நிலாவின் தோழிகள் எழில் நிலா வேணி அனைவரும் மேலே மொட்டை மாடிக்கு சென்றார்கள் மகா அனைவரையும் பார்த்து சிரித்து விட்டு சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டால் நாங்கள் சாப்பிட்டு விட்டோம் மேம் நீங்கள் சாப்பிட்டீர்களா என்று நிலாவின் தோழிகள் மூவரும் கேட்டார்கள் ….
சரி வாருங்கள் வந்து உட்காருங்கள் என்று அனைவரையும் உட்கார வைத்தால் அனைவரும் வந்து உட்கார்ந்தவுடன் நிலா மகிழ் மடியில் படுத்துக்கொண்டாள் மகிழ் நிலாவை பார்த்து சிரித்து விட்டு அசதியா இருக்கா என்று கேட்டான் நிலா மகிழை பார்த்து கண் சிமிட்டி விட்டு அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா இருந்தாலும் கொஞ்சம் கஷ்டம் தான் போல இவ்வளவு நாள் நீ செஞ்ச வேலையை நாங்க செய்வது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு என்று சிரித்தால்….
அவன் அவளது தலையோடு தலை கீழே குனிந்து முட்டி விட்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்தான் வேணி எழில் மடியில் படுத்துக் கொண்டால் மகா வேணி காலை எடுத்து வைத்து அமுக்கி விட்டாள் அண்ணி ஒன்றும் இல்லை என்றால் எவ்வளவு நேரம் நின்று கொண்டு இருந்தாய் கால் வலிக்கும் ஒன்னும் இல்லைன்னு சொல்ற என்று சொல்லிவிட்டு அமுக்கி விட்டாள்….
எழில் மகா இருவரும் வேணியை பார்த்து சிரித்தார்கள் அங்க அண்ணி வலிகிறது என்றும் விட்டு அமைதியாக இருந்தால் நிலாவின் தோழிகள் மூவரும் இங்கு நடக்கும் அனைத்தையும் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள் மகா மூவரையும் பார்த்து சிரித்து விட்டு இவ்வளவுதான் எங்களோட உறவு தப்பா நினைக்கிறவங்களுக்கு நாங்க விளக்கலாம் கொடுக்க முடியாது …..
நீங்க நிலாவின் தோழிகள் என்பதால் மட்டும் தான் உங்களுக்கு விளக்கம் கொடுக்கணும்னு நினைக்கிறேன் மற்றபடி நாங்க வேற யாருக்கும் விளக்கம் கொடுக்க தயாரா இல்லை எங்களுக்கு தெரியும் எங்களோட உறவை பற்றியும் அதன் புனிதத்தை பற்றியும் அடுத்தவங்களுக்கு எப்படி நினைபார்கள் என்பதற்காக நாங்கள் அடுத்தவர்களுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை…
அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும் அதற்காக நாங்கள் ஒவ்வொருவருக்காக சென்று விளக்கம் கொடுத்து விட்டு செல்ல முடியாது எங்களது உறவையும் எங்களது உறவின் புனிதத்தையும் எங்களைச் சுற்றியுள்ள முக்கால் வாசிப்பேற்றுக்கு தெரியும் அப்படி இருக்கும் பொழுது நாங்கள் எங்களையும் எங்கள் உறவையும் தவறாக பேசும் கொஞ்சம் பேர் இருக்காங்க என்பதற்காக நாங்கள் எங்களது உறவை முறித்துக் கொள்ளவோ இல்லை ஒவ்வொருவருக்காக சென்று விளக்கம் சொல்லவும் தயாராக இல்லை என்றால்…
மேம் நீங்கள் சொல்வதெல்லாம் நானும் ஒத்துக் கொள்கிறேன் இப்பொழுது நீங்கள் சொன்னது போல் எழில் சாருக்கும் நிலாவுக்கும் அத்தை மகன் மாமன் மகள் என்ற உறவு தான் இருக்கிறது நீங்களும் எழில் சாரும் நெருங்கிய நண்பர்கள் தான் வேணிக்கு இவர்கள் இருவரும் அண்ணன் தான் இவை அனைத்தையும் நான் ஒத்துக் கொள்கிறேன் நான் எதையும் நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை…
ஆனால் நான் ஒன்று கேட்பேன் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நிலவின் தோழியான மது கேட்டால் அனைவரும் மதுவை அமைதியாக பார்த்தார்கள் மது மகாவை இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு மேம் நாளைக்கு எழில் சாருக்கு கல்யாணம் ஆகலாம் இருங்க எழில் சார் கூட வேண்டாம் இப்பொழுது உங்களை மகிழ் அண்ணன் திருமணம் செய்து இருக்கிறார் …
அவருக்கு ஏதோ ஒரு இடத்தில் உங்கள் இருவரின் நட்பின் மீதும் பொசசிவ் வந்ததில்லையா கோபம் வந்தது இல்லையா திருமணத்திற்கு முன்பாகட்டும் திருமணத்திற்கு பின்பாகட்டும் உங்களது திருமணம் லவ் மேரேஜ் என்று நிலா சொல்லி இருக்கிறாள் என்றவுடன் மகா சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தால் மகிழ் சிரித்து விட்டு உன்னோட பேர் என்ன மா என்று கேட்டான் ….
மதுமிதா என்றவுடன் நீ சொல்வது என்னவோ உண்மைதான் ஏன் எனக்கு இவர்கள் நட்பின் மீது பொசசிவ் வந்து இருக்கு நான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் திருமணத்திற்கு பின்பு கூட இவளுக்கு என்னை விட இவன் தான் முக்கியம் என்பதை விட என்னால் நிற்க முடியாத இடத்தில் கூட இவன் தான் நின்றிருக்கிறான் அதை சுற்றி இருப்பவர்கள் நல்லெண்ணத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது தவறாக எடுத்துக் கொண்டால் தவறு ஆனால் நான் தவறாக எடுத்துக் கொண்டதில்லை …
பொசசிவ் அது வேறு இது வேறு என்றான் அண்ணா அதையேதான் நானும் சொல்ல வருகிறேன் நாளைக்கு எழில் சாருக்கு திருமணமாகலாம் அவர் நிலாவை கூட திருமணம் செய்து கொள்ளட்டும் நாங்கள் தவறாக எண்ணவில்லை நீங்கள் வீட்டிலேயே கூட பேசி இருக்கலாம் இல்லை நிலா இல்லாமல் வேறொரு பெண் கூட இந்த வீட்டிற்கு வரலாம் அவர்களுக்கு இவர்கள் உறவில் தவறான எண்ணம் இருக்கும் என்று நான் சொல்லவில்லை….
அந்த பொசசிவ் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போகும் போது உறவு முறிந்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது அது மகா மேம் எழில் சாருடைய உறவாக இருக்கலாம் இல்ல எழில் சார் அவருடைய மனைவி அவர்களுக்குள் ஏற்படும் கணவன் மனைவி உறவாக இருக்கலாம் நான் தவறாக சொன்னால் மன்னித்து விடுங்கள் என்று அமைதியாக இருந்தால் மகா மதுவை பார்த்துவிட்டு மது நீ சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை நீ சொன்னது போல் மாமாவிற்கு அவருடைய பொசசிவ் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போனால் அது ஆபத்துதான் ….
அதேபோல் எழிலுக்கு வரும் மனைவிக்கும் போசசிவ் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போனாலும் அது ஆபத்துதான் அது அவர்களுக்கு மட்டும் இல்லை நீ கூற வருவதில் பாதி விட்டு விட்டாய் இப்பொழுது கணவன் மனைவியாக இருக்கும் எனக்கும் மகிழ் மாமாவுக்கும் இடையில் கூட ஒரு சிறு சண்டையோ இல்ல ஏதோ ஒன்னு வரலாம் அப்படி இருக்கும் பொழுது அது மூணாவது மனிதனாகிய எழிலிடம் சென்று அதை பற்றி அவன் கேட்டால் எனக்கும் மகிழ் மாமாவிற்கும் இடையில் அந்த விரிசல் பெருசாக கூட ஆகலாம்…
இல்லை நான் மகிழ் மாமாவை விட்டு தர கூடாது என்று எண்ணினால் எழிலை விட்டு தரக்கூடிய சூழ்நிலை வரலாம் அதேபோலத்தான் எழிலுக்கு வரும் மனைவியாலும் வரலாம். என்று நீ கேட்காமல் விட்டுவிட்டாய் அதை கேட்க வேண்டாம் என்று விட்டு விட்டாயா இல்லை கேட்க கஷ்டப்பட்டு கொண்டு விட்டு விட்டாயா என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் நீ சொல்வது போல் நடக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது அதையும் தாண்டி தான் நாங்கள் எங்கள் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறோம்…
இதெல்லாம் வராதா வருமா அப்படி என்றெல்லாம் தாண்டி வரத்தான் செய்யும் அதையும் தாண்டி தான் உறவை கொண்டு செல்ல வேண்டும் இப்பொழுது இந்த குடும்பத்திலேயே நாங்கள் இத்தனை பேர் இருக்கும் பொழுது எந்த பிரச்சினைகளும் இல்லை என்று நினைக்கின்றாயா? எங்களை விட்டுவிடு என்னுடைய பெரியம்மா அம்மா அத்தை இருக்கிறார்கள் அவர்களுக்கும் சமையல் அறையிலேயே நிறைய சண்டைகள் சச்சரவுகள் இருக்கிறது …
ஆனால் அதையும் தாண்டி தான் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கு அரை மணி நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும் ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடும் ஒரு நாள் முழுக்க இருக்கும் பத்து நாட்கள் கூட இருக்கும் ஒவ்வொருவர்கள் மனதில் வைத்துக் கொண்டும் இருப்பார்கள் ஆனால் அதற்காக உறவை விட்டு தர முடியாது அல்லவா என்றால் மேம் நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கிறது ஆனால் விளக்கம் இது அல்ல என்றால் …
மேம் இந்த உறவை விட்டுக் கொடுக்க முடியாது இவை அனைத்தும் வேறு ஆனால் கணவன் மனைவி என்று வந்தபின் இருக்கும் உறவு வேறு அதை புரியும் படியாக தான் நானும் கேட்டேன் நீங்களும் எனக்கு முதலில் அப்படித்தான் சொன்னீர்கள் ஆயிரம் உறவு இருந்தாலும் அதில் வரும் சண்டை சச்சரவுகளை அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள் ஆனால் தனக்கு என்று இருக்கும் துணையை ஒருவர் இன்னொருவருக்காக விட்டுக் கொடுப்பார்களா? …
இப்பொழுது நீங்களும் மகிழ் அண்ணனும் நெருக்கமாக இருக்கும் பொழுது இல்லை சாதாரணமாக பேசி கொண்டு இருக்கும் போது நீங்கள் சொன்னதுபோல் எழில் சார் தெரியாமல் கூட வந்து விடுகிறார் அப்படி இருக்கும் சூழ்நிலையில் மகிழ் அண்ணா ஒரு சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம் ஒரு சில நேரங்களில் வெளிப்படுத்தவும் செய்வார். ..
ஏன் அதே கோபம் உங்களுக்கும் ஒரு சில நேரங்களில் வரலாம் அதை நீங்கள் நார்மல் ஆகவே எழில் சாரிடம் எடுத்துச் சொன்னால் கூட அது அவருக்கு தப்பாக தெரியாமல் அமைதியாக விட்டுவிடலாம் ஆனால் நாளைக்கு அவருக்கென்று ஒரு உறவு வரும் பொழுது அப்பொழுது நீங்கள் சொல்லும்போது எழில் சாரின் மனைவிக்கு வருத்தமாக இருக்கும் அல்லவா அதே போல் தான் உங்களுக்கும் அதைப்பற்றி சொல்கிறேன் என்றவுடன் மகா அமைதியாக இருந்தால் …
எழில் எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தான் நிலா தான் எழுந்து உட்கார்ந்தால் அப்படி ஒரு சூழ்நிலை இந்த குடும்பத்தில் எப்பொழுதும் வராது அப்படி ஒரு பெண்ணை எனது எழில் மாமாவும் விரும்பவும் மாட்டார் அப்படி அவர் விரும்பக்கூடிய பெண் என்றாள் அப்படி இருக்கும் பெண்ணை எனது அக்கா இந்த வீட்டுக்கு மருமகளாகவும் எழில் மாமாக்கு மனைவியாகவும் கொண்டு வரவும் மாட்டாள் என்றால்….
நிலா உனக்கு புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை எழில் சாருக்கு விருப்பம் என்று ஒன்று வரலாம் அப்படி அவர் விரும்பும் பெண் இத்தனை குணங்களும் உடையவளாக தான் இருப்பார்கள் என்று எந்த சட்டமும் கிடையாது சரியா எழில் சார் விரும்பி விட்டார் என்பதற்காக மட்டுமே மகா மேம் ஒரு பெண்ணை இந்த வீட்டிற்கு துணையாக அழைத்துக் கொண்டு வரலாம் அவர் அனைத்திலும் நல்லவராக இருக்கலாம் அதற்காக தனது கணவனை விட்டுக் கொடுக்கும் அளவிற்கு இருக்க மாட்டார்கள்….
சரியா என்று கேட்டவுடன் எழில் நிலா கையை இறுகப் பற்றினான் நிலாவும் எழில் கையை இறுக பற்றினால் அவர்களது விரல் நகம் இன்னொருவர் மேல் பதியும் அளவிற்கு இறுக்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள் மகிழ் எழில் நிலா இருவரையும் பார்த்து விட்டு ப்ளீஸ்மா அந்த பேச்சு வேண்டாம் எங்களால் முடிந்த அளவு நாங்கள் இந்த உறவை தக்க வைத்துக் கொள்வோம் என்றவுடன் வேணி அமைதியாக விட்டு சரி போய்ட்டு தூங்கலாமா என்று கேட்டால்…
சரி என்று விட்டு எழில் நிலா இருவரும் கீழே இறங்கினார்கள் அவர்கள் இருவரும் கீழே இறங்கியுடன் நிலாவின் தோழிகளும் சாரி மேம் ஏதாவது தவறாக கேட்டிருந்தால் மன்னித்து விடுங்கள் ஆனால் நாங்கள் இருவரையும் தவறாக எண்ண மாட்டோம் அதேபோல் உங்களது உறவையும் கல்லூரியில் சொல்ல மாட்டோம் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்கள் அனைவரும் கீழே இறங்கியவுடன் வேணி மகிழ் மகா இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் …..
மகிழ் சிரித்துக் கொண்டே உனக்கு என்ன வேணி சந்தேகம் என்றான் அண்ணா இதை நான் சந்தேகம் என்று கூட சொல்ல முடியாது நான் முக்கால்வாசி கன்பார்ம் செய்துவிட்டு தான் கேட்கிறேன் என்றால் என்ன வேணி என்றான் எழில் அண்ணனை நிலா விரும்புகிறாளா என்று கேட்டவுடன் மகா சிரித்தாள் இது ஒன்றுதான் உனக்கு சந்தேகமா என்று கேட்டாள் எழில் அண்ணனும் நிலாவை விரும்புகிறாரா என்ற சந்தேகம் தான் ஆனால் அவர்கள் இருவரும் அவர்களது காதலை சொல்லவில்லையோ என்று எண்ணம் என்றால்….
மகா சிரித்து விட்டு நிலா எழிலை விரும்பவில்லை அவள் அனைவரையும் எப்படி நினைக்கிறோளோ அப்படித்தான் இவனுடனும் பழகுகிறாள் அவனையும் அப்படி தான் நினைக்கிறாள் என்று விட்டு ஒரு நிமிடம் கண்மூடி கண் திறந்து விட்டு கீழே எட்டிப் பார்த்துவிட்டு எல்லோரும் இறங்கி விட்டார்கள் என்றவுடன் எழில் நிலாவை இரண்டு வருடங்களாக விரும்புகிறான் என்றாள்….
என்ன இரண்டு வருடங்களாக என்று அதிர்ச்சியாகி கேட்டால் இது நிலாவிற்கு தெரியுமா நிலாவிடம் அவரது காதலை சொல்லிவிட்டாரா என்று கேட்டால் மகா இல்லை என்பது போல் மண்டை ஆட்டினால் என்ன அண்ணி சொல்கிறீர்கள் என்று வேணி மகாவிடம் கேட்டால் ஆமாம் வேணி அவன் இரண்டு வருடங்களாக விரும்புகிறான் ஆனால் அவனது விருப்பத்தை இதுவரை நிலாவிடம் சொன்னதில்லை ….
நீங்கள் சொல்ல வேண்டியது தானே என்றால் அவன் விருப்பத்தை அவன் தான் சொல்ல வேண்டும் நாம் சொல்ல முடியாது என்றால் வேணி மகாவை முறைத்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தால் வேணி மனதிற்குள் ஆயிரம் குழப்பங்கள் இருந்தது எழில் அண்ணன் எதற்காக அவரது காதலை சொல்லாமல் இருக்கிறார் அப்படி இருக்கும் நிலையில் நிலாவிற்கு வேறு ஒருவர் மேல் விருப்பம் வரக் கூடலாமே….
இல்லை என்றால் வீட்டிலே வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்கலாமே என்று மனதில் எண்ணினால் வேணி எண்ணியது போல் பிரச்சனைகள் ஏதாவது நிலா எழில் இருவரும் இணைவதற்கு வருமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️