Skip to content
Home » மகாலட்சுமி 110

மகாலட்சுமி 110

வேணி கோதையிடம் மகா அண்ணி இந்த மாதிரி நேரத்தில் தனது தாயுடன் இருக்க வேண்டும் என்று எண்ண மாட்டார்களா என்று கேட்டால் கோதை சிரித்துக் கொண்டே அவளுக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கிறதா   இல்லையா என்று எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் இதுவரை அவளுக்காக என்று அவளுக்கு மட்டும் இல்லை நிலாவிற்கும் நானோ உன்னுடைய மணி மாமாவோ எதுவும் செய்ததில்லை …..


இதுவரை செய்தவர்கள் விரும்பினால் இனியும் செய்யட்டும் இல்லையென்றால் அமைதியாக விட்டு விடட்டும் இதற்கு மேல் இதைப் பற்றிய என்னிடம் பேசாதே என்றார் வேணி கோதையை முறைத்து பார்த்தால் பிறகு தாத்தா பாட்டி இடம் வந்து நின்றால் இருவரும் அமைதியாக வேணியை பார்த்தார்கள் பாட்டி மகா அண்ணி மேல் இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபம் இருக்கட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை…

உங்களுடைய மகள் வைத்து பேத்தி நீங்கள்  தூக்கி வளர்த்தவர்கள் இப்பொழுது மாசமாக இருக்கிறார்கள் அப்படி கூட நீங்கள் என்ன வேண்டாம் உங்கள் வீட்டு வாரிசு உங்களின் அடுத்த தலைமுறை இப்போது அவரது வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது அதற்கான அனைத்து சடங்குகளையும் முறையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லையா என்று கேட்டால் …

பாண்டியம்மா பாட்டி சிரித்துக் கொண்டே நீ சொல்வது போல் அது எங்கள் வீட்டு வாரிசு தான் எங்களின் அடுத்த தலைமுறை தான் அவர்கள் இருவரும் வந்து கேட்கட்டும் இதைப்பற்றி என்று கேட்டார் எனக்கு புரியவில்லை பாட்டி அவர்கள் இருவரும் எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது வளைகாப்பு வையுங்கள் என்று கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார் காவேரி வேணி என்று கத்தினார் ….

அத்தை இப்பொழுது நான் உங்களிடம் பேசவில்லை தாத்தா பாட்டி இடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் பாண்டியம்மா பாட்டி சிரித்துக் கொண்டே நீ சொல்வது போல் நான் சொல்லவில்லை வேணி  என்றார்  அப்புறம் என்ன என்று சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பாட்டி அவர்கள் இருவரும் மாசமாக இருக்கிறேன் என்பதையும் நடு கூடத்தில் வைத்து தான் சொன்னார்கள் …

இப்பொழுது இரட்டை உசுராக இருக்கிறது என்பதையும் நடு கூடத்தில் வைத்து தான் சொன்னார்கள் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சொன்னார்கள் இல்லை உங்களிடம் வந்து தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று நினைக்கிரீர்களா என்று கேட்டால் பாட்டி வேணியை அமைதியாக பார்த்தார் சொல்லுங்க பாட்டி இல்லை உங்களது அறையில் வந்து இருவரும் உங்கள் இருவரிடம் பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்களா என்று கேட்டுவிட்டு காவேரியை பார்த்தால் ….


காவேரி அமைதியாக இருந்தார் பாண்டியம்மா பாட்டியிடம் அதன் பிறகு வார்த்தையே இல்லை வேணி அமைதியாக காவேரி அருகில் வந்து நின்றால் தனது அத்தையின் கையை தனது கைக்குள் வைத்துக்கொண்டு அத்தை உங்களுக்கு அவர்கள் இருவரின் மேலும் கோபம் இருக்கிறது வருத்தம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன் உங்களது கோபமும் வருத்தமும் நியாயம் தான் அதை நான் இல்லை என்று சொல்ல மாட்டேன் …

ஆனால் இப்பொழுது ஒன்றுக்கு இரண்டு உசுரை தாங்கிக் கொண்டு நிற்கிறார்கள் அவர்கள் மனதிற்குள் எத்தனை வலி இருக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் வலி இருக்கவே இருக்காது என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன் அவ்வளவு தான் நான் சொல்வேன் இதற்கு மேல் உங்களது விருப்பம் மூன்றாவது மாதம் அண்ணன் அண்ணியாக நாங்கள் செய்தோம் ஐந்தாவது மாதம் அக்காவாக கயல் அண்ணி செய்தார்கள் …

ஆனால் வளைகாப்பு சூட்ட வேண்டியது பிறந்து விட்டு புகுந்து விட்டு கடமை இருவருமே இப்படி கை விரித்தால் இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை இப்பொழுதும் உதிரன் மாமாவும் அவரும் செய்வதற்கு தயாராக தான் இருக்கிறார்கள் ஆனால் மகா அண்ணி மனதில் ஏதோ ஒரு மூலையில் கூட நீங்கள் அனைவரும் இதை எடுத்து செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை முன்னிருக்க மாட்டீர்களா என்ற வருத்தம் இல்லாமல் இருக்குமா இதன் பிறகு நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள் ….


நான் உங்கள் யாரிடமும் மகா அண்ணி வளைகாப்பை  எடுத்துக்காட்டி செய்ய சொல்லவில்லை இன்னும் சொல்லப்போனால் நான் வளைகாப்பிற்கு தேவையான அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டேன் நாளை காலை 12 to  ஒன்றை நல்ல நேரம் அந்த நேரத்தில் வளைகாப்பு நம் வீட்டிலே வைத்து செய்யப் போகிறேன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்கள் இருவரின் மேலும்  எத்தனை வருத்தம் கோபம் இருப்பதைக் காட்டிலும் ஏதோ ஒரு மூலையில் அவர்கள் உங்களுக்கு செய்த நன்மையும் பாசமும் இருந்தால் ….

அவர்களுக்காக இந்த வளைகாப்பை எடுத்துக்கட்டி  செய்யுங்கள் என்று மாலை மாமனார் மாமியாராக சுந்தரி அம்மாவும் வேலப்பாவும் ஊரில் உள்ளவர்களுக்கு சென்று சொல்லிவிட்டு வருவீர்கள் என்று நம்புகிறேன் அதேபோல் நெருங்கிய உறவினர்களுக்கு கோதையத்தையும் மணி மாமாவும் சொல்வார்கள் என்று நினைக்கிறேன் நாளை வருபவர்களை நம் சொந்தம் பந்தங்களாக நம் வீட்டு விசேஷமாக எடுத்து கட்டி  நீங்களும் கந்தன் மாமாவும் செய்வீர்கள் என்று நம்புகிறேன் …..


வீட்டின் பெரியோர்களாக பாட்டியும் தாத்தாவும் அனைத்தையும் செய்வார்கள் என்று நம்புகிறேன் மற்றபடி நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை மற்ற அனைத்தையும் சிறியவர்கள் நாங்களே பார்த்துக் கொள்வோம் இன்னும் சொல்லப்போனால் வீட்டில் உள்ள சிறியவர்களிடம் கூட நான் இதைப் பற்றி பேசவில்லை இதற்கு மேல் இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு அமைதியாக பூந்தோட்டத்திற்கு சென்று விட்டாள் ….


மகா கீழே இறங்கலாம் என்று வந்தால் வேணி பேசுவதை கேட்டுவிட்டு வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தால் சுந்தரி மகா என்று கத்தினார் மகா ஒரு நிமிடம் நின்று சுந்தரியை பார்த்துவிட்டு அமைதியாக பூந்தோட்டத்திற்கு சென்று. வேணியை கட்டிக்கொண்டு அழுதால் அண்ணி என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் இது ஆனந்த கண்ணீர் வேணி என்று சொல்லிவிட்டு வேணியின் தோளில் சாய்ந்தால் …

வேணி உட்கார்ந்து விட்டு மகாவைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டு அவளது தலையை கோதி விட்டால் உங்கள் நல்ல மனதிற்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும் அண்ணி என்று அவளது நெற்றியில் முத்தம் வைத்தால் எழில் சிரித்துக்கொண்டே வேணியின் அருகில் சென்று அவளது தலையை கோதி விட்டான் வேணி நிமிர்ந்து பார்த்துவிட்டு எழிலை பார்த்து சிரித்தாள் நீ இவ்வளவு தைரியமா பேசுவாய் என்று  நான் நினைக்கவில்லை என்றான்….

வேற  எப்படி அண்ணா நான் பேசணும்னு என்று நினைக்கிறீங்க என்று சிரித்தால் பிறகு சிறியவர்கள் அனைவரும் வந்து நின்றார்கள் உதிரன் தான் எப்பொழுது வேணி நீ அனைத்து ஏற்பாட்டையும் செய்தாய் என்று கேட்டான் வேணி உதிரனை பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணடித்தால் வேணி கண் அடித்த உடன் உதிரனுக்கு பகிர் என்று  இருந்தது இனியை பார்த்தான்…

இனி உதிரனை  பார்த்து முறைத்து விட்டு வேணியை பார்த்து சிரித்தாள் மாமா நீங்க வேற நான் உள்ளே சொன்னதில் பாதி உண்மை பாதி பொய் புரியவில்லையே என்றான் அவர்கள் அனைவரும் அனைவரையும் கூப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன் நான் வளைகாப்பிற்கு அனைத்து ஏற்பாட்டையும் செய்திருக்கிறேன் தான் முழுவதாக எதையும் முடிக்கவில்லை என்று சொன்னால் எழில் பக் என்று சிரித்து விட்டான் …..

உதிரன் முறைத்தான் இனி சிரித்துவிட்டு உதிரன் தலையில் கொட்டினால் மாமா என்ன இப்படி நிக்கிற பின்ன என்னடி உள்ள என்னவோ அப்படி பேசினால்  ஆனால் இப்போது கேட்டாள் ஒண்ணுமே செய்யவில்லை என்கிறாள் என்றான் ஓ உங்க தங்கச்சிக்கு நீங்க செய்ய மாட்டீங்களா அண்ணன் தம்பி சேர்ந்து என்றால் இப்பொழுது உதிரன் முகில் இருவரும் வேணியை பார்த்து திரு திரு வென முழித்தார்கள் ….

பிறகு சிரித்து கொண்டே நாங்க செய்யாமல் எங்க தங்கச்சிக்கு வேற யாரு செய்வார்கள் என்று சொல்லிக் கொண்டே மகாவின் இரு பக்கமும் இருவரும் உட்கார்ந்தார்கள் மகா இருவரையும் பார்த்து சிரித்தாள் மகிழ் அப்பொழுதுதான் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வந்தான் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் பூந்தோட்டத்தில் இருப்பதை பார்த்துவிட்டு அங்கு வந்தான் அனைவரும் அவனைப் பார்த்தார்கள் …

மகிழ் அனைவரையும் பார்த்து  சிரித்தான் பிறகு என்ன எல்லோரும் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான் நிலா தான் வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னவுடன் மகிழ் வேணியை பார்த்து சிரித்து விட்டு வேறு எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்றான் அவன் மொட்டை மாடிக்கு படி ஏறும் போது கோதை ஒரு நிமிஷம் என்றார் மகிழ் அமைதியாக நின்று தனது அத்தையை பார்த்து சிரித்தான் …..

அந்த சிரிப்பில் சிரிப்பை விட அதிக வலி தான் இருந்தது தனது கோதை அத்தை தன்னிடம் பேசி எத்தனை மாதங்கள் ஆகிறது என்பதை எண்ணினான்  அவருக்குமே வலிக்க தான் செய்தது பிறகு அமைதியாக இருந்தார் என்ன அத்தை கூப்பிட்டு விட்டு அமைதியாக இருக்கிறீர்கள் என்ன என்று கேட்டான் அவர் எதற்காக அழைத்தார் என்று அவருக்குமே புரியவில்லை இப்பொழுது என்ன பேசப்போகிறோம் என்றுமே புரியவில்லை பிறகு ஒரு நிமிடம் கழித்து ஒன்றும் இல்லை என்றார் ….

மகிழ் தனது அத்தையை பார்த்து சிரித்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் வேகமாக படி ஏறி விட்டான் சுந்தரி கோதை அருகில் போய் நின்று என்ன கோதை என்று கேட்டார் ஒன்றுமில்லை அண்ணி என்று சொல்லிவிட்டு தனது அக்காவை ஒரு நிமிடம் முழுவதாக நின்று பார்த்துவிட்டு அமைதியாக அங்குள்ள சோபாவில் உட்கார்ந்து விட்டார் காவேரி தனது தங்கையின் அருகில் வந்து உட்கார்ந்து விட்டு தனது தங்கையின் கையை தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்….



எனக்காகவோ இந்த வீட்டிற்க்காகவோ நீ எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் என்றார் அக்கா என்றார்  கோதை நான் சொல்வது அனைத்தும் உண்மை தான் கோதையே அடுத்தவர்கள் வருத்தப்படுவார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் இப்போது இந்த நிமிடம் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய் என்று விட்டு அமைதியாக அவரது அறைக்குள் சென்று விட்டார் …

கோதை வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்தார் பிறகு தனது கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரது அரைக்கு சென்றுவிட்டார் மணியும் கோதை பின்னாடியே அவரது அறைக்குச் சென்றார் மணி அவரது அறைக்குச் சென்றவுடன் கோதை அவரது அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டார் மணி சிரித்துக்கொண்டே என்ன கோதை இத்தனை வருடங்களுக்கு பிறகு கதவை எல்லாம் தாழ்ப்பாள் போடுகிறாய் என்று தனது மனைவியின் மனதை திசை திருப்பதற்காக அவர் சொன்னார் …..

கோதை சிரித்துக் கொண்டே பேரப்பிள்ளையே பிறக்க போகுது  இப்ப தான் உங்களுக்கு வயசு திரும்புகிறது என்று நினைப்ப என்று சொல்லிவிட்டு தனது கணவன் தன்னை திசை திருப்புவதற்கு தான் அவ்வாறு சொல்கிறார் என்பதை உணர்ந்து விட்டு அவரது தோளில் சாய்ந்து கொண்டார் கோதை உன் மனதில் என்ன இருக்கிறது எதுவாக இருந்தாலும் காவேரி  அண்ணி மனது காயம் படும் படியாக எதையும் செய்து விடாதே என்றார் ….

கோதை சிரித்து கொண்டே தன்னைவிட தன் அக்கா மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் தன்னுடைய கணவன் வைத்திருக்கிறார் என்று எண்ணினார் கோதை மனதில் அப்படி என்ன இருக்கிறது அதை அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்வாரா அதை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 110”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *