வேணி முகில் இருவரும் அவர்களது அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வேணி அவளது கல்லூரி பையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் முகில் சட்டையை அவுத்து வைத்துவிட்டு வீட்டில் போடும் இரவு உடை அணிந்து கொண்டு இருந்தான் அப்பொழுது வேணி அவனை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்தால் ….
முகிலுக்கு இது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது இந்த அளவிற்கு அவன் யோசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என்ன வேணி என்று கேட்டுக்கொண்டே அவளது பக்கம் திரும்பினான் அவன் திரும்பி உடன் அவனது முகத்தை நேருக்கு நேராக பார்த்துவிட்டு ஐ லவ் யூ என்றால் முகில் இதையும் நினைத்து பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்….
வேணி அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு நான் உங்களை இத்தனை நாட்களுக்கு காக்க வைத்து விட்டேன் என்று எனக்கு புரிகிறது உங்களுக்கு எந்த அளவுக்கு வலித்திருக்கும் என்பதை நானும் இந்த மூன்று நாட்களில் தெரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்றால் அவளது தாடையில் கை வைத்து அவளை தன்னை பார்க்குமாறு நிமிர்த்து விட்டு வேணி நீ எனக்காக என்று எதும் யோசிக்க வேண்டாம் என்றான்….
நான் உங்களுக்காக யோசிக்காமல் வேறு யாரு யோசிப்பார்கள் இது உங்களுக்காக என்று இல்லை நமக்காக என்றால் முகில் சிரித்தவுடன் எனக்கு உங்களை பிடித்திருக்கிறது எப்பொழுது இருந்தது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு உங்கள் மேல் எனக்கு விருப்பம் இருக்கிறது எப்பொழுது எப்படி வந்தது எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் உங்களிடம் சொல்லு தயக்கமா இல்லை என்ன என்று தெரியவில்லை எனக்கே ஆனால் என்னால் சொல்ல முடியவில்லை என்றால் ….
அதான் இப்பொழுது சொல்லிவிட்டாயே என்று சொல்லி அவளது நெற்றியில் தனது முதல் முத்திரையை பதித்தான் வேணி சிரித்தால் உங்களுக்கு என் மீது இன்னும் கோபம் இருக்கிறதா என்று கேட்டாள் நான் எப்பொழுதும் உன் மீது கோபப்பட்டேன் வருத்தம் தான் நீ என்னிடம் கேட்டிருக்கலாம் என்று எனக்கு வருத்தம் மட்டும் தான் மற்றபடி வேறு எதுவும் இல்லை அது கூட எனக்கு இப்பொழுது இல்லை …
அந்த அளவிற்கு தான் நான் உன்னிடம் நடந்து கொண்டிருக்கிறேன் என்ற வருத்தம் என் மீது தான் இருக்கிறது என்றவுடன் வேணி அவனது வாயின் மீது கை வைத்தால் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாள் சரி வேணி இருவர் மீதும் எந்த தவறும் இல்லையே நேரம் ஆகிறது தூங்கலாமா உனக்கு ப்ராக்டிகல் வேறு நடந்து கொண்டிருக்கிறது படிக்க வேண்டும் அல்லவா என்று கேட்டான் ஆமாம் நான் காலையில் படித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் படுத்தார்கள் ….
முகில் படுத்து விட்டு வேணியை பார்த்தான் வேனி அவனது அருகில் வந்து அவனை பின் பக்கம் இருந்து கட்டியணைத்துக் கொண்டால் முகில் அமைதியாக வேணியை பார்த்தான் என்ன வேணி என்றான் உங்களுக்கு என் மீது எந்த எண்ணமும் தோன்றவில்லையா என்று கேட்டால் முகில் எழுந்து உட்கார்ந்தான் வேணி நீ என்ன சொல்கிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா என்று கேட்டான் ….
நான் என்ன பேசுகிறேன் என்று தெரியாமலா பேசினேன் ஐ நீட் யூ என்றால் வேணி உண்மையாகவே எனக்கு இப்போது அப்படி ஒரு எண்ணம் இல்லை உனக்கு உண்மையாகவே அப்படி ஒரு விருப்பம் இருக்கிறது என்று சொல் என்றான் வேணி அமைதியாக இருந்தால் உனக்கும் விருப்பமில்லை எனக்கும் விருப்பமில்லை சரியா நாம் மனதளவில் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று தான் எண்ணினே தவிர உடல் அளவில் கணவன் மனைவியாக வாழ்வதற்கு இல்லை ….
நமக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது நமது வாழ்க்கையை தொடங்கலாம் இந்த நேரத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லையே உனக்கும் எனக்கும் எப்பொழுது தோன்றுகிறதோ அது அப்போது தான் நடக்கும் இப்படி கேட்டுக் கொண்டு எல்லாம் இருக்க மாட்டோம் என்றான் அதன் பிறகு வேணியும் வேறு எதுவும் கேட்கவில்லை அமைதியாக படுத்தாள் முகிலும் அமைதியாக படுத்தான்….
முகில் படுத்தவுடன் வேணியை பார்த்துக் கொண்டு இருந்தான் வேணி இரண்டு நிமிடம் முகிலை அமைதியாக பார்த்துவிட்டு அவனது தலையை லேசாக கலைத்து விட்டு அவனை பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு படுத்தல் இருவரும் சந்தோஷத்தில் படித்ததும் உறங்கியும் விட்டார்கள் மறுநாள் காலையில் எழுந்து வரும்போது வேணியின் முகம் பளிச்சென்று இருந்தது அதை சுந்தரியும் உணர்ந்தார் ஆனால் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை ….
எழில் தான் சிரித்துக் கொண்டே வந்து என்ன வேணி முகம் பளிச்சென்று இருக்கிறது புருஷன் பொண்டாட்டி இருவரும் சமாதானமாகி விட்டீர்களா என்று கேட்டான் வேணி அவனைப் பார்த்து சிரித்தாள் அப்போது கோதை வந்தார் அவளை பார்த்து நெட்டி முறித்தார் அவள் கோதையை பார்த்துவிட்டு அத்தை என்று விட்டு அமைதியாக தலையை கீழே குனிந்தால் …
சுந்தரி சிரித்து கொண்டே வேணி கோதை இப்பொழுது நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டீர்கள் என்று உனக்கு நெட்டி முறிக்கவில்லை நாங்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் எங்களுக்கும் தெரியும் எப்பொழுது ஒரு பெண் எப்படி இருப்பாள் என்று இப்பொழுது உன் முகம் எங்களுக்கு காட்டி கொடுத்தது உன் மனதில் உள்ள சந்தோஷத்தை தான் …
நீயும் உன் கணவனும் ஒன்றாகி விட்டீர்கள் என்று மட்டும் தானே தவிர நீங்கள் கணவன் மனைவியாக உங்களது வாழ்க்கை தொடங்கி விட்டீர்கள் என்று நாங்கள் யாரும் நினைத்துக் கொள்ளவில்லை அது மட்டும் இல்லாமல் இது உங்களது வாழ்க்கை உங்களது விருப்பம் போன்று உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது தொடங்குங்கள் இதில் நாங்கள் யாரும் தலையிட மாட்டோம் என்றார் ….
சுந்தரியை கட்டிக்கொண்டு வேணி சிரித்தால் பிறகு சுந்தரி அவளது நெற்றியில் முத்தம் வைத்தார் பிறகு வேணி வேகமாக மகாவை பார்க்கச் சென்றால் கோதை வேணியை முறைத்தார் சுந்தரி சிரித்தார் வேணி மகாவை அவளை பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு அவளது தடையில் முத்தம் வைத்தால் மகிழ் சிரித்துக் கொண்டே வந்து என்ன வேணி காலையிலே உங்க அண்ணியை ரொம்ப கொஞ்சு கின்றாய் என்று கேட்டான்…
ஏன் அண்ணா நீங்கள் மட்டும் தான் கொஞ்சம் வேண்டுமா நான் கொஞ்சம் கூடதா என்றால் தினமும் என் பொண்டாட்டி இங்க தான் இருக்கா தினமும் கொஞ்ச வில்லையே இன்னிக்கு மட்டும் வந்து கொஞ்ச செய்கிறாயே என்றான் வேணி மகிழை பார்த்து சிரித்தால் பிறகு கீழே குனிந்து கொண்டாள் என்ன வேணி என்று அவளது தாடையை நிமிர்த்தினான் பிறகு வேணி மகிழை கட்டிக்கொண்டு அவனது முகத்தையே பார்த்தாள் ….
வேணி வெட்கப்படறியா நீ மொத டைம் வெட்கப்பட்டு பார்க்கிறேன் என்றான் ஒரு மாதிரி இருக்கு அண்ணா என்று சினுங்கினால் பின்ன இதில் என்ன வேண்டி இருக்கிறது என்ன விஷயம் அதை சொல்ல வேண்டியது தானே எங்களிடம் உனக்கு என்ன வெட்கம் என்று கேட்டான் மாமா நீ வேற கம்முனு போ ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு விஷயத்துல வெட்கம் வரும் அவளுக்கு இப்போ வருது என்று மகிழை தள்ளிவிட்டாள் வேணி சிரித்தால்….
எழில் நிலா இருவரும் அப்போதுதான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள் என்ன மாமா உன் தங்கச்சி ரொம்ப வெட்கப்படற போல என்று கேட்டுக்கொண்டே நிலா வந்தாள் நிலாவின் தலையில் மகா ஒரு கொட்டு கொட்டினால் அம்மாடியோ உன் நாத்தனாரை சொன்ன உனக்கு கோவம் வருது என்று சொல்லிவிடு தலையை தேய்த்துக் கொண்டால் உனக்கு அண்ணி இல்லையாடி என்று கேட்டால் ….
என்னது அண்ணியா என்று நிலா நெஞ்சில் கை வைத்தால் வேணி சிரித்து விட்டால் நாங்கள் ரெண்டு பேரும் எப்பயும் பிரண்ட்ஸ் தான் அண்ணி நாத்தனார் இந்த உறவு எல்லாம் கிடையாது என்று வேணி நிலாவை கட்டிக் கொண்டால் நிலாவும் சிரித்தால் பிறகு சரி நேரம் ஆகிறது அனைவரும் கல்லூரிக்கு கிளம்புங்கள் என்றால் மகா…
நிலா வேணி இருவரும் மகாவை முறைத்து விட்டு அம்மா டீச்சரம்மா காலேஜ்ல மட்டும் டீச்சரா இருந்தா போதும் வீட்டில் டீச்சர் இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினார்கள் மகா இருவரையும் பார்த்து சிரித்தால் சரி என்று விட்டு எழிலும் கிளம்பினான் இப்படி இரண்டு மூன்று நாட்கள் சென்றது மகாவிற்கு இது மூன்றாவது மாதம் மூன்றாம் மாதம் முடிய இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கிறது …
அவளுக்கு சிறிது வருத்தமாக இருந்தது என் மேல் தானே கோபம் நான் சுமந்து கொண்டு நிற்பது இந்த வீட்டு வாரிசு தானே அதற்காக கூட எனக்கு யாரும் மூன்றாவது மாதம் வளையல் போட மாட்டார்களா என்று எண்ணினால் என்னுடைய நண்பன் எழிலுக்கு கூட அப்படி ஒரு எண்ணம் வரவில்லையா என்று கூட எண்ணிக் கொண்டிருந்தால் மனதில் ரொம்பவே புழுங்கிக் கொண்டிருந்தாள் மகிழுக்கும் அந்த வருத்தம் இருந்தது ….
ஆனால் இருவரும் தங்களது வருத்ததை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் ஆனால் இருவருக்கும் தெரியும் வருத்தம் இருக்கிறது என்று ஆனால் அதைப் பற்றி பேச இருவருமே விரும்பவில்லை இவர்கள் இருவரும் எண்ணியது போல் எழிலும் அவனது வீட்டு வரவேற்பறையில் நடந்து கொண்டு எண்ணிக் கொண்டிருந்தான் இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் என்னுடைய மகா எவ்வளவு செய்து இருப்பாள் ஆனால் யாருக்குமே அவளுக்கு வளையல் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று எண்ணம் வரவில்லையா என்று எண்ணிக் கொண்டு இருந்தான்…
அவனது கண்கள் கூட லேசாக கலங்கி தான் இருந்தது நான் உனக்கு செய்ய வேண்டும் என்று எண்ணம் இல்லை மகா நான் உனக்கு செய்ய விரும்பவில்லை யாராவது செய்வார்கள் என்ற எண்ணம் என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது நான் செய்வதை விட அடுத்தவர்கள் செய்வது தான் சரி என்று எண்ணிக் கொண்டிருந்தான் அப்போது நிலாவும் அதற்காகவே எழிலை இரண்டு முறை அழைத்தால்…
எழில் யோசனையில் இருந்ததால் அதை கண்டு கொள்ளவில்லை பிறகு மாமா என்று அவனை உலுக்கினால் அவன் என்ன என்று வேகமாக கத்தியவுடன் நிலாவிற்கு இருக்கு சிறிது கண்கள் கலங்கிவிட்டது எழிலை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு இல்ல என்று விட்டு அமைதியாக இருந்தால் கூப்பிட்ட எதுவும் பேசமா நிற்கிறாய் என்றான் ஒன்றுமில்லை என்று விட்டு அவளது அறைக்குச் சென்று விட்டாள்
எழிலுக்கு கஷ்டமாக இருந்தது எழிலும் உணர்வான் அவள் இப்போது தன்னை எதற்கு அழைத்தால் என்று ஆனால் என்ன செய்ய முடியும் என்று மனதில் எண்ணிவிட்டு தனது கண்ணில் இருந்து வரும் கண்ணீரையும் உள்ள இழுத்துக்கொண்டு இருந்தான் அப்போது சுந்தரி வந்து எழிலை முறைத்தார் டேய் என்றார் ஒன்றும் இல்லை உனக்கு என்ன வேண்டும் என்று கத்தினான் ….
எழில் கோவத்தில் யாரிடம் வேண்டுமானாலும் கத்துவான் ஆனால் நிலாவிடம் கத்த மாட்டான் இப்பொழுது நிலாவிடமே கத்துகிறான் அதை சுந்தரி எண்ணி விட்டு எழிலிடம் எழில் எது எப்போது நடக்கு வேண்டுமோ அப்பொழுது நடக்கும் என்றார் அம்மா மரியாதையாக போய்விடு என் வாயை கிளற வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றவுடன் இனி என்னடா அம்மாவிடம் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாய் என்றால்….
நான் என்னுடைய அம்மாவிடம் பேசுகிறேன் உனக்கு என்ன வந்தது நீ எப்போதாவது பேசும்போது நான் குறுக்கே வருகிறேனா என்று கேட்டு இனியிடமும் கத்தி விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான் இரவு உணவை எழில் நிலா இருவருமே உண்ணவில்லை சுந்தரியும் நிறைய முறை கூப்பிட்டு பார்த்து விட்டார் இருவருமே கதவை திறக்க கூட செய்யவில்லை சுந்தரிக்கு வருத்தமாக இருந்தது அமைதியாக அவரும் சாப்பிடாமல் உட்கார்ந்து விட்டார்…
பிறகு இரவு 11 மணி போல் நிலா தன்னுடைய அத்தை தனக்காக சாப்பிடாமல் இருப்பார் என்று எண்ணி அவளது அறையில் இருந்து வெளியில் வந்தால் அதேபோல் தான் சாப்பிடவில்லை என்றால் தன்னுடைய அம்மா சாப்பிட மாட்டார்கள் என்று எழிலும் அவனது அறையில் இருந்து வந்தான் இருவரும் வரும் பொழுது சுந்தரி வரவேற்பு அறையில் அமைதியாக உட்கருந்து இருந்தார்….
இருவரும் வேகமாக ஓடிச் சென்று சுந்தரியின் இருபக்க தோளிலும் சாய்ந்து கொண்டார்கள் இருவரும் சாய்ந்த உடன் சுந்தரி கண்ணிலிருந்து நீர் வடிந்தது அவரது மனதிலும் வருத்தம் இருக்கத்தான் செய்தது யார் மகாவிற்கு மூன்றாவது மாதம் வளையல் போடுவார்கள் என்று அவரும் எண்ணினார் இவர்கள் மூவரும் எண்ணுவது போல் மகாவிற்கு மூன்றாவது மாதம் வளையல் போட்டு யாராவது மூன்று வகையான சாதம் தருவார்களா இல்லை அவள் மேல் இருக்கும் கோபத்தில் யாரும் எதுவும் செய்ய மாட்டார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
interesting