Skip to content
Home » மகாலட்சுமி 85

மகாலட்சுமி 85

எழில் கீழே இறங்கியவுடன் காவேரி அங்கு கீழே நிற்கும் அனைவரையும் கை காண்பித்தார் பிறகு கணக்கு வழக்கு எல்லாம் பார்த்து விட்டாயா என்று கேட்டார் எழில் மேலே சென்று சாப்பிட்டு முடித்தவுடன் மகா அனைத்து கணக்கு வழக்குகளையும் எழிலிடம் ஒப்படைத்து இருந்தால் ….

அதை இப்பொழுது எழில் மனதில் ஓட்டிப் பார்த்தான்  நால்வரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தவுடன் வேணி வருவதற்கு முன்பாகவே மகா எழிலியிடம் சமையல்காரருக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் பந்தல்காரருக்கு ஒரு பணம் தர வேண்டும் பாத்திரங்கள் கழுவ வந்தவர்களுக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பணம் என்று கணக்கை முழுவதும் வாயால்  ஒப்பித்தால் …

அதை எழிலும் மனதில் பதிய வைத்துக் கொண்டான் அப்பொழுது நிலாவின் தோழிகள் மகாவிடம் மேம் இதை நீங்களே கீழே சொல்லி விட்டு வரலாமே என்று கேட்டார்கள் அவள் அமைதியாக இருந்தால் சொல்ல முடிந்தால் சொல்வோம் இல்லை என்னால் கீழே சென்று சொல்ல முடியாது என்றால் மேம் எழில் சார் மறந்துவிட மாட்டாரா இதை நீங்கள் ஒரு பேப்பரில் கூட எழுதி தரவில்லையே என்றும் கேட்டார்கள்….

அதெல்லாம் அவன் நினைவில் வைத்துக் கொள்வான் என்று சொல்லியிருந்தால் அதை இப்பொழுது நினைவில் எண்ணி பார்த்துவிட்டு அனைவருக்கும் எவ்வளவு பணம் என்று எண்ணி கொடுத்தான் அப்போது சமையல்காரர்களுக்கு 2000 அதிகமாகவே கொடுத்தான் அவர் ஏன் என்று கேட்டதற்கு எடுத்துச் சொல்லுங்கள் நேற்று இரவு வந்தீர்கள் நீங்கள் காலை உணவு கூட சாப்பிடவில்லை….

மதியம் இப்பொழுது எங்கள் உடன் தான் உட்கார்ந்து சாப்பிட்டீர்கள் எங்களுக்காக இவ்வளவு உழைக்கும் உங்களுக்காக நாங்கள் பணம் தருவதில் ஒன்றும் தவறில்லை அதுவும் நீங்கள் செய்ததற்கான கூலி தான் தருகின்றோம் சன்மானம் அல்ல என்றவுடன் அவர்கள் எழில் மற்றும் வீட்டில் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார்கள்…

காவிரி மகா சொல்லி தான் இவன் சேய்க்கிறான் என்பதை உணர்ந்தார் அவன் செய்த செயலாலே எழிலை பார்த்து முறைத்து விட்டு பிறகு சிரித்து விட்டு அமைதியாக அவரது அறைத்துச் சென்று விட்டார் வீட்டில் அனைவரும் அமைதியாக அசதியாக இருப்பதால் அவர்கள் அழைக்க சென்று விட்டார்கள் எழில் அசதியாக இருந்ததால் அமைதியாக போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டான்….

கீழே இருந்து நிலா  வேணி என்று இருவரையும் அழைத்தான் முகில் நிலா  வேனி இருவரையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்மகா நிலா தோழிகள் மூவரையும் சரி நீங்களும் கொஞ்ச நேரம் கீழே இருங்கள் என்றால் மூவரும் மேம்  என்று சொன்னார்கள் இப்பொழுது மாலை 5 மணி தானே ஆகிறது ஒன்றும் பிரச்சனை இல்லை கொஞ்ச நேரம் பொறுங்கள் இரவு முழுவதும் இருக்கிறது என்றவுடன் சரி என்று அமைதியாக  கீழே இறங்கினார்கள்…

6 பேரும் கீழே இறங்கியவுடன் எழில் நிலாவின்  தோழி மூவரையும் பார்த்து விருந்தாளிகள் வந்தால் தங்க சொல்லும் அறையில் மூவரையும் தங்க சொன்னான் மூவரும் ஒரே அறையில் இருப்பதால் உங்களுக்கு சம்மதம் தானே என்று கேட்டான் சார் நாங்கள் மூவரும் ஒரே அறையில் இருப்பது எங்களுக்கு சந்தோஷம்தான் என்று சொன்னார்கள் பிறகு எழில் நிலாவிடம் நிலா லேசாக தலை வலிப்பது போல இருக்குது டீ போட்டு எடுத்துக் கொண்டு வா என்றான்…

மற்ற நேரமாக இருந்தால் அவனிடம் வம்பு இழுத்து இருப்பாள் இப்பொழுது அவன் அதிக வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கும் தெரிந்ததால் வேறு எதுவும் பேசாமல் சமையலறைக்குச் சென்றாள் நிலாவின் தோழிகள் உனக்கு டீ போட தெரியுமா என்று கேட்டார்கள் …..

நிலா மூவரையும் பார்த்து முறைத்துவிட்டு பிறகு சிரித்து விட்டால் அதெல்லாம் எனக்கு சமைக்கவே தெரியும் ஆனால் சமைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தால் வேணிக்கு ரொம்ப நேரமாக நின்றதால் கால் வலித்தது அவள் அங்கு உள்ள ஷோபாவில் கால்நீட்டி உட்கார்ந்து கொண்டாள் …

முகில் வேனியின் அருகில் உட்கார்ந்து இருந்தான் முகில் வேணி இடம் கால் ரொம்ப  வலிக்கிறதா என்று கேட்கும் பொழுது எழில் வேணியின் காலை தன் மடியில் வைத்து அவளது காலை அமுக்கி விட்டான் அண்ணா அடியில பாதம் ரொம்ப வலிக்குது என்றவுடன் கீழே அமுக்கி விட்டான் நிலாவின் தோழி மூவரும் அதை ஆ வென  வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் ….

கல்லூரியில் சார் சார் என்று வாய்க்கு ஆயிரம் முறை அழைக்கும் வேனியா இது என்று எண்ணினார்கள் வீட்டில் இப்படி உரிமையாக இங்கு வலிக்கிறது இங்கு அமுக்கிவிடு என்று கேட்கிறாள் என்று எண்ணினார்கள் அப்பொழுது நிலா டீ போட்டு எடுத்துக்கொண்டு சிரித்துக் கொண்டே வந்து தனது தோழிகள் மூவரின் தலையிலும் கொட்டி விட்டு எதற்கு இப்படி கண்ணு வைக்கிறீர்கள்…

அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்று சொன்னால் அது எங்களுக்கும் புரிகிறது என்று நிலாவைப் பார்த்து முறைத்தார்கள் பிறகு நிலா தனது தோழிகள் மூவரின் கையிலும் டீயை வைத்தால் நீ போட்ட டீ யை குடிக்கலாமா உன்னை நம்பி என்று கேட்டார்கள் அப்பொழுது எழில் அவனது கையில் ஒரு டீ கிளாஸ் எடுத்துக் கொண்டு அதெல்லாம் நம்பி குடிக்கலாம் …

குடியுங்கள் நன்றாக தான் செய்வாள் ஆனால் வீட்டில் அனைவரையும் ஏமாற்றுவாள் அவளுக்கு நன்றாகவே சமைக்க வரும் யாரும் இல்லாத வேலையிலும் யாருக்காவது உடம்பு சரியில்லை என்ற வேலையில் மட்டும் தான் இவன் சமையல் கட்டிற்கு செல்வாள் என்று சொல்லிக் கொண்டே அவள் போட்டுக் கொடுத்த டீயை ஒவ்வொரு மிடராக ரசித்து குடித்தான்..

பிறகு வேணி அண்ணா எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன் என்றவுடன் முகில் வேணி  இருவரையும் சரி நீங்கள் இருவரும் போய் படுங்கள் என்றான் அவர்கள் சென்ற பத்து நிமிடத்தில் சுந்தரி அங்கு வந்தார் நிலா எனக்கு டீ என்று கேட்டுக் கொண்டே வந்தார் அதனா பார்த்தேன் உனக்கு உன் மருமகள் போட்ட டீ மூக்கில் வந்து மூக்கு வேர்த்து இருக்கு மேஎன்று சிரித்துக் கொண்டே சொன்னேன்…

சுந்தரி  தனது மகனை தோளில் இடித்துவிட்டு அவன் அருகில் அமர்ந்தார் பிறகு நிலா தனது அத்தை சுந்தரிக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவுடன் அவர் குடித்துவிட்டு எழில் தோளில் சாய்ந்தார் அம்மா என்ன பண்ணுது என்று கேட்டான் ஒன்னும் பண்ணலடா என்று சொல்லிவிட்டு லேசாக அவரது கண்கள் கலங்கியது அப்பொழுது நிலா அவரது அருகில் உட்கார்ந்து கொண்டு அவரது கையை தனது கையில் வைத்துக் கொண்டு உன் மகனும் மருமகளும் இல்லாமல் இந்த வீட்டில் எந்த விசேஷமும் நடக்காது…


இப்ப நடந்தது கூட முழுசா அவங்க தலைமையில் தான் என்ன அவங்க இதுல முன்னாடி நின்று நடத்தி வைக்கலா இந்த வீட்டில் நடக்கும் எல்லாமே சீக்கிரம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது அதற்கான முழு முதல் புள்ளியா இப்போ மகா மாசமாக இருக்கிறாள் ப்ளீஸ் நீயும் வருத்தப்பட்டு வீட்டில் இருக்கிறார்களையும் வருத்தப்படா வைத்து விடாதே…

இந்த வீட்ல இருக்க மொத்த பேரும் உன்ன தான் நம்பி இருக்காங்க மேல இருக்க மகாவும் மகிழ் மாமா கூட உன்னை நம்பி மட்டும்தான் மேலே போய் இருக்காங்க நீ லேசா கண் கலங்கினா அவங்க ரெண்டு பேரோட நிலைமையையும்  நினைச்சு பாரு என்று சொன்னால் அப்பொழுதுதான் மகா கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் தனது தங்கை தனது அத்தையிடம் பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டுக் கொண்டே இறங்கி வந்தால்….


அவள் இறங்கி வருவதை சுந்தரியும் பார்த்தார் மகா ஒரு சில நிமிடம் நின்று தனது அத்தையை அப்படியே பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக கீழே உள்ள பூந்தோட்டத்திற்கு சென்றாள் அவள் பின்னாடியே மகிழும் இறங்கி வந்தான் தனது பெரிய மகன் இறங்கி வருவதை பார்த்துவிட்டு டேய் ஒரு நிமிஷம் நில்லு டா என்றார் ….

மகிழுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை தனது அம்மா தன்னிடம் பேசுவார் என்று அவன் எண்ணவில்லை பிறகு அமைதியாக நின்றான் சுந்தரி தனது கண்ணீல் இருந்து வடியும் கண்ணீரை துடைத்துவிட்டு அவனது முன்பு வந்து நின்றார் உன்னால் என்னை பார்த்து கூட பேச முடியவில்லையா என்று கேட்டார் மகிழ் அமைதியாக தலை குனிந்து நின்றான் …

பிறகு அவனது தாடையில் ஓங்கி ஒன்று போட்டார் அவன் அப்பொழுதும் அமைதியாக இருந்தான் யாருக்கும் சுந்தரியை  தடுக்க வேண்டும் என்று கூட எண்ணவில்லை அப்பொழுதுதான் காவேரி அவரது அறையில் இருந்து வந்தார் சுந்தரி மகிழை அடிப்பதை பார்த்துவிட்டு சுந்தரி என்று வேகமாக கத்தினார் இப்பொழுது கூட காவிரியால் தனது மருமகனை அவருடைய அம்மாவாகவே இருந்தாலும் சுந்தரி அடிப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்….

மகிழ் மகா மேல் அவருக்கு வருத்தம் இருக்கிறது ஏன் கோபம் கூட இருக்கிறது ஆனால் இப்படி கை நீட்டும் அளவிற்கு அவர் எப்பொழுதும் யோசித்ததில்லை அதுவும் இப்பொழுது சுந்தரி மகிழை அறைந்து விட்டார் என்றவுடன் சுந்தரி என்று வேகமாக கத்திருந்தார் சுந்தரி தனது அண்ணியான காவேரியை முறைத்து விட்டு தனது பெரிய மகனை பார்த்தார் ….

அவன் தனது தாயை பார்த்து சிரித்து விட்டு அமைதியாக வெளியே சென்றான் நிலாவின் தோழிகள் மூவருக்கும் இங்கு நடக்கும் எந்த விஷயமும் புரியவில்லை அதனால் அமைதியாக இருந்தார்கள் இந்த சூழ்நிலையில் நாம் எதுவும் பேசக்கூடாது எதுவாக இருந்தாலும் நாம் இறுதியில் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணி அமைதியாகவே இருந்தார்கள்…

காவேரி கத்திய கத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது அறையில் இருந்து வெளியில் வந்திருந்தார்கள் காவிரி எதற்காக இப்படி கத்தினார் என்று தெரியாமல் அனைவரும் சுந்தரி காவேரியை பார்த்துக் கொண்டே இருந்தார்கள் அப்பொழுது கோதை தான் தனது அக்காவிடம் வந்து அக்கா எதற்காக இப்பொழுது அண்ணியை வேகமாக அழைத்தீர்கள் என்ன ஆயிற்று என்று கேட்டால் ….

அப்பொழுது காவேரி சுந்தரியை பார்த்து  எனக்கு இனிக்கு குழந்தை பிறந்த பொழுது தெரிந்த உண்மை உனக்கு எப்பொழுது தெரியும் என்று கேட்டார் சுந்தரி தனது பெரிய நாத்தனாரை ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தார் அப்பொழுது கோதை தான் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் எல்லாம் என்னால் வந்தது என்னால் எல்லாம் வந்தது என்றார் ….

காவேரி கோதையிடம் என்னடி சொல்கிறாய் என்று கேட்டார் எனக்கு தெரிந்தவரை மகா அவளது விருப்பத்தை மறைத்ததற்கு நான் தான் காரணம் என்று நினைக்கிறேன் என்ற உடன் அவள் விரும்புவது உனக்கு தெரியுமா என்று கேட்டார் இல்லை அவள் விரும்புவது எனக்கு தெரியாது ஆனால் அதற்கு நான் தான் காரணம் ஆனால் அவள் உண்மையை மறைக்க நான் தான் காரணம் என்றார்….

அப்படி நீ என்னடி செய்தாய் என்று கேட்டார் எழில் நிலாவிற்கு கூட ஒன்றும் புரியவில்லை வீட்டில் உள்ள சிறியவர்கள் யாருக்குமே இதற்கு கோதை எப்படி காரணமானார் என்று புரியவில்லை அனைவரும் கோதையை பார்த்துக் கொண்டிருந்தார்கள் சுந்தரி கூட கோதையை தான் பார்த்தார் வீட்டில் உள்ள அனைவரும் கோதையை பார்த்துக் கொண்டிருந்தார்கள் காவேரி தான் வேகமாக கத்தினார் …

அப்படி நீ என்ன செய்த கோதை என்று கேட்டார் கோதை என்ன விளக்கம் தருவார் தன்னுடைய காவேரி அக்காவுக்கு கோதை சொல்லும் விளக்கத்தை காவேரி ஏற்றுக்கொள்வாரா மகிழ் மகா இருவரையும் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 85”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *