Skip to content
Home » மகாலட்சுமி 89

மகாலட்சுமி 89

வேணி மகாவிடம் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தால் அப்பொழுது மகிழ் தான் சரி வேணி உனக்கு எந்த குழப்பமும் வேண்டாம் அவனது விருப்பத்தை எப்பொழுது சொல்ல வேண்டுமோ அப்பொழுது சொல்லிக் கொள்வான் இதில் நாம் தலையிட முடியாது என்றான் நேரம் ஆகிறது பாரு நீ போய் தூங்கு என்றான்….

வேணி வேறு எதுவும் பேசாமல் அமைதியாக கீழே இறங்கினால் மகா வேணி சென்றவுடன் மகிழை பார்த்து சிரித்தாள் மகிழும் மகாவை பார்த்து சிரித்து விட்டு சரி நேரம் ஆகிறது பார்த்துக்கொள்ளலாம் என்று அழைத்துக் கொண்டு அவர்கள் படுக்க அறைக்கும் சென்றான் நிலா தனது நண்பர்களுடன் தூங்கலாம் என்று எண்ணி இருந்தால் ஆனால் அவர்கள் பேசிய பேச்சால் அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்….


  நிலாவின் தோழிகள் மூவரும் அவர்களுக்கு என்று கொடுத்த அறைக்கு சென்று விட்டார்கள் நிலாவின் தோழிகள் மற்ற இருவரும் அறைக்குள் சென்றவுடன் மதுவிடம் மது நீ எதற்காக அவர்கள் குடும்ப விஷயத்தில் இவ்வளவு மூக்கை நுழைகிறாய் என்று கேட்டார்கள் நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லையே இவ்வளவு அன்னுணியமாக இருக்கும் உறவுகளுகுள் விரிசல் வந்து விடக்கூடாது என்பதற்காக தானே கேட்கிறேன் என்றால்……

மது அதைப்பற்றி கவலை நமக்கு எதற்கு அவர்கள் இத்தனை வருடங்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோன்று அவர்களது வாழ்க்கையை பார்த்துக் கொள்வார்கள் சரி நான் பேசுவது தவறாக கூட இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு மது அமைதியாக படுத்து விட்டாள் நிலவின் தோழிகள் இருவரும் இவள் என்ன இப்படி பேசுகிறார்கள் என்று எண்ணிவிட்டு நேரமாகுவதால் காலையில் எழுந்து கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் அமைதியாக படித்து விட்டார்கள்…

எழில் நிலாவின் அறைக்கு வந்தான் நிலவின் அறை கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்தது என்ன மாமா என்று கேட்டால் எனக்கு ஒரு சந்தேகம் என்றவுடன் நிலா சிரித்து விட்டு எனக்கும் அந்த சந்தேகம் வந்துவிட்டது மாமா என்றால் என்ன நிலா சொல்கிறாய் உனக்கு தெரியுமா என்று கேட்டான் அவள் உன்னை சைட் அடித்தால் என்று தெரியும் ஆனால் அவள் உன்னை விரும்புகிறாள் என்று எனக்கு இப்பொழுதுதான் தெரிந்து என்றால்….

மது உண்மையாக என்னை விரும்புகிறாள் என்று நினைக்கிறாயா என்றான் இது சந்தேகம் இல்லை மாமா கன்பார்ம் அவள் பேசிய பேச்சிலிருந்து அனைத்தும் தெரிந்து விட்டது என்றால் மகிழ் மகா இருவரும் அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் வேணியும் கீழே இறங்கி நிலாவின் அறைக்கு வந்தால் எழில் அங்கு இருப்பதை பார்த்துவிட்டு அண்ணா நீயும் இங்கு தான் இருக்கிறாயா என்று கேட்டுவிட்டு அதே கேள்விதான் வேணியும் கேட்டால்…

எழில் நிலா இருவரும் வேணியை பார்த்து சிரித்துவிட்டு அந்த எண்ணம் தான் எங்களுக்கும் இருக்கிறது வேணி என்றார்கள் அண்ணா இதை இப்பொழுது எப்படி சரி செய்வது என்று கேட்டால் அப்படி அவளுடைய விருப்பத்தை என்னிடம் சொன்னால் நான் பேசிக் கொள்கிறேன் வேணி நீ அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றான்…

நிலா வேணி பார்த்து சிரித்து விட்டு அவர் பார்த்துக் கொள்வார் வேணி என்றால் எழில் சரி என்று விட்டு வெளியில் வந்தான்  வேணியும் எழில் உடனே வெளியில் வந்தால் என்ன வேணி என்னை குறுகுறுவென பார்க்கிறாய் என்று அவனுது அறைக்கு சென்று கொண்டே கேட்டான் அவனது அரை தாண்டி தான் வேனி முகில்  அறையும் இருக்கிறது பிறகு அவனாகவே ஒரு நிமிடம் நின்று மகாவிடம் எதையாவது கேட்டு தெரிந்து கொண்டு வந்தாயா என்று கேட்டான் ….

வேணி அண்ணா அது உண்மை தானா என்றவுடன் அவள் என்ன சொன்னாலோ அது மட்டும் உண்மை நீயாக எதையாவது கற்பனை செய்து இருந்தால் அது எதற்கும் நான் பொறுப்பல்ல என்று சொல்லி சிரித்துவிட்டு அவனது அறைக்கு சென்றான் நிலா தன்னை விரும்பவில்லை என்பதை அவன் சூசகமாக சொல்லி செல்கிறான் என்பதை வேணியும் உணர்ந்து விட்டேன் சிரித்துக் கொண்டே அவளது  அரைக்குச் சென்றால்….

முகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவனுக்கு அசதி என்று தான் சொல்ல வேண்டும் வேணி முகிலை பார்த்து சிரித்துவிட்டு அவனது அருகில் வந்து உட்கார்ந்து நான் உங்களை திருமணம் செய்யும் போது உங்கள் மேல் எனக்கு எந்த விருப்பமும் இல்லை தான் ஆனால் இப்பொழுது உங்களை விட எனக்கு வெரோரு நல்ல துணை கிடைத்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது …

எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது ஆனால் என்னுடைய விருப்பத்தை நீங்கள் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது சொல்ல முடியவில்லை அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்படி பட்ட பெரிய குடும்பம் கிடைப்பதற்கும் நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அதற்கு எல்லாம் காரணம் நீங்கள் தான் என்று வாய்விட்டு சொல்லிவிட்டு முகிலையே பார்த்துக் கொண்டு இருந்தாள்….

வேணி அமைதியாக முகில் தலையை லேசாக கலைத்துவிட்டு அவனது அருகில் படுத்தாள் இவள் பேசிய எதுவுமே முகில் காதில் விழவில்லை என்று தான் சொல்ல வேண்டும் முகில் உண்மையாகவே ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருக்கிறான் காலை பொழுதும் விடிந்தது எழில் முகிலிடம் இன்று அனைவரையும் நீயே காரில் அழைத்துக் கொண்டு சென்று விடு என்றான்…

டேய் என்னடா என்று கேட்டான் நான் ஸ்கூட்டியில் வந்து விடுகிறேன் கல்லூரியில் நான் ஸ்கூட்டி சாவியை வேணி இடம் கொடுத்து விடுகிறேன் மாலை நிலாவும் வேணியும் ஸ்கூட்டியில் வந்து விடுவார்கள்  நீ இவர்களை காலேஜில் இறக்கிவிட்டு காரை அங்கே நிறுத்திவிட்டு நீ கடைக்கு சென்று விடு என்றவுடன் வேணி முந்திக்கொண்டு அவர் எப்படி அண்ணா கடைக்கு செல்வார் என்று கேட்டால்….

வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக வேணியை பார்த்தார்கள் நிலாவிற்கு லேசாக சிரிப்பு வந்துவிட்டது உதிரனும் சிரித்து விட்டான் முகில் இருவரையும் பார்த்து முறைத்து விட்டு  நிலா தான் சின்ன புள்ள சிரிக்கிறா உனக்கு அறிவு இல்லை என்றான் நீ என்ன குழந்தை உனக்காக உன் பொண்ணாட்டி கேட்ட உடனே உனக்கு கோவம் வந்துருச்சு என்றவுடன் முகில் ஆமாம் அவ என் பொண்டாட்டி எனக்காக தான் கேட்பாள் என்று சொல்லி கொண்டே சிரித்து விட்டான்…

வேணி அதன் பிறகு தான் தான் பேசியதை எண்ணி நாக்கை கடித்து விட்டு அமைதியாக எழிலை பார்த்தாள் எழில் வாய்க்குள்ளே வேணியை பார்த்து மெதுவாக சிரித்து விட்டு அவ்வளவு எல்லாம் நீ கஷ்டப்பட வேண்டாமா உன்னோட மகிழ் அண்ணா வந்து உன் புருஷனை கூப்பிட்டு போய் கடையில் விட்டு விடுவார்  இல்லையென்றால் முத்து வந்து கூட்டிட்டு போவான் என்ற பிறகு அனைவரும் முகிலுடன் கல்லூரிக்குச் சென்று இறங்கினார்கள்….

முகில் வேணியிடம் சாவி கொடுத்துவிட்டு வேணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக சென்று விட்டான் மகாவும் அவர்களுடனே கல்லூரிக்கு வந்தால் ஆனால் கல்லூரி வாசலுக்கு வெளியே இறங்கி கொண்டாள் மாலை கல்லூரி முடிந்து எழில் சொன்னது போல் எழில் வந்து ஸ்கூட்டியில் வேணி நிலாவும் மகாவும் எழிலும் காரிலும் வீட்டிற்கு சென்று விட்டார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது…

இரண்டு நாட்களுக்கு பிறகு மகா கல்லூரி கிளம்பி கீழே வரும் வேளையில் எழில் தோட்டத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தான் என்னடா செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் இல்லை உன்னை மூன்று மாதத்திற்கு படி ஏறக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் ரிசப்ஷன் வைத்திருந்தால் கொஞ்சம் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன் இன்று இங்கு சாதாரணமாக தடுப்பு  சுவர் போல் வைப்பதற்கு ஆள் வர சொல்லி இருக்கிறேன் என்றான்….

காவேரி அப்பொழுதுதான் வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்தார் எழிலை பார்த்து முறைத்துவிட்டு ஏய் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் அத்தை நான் பேசியதை கேட்டீர்கள் தானே அப்புறம் என்னை திரும்பவும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்கள் என்று கேட்டான் நீ பேசிய அனைத்தையும் நான் கேட்டேன் தான் அதற்காக இங்கே இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார் …..

அத்தை நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா அவள் மூன்று மாதத்திற்கு படி ஏற கூடாது வீக்காக இருக்கிறாள் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றான் சுந்தரி அவன்  என்ன சொல்கிறான் நீ என்ன அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டார் அண்ணி எனக்கு என்ன அண்ணி  தெரியும் அவன் செய்வதற்கு நான் என்ன செய்வேன் என்றார் காவேரி கோதை கோதை என்று வேகமாக அழைத்தார் ….

கோதை வீட்டிலிருந்து வெளியில் வந்தார் என்ன காரணம் என்று கேட்டுக்கொண்டே வந்தார் கோதை தோட்டத்தில் நாம் தேங்காய் மூட்டை போட்டு வைக்கும் குடோன் இருக்கிறது அல்லவா என்றார் கோதைக்கு ஒன்றும் ஒரு நிமிடம் புரியவில்லை அது முழுவதுமாகவே ஒரே அறையாக இருக்கும் அங்கு தனியாக அறை என்று எதுவும் கிடையாது அதன் அருகிலே பாத்ரூம் இருக்கிறது….

வெளியே எங்காவது இறப்பிற்குச் சென்று வந்தால் குளிப்பதற்கு என்று கட்டி வைத்திருக்கும் பாத்ரூம் அது அது தான் வெளியே தான் ஒரு பாத்ரூம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு அமைதியாக சென்றுவிட்டார் அவர் சென்றவுடன் கோதைக்கு ஒன்றும் புரியாமல் தனது மருமகனை தட்டி என்னடா அக்கா சொல்லிவிட்டு செல்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார் உங்க அக்கா சொல்லிட்டு போறது ஒன்னும் உங்களுக்கு புரியாது என்றவுடன் தனது இளைய மருமகனை பார்த்து முறைத்துவிட்டு என்னடா என்றவுடன் அண்ணி நீங்களாவது சொல்லுங்களேன் என்றார்…

கோதை மகா மாடி படி ஏற கூடாது என்பதற்காக இங்கு ஒரு தடுப்பு சுவர் போல் வைப்பதற்கு ஆள் வர சொல்லி இருந்தான் அதுக்காக தான் அண்ணி உன்னை கூப்பிட்டு சொல்லிட்டு போறாங்க என்றவுடன் கோதை தனது மகள் மகாவை பார்த்து முறைத்து விட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்று விட்டார் சுந்தரி தனது மகனை பார்த்து கண்ணடித்து விட்டு கட்ட விரலை தூக்கி காண்பித்து விட்டு அமைதியாக சென்றார்…

அவளும் எழிலை பார்த்து இது அத்தை வேலையா என்று கேட்டால் ஆமாம் உன் அத்தை உனக்காக பொட்ட பிளான் தான் என்று  சொல்லிவிட்டு சரி கல்லூரிக்கு நேரமாக பார் நீ போய் கிளம்பி வா என்றவுடன் அவளும் மாடிப்படி ஏறச் சென்றால் அப்போது வேணி என்று வேகமாக அழைத்தால் வீட்டில் உள்ள அனைவரும் வந்து வரவேற்பரையில் அமைதியாக வந்து நின்றார்கள் வேணி கடலுக்கு ஏழாவது மாதம் ஸ்டார்ட் ஆயிடுச்சு என்று விட்டு அமைதியாக மாடிப்படி ஏறி விட்டாள் மகா…

அப்போது இனி வேகமாக என்னுடைய நாத்தனார் இருக்கு எப்படி வளைகாப்பு வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் இன்னொரு அண்ணியும் இருக்கிறாள் என்னுடைய நாத்தனார் வளைகாப்பை எப்படி நடத்த வேண்டும் என்று எங்கள் இருவருக்கும் தெரியும் என்று சொன்னால்  மகா இனியை பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக மாடிப்படி ஏறி சென்று விட்டாள் காவேரி இனியை பார்த்துக் கொண்டிருந்தார் …

இனி காவிரி அருகில் வந்து அத்தை முகூர்த்த நாள் எப்போது இருக்கிறது என்று பாருங்கள் கயலுக்குச் சென்று வளைகாப்பு கொடுத்து விட்டு வந்து விடலாம் என்றால் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள் காவிரி நாள் வரையும் முறைத்து பார்த்துவிட்டு இறுதியாக இனியை  முறைத்து பார்த்தார் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக சமையலறைக்குள் புகுந்து கொண்டார்….

இனி நல்வரையும் பார்த்து சிரித்து விட்டு இறுதியாக எழில் அருகில் வந்து நின்று நல்ல நாள் எப்பொழுது இருக்கிறது என்று பார் என்றவுடன் லீவு நாளா பார்க்கணும் வேற வரும் ஞாயிற்று கிழமை நல்ல நாள் தான் அன்னைக்கு வளைகாப்பு செய்யலாம் என்றவுடன் ஏற்கனவே முடிவு பண்ணிட்ட அப்படி தான என்றால் இனி எழில் உதட்டை பிதுக்கி காண்பித்து விட்டு எனக்கு கல்லூரிக்கு நேரமாகிறது எதுவாக இருந்தாலும் மாலை வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு கல்லூரிக்கு கிளம்பச் சென்றான்…

மகா கிளம்பி வந்தவுடன் மகாவை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று விட்டான் காவேரி கயலுக்கு வலைகாப்பு வைக்க ஒத்துக் கொள்வாரா அவரும் வளைகாப்பில் கலந்து கொள்வாரா இல்லை வீட்டில் உள்ள சிறியவர்கள் மட்டும் செல்வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்….

அன்புடன்


❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 89”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *