Skip to content
Home » மகாலட்சுமி 118

மகாலட்சுமி 118

காவேரி அனைவரையும் ஒரு நாள் இரவு வேளையில் அவர்கள் வீட்டு வரவேற்பு அறையில் உட்கார வைத்தார் அனைவரும் எதற்காக காவேரி இந்த நேரத்தில் அழைத்து இருக்கிறார்கள் என்று எண்ணி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் இரவு 7 மணி இருக்கும் எழில் தான் எதற்கு அத்தை அனைவரையும் அழைத்துவிட்டு அமைதியாக எங்களது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான் ….

தனது மடியில் வெண்பாவையும்  அதாவது அவன் விருப்பமாக அழைக்கும் அச்சுமாவை தனது மடியில் வைத்து கொண்டு கேட்டான் நிலாவும் அச்சுமாவே தான் கொஞ்சிக் கொண்டே இருந்தால் முழு நேரமும் வெற்றிமாறன் இனி வேணி கையில் இருந்தான் இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்பொழுது பெண் குழந்தை எழில் நிலாக்கையிலும் ஆண் குழந்தை வேணி இனி கையிலும் இருந்தது மகாவிற்கு குழந்தை பிறந்து ஏழங்காப்பு இட்டு கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு தான் காவேரி அனைவரையும் அழைத்து  வரவேற்பறையில் உட்கார வைத்திருந்தார்….



அப்பொழுதுதான் எழில் அவ்வாறு கேட்டான். அப்பொழுது காவேரி எழிலை முறைத்து விட்டு நான் உங்கள் அனைவரும் இடமும் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் அதற்காகத்தான் என்றார் அது எங்களுக்கும் தெரிகிறது வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து இருக்கிறார்கள் என்றால் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று அது என்ன என்று தான் கேட்கிறேன் என்றான் …

ரொம்ப நேரமாக இப்படியே உட்கார வைத்துவிட்டு எங்களது முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றான் அவன் வைத்திருக்கும் குழந்தையை நிலா கையில் கொடுத்துவிட்டு தனது அத்தையின் அருகில் வந்து நின்றான் வீட்டில் உள்ள அனைவரும் அவனை முறைத்தார்கள் பிறகு காவேரி தான் சொல்ல ஆரம்பித்தார் .. மகா மகிழ் இருவருக்கும் திருமணம் ஆகிய பிறகு அவர்கள் இருவரையும் பொங்கல் வைக்க குலதெய்வ கோயிலுக்கு அழைத்து சென்றிருக்க வேண்டும் …


அப்போது அவர்கள் இருவரும் தள்ளிப் போட்டார்கள் அதன் பிறகு நம்மால் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லை இப்பொழுது மகாவிற்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் சூழ்நிலையின் காரணமாக வீட்டில் உள்ள ஒரு சிலர் மட்டும் குலதெய்வ கோவில் சென்று வந்தார்கள் இப்போது குழந்தையும் நல்ல முறையில் பிறந்து விட்டது மகாவிற்க்கும் இப்பொழுது ஒன்றும் பிரச்சனை இல்லை நன்றாக இருக்கிறாள் நாம் குடும்பத்துடன் குலதெய்வ கோவில் சென்று வரலாம் …

பொங்கல் வைத்துவிட்டு வரவேண்டும் அல்லவா என்றார் மகா ஒரே வார்த்தையாக குடும்பமாக தானே பெரியம்மா குடும்பமாக என்றால் என்ன அர்த்தம் இந்த வீட்டில் பிறந்த பெண்களும் இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்களும் சேர்ந்து தானே பொங்கல் வைக்க வேண்டும் என்று கேட்டால் காவேரி மகாவை பார்த்து சிரித்தார் நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரிகிறது மகா நான் உன்னுடைய அக்கா கயலையும் தான் அழைக்கப் போகிறேன் என்று சொல்லி சிரித்தார் ….


வீட்டில் உள்ள அனைவரும் காவேரியை அமைதியாக பார்த்தார்கள் பிறகு காவேரி மகாவையே பார்த்துக்கொண்டு தனது போனை எடுத்து கயல் எண்ணுக்கு அழைத்தார் அமைதியாக கயல் எடுத்து ஹலோ என்றால் என்னடி ரொம்ப நாட்களுக்கு பிறகு அம்மா போன் செய்கிறேன் அம்மா என்று அழைக்காமல் ஹலோ என்று சொல்கிறாய் என்று கேட்டார் கயலுக்கு அந்த பக்கம் அழுகையாக இருந்தது ….

அழுகையுடனே என்னமோ நீ தினமும் போன் போட்டு பேசுவது போல் அம்மா என்று அழைக்கவில்லை என்று சொல்கிறாய் போனை எடுத்தால் ஹலோ என்று தான் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காவேரிக்கு இந்த பக்கம் சிரிப்பாக இருந்தது லேசாக சிரித்து விட்டு சரி உனக்கு என் மேல் கோபமா என்று கேட்டார் கயல் அழுகையுடனே கோபம் எல்லாம் இல்லை நான் செய்த தவறுக்கான தண்டனை தானே ஆனால் உனக்கு நான் என்னையோ என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை தானே என்று கேட்டால்….

அவருக்கும் வலிக்கத்தான் செய்தது அவருக்கும் ஆசை தான்  அவர் தன் மகளையோ தன் மகள் வயிற்று பேர புள்ளையையோ பார்க்க கூடாது என்று எண்ணவில்லையே ஆனால் அவள் அப்பொழுதே மகா மகிழை விரும்புகிறாள் என்று கூட சொல்லி இருக்கலாமே நான் எப்படியாவது இவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைத்திருப்பேனே தன்னுடைய மகளும் இப்படி யாரும் இல்லாத அனாதை போல் திருமணம் செய்திருக்க வேண்டாமே என்று மனதில் எண்ணினார் ..

பிறகு அமைதியாக இருந்தார் கயல் தனது தாய் அமைதியாக இருந்த உடன் அவரும் வருந்துகிறார் என்று விட்டு சரிமா சொல்லு மகா குழந்தை எல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டால் ஏன் நீ அவளிடமும் பேசாமல் தான் இருக்கிறாயா குழந்தையை பற்றி வீட்டில் உள்ள யாரிடமும் விசாரிக்காமல் தான் இருக்கிறாயா என்று கேட்டார் கயல் சிரித்துவிட்டு சரி  மா என்றால் சரி டி நாளை காலை நீயும் உன் கணவனும் உனது மாமியார் மாமனாரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வா. …

நேரில் வந்து தான் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் இப்பொழுது சூழ்நிலை போனில் பேச வேண்டி இருக்கிறது என்றார் அப்படி என்ன அம்மா சூழ்நிலை என்று கேட்டால் காவேரி லேசாக சிரித்து விட்டு நாளை காலை நாம் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு வரலாம் நம் குடும்பத்துடன் சென்று ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது என்றார் ….



கயலுக்கு லேசாக கண்கள் கலங்கியது அப்போது அம்பிகா கயல் என்று கயலின் தோளில்  கை வைத்தார் ஒன்றுமில்லை அத்தை என்று சொல்லிவிட்டு தனது கண்ணீரை துடைத்தால் அப்பொழுது ஃபோனில் இருந்த காவேரி கயலிடம் கயல் கயல் என்று இரண்டு முறை அழைத்தார் சொல்லு மா என்றால் தனது கண்ணீரை துடைத்திவிட்டு உனது மாமியார் அருகில் இருந்தால் அவரிடம் போனை கொடு என்றார் ….

அம்மா என்றால் கொடு டி என்றவுடன் அம்பிகாவிடம் நீட்டினால் அம்பிகா யாரு கயல் என்று கேட்டார் கயல் என்னுடைய அம்மா என்றவுடன்  உண்மையாகவா என்றார். ஆமாம் அத்தை என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னவுடன் அம்பிகா ஃபோன் வாங்கி பேச ஆரம்பித்தார் அண்ணி நல்லா இருக்கீங்களா என்று கேட்டார் நான் நல்லா இருக்கேன் அம்பிகா நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் …

நாளை காலை கோவிலுக்கு ஒன்றாகச் சென்று பொங்கல் வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் நாளையே செல்லாலாம் என்று முடிவு செய்ததால் தான் இப்பொழுது தன் வீட்டில் உள்ளவர்களிடம் பேசினேன் அதனால்தான் நேரில் வர முடியவில்லை. தப்பாக எடுத்துக் கொள்ளாதே அண்ணனிடம் சொல்லிவிடு  என்றார் அம்பிகாவிற்கு லேசாக கண்கள் கலங்கியது…

சிரித்துக் கொண்டே சரி அண்ணி நான் அவரிடமும் சொல்லிவிட்டு நாங்கள் அனைவரும் வந்து விடுகிறோம் என்றார் காவேரிக்கு தனது பேரன் எப்படி இருக்கிறான் என்று கேட்க வேண்டும் போல் தான் இருந்தது ஆனாலும் இதுவரை நேரில் கூட சென்று பார்க்காத குழந்தையை பற்றி விசாரிக்க அவருக்கு கஷ்டமாக இருந்தது அம்பிகாவும் அதை உணர்ந்து போல் சிரித்துக் கொண்டே நம்ம பேரன் நல்லா இருக்கான் அண்ணி நாளைக்கு கோவிலுக்கு வரும் போது  நேரில் பார்ப்பீங்க என்றார் …

காவேரியும் சரி என்று பிறகு அம்பிகா அண்ணி நாங்க வீட்டுக்கு வரல தம்பிக்கு லேசா சளி இருக்கு என்றார் காவேரி சரி அம்பிகா நாங்கள் இங்கிருந்து கிளம்பி விட்டு உங்கள் வீட்டிற்கு வந்து அப்படியே உங்களை அழைத்துக் கொள்கிறோம் என்றார் அம்பிகாவும் சரி என்று விட்டு சிறிது நேரம் கயலிடம் காவேரி பேசிவிட்டு போனை வைத்தார் மறுநாள் காலை 3 மணி அளவில் சுந்தரி எழுந்து கோவிலுக்கு செல்வதற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தார்…..


அவருடன் நிலா வேணி இனி மூவரும் கோவிலுக்கு செல்வதற்கு என்ன தேவையோ அனைத்தும் எடுத்து வைத்தார்கள் மகா ஐந்து மணி போல் எழுந்தால் மகிழ் அப்பொழுது கூட மகவை வெளியில் விடவில்லை ஏற்கனவே அம்மா சொல்லிவிட்டு தான் சென்றார் காலை ஆறு மணிக்கு உன்னை வெளியே விட்டால் போதும் என்று நாம் வீட்டில் இருந்து 7 மணிக்கு தான் கிளம்புகிறோம் பொறுமையாக சென்று பொங்கல் வைத்துவிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றான் …


மகா தனது மகிழ் மாமாவை பார்த்து சிரித்துவிட்டு அவரது நெற்றியில் முத்தம் வைத்து விட்டு அவனை இருக்கி கட்டியணைத்துக் கொண்டு படுத்தால் அப்பொழுது அவர்களது அரை கதவு தட்டப்பட்டது இது யாருடா திறந்திருக்கும் கதவை தட்டுவது என்று எண்ணிக்கொண்டு மகிழ் கதவைத் திறந்தான்  எழில் தான் குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தான் உனக்கு கதவை தட்டும் பழக்கமே இல்லையே என்றான் …

எழில் தனது அண்ணனை பார்த்து முறைத்துவிட்டு குழந்தையை உள்ளே தூக்கிக்கொண்டு வந்து  மகாவின் மடியில் வைத்துவிட்டு அமைதியாக அவர்களது அறையை விட்டு வெளியில் வந்தான் மகிழ் மகாவை பார்த்து சிரித்துவிட்டு அவனும் வெளியில் வந்து தனது தம்பியின் தோளில் கை வைத்தான் டேய் இதற்கு முன்பு அவள் என்னுடைய தோழியாக மட்டும் இருந்தால் அதனால் நான் கதவைத் தட்டமால் வந்தேன் இப்பொழுது இரண்டு குழந்தைக்கு தாய் எனக்கும் நாகரீகம் தெரியும் ….

எனக்கு எப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று என்றான் மகிழ் வேகமாகவே சிரித்தான் இதற்கு முன்பு அவள் என்னுடைய மனைவியாக இருந்தால் என்பது மட்டும் சாருக்கு மறந்து விட்டது போல இடைப்பட்ட கால ஞாபகம் மறதியோ உனக்கு என்று சிரித்தான் எழில் மகிழ் தலையிலே வேகமாக மூன்று கொட்டுகளை கொட்டி விட்டு அவள் உன்னுடைய மனைவியாக இருந்தால் எனக்கு என்ன வந்தது உனக்கு அந்த அளவிற்கு கூடவா நாகரீகம் இல்லை ….

அடுத்தவர்கள் வருவார்கள் என்றால் இல்லை கதவு தாழ்ப்பாள் போட்டு விட்டு பொண்டாட்டியை கொஞ்சம் வேண்டும் என்ற நாகரிகம் கூடவா தெரியாது என்று சிரித்தான் மகிழ் இப்போது எழிலை பார்த்து முறைத்தான் பிறகு சிரித்து விட்டான் மகா இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே குழந்தைக்கு பசியாற்றிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தால் பிறகு சரி டா குழந்தையை வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் இருவரும் நான் குளித்துவிட்டு வருகிறேன் என்றால்…

எழில் மகிழ் இருவரும் மகாவின் கையைப் பிடித்தார்கள் ஒன்றும் வேண்டாம் இன்னும் அரை மணி நேரம் கழித்து குளித்தால் போதும் என்றார்கள் மகா இருவரையும் பார்த்து முறைத்தாள் அப்பொழுது சுந்தரி மேலே வந்தார் மகா அவர்கள் இருவரையும் ஏன் முறைக்கிறாய் நீ இப்பொழுது குளிக்க வேண்டாம் அவர்கள் இருவரும் சொன்னது போல் அரை மணி நேரம் கழித்து தலை குளித்தால் போதும் நான் தலையை காய வைத்து விடுகிறேன் சரியா என்று சொன்னார்….


மகா அத்தை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை மெதுவாக குளித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு தனது இரு மகன்களின் கையிலும் டீயும் மகாவின் கையில் பாலும் வைத்தார் மகா அந்த பாலை பார்த்துவிட்டு முகம் சுழித்துவிட்டு பாலை குடிக்க ஆரம்பித்தால் மகா பெரும்பாலும் பால் குடிக்க மாட்டாள் இப்பொழுது குழந்தைகளுக்காக குடிக்க செய்கிறாள் அதை மகிழ் எழில் இருவரும் எண்ணி சிரித்தார்கள்….

மகா முவரையும் பார்த்து முறைத்தாள் சுந்தரி தனது இரண்டு மகன்களிடமும் சரிடா குழந்தையை கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டு இருந்துவிட்டு அவள் குளிக்கச் சென்றவுடன் நீங்கள் இருவரும் கீழே இறங்கி வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு கீழே படி இறங்கினார் பிறகு அரை மணி நேரம் கழித்து மகிழ் எழில்  இருவரும் அரை மணி மேலே இருந்துவிட்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார்கள் …

மகாவும் வீட்டில் உள்ள அனைவரையும் எண்ணி தனக்காக எந்த அளவிற்கு நடந்து கொள்கிறார்கள் இவர்களுக்காக நான் என்னுடைய காதலை தூக்கி எறிந்தால் கூட தப்பில்லை ஆனால் நான் யாருக்காகவும் என்னுடைய மகிழ் மாமாவை விட்டுத்தர மாட்டேன் என்று மனதில் எண்ணிக் கொண்டே சிரித்துக் கொண்டே குளிக்கச் சென்றாள் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு செல்வதற்கு கிளம்பினார்கள் …

குலதெய்வ கோவிலில் என்னென்ன நடக்கும் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி ❣️

1 thought on “மகாலட்சுமி 118”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *