Skip to content
Home » புத்தகப் புழுவான தருணம்

புத்தகப் புழுவான தருணம்

குழந்தைகள் எங்க பார்த்தாலும் அதுங்களுக்கு பிடிச்ச சாக்லேட், பலூன் மேல கண்ணு போகும் அது போல தான் அடுத்து என் கண்ணு புக்கை தேடுச்சு. இத்தனை நாள் கடைக்கு அந்த ஏரியாவை ரவுண்ட்ஸ் அடிச்சப்ப எல்லாம் புக் கடை கண்ணில் பட்டாலும் கருத்தில் படலை.
  புக் படிக்க ஆரம்பிச்சதும், கருத்தில் பட்டு நானா இரண்டு மூனு புக் வாங்கினேன். அப்ப தான் ஒரு நாள் ரோடு கிராஸ் பண்ணும் போது, ஒரு லைப்ரரி கண்ணுலப்பட்டுச்சு.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

‘கிளைநூலகம்’ என்று போட்டு லாக் பண்ணிருந்தது. இந்த தெருவுல இத்தனை நாளா போறேன் இதை கவனிக்கலையேனு லைப்ரரி எப்ப திறக்கறாங்க ஒப்ப மூடறாங்கனு பார்த்தேன். காலையில் 8 to 11
மாலையில் 4 to 7

ஓகே…‌நமக்க எது சரியான நேரமோ அப்ப வந்து எட்டி பார்ப்போம்னு வந்தேன்.

குறிப்பு:ஒவ்வொரு மெயின் ஊரிலும், ஏரியாவிலும் கிளை நூலகம் இருக்கும். நீங்க அதுல மெம்பரா மாறினா புக் எடுத்து படிக்கலாம். ஒருத்தருக்கு 3 புக் வீட்டுக்கு கொண்டு போய் படிக்கலாம். 15 டேஸ்ல ரிட்டர்ன் தரணும். வருஷத்துக்கு பத்து ரூபா சந்தா கட்டினா போதும்.
  அங்கே மெம்பராக மாற, ஏதாவது ஐடி கார்ட் இருந்தா போதும்.

  சரி என் கதைக்கு வாங்க. கிளை நூலகத்தில் மெம்பராகி புக் எடுத்துட்டேன். 15 டேஸ்ல ரிட்டர்ன் தரனும். ஆனா நான் நாலு நாள்ல படிச்சிட்டேன். உடனே உடனே படிச்சி அங்க போய் டெய்லி ஒவ்வொரு ரேக்கா போய் ரமணி அம்மா கதை பெயரை பார்த்து புக் எடுத்தேன்.

   எனக்கு முதல்ல அவங்க கதையெல்லாம் முடிப்போம்னு. அடுத்து ஒவ்வொரு ரேக்கா பட்டுபட்டுனு படிச்சி முடிச்சேன்.

ஆனா எழுத்தாளர் பெயரை நோட் பண்ணலை. பண்ணிருந்தாலும் எனக்கு சமகால எழுத்தாளர் ப்றறி விவரம் தொரிந்திருக்காது.

  இதுக்கு நடுவுல லைப்ரரில இருந்த லேடி பிரெண்ட் ஆனாங்க. என்னை பத்தி விசாரிச்சாங்க. நான் கவிதை எழுதுவேன். புக்ல வந்தது. இப்ப எழுத முடியலைனு சொல்லிருந்தேன்.

   இப்படி போயிட்டு இருக்கும் போது, கதை படிக்கிறப்பவே இது இப்படி தான் முடியும். இதுக்கு பிறகு இந்த மாதிரி சீன் வரும். அப்படின்னு நானா கெஸ் பண்ணினேன். எண்பது விழுக்காடு அது சரியா இருந்தது.

மனசாட்சி கவிதை எழுதிய உனக்கு கதை எழுத வராதா. எழுதி பார்க்கறியானு கேட்க, அடுத்து கதை எழுதற ஆசை உதித்தது.

  ஆல்ரெடி கவிதையில் நிறைய சர்டிபிகேட் அதுயிதுனு வந்தாலும், ஏதோ அலுப்பு. அப்ப தான் அண்ணா 2015ல praveenathangaraj.blogspot.com Open பண்ணி தந்தார். அதுல கவிதை எல்லாம் போட்டு publish பண்ணி விளையாடிட்டு இருந்தேன். அதுலயே Draftல கதை எழுதினேன்.
முதல் கதை என்பதால் தலைப்பும் *முதல் முதலாய் ஒரு மெல்லிய..* அப்படினு வச்சி எழுத ஆரம்பிச்சேன். 

  இதுக்கு இடையில் கன்சீவ் ஆனேன். தனியா தான் இருந்தேன். ஸ்டேஷனரி கடைக்கு போனப்ப மயக்கம் வந்துடுச்சு. தள்ளாடி ஒரு சேர்ல உட்கார்ந்துட்டேன். பதினைந்து நிமிஷம் கண்ணை திறக்க முடியலை. பக்கத்துல இருக்கறவங்க, தண்ணி வேணுமானு நீட்டறாங்க. வாங்கி குடிக்கறேன் ஆனா கண் திறக்க முடியலை ‘பேன் போடவா அக்கா. யாராவது போன் போட்டு கூப்பிடணுமா’னு கேட்கறாங்க. வீட்ல தான் யாருமில்லையே. தலைமட்டும் மறுத்து ஆட்டறேன். முகமெல்லாம் வேர்த்துடுச்சு. அப்படியே கடையில கண்ணாடி ரேக்ல தலை வச்சிட்டேன். கடைக்கு வர்ற ஆட்கள் என்னை சுத்தி சுத்தி  கடையில் பென்சில் பேனா வாங்குவது காதுல விழுந்தது.
  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கண் திறந்தேன்.

  ‘என்னாச்சுக்கா’ என்று கடையில இருந்த அண்ணா அக்கா கேட்டாங்க.
  ‘இல்லை கன்சீவா இருந்ததால் மயக்கமாகிடுச்சு’னு சொன்னேன். அவங்க அப்பறம் தான் என் வயிற்றை பார்க்கறாங்க. கன்சீவா இருக்கிங்களா?னு வாயை பிளக்க, 5 மந்த்னு சொன்னேன். அச்சோ நீங்க சொன்ன பிறகு தான் வயிறே தெரியுது. முன்னவே தெரிந்தா கடையில நிற்க வைக்காம எடுத்து கொடுத்திருப்போம்னு அந்தக்கா சொன்னாங்க.
  வயிறு சின்னதா தொப்பை விழுந்த லெவல்ல தான் இருந்தேன்.
    அப்பறம் டேப் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்ல அவர் வந்ததும் சொன்னேன். லைப்ரரி போயிட்டு அப்படியே டேப் வாங்க போய் மயங்கிட்டேனு.
அதுக்கு பிறகு தனியா லைப்ரரி போக முடியலை. பத்து மணி ஆனா தூக்கம் வரும். அதனால அசதில எங்கயும் போகாம போரடிக்க படுப்பேன். புக் படிக்க ஆசையும் இருந்தது
அப்ப தான் இன்னும் லைப்ரரில புக் எடுத்து படிக்க, நெட்லயே படிக்கலாம்னு சொன்னார். அப்படியா படிக்கலாமா?னு கேட்டேன். நொட்ல தேடு… எல்லாம் படிக்கலாம்னு சொன்னார்.
   நெட்ல தேடவும் இளந்தளிர்.காம் என்ற சைட் இருந்தது. அதுல தான் கதை படிச்சேன். தினமும் 2 கதை மூன்று கதைனு புத்தகப்புழுவா படிச்ச காலம்.
   அப்ப பிடிஎப் பத்தியோ தளத்தை பற்றியோ அறிமுகம் இல்லை‌
  கதை எழுதினேன்ல அதை பிரிண்ட் அவுட் எடுத்து என் அத்தை மாமாவுக்கு காட்டினேன். அவங்க முதல் கதை படிச்சிட்டு நல்லாயிருக்குனு சொன்னாங்க.
    அந்த கதையை மேகஸினுக்கு அனுப்பவும் செய்தேன்.
நான் ஆன்லைன் ரைட்டரா வந்து மேகஸினுக்கு நுழைந்தவள் இல்லை. முதல்ல மேகஸினுக்கு வந்து சில அனுபவத்தால் பயந்து தான் ஆன்லைன் எழுத்துலகில் கால் பதித்தேன்.
அதுயென்ன பயம்? ஏன் ஆன்லைன் தளத்தில் வந்தேன்னு அடுத்த பதிவில்….

1 thought on “புத்தகப் புழுவான தருணம்”

  1. Kalidevi

    SUPER KATHAIGAL PADICHI PADICHI ATHULA KATHAI ELUTHA AASAI VANTHATHUM ATHA CRT AH ELUTH ATHUKANA EDAM KEDACHI IRUKU UNGALUKU UNGA KATHAIKU NAN ADIMAI VERA ENGA PADICHALUM UNGA KATHAI PADIKIRA THIRUPTI ILLA . UNGA BOOKS VANGI VAIKANUM PADIKANUM AASAI ENAKU BUT ORU SILA BOOKS IRUKU FUTURE LA KANDIPA VANGANUM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!