Skip to content
Home » மகாலட்சுமி 67

மகாலட்சுமி 67

மகிழ் தனிமை என்றவுடன் எழில் வேகமாக எழுந்து நின்றான். முத்து என் lன தனிமையா என்று கேட்டான் பிறகு மகிழே தனிமை தான் இருவரும் வீட்டில் உள்ள அனைவரிடமும் இத்தனை நாட்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு இப்போது அவளுக்கு யாரிடமும் பேசாமல் தனிமையாக இருப்பது ஒரு மாதிரி அவஸ்தையாக இருக்கிறது…

நான் அதிக வேலைப்பளு காரணமாக இரவு லேட்டாக வீட்டுக்கு வருவதால் வேறு அவளுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றான் எழில் வேகமாக முத்துவை பார்த்தான்  முத்து இல்லை என்றான் அது  எல்லாம் எதுவும் அதிகமாக வேலை இல்லை அவர் வீட்டிற்கு சென்றால் யாரிடமும் பேச முடியாது என்று வருந்தி தனிமையை தேடி இங்கு அலைந்து கொண்டிருக்கிறார் அதுதான் அப்படி சொல்கிறார் என்றவுடன் எழில் வேகமாக தனது அண்ணன் மகிழை அறைந்து இருந்தான் …

அவன் தனது தம்பியை பார்த்து சிரித்தான் லூசாடா நீ லூசா என்று கேட்கிறேன் நீயா எதையாவது எண்ணி கொள்வாயா? இப்போது யாருமே இல்லாத நேரங்களில் நீதானே அவளுடனே இருந்து அனைத்துமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் நீயே இப்படி அவளை தனிமையில் வாழ விட்டு வந்து இங்கு உட்கார்ந்து இருந்தால் என்ன அர்த்தம் வீட்டிற்கு வராமல் இருந்துவிட்டால் …

உன் மனதில் எதுவும் இல்லாமல் இருந்து விடுமா அவள் வீட்டிற்குள் உட்கார்ந்துவிட்டு அனைத்தையும் நினைத்து வருந்து கொண்டிருக்க வேண்டுமா என்னதான் இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு புரியவில்லை மொட்டை மாடிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தது தவறு இல்லை ஆனால் அதே முடிவில் ஸ்ட்ராங்காக இருந்து அதற்கு ஏற்ப்பா நடந்து கொள்ளவும் தெரிய வேண்டுமல்லவா…

இப்படி எதுவுமே இல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டான்  மகிழ் தனது தம்பியை பார்த்துக் கொண்டிருந்தான் என்ன தாண்டா இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றான் மகிழ் சரிடா நான் பார்த்துக் கொள்கிறேன் அவளை இது போல் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றான் எழில் மகிழையே பார்த்து கொண்டு இருந்தான்…..

நான் தான் சொல்கிறேன் அல்ல இனிமேல் ஒழுங்காக இருக்கிறேன் என்று சரி நீ கல்லூரிக்கு கிளம்பு நேரம் ஆகிறது என்றான் சரி என்று விட்டு எழிலும் கல்லுரிக்கு கிளம்பினான் ஒழுங்காக அவளைப் பார்த்துக் கொள் இனிமே இரவு லேட் ஆக வர வைத்துக் கொள்ளாதே என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான் ..

எழில் கல்லூரிக்கு சென்று விட்டான் மகா எப்பொழுதும் போல் இருந்தால் மகா அன்று மாலை அவள் கல்லூரி முடிந்து வரும் பொழுது மகிழுடைய பைக் வெளியே வாசலில் தான் நின்று கொண்டு இருந்தது கார் ஏதாவது அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே உபயோகிப்பார்கள் மற்றபடி அனைவருமே இருசக்கர வாகனம் வைத்திருப்பதால் அதில் சென்று விடுவார்கள் ..

தனது மகிழ் மாமா வண்டி வெளியே நிற்பதை உணர்ந்து விட்டு வேகமாக படி ஏறினால் சுந்தரி மகாவையே பார்த்துக் கொண்டு இருந்தார் அப்பொழுதுதான் வேணி அவளது அறையில் துணி மாற்றிக் கொண்டே இருந்தால் மகா வேணி  என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தால் வேணியும் என்ன அண்ணி என்று கேட்டுக் கொண்டே அவளது அறையில் இருந்து வந்தால்..

மகா ஒரு நிமிடம் சுந்தரியை பார்த்து விட்டு இனிமேல் என்னுடைய கணவருக்கென்று இங்கே யாரும் கதவை திறந்து விட வேண்டாம் எனக்கு தெரியும் நான் இனிமேல் திறந்து கொள்வேன் என்றாள் இல்ல அண்ணி ஒன்று பிரச்சினை இல்லை அண்ணன் வந்தால் நான் இனிமேல் கதவை திறந்து விடுகிறேன் என்றால்..

வேண்டாம் யாரும் எங்களுக்காக என்று முழித்துக் கொண்டு இருக்க வேண்டாம் யாருடைய தூக்கமும் எங்களால் கெடவும் வேண்டும் நானே என்னுடைய மாமாக்காக கதவை திறந்து விட்டு கொள்வேன் என்று விட்டு தனது அத்தை சுந்தரிக்கு பழுப்பு காண்பித்து விட்டு மேலே சென்றாள் அவள் வேணி என்று இரண்டு முறை அழைத்தவுடன் அனைவரும் அவர்களது அறையில் இருந்து எட்டிப் பார்க்க தான் செய்தார்கள்..

அனைவரும் மகா இவ்வளவு நேரம் வேணியிடம் பேசியதை கேட்டார்கள் மகா பேசிவிட்டு சென்றவுடன் சுந்தரி இந்த பக்கம் திரும்பி அழுதார் வேணி அம்மா என்று சுந்தரி தோளில் கை வைத்தால் சுந்தரி உடைய கண்களில் கண்ணீர் இப்போது வருவதா என்பது போல் குளம் கட்டி நின்றது வேண்டாம் அம்மா என்ன இது என்று கேட்டால்…

  இல்லடா வேணி அவங்க ரெண்டு பேரும் மேல மொட்டை மாடிக்கு சென்றும் இருவரும் புருஷன் பொண்டாட்டியா  வாழலா அவங்க புருஷன் பொண்டாட்டியா வாழ்வது அவங்க தனிப்பட்ட விருப்பம் அது உடல் அளவுல இருந்தாலும் சரி மனதளவில் இருந்தாலும் சரி…

ஆனால் இருவரும் கணவன் மனைவியா மனதளவில் கூட வாழ்வது போன்று  எனக்கு தெரியல அவளும் தனிமையில் தான் இருக்கின்றாள் அவன் அவன் அதை உணரவில்லையே அவன் மட்டும்தான் தனிமையில் இருப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறான் தினமும் லேட்டாக  தான் வந்துட்டு இருக்கான் …

அவளுக்கு இங்க எல்லார் கூட இருந்தும் பேசாம இருக்கறது கஷ்டமா இருக்காதா இவனுக்கும் கஷ்டமா இருக்குன்னு தான் வீட்டுக்கு வராம இருக்கான் வெளிய அவனுக்கு வேலை உண்மையாவே இருந்தாலும் வேலை இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிட்டு வெளியே சுத்திட்டு லேட்டாக தான் தினமும் வீட்டிற்கு வரான்…

இப்படியே சென்றால் இருவரது வாழ்க்கைக்கும் நல்ல இல்ல அதனால தான் என்று விட்டு  சமையல் அறைக்கு சென்றுவிட்டார் அதை கோதையும் கேட்டார் பாண்டியம்மா பாட்டியும் கேட்டார் காவேரி தனது தொண்டையை கனைத்து கொண்டே அவரது அறையில் இருந்து வந்தார்  தனது மாமியார் சுந்தரி அம்மா இவ்வளவு நேரம் பேசியதை கேட்டிருப்பார் என்று வேணி உணர்ந்தால் …

வேணி வேறு எதுவும் பேசாமல் அத்தை தம்பி என்ன செய்கிறான் என்று கேட்டால் அவன் இங்கு எங்கு இருக்கிறான் இனி உடன் தோட்டத்தில் இருக்கிறான் என்றவுடன் சரி என்று விட்டு வேனி இனியை பார்க்கத் தோட்டத்திற்கு சென்றால் இனி குழந்தையை வைத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தால் ….

அக்கா என்ன கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கிறீர்கள் என்ன ஆயிற்று என்றால் இன்னும் என்னடி ஆக வேண்டும் என்று கேட்டால் இந்த குழந்தையை வளர்த்து தருவேன் என்று சொன்னவர்கள் எனக்கென்ன என்று மேலே போய் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்றால்…

அக்கா என்றால் அவள் எனக்கு இந்த குழந்தையை வளர்த்து தர வில்லை என்பது எப்படி  பெரிய வலி இந்த குழந்தை பிறந்து இப்பொழுது ஒரு மாதங்களுக்கு மேலாகிவிட்டது இன்னும் அவள் இந்த குழந்தையை பார்க்க கூட செய்யவில்லையே எனக்கு வருத்தமாக இருக்காதா சரிக்கா இப்பொழுது இவனை பார்க்கவில்லை என்று வருத்தம் அவர்கள் இருவருக்கும் இருக்காது என்று சொல்கிறீர்களா என்று கேட்டாள்..

இனி வேணியை திரும்பி முறைத்து பார்த்து நான் எப்படி சொன்னேன் என்றால் அக்கா அவர்கள் இருவரும் ஒரு முடிவோடுதான் மேலே சென்று இருக்கிறார்கள் அப்புறம் எப்படி அவர்கள் இருவரும் இந்த குழந்தையை பார்ப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு இந்த குழந்தை என்னடி பாவம் செய்தது நான் என்ன செய்தேன் என்று கேட்டால் ..

அக்கா நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் என்று விட்டு அமைதியாக இருந்தால்  இனி வேணியை அடிக்க கை ஓங்கினாள் அப்பொழுது உதிரன் வந்தான் இனி என்ன செய்கிறாய் என்று கேட்டுக் கொண்டே வந்தான் அவன் வேணியை கை ஓங்கியதை பார்த்தான் போட எல்லாரும் உங்க கதையையே பேசுங்க என்று கூறி விட்டு இந்த உன் குழந்தை நீயே வச்சுக்கோ என்று குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள்…

உதிரனுக்கு ஒன்றும் புரியவில்லை வேனி தான் நடந்ததை சொன்னால் சரி வேணி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு குழந்தைய தூக்கிக்கொண்டு சென்றான் மாமா குழந்தையை கொடுங்கள் என்றாள் சரி என்று குழந்தையை வேனியிடம் கொடுத்துவிட்டு அவனது அறைக்கு சென்றான் …

அவனது அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டான்  இனி உதிரனை திரும்பி முறைத்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டால் அவன் எடுத்துக் கொண்டு வந்து பையை ஒரு பக்கமாக வைத்துவிட்டு இனியின் அருகில் சென்று அமர்ந்தான் அவளை தனது தோளில் சாய்த்துக் கொண்டான் விடுடா என்ன எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க…

குழந்தை பிறந்து இப்ப ஒரு மாசம் ஆக போது நான் எப்படி இருக்கேன் என்று பாக்கல என் புள்ளையை எட்டிப் பார்க்கல அவ்ளோ தான் எல்லாம் இல்ல  என்று கத்தினால் அவள் கத்திய கத்து வீட்டில் உள்ள அனைவருக்குமே கேட்கும் படியாக தான் இருந்தது காவேரி சமையலறையில் இருந்து வெளியே வந்து உதிரனின் அறை கதவை தட்டினார் …

உதிரன் எழுந்து சென்று கதவை திறந்தவுடன் காவேரி என்ன சத்தம் குழந்தை எங்கே என்று கேட்டார் குழந்தை வேணியிடம் தோட்டத்தில் இருக்கிறது என்று உடன் காவேரி வேறு எதுவும் பேசாமல் கதவை லேசாக சாற்றிவிட்டு மெதுவாக பேசுங்கள் என்று விட்டு வந்துவிட்டார் அவர் குழந்தை அங்கு இருக்கிறதோ என்று  எண்ணி தான்  வேகமாக சென்றார் அவள் கத்திய கத்திக் குழந்தை அழுவுமோ என்று எண்ணினார்…

  குழந்தை வேணிடம் இருக்கிறது என்றவுடன் அவர் அமைதியாக வந்துவிட்டார் இனி கணவன் மனைவிக்குள் பேசிக்கொள்வார்கள் என்று எண்ணி கதவை சாற்றிவிட்டு வந்து விட்டார் உதிரன் வந்து அமர்ந்தவுடன் பாத்தியா இப்ப கூட எனக்கு என்னனு போய்ட்டாங்க அவங்களுக்கு இப்ப அவங்க பேரப்பிள்ளை அழுகும் என்று வந்திருக்காங்க என்றவுடன் உதிரன் கை ஓங்கி கொண்டு வந்தான்….

பிறகு தனது கையை அடிக்காமல் இறக்கிறான் வேற என்ன பண்ண போறீங்க என்று திரும்பவும் கத்தினால் இனி ப்ளீஸ் மெதுவா பேசு என்றான் ஓஹ நான் அமைதியாக இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும் அப்படித்தானே வேறு என்ன நடக்கப்போகிறது  என்று விட்டு வேற எதுவும் பேசாமல் கதவை திறந்து கொண்டு தோட்டத்திற்குச் சென்று விட்டாள் …

உதிரனுக்கு இனியை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை அவனுக்குமே தெரியுமே தன் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் இனிக்கு இங்க இருக்கும் அனைவரையும் விட இப்பொழுது மகிழ் மேல் தான் ஒரு படி பாசம் தனது தாய் தந்தை அத்தை மாமா இல்லாமல் கூட இருந்து விடுவாள் ஏன் தனது காதல் கணவன் உதிரன் இல்லாமல் கூட இருந்து விடுவாள்  …

ஆனால் மகிழிடம் பேசாமல் அவளால் இருக்கவே முடியாது இந்த ஒரு மாத காலங்களில் மகிழ் இனியிடம் பேசவில்லை இனி முதலில் இரண்டு மூன்று நாட்கள் பேச விரும்பினால் அவள் பேச சென்றாலும் மகிழ் பார்த்தும் பார்க்காதது போல் சென்றவுடன் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது…

இப்போது தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு மொட்டை மாடியையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தால் அப்பொழுதுதான் எழில் வீட்டிற்குள் வந்தான் தனது அக்கா குழந்தையை வைத்துக்கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தனது அக்காவின் அருகில் வந்தான்…

இனி தனது அருகில் நிழல் ஆடுவதை  உணர்ந்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கு தனது தம்பி எழில் நின்று கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு வேகமாக எழுந்து நின்றால் இனி எழிலிடம் என்ன சொல்ல போகிறாள்..

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 67”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *