Skip to content
Home » மகாலட்சுமி 114

மகாலட்சுமி 114

மகா தனது பெரியம்மா காவேரியை தன்னை இங்கிருந்தே பார்த்துக் கொள்வார் என்று எண்ணி தான் அவ்வாறு சொன்னால் காவேரி அதற்கு ஏற்றார் போல மகிழை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வாருங்கள் எழிலும் நிலாவும் அப்ரூவல் வாங்க சென்று வரட்டும் ….

யார் யார் எங்கு செல்ல வேண்டுமோ சென்று வாருங்கள் நான் வீட்டிலிருந்து வீட்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் மகிழுக்கு அப்போதுதான் திருப்தியாக இருந்தது உன்னால் பார்த்துக் கொள்ள முடியுமா டி என்று பாண்டியம்மா கேட்டார் ஏன் என்னால் முடியாதா என்று காவேரி கேட்டார் …

சுந்தரி சிரித்துக் கொண்டே உங்களால் முடியும் நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்கள் என்றால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட பிறகு எப்பொழுது கிளம்ப வேண்டும் என்று கருப்பையா  தாத்தா மகிழிடம் கேட்டார் இன்று இரவே கிளம்ப வேண்டும் இரவே கிளம்பினால் தான் நாளை காலை 10 க்கு அங்கு இருக்க முடியும் என்றான்….

சரி டா சரி நீ மேலே செல் நேரமாகிறது என்றார் மகிழ்  ஒரு நிமிடம் நின்று தனது காவேரி அத்தையை பார்த்துவிட்டு மேலே சென்றான் சுந்தரியும் காவேரி இருந்து பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் கோவிலுக்கு செல்வதற்கு அனைத்தும் எடுத்து வைத்தார் எழிலும் நிலாவும் காலையில் அப்ரூவல் வாங்க கிளம்புவதாக இருந்தது ….

மகிழ் மேலே சென்றவுடன் மகாவை கட்டிக்கொண்டு அழுதான் எனக்கும் தெரியும் இருந்தாலும் பயமா இருக்கு டி ஒன்றுமில்லை எனக்கு  இன்னும் டெலிவரி தேதிக்கு  20 நாட்கள் இருக்கிறது ஒன்றும் பயப்படாதே ஒழுங்காக கவனத்தை வைத்து மீட்டிங்கை நன்றாக முடித்துவிட்டு ஊர் பொதுமக்களுக்கு இருக்கும் பிரச்சினை தீர்த்து விட்டு வா மாமா என்றால் …

அவனும் சரி என்று தலையாட்டிவிட்டு மகாவை கட்டிக்கொண்டு சிறிது நேரம் அவளுடன் படுத்திருந்தான் மகிழ் கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அவளை கட்டி பிடித்துக் கொண்டு அமைதியாக படுத்திருந்தான் பிறகு அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளது வயிற்றிலும் முத்தமிட்டு விட்டு பத்திரமாய் இரு டி என்று சொல்லிவிட்டு இரவு 10 மணிக்கு கிளம்பி விட்டு கீழே இறங்கி வந்தான் …

எழில் வரவேற்பரையில் தான் உட்கார்ந்திருந்தான் வீட்டில் உள்ள  அனைவரும் வரவேற்பு அறையில் தான் இருந்தார்கள் மகிழ் கீழே இறங்கி வந்தவுடன் கருப்பையா தாத்தா  கிளம்பி விட்டாயா மகிழா என்றார் கிளம்பிட்டேன் பையா கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தனது அத்தையை பார்த்து சொல்லிவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அமைதியாக வெளியில் சென்றான் …

அப்போது நிலா தான் மாமா ஒன்னும் இல்ல பெரியம்மா இருக்காங்க பார்த்துக்குவாங்க என்று மகிழை இருக்கி கட்டியணைத்து அனுப்பி வைத்தால் சரி நிலா குட்டி நீ பார்த்து பத்திரமா போயிட்டு வா அப்ரூவல் கிடைச்சதும் நாளைக்கு கன்பார்ம் முடிச்சிட்டு சீக்கிரமா கிளம்பி விடு என்று சொல்லி விட்டு சென்றான் சரி என்று நிலாவும் அனுப்பி வைத்தால்…


மறுநாள் காலையில் எழுந்து காலை 5:00 மணி போல் வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு செல்வதற்கு கிளம்பினார்கள் இப்பொழுது சென்றால் தான் 10 மணியளவில் கோவிலில் இருக்க முடியும் என்பதால் சீக்கிரமாகவே கிளம்பினார்கள் அவர்கள் கிளம்பியவுடன்  எழிலும் நிலாவும் வீட்டிலிருந்து ஆறு மணிக்கு கிளம்பினார்கள் ….


எழில் தனது அத்தையின் அருகில் வந்து நின்றான் நிலா தனது பெரியம்மாவின் கையை பிடித்துக் கொண்டு பெரியம்மா என்று நின்றாள் நீ போய்ட்டு வா நிலா நீ போற காரியம் நல்லபடியா முடி நான் நீங்கள் வரும் வரை வீட்டை பாத்திரமாக பார்த்து கொள்கிறேன் என்றார் எனக்கு பார்த்து கொள்ள தெரியும் என்றார் சரி பெரியம்மா என்று அவரது நெற்றியில் முத்தம் வைத்து விட்டு கிளம்பினால்…..


எழிலும் தனது அத்தையை பார்த்துவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான் வீட்டில் உள்ளவர்களும் ஒரு வண்டி ஏற்பாடு செய்து அவர்களது குலதெய்வ கோவிலுக்கு கிளம்பினார்கள் 4 மணி நேரம் செல்லக்கூடிய தூரத்தில் அவர்களது குலதெய்வ கோவில் இருந்ததால் சுந்தரி போகும் போது அவளை பார்த்துக்கோங்க போயிட்டு சீக்கிரமாக சாமியா தரிசனம் செய்துவிட்டு கிளம்பி வரோம் என்றார்….

நான் இங்கே தான் இருக்கேன் சுந்தரி நீ ஒன்றும் கவலைப்படாதே உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா பொறுமையா கோவிலுக்கு போற பொறுமையா சாமி தரிசனம் பண்ணிட்டு வா என்றார் சரி அண்ணி என்று விட்டு கிளம்பினார் வீட்டில் அனைவரும் காவேரியை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு மகாவை பார்த்தார்கள் மகா மொட்டை மாடியில் இருந்து அனைவரையும் பார்த்தால் ….

அனைவரையும் பார்த்து சிரித்தாள் அனைவரும் மகாவிடமும் தலையாட்டிவிட்டு சென்றார்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டார்கள் கோவிலில் அவர்கள் பங்காளி வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் சுந்தரி மகாவிற்கு பதில் பொங்கல் வைத்தார்கள் அனைத்து சாமான்களும் அவர்களே வாங்கி இருந்தார்கள் சுந்தரி கையால் கொடுக்க மட்டும் செய்யப்பட்டது….

எழில் நிலா இருவரும் அப்ரூவல் வாங்குவதற்கு உள்ளே சென்று இருந்தார்கள் மகிழும் மீட்டிங்கில் இருந்தான் முத்துவும் தன் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சிலரை பார்க்க சென்றிருந்தான்  இந்த தண்ணீர் பிரச்சினை காரணமாக தான் காவேரி வரவேற்பரையில் உட்கார்ந்து கொண்டு மொட்டை மாடியையே பார்த்துக் கொண்டிருந்தார் ….

மகா தான் தனது பெரியம்மாவை போய் பார்க்கலாம் மேலே உட்கார்ந்து இருப்பதால் ஒன்றும் பயனில்லை என்று எண்ணிவிட்டு சரி கீழே பூந்தோட்டத்தில் சிறிது நடை பழகலாம் என்று படி இறங்கி வந்தால் தனது பெரியம்மா வரவேற்பு அறையில் உட்கார்ந்து மாடி படியையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவரை பார்த்துக்கொண்டே மகா மாடிப்படி இறங்கி வந்தால் ….


அவரைப் பார்த்துக் கொண்டே வந்ததால் படிக்கட்டுகளை கவனிக்காமல் கால் இடரி கீழே விழுந்தால் மகா என்று அவர் கத்திக்கொண்டே வந்தார் மகா வேந்தா என்று கத்திக்கொண்டே மாடி படிகளில் உருண்டு கொண்டே கீழே வந்து விழுந்தால் மகா மகா என்று கத்தினார் அவள் வாயில் வெந்தா என்று மட்டும் தான் முனகினால் மகா என்று அவளது தாடையில் தட்டினார்…..

அவள் முனகி கொண்டே இருந்த உடன் வேகமாக எழுத்து போன் எங்கு இருக்கிறது என்று தேடி எடுத்து எழிலுக்கு அழைத்தார்  போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது நிலாவிற்கு அழைத்தார் அவளது  போனும் சுவிட்ச் ஆப் என்று வந்தது பிறகு மகிழுக்கு அழைத்தார் அவனது போன் ரிங்காகி கட் ஆகியது மீட்டிங் சென்றதால் போனை சைலண்டில் போட்டிருப்பான் என்று எண்ணிவிட்டு பிறகு  வீட்டில் உள்ள அனைவருக்கும் அழைத்தார் …..

கோவிலுக்கு சென்று இருந்த இடத்தில் மழை பெய்து இருந்ததால் நெட்வொர்க் கிடைக்காமல் அனைவருக்கும் நெட்வொர்க் பிசி என்று வந்தது இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் முத்துக்கு அழைத்தார்  அவனும் ஒரு மீட்டிங்கில் இருந்தான் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியாக கயல் என்னை தேடி எடுத்து கயலுக்கு அழைத்தார் …

கயல் தனது குழந்தையை கொஞ்சி கொண்டு  இருந்தால் அவள் அவர்கள் வீட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தால் அவளது போன் அவர்கள் வீட்டு அறையில் இருந்தது அன்புதான் கயல் உனக்கு போன் வருகிறது உன்னுடைய அம்மா என்று கத்திக் கொண்டே எடுத்துக் கொண்டு கொடுத்தான் …


என்ன என்னுடைய அம்மாவா என்று கேட்டுக்கொண்டே போனை பிடுங்கி அம்மா என்றால் அந்த பக்கம் காவேரி கத்தினார் அவளுக்கு வலி வந்து விட்டது பணிக்குடம் வேறு உடைந்து விட்டது என்று கத்தினர் அந்தப் பக்கம் மகா வேந்தா வேந்தா என்று அழும் குரலும் கயலுக்கு கேட்டது கயல்  வேகமாக குழந்தையாய் தனது அத்தையின் கையில் கொடுத்துவிட்டு அத்தை  மகா கீழே வந்துட்டா அவளுக்கு வலி வந்துருச்சு என்று சொன்னவுடன் அம்பிகாவும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு வேகமாக கத்தினார் ….


ஏன் வீட்டு பிள்ளையை நன்றாகக் வை சாமி ஒத்தைக்கு மூன்று உசுர இருக்க என்று அத்தை ஒன்றும் இல்லை என்று தனது அத்தையின்  கையை பிடித்து அழுத்தம் கொடுத்து விட்டு அன்புவை அழைத்தால் அன்பு மேல் சட்டை போட்டுக் கொண்டு வீட்டில் இருந்த லோயர் உடன் வந்தான்  வரும்போது உன் கணவனை அழைத்துக் கொண்டு வா என்று சொல்லியிருந்தார் காவேரி வேகமாக கயலும் அன்புவும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரை மணி நேரத்தில் வர வேண்டிய வீட்டிற்கு அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் வீட்டில் இருந்தார்கள்…..


காரை அவர்கள் வீட்டு வாசலுக்கு அருகிலே அன்பு நிறுத்திவிட்டு வேகமாக கீழே இறங்கி ஓடினான் அன்பு உள்ளே சென்று விட்டான் ஒரு நிமிடம் அமைதியாக மகா பார்த்துவிட்டு நின்று விட்டான் காவேரி அன்புவை பார்த்துவிட்டு பனிகுடம்  உடைந்து விட்டது என்றார் அன்பு தனது அத்தையை பார்த்துவிட்டு அமைதியாக மகாவை தூக்கினான் மகாவிற்கு தேவையான அனைத்தும் எடுத்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டான் ….



மகா அப்பொழுது கூட சிரித்துக் கொண்டே எழில் அறையில் அனைத்தும் இருக்கிறது என்றவுடன் காவேரி வேகமாக சென்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார் முதலில் தனது மாமியார் காவேரியை காரில் உட்கார வைத்துவிட்டு மகாவின் தலையை அவரது மடியில் வைத்துவிட்டு கயலை உட்கார வைத்து கயலின் மடியில் மகாவின்  காலடியை எடுத்து வைத்தான் பிறகு கார் கதவை வேகமாக சாற்றிவிட்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருத்துவமனைக்கு சென்றான் ….



வேகமாக அவனால் முடிந்த அளவிற்கு ஓட்டினான் வேகமாக காரை நிறுத்திவிட்டு கயலை தள்ளி விட்டுவிட்டு மகாவை வேகமாக தூக்கிக் கொண்டு சென்றான் லதா ஆன்ட்டி இருக்கும் மருத்துவமனைக்கு தான் அழைத்து சென்றான் மருத்துவர் லதா தான் காவேரி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் அவள் மூணு உசிராக இருக்கிறாள் அவள் வீக்காக இருக்கிறாள் என்றும் உனக்கு தெரியும் தானே…

இப்படித்தான் கவனக்குறைவாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா மகிழ் எழில் எங்கே என்றார் இருவரும் இல்லை என்றவுடன்  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அனைவரையும் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லியும் இவ்வளவு மெத்தனமாக  இருக்கிறீர்கள் இதுதான் நீங்கள் அவளை பார்த்துக் கொள்ளும் லட்சணமா அப்பொழுது அன்பு தான் டாக்டர் ஒரு நிமிடம் என்றான் ….


நீ யார் என்று கேட்டார் கயல் என்னுடைய கணவன் என்றால் அப்போது அன்பு தான் இவர்கள் இருவரும் பயந்து விடுவார்கள் என்பதால் நான் ஒரு விஷயத்தை சொல்லவில்லை மகாவிற்கு ரத்தமும் வர ஆரம்பித்துவிட்டது நான் அவளை இப்போது தூக்கிக்கொண்டு வரும் போது தான் பார்த்தேன் என்றவுடன் காவேரியும் கயலும் அதிர்ச்சியாக பார்த்தார்கள் சரிப்பா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டு உள்ளே சென்றார் ….


மகாவை டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு அவளுக்கு படியில் உருண்டு வந்ததால் மகாவிற்கு அடிவயிற்றில் வலி அதிகமாக பட்டு இருக்கிறது இதுதான் அவரைப் பார்த்துக் கொள்ளும் லட்சணம் வேறு  என்று காவேரியை வெளியில் வந்து திட்டி விட்டு இதில் கையெழுத்து போடு அவளுக்கு ஆப்ரேஷன் தான் செய்யணும் சுகப்பிரசவம் எல்லாம் பார்க்க முடியாது என்றார் …


காவேரி அய்யோ என்றார் பிறகு அவளுக்கு தான் வலி வந்து விட்டதே என்றார் அவளுக்கு பனிகுடமும் உடைந்து விட்டதே  என்றார் அவளுக்கு பனிகுடமும் உடைந்து விட்டது தான் வலியும் வந்து விட்டது தான் ஆனால் அடிவயிற்றில் அதிக வலி இருக்கிறது நார்மல் டெலிவரிக்கு வெயிட் பண்ணினால் மூன்று உசுருக்குமே ஆபத்து ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் இதில் கையெழுத்து போடு என்றார் ….

காவேரிக்கு கைகள் உதறியது அழுகையாக இருந்தது அன்பு தான் நான் போடுகிறேன் என்றான் நீ யாருப்பா என்ற உடன் நான் அவளுடைய மாமா தானே நான் போடுகிறேன் என்றான் சரி என்று விட்டு அன்பு கையெழுத்து போட்டவுடன் லதா அதை வாங்கிக் கொண்டு ஆப்ரேஷன் செய்வதற்கு உள்ளே சென்ற சென்றார் ….


மகாவிற்கும் அவளது குழந்தைகளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகா குழந்தையை பெற்றெடுப்பாளா வீட்டில் உள்ள அனைவருக்கும்  மகா கீழே விழுந்தது தெரிந்து எப்பொழுது வருவார்கள் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….

அன்புடன்

❣️தனிமையின் காதலி ❣️

இன்னும் ஒன்று இரண்டு பதிவுகளில் கதை முடிந்துவிடும் வாசித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ..

மிக்க நன்றி🙏

1 thought on “மகாலட்சுமி 114”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *