நேசன் 9

“அமுது வானிதே”
நகரத்தின் மையத்தில் இடம் வாங்கிப் பல வருடங்கள் காத்திருந்து திறம்பட செயல் திட்டங்கள் வகுத்து அதனைச் செயலாக்கம் செய்துக் கண்முன்னே பிரமாண்ட தொழிற்கூடத்தை உருவாக்கியிருந்தார்கள் நண்பர்கள் அதழினி, முகிலிசை, துகிரா, நனியினி, நீரன் தேவ் மற்றும் பிரியவாகினி.
அவர்களதுப் பெயரிலிருந்து ஓரெழுத்து எடுத்தே தொழிற்கூடத்திற்குப் பெயரும் அமைத்திருந்தார்கள். வண்ண ஒளிகளோடு வண்ண எழுத்துக்களோடு ஜொலித்தது அந்தப் பெயர் தாங்கிய சுவர்பலகை.
காலையில் அனைவரின் முன்னிலையில் நண்பர்கள் ஒன்றாக இணைந்து ரிப்பன் வெட்டி உள்நுழைந்ததும் நேசனுக்கு இன்ப அதிர்ச்சியைப் பரிசளித்தாள்.
அவனின் பிறந்த நாளுக்கான ஏற்பாடும் அங்கு தயாராக இருந்தது. ஸ்ட்ராபெர்ரி அணிச்சலை வெட்டி பிரியவாகினிக்கு முதலில் ஊட்டினான். மகிழ்வான அந்த தருணங்கள் அனைத்தும் தேவ்’வின் அலைபேசியில் நிழ்ற்படமாக சேமிக்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்ப இனிப்புகளையும் இன்னட்டுகளையும் வழங்கி மகிழ்ச்சியுறச் செய்தாள் பிரியவாகினி. சாஷா இதுவரை ஐந்து பனிக்கூழை வாங்கி உண்டிருந்தாள்.
“ருத்து அத்தான் உங்களுக்காகவே ஹல்வா செய்தேன்”
என்ற வாகினி ஒரு கிண்ணத்தில் அன்னாசிப்பழ ஹல்வாவை வைத்து அவனிடம் கொடுத்திருந்தாள்.
“வாவ் தேங்க்யூ மிஸஸ் லவ்ஸ். நீங்க ஒருத்தங்க தான் எனக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி வச்சிருகீங்க. சோ ஸ்வீட்”
“படுவா நேத்து காலையில் பால் கொழுக்கட்டை செய்து தந்ததும் இதே டயலாக் தானே என்கிட்டயும் சொன்ன”
என்று வம்பிழுத்தவாறு வந்தமர்ந்தார் அலர்விழி.
“அது நேத்து”
“பார்ட்டி முடிஞ்சி வீட்டுக்கு தானே வருவ. மம்மி எனக்கு புலாவ் வேண்டும் மில்க்ஷேக் வேண்டும்னு வருவல்ல அப்ப கவனிச்சிகிறேன்”
“ஐயோ தாய்குலமே தெரியாம சொல்லிட்டேன். எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? அறிந்தும் அறியாமல் பிழை செய்த இந்த பிள்ளைக்கு பாவ மன்னிப்பு தந்தருள்வாயாக தாயே”
அவன் பேசிய தொனியில் அனைவரும் சிரித்திருந்தனர். பின் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்து அதன் செயல்பாடுகளை எளிமையாக சொன்னாள்.
மொத்தமாக ஐந்து பெரிய அறைகள் வட்ட வடிவத்தில் தொழிற்கூடமாக அமைந்திருந்தது.
முதல் அறையில் மின் துடைப்பம் என்று அழைக்கப்படும் காற்றுறிஞ்சிதல் மூலம் தூசிகளை அகற்றும் கருவி போன்ற அமைப்புக் கொண்டப் பத்து கருவிகள் இருந்தன.
அனைவரும் அதனை வேக்யூம் கிளினர் என்று நினைத்திருக்க அதனை பற்றி வாகினியே வாய் திறந்து மொழிந்தாள்.
“வேக்யூம் கிளீனர் மாதிரி இருக்கும் இது வேக்யூம் கிளீனரே இல்லை. இந்த மிஷினை சமதளமா இருக்கும் மண்பரப்பில் ஆக்டிவ் செய்தோம்னா மேலிருந்து கீழே பத்து அடியும் இடவலமாக நான்கடியும் வரைக்கும் உள்ள பிளாஸ்டிக் கவர்கள் பாட்டில்கள் எல்லாம் உறிஞ்சி எடுத்துடும். இதை தேவ் தான் டிசைன் பண்ணான். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படும்”
அவள் சொல்லி முடிக்கவும் அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
“அண்ணி மணலும் சேந்து அந்த மிஷின்ல வந்துடாதா” ருத்து
“அண்ணி? ம்ம்ம் அது வராது. அப்படியான டிசைன் பண்ண தான் லேட் ஆகிருச்சி. மண் எல்லாம் உதறி எடுத்து வெறுமனே பிளாஸ்டிக் திங்க்ஸ் மட்டும் உறிஞ்சி எடுக்கும்”
“வாவ் சூப்பர் ப்ரோ”
என்று மனதாரப் பாராட்டினான். அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு புடவை நெய்யும் விசைத்தறிகளும் கைத்தறிகளும் இருந்தன. வாழை, மூங்கில், பருத்தி, கற்றாழை மற்றும் பசுந்தாவரங்களில் இருந்து கிடைக்கும் நார்களை நெசவு நார்களாக உருவாக்கி அதிலிருந்து புடவை மற்றும் பசுமை ஆடைகளை நெய்து அதனை விற்பனை செய்வது தான் இதன் சாராம்சம்.
“இந்த ஐடியா முகிலியோடது. ஏன் ரெண்டு தறிகளும் இருக்குனா சில கஸ்டமர் பிரத்யேக டிசைன் வேண்டும் என்று கேட்டால் அதற்கேற்ப செய்ய தான். இதுல மேக்ஸிமம் வரும் டிசைன் எல்லாமே இயற்கை அழகை பறைசாற்றும் விதமா தான் டிசைன் பண்வாங்க. ஒவ்வொரு நாருக்கு ஏற்பவும் டிசைன் மாறுபடும். ஒவ்வொரு நார்களையும் பிரித்தெடுக்க கழிவுகளை அகற்றனு தனித்தனியே அதற்கு இடங்கள் வடிவமைச்சிருகாங்க”
“இந்த நாரில் எல்லாம் நெய்தால் அதனோட வாசம் வரும்னு நிறைய பேர் இக்னோர் பண்வாங்களேமா” அலர்விழி வினவ
“அங்கு தான் முகிலி ஒரு பர்பெக்ட் ஆடடு நேச்சுரல் பர்ப்யூம் யூஸ் பண்றா. நமக்கு என்ன ப்ளார் ஸ்மெல் வேண்டுமோ சொன்னா போதும். சோ நாம கடையில் வாங்குவதை விட பெட்டர் பீல் தரும் வித்தியாசமா தெரியாது”
அடுத்த அறைக்கு அழைத்துச் செல்லும் போதே அங்கு சாஷா அவள் தோழி சாராவுடன் வந்து பிரியவாகினியை அழைத்தாள். அவள் தோழிக்கு பனிக்கூழ் வேண்டும் என்று. அவர்களை தேவ் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அழைத்துச் சென்றிருந்தான்.
“இதென்னமா நோட் புக்ஸ் எல்லாம் கூட ரெடி பண்றீங்களா?” அந்த அறையில் இருந்தவற்றை பார்த்து சேந்தன் கேட்டிருந்தார்.
“ஆமாப்பா இந்த பேப்பர் புக்ஸ் எல்லாம் மரக்கூழில் மட்டும் செய்யப்படலை. மூங்கில், பருத்தி, வாழை, கரும்பு, மூலிகைச்செடிகளின் கூழில் இருந்து தயாரிக்கப்படுது. நோட்டு, பென்சில், பேனா மற்றும் குழந்தைகளுக்கான பேப்பர் விளையாட்டு பொருட்கள் இது எல்லாமே தயாரிக்கப்படுது. இது அதழினியோட பிளான்”
“அந்த மூலிகைச்செடில ப்ரிப்பேர் பண்ற நோட் எனக்கு தாங்க அண்ணி. இனி கஷாயம் குடிக்க வேணாம் இந்த பேப்பரையே ரெண்டு ரெண்டா கிழிச்சு சாப்பிட்டுக்கலாம்”
என்று ருத்து சொல்ல கொல்லெனெ அனைவரும் சிரித்திருந்தனர்.
அடுத்த அறையில் திருமணப்பத்திரிக்கை தயாரிக்கும் இயந்திரம் மற்றும் தனித்தனி மரப்பெட்டிகளும் இருந்தன.
“வெட்டிங் கார்டு ப்ரிப்பேர் பண்றதோடு கிடைக்கும் ஆர்டருக்கு இலவசமாக விதைகள் அடங்கிய வரவேற்பு தாம்பலமும் செய்து தரோம். இது துகிராவோட பிளான். அதோட கஸ்டமர் கேட்கிற டிசைனில் நேச்சுரலா பண்ணி தருவோம்”
என்றவாறு அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு நான்கு பெரிய இயந்திரங்களும் ஒரு சின்ன இயந்திரம் மற்றும் தையல் மிஷின்கள் இருந்தன.
“இங்கு பஸ்ட் இருக்கும் மிஷின் பாத்தீங்கனா பிளாஸ்டிக் பொருட்களை வாஷ் பண்ணி சுத்தம் செய்து உலர வைத்து கொடுத்திடும். நெக்ஸ்ட் மிஷின் அந்த பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாத்தையும் ஒன்றிரண்டாக கட் பண்ணி கொடுக்கும்.
மூணாவது மிஷின் கட் பண்ண பிளாஸ்டிக் பொருட்களை தூள் தூளாக்கி தரும். அதை நாலாவது மிஷின்ல கொடுக்கும் போது அது கூடவே சில இயற்கை ரசாயனங்கள் கலந்தால் கிளாத் ப்ரிப்பேர் பண்றதுக்கான பேப்ரிக் காட்டனா மாத்தி தரும். இந்த சின்ன மிஷின் அந்த பேப்ரிக் காட்டனை வேண்டிய கலருக்கு மாத்தி தரும். அப்புறம் ப்ரிப்பேர் பண்ணி துணி பைகளா தைத்து சேல்ஸ் பண்றது தான் இதனோட பிராசஸ்.”
அவள் சொல்லி முடிக்கவும் அனைவரும் அவர்களது திட்டங்களை பாராட்டினர். கூடுதல் தகவல் இது வாகினியின் உழைப்பு என்பதே.
கொண்டாட்டங்கள் முடிந்து அவரவர் வீடு திரும்பினர். சேந்தன் தமிழினி இருவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்தும் மற்றொரு நாளில் வருவதாகச் சொல்லி கிளம்பியிருந்தனர்.
“ஹேய் க்ரேஸ் இங்க வா நாம டீவி பார்க்கலாம்”
என்று சாஷாவை அழைத்து முகப்பறையில் அமர்ந்து அலர்விழியிடம் சிற்றுண்டி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான் ருத்ரா வம்பிலுத்து.
“உங்களுக்கு ஸ்டடி பண்ண எதுவுமே இல்லையா அத்தான்”
என்றவாறு பிரியவாகினியும் வம்பிலுத்தபடி அருகில் அமர்ந்தாள்.
“அச்சோ என்னை அப்படி கூப்பிடாதீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்களேன்”
“சரிங்க அத்தாஆஆஆன்”
“போங்க நான் கோவமா போறேன்”
“போ போ இடத்தை காலி பண்ணு காத்து வரட்டும்” என்று அலர்விழியும் கூட்டணி சேர்ந்து கொண்டார்.
“பேக்டரில அக்கௌன்ட் டிபார்ட்மெண்ட்ல உங்களையும் சேத்துருக்கேன். நீங்க அக்கௌன்ட்ஸ்ல அப்பவே புலினு சொன்னதால. பொறுப்போடு போய் ஸ்டடி பண்ணுங்க போங்க. அதோடு கிட்ஸ்கான டிராயிங்க் பிக்சர் எல்லாம் நீங்க தான் டிசைன் பண்ணி தர போறீங்க”
பிரியவாகினி சொல்ல சொல்ல
“மொத்தத்தில் இந்த டீனேஜ் பையனை ப்ரீயா விடாமல் வேலைல கட்டி போட பாக்றீங்க” என்று சோகமாக பதிலளித்தான்.
“அச்சோ அப்படியா அப்ப ஒன்னு பண்ணலாம் நீங்க காலேஜ்க்கே டேரக்டா போங்களேன் ஜாலியா இருக்கலாம்”
“இப்ப என்ன நான் வேலைக்கு வரனும் டிசைன் பண்ணணும் அவ்வளவு தானே வரேன் அதுக்கு போய் சின்னபுள்ளைய மிரட்ரீங்க ஹ்ஹ ஹ்ஹ” என்று கட்சி மாறினான்.
“ருத்துமா உனக்கு இன்னும் பயமா இருக்காடா கண்ணா வெளியே போக” அலர்விழி வாஞ்சையுடன் வினவ
“ம்மா என்னை போய் சின்னபசங்க கூட உக்கார சொல்றீங்களா போங்க முடியாது அதான் மிஸஸ் லவ்ஸ் கரஸ்ல படிக்கலாம் சொன்னாங்க தானே”
“சரிடா கண்ணா உன் விருப்பம் போல பண்ணு” என்றவரிடம் இன்னும் வம்பிலுத்து வளவளத்தவனை இங்கு தானும் ஒருத்தி இருக்கிறேன் என்று சாஷா அழைக்க
“க்ரேஸ் பாத்தியா நம்மள கொஞ்சம் நேரம் கூட பேச விட மாட்ராங்க”
என்றவன் மொழிய சாஷாவோ பிரியவாகினியை பார்த்துக் கத்தினாள். ருத்து நமட்டு சிரிப்பு சிரிக்க, இடுப்பில் கை வைத்தபடி வாகினியோ
“ஏண்டி உனக்கு செல்லம் ரொம்ப கொடுத்து கெடுத்து வச்சிருக்காரு இவரு. இஷ்டத்துக்கு ஐஸ் தராருனு அவருக்கு ஐஸ் வைக்றியா? போ போய் ரோஜா கூட விளையாடு”
என்றவளை சோகம் அப்பிய முகத்துடன் வெளியே செல்ல பார்க்க
“அடடா உங்களுக்கு பொறாமையா இருக்கா எங்க லவ் பார்த்து? உங்காளு கிட்டே வேணா சொல்றேன் போய் அவனை பாருங்க”
என்று சாஷாவோடு அவனறைக்குள் நுழைந்து கொண்டான். நடந்த அனைத்தையும் மேலிருந்து பார்த்த நேசன் பெருமூச்சுடன் அறைக்குள் சென்று சாளரத்தின் வழியே வெளியே வெறித்தான்.
அறைக்கு வந்த பிரியவாகினி
“மாமா உங்களை கீழே வரச் சொன்னாங்க” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் வெளியே வந்து முகத்தை துடைத்து மீண்டும் வெளியேறச் செல்ல அவளின் கைகளைப் பிடித்து இழுத்தவன் தன் நெஞ்சோடு இறுக்கி அவளது இடையில் கை வைத்து அழுத்தியவன்
“எல்லார்கிட்டேயும் சிரிச்சி சிரிச்சி பேசற. உனக்கு நான் ஒருத்தன் இருக்கது கண்ணுக்கே தெரிலயா?”
இருவரின் மூச்சுக்காற்றும் இணைந்து உஷ்ணத்தோடு உடலின் பாகங்களில் உணர்வுகளை கடத்த கட்டுப்படுத்தும் வழியறியாது மெய்கள் தகித்தன.
“நான் இருக்கேனு உங்களுக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சதா?”
“இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் போதும் இதோட நிறுத்திக்கலாம்”
“விளையாட எனக்கு நேரமே இல்லைங்க”
இவர்கள் அணைத்தபடி சண்டையிட்ட கொள்ள ருத்ரா நேசனை அழைக்க அறைக்கு வந்தவன் அவர்களது நிழலைக் கண்டு சங்கோஜத்துடன் கீழிறங்கி வந்தான்.
“ப்பா அவங்க பிஸியா இருகாங்க என்னனு சொல்லுங்களேன் நான் போய்ட்டு வரேன்”
என்றவாறு வந்து நின்றவனிடமே கடைக்கு அனுப்பும் பணியைக் கொடுத்தார் பொழிலன்.
மேலே அறையில் இவர்களது கட்டிப்பிடி சண்டையைக் கண்ட சாஷா தானும் மகிழ்வுடன் தாவி அணைக்க வர நேசன் வியர்த்து பயந்து விலகினான்.
“அது பிரியா எனக்கு இதைப் பார்த்தாலே… ஓகே ஓகே இவளைப் பார்த்தாளே நெர்வஸா இருக்கு. நானும் முயற்சி பண்ரேன் தான்”
“ம்க்கும் நல்லாவே பண்றீங்க அன்னைக்கு இவளைக் கூப்பிட்டு உன்னால தான் என் பிரியா என்கூடவே பேச மாட்டேங்குறா நீ போ னு இவளைத் திட்டியிருக்கீங்க. அத்தான் சொல்லலனா எனக்கு தெரிஞ்சே இருக்காது”
‘அவனை இருடா உனக்கு ஒரு கல்யாணம் ஆகட்டும் வச்சிக்கிறேன்’ என்று மனதோடு வைதவன்
“அச்சோ அது அப்படி இல்லை பிரியா ஐ லவ் யூ மோர் அண்ட் மோர் பட் எனக்கு டாக்னா கொஞ்சம்..”
“சரி விடுங்க” என்றவளாய் சாஷாவிற்கு இன்னட்டு எடுத்துக் கொடுக்க அதீத சந்தோஷத்தில் சிறுநீர் கழித்து விட்டாள்.
“ஏய் ச்சீய் ச்சீய் என்ன இது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்…” அவளின் பார்வையை சந்தித்தவன் கப்சிப்.
“சாஷா என்ன இது? எதுக்கு இவ்வளவு இமோஷனல் நாங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கோம் ஓகேவா. நீயும் எப்போதும் எங்க கூட தான் இருப்ப ஓகேவா” என்றவள் சொல்லியதும் தாவி அணைத்து நாவால் வருடினாள் வதனமெங்கும்.
அவள் சென்றப் பின்னும் நேசன் அப்படியே நிற்க அவனின் தோளில் கை வைத்தாள்.
“இதலாம் புரியுமா?” என்று வியந்து கேட்டிருந்தான்.
‘ஆம்’ என தலையசைத்தாள்.
நேசனின் மனம் மீண்டும் அலைப்புறுதலுக்கு ஆளானது. அவன் பேசிய வார்த்தைகள் பிரியாவை எந்தளவுக்கு காயப்படுத்திருக்கும் என்பதை உணர்ந்த தருணமது.
சில நாட்களில் தனது வரைகலை வடிவமைப்பு மூலம் ஒரு காணொளியை வடிவமைத்திருந்தாள். அதனை பார்ப்பவர்கள் யாராகினும் ஒரு நொடியேனும் கண்ணீர் விடுவர்.
இதற்கு பின்னான நாட்களில் சிலர் மனம் மாறக்கூட வாய்ப்புண்டு. நேசனும் மனம் திறந்து பேச விரும்பினான் தன் பிரியமான மனையாளிடம்.
பிரியமானவள் வருவாள்…
🎶
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில்
பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்
🎶
Nice epi
Nice
Super😍😍