முகில் வேணியின் அருகில் வந்து படத்தவுடன் இரண்டு முறை அமைதியாக வேணியை எட்டிப் பார்த்தான் அவள் அமைதியாக படுத்திருந்தாள் பிறகு முகில் அமைதியாக படுத்த உடன் வேணி முகில் பக்கம் திரும்பி படுத்தால் ….
வேணி முகிலையே பார்த்துக் கொண்டு இருந்தால் முகிலும் வேணியையே அமைதியாக பார்த்தான் இருவரும் எதுவும் பேசவில்லை வேணி அமைதியாக முகிலை பார்த்துக் கொண்டே பத்து நிமிடங்களுக்கு பிறகு அப்படியே தூங்கிவிட்டால் முகில் எழுந்து உட்கார்ருந்து அவள் தூங்கி பிறகு அவளது தலையை கோதிவிட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான் …..
மூன்று நாட்கள் தூங்காமல் உனக்கு கருவளையம் விழுந்து விட்டதடி நான் இல்லாமல் உனக்கு தூக்கம் கூட வரவில்லையா அந்த அளவுக்கு என்னை நேசிக்கிறாயா ஆனால் எது தடுக்கிறது உன்னை என்னுடைய நேசத்தை என்னிடம் சொல்வதற்கு என்று புலம்பினான் அவன் பேசிய எதுவும் வேணி கேட்கும் நிலையில் இல்லை…
மூன்று நாட்களாக தூங்காமல் இருந்ததால் தன்னருகில் தன்னுடைய கணவன் இருக்கிறான் என்றவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டாள் முகிலும் மூன்று நாட்களாக பெரிதாக தூங்கவில்லை தான் முகிலும் வேனியை பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் அப்படியே தூங்கிவிட்டான் …..
மறுநாள் காலையில் முகில் எப்பொழுதும் போல் எழுந்து வந்தான் மூன்று நாட்களாக தூக்கம் இல்லாமல் இருந்ததோ என்னவோ இல்லை தனது கணவர் தன்னருகில் இருக்கிறார் என்ற எண்ணத்திலோ என்னவோ வேணி கிட்டத்தட்ட ஏழு மணி வரை தூங்கிக் கொண்டு இருந்தால் முகில் எழுந்து வந்தவுடன் சுந்தரி தான் கேட்டார்…
என்னடா நீ மட்டும் வருகிறாய் 4,5 மணிக்கு எழுந்து கொள்பவள் இன்னும் எழுந்து கொள்ளவில்லை என்று கேட்டார் முகில் தனது அத்தையை பார்த்து சிரித்து விட்டு அவள் மூன்று நாட்களாக தூங்கவில்லை போல அத்தை இன்று நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்றவுடன் சரிடா அவள் தூங்கட்டும் என்று விட்டு மற்ற வேலைகளை பார்க்க செய்தார்…
எட்டு மணி போல் திரும்பவும் வந்து கேட்டார் இன்னும் எழுந்து கொள்ளவில்லையே அத்தை என்றவுடன் என்னடா அமைதியாக உட்கார்ந்து இருக்கிறாய் அவளுக்கு கல்லூரிக்கு நேரம் ஆகவில்லையா என்று கேட்டார் அவன் அமைதியாக சிரித்துக் கொண்டே இருந்தவுடன் அவனது தோளில் ஒரு அடி போட்டுவிட்டு வேகமாக முகில் அறைக்குச் சென்றார் ….
வேனி அசந்து தூங்குவதையும் பார்த்தார் வேகமாகச் சென்று அவளை எழுப்பினார் அவள் எழுந்து உட்கார்ந்து என்னம்மா என்று கேட்டவுடன் மணி என்ன எப்படி தூங்கிக்கொண்டிருக்கிறாய் கல்லூரிக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்றவுடன் நேரத்தை பார்த்தால் அது காலை 8 மணி என்று உடன் என்ன இவ்வளவு நேரம் தூங்க விட்டேனா என்றால்…
உன் புருஷன் வந்துட்டான் என்பதற்காக இவ்வளவு அசந்தா தூங்குவாய் என்றவுடன் அவரது தாடையில் லேசாக தட்டி விட்டு சரி மா என்று விட்டு குளித்து விட்டு வருகிறேன் நேரம் ஆகிறது என்று வேகமாக குளியல் அறைக்குள் புகுந்தால் சுந்தரி கத்தினார் அடியே நேரம் ஆகிறது என்பதற்காக துணி கூட எடுக்காமல் செல்கிறாயே என்று கத்தினார்….
நான் வந்து போட்டுக்கொள்கிறேன் என்றவுடன் உன்னுடைய கணவன் வந்தால் என்ன செய்வாய் என்று கேட்டார் லேசாக கதவு திறந்து அவரை முறைத்துவிட்டு வெளியே கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உங்கள் மருமகனிடம் சொல்லிவிடுங்கள் என்று விட்டு கதவை சாற்றிக் கொண்டால் ….
அவரும் சிரித்துவிட்டு வெளியே சென்று முகிலிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அனைத்து உணவுகளையும் டைனிங் டேபிள் மீது எடுத்துக்கொண்டு வைத்தார் நிலாவும் நேரம் ஆகுவதால் கையில் வாட்ச் போட்டுக் கொண்டே வந்து உணவு மேசையில் உட்கார்ந்தால் எழிலும் வந்து உட்கார்ந்தான் முகிலை பார்த்து விட்டு எப்போது வந்தாய் என்று கேட்டான் நேற்று இரவு என்றவுடன் சரி என்றான்…
முகில் நிலாவை பார்த்தான் நிலா முகிலை பார்த்து முறைத்தாள் என்ன நிலா குட்டி என்கிட்ட பேச மாட்டியா என்றான் நீங்க யார் சார் பெரிய ஆளு உங்க இஷ்டத்துக்கு நடந்துப்பீங்க உங்க கிட்ட எல்லாம் பேச முடியுமா என்று சொன்னாள் அவன் பாவமாக நிலவைப் பார்த்தவுடன் அவனது கழுத்தை நெறிப்பது போல் செய்துவிட்டு அவனது தலையில் கொட்டினால் ஏன் போகும் போது சொல்லிவிட்டு கூட உன்னால் போக முடியாதா என்று கேட்டாள்….
அப்பொழுது சுந்தரி தான் வந்து அவளை தடுத்து அமைதியாக உட்காரு டி என்றார் எங்கு அத்தை உன்னோட மகளை இன்னும் காணவில்லை உன் மகளுக்கு நேரமாகவில்லையா கல்லூரிக்கு என்றவுடன் சுந்தரி சிரித்துக் கொண்டே இன்னும் அவளுக்கு விடியவே இல்லடி இப்பதான் எழுந்து குளிக்கிறாள் என்றவுடன் நிலா எழில் இருவரும் என்ன என்று கேட்டார்கள்…
பிறகு இருவரும் முகிலை பார்த்தார்கள் முகில் ஆமாம் என்பது போல் கண்ணை மூடி திறந்து விட்டு சிரித்தான் அப்பொழுதுதான் வேணியும் குளித்துவிட்டு ரெடியாகி விட்டு அவளது அறையில் இருந்து வந்தால் வீட்டில் அனைவருமே இவ்வளவு நேரமா தூங்கி இருக்கிறாள் என்று எண்ணி அவளைப் பார்த்தார்கள் நிலா தான் என்ன காலேஜுக்கு கூட்டிட்டு போற ஐடியா இல்லையா என்று சொல்லிக்கொண்டே அவளது வாய் அருகே கொண்டு சென்ற சாப்பாட்டை நிலா கையில் இருந்தே தனது வாய்க்கு ஊட்டி விட்டு நேராவதும் தெரிகிறது வந்து எழுப்பி இருக்க வேண்டியதுதானே என்று வேணி கேட்டாள்….
நீ தூங்குறேன் என்று தெரியுமா என்று விட்டு உனக்கு தான் கை இருக்கே சாப்பிடு என்றால் எழில் வேணிக்கு ஊட்டி விட்டான் நிலா எனக்கு என்று கேட்டால் ஏன் உனக்கு கை இல்லையா என்று கேட்டான் ஏன் உன் தங்கச்சிக்கு மட்டும் கை இல்லையா மாமா என்றவுடன் எழில் இருவருக்கும் இரண்டு மூன்று ரூபாய் ஊட்டி விட்டான் இருவருக்கும் பிராக்டிகல் எக்ஸாம் நடந்து கொண்டிருப்பதால் இருவரும் சீக்கிரமாக கிளம்ப வேண்டியிருந்தது….
பிறகு இருவரும் சாப்பிட்டுவிட்டு நேரம் ஆகுவதால் கிளம்பும் வேளையில் வேணி ஒரு நிமிடம் நின்று முகிலை பார்த்தால் முகில் அமைதியாக அவளை பார்த்துவிட்டு தலையை கீழே குனிந்து கொண்டான் வேணிக்கும் நேரம் ஆகுவதால் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நிலாவை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டால் அவர்கள் இருவரும் சென்ற பிறகு எழில் வெளியே வந்து மகா கிளம்பி விட்டாள் என்று உடன் மகாவை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான் …
அன்றைய பொழுதும் நன்றாக முடிந்தது மாலை கல்லூரி முடிந்து வேணி நிலா இருவரும் வெளியில் வந்தவுடன் வேணி நிலாவைப் பார்த்து நிலா நான் என் அம்மா அப்பா வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு வருகிறேன் என்றால் நிலா வேணியை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்தால் ஏனென்றால் வேணி திருமணம் ஆகிய இந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட அவளது தாய் தந்தையை சென்று பார்க்கவில்லை என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் …
அவள் இப்போது பொய் சொல்கிறாள் என்றும் நிலாவிற்கு தெரியும் வேணியை பார்த்து முறைத்துவிட்டு சரி என்று சொன்னால் நீ எப்படி செய்வாய் என்று கேட்டால் வேணி நான் வேண்டுமென்றால் வேலு அப்பாவிடம் சொல்லட்டா என்று கேட்டால் எனக்கு என்னுடைய மாமாவை எப்படி வர சொல்ல வேண்டும் என்று தெரியும் நீ கிளம்பு என்றவுடன் வேணி நிலாவை பார்த்து முறைத்து விட்டு அவள் எப்படியும் சென்று விடுவாள் என்பதால் அமைதியாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டால்…
நிலா தான் போன் எடுத்து தனது அக்காவிற்கு ஃபோன் டயல் செய்து கொண்டே வெளியே கேட்டுக்கு வெளியில் வந்தாள் வெளியில் வந்தவுடன் மகா ஃபோன் எடுத்தவுடன் நீங்கள் இருவரும் கிளம்புவதற்கு நேரம் ஆகுமா இல்லை இப்பொழுது கிளம்புவீர்களா என்று கேட்டால் மகா ஏன் என்று கேட்டால் நிலா சிரித்துக் கொண்டே வேணி அவர்கள் அப்பா அம்மா வீட்டிற்கு செல்கிறாளாம் என்றால் மகாவும் புரிந்து கொண்டால்….
இல்லை நாங்கள் இருவரும் கிளம்பி விட்டோம் என்றால் அப்பொழுது சரி நான் வெளியே கல்லூரிக்கு வெளியே உள்ள டீக்கடையை தாண்டி சென்று கொண்டிருக்கிறேன் என்னையும் பிக்கப் செய்து கொள்ளுங்கள் என்று வுடன் மகா சிரித்துவிட்டு சரி என்று விட்டு வைத்து விட்டால் எழில் என்ன என்று கேட்டான் மகா விஷயத்தை சொன்னவுடன் முகிலை பார்க்க பொய் சொல்லி விட்டு சென்றுவிட்டாள் போல என்றான்…
மகாவும் அப்படித்தான் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே வண்டி எடுத்துக்கொண்டு நிலா இருக்கும் இடத்திற்கு சென்று நிலாவை அழைத்து கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள் வீட்டிற்கு சென்றவுடன் சுந்தரி நிலாவிடம் வேணி எங்கே என்று கேட்டதற்கு வேணி சொன்ன அதே பொய்யை நிலா சுந்தரியிடம் சொன்னால் ….
வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை முறைத்தார்கள் நிலா அனைவரையும் பார்த்துவிட்டு நான் என்ன செய்வேன் அவள் என்னிடம் சொன்னது தான் உங்களிடம் சொல்ல முடியும் என்றால் சுந்தரி சிரித்துக் கொண்டே நிலாவிற்கு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளது தலையில் லேசாக கொட்டி விட்டு சென்றார் ….
வேணி நிலாவிடம் சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு முகில் கடை வைத்திருக்கும் இடத்திற்கு சென்றாள் அவள் செல்லும் போது வேணியை முகில் கடையில் வேலை செய்யும் ஒரு பையன் பார்த்துவிட்டு அண்ணா அண்ணி வருகிறார்கள் என்று சொன்னான் அவன் அமைதியாக இருந்தவுடன் அண்ணா உங்களிடம் தான் சொல்கிறேன் என்றான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் ….
அவன் முகிலைப்பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக இருந்தான் வேணி அவளது வண்டியை நிறுத்தி விட்டு வந்தால் முகில் அவளை பார்த்து என்ன இந்த பக்கம் என்று கேட்டான் உங்க கடைக்கு எதுக்கு வருவாங்க என்று கேட்டாள் இப்பொழுது எல்லாம் உங்க அப்பா தானே வந்து வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றான் …
என்னுடைய மாமனார் வீட்டிற்கு மருந்துவாங்க என்று சொன்னால் ஓ உங்கள் மாமனார் வீட்டுக்கு நீங்கள் தான் வாங்குகிறீர்களா என்று கேட்டான் வேணி முகிலை பார்த்து முறைத்தால் இவர்கள் இருவருக்குள்ளும் எதுவோ இருக்கிறது போல என்று அந்த வேலை செய்யும் பையன் எண்ணி விட்டு அண்ணி ஏதாவது குடிக்கிறீர்களா வாங்கிக்கொண்டு வரட்டுமா என்று கேட்டான் …
ஒரு டீ இரண்டு பஜ்ஜி வாங்கிக் கொண்டு வா என்றால் சரி என்று அவன் கடையை விட்டு கிளம்பி விட்டான் பத்து நிமிடங்களாகியும் அவன் வரவில்லை என்றவுடன் அருகில் உள்ள கடையில் சென்று வாங்கி வருவதற்காக இவ்வளவு நேரமா என்று முகிலிடம் கேட்டால் முகில் சிரித்துக்கொண்டே ஒரு டீ குடிப்பதற்காகவும் பஜ்ஜிக்காகவும் தான் இவ்வளவு தூரம் வந்தாயோ என்று கேட்டான் …
வேணி முகிலைப் பார்த்து சிரித்தால் பிறகு முகிலே எதுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய் என்று கேட்டான் உங்களிடம் பேசுவதற்கு என்றால் சரி பேசு என்றான் தனியாக பேச வேண்டும் என்றால் சரி இங்கே யாரும் இல்லை நீயும் நானும் தான் நினைக்கிறேன் என்றான் இங்கு வேண்டாம் வெளியே எங்காவது செல்லலாம் என்றால் சரி எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டான் ….
எங்காவது செல்லலாம் ஏன் என் கூட எல்லாம் வெளியில் வர மாட்டீர்களா உங்களால் என்னை வெளியில் அழைத்துச் செல்ல முடியாதா என்று கேட்டாள் சரி என்று விட்டு எனக்காக கொஞ்ச நேரம் கடையை மூடிவிட்டு வர மாட்டீர்களா என்று கேட்டான் அவனும் கடையை மூடிவிட்டு வந்தான் உங்களது வண்டி என்றால் என்னுடைய வண்டி இங்கு இருக்கட்டும் நாளை எடுத்துக் கொள்வேன் ….
உன்னுடைய வண்டியில் செல்லலாம் என்றான் எங்கு செல்லலாம் என்று கேட்டால் அவன் வேணியின் வண்டியில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய வீட்டிற்கு வண்டியை விடு என்றான் வேணி முகிலை பார்த்து முறைத்துவிட்டு என்னுடைய வீடு எது என்று தெரியும் தானே என்று கேட்டால் உன்னைப் பெற்றவர்கள் வீட்டிற்கு என்றான் வேணி அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அங்கு எதற்கு இப்பொழுது செல்லவேண்டும் என்றால் …
வேணி உன்னால் இப்பொழுது வண்டியை அங்கு விட முடியுமா இல்லை நான் கீழே இறங்கி கொள்ளட்டா என்றான் வேணி முகிலை பார்த்து முறைத்து விட்டு உட்காருங்கள் ஓவராக பண்ணாதீர்கள் ஏன் உங்கள் மாமனார் மாமியாரை சென்று பார்க்காமல் தான் இருக்கிறீர்கள் அதுதான் வாரத்தில் இரண்டு நாட்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று பார்க்கிறீர்களே என்று சொல்லிக்கொண்டே வண்டியை அவளது வீட்டிற்கு பிறந்து வீட்டிற்கு விட்டாள் …
வேணி அவளது வீட்டிற்கு சென்று எந்த பிரச்சனையும் செய்யாமல் வருவாளா என்பதை அனைவரும் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
Nice