லதா ஆன்ட்டி அன்புவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு மகாவிற்கு ஆப்ரேஷன் செய்ய உள்ளே புகுந்தவுடன் மகிழ் தனது போன் ரொம்ப நேரமாக வைப்ரேஷன் ஆகி கொண்டிருந்தவுடன் போனை எடுத்துப் பார்த்தான் தனது அத்தையிடம் இருந்து போன் வந்திருக்கிறது என்றவுடன் வேகமாக மீட்டிங்கில் இருந்து கேட்டுவிட்டு வெளியே வந்து தனது அத்தைக்கு அழைத்தான்……
அவர் மகிழ் என்று கத்தியவுடன் அத்தை என்று அழுதான் மகா என்னை பார்த்து கொண்டே கீழே இறங்கி வந்ததால் கீழே விழுந்து விட்ட டா என்றவுடன் அத்தை நான் வரேன் என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் பிறகு மிட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று விவரத்தையும் சொல்லி விட்டு என்னால் இதற்கு மேல் கன்டினியூ பண்ண முடியாது என்றும் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினான் ….
அதேபோல் எழிலும் நிலாவும் அப்ரூவல் வாங்கிவிட்டு வெளியில் வந்து போனை சுவிட்ச் ஆஃப் இல் இருந்து எடுத்தார்கள் இருவருக்கும் ஒரே போல் காவேரியிடம் இருந்து போன் வந்திருப்பது போல் மெசேஜ் வந்தது வேகமாக தனது அத்தைக்கு போன் செய்தான் எழில் என்று கத்தியவுடன் அத்தை என்றான் அவர் விவரத்தை சொன்ன உடன் நிலாவும் நானும் சீக்கிரம் வருகிறோம் என்று சொல்லிவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு அடித்து பிடித்து இருவரும் கிளம்பினார்கள்….
கோவிலுக்கு சென்றவர்களும் தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் குலதெய்வ கோவில் உள்ள ஊரை விட்டு வெளியில் வந்தவுடன் வேணியின் போனுக்கு மெசேஜ் வந்து கொண்டே இருந்தவுடன் போன் வந்து கொண்டே இருப்பதால் போன் எடுத்துப் பார்த்தால் அவளுக்கு தனது மாமியார் காவேரியிடம் இருந்து 50 க்கு மேற்பட்ட போன் கால் வந்திருப்பது போல் மெசேஜ் வந்தவுடன் சுந்தரியிடம் வந்து அம்மா காவேரியத்தை இடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது என்றால்…..
பிறகு சுந்தரியும் தனது போனை எடுத்து பார்த்தார் அவருக்கும் போன் வந்திருக்கிறது என்றவுடன் சுந்தரி வேகமாக காவேரி போன் போட்டு அண்ணி என்றார் சுந்தரி அவள் கீழே விழுந்துட்டாடி என்றவுடன் வேகமாக சுந்தரி கத்த ஆரம்பித்தார் அவர் சொன்ன பிறகு முகில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் டிரைவரிடம் சென்றான் …
அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் வேகமாக போகனும் நான் ஓட்டு கிறேன் என்றான் தம்பி நீ ஓட்டுவியா என்றார் உதிரன் தான் அவன் நன்றாகவே ஓட்டுவான் அவன் இந்த ஃப்பில்டில் இருக்கிறான் ப்ளீஸ் என்றவுடன் அவரும் ஒற்று கொண்டார் பிறகு முகில் உட்க்கார்ந்து ஒட்ட ஆரம்பித்தான் நான்கு மணி நேரத்தில் செல்ல வேண்டிய ஊருக்கு இரண்டு மணி நேரத்தில் அடித்து பிடித்து சென்றான் முகில் ஓட்ட ஆரம்பித்தவுடன் வேனியையும் இனியையும் தனது தாத்தா பாட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இருவரையும் பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டான் ….
வீட்டில் உள்ள அனைவரையுமே கெட்டியமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டான் அனைவரும் கெட்டியமாக பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினார்கள் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் பாண்டியம்மா பாட்டி வேகமாக கத்தினர் தாயே உன்ன நம்பி தானே பார்க்க வந்தோம்….
என் வீட்டு பிள்ளைக்கும் இரண்டு வாரிசுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக இந்த உலகத்தை பார்க்கணும் இப்படி பண்ணிட்டியே அவங்க மூணு பேரையும் காப்பாத்து தாயே என்று வேண்டினார் வீட்டில் உள்ள அனைவரும் வேண்டினார்கள் சுந்தரிக்கு உடல் நடுங்கியது படபடப்பாக இருந்தது அவர் அழுது கொண்டு வந்தார் …
உதிரன் தனது அத்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டே வந்தான் முகில் வேகமாக வந்தவுடன் சுந்தரி முதலாவதாக கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே ஓடினார் சுந்தரி அண்ணி மகா என்றவுடன் காவேரி சுந்தரியின் காலிலே விழுந்துவிட்டார் அண்ணி என்று சுந்தரி நகர்ந்தார்….
என்ன நம்பி தாண்டி ஒப்படைச்சிட்டு போன நான் அவளை பத்திரமா பாத்துக்காம போயிட்டேன் டி என்று அழுதார் நீங்க அவளை நன்றாக பார்த்துக்கொள்ள வில்லை என்று சொல்லாதீங்க அவ ஏதோ ஒரு நினைப்புல நடந்து வந்திருப்பா உங்க மேல தப்பு சொல்லாதீங்க என்றார் அவ என்னை பார்த்துட்டே தான் டி நடந்து வந்தால் அப்பொழுது தான் அவள் கால் இடரி என்று தலையில் அடித்துக் கொண்டு அழுத்தார்…
ஒன்னும் இல்ல அண்ணி என்று விட்டு டாக்டர் என்ன சொன்னார்கள் என்று கேட்டார் அன்பு தான் அதன் பிறகு அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான் கயல் அன்பு இருவரும் இருப்பதை அதன் பிறகு தான் வீட்டில் உள்ள அனைவரும் பார்த்தார்கள் பிறகு அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்கள் …..
மகிழ் அடித்து பிடித்து ஓடி வந்தான் தனது அத்தையை பார்த்துவிட்டு தனது தாயை கட்டிக்கொண்டு அழுதான் டேய் ஒன்றும் இல்லைடா என்று சொல்லிவிட்டு அவரும் அழ ஆரம்பித்தார் அப்பொழுது அன்பு தான் அண்ணா ஒன்னும் ஆகாது என்றான் பிறகு அன்பு மகிழிடம் நடந்த அனைத்தையும் சொன்ன பிறகு அவனை கட்டிக்கொண்டு அழுதான் மகிழ் பித்து பிடித்தது போல் உட்கார்ந்து இருந்தான் …..
ஆப்ரேஷன் ஆரம்பித்து விட்டார்களா என்று கேட்டதற்கு இன்னும் இல்லை இனிமேல் தான் அனைத்தும் ரெடி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்கள் நர்ஸ் மகிழ் நான் மகாவை பார்க்க முடியுமா என்று கேட்டான் அதற்கு நர்ஸ் முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் அடுத்த நான்கு மணி நேரத்தில் எழில் நிலா இருவரும் அடித்து பிடித்து வேகமாக ஓடி வந்தார்கள் …
மகிழ் தனது தம்பியை பார்த்துவிட்டு அவனது தாடையிலே ஒன்று அறைந்தான் எழில் அமைதியாக வாங்கி கொண்டு நின்றான் பிறகு மகிழ் எழிலை கட்டிக் கொண்டு அழுதான் எழில் எனது அண்ணனையும் தள்ளிவிட்டு வேகமாக ஓடி வந்தான் லதா அப்பொழுதுதான் வெளியில் வந்தார் டேய் வந்து விட்டாயா உன்னை பார்க்க வேண்டும் என்று தான் அவள் கத்திக் கொண்டிருக்கிறாள்….
நீ இல்லாமல் ஆப்ரேஷன் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறாள் என்றவுடன் எழில் நான் பார்க்க வேண்டும் என்றான் மகிழும் முன்னாடி வந்தான் மகிழ் இல்லடா நீ போ என்றான் நீ போயிட்டு வா என்றவுடன் எழில் உள்ள சென்றான் உள்ளே சென்றவுடன் மகா மயங்கி இருந்தால் அவளது கன்னத்திலே இரண்டு முறை தட்டினான் லட்சு லட்சு இங்க பாரு டி உன்னோட வேந்தா வந்து இருக்கேன் என்றான்…
டேய் அவள் மயங்கமானால் தான் ஆபரேஷன் செய்ய முடியும் என்றவுடன் வேகமாக அவளது கையை கிள்ளி விட்டு அவளது தாடையில் இன்னும் இரண்டு மூன்று அடிகளை அடித்தான் டேய் என்னடா செய்கிறாய் என்று கத்தினர் ஆன்ட்டி என்று வேகமாக ஆடித் தொண்டையில் இருந்து கத்தி விட்டு மகா மகா லட்சு என்று கத்தினான் அவன் பேச பேச அவன் தட்ட தட்ட மகாவிற்கு லேசாக முழிப்பு வந்து கணை திறந்து பார்த்தால் …
மகா வேந்தா என்று அழைத்தவுடன் வேகமாக எழுந்து வெளியே சென்று மகிழை கையோடு அழைத்துக் கொண்டு வந்தான் மகா மகிழைப் பார்த்தால் மகிழ் மகாவின் காலில் விழுந்து என்னை மன்னிச்சிடு டி மயிலு என்றான் அவளது பாதத்திலே முத்தம் வைத்தான் மகா மேலே வர சொல்லி கை காண்பித்துடன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தான் மாமா என்று மகிழின் கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு எழில் கையிலும் அழுத்தம் கொடுத்தால் ….
லதா தான் கத்தினார் வெளியே போங்கடா அவளுக்கு ஆப்ரேஷன் செய்யணும் என்ற பிறகு இருவரும் வெளியே வந்து விட்டார்கள் பிறகு அவளுக்கு ஆபரேஷன் நடந்தது அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தையின் சத்தம் கேட்க ஆரம்பித்தது முதலில் ஒரு குழந்தை கத்தியது பிறகு அடுத்த இரண்டு நிமிடத்தில் இன்னொரு குழந்தையின் அழுகையும் கேட்டது …
பாண்டியம்மா பாட்டி இறைவனிடம் கையெடுத்து கும்பிட்டார் குழந்தைகளும் என்னுடைய பேத்தியும் நல்ல முறையாக இருக்க வேண்டும் என்று வேண்டினார் இரண்டு குழந்தையும் பிறந்த உடன் மகாவிற்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது குழந்தையை வெளியே எடுத்துக் கொண்டு வந்து நர்ஸ் கொடுத்தார் முதலில் பெண் குழந்தையும் இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தது …
வெளியே எடுத்துக் கொண்டு வந்து விட்டு பெண் குழந்தை ஒன்று ஆண் குழந்தை ஒன்று என்றார் வீட்டில் உள்ள அனைவரும் மகா நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் குழந்தையை யார் வாங்குகிறீர்கள் என்று கேட்டார்கள் அனைவரும் எழிலை பார்த்தார்கள் எழில் ஒரே வார்த்தையாக குழந்தை நன்றாக இருக்கிறதா ஒன்றும் பிரச்சனை இல்லையே தாயிடமே கொண்டு செல்லுங்கள் மகா எப்படி இருக்கிறாள் என்று கேட்டான் ….
அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது டாக்டர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவுடன் சுந்தரி வேகமாக கத்த ஆரம்பித்தார் எழில் தனது தாயின் அருகில் வந்துவிட்டு அவரது கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு இப்பொழுது எதுக்கு கத்துற என்று வேகமாக கத்தினான் பிறகு காவேரி தனது தலையிலே அடித்துக் கொண்டார் ….
எழில் தனது அத்தையை பார்த்து முறைத்தவுடன் அவரும் அமைதியாகிவிட்டார் பிறகு லதா வெளியில் வந்தார் எழில் வேகமாக லதாவின் அருகில் போய் நின்றான் டேய் அவளுக்கு மூச்சு திணறுகிறது ஆக்சிலேட்டர் வைத்திருக்கிறேன் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க வேண்டும் என்று விட்டு சென்றார் எதுவாக இருந்தாலும் ஒரு மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் ….
அந்த ஒரு மணி நேரமும் வீட்டில் உள்ள அனைவரின் உயிரும் கையில் இல்லை நர்ஸ் லதாவிடம் வந்து டாக்டர் யாரும் குழந்தையை இதுவரை பார்க்கவில்லை என்றவுடன் குழந்தையை இன்குபேட்டரில் வையுங்கள் அனைவரும் அதன் பிறகு பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் நிலா திக் பிரம்மை பிடித்தது போல் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்தால் அவளுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் …..
வேணி அவளது அருகிலே உட்கார்ந்து இருந்தால் நிலாவின் கை வேணி கையுடன் இணைக்கப்பட்டிருந்தது ஆனால் நிலா இங்கு நடக்கும் எதையும் காதில் வாங்கும் படியாக இல்லை பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவளுக்கு மூச்சு அதிகமாக வாங்கிறது என்று லதா வந்து வெளியே சொன்னார் எழில் icu உள்ளே வந்தான் நர்ஸ் சார் அங்கு எல்லாம் போக கூடாது என்று கத்தி கொண்டே நர்ஸ் வந்தார்கள் …
எழில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று லதா கத்தினார் நான் அவளிடம் பேச வேண்டும் என்றான் டேய் இது ஆபரேஷன் தியேட்டர் என்றார் எனக்கு தெரியும் என்று கத்திவிட்டு லட்சு என்று கத்தினான் டேய் பேசக்கூடாது என்றார் அவளுக்கு மூச்சு வாங்குகிறது இப்பொது அவள் பேச கூடாது என்றார் எழில் ஆண்டி நீங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறீர்களா என்று கத்திவிட்டு இங்கு பாரு டி உன்னை நம்பி வெளியே மூணு உசுரு இருக்கு மறந்துடாதே…..
உன்னுடைய மூத்த மகள் பித்து புடிச்சது போல உக்கார்ந்து இருக்கா அவளை பற்றி யோசி இப்ப ரெண்டு புள்ளைய பெத்து போட்டு இருக்க மறந்துடாத உன் புருஷன் அப்படியே உட்கார்ந்து இருக்கான் என்று கத்தினான் இப்ப நீ எந்திரிச்சு வரலைன்னா என்ன செய்வேன்னு தெரியாது இன்னும் அரை மணி நேரத்துல உனக்கு ஒன்னும் இல்லன்னு வந்து லதா ஆன்ட்டி சொல்லணும் என்று அவளது தாடையில் லேசாக தட்டிவிட்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு வெளியே சென்றான் ….
மேம் என்று சுற்றி இருந்த நர்சுகள் எல்லாம் அழைத்தார்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு ட்ரீட்மென்ட் பாக்க ஆரம்பித்தார் அப்பொழுது மகாவிற்கு பல்ஸ் ஏறி இறங்கி கொண்டு இருந்தது இப்படியே கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருந்தது லதாவிற்கே சிறிது பயம் எடுக்க ஆரம்பித்துவிட்டது எங்கு மகாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எண்ணினார் வீட்டில் உள்ள அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தார்கள் …..
ஆனால் எழில் நம்பிக்கையாக இருந்தான் என்னுடைய லட்சுவிற்கு ஒன்றும் ஆகாது என்று நம்பினான் வீட்டில் உள்ள அனைவரும் பயப்படும் படியாக மகாவிற்கு ஏதாவது ஆகுமா இல்லை எழிலின் நம்பிக்கை பலிக்குமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
இன்னும் ஏழு அத்தியாயங்களில் கதை முடிந்து விடும் தினமும் எத்தனை யூடி தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 7 அத்தியாயங்களையும் தினம் ஒன்று போடுவதா இல்லை எப்படி என்று உங்களின் கருத்துக்களை என்னுடன் சொல்லுங்கள் இல்லை என்றால் நாளைக்குள் முடித்து விடலாம் என்று எண்ணினீர்கள் என்றாலும் உங்களது பதிலை கமெண்டில் சொல்லுங்கள்..
SUPER EPI