Skip to content
Home » மகாலட்சுமி 119

மகாலட்சுமி 119

வீட்டிலிருந்து அனைவரும் காலை ஏழு மணி போல் கிளம்பினார்கள் அவர்கள் ஒரு  குலதெய்வ கோவிலுக்கு சென்று சேர்வதற்கு நான்கு மணி நேரம் ஆகியது காலை 11 மணி அளவில் கோவிலுக்குச் சென்று  இறங்கினார்கள் …

அவர்கள் ஏற்கனவே அவர்கள் குலதெய்வ கோவில் உள்ள ஊரில் உள்ள பங்களிகளிடம் சொல்லி இருந்தார்கள் நாங்கள் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் நீங்கள் அனைத்து ஏற்பாடும் செய்து வைத்திருங்கள் நாங்கள் வந்தவுடன் பொங்கல் வைத்துவிட்டு பூஜை ஆரம்பித்து விடலாம் என்று அதன்படி அவர்கள் பங்காளிகளும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்ததால் அவர்கள் வந்தவுடன் பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள் ….

அவர்கள் வீட்டில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு விட்டு கயல் வீட்டிற்குச் சென்று கயலை அழைத்துக் கொண்டு வந்தார்கள் வண்டி கயல் வீட்டின் முன்பு நின்றவுடன் காவேரி முதல் ஆளாக  வீட்டிற்குள் சென்று தனது பேரக் குழந்தையை தனது கையால் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினார் கயலும் அவருடனே ஏறினால் பிறகு கயல் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு வேணியின் பெற்றவர்களை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார்கள் ….


அவர்களும் வந்த உடன் அவர்களையும் அழைத்துக் கொண்டு தான் கோவிலுக்கு செல்கிறார்கள் பிறகு 11 மணிக்கு மேல் இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்களாக மகாவும் சுந்தரியும் பொங்கல் வைத்தார்கள் பிறந்துவிட்டு பெண்களாக கயல் காவேரி கோதை  இனி நால்வரும் பொங்கல் வைத்தார்கள் வேணியையும் சுந்தரி பொங்கல் வைக்க சொன்னார் நீயும் என் வயிற்றில் பிறக்காத பெண்தான் என்று சொல்லி வேணி தனது சுந்தரி அம்மாவை பார்த்து சிரித்துவிட்டு குழந்தையை நானும் நிலாவும் பார்த்துக் கொள்கிறோம்….


நீங்கள் வையுங்கள் அடுத்த வருடம் நான் வைக்கிறேன் என்றால் அவர் அமைதியாக அவளை பார்த்தார் அம்மா நான் கோபித்துக் கொண்டோ வருத்தத்திலோ சொல்லவில்லை என்று அவரது தாடையை பிடித்து சிரித்தால் அவரும் அவள் சொல்லாமல் விட்டதை என்னை சிரித்து விட்டு பிறகு அமைதியாக பொங்கல் வைக்க ஆரம்பித்தார் ஒவ்வொருவரும் பொங்கல் வைத்துவிட்டு பூஜை கூடையை சாமி சன்னதியில் எடுத்துக் கொண்டு சென்று வைத்து பூஜையை ஆரம்பித்தார்கள்…


பூஜைகளையும் முடித்துவிட்டு சாமி தரிசனம் பண்ணிவிட்டு அபிஷேகத்தையும் பார்த்துவிட்டு சாமியை தரிசனம் செய்து விட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து பொங்களையும் அன்னதான சாப்பாட்டையும் சாப்பிட்டார்கள் கோவிலுக்கு வந்திருக்கும் ஒரு சிலருக்கும் பொங்கல் கொடுத்தார்கள் ஏற்கனவே அவர்கள் குலதெய்வ கோயிலில் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ….

அதையும் அந்த ஊரில் உள்ள மக்களும் கோவில் சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு வந்த மக்களும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் அவர்களும் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் அவர்கள் கிளம்புவதற்கு நாலு மணிக்கு மேல் கிளம்புவதாக இருந்தது மூன்று மணி அளவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு மரத்தின் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள் …

அப்பொழுது எழில் அருகில் தாத்தா பாட்டி வந்து நின்றார்கள் என்ன தாத்தா என்று கேட்டான் வீட்டில் உள்ள அனைவரையும் கருப்பையா தாத்தா அழைத்தார் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தார்கள் அப்பொழுது எழில் நிலா இருவரையும் தங்களது முன்பு அருகில் உட்கார வைத்துக் கொண்டு எழில் கையை கருப்பையா தாத்தாவும் நிலா கையை பாண்டியம்மா பாட்டியும் பிடித்துக் கொண்டார்கள்..


நிலா எழில் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை அமைதியாக தங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தாத்தா பாட்டியை பார்த்தார்கள் கருப்பையா தாத்தா தான் பேச ஆரம்பித்தார் நிலாவிடம் நாங்கள் உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் உனக்கும் வயதாகிறது என்று எங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு முத்துவின் அம்மா ராதா வந்து கேட்கும் போது தான் புரிந்தது என்றார்…


அப்படி முத்துவின் அம்மா ராதா என்ன கேட்டார் மூன்று நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு 7:00 மணி போல் முத்துவின் தாய் தந்தை இருவரும் முத்துவை அழைத்துக் கொண்டு மகிழ் வீட்டிற்கு வந்தார்கள் வீட்டில் இருந்து கிளம்பும்போது மகாவையும் குழந்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தான் முத்துவின் பெற்றவர்கள் இருவரும் கிளம்பினார்கள் …

முத்துவையும் உடன் அழைத்து கொண்டு வந்தார்கள் மகிழ் வீட்டிற்குள் வந்தவுடன் அனைவரிடமும் சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது பாண்டியம்மா பாட்டி தான் என்ன டி ராதா இந்த நேரத்தில் மூன்று பேரும் அதுவும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார் நான் வரக் கூடாத அத்தை என்று கேட்டார் நான் எங்க டி வரக்கூடாது என்று சொன்னேன் என்றார்..

இல்லை ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்கு தான் அத்தை என்றார் ரதா  மகிழை பார்க்கவா மகிழ் மகா இருவரும் மேலே இருக்கிறார்கள் என்றார் இல்லை நான் அவர்கள் இருவரையும் பார்க்க வரவில்லை அப்புறம் என்றார் நான் உங்கள் அனைவரையும்  பார்த்துவிட்டு ஒரு விஷயம் கேட்டுவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன் என்றவுடன் என்ன டி அப்படி  என்ன முக்கியமான விஷயம் இந்த நேரத்தில் என்று பாண்டியம்மா கேட்டார் ..

காவேரியும் ராதாவின் அருகில் வந்து என்ன ராதா என்றார் நான் கேட்கிறேன் என்று என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என் மனதில் பட்டதை கேட்கிறேன் முத்துவிற்கு நிலாவை திருமணம் செய்து வைப்பீர்களா முத்துக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது நிலாவிற்கும் திருமண வயது தானே அவளும் படிப்பை முடித்து விட்டால் தானே அவள் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றாலும் படிக்கட்டும் அதில் நான் தலையிட மாட்டேன் …

ஆனால் நிலாவிற்கு முத்துவை பேசலாம் என்று எனக்கு ஒரு ஆசை அதனால் தான் என்றார் வீட்டில் உள்ள அனைவருக்கும் இதற்கு என்ன பதில் சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை அமைதியாக தங்களுக்குள்ளே பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது ராதா தான் மீண்டும் கேட்டார் அப்பொழுது முத்து வேகமாக கத்தினான் …


அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகா அண்ணியையும் குழந்தையும் பார்க்க வருகிறாய் என்று சொன்னதால் தானே நான் உங்களை அழைத்துக் கொண்டு வந்தேன் ஆனால் இங்கு வந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான் எனக்கு வயதாகிறது சரி நீங்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிரீர்கள் பெற்றவர்களாக அதுவும் சரி ஆனால் உங்களை யார் நிலாவை வந்து பெண் கேட்க சொன்னார்கள் என்று கேட்டான் என்றான் ….

ஏன் நிலாவை பெண் கேட்டால் என்ன என்று தனது மகனை பார்த்து கேட்டுவிட்டு பாண்டியம்மாவிடம் அத்தை நீங்கள் பணம் காசு வசதியை  பார்க்க மாட்டீர்கள் என்று நம்பி வந்தேன் என்றார் அப்பொழுது பாண்டியம்மா சிரித்துக் கொண்டே ராதா நாங்கள் வசதியை  பார்க்கப்போவதில்லை தான் அது உனக்கும் தெரியும் ஆனால் என்று அமைதியாக விட்டார் ஆனால் என்ன அத்தை என்று கேட்டார் ….


அப்பொழுது நிலா தன் வீட்டு வரவேற்பு அறையில் இருந்தே மாமா மாமா என்று இரண்டு முறை அழைத்தால் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக தான் இருந்தார்கள் அப்பொழுது நிலா தான் மாமா என்று மொட்டை மாடியை பார்த்து இரண்டு முறை கத்தினால் மகிழும் கீழே இறங்கி வந்தான் மகா மெதுவாக கீழே இறங்கி வந்தால் குழந்தைகள் இரண்டும் கீழே தான் இருந்தது மகிழ் முத்து அவனது பெற்றோர்களுடன் இருப்பதை பார்த்துவிட்டு மகிழ் கீழே இறங்கி வந்து இருவரையும் ராதாவையும் அவரது கணவன் கணேசனையும் வாங்க சித்தி வாங்க சித்தப்பா என்று அழைத்து. விட்டு நிலாவிடம் என்ன நிலா என்று கேட்டான்…

அவள் ஒரு நிமிடம் தனது கண்ணை மூடி திறந்து விட்டு மாமா ராதா அத்தை முத்து அண்ணனுக்கு என்னை பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றால் மகிழ் சிரித்து விட்டான் எழிலும் சிரித்து விட்டான் பாண்டியம்மா இருவரையும் பார்த்து முறைத்தார் ராதா தான் ஏண்டா சிரிக்கிறீர்கள் என்று கேட்டார் ஒரு நிமிடம் சித்தி என்று சொல்லிவிட்டு நிலா இப்பொழுது நீ என்ன சொன்னாய் என்று கேட்டான் நிலா திரும்பவும் அதையே சொன்னால் …

ராதா அத்தை முத்து அண்ணனுக்கு என்னை பெண் கேட்டு வந்திருக்கிறார் என்றால் அவன் நிலாவைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு சித்தி உங்களுக்கான பதிலை நிலாவே சொல்லி இருக்கிறாள் உங்களுக்கு புரிகிறதா என்று கேட்டான் டேய் அவள் சிறுவயதில் இருந்து முத்துவை அண்ணன் என்று சொல்லிப் பழகியதால் அவ்வாறு இப்போதும் சொல்கிறாள் என்றார் ..

அப்பொழுது தான் மகாவும் நிலா மகிழை கூப்பிட்டு நிலா சொன்னதை கேட்டுக் கொண்டே மெதுவாக படி இறங்கி வந்தாள் ராதாவின் கையை கீழே இறங்கி பிடித்துக் கொண்டாள் அத்தை நீங்கள் சொல்வது என்னவோ சரிதான் நான் தவறு என்று சொல்லவில்லை முத்துவிற்கு நிலாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று வீட்டில் கேட்டீர்களா என்று கேட்டாள் நாங்கள் முத்துவிடம் இதைப் பற்றி பேசவில்லை …


இங்கு வீட்டில் வந்து அனைவரிடமும் பேசிவிட்டு முத்து விடவும் பேசலாம் என்று இருக்கிறோம் அதனால் தான் அவனையும் கையோடு அழைத்துக் கொண்டு வந்தோம் என்றார் மகா முத்துவை பார்த்து முத்து உனக்கு நிலாவை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டால் நீங்கள் வேற அண்ணி எனக்கு நிலா மேல் அப்படி ஒரு எண்ணமே இல்லை அம்மா வீட்டிலேயே சொல்லி இருந்தால் நான் அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டேன் …

நான் மகிழ் அண்ணன் நிலாவை எப்படி பார்க்கிறார்களோ அதே போல் தான் நானும் நிலாவை பார்க்கிறேன் எனக்கு நிலா மேல் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றான் டேய் இப்போது இல்லை என்றால் என்ன திருமணம் ஆகிவிட்டால் அதெல்லாம் கணவன் மனைவி என்ற உறவு வந்துவிடும் என்றார் ராதா அம்மா கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறாயா இப்படி சொல்லி இருந்தால் நான் உன்னை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டேன் …


மகா நிலாவை பார்த்தால் நிலா தனது அக்காவை பார்த்து முறைத்து விட்டு அத்தை என்னை மன்னித்து விடுங்கள் நீங்கள் என்னை முத்து அண்ணனுக்கு பெண் கேட்டு வரும் அளவிற்கு நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் உண்மையாகவே எனக்கு முத்து அண்ணன் என்று இல்லை இப்பொழுது திருமணத்தை பற்றி கூட நான் யோசிக்கவில்லை என்றால் …

சரி நிலா எல்லா பெண்களும் திருமணத்தின் போது அவர்களது திருமணத்தைப் பற்றி யோசித்து தான திருமணம் செய்து கொள்கிறார்கள் ஏதோ ஒரு சில பெண்கள் மட்டும் தானே திருமண கனவுகளில் இருப்பார்கள் என்றார் அத்தை நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை நான் இதுவரை திருமணத்திற்கு ரெடியாகவில்லை என்று கூட சொல்லலாம் வேணி அவள் மட்டும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று எண்ணிய திருமணம் செய்து கொண்டால் என்றார்….

வேணி அமைதியாக ராதாவை பார்த்தால் மகா வேகமாக கத்தினால் ராதா அத்தை என்று வீட்டில் உள்ள அனைவரும் மகாவை பார்த்தார்கள் மகா முத்துவின் அம்மா ராதாவிற்கு என்ன பதில் சொல்வாள் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை முத்துவிற்கு திருமணம் செய்து வைப்பார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️ தனிமையின் காதலி ❣️

இன்னும் இரண்டு பதிவில் கதை முடிந்துவிடும் படித்துவிட்டு உங்களின் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

மிக்க நன்றி 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *