Skip to content
Home » புன்னகை 56

புன்னகை 56

“வரு,தேவா இருவரும் வீட்டிற்கு வரும்போது தேவா வீட்டில் ஒரு பைக் நின்று கொண்டு இருந்தது .வண்டியை விட்டு இறங்கியவுடன் வரு தான் என்ன அப்பா ,அம்மா வண்டி இங்கே இருக்கிறது என்றாள்”. ..

“வீட்டிற்குள் இருப்பார்கள் இதற்கு என்ன வா என்று விட்டு அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்”..

” கலை மாணிக்கம் இருவரும் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு தேவா தான் இருவரையும் வாருங்கள் என்று அழைத்தான்”.

“என்ன கலை இந்த பக்கம் காலையில் தானே உன் பொண்ண பார்த்த உன் பொண்ண பார்க்க வந்தது போல தெரியலையே என்று சொல்லி சிரித்தாள். வாயாடி உன்ன பாக்க வரல என்றார்”..

” மாணிக்கம் செய்தியாக உன்ன பார்க்க வேண்டாமா என்றார் .பிறகு தனது அப்பா உட்கார்ந்து இருக்கும் சோபாவின் கைப்பிடியில் உட்கார்ந்து கொண்டு தனது தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு அவரது தலையோடு தலை முட்டியவுடன் என்ன டா ரொம்ப டயர்டா “என்றார் ..

அப்படி எதுவும் இல்லப்பா என்று சிரித்தாள்.பிறகு “கலை தான் போய் டிரஸ் மாத்திட்டு வாடி என்றார் .ஆமா கலை எனக்கு புடவை கட்டி இருப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது என்று வேகமாக அறைக்குள் போனாள்”..

“.தேவாவிற்கு தான்  இவளை தனிமையில் புடவையில் பார்க்க வேண்டும் என்று எண்ணினாள் காலையிலும் நேரமில்லை. பிறகு ,இப்பொழுது வரை அலுவலகத்தில் நேரம் சரியாக இருந்தது .வீட்டில் ஆவது என்று யோசித்து விட்டு அவள் உடை மாற்றி விடுவாளோ என்று எண்ணினான் “..

ஆனால்,”அனைவரின் முன்பும் உள்ளே செல்வதற்கு யோசித்தான் .அப்பொழுது கலை தான் அவனுக்கு ஆண்டவனாக தெரிய செய்தார். நீயும் போய் பிரஷ் ஆகி விட்டு வா தேவா என்று அனுப்பி வைத்தார். அவனும் சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்துவிட்டு அமைதியாக அவனது அறைக்குள் சென்றான்”..

“அவன் அறைக்குள் செல்லும்போது வரு குளியலறைக்குள் இருந்தாள்.  உடை மாற்றி விடுவாளோ ?என்று எண்ணினான். ஆனால் ,அவன் எண்ணியது  போல் இல்லாமல்  வரு என்ன நினைத்தாளோ தலையை மட்டும்  கிளிப்பால் தனது முடிகளை அடக்கி விட்டு முகம் கழுவிக்கொண்டு வெளியில் வந்தாள் “..

“தேவா வருவை பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டான் .வரு சிரித்துக்கொண்டே என்ன மூச்செல்லாம் பலமாக இருக்கிறது . அவளை கைப்பிடித்து பின்பக்கம் இருந்து அவளது கழுத்தில் தனது முகத்தை பதித்தவன் ஒன்றுமில்லை என்றான்”..

” சார் ஏதோ ஒன்னு நெனச்சிட்டு இருக்கீங்க என்னன்னு புரியல என்று சிரித்து கொண்டே அவனை விட்டு நகர்ந்தாள். சும்மா  என்று விட்டு அவளை அமைதியாக பார்த்தான். இப்பொழுது புடவையை மாற்றி விடுவாளோ ?என்று பிரஷ் ஆயிட்டு வாங்க டீ குடிக்கலாம் ஒரு மாதிரி இருக்கு என்றாள் “.

” அவனுக்குமே  டீ குடிக்க வேண்டும் என்பது போல் இருந்தால் சரி என்று குளியல் அறைக்குள் புகுந்து குளித்துவிட்டு வீட்டில் அணியும் உடையை அணிந்து கொண்டு வெளியில் வந்தான் “…

அப்பொழுது “வரு அவர்கள் அறையில் இல்லை .தேவா முறை சுற்றி பார்த்து விட்டு டிரஸ் மாற்றி  இருப்பாளோ என்று எண்ணிவிட்டு வெளியில் வந்தவன் அவள் தனது தந்தையுடன் புடவையோடு உட்கார்ந்து நெற்றியில் ஒரு சிறிய போட்டு மட்டும் வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு சமையல் அறைக்குள் புகப் போனான் “..

கலை சிரித்த முகமாக நாங்கள் தான் இருக்கிறோமே என்று விட்டு தேவாவின் கையில் ஒரு டீ கப்பை வைத்தார். பிறகு ,அனைவருக்கும் டீ கொடுத்தார்  அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து குடித்துக் கொண்டு எழுந்தார்கள் ..

“ஆது தான் கலையிடமும் , மாணிக்கமிடமும் தான் காலையில் எடுத்த தனது அம்மாவின் ஃபோனில் இருக்கும் போட்டோவை காண்பித்தான் .இருவிட்டு பெற்றோர்களுக்கும் அந்த போட்டோவை பார்த்த உடன் அவ்வளவு மகிழ்ச்சி “..

“அரசி அமைதியாக கலையை பார்த்தார். இந்த போட்டோவை நான் மாமாவிடம் சொல்லி பிரேம் பண்ணி வைத்துக் கொள்ளலாம் இரு வீட்டிலும் என்றார் .”

“சூப்பர் அத்தை நானே சொல்லணும் என்று நினைத்தேன் .நீங்களே சொல்லிவிட்டீர்கள். இந்த அப்பாவிடம் எதை சொன்னாலும் மறந்து விடுவார் என்று சொல்லி சிரித்தான் .தீரன் தனது இளைய மகனை முறைத்தார்”..

“மாணிக்கம் சிரித்துக் கொண்டே அதை தன்னுடைய போனுக்கு அனுப்புமாறு ஆதுவிடம் கேட்டுக் கொண்டார். அவனும் உடனே அனுப்பி விட்டான். பிறகு ,அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி இருந்துவிட்டு இரவு உணவும் கலையே செய்திருந்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு கலையும் ,மாணிக்கமும் நேரம் ஆவதை உணவு தங்கள் வீடு நோக்கி சென்றார்கள் “..

“இருந்து விட்டு செல்லலாமே? என்று சொன்னதற்கு இல்ல அங்கு போட்டது போட்டபடி இருக்கிறது .இப்பொழுது ,கொஞ்ச நேரம் அங்க போய் படுத்தி எழுந்தாள் தான் காலையில் அனைத்தையும் எடுத்து ஒதுங்க வைக்க முடியும் என்றார் “.

“அரசியும் அதை உணர்ந்து இருந்ததால் சரி என்று பிறகு 9:00 மணி போல் அவர்கள் வீட்டை நோக்கி கிளம்பி விட்டார்கள். ஆதுவும் தனக்கு படிக்கும் வேலை இருப்பதால் சரி என்று விட்டு கிளம்பி விட்டான்”..

“அரிசி ,தீரன் இருவரும் மாத்திரை போட்டுவிட்டு சாப்பிட்டதால் அவர்கள் அறைக்கு சென்று விட்டார்கள். போகும்போதே கலை அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு தான் சென்று இருந்தார் அதனால் தேவாவுக்கு இப்போது எந்த வேலையும் இல்லை”..

” தேவா அறைக்குள் சென்றான்.  வரு அனைத்து லைட் கலையும் நிறுத்தி விட்டு அவளது அறைக்கு வந்தாள்.தேவா கட்டிலில் உட்கார்ந்து இருந்தான் “..

“வரு அவனது அருகில் வந்து உட்கார்ந்து தோளில் சாய்ந்தாள்.தேவா அவளது  தாடையை வேகமாக பற்றி அவளது நெற்றியில் இதழ் பதித்தான். அவள் கண் மூடினாள் .”..

“அவள் கண் மூடிய அடுத்த நொடி அவளது கண்ணில் இதழ் பதித்தான். அவளுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது” “

“தேவாவை வேகமாக தள்ளி விட்டாள்.. தேவாவும் அவளது உணர்வை புரிந்தவனாக சாரி டி என்று அமைதியாக இருந்தான். இதற்கு எதற்கு சாரி சொல்கிறீர்கள் ஒன்றும் இல்லை என்று விட்டு நகர்ந்தாள் “..

“சிரிப்புடனே அவளை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தான் .பிறகு தலையை கோதினான். என்ன காலையில் இருந்து சார் ஒரு மார்க்கமாக இருக்கீங்க என்று கேட்டாள்”..

” ஒத்துக்கிறேன் டி .நீ காலையில் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்று ஆது உன்னை ஆசையாக புடவை கட்ட சொன்னதிற்கும் ,நான் உன்னை ரசனையாக  கட்ட சொன்னதிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது”..

” அவனுடைய ரசனை வேறு என்னுடைய ரசனை வேறு என்று சிரித்தான். அது மட்டும் தானா? என்றாள். ஒத்துக்கிறேன் மேடம் எனக்கு உன் மேல ஃபர்ஸ்ட் டைம் போசசிவ் வந்தது என்று “..

” நீ அப்படி உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடன் ஒரு மாதிரியாக இருந்தது . வெறும் கால் மட்டும் தான் தேவை என்றாள் .புரியுது டி நிறைய நாள் நீ ஜீன்ஸ்லயே வந்து இருக்கு அப்பெல்லாம் தெரியலை “..

“எனக்கு என்ன என்று சொல்ல தெரியல நீ என்னுடையவள் ஆகியவுடன் வந்த உரிமையாக கூட இருக்கலாம் என்று அவளது நெற்றியில் முட்டினான்.”

பிறகு ,இருவருக்குமே அசதியாக இருந்ததால் சரி என்று விட்டு இருவரும் படுத்து உறங்கினார்கள் .இப்படியே நாட்கள் வேகமாக சென்றது.

” வாசு வீட்டில் வாசுவிடம் அன்று இரவு கேட்டதற்கு ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு தான் சுவாதி என்ற பெண்ணை விரும்புவதாகவும் அவர்கள் வீட்டின் நிலவரத்தையும் எடுத்துக் கூறினான் .”.

ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு வாசுவின் பெற்றவர்கள் எதுவும் சொல்லாமல் சரிடா என்று விட்டு அமைதி ஆகி விட்டார்கள் .

அம்மா நான் சொன்னதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை என்றான்.எங்களுக்கு நேரம் கொடு என்று விட்டு அமைதியாகி விட்டார்கள் .அதன் பிறகு ,அன்று இரவு வாசு அவனுடைய அறைக்கு சென்ற பிறகு தேவாவிற்கு அழைத்தார்கள்..

“தேவா அப்போது நேரம் இல்லாமல் பேச முடியாமல் விட்டு விட்டான். மறுநாள் அவன் காலையில் பேசிய போது ,வாசுவின் அம்மா விவரத்தை கேட்டவுடன் தேவா நான் நேரில் வந்து பேசுகிறேன் அம்மா” ..

அவன் இல்லாத நேரத்தில் கூட வருகிறேன் என்றான். சரிப்பா நீ மாலை கோவிலுக்கு வந்து விடு வீட்டிற்கு வேண்டாம் என்றார் .நான் அப்பாவையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி இருந்தார் சரி என்று விட்டு ஃபோனை வைத்துவிட்டு விவரத்தை வருவிடமும் சொல்லி இருந்தான் ..

“வரு தானம் வருவதாக சொன்னாள்.சரி என்று விட்டு அடுத்த இரண்டு நாட்களில் இருவரும் வாசுவின் பெற்றவர்களை கோவில் சந்தித்தார்கள். வாசுவின் பெற்றவர்கள் சுவாதியின் வீட்டை பற்றி கேட்டவுடன் வரு தான் அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள்”..

” பிற்காலத்தில் இதனால் சுவாதியின் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதால் அவர்களும் ஒரு சில நொடிக்கு பிறகு  அந்த தம்பி பற்றி என்று (வசந்த்)கேட்டார் .”..

“உங்களுக்கு நான் உறுதி தருகிறேன் அவர் கெட்டவர் அல்ல .ஆனால் ,நீங்கள் உங்கள் சொந்த பந்தத்தில் யாராவது தவறாக பேசப்படும் என்று யோசித்தால் கொஞ்சம் காலம் பொறுங்கள். அவர் நல்லவர் என்பதை நான் சுவாதிக்கு நிரூபிக்க வேண்டி இருக்கிறது”..

“அவர்களும் சரி ஆனால் கொஞ்சம் மூன்று மாதத்திற்குள் பார் .எங்களுக்கு எங்கள் மகன் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் பிரச்சனை இல்லை .ஆனால் ,நாம் நம் உறவினர்கள் பேசுவதையும் பார்க்க வேண்டுமே” என்றார் ..

சரி மா மூன்று மாதத்திற்குள் இதை சரி செய்து விடலாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார்கள் .அதன் பிறகு ,வாசுவின் பெற்றவர்கள் வாசுவின் திருமணத்தை பற்றி பேசவில்லை ..

அதனால் ,வாசு அமைதியாக விட்டு விட்டான் .சரி திரும்பவும் தன் வீட்டில் தன் திருமணத்தை பற்றி பேசும்போது வேண்டுமானால் நாம் சுவாதி பற்றி யோசித்துக்கொண்டு பேசிக்கொள்ளலாம் என்று விட்டு அமைதியாக விட்டான் ..

ஏனென்றால் ,தேவா வாசுவின் பெற்றவர்களிடம் பேசி விட்டு வந்ததை பற்றி வாசுவிடம் எதுவும் மூச்சு விடவில்லை .அதனால் ,வாசுவும் அதை பற்றி மேற்கொண்டு யோசிக்கவில்லை ..

இப்படியே நாட்கள் சென்றது .”ஒருநாள் இரவு 7:00 மணி போல் அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள் .வருவும் வீட்டில் ஆதுவிடம் பேசிக்கொண்டு அரசியிடமும் பேசிக்கொண்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை அறிந்து கொண்டு இருந்தார்கள்”..

“அப்போது, சுவாதியின் நம்பரிலிருந்து வருவிற்கு ஃபோன் வந்தது . வரு உடைய போன் அறையில் இருந்ததால் தேவா வேலையாக அறையில் இருந்ததால் தேவா தான் சுவாதி என்று வருவை அழைத்தான் “..

“வருவும் வேகமாக சரி என்று சென்று சுவாதியின் போனை எடுத்தாள். என்ன சுவாதி என்று கேட்டதற்கு வரு கொஞ்சம் வீட்டுக்கு வா என் அவசரம் என்று சொன்னாள்.மேற்கொண்டு எதுவும் வருவும் கேட்டுக் கொள்ளவில்லை .சரி இன்னும் கால் மணி நேரத்தில் அங்கு இருப்பேன் என்று விட்டு வைத்து விட்டாள் “..

“தேவா தான் என்ன என்று கேட்டதற்கு வரு தனக்கு முழுவதாக விஷயம் தெரியாது. ஆனால், அவசரம் என்றவுடன் சரி நானும் வருகிறேன் என்றான்.இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வரு சொன்னாள். நானும் வருகிறேன் என்று விட்டு இருவரும் வெளியில் வந்தார்கள்”..

“அரசியிடமும் ,தீரனிடமும் சொல்லிக் கொண்டு சுவாதி வீட்டை நோக்கிச் சென்றார்கள் .சுவாதி எதற்காக வருவிடம் அவசரம் என்று வர சொன்னாள் “என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 56”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *