மகா மகிழை முறைத்துக் கொண்டே வந்து அவனது கையில் டீ கொடுத்தால் மகிழ் மகாவை பார்த்து சிரித்துவிட்டு மகா உட்கருந்தவுடன் நிலாவின் தலையை மகாவின் மடியில் வைத்துவிட்டு எழுந்து பல் விலக்கி விட்டு வந்து டீ குடித்துக் கொண்டிருந்தான்…
அவள் தான் தூங்கிவிட்டாள் இல்ல அவளை அருகில் படுக்க வைத்தால் என்ன இன்னும் அவள் சின்ன குழந்தை என்று நினைப்பா என்று கேட்டால் அவனை முறைத்து கொண்டே மகிழ் சிரித்துக்கொண்டே இருந்தான் வேணி அப்போதுதான் தனக்கு கொடுத்த டீ கிளாஸ் எடுத்துக் கொண்டு வந்து என்ன அண்ணா அண்ணி உங்களை எதுக்கோ திட்றாங்க போல என்று கேட்டுக் கொண்டே சிரித்துக் கொண்டே வந்தால்…
ஆமாம் வேணி உன் அண்ணி என்னை திட்டவில்லை என்றால் தான் அதிசயம் என்று அவனும் சிரித்துக் கொண்டே சொன்னான் மகா இருவரையும் பார்த்து முறைத்தாள் பிறகு வேணி தான் எதுக்கு அண்ணா திட்டுகிறார்கள் என்று கேட்டால் நிலாவை தூங்கிய பிறகும் மடியிலே வைத்துக் கொண்டு இல்லாமல் கீழே படுக்க வைத்திருக்க வேண்டியதுதானே என்று சொல்லித் திட்டுகிறாள் என்று சொன்னான் ….
அண்ணி சொல்வதும் சரிதானே அண்ணா என்றால் கொஞ்ச நேரம் தாண்டா தூங்குவா ரொம்ப நேரம் எல்லாம் தூங்க மாட்டா என்றான் கொஞ்ச நேரம் தூங்குற நிறைய நேரம் தூங்குற நான் தினமுமாம் சொல்றேன் எத்தனை நாட்கள் மடியில படுக்க வைத்திருக்கிறீர்கள் ஆனால் இன்று கிட்டத்தட்ட 20 நாளா அலைச்சல் தானே நேத்தி முழுவதும் அலைச்சல் தானே கால் வலிக்கும் இல்லை அதுக்கு தானே சொன்னேன் என்று மகிழை முறைத்துக் கொண்டே சொன்னால் …
வேணி மகிழ் இருவரும் சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டே டீ குடித்தார்கள் ஒரு கால் மணி நேரத்தில் நிலாக்கு முழிப்பு வந்து எழுந்தால் எழுந்து நின்று மகிழை முறைத்துவிட்டு தான் தனது அக்காவின் மடியில் படுத்திருப்பதை பார்த்துவிட்டு சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கிளம்புற வழியை பாரு என்று அவள் தாடையில் லேசாக தட்டி விட்டு பாய் மாமா என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி ஓடினால்…
செல்லும்போது வேனியையும் கைப்பிடித்து இழுத்துக் கொண்டே சென்றாள் காலை 8 மணிக்கு மேல் ஆகிய பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்க சென்று விட்டார்கள் எழில் தனக்கும் மகாவிற்கும் விடுமுறை சொல்லிவிட்டான் பிறகு மகிழுடன் இருவரும் மருத்துவமனைக்கு செல்வதற்கு அவர்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள் அப்பொழுது கருப்பையா தாத்தா தான் சாமி கும்பிட்டு விட்டு செல்லுங்கள் என்றார் …
Pமகா ஒரு நிமிடம் கண்மூடி கண் திறந்து விட்டு போகும் வழியில் பிள்ளையார் கோவிலில் கும்பிட்டு விட்டு செல்கிறோம் தாத்தா என்று மட்டும் சொல்லிவிட்டு ஒரு கையில் மகிழையும் இன்னொரு கையில் எழிலையும் பிடித்துக் கொண்டு வெளியே சென்றாள் பாண்டியம்மா பாட்டி கண்கள் லேசாக கலங்கியது கருப்பையா தாத்தா வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு செல்வதற்கு தான் சொன்னார் ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் சாமி கும்பிட முடியாது என்பதால் தான் மகா அவ்வாறு சொல்லி செல்கிறாள் என்று பாண்டியம்மா கருப்பையா தாத்தா ஏன் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் ….
பிறகு மகா மகிழ் எழில் மூவரும் அவர்கள் தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமியை தரிசித்து விட்டு பிறகு மருத்துவமனைக்குச் சென்றார்கள் அவர்களது முறை வந்தவுடன் உள்ளே சென்றார்கள் பிறகு மகாவிடம் லதா டாக்டர் என்னாச்சு மஹா மூன்று பேரும் வந்திருக்கிறீர்கள் இவ்வளவு தூரம் என்று கேட்டார் மகா மகிழ் இருவரும் அமைதியாக இருந்தார்கள்….
மகா யாருக்கு என்ன பண்ணுது என்று கேட்டார் மகா மகிழ் இருவரும் அமைதியாக அவர்களது முகத்தையே மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த உடன் மகாவை பார்த்து சிரித்தார் பிறகு எத்தனை நாள் மகா தள்ளிப் போயிருக்கிறது என்று கேட்டார் மகா மகிழ் இருவரும் திருத்திருவென முழித்தார்கள் எழில் சிரித்துக் கொண்டே 18 நாள் ஆண்ட்டி என்றான் ….
இருவரும் இப்பொழுது எழிலை பார்த்தார்கள் லதா டாக்டர் எழிலை பார்த்து சிரித்துவிட்டு இதெல்லாம் நல்லா தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு சரிடா நீங்கள் இருவரும் வெளியே இருங்கள் நான் அவளை செக் பண்ணிவிட்டு சொல்கிறேன் என்ற உடன் எழில் மகிழ் இருவரும் வெளியே வந்தார்கள் பிறகு மகாவிடம் எங்காவது வலி இருக்கிறதா என்று கேட்டார் ..
அவள் இல்லை என்று சொன்னவுடன் அவளை செக் பண்ணிவிட்டு பிறகு ஸ்கேனும் எடுத்துவிட்டு இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொல்லி இருந்தார் மூவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இருந்தாலும் மகா மகிழ் இருவரது முகமும் அவ்வளவு தெளிவாக இல்லை அதை டாக்டர் லதாவும் உணர்ந்து இருந்தார் பிறகு சத்தான ஆகாரங்களாக எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு சரி கொஞ்சம் வீக்காக இருக்கிறாள் சத்தான உணவு எடுத்துக்கொள் மாடிப்படி அதிகமாக ஏறக்கூடாது என்று சொன்னார்…..
சரி என்று விட்டு மூவரும் வெளியே கிளம்புவதற்கு எழுந்தார்கள் அப்பொழுது லதா டாக்டர் எழிலிடம் எழில் ஒரு நிமிஷம் என்றவுடன் எழில் மட்டும் நின்றான் மற்ற இருவரும் மற்ற இருவரும் வெளியே வந்தார்கள் என்ன ஆச்சு ஆன்ட்டி என்று கேட்டான் எழில் மகா ரொம்ப வீக்கா இருக்கிறாள் அது மட்டும் இல்லாமல் அவளது கர்ப்பப்பை ரொம்ப வீக்காக இருக்கிறது அதனால் மாடிப்படி ஏறாமல் பார்த்துக் கொள் டென்ஷன் ஆகக்கூடாது எதையாவது யோசித்துக் கொண்டே இருக்க கூடாது பார்த்துக்கொள்…
உன்னை நம்பி தான் அனுப்பி வைக்கிறேன் என்றவுடன் சரி என்று விட்டு அமைதியாக வெளியே வந்தான் மகா மகிழ் இருவரும் என்ன சொன்னார்கள் என்று கேட்டார்கள் ஒன்றும் இல்லை என்று இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் அவர்கள் இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் அனைவருமே வரவேற்பரையில் தான் உட்கார்ந்து இருந்தார்கள் சுந்தரி வேகமாக எழுந்து நின்றார்….
பாண்டியம்மா பாட்டி என்ன ஆச்சு என்று கேட்டார் கன்ஃபார்ம் ஆயிடுச்சு பாட்டி எல்லாம் நல்ல விஷயம் தான் என்றான் மகா மகிழ் இருவரும் வேறு ஏதும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள் அவர்கள் இருவரும் மேலே சென்று விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு எழில் வீட்டில் உள்ள அனைவரிடமும் மகாவிற்கு கர்ப்பப்பை கொஞ்சம் வீக்காக இருக்கிறதாம் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ள சொல்லி இருக்கிறார்கள் மாடிப்படி ஏறக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு சென்றான் ….
பிறகு தான் காலேஜ் எடுத்துக் கொண்டு செல்வதற்கு இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான் டேய் எங்கடா கிளம்பிவிட்டாய் என்று சுந்தரி கேட்டார் அம்மா ஏற்கனவே நிறைய நாள் லீவு எடுத்தாச்சு இன்னும் லீவு எடுத்துக் கொண்டிருக்க முடியாது பசங்களுக்கு தேர்வு வேறு நெருங்கி கொண்டிருக்கிறது நான் அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்புகிறேன் மகிழ் அவளுடன் இருக்கிறானே என்று சொல்லிவிட்டு தனது அண்ணனிடமும் தோழியிடமும் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டான் …..
மகா மகிழ் இருவரும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருந்தார்கள் அப்பொழுது கயல் போன் செய்தால் மகா வேகமாக ஃபோனை எடுத்து பேசினால் என்னடி நான் பெரியம்மா ஆன விஷயத்தை என்கிட்ட சொல்றதுக்கு இவ்ளோ நேரமா அதக்கூட நானா போன் பண்ணி கேட்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னால் கயல் நீ வேற என்று லேசாக வெட்கப்பட்டு கொண்டே மகா பேசினால் சரி என்ன ட்ரீட் மாமா என்ன பண்றாரு என்று கேட்டால்….
இப்போது தான் கயல் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம் என்றாள் இனி இப்பதான் சொன்னா ஹாஸ்பிடல் போயிட்டு வந்தீங்க கன்ஃபார்ம் ஆயிடுச்சுன்னு ஆமாம் சரி எதையும் யோசிச்சிட்டு இருக்காத ஹெல்தியா சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு அமைதியா வீட்ல உட்காரு உடம்ப பாத்துக்கோ நான் நாளை அருகில் உள்ள கோவிலில் உன்னை சந்திக்கிறேன் என்றால் சரி என்று விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தால்…
பிறகு மகாவிற்கும் சிறிது ஒரு மாதிரியாக இருந்ததால் போய் படுத்துக் கொண்டால் மகிழ் சாப்பிட்டுவிட்டு படு என்றான் இல்ல மாமா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தால் சாப்பிட்டு படு டி என்று சொல்லிவிட்டு சாப்பாட்டை அவளின் அருகில் கொண்டு வந்தான் அவள் ஓமட்டி கொண்டே வந்து சிங்கிள் வாந்தி எடுத்துவிட்டு வாய் கொப்பளித்து விட்டு சென்றாள் ….
மகாவை இப்படி பார்பதற்கு மகிழுக்கு ஒரு மாதிரியா இருந்தது மகா என்ன பண்ணுது என்று கேட்தான் ஒன்றுமில்லை டாக்டர் வாமிட் மாத்திரை கொடுத்திருக்கிறார்கள் நான் அதை சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சாப்பிடுகிறேன் மாமா என்று சொன்னால் அவனும் சரி என்று விட்டு அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அவளது அருகில் வந்து உட்கார்ந்தான். …
மாமா சோர்வாக இருக்க பாரு படு என்றால் இல்லடி பரவால்ல நீ வேணா தூங்கு என்றான் நீ வா என்று அவள் கை காண்பித்தவுடன் சரி என்று அவனுக்கும் அசதியாக இருந்ததால் சரி என்று விட்டு அவளது அருகில் வந்து படுத்தான் இருவரும் படுத்த ஒரு அரை மணி நேரத்தில் எதை எதையோ நினைத்துக் கொண்டே தூங்கி விட்டார்கள் மாலை ஐந்தரை போல் கல்லூரி முடிந்தவுடன் எழில் வந்து விட்டான் ….
நிலா வேணி இருவரும் வருவதற்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து விட்டான் பிறகு வந்தவுடன் மேலே தான் சென்றான் அப்பொழுது மகா உள்ளே அறையில் படுத்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தனது அண்ணன் இன்னொரு அறையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்தான் மதியம் இருவரும் சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான் …
மகிழ் எழிலை பார்த்து சிரித்துவிட்டு பிறகு முறைத்தான் சரி சரி நீ அவளை சாப்பிட வைத்திருப்பாய் என்று நான் ஒத்துக் கொள்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சரி என்ன சீக்கிரம் வந்து விட்டாய் என்று சொல்லிக் கொண்டே அவனிடம் பேசிக் கொண்டே வந்து டீ போட்டான் பிறகு எழில் சத்தம் கேட்டு மகாவும் எழுந்து வந்தால் அவளுக்கும் ஒரு டீ கொடுத்தவுடன் மூவரும் ஒன்றாக உட்க்கார்ந்து டீ குடித்துக் கொண்டு இருந்தார்கள் ….
அப்பொழுது நிலா என்னை விட்டுட்டு மூவரும் டீ குடிகிறீர்களா என்று கத்திக் கொண்டே வந்து எழில் கையில் இருக்கும் டீயை வாங்கி குடித்து விட்டாள் எழில் சோத்து மூட்டை சோத்து மூட்டை என்று அவளை திட்டினான் பிறகு வெக்கமா இல்ல எப்படி விளையாடிட்டு இருக்கீங்க என்றாள் மகா எதுக்கு இங்க வந்திருக்க என்று கேட்டான் எழில் நான் இங்கு வந்ததுக்கு சாருக்கு நான் காரணம் சொல்ல வேண்டுமா ….
நான் என் அக்காவையும் மாமாவையும் பார்க்க வந்தேன் என்றால் எது உன் அக்காவை பார்க்க வந்தியா என்று நெஞ்சில் கை வைப்பது போல் காண்பித்தான் போடா என்று அவனது தலையில் தட்டி விட்டு மாத்திரை ஒழுங்கா சாப்டியா சாப்பாடு சாப்பிட்டியா என்று மகாவை கேட்டாள் அவள் அமைதியாக தனது தங்கையே பார்த்துக் கொண்டே இருந்தால் பிறகு ஒழுங்கா சாப்பிடு என்ன சரியா என்று சொல்லிவிட்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு கீழே இறங்கி விட்டாள் ….
நிலா கீழே இறங்கியவுடன் மகா மகிழ் எழில் மூவரும் நிலாவை எண்ணி சிரித்தார்கள் இப்பையும் அவ்வளவு கோவமா இருக்க டா அத்தனை கோவத்திலும் வந்து பேசிட்டு போறா என்று சொல்லி சிரித்தால் பின்ன உன் தங்கச்சி எப்படி இருப்பா என்று சொல்லிக் கொண்டே சரி நைட்டுக்கு சாப்பாடு செஞ்சுட்டீங்களா செய்யட்டா என்று கேட்டான் நான் செய்து கொள்கிறேன் என்று மகிழ் சொன்னவுடன் சரி எனக்கு வேலை இருக்கு என்று விட்டு மகாவிடம் ஒரு தலையசைப்புடன் கீழே இறங்கினான் …
எழில் கீழே இறங்கி வரும் வேளையில் நிலா வரவேற்பு அறையில் நின்று கொண்டு தனது வீட்டில் உள்ள அனைவரையும் வரவேற்பரையில் நிற்க வைத்தால் அனைவரும் வந்தவுடன் பெரியம்மா நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றால் சரி டி அதற்கு எதற்காக அனைவரையும் கூப்பிட்டு வைத்திருக்கிறாய் என்று கேட்டார்….
அனைவரையும் இருக்கும்பொழுது பேச வேண்டும் அதனால் தான் என்று விட்டு அமைதியாக இருந்தால் என்ன என்று கேட்டார் பெரியம்மா வேணி முகில் அண்ணா இருவருக்கும் ரிசப்ஷன் வைக்க வேண்டும் அவர்களுக்கு இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது அது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை நமக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதற்காக அவர்கள் இருவருக்கும் ரிசெப்ஷன் வைக்காமல் இப்படியே விட்டு விடலாம் என்று இருக்கிறீர்களா என்று கேட்டால்…
அப்பொழுது முகில் வேனி இருவரும் ஒரே போல் எங்களுக்கு ரிசப்ஷன் வேண்டாம் என்று சொன்னார்கள் நிலா இப்பொழுது எதற்காக ரிசப்ஷன் வைக்க வேண்டும் என்று சொல்கிறாள் முகில் வேனி இருவரும் ரிசப்ஷன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் வீட்டில் உள்ள அனைவரும் முகில் வேனி இருவருக்கும் ரிசப்ஷன் வைப்பார்களா இல்லையா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
Nice
Next episode update pannunga…
Waiting for your update. …
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
I am waiting for your update… Yenakku andha app poy padikira alavukku poruma illa ..
yenna nan subscription poda maaten..
125 epi yenakku 4 month agum..
pls inge update pannunga. .