தேவா பணத்தை நீட்டியவுடன் வரு வேறு எதுவும் பேசாமல் தனது பணத்தை பர்சில் வைத்துக் கொண்டாள்.அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்..
“இவர்கள் வருவதை பார்த்து சுவாதி அக்கா மலர் எழுந்து நின்று வரவேற்று விட்டு புது பொண்ணு எப்படி இருக்க என்று கையைப் பிடித்தாள். நான் நன்றாக இருக்கிறேன் அக்கா. நீங்க எப்படி இருக்கீங்க மாம்ஸ் எப்படி இருக்காங்க “.
“மாம்ஸ் எங்க என்று கேட்டாள் அவரா உள்ள தான் டி இருக்காரு. எனக்கு வாய் ஒரு மாதிரி இருக்கு என்று சொன்னேன் மாங்கா சாதம் செய்து கொண்டிருக்கிறார் .சுவாதி இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று சொல்லிவிட்டு வாங்க அண்ணா என்று தேவாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்..
வரு மலரை பார்த்தாள் மலர் சமாளித்துவிட்டு இரண்டும் அப்பப்ப முட்டிக்குங்க அப்பப்ப கூடிகிங்க வாங்க என்று சிரித்தார். வருவும் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் தேவாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.
“மாம்ஸ் என்று அழைத்துக் கொண்டே வந்தாள் சுவாதியின் மாமா வசந்த் சமையலறையில் இருந்து தண்ணீரோடு வந்தவன் தேவா வரு இருவரையும் வாங்கத் தம்பி ,வா வரு என்று வரவேற்றுக் கொண்டே”
“மாமா பிசியா வேலை ஓடுது போல உள்ள உங்கள் மனைவிக்கு ஸ்பெஷலா என்றாள். நீ மட்டும் என்ன ரொம்ப பிசி தான் என்று அவளது தலையில் லேசாக கொட்டினார் சிரித்துக் கொண்டே.
தேவா அமைதியாக அவளை பார்த்தான்”
“இந்த வாயாடி எல்லோரிடமும் பேசி பேசியே மயக்கி விடுவாள் போல என்று எண்ணி சிரித்துக் கொண்டான். வசந்த் இருவரையும் உட்கார வைத்துவிட்டு இருவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்”..
சுவாதி அமைதியாக இருந்தாள் .பிறகு ,வசந்த் செய்து சாப்பாட்டை மலருக்கு கொண்டு வந்து கொடுத்தான். மலர் இருக்கட்டும் நான் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இரண்டு சிறிய பவுள்களில் வரு ,தேவா இருவருக்கும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான்..
. ஸ்வாதி அமைதியாக வசந்தத்தை பார்த்தால் வசந்த் பிறகு வரு விடம் என்ன புது பொண்ணு எப்படி இருக்கிறாய் .புகுந்த வீடு எப்படி இருக்கிறது என்று விசாரித்தான். அனைத்தும் நன்றாக இருக்கிறது மாமா என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது வசந்த் உனக்கு திருமணம் ஆகிவிட்டது…
உனது தோழிக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டார். அதுவரை அமைதியாக இருந்த சுவாதி என் திருமண பற்றிய கவலை உங்களுக்கு எதற்கு என்று கேட்டாள் .பிறகு ,நான் கவலைப்படாமல் வேறு யார் கவலை படுவார்கள் என்று கேட்டான் ..
நீங்கள் யார் எனக்கு என் திருமணத்தைப் பற்றி யோசிக்க என்றவுடன் வசந்த்திற்கு ஒரு நிமிடம் கஷ்டமாகி போனது. மலர் சுவாதி என்று வேகமாக கத்தினாள்.அக்கா போதும் நிறுத்து நான் உன் வாழ்க்கை பற்றி இப்பொழுது பேசவில்லை..
உன் வாழ்க்கை பற்றி பேசும்போது தான் நீ அவர் உன்னுடைய கணவர் என்று சொல்லி என் வாயை அடைக்கிறாய் இது என்னுடைய வாழ்க்கை .தனிப்பட்ட வாழ்க்கை நான் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும்..
யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி நான் தான் யோசிக்க வேண்டும் என்று விட்டு கத்திவிட்டு அவளுடைய அறைக்குச் வேறு ஒரு உடை மாற்ற சென்றுவிட்டாள் இங்கே வரு மாமா என்று வசந்த் கையை பிடித்தாள்..
வசந்த் சிரித்த முகமாக வருவை பார்த்து சிரித்துவிட்டு அவள் அப்படித்தானே விடு மா என்றவுடன் இங்கு ஒரு மலர் தான். ஆமாம் வரு பார்த்துக் கொண்டு இருக்கிறாய் தானே தினமும் இது தான் நடக்கிறது..
அவள் தினமும் இவரை இவ்வாறே ஏதாவது சொல்லி காயப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். இவரும் சிரித்து மழுப்பி கொண்டு இருக்கிறார் .உள்ளுக்குள் வலிக்கும் என்பதை தெரியாமல் மறைத்துக் கொண்டு இருக்கிறார்..
“ஆனால் ,அவர் ரொம்பவே காயப்பட்டு கொண்டிருக்கிறார். அவள் அதிகமாக இவரை காயப்படுத்துகிறாள்.
சரி மாமா அவளுக்கு திருமணத்திற்கு இப்போது என்ன மாமா அவசரம் .உங்களுக்கு என்று திருமணம் செய்யக்கூடிய வயது தானே வரு “என்றான்..
மாமா இருந்தாலும் இப்பொழுது அவசரம் இல்லையே அக்காவிற்கு குழந்தை பிறக்கட்டும் நான் கூட அப்படித்தான் வரு முதலில் யோசித்தேன் என்றான் .அப்புறம் என்ன மாமா என்று கேட்டாள் .ஆனால் ,”உன் தோழி விரும்புபவர் வீட்டிலும் அவ்வாறு யோசிக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாதே “என்றான் ..
அவள் விரும்புவது பற்றி என்ன சொல்கிறார். என்று யோசித்தாள்.வரு. அப்போது தான் வசந்த் பேசியதை கேட்டு வெளியில் வந்த சுவாதி தேவாவை பார்த்தாள்.இன்னும் சொல்ல போனால் தேவாவிற்குமே இது புதிய செய்தி .அதுவும் சுவாதி வாசுவை விரும்புகிறாளா என்றும் பார்த்தான் …
“உங்களுக்கு யார் சொன்னார்கள் நான் விரும்புகிறேன் என்று என்றவுடன் அதை யாரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை என்று விட்டு அமைதியாக கிச்சனில் நின்றான். உங்களிடம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ..
அப்படியே நான் யாரையோ விரும்புகிறேன் என்றாலும் அவருக்கு திருமணம் என்று வரை உங்களுக்கு யார் சொன்னார்கள் என்று கேட்டாள் .உனக்காக என்று நானாக யோசித்து எந்த பொய்யும் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக்கு ..
“இப்போது ,திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை .என் அக்காவை யாரை நம்பி விட்டு விட்டு செல்லவும் எனக்கு விருப்பமில்லை .நீங்கள் ஒரு கணவனாக உங்கள் மனைவியை எப்படி வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள் அதை நான் குறை சொல்லவும் இல்லை .அதைப் பற்றி நான் பேசாமல் விரும்பவில்லை”..
எனக்கு என் அக்காவின் உடல்நிலை பற்றிய கவலை. நீங்கள் உங்கள் மனைவியை எப்படி பார்ப்பீர்கள் என்றெல்லாம் நான் கேட்கவில்லை.
ஆனால் ,எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என் அக்காவிற்கு குழந்தை பிறக்கும் வரை திருமணத்தைப் பற்றி இங்கு யாரும் பேச வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன் என்று விட்டு வேகமாக சமையல் அறைக்குள் புகுந்தாள் ..
“அவள் ஏற்கனவே பௌலில் வசந்த் போட்டு வைத்திருந்த மாங்காய் சாதத்தை எடுத்துக் கொண்டு வந்து உட்கார்ந்தாள் மாங்காய் சாதம் மட்டும் தான என்று வசந்தத்தை பார்த்து கேட்டாள். அவன் சிரித்துக் கொண்டு சென்று அவளுக்கு வெண்டைக்காய் பொரியல் எடுத்து வந்து கொடுத்தான்”..
சுவாதிக்கு மாங்காய் சாதத்துடன் வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிட்டால் ரொம்பவே பிடிக்கும் என்று வசந்த்க்கு தெரியும் . அவளுக்காகவே செய்திருந்தான் .அதை அவள் கேட்டவுடன் எடுத்து வந்து கொடுத்தான்.
கோபத்தில் அவள் அங்கு இருப்பதை பார்க்காமல் வந்ததால் அதை எடுத்துக் கொண்டு வந்து அவளது அருகில் வைத்தான் .தேவா இருவரையும் பார்த்து சிரித்தான். அப்பொழுது ,மலர் தான் இருவரும் இருவரையும் எங்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் தம்பி. இருந்தாலும் ,அவளுக்கு இருக்கும் கோபத்தை நாம் ஒன்றும் பண்ண முடியாது என்று மெதுவாக சொன்னாள் மலர்..
அக்காவின் வாழ்க்கைக்காக என்று அவள் எண்ணுவதில் தவறில்லையே.. என்று எண்ணினான்.ஆனால் ,இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து எழுந்தார்கள் .
சரி அக்கா நேரம் ஆகிறது சரி மாமா என்னிடம் என்ன சொன்னாய் என்று வசந்த் கேட்டான் மாமா உண்மையாவே நேரம் இல்லை மாமா .இப்பொழுது ,அக்காவை பார்த்துவிட்டு போக தான் வந்தேன். அது மட்டும் இல்லாமல் முக்கியமான விஷயம் சொல்வதற்கு தான் .
விருந்திற்கு என்று வேறு ஒரு நாள் வருகிறேன். பலமாக செய்து வையுங்கள் என்றாள். என்ன முக்கியமான விஷயம் வரு என்று கேட்டால் மலர். சுவாதி அமைதியாக தனது தோழியை பார்த்துக் கொண்டே சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள் ..
அக்கா நாளை காலை கலை உங்களுக்கு ஐந்தாவது மாத சாதம் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறது என்றவுடன் மலர் வருவின் கையை பிடித்தாள்.அக்கா என்ன செய்றீங்க என்ற உடன் என்ன மாமா எடுத்துட்டு வரலாம் தானே என்றவுடன் வசந்த் சிரித்து கொண்டே..
உன்னுடைய அக்காவிற்காக நீங்கள் ஐந்தாவது மாதம் சாதம் எடுத்துக் கொண்டு வருவதற்கு என்னிடம் ஏன் டா கேட்கிறாய் ?எடுத்துக் கொண்டு வா காலையில் எத்தனை மணிக்குள் வருகிறீர்கள் என்றால் நான் அதற்கு ஏற்ப அனைத்தும் முடித்து வைத்திருப்பேன் என்றான்..
நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை சரியா .வேண்டுமானால் டீ மட்டும் போட்டால் போதும் மற்றபடி வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை .கலை அனைத்தையும் ரெடி பண்ணி விடும் .
சரி என்று சொல்லிக் கொண்டு திரும்பினாள் .சுவாதி தலையாட்டிவிட்டு சாப்பிடுவதில் மும்பரமாக இருந்தால் மலருமே அமைதியாக உட்கார்ந்து கொண்டார். இருவரையும் வழி அனுப்ப வசந்த் வெளியில் வந்தான் .வசந்த் தேவாவின் கைபிடித்து கொண்டு வருவை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி ..
நல்ல பெண் என்றான். பார்த்துக் கொள்கிறேன் அண்ணா வச்சு மேய்க்க தான் முடியவில்லை என்று சிரித்தான்.பார்த்துக்கொள்ளலாம் இப்பொழுது என்னுடைய மனைவி இல்லையா என்று லைசன்ஸ் ஆக வசந்த் சிரித்தான் .
அண்ணா நான் ஒன்று கேட்பேன் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றான் தேவா.தம்பி கேட்டு அண்ணன் கோபித்துக் கொள்ள போகிறேனா என்ன விஷயம் என்று கேட்டான் ..
இல்லை உங்களைப் பார்த்தால் என்று விட்டு அமைதியாக இருந்தான் .சூழ்நிலை என்னை அப்படி ஒரு நிலையில் நிற்க வைக்கிறது அதை நான் அப்போதே தெரிந்து கொண்டேன் ஆனால் இதை எப்படி சரி செய்வது என்று தான் தெரியவில்லை என்றான் வசந்த்.
அப்படி என்ன சூழ்நிலை அண்ணா. ஏன் ,நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள் என்ன வேலைக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் .தவறாக எடுத்துக் கொள்ளாதே தேவா வேலைக்கு என்று ஒரு நிமிட அமைதிக்கு பிறகு இங்கு அருகில் உள்ள செல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்..
இப்போது ,இன்று இதற்கு முன்பு என்று கேட்டான் இதற்கு முன்பு நான் வேறொரு **** கம்பெனியில் வேலை செய்து இருந்தேன். இப்பொழுது ,ஒரு வருடமாக செல் ஷாப் வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றான் ..
ஏன் அண்ணா அந்த கம்பெனியிலிருந்து வெளியில் வந்து விட்டீர்கள் .,என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டான் .அவரும் படிப்பை சொன்னவுடன் ஏன் அப்போது இப்போ செல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கான பதில் அவரிடம் இல்லை .
வரு தான் போதும் கிளம்பலாம் நேரமாகிறது என்றாள். இதற்கு மேல் வசந்திற்கு வலி கொடுக்க வேண்டாம் என்று எண்ணி சரி என்று வசந்திடம் சொல்லிக் கொண்டே இருவரும் கிளம்பினார்கள். இருவரும் அவர்கள் அவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்..
அப்பொழுது தேவா தான் போகும் வழியில் வருவிடம் வரு அவர் ஏன் இப்பொழுது செல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறார் .இதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பது போல் இருக்கிறதே என்று கேட்டான் . நீங்கள் வசந்த் மாவை நம்பவில்லையா என்று கேட்டாள்..
நம்பாமல் இல்லை டி நான் அவரை நம்புகிறேன் .அவரைப் பார்த்தாலும் தவறு செய்வது போல இல்லை .ஆனால் ,அவர் ஏதோ ஒரு சூழ்நிலை கைதியாக இருப்பது போல் தெரிகிறது .ஏதோ ஒன்று இருக்கிறது என்றான்.
“நீங்கள் பார்த்த கொஞ்ச நேரத்தில் அவரைப்பற்றி இவ்வாறு சொல்லும் பொழுது எனக்கு தெரியாதா ? அப்பொழுது சுவாதி ஏன் என்றான் .சுவாதி நம்பாமல் இல்லை அவர் மீது நம்பிக்கை இருப்பதால் மட்டும் தான் தன் அக்காவை அமைதியாகவும் விட்டு வைத்திருக்கிறாள்..”
“அவருடன் அதே வீட்டிலும் இருக்கிறாள். அவளுக்கு நம்பிக்கை இல்லை என்றால் தன் அக்காவை அழைத்துக் கொண்டு செல்ல அவளுக்கு தெரியாதா ?நம்பிக்கை இல்லாமல் அல்ல அதையும் தாண்டிய வலி தன் கண் கூடவே தனது மாமாவை பார்க்க கூடாது இடத்தில் பார்த்த வலி “…
அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது எங்கள் இருவருக்கும் பள்ளி காலத்தில் இருந்தே அவர் பழக்கம் .அக்காவை கல்லூரியில் இருந்து விரும்புகிறார். ஆனால் அவர் படித்திருக்கிறார் டீ.அதற்கு ஏற்ப வேலைக்கு சென்று இருக்கலாமே என்றான்..
அவர் படித்திருக்கிறார் , இதற்கு முன்பு ஒரு நல்ல கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார்,என்று மட்டும் தான் உங்களுக்கு தெரியும் .ஆனால் அவர் எவ்வளவு வசதியானவர் என்று தெரியுமா ?அக்காவை திருமணம் முடிப்பதற்கு முன் வரை சொந்த கம்பெனிக்கு ஓனர் ..
அவர்கள் வீட்டில் மலர் அக்காவை ஏற்றுக் கொள்ளவில்லை. குடும்பம் இல்லாத உறவு, மருமகள். அனாதை அப்பா அம்மா இல்லாத மருமகள் தங்கள் வீட்டிற்கு வேண்டாம் என்று சொன்னார்கள் ..
வசந்த் வீட்டில் அவ்வாறு சொன்னவுடன் வசந்த் முடிவு என்னவாக இருந்தது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
தனிமையின் காதலி
Love veetla irunthu veliya vanthu mrg pani irukangla full support ah irukan akka thangachi ku
ஆனா, ஏன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வசந்தை பார்த்ததால உடனே தப்பா நினைக்கலைன்னாலும்
ஏன் சுவாதி அவர் மேல அத்தனை கோபமா இருக்கா..?
Interesting