Skip to content
Home » மகாலட்சுமி 111

மகாலட்சுமி 111

கோதை தனது கணவர் மணியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார் அனைவரும் கொதையையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் கோதை நேராக தனது அண்ணன் வேலுவிடம் வந்து நின்றார் அண்ணா என்று அழைத்தார் என்ன கோதை என்று வேலு நிமிர்ந்து தனது தங்கையை பார்த்தார் அவர் இவ்வளவு நேரம் நடந்ததை அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருந்தார் …..

அண்ணா தாய்மாமனாக நீங்கள் எடுத்து வளர்த்த உங்களது மருமகளுக்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்டார் வேலு சிரித்துக்கொண்டே நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனது மருமகளுக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வேன் என்றார் சுந்தரி வேகமாக கத்தினார் வேலு தனது மனைவியை பார்த்தவர் என்னை சுந்தரி என்று கேட்டார் …..

நீங்கள்  என்ன செய்ய போகிறீர்கள் என்று கத்தினார் என்னுடைய மருமகளுக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன் என்றவுடன் அவரது சட்டையை பிடித்தார் அப்பொழுது தான் மகிழ்  படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் தனது கோதை அத்தை பேசுவதை கேட்டுவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான் தனது தாய் தனது தந்தையின் சட்டையை பிடித்த உடன் மகிழ் விசில் அடித்தான் …

சுந்தரி தனது மகனை பார்த்துவிட்டு முறைத்தார் மகிழ் அமைதியாக விசில் அடித்துக் கொண்டே படியில் உட்கார்ந்தான் என்ன செய்வாய் என்று கத்தினார் நான் என்னுடைய தங்கை மகளுக்கு எடுத்து வளர்த்த என்னுடைய மருமகளுக்கு செய்வதற்கு நான் யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார் என்னை கேட்க வேண்டிய அவசியம் இல்லையா என்று கேட்டார் அதற்கு எதற்கு சுந்தரி நான் உன்னை கேட்க வேண்டும் ….

என்னுடைய மருமகளுக்கு நான் செய்வதற்கு என்று கேட்டார் ஓ உன்னுடைய மகனுக்கோ மகனின் மனைவிக்கோ செய்வதற்கு தான் நான் உன்னிடம் கேட்க வேண்டும் நான் எடுத்து வளர்த்த எனது தங்கை மகளுக்கு செய்வதற்கு நான் உன்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் நீ என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை வேலு அப்படி தானே  என்று கத்தினார் மகிழ் இப்போதும் விசில் அடித்தான் ….

சுந்தரி தனது மகனை முறைத்து பார்த்தார் விசில் அடித்துக் கொண்டே இன்னும் இரண்டு படி கீழே இறங்கி உட்கார்ந்தான் சுந்தரி தனது மகன் மகிழை பார்த்து முறைத்தவர் உனக்கு என்னை கேட்க வேண்டிய அவசியம் இல்லை அப்படித்தானே என்றார் பிறகு கத்த ஆரம்பித்தார் அப்படி என்னுடைய மகன் என்ன தவறு செய்தான் என்று கத்தினார் தனது கணவனின் சட்டையை பிடித்துக் கொண்டே உனது மகன் எந்த தவறும் செய்யவில்லையா என்று எதிர் கேள்வி கேட்டார்…..

தனது கணவனின் சட்டையை வேகமாக உதறிவிட்டு என்னுடைய மகன் தவறு செய்தான் தான் நான் இல்லை என்று சொல்ல மாட்டேன் சரியா நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையா இந்த வீட்டில் உள்ள யாரும் எந்த தவறும் இதுவரை செய்ததே இல்லையா நீ கூட என்னை காதலித்து தானே திருமணம் செய்து கொண்டாய் என்று உடன் இப்பொழுதும் மகிழ் விசில் அடித்தான் சுந்தரி தனது மகனை பார்த்துவிட்டு வீட்டில் உள்ள சொம்பை எடுத்து தூக்கி எறிந்தார் …

சுந்தரி என்று பாண்டியம்மாள் பாட்டி கத்தினர் என்னத்தை என்ன இப்பொழுது என்று கேட்டார் என்ன செய்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா என்றார் புரிந்து தான் பேசவும் செய்கிறேன் உங்கள் மகன் என்னை காதலித்து தானே திருமணம் செய்து கொண்டார் நான் என் வீட்டின்  எதிர்ப்பையும் மீறி தானே திருமணம் செய்து கொண்டு வந்தேன் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் அப்பொழுது நானும் தவறு செய்து இருக்கிறேன் தானே…..

என் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் காதலித்தவரை கரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக உங்களது மகனை திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் தானே இருக்கிறேன் உங்கள் மகன் என்னை விரும்பவில்லையா எங்களது விருப்பத்தையும் நான் தானே இந்த வீட்டில் வந்து சொன்னேன் அதற்கு எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்டார் வேறு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்….

இப்பொழுது உனக்கு என்னடி என்று வேலு கேட்டார் எனக்கு என்னவா எனக்கு என்ன வா   நீ விரும்பினால் தவறு இல்லை அதுவே உனது மகன் விரும்பினால் தவறா? என்று கத்தினார் நான் என் விருப்பத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேனே என்றார் இப்பொழுது என்ன எனது மகன் அவன் விருப்பத்தை வீட்டில் சொல்ல வில்லை என்பது தான் குற்றம் சரியா என்று விட்டு  இன்னொரு சொம்மை எடுத்து தூக்கி எறிந்தார் காவேரி சுந்தரி என்று கத்தினார்…

என்ன அண்ணி என்ன என்று கேட்டார் என்னவென்றால் என்ன சுந்தரி ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய் நான் பேசுவது உங்கள் அனைவருக்கும்  கத்துவது  போல் தான் இருக்கும் அவன் இதுவரை அவனது விருப்பத்தை அதாவது இதுதான் தனக்கு வேண்டும் என்று வீட்டில் சொல்லி இருக்கிறானா இதுவரை தனக்கு இதுதான் வேண்டும் என்று அவன் ஒரு முறை கூட சொன்னதில்லை மகாவிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அதாவது மூன்று வயதிலிருந்து மகா தான் மகிழ் மாமாவிற்கு இது பிடித்திருக்கிறது …

அவருக்கு சைக்கிள் வேண்டும் அவருக்கு பைக் வேண்டும் அவர் இந்த தொழில் செய்ய விரும்புகிறார் அவர் இதை செய்ய விரும்புகிறார் என்று சொல்லியிருக்கிறாளே தவிர இதுவரை மகிழாக வந்து தனக்கு இது வேண்டும் என்று கேட்டதில்லை அப்படி இருக்கும் பொழுது அவனது விருப்பத்தை மட்டும் எப்படி சொல்வான் என்று எண்ணினீர்கள் என்றார் நீ சொல்வதெல்லாம் சரி இவ்வளவு நாள் சொன்னவளுக்கு இப்பொழுது எங்கே போனது புத்தி என்று கேட்டார்…..


இப்பொழுது எனது மருமகள் மேல் குற்றம் சொல்கிறீர்களா அப்போது உங்கள் மருமகன் மேல் எந்த குற்றமும் இல்லை அப்படி தானே என்றார் மகிழ் இப்பொழுது கைத்தட்டி சிரித்தான் எழிலுக்கு சிரிப்பாக இருந்தது இவ்வளவு நேரம் வெளியே நின்று கொண்டிருந்த எழிலுக்கு சிரிப்பாக இருந்தது இவ்வளவு நேரம் தனது மகனுக்காக பேசிய தனது தாய் இப்போது  தனது மருமகள் என்று வந்த பின்பு மகனையும் தூக்கி எறிய தயாராகி விட்டார் என்று  எண்ணினான்……


உங்கள் மருமகன் அவன் விருப்பத்தை சொல்லாமல் இருந்தது தவறு இல்லை ஆனால் என்னுடைய மருமகள் சொல்லாதது  தான் தவறு சரியா அவளிடம் நீங்கள் கேட்டீர்களா உங்கள் மருமகனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று அவள் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாளா எனக்கு பிடிக்கும் என்று சொன்னாளா அவளுக்கு நீங்கள் திருமணம் ஏற்பாடு செய்தீர்களா இல்லையே நீங்கள் கயலுக்கு தான் மகிழுடன் திருமண ஏற்பாடு செய்தீர்கள் ….

இதில் கயலோ மகிழோ தான் தங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லி இருக்க வேண்டும் கயலுக்கு வேண்டும் என்றால் சூழ்நிலை என்று சொல்லி இருக்கலாம் ஆனால் மகிழுக்கு என்ன அவனுக்கு எந்த சூழ்நிலை இருந்தது அவன் மகாவை இந்த வீட்டிற்க்காக விட்டு  கொடுக்க நினைந்ததற்கு என்னுடைய மருமகள் என்ன செய்வாள் என்றார் இவ்வளவு நேரம் தனது அத்தை பேசியதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த மகா அனைவரின் முன்பும் தனது கணவனை விட்டு தர பிடிக்காமல் அத்தை என்று வேகமாக கத்தினாள்….


சுந்தரி மகாவை அமைதியாக பார்த்தார் போதும் நீங்கள் பேசிய வரை போதும் இதற்கு மேல் பேச வேண்டாம் என்று கத்தினாள் ஆமாம் டி புருஷனை பற்றி பேசினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்துவிடு என்று கேட்டார் பாண்டியம்மா பாட்டி தான் ஏன் உன்னுடைய புருஷனை  பற்றி பேசினால் நீ வர மாட்டாயா  என்றார் ஏன் வரமாட்டேன் என்று அனைவரையும் பார்த்து கத்திவிட்டு இன்னொரு டம்ளரை எடுத்து வேகமாக தனது மகனைப் பார்த்து வீசிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தார்…..


மகிழை பார்த்து முறைத்து விட்டு அவரது அறைக்குள் செல்வதற்கு இரண்டடி எடுத்து வைத்தார் பிறகு தனது அண்ணியை பார்த்துவிட்டு தனது கணவனையும் பார்த்துவிட்டு யார் அனைத்தையும் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்வார்கள் நீ ஏதாவது செய்தால் என்ன செய்வேன் என்று தெரியாது  என்று வேலுவை பார்த்து கத்தி விட்டு அவரது அறைக்கு சென்றார் சென்றார் மகிழ் கைதட்டி சிரித்துக்கொண்டே கீழே இறங்கி வந்து மகாவை கையோடு அழைத்துக் கொண்டு மாடி படி ஏறி விட்டான்……

சுந்தரி சென்றவுடன் வேலூவும் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரது அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு சுந்தரியை பின்பக்கம் இருந்து கட்டிக் கொண்டார் சுந்தரி கண்ணிலிருந்து நீர் வழிந்தது வேலு என்றார் பரவாயில்லை சுந்தரி ரொம்ப நாள் கழிச்சு நீ நீயா என்கிட்ட பேசி இருக்க கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது நான் என் சுந்தரியை அவளாக  பார்த்து என்றார்….

சுந்தரி வேலுவை கட்டிக்கொண்டு அழுதார்  வேலு சுந்தரியை  நிமிர்த்தி அவரது நெற்றியில் முத்தம் வைத்தார் வேலு நா என்றார் நான் என் சுந்தரியை அவளாக பார்த்து ஒரு வருஷம் ஆகப்போகுது என் சுந்தரி இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு டி என்று அழுதார் சுந்தரி வேலுவின் தாடையில் முத்தம் வைத்தார் அவ்வளவு தானா என்றார் வேலு பேரபிள்ளை எடுத்தாச்சு ஏற்கனவே இன்னும் ரெண்டு பேர பிள்ளை வரப்போகுது என்றார்……

அதற்கு நான் என்னடி பண்ண முடியும் என்றார் சுந்தரி சிரித்தார் வேலு சுந்தரியின் நெற்றியோடு நெற்றி முட்டிவிட்டு கதவு தாழ்ப்பாளை திறந்து விட்டு வெளியே வந்தார் வீட்டில் உள்ள அனைவரும் வேலுவை பார்த்தார்கள் வேலு அனைவரையும் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக வெளியே சென்று விட்டார் எழில் தனது அப்பாவை பார்த்து என்னப்பா ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு என்று கேட்டான் ….

அமைதியா போடா என்று விட்டு சிரித்துக் கொண்டே வேலு வெளியே சென்று விட்டார் பிறகு பாண்டியம்மாவும் தாத்தாவும் அவரது அறைக்கு சென்று விட்டார்கள் கோதையும் அவர்களது அறைக்குச் சென்றவுடன் மணி பின்னாடியே சென்று என்ன கோதை இப்போது இப்படி பண்ணிட்ட என்றார்  நான் என்னங்க பண்ணேன் என்றார் இல்ல சுந்தரி எப்படி பேசி சென்றாள் என்று பார்த்த தானே என்றார்….

அண்ணி அவங்க மனசுல இருக்குறத பேசினாங்க அதுல என்ன தப்பு என்றார் உனக்கு உன் மகளுக்கு எதுவும் செய்யணும்னு ஆசை இல்லையா என்றார் கோதை மணி என்று சொல்லிக்கொண்டே அவரை கட்டி அணைத்து கொண்டு எனக்கு எல்லா வலியும் இருக்குங்க ஆனா அக்காவா  விட  மகா  முக்கியமா என்று கேட்டால் எனக்கு சொல்ல தெரியல பெத்தது மட்டும்தான் நானு மற்றபடி பெறாத அம்மாவா இருந்து அவளை முழுக்க முழுக்க பார்த்து வளர்த்தது அண்ணியும் அக்காவும் தான்  அவர்களுக்கு தெரியாதா….

அவளுக்கு என்ன செய்யணும்னு என்று அது தான் நான் இப்ப போய் அண்ணன் கிட்ட பேசினது தாய் மாமன் அவளுக்கு செய்ய வேண்டியதாக அவர் செய்ய வேண்டும்  என்று தானே தவிர தான் மகனோட பொண்டாட்டியா அவர் செய்யணும்னு நான் விருப்பமில்லை என்றார் மணி கோதையின் நெற்றியில் முத்தம் வைத்தார் என்னால முடியல என்று சொல்லிவிட்டு கோதை தனது  கணவனை இறுகி கட்டிக்கொண்டார் ….

இப்படியே மாலைப் பொழுதும் வந்தது வீட்டில் அனைவரும் வரவேற்பரையில் தான் உட்கார்ந்து இருந்தார்கள் ஆனால் சுந்தரி மட்டும் அவரது அறையில் இருந்து வெளியில் வரவே இல்லை மாலை 5 மணி போல் தான் கந்தன் வந்தார் வீட்டில் மற்ற அனைவரும் இருந்தார்கள் ஆனால் கந்தன் ஒரு வேலையாக வெளியே சென்று இருந்தார் அப்பொழுதுதான் வந்தார் அவர் வீட்டிற்குள் வந்தவுடன் காவேரி தான் எழுந்து சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் ….

என்ன காவேரி நீ எடுத்துட்டு வர என்னுடைய தங்கச்சி எங்க என்றார் ஏன் உங்க தங்கச்சி கொடுத்தா தான்  குடிபீர்களா என்றார்  இல்ல காவேரி என்றார் பிறகு டீயை குடித்து விட்டு கந்தன்  சுந்தரி சுந்தரி என்று கத்தினார் சுந்தரி அவரது அறையில் இருந்து வந்தார் கந்தன் சுந்தரியிடம் ஒரு பாக்ஸ் எடுத்து நீட்டினார் என்ன இதில் இருக்கிறது என்று கேட்டார் என் தங்கச்சிக்கு  பிடிக்கும் என்பதால்  திருநெல்வேலி போயிருந்தேன் தங்கச்சி பிடிக்குமே என்று அல்வா வாங்கிட்டு வந்தேன் என்று கொடுத்தார் …..

சுந்தரி தனது வாயில் ஒன்றை எடுத்து போட்டார்  நிலா  வேகமாக வந்து புடுங்கி கொண்டு என்ன பெரியப்பா உங்க தங்கச்சிக்கு மட்டும் தானா எனக்கு இல்லையா என்றால்  என் தங்கச்சிக்கு அப்புறம் தாண்டா நீ தான் சுந்தரிக்கு பிடிக்கும் என்று தான் வாங்கி கொண்டு வந்தேன் என்று சொல்லி சிரித்தார் சுந்தரி கந்தனின் தோளில் சாய்ந்து கொண்டார் அப்போது காவேரி கந்தனிடம் சரி சரி எழந்து போயிட்டு முகம் கழுவிட்டு வாங்க என்றார்….

காவேரி எதுக்கு என்று  கேட்டார் நம்ம ஒரு இடத்துக்கு போக வேண்டும் எழுந்திருங்க நேரம் ஆகுது சிக்கிரம்   முகம் கை கால் கழுவிக்கொண்டு வாருங்கள் என்றவுடன் கந்தனும் சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்தார் பிறகு சுந்தரி அமைதியாக இருந்தார் காவேரி வெளியே போகும்பொழுது சுந்தரியை பார்த்து முறைத்துவிட்டு நினைத்ததை சாதிச்சிட்ட இல்ல என்று சொல்லிவிட்டு வெளியே தனது கணவனை அழைத்துக்கொண்டு சென்றார் ….

வீட்டில் உள்ள அனைவரும் காவேரி கந்தனை அழைத்துக் கொண்டு எங்கே செல்கிறார் என்று எண்ணினார்கள் ஆனால் சுந்தரி மட்டும் காவேரி எங்கு செல்கிறார் என்பதை அறிவர் அப்படி காவேரி  தனது கணவன் கந்தனை அழைத்துக்கொண்டு எங்கு செல்கிறார் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 111”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *