுத்த முடிவுகளின் பயனை அவங்க அவங்க அனுபவிக்க அனுமதிக்கிறாரு கடவுள் அவ்வளவு தான். பிக்னிக் போக வேண்டாம்னு அத்தை மாமா சொன்னதைக் கேட்டுக்காம நீங்க ரெண்டு பேரும் போனீங்க. அவங்க உள்ளுணர்வு இப்ப வெளியே போக வேண்டாம்னு தடுத்திருக்கு. இப்படி கடவுள் வெளிப்படுத்துவதை நீங்க அலட்சியம் செய்து போய் மாட்டிக்கிட்டு மொத்தப் பழியையும் கடவுள் மேலே போடுவது நியாயமாங்க?”


“….. சரி அப்ப ஏன் இத்தனை வருஷம் அந்த கஷ்டத்தை அனுமதிச்சாராம்?”


“கடல்ல விழுந்துடீங்கனு ஐயோ அம்மானு அப்படியே சாக துணிச்சிடுவீங்களா? எதிர் நீச்சல் அடிச்சு முடிஞ்சளவு போராடூவீங்க தானே? அதை ஏன் ருத்து விஷயத்தில் நீங்க செய்யலை? இப்ப நான் வந்து முயற்சி செய்து இப்ப எல்லாம் சரியாகிடுச்சே என் மூலமா கூட கடவுள் உங்களுக்கு உதவ நினைச்சிருக்கலாமே”


அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக இருக்கப் பதிலளிக்காது யோசனையுடன் அமர்ந்து விட்டான் நேசன்.

அவனை தொந்தரவு செய்யாது யோசிக்கட்டும் என்று விட்டு எழுந்தவள் அடுத்த அறையினுள் சென்று இசையை இசைக்க விட்டு ரசனையுடன் அருவியின் அழகை ரசிக்கலானாள்.


யோசனையின் முடிவில் தெளிவுக் கிடைக்க எழுந்தவன் அவள் இருக்கும் அறைக்கு வந்து பின்னின்று அவளை அணைத்தபடி ஒரு கையை பிடித்து மறு கையை இடையில் வைத்து இசைக்கேற்ப இசைக்க ஆரம்பித்தான் பிரியமானவளை.

முன்புறம் திருப்பி சுற்றி சுழற்றி அவளை மறுபடியும் தன் நெஞ்சத்தில் சாய்த்தவன் மெல்ல மெல்ல அவளை தன்னுள் தன்னிசையால் மயங்க செய்து அவளுள் மயக்கம் கொண்டு ஒருவரில் ஒருவரின் இன்னிசையைத் தேடிக் களித்தார்கள்.


ஊரைச்சுற்றியுள்ள பல இடங்களுக்கு சென்று ஆசைத்தீர தற்படம் எடுத்து கொண்டவர்கள் மீண்டும் பயணமானார்கள் சென்னையை நோக்கி. இப்போது நேசன் முன்பு போல் அல்லாது முழுமையாக பிரியமானவளின் நேசனாக பிரியமுடன் அனைவரிடமும் நேயத்தோடு நடத்துக்கொண்டான்.

கடவுளின் சன்னதியில் அவரிடம் மன்னிப்பு வேண்டியவன் வாரம் தோறும் இறைவனை சந்திக்கச் சென்றிருந்தான்.


நேசன் சாஷாவையும் உறவுகளையும் புரிந்து கொண்டான். புரியாத நேசன்களுக்காக பிரியவாகினியுடன் கைக்கோர்த்து நாமும்

அன்பை விதைப்போம்

அன்பை அறுவடை செய்வோம்.

அன்புடன்

அனுஷாடேவிட்.


பிரியமானவளின் நேசன்…


முற்றும்.

3 thoughts on “பிரியமானவளின் நேசன் 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *