Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 45

பூவிதழில் பூத்த புன்னகையே 45

“வரு தேவா இருவரும் வருவின் பெற்றவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது வாசலில் கலை ,மாணிக்கம், சகுந்தலா மூவரும்  நின்று கொண்டு இருந்தார்கள்”

” சகுந்தலா இருவரையும் பார்த்துவிட்டு கலையின் காதில் பேச செய்தார் என்ன அக்கா இருவரும் ஸ்கூட்டியில் வந்து இருகிறார்கள்”  என்று கேட்டார்..

“கலை சிரித்துக் கொண்டே அரசி தான் போன் செய்து இருந்தார். ஆதுவை பள்ளியில் விட்டுவிட்டு அப்படியே வருகிறார்கள் என்று உன் மகள் ஸ்கூட்டியில் தான் வருவேன் என்று அடம் பிடித்து இருக்கிறாள் “என்றவுடன் இவளை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வது தெரியவில்லையே…

“பாவம் தேவா தம்பியின் பாடு தான் படாதபாடு இத்தனை நாட்களாக நீ அனுபவித்த அனைத்தையும் இப்போது தேவா  தம்பி அனுபவிக்க போகிறார் “என்று தன் அக்கா விடம் சகு சொல்லி கொண்டு இருந்தார்…

இருவரும் வண்டியை விட்டு இறங்கி அருகில் வந்திருந்தார்கள் சகு தான் இருவருக்கும் ஆரத்தி எடுத்தார்  “என்ன சித்தி இவ்வளவு நேரம் என்னை பற்றி அம்மாவின் காதை கடித்து  கொண்டு இருந்தீர்கள் போல” …

“என்னை இவ்வளவு நேரம் அம்மா காதில் புகழ்ந்து விட்டு இப்பொழுது சிரித்த முகமாக ஆரத்தி எடுப்பது போல் இருக்கிறது என்றாள்” அவரும் சிரித்துவிட்டு ஆரத்தியை கிழே ஊத்தி விட்டு அவளை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தார்…

” ஆமாண்டி என்ன செய்வது உன்னை சுற்றி இருக்க அனைவரும் உன்னால் படப் போகும் அவதிகளை எண்ணி சிரித்தேன் இத்தனை நாட்களாக என்னுடைய அக்கா இப்பொழுது இந்த தம்பி என்று தேவாவை பார்த்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தார்”..

“தேவா  சிரித்துக் கொண்டான் இந்த அழகான இம்சையையும் எனக்கு பிடித்து தானே   இருக்கிறது என்று மனதிற்குள் சொல்லியும் கொண்டான்”.

பிறகு “சகுந்தலா இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் தேவாவிற்கு அது இப்பொழுது தேவையில்லாததாக இருந்தது அவன் தினமும் காலையில் ஒருமுறை ஒரு முறை   குடிப்பதோடு சரி மற்ற நேரங்களில் குடிக்க மாட்டான்”..

“இருந்தாலும் முதல்முறையாக இவர்கள் வீட்டில் மருமகனாக வந்த பிறகு கொடுப்பதை வேண்டாம் என்று சொன்னால் சரியாக இருக்காது என்று எண்ணினான்”…

“அவன் இரண்டு வாய் குடித்தவுடன் வரு எனக்கு டீ வேண்டும் கொடுங்கள் என்று அவனது டீயை வாங்கி குடித்தாள் சகுந்தலா தான் அவளை என்ன டி பழக்கம் இது உனக்கு வேண்டும் என்றால் என்னிடம் கேட்க வேண்டியது தானே என்று முறைத்தார் “..

அப்பொழுது “கலை தான் தேவா தம்பி டீ குடிக்க மாட்டார் ஒரு நாளைக்கு இரு வேளை தான் காலை ,மாலை மட்டும் தான் குடிப்பார் நேரம் தவறி குடிக்க மாட்டார் அதனால் தான் உன் மகள் அவ்வாறு செய்கிறாள் என்று சகு  காதில் பேசினார்”..

“சகு அதை உணர்ந்து விட்டு நகர்ந்தார் சகுந்தலாவும் தனது மகள் தனது மருமகனுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் சரி என்று எண்ணிவிட்டு அமைதியாக சமையலறைக்குள் புகுந்தார்” பிறகு சமைத்த அனைத்து உணவுகளையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார் ..

சித்தி எங்க யாரையுமே காணோம் என்று கேட்டாள்  உன் தொல்லை தாங்காமல் அனைவரையும் அனுப்பி வைத்து விட்டோம் என்றார் பெரியோர்கள் சென்றார்கள் சரி ஆனால் சிறியவர்களையும் யாரையும் காணமே என்று கேட்டாள்..

அனைவருக்கும் பள்ளி கல்லூரி என்று இருக்கிறது எத்தனை நாட்கள் இங்கு இருப்பார்கள்   நேற்றே கிளம்பி விட்டார்கள் என்று காலை தான் அனைவரையும் அனுப்பி வைத்தோம் என்றார்கள்.

“இன்று காலை சென்றால் தான் அனைவரும் நாளை பள்ளி ,கல்லூரி செல்ல முடியும் என்றார் அவளுக்கும் அதுவும் சரி என்று பட்டதால் அமைதியாகி விட்டாள் பிறகு நீங்கள் மூவரும்  சாப்பிட வில்லையா? என்று கேட்டான்…

“சாப்பிட வேண்டும் என்ற உடன் உட்காருங்கள் ஒன்றாக சாப்பிடலாம் என்று உடன் வருவும் அவ்வாறே சொன்ன உடன் 5 பெரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்” ..

பிறகு “அப்பா,அம்மா இருவருக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைக்கட்டா  என்று கலை கேட்டதற்கு இல்லம்மா அவர்கள் இருவருக்கும் சாப்பாடு அனைத்தும் செய்து வைத்து விட்டு தான் இங்கு வந்தோம் “என்றாள்..

“சகு நீயா டி சமைக்க செய்தாய் என்று ஆவலாக கேட்டார் என்ன சித்தி என்ன பத்தி தெரிஞ்சி இருந்தும் இவாரு கேட்கிறாய்  என்று சிரித்தாள் “..

“சிரித்து விட்டு அவரை பார்த்து கண்ணடித்தாள் அவர் இவளை பார்த்து முறைத்து விட்டு அனைவரும் சாப்பிட்ட இலைகளை  எடுத்துக் கொண்டு சென்று குப்பையில் போட்டுவிட்டு வந்தார் “..

இப்போது “தேவாவை  பார்த்து தம்பி நீங்கள் தரும் இடம் பா அக்கா  மாறி நீங்களும் அவளை அப்படியே விட்டு விட்டால் துளிர் விட்டு விடும் அவளுக்கு”..

“அவளும் ஒரு சில வேலைகள் செய்ய வேண்டும் என்றார் தேவா சிரித்துக் கொண்டான் அத்தை அவளுக்கு சமைக்க தெரியாமல் இல்லையே “அதேபோல் “அவள் வேலையும் செய்யாமல் இல்லை நீங்கள் சொல்வது போல் ஒரு சில வேலைகள் செய்கிறாள்”..

” அவளுக்கு எப்போது சமைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அன்று சமைப்பாள் அதற்காக தினமும் சமைக்க வேண்டும் என்று அவசியமில்லை நான் பார்த்துக் கொள்வேன் “..

ஒன்றும் பிரச்சனை இல்லை என்றவுடன் உங்களை எல்லாம் திருத்த முடியாது என்று வாய்விட்டு சொல்லி முனகி விட்டு சமையல் அறைக்குள்  சென்றார் பிறகு வேகமாக வெளியில் வந்தவர் தேவாவின் அருகில் நின்று தேவா அவரை கேள்வியாக பார்த்தான்..

இப்போது தேவா  விடம்  தம்பி ஜூஸ் போட்டு எடுத்துக் கொண்டு வரட்டா குடிப்பீர்களா ?என்று கேட்டார் முன் கூட்டியே இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் அத்தை என்றான் …

சரி என்று விட்டு அமைதியாக இருந்தான் பிறகு வருவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான் அப்போது  சகுந்தலா தான் வரு இன்று   இரவு நான் கிளம்பி விடுவேன் என்றார்…

” சித்தி இன்னும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு செல்லலாமே.. என்றாள் சித்தி நான் எதற்காக சொல்கிறேன் என்று உனக்கே தெரியுமே “என்றாள்.தெரிகிறது நானும் இருக்கிறேன் என்று சொன்னேன்.

உன் அம்மாவும் ,அப்பாவும் தான் பசங்களும்,உன் சித்தாப்பாவும் அங்கு  தனியாக இருப்பார்கள் என்று அனுப்பி வைக்கிறார்கள் என்றார். ஓ நான் கூட பசங்களுக்காக என்று நினைத்தேன்.

நீங்க சித்தப்பாவை விட்டு இருக்க  முடியாமல் கிளம்புகிறீர்களா? என்றாள்.பிச்சு புடுவேன் ராஸ்கல் என்று அவளது தலையில் கொட்டினார்.சரி சித்தி பார்த்து போய்விட்டு வா என்றாள்.

சரி டி நீ அப்படியே அம்மாவையும் ,அப்பாவையும் விட்டுவிடாதே என்றார். அப்படியெல்லாம் விட்டு விடுவேனா இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்துவிட்டு செல்வேன்..

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வருவேன் என்னால் தினமும் எல்லாம் வர முடியாது சித்தி என்றாள்.சரிடி என்று விட்டு வருவின் அருகில் இருந்து எழுந்தார்.

வரு,தேவா இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி பிறகு 11 மணி ஆகியவுடன் தேவாவிற்கு இப்படி அமைதியாக உட்கார்ந்து இருக்க ஒரு மாதிரியாக இருந்தது…

வரு இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து இருபது ஒரு மாதிரியாக இருக்கு என்றான் அவன் தனிமையில் இருக்கும் போது மட்டும் தான் அவளை வனி என்றும் வா டி போ டி என்றும் அழைக்கிறான். மற்றவர்கள் முன்பு அனைவரையும் போல வரு என்று தான் அழைக்கிறான் .

அறைக்கு செல்லலாமா ? இல்லை நீங்கள் மட்டும் போறிற்களா ? என்று கேட்டாள். வேண்டாம் டி என்று அவளது காதின் அருகே பேச செய்தான் .நாம் இங்கே உட்கார்ந்து இருக்கலாம் . நீ அங்கு வந்துவிட்டால் உன் அப்பா அம்மாவிற்கும் தனிமையாக தான் இருக்கும் …

நாம் இங்கு இருக்கும் வரை ஜாலியாக இருக்கலாமே.. என்றான் .ஏதாவது விளையாடலாமா . நீங்கள் விளையாடுவீர்களா ?என்று கேட்டாள்  ஏன் டி என்னை பார்த்தாள் எப்படி இருக்கு என்றான் .

அவனை மேலும் கீழும் பார்த்தவள் எதும் வித்தியாசமாக தெரியவில்லை. என்று விட்டு கேரம் விளையாடுவீர்களா? என்றாள்.அவன் சிரித்தவுடன்
சரி என்று விட்டு கேரம் போர்டு எடுத்துக்கொண்டு வந்து வைத்தாள் ..

பிறகு தனது தாய், தந்தை ,சித்தியும் மூவரையும் அழைத்தாள். மூவரும் வந்தவுடன் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் அல்லவா ?என்றார்கள் அதெல்லாம் எதுவும் இல்ல அத்தை வாங்க விளையாடலாம் என்றான்…

சரி என்று விட்டு  உட்கார்ந்தார்கள் சகுந்தலா நான் எல்லாம் வரவில்லை என்றார்.சரி என்று விட்டு அவர் அமைதியாக உட்கார்ந்தார். அப்போது வரு  தான் நானும்  அப்பாவும் ஒரு டீம் என்றாள்.கலை தான்  அவங்க ரெண்டும் கேடிங்க மாப்பிள்ளை எப்ப பார்த்தாலும் என்னை தனியா விட்டுருங்க என்று சிரித்தார் …

அதான் நான் இப்போ இருக்கேனே அத்தை பார்த்துக் கொள்ளலாம் என்றான் விட்டு விடுவேனா ஒரு கை பார்த்து விடலாம் என்றான் .தேவாவும் கலையும் ஒரு பக்கமாக இருந்தார்கள்…

ஐவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டே விளையாடினார்கள் இறுதியில் தேவாவும், கலையும்தான் ஜெயித்தார்கள் .இப்படியே மதியம் பொழுதும் வந்தது. மதிய உணவுக்கு  நான் வெஜ் எடுத்திருந்தார்கள் …

அனைவரும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிட்டார்கள் மாலை ஐந்து மணி போல் இருக்கும் வரு தனது தாய், தந்தை, சித்தி மூவரிடம் வந்து சரி சித்தி நான் கிளம்புகிறேன் என்றாள். சகுந்தலா தான் ஏண்டி இன்று ஒரு நாள் இங்கு இருந்து விட்டு செல்லலாம் அல்லவா? என்றார்..

அவள் அமைதியாகவே இருந்தவுடன் சரி விடு பார்த்து போய் விட்டு வா என்றார் .நீ இருக்கு செல்லும் வரை இருக்கலாம் என்று தான் யோசித்தேன் ஆனால் இப்பொழுது நேரம் ஆகிவிட்டது. அப்புறம் விளக்கு ஏற்றிய பிறகு அனுப்ப மாட்டிர்கள் ..

அது மட்டுமில்லாமல் ஆதுவை நான் அழைத்துக் கொண்டு வருவேன் என்று காத்துக் கொண்டிருப்பான் என்றவுடன் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தேவா அவன் ஸ்கூல் பஸ்ஸில் சென்று விடுவான் என்றான்…

வரு தேவாவை பார்த்து முறைத்தாள் மற்ற மூவரும் சிரித்தார்கள் தங்கள் பெண் இப்போது போல சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்று மட்டும் வேண்டினார்கள் . சரி பார்த்து பத்திரமாக போங்கள் என்று அனுப்பினார்கள்…

சரி என்று விட்டு இருவரும் வெளிய வந்தார்கள் . தேவா வண்டி சாவியை சுழற்றி கொண்டே வந்தான். வரு தனது வண்டியின் அருகில் வந்தவள் நேரமாகிறது வண்டி எடுங்கள் என்றாள்.லூசா டி நீ நான் தான் சொல்கிறேன் இல்ல ஆது அவனது ஸ்கூல் பஸ்ஸில் சென்று விடுவான் என்று என்றான்…

“அவன் எனக்காக காத்துக் கொண்டிருப்பான் உங்களால் இப்பொழுது வண்டி எடுக்க முடியுமா ?இல்லை என்றாள்.
நீயே ஓட்டு என்று விட்டு சாவியை அவள் கையில் திணித்தான்.  வருவும் தேவாவை பார்த்து முறைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு ஆது பள்ளியின் முன்பு நிறுத்தினாள்”..

“சொன்னா கேளு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆது வேகமாக ஓடி வந்தான் டேய் ஸ்கூல் பஸ்ஸில் செல்லவில்லையா ? என்று உடன் அண்ணி வருவார்கள் என்று எண்ணி காத்திருக்கிறேன் நான்” என்றான்..

வரு தேவாவை பார்த்துவிட்டு ஆதுவையும் அழைத்துக் கொண்டு மூவரும் ஒன்றாக வீட்டிற்குச் சென்றார்கள். தீரன் தான் தனது இரண்டு மகன்களையும் முறைத்தார்.

ஆது சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டான். “தேவாவிற்கு  ஒன்றும் புரியவில்லை.
அமைதியாக இருந்தான் . டேய் என்ன டா நினைத்து கொண்டு இருகிறாய் ?இன்னும் இரண்டு நாட்கள் அங்கு இருந்து விட்டு வந்தால் தான் என்ன ? “.என்றார்.

“இல்லப்பா உங்கள் மருமகள் தான் என்று விட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான். வரு தான் அம்மா ,அப்பா ,சித்தி தானே மாமா அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் ஒன்று பிரச்சனை இல்லை “என்றாள்..

இருந்தாலும் என்றார். ஒன்றுமில்லை மாமா என்று விட்டு வேகமாக தனது அறைக்குள் புகுந்தாள். தேவா குளியல் அறைக்குள் இருந்த உடன் அவர் உள்ளிருந்து வெளியில் வருவதற்குள் உடனே புடவை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள் …

வேகமாக புடவையை  அவிழ்த்துக் கொண்டு இருந்தாள் வேகமாக புடவையை அவிழ்க்கும் பொழுது தேவா குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தவன் அவள் நிற்கும் கோலத்தை பார்த்துவிட்டு என்ன டி  செய்து கொண்டிருக்கிறாய் ? என்றான்..

வரு அதிர்ச்சியாகி அவளது முந்தானையை மேலே இழுத்து போர்த்தினாள் . வரு அவனை திட்டுவாளா ? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்

தனிமையின் காதலி

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 45”

  1. CRVS2797

    அட… இதுக்கெல்லாமா திட்டப் போறா….? ஜாலியா ஃப்ரீ ஷோ பார்த்து ரசிக்கப் போறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *