Skip to content
Home » மகாலட்சுமி 82

மகாலட்சுமி 82

நிலா சுந்தரியிடம் இது உங்களுடைய மகனும் மருமகளும் அப்பா அம்மா ஆகிவிட்டார்கள் என்பதற்காக செய்த ரசகுல்லா என்று சொன்னால் உங்கள் வாயில் இருக்க முத்து கீழே விழுந்து விடும் அல்லவா என்று சொல்லிக் கொண்டே அவரது வாயில் ரசகுல்லாவை திணித்தாள்…

அவர் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சிரித்தார் அப்போது தான் காவேரி சமையலறையில் இருந்து வெளியில் வந்தார் இதை பார்த்தார் வீட்டில் உள்ள மற்றவர்களும் வரவேற்பு அறையில் இருந்ததால் அனைவரும் நிலாவை தான் பார்த்தார்கள் காவேரி நிலாவை முறைத்து பார்த்துக் கொண்டே வந்து அவளது கையில் இருக்கும் ஒரு ரசகுல்லாவை எடுத்து அவரது வாயில் கொஞ்சம் போட்டுவிட்டு நிலா வாயிலும் கொஞ்சம் திணித்து விட்டு அவரது அறைக்கு அமைதியாக சென்றுவிட்டார்…..


இதில் அவருக்கும் சந்தோஷம் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றார் என்பதை வீட்டில் உள்ள அனைவரும் உணர்ந்து அமைதியாக இருந்தார்கள் பிறகு வேணி வீட்டில் உள்ள அனைவரும் ரசகுல்லாவை ஒரு பவுலில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் அனைவரும் அமைதியாக உட்க்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அன்றைய பொழுதும் இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவர்களது அரைக்கு சென்று படுத்துவிட்டார்கள் …

மகா மகிழ் இருவரும் எழில் பேசி விட்டு சென்ற பிறகு கொஞ்சம் தெளிந்து இருந்தால் இருவரும் வேறு எதுவும் பேசாமல் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு மகாவிற்கு மாத்திரை எடுத்து கொடுத்தான் அதையும் சாப்பிட்டுவிட்டு இருவரும் அமைதியாக படுத்தார்கள் மகா படுத்தவுடன் மகிழ் அவளை தன் அருகில் இழுத்து பின் பக்கமாக இருந்து கட்டியணைத்துக் கொண்டு படுத்தான்…..

மகாவிற்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது திரும்பி தனது மாமாவின் பக்கமாக படுத்துக்கொண்டு அவனை நேருக்கு நேராக பார்த்து நான் அன்று பேசிய வார்த்தை உன்னை இந்த அளவிற்கு பாதித்திருக்கிறது அல்லவா என்று  கேட்டாள் மகிழ் மகாவை ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு இனி அதைப்பற்றி பேச வேண்டாம் மகா என்று அவளது வாயில் ஒற்றை விரலை வைத்து தடுத்தான்…..

மகா அந்த ஒற்றை விரலுக்கு முத்தம் வைத்தால் மகிழ் மகாவை பார்த்துக் கொண்டே அவளை இறுக அணைத்தான் மகாவும் மகிழை இறுகி அணைத்து கொண்டு படுத்தாள்   இருவரும் சந்தோஷத்தில் தூங்கிவிட்டார்கள் தினமும் கல்லூரிக்கு மகாவை எழில்தான் காரில் அழைத்துக் கொண்டு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறான்….

முதலில் மகாவை பைக்கில் அழைத்துச் செல்லலாம் என்று தான் எண்ணி இருந்தான் ஆனால் சுந்தரி தான் பைக் அந்த அளவிற்கு சேப்டி இல்லை என்று சொல்லி இருந்தார் அதனால் வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார் அவனுக்கும் அவள் வீக்காக இருப்பதால் தனது அம்மா சொல்வது சரி என்று பட்டதால் அவளை தினமும் கல்லூரிக்கு காரில் அழைத்துக் கொண்டு சென்று வந்து கொண்டிருக்கிறான்….

  இப்படியே இரண்டு நாட்களும் சென்றது வேணி தன்னுடைய ரிசப்ஷனுக்கு தன்னுடைய நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து இருந்தால் அவள் வகுப்பில் உள்ள அனைவரையும் அழைக்கலாம் என்று கூட எண்ணி தான் இருந்தாள் ஆனால் எழில் தன்னுடைய அண்ணன் என்றோ நிலவின் மாமா என்றோ கல்லூரியில் இருப்பவர்களுக்கு தெரிய வந்தால் கண் காது அனைத்தும் வைத்து பேசுவார்கள் என்று எண்ணியதால் தன்னுடைய நண்பர்களை எப்படியும் சமாளித்து விடலாம் மொத்த தன்னுடைய வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரையும் சமளிப்பது கஷ்டம் என்பது உணர்ந்ததால் அவளுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லியிருந்தால்….

வேணி முகில் இருவரது ரிசப்ஷன் நாளும் வந்திருந்தது ரிசிப்ஷனுக்கு முன்னாடி நாள் சனிக்கிழமை வேலு சுந்தரி இருவரும் ஊரில் உள்ள அனைவருக்கும் சென்று சொல்லிவிட்டு வந்தார்கள் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களுக்கு கோதை மணி இருவரும் போய் சொல்லிவிட்டு வந்தார்கள் வேணியின் பெற்றவர்களும் சனிக்கிழமை மாலை வந்து விட்டார்கள்…

வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இராமு வசந்தி  இடம் பேசினார்கள் வேணி இந்த ஆறு மாதங்களில் பெரிதாக தனது பெற்றவர்களிடம் பேசவில்லை என்று தான் சொல்ல வேண்டும் வீட்டிற்கு வந்தால் வாருங்கள் என்று சொல்வதோடு சரி இந்த ஆறு மாதத்தில் ஒரு நாள் கூட அவள் அவளது வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோர்களை பார்த்து விட்டு வரவில்லை ..

ஆனால் முகில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று தனது அத்தை மாமா இருவரையும் பார்த்துவிட்டு அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அனைத்தையும் செய்து விட்டு வருவான் வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள் அனைவரும் அவர்களது வேலை விட்டு வந்தவுடன் பந்தல் காரர்கள் பந்தல் போட வீட்டில் ஒவ்வொரு வேலையாக எடுத்துக் கட்டி செய்தார்கள்…

ஞாயிற்றுக்கிழமை காலை 9 to 12 ரிசப்ஷன் வைத்திருந்தார்கள் காலை உணவு மதிய உணவு இரண்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அவர்களுக்கு ஏற்ப வருபவர்கள் காலையில் வந்தாலும் மதிய உணவிற்கு வந்தாலும் வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும் வகையில் இரண்டு வேலைக்கும் சாப்பாடு ரெடி செய்து இருந்தார்கள்…

எழில் நிலா இருவரும் ஓடி ஆடி வேலை செய்தார்கள் இனியை குழந்தையை வைத்துக்கொண்டு பாண்டியம்மா பாட்டியுடன் இருக்க சொல்லிவிட்டார்கள் அப்படி இருந்தும் இனி பால் கொடுக மட்டும் குழந்தையின் அருகில் வந்து விட்டு தனது பாட்டி பாண்டியம்மாவிடம் குழந்தையோ ஒப்படைத்து விட்டால் மற்ற அனைவரும் ஓடி ஓடி ஒவ்வொரு வேலையாக செய்தார்கள் …

ரிசப்ஷன் வரவேற்பரையில் காவேரி கந்தன் வேணியின் தாய் தந்தை ராமு வசந்தி நல்வரையும் அனைவரையும் வரவேற்குமாறு நிற்க வைத்திருந்தார்கள் உள்ளே ஒவ்வொருவராக அனைவரும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் …

ஊரில் உள்ளவர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள் காலை ஒன்பதரை மணி போல் நிலா வேனியின் தோழிகள் வந்தார்கள் 5 பேர் மொத்தம் நிலா ,வேணி  ,மதுமிதா, ஸ்ரீநிதி ,உதயா மொத்தம் ஐவரும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இளங்கலையும் ஒன்றாக படித்தார்கள் இப்பொழுது அனைவரும் முதுகலையும் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்ரீநிதி உதயா மதுமிதா மூவரும் வரவேற்பு அறையில் வந்தவுடன் வேணியின் தோழிகளா என்று காவேரி கேட்டார் …

ஆமாம் ஆன்ட்டி என்று சொல்லிவிட்டு நிலாவின் தோழியும் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள் உள்ளே தான் இருக்கிறார்கள் போய் பாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் அவர்கள் மூவரும் உள்ளே வரும்போது நிலா புடவை அணிந்து கொண்டு ஒவ்வொரு வேலையாக இழுத்துக் கட்டிக் கொண்டு செய்து கொண்டிருந்தாள் கல்லூரியில் ஏதாவது பங்க்ஷன் என்றால் மட்டுமே அதுவும் அவர்கள் கல்லூரியில் புடவை கட்டிக் கொண்டு வர சொன்னால் மட்டுமே நிலா கட்டிக் கொண்டு வருவாள் மற்ற நேரங்களில் சுடிதார் தான் இருப்பாள்….

மூன்று தோழிகளும் தனது தோழி நிலாவை புடவையில் பார்த்தவுடன் சூப்பரா இருக்கா இல்லடி என்று சொல்லிக் கொண்டே பேசிக்கொண்டு வந்தார்கள் நிலாவின் தோழிகள் சொன்னது போல் மொட்டை மாடியில் நின்று நடக்கும் ரிசெப்ஷனை ஒரு பக்கமாக அவர்களது அறையில் இருந்து ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு பார்த்து கொண்டு இருந்த மகாவும் தனது காதல் கணவன் மகிழிடம் சொல்லிக் கொண்டு இருந்தால்…

நிலாவை பார்த்துக் கொண்டிருந்தால் அப்பொழுது மகிழ் தான் எதற்கு மகா நிலாவையே பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டவுடன் மாமா அவளை கொஞ்சம் பாருங்கள் இதுவரை இவ்வளவு பொறுப்பாக நீங்கள் அவளை பார்த்திருப்பீர்களா இதுவரை புடவையை மேலோட்டமாக பிடித்து வளர்ந்தவள் இப்பொழுது புடவையை இறுகி சொருகிக்கொண்டு இருக்கிறாள் என்றாள்….

மகிழ் சிரித்து கொண்டே நிலா குட்டிக்கு பொறுப்பு இல்லை என்று சொல்றியா என்று கேட்டான் நான் எப்ப மாமா அப்படி சொன்னேன் அவளுக்கு நிறையவே பொறுப்பு இருக்கிறது ஆனால் இவ்வளவு நாள் ஜாலியாக வாழ்ந்தவள் எப்பொழுது அனைத்தையும் எடுத்துக்காட்டி செய்கிறாள் என்றுதான் சொல்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னால்…

நிலா தனது நண்பர்களை பார்த்துவிட்டு தனது புடவை முந்தியை கீழே இறக்கிவிட்டு வாங்க டி என்று அழைத்துக் கொண்டு வேனியிடமும் சென்றால் பிறகு சில நெருங்கி உறவுகள் வந்தவுடன் வேனியின் தோழிகள் வேணியிடம் சரி வேணி நாங்கள் கீழே உட்கார்ந்து இருக்கிறோம் நீ பார் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்கள் நிலா மூவரையும் ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு சரி டி இங்கே உட்கார்ந்திருங்கள் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றால் ….



என்ன டி கல்லூரியில் நாம் பார்க்கும் நிலாவிற்கும் இப்பொழுது இங்கு அனைத்து வேலை இழுத்துக் கொண்டு செய்யும் நிலாவிற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது தானே ஏன் வீட்டில் இத்தனை பெரியவர்கள் இருக்கும் போது அவர்கள் செய்ய மாட்டார்களா இவள் இப்படி ஓடி ஓடி செய்கிறாள் என்று பேசினார்கள் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் இப்படித்தான் இருப்பார்கள் போல என்றும் எண்ணினார்கள்…

இவ்வளவு வேலையும் இழுத்துக்கட்டி செய்தாலும் அவளது முகத்தில் சிறிது கூட சோர்வு இல்லை சந்தோஷமாக அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறாள் பாருங்கள் என்று ஸ்ரீநிதி சொன்னால் மற்ற இருவரும் ஆமாம் என்று அவமதித்தார்கள் பிறகு நிலா அப்பொழுது முத்தண்ணா முத்தண்ணா என்று கத்தினால் என்ன நிலா என்று கேட்டுக் கொண்டே வந்தான் முத்துஅண்ணா மாமா எங்க மாமாவ ரொம்ப நேரமா பாக்கவே இல்ல என்று கேட்டால்….

உன்னோட மாமா தானே எங்கேயும் போகல சாப்பாட்டு வேலை எல்லாம் எப்படி நடக்குது பந்தி பரிமாறதை பார்த்துட்டு இருக்கான்  வெளியே பந்தி பரிமாறும் இடத்தில்தான் இருக்கிறான்  என்றவுடன் சரி அண்ணா  என்று விட்டு நிலா அவளது வேலையை பார்க்க ஆரம்பித்தால் அப்போது நிலாவின் தோழிகள் அது யாரு டி அவளுடைய மாமா அவ்வளவு வேகமா மாமா எங்க இருக்கார் என்று கேட்கிறாள் என்று எண்ணினார்கள் …

சரி விடு அவளது அந்த மாமாவை நாம் பாக்காமலா போயிடுவோம் சைட் அடிக்கிற மாதிரி இருந்தா பாத்துக்கலாம் நல்ல பிகரா மொக்க பிகரா என்று பேசிக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது ரிசப்ஷனுக்கு நேரம் ஆகுவதால் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரம்பித்து விடலாம் என்று சொன்னார்கள் முக்கால்வாசி ஊரில் உள்ளவர்களும் நெருங்கிய சொந்தங்களும் வந்தவுடன் ஃபங்ஷனும் ஸ்டார்ட் ஆக்கியது ….

பங்ஷன் ஸ்டார்ட் ஆகியவுடன் வேணி நிலா நிலா என்று அழைத்தால் நிலாவும் வேகமாக தனது புடவையை கையால் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்தால் என்ன என்று கேட்டவுடன் நிலாவும் கீழே இறங்கி முத்து அண்ணா மாமாவை கூப்பிட்டுவாங்க நேரம் ஆகுது வேணி கூப்பிடுற என்றவுடன் முத்துவும் எழிலை அழைத்துக் கொண்டு வந்தான் அவன் எழிலை வர சொல்லிவிட்டு முத்துவும் மேடைக்கு வந்தான் அதன் பிறகு எழில் பந்தி பரிமாறும் இடத்திலிருந்து வந்தான்….

அது யாருடா அப்படிப்பட்ட மாமா என்று நிலாவின் தோழிகள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் எழில் ஸ்கை ப்ளூ ஷர்ட் அதற்கு மேட்ச்சாக ஸ்கை ப்ளூ பார்டர் வைத்த வேஷ்டி அணிந்து கொண்டு தனது சட்டையை லேசாக மடக்கி விட்டுக் கொண்டே நடந்து வந்தான் நிலாவின் தோழிகள் வேணி  தங்களது எழில் சாரையும் வரவேற்புக்கு அழைத்திருக்கிறார் போல என்று எண்ணினார்கள் ஆனால் வரவேற்புக்கு இவர் எதற்காக வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு வருகிறார் என்று எண்ணினார்கள்….

அப்பொழுது நிலாவின் தோழி நதியா அவர் எப்படி வந்தால் நமக்கு என்னடி ஆனால் வேஷ்டி சட்டையிலும் அழகாக தானே இருக்கிறார் என்று பேசினார்கள் தலைக்குளித்திருந்திருப்பதால் தனது முடி காற்றில் லேசாக ஆடும்படியாகவும்  ஒரு கையை தலையை கோதிக் கொண்டு நடந்து வந்தான் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்திருந்தான்  சட்டை கை இருப்பக்கமும் மடைக்கி விட்டு இருந்தால் ஒரு கையில் காப்பும் மற்றொரு கையில் கயிறும் கட்டி இருந்தான் ..


அவன் நடந்து வரும் அழகை நிலாவின் தோழி மூவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கல்லூரியில் எப்பொழுதும் இன் பண்ண பேண்ட் சர்ட் உடன் வரும் பார்மல் சர்ட் உடன் வரும் தங்களது சாரா என்று எண்ணினார்கள்  எப்பொழுதும் ஒரு கையில் காப்பும் மற்றொரு கையில் வாட்ச்சும் அணிந்து கொண்டு இருப்பவர் இப்பொழுது வேஷ்டி சட்டைக்கு ஏற்ப வருவதை பார்த்தவுடன் அவரை ஆ வென பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ….

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே என்ன நிலா என்று கேட்டுக் கொண்டே கீழே நிற்கும் நிலாவின் தோளில் கை போட்டு அவளை அழைத்துக் கொண்டு மேலே ஏறினான் நிலாவின் தோழிகள் மூவரும் நிலா எழில் இருவரையும் ஆ வென பார்த்தார்கள் உரிமையாக கை போட்டு அழைத்துக் கொண்டு மேலே செல்கிறார் என்று அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி நிலாவின் தோழிகளிடம் என்னமா நீங்கள் வேணி நிலாவின் தோழிகளாக என்று கேட்டார்…

ஆமாம் என்று சொன்னவுடன் நிலாவின் தோழி மதுமிதா அம்மா நிலாவின் தோளில் கை போட்டோ அழைத்துக் கொண்டு செல்கிறார் அல்ல அவர் யார் என்று கேட்டவுடன் நிலாவின் நெருங்கிய உறவுக்கார பெண்மணி ஒருவர் அதுவா  யாருன்னு தெரியல நிலாவோட தாய் மாமா பையன் தான் என்று சொல்லிக் கொண்டே அருகில் இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தார் என்ன நிலாவின் மாமாவா எழில் சார் என்று வாய்விட்டு சொன்னார்கள் நிலாவின் தோழிகள்….


நிலாவின் தோழிகளுக்கு தங்களது எழில் சார் நிலாவின் தாய்மாமன் மகன் என்று தெரியவந்ததால் அவர்கள் நட்புக்குள் ஏதாவது பிளவு ஏற்படுமா என்பதை நாம் வரும் பதிவுகளை பார்க்கலாம்…

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 82”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *