Skip to content
Home » மகாலட்சுமி 98

மகாலட்சுமி 98

கயலின் மாமியார் அம்பிகா மகா மகிழ் இருவரையும் கோவிலில் ஒரு மனை போட்டு உட்கார வைத்து அவர்கள் இருவருக்கும் நலங்கு வைத்து மூன்று வகையான சாதம் கொடுத்தார்கள் மகா மகிழ் இருவருக்கும் ஆனந்த கண்ணீராக இருந்தது இருவரது கண்ணையும் அம்பிகா துடைத்துவிட்டு நாங்கள் உங்களுக்கு கோவிலில் வைத்து மூன்றாம் மாதம் வளையல் போடுவதற்கு என்று எண்ணியிருந்தோம் ….

ஆனால் கயல் தான் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வேணியின் பெற்றவர்களிடம் சொல்லி இருந்தால் இருந்தாலும் அவள் செய்ய வேண்டும் என்று விரும்பியதால் நாங்கள் கோவிலுக்கு வர வைத்தோம் அவளும் மாசமாக இருப்பதால் சாதம் கொடுப்பதை பார்க்க கூடாது என்பதற்காக அங்கு உட்கார்ந்திருக்கிறாள் உடன் அன்பு இருக்கிறான் என்றவுடன் இருவரும் அமைதியாக இருந்தார்கள்…

பிறகு சாதம் கொடுத்தவுடன் கயல் இருக்கும் இடத்திற்கு சென்று கயலிடம் பேசிவிட்டு வந்தார்கள் பிறகு அவர்களாகவே வேணியின் பெற்றவர்கள் வீட்டிற்கு சென்றார்கள் வேணியின் அம்மா அப்பா இருவரும் இருவரையும் வரவேற்று உபசரித்தார்கள் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பும் வேளையில் வேணியின் அம்மா முறுக்கு சீடை அனைத்தும் செய்திருந்தார்கள் அதை மகாவின்  கையில் கொடுத்தார்….

அத்தை எதற்கு என்று கேட்டவுடன் மாசமாக இருக்கும் பெண்ணிற்கு இதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் காலையில் எடுத்துக் கொண்டு வருவதற்கு நேரம் இல்லை இப்பொழுதுதான் மாமா எடுத்துக் கொண்டு வந்து தரலாம் என்று இருந்தார் இப்போது நீங்கள் வந்து விட்டீர்கள் என்று சொல்லிக் கொடுத்து அனுப்பினார். சரி என்று வாங்கிக் கொண்டு முத்துவின் வீட்டிற்கு சென்றார்கள் ….


முத்துவின் பெற்றவர்கள் இருவரையும் வரவேற்று உபசரித்தார்கள் முத்துக்கும்  போன் பண்ணி வர சொன்னவுடன் மகிழ் தான் டேய் எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டான் அண்ணா இதில் என்ன இருக்கிறது நான் அண்ணிக்கும் உங்களுக்கும் செய்யாமல் வேறு யாரு செய்வார்கள் நீங்கள் என்னை தம்பியாக எண்ணி எதுவும் செய்யவில்லையா என்று கேட்டான் பிறகு மகிழ் சிரித்துக் கொண்டே முத்துவின் தோளில் கை போட்டான் ….

பிறகு இருவரையும் சாப்பிட சொன்னார்கள் இப்போது தான் கயல் மாமியாரும் செய்தார்கள் என்று சொன்னவுடன் முத்துவின் பெற்றவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது நேரமாகுதல் கிளம்புவதாக சொன்னவுடன் முத்துவின் அம்மா புடவை பூப்பழம் ஒரு தாம்பூல தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்….

அத்தை எதற்கு இது என்று கேட்டால் நாங்கள் காலையிலேயே எடுத்துக் கொண்டு வந்தோம் மகா உன்னுடைய இரு அண்ணன்களும் செய்வதால் இப்போது குடுக்க வேண்டாம் என்று எண்ணி அமைதியாக விட்டுவிட்டேன் என்ற உடன் வேறு எதுவும் பேசாமல் இருவரும் அந்த தாம்பூல தட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள் அவர்கள் இருவரும் வரும்போது இரவு 9 மணி இருக்கும் …

சுந்தரி தனது மகன் எழில் உடன் பூந்தோட்டத்தில் இருக்கும் மர பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் இருவரையும் பார்த்து முரைத்தார் மகா சிரித்துக்கொண்டே வந்தால் தனது மகன் எழிலிடம் இதுதான் வரும் நேரமா என்று கத்தினார் கயல் மாமியார் சாதம் கொடுத்ததையும் வேணி வீட்டிற்கு முத்து வீட்டிருக்கும் சென்று வந்ததையும் சொன்னவுடன் சரி சாப்பிட்டு நேரத்துடன் தூங்க சொல் என்றவுடன் வயிறு ஃபுல்லாக தான் இருக்கு என்று சொல்லிவிட்டு வேணியின் தாய் கொடுத்த முறுக்கு ஒன்றை   எடுத்து சுந்தரியின் வாயில் திணித்துவிட்டு அமைதியாக வீட்டிற்குள் ஓட பார்த்தால் …


அப்பொழுது மகா கல் தடுக்கி கீழே விழுந்திருப்பாள்  அப்போது எழில் மகிழ் இருவரும் மயிலு லட்சு என்று வேகமாக கத்தினார்கள் இவர்கள் இருவரும் கத்திய கத்தில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தார்கள் சுந்தரி தான் வேகமாக அவளை தாங்கி பிடித்தார் ஆனால் அவரது உடல் கை கால் அனைத்தும் நடுங்கியது மகாவின் கை கால்களும் நடுங்கியது அவளது கை தானாக அடிவயிற்றில் சென்று நின்றது ….

சுந்தரி வேகமாக மகாவை கட்டிக்கொண்டு அழுதார் ஒன்றும் இல்லை டி  என்றார் ஆனால் அவரது உடலும் நடுங்கியது தான் இருந்தாலும் மகாவின் கை அடி வயிற்றில் இருந்து நகரவில்லை பித்து பிடித்தது போல் நின்று கொண்டு இருந்தால் எழில் வேகமாக வந்து தனது தாயை நகர்த்தி விட்டு அவளை அழைத்துக்கொண்டு வந்து அவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்த மர பென்சில் உட்கார்ந்து விட்டு அவளையும் தன்னருகில் உட்கார வைத்தான் ….

நிலா வேகமாக ஓடிச் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள் எழில் மகாவிற்கு தண்ணீரை வாங்கி கொடுத்தான் பிறகு மகாவைத் தன் தோளிலே சாய்ந்து கொண்டான் வீட்டில் உள்ள அனைவரையும் எதுவும் பேச வேண்டாம் என்று  கண்ணாலே சொல்லிவிட்டு அவளை லேசாக தட்டிக் கொடுத்தான் அதிர்ச்சியிலும் அசதியிலும் மகா தூங்கிவிட்டாள் மகிழைப் பார்த்தான் நிலாவின் கையை இறுக பற்றிக் கொண்டிருந்தான் …

பிறகு மகாவை எழிலே தூக்கிக்கொண்டு சென்று அவர்கள் இப்பொழுது இருக்கும் இடத்தில் படுக்க வைத்து விட்டு மகிழ் இடம் வந்தான்  மகிழ் எழிலை பார்த்து விட்டு எங்களுடன் வந்து தூங்கு என்றான் எழில்  தன் வீட்டில் இருக்கும் அனைவரையும் பார்த்தான் அனைவரும் அதிர்ச்சியாக இருந்தார்கள் அதனால் இல்லைடா என்றான் பிறகு நிலா நான் வந்து தூங்கிறேன் மாமா என்றவுடன் சரி என்று நிலாவை அழைத்துக் கொண்டு சென்றான் …

மகா நடுவிலும் மகிழும் நிலாவும் ஆளுக்கு ஒரு பக்கமும் படுத்து கொண்டார்கள் மகிழும்  படுத்தவுடன் வேறு எதுவும் பேசாமல் உறங்கி விட்டான் நிலாவும் தனது அக்காவை கெட்டியாக பிடித்துக் கொண்டு படுத்துக்கொண்டாள் அனைவரும் அமைதியாக வீட்டிற்குள் சென்றார்கள் எழில் அனைவரிடமும் ஒன்றும் இல்லை அமைதியாக போய் தூங்குங்கள் நேரம் ஆகிறது என்றான் …

பிறகு அனைவரும் ஒரு நிமிடம் எழிலை பார்த்துவிட்டு அமைதியாக வீட்டுக்குள் சென்று விட்டார்கள் பிறகு எழில் தனது அம்மாவை பார்த்தான் அவரது உடல் இன்னுமும் நடுங்கி கொண்டுதான் இருந்தது எழில் வேணியை பார்த்தவுடன் வேணி சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் பிறகு தனது தாய்க்கு தண்ணீரை கொடுத்தான் அம்மா என்றான் டேய் என்று அவனை கட்டிக்கொண்டு அழுதார் இங்கு பாரு ஒன்றும் இல்லை என்றான் …

இன்னும் கொஞ்ச நேரம் விட்டு இருந்தால் என்றார் எழிலின் கண்களும் கலங்கி தான் இருந்தது அம்மா உனக்கு மகா மேல் கோபமா என்று கேட்டான் ஆனால் ஏழில் கண்களும் கலங்கி தான் இருந்தது அவர் எழிலை பார்த்துவிட்டு அவள் மேல் கோபம் எல்லாம் இல்லடா அவளே இன்றுதான் ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தால் ஆனால் இப்படி ஆகிவிட்டது என்ற வருத்தம் தான் என்ற பிறகு தனது தாயே தட்டிக் கொடுத்தான் வீட்டில் உள்ள அனைவரும் எதுவும் பேசவில்லை சுந்தரி தூங்கியும் விட்டார்.,


எழில் சுந்தரி தூங்கிய பிறகு லேசாக அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சென்று அவரது அறையில் படுக்க வைத்து விட்டு அவனது அப்பாவிடம் சொல்லிவிட்டு வந்தான் வீட்டில் உள்ள அனைவரும் எழிலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அனைவரையும் பார்த்து ஒன்றுமில்லை போய் தூங்குங்கள் என்றவுடன் அனைவரும் அமைதியாக அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் ….

மறுநாளும் விடிந்தது வேணி நிலா இருவருக்கும் இப்பொழுது  அவர்கள் முதுகலை இறுதி ஆண்டு செமஸ்டர் நடந்து கொண்டிருக்கிறது வேணி அவர்கள் வீட்டு வாசலில் கோலம் போடும் பொழுது மகா இன்னும் எழுந்திருக்கவில்லை என்று எண்ணி மகா இருக்கும் பூந்தோட்டத்திற்கு வந்து தண்ணி தெளித்து  கோலம் போட்டுவிட்டு வந்தால் மகா எப்பொழுது அந்த பூந்தோட்டத்தில் இருக்கும் ஒரு அறையில் வந்து தங்க செய்தாலோ அப்பொழுது இருந்து வெளியே தண்ணி தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள் …

அதனால் அதை இன்று மகாவிற்கு பதில் வேணி செய்தால் பிறகு எழிலிடம் வந்து சொன்ன பிறகு எழில் வேணி இருவரும் மகா மகிழ் இருக்கும் அறைக்கு சென்றார்கள் மகிழ் மட்டும் அமைதியாக எழுந்து உட்கார்ந்து மகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் எழில் தனது அண்ணனின் தோளில் கை வைத்தவுடன் மகிழ் அவனை பார்த்து சிரித்துவிட்டு இருவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றான் ….

எழில் நிலாவை எழுப்பினான் நிலாவும் எழுந்த பிறகு மகாவை எழுப்பினான் மகா எழுந்து  எழிலை பார்த்து சிரித்துவிட்டு வெளியில் வந்தால் அண்ணி நான் கோலம் போட்டு விட்டேன் சாப்பாடு செய்து விட்டேன் நீங்கள் கல்லூரிக்கு மட்டும் கிளம்புங்கள் என்று வேணி சொன்னால் வேணி  உனக்கு தான் தேர்வு இருக்கிறதே என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை படித்து விட்டேன் என்று விட்டு அவளுக்கு கல்லூரிக்கு நேரம் ஆகிறது என்று கிளம்பினால் ….

பிறகு மகாவும் நேரம் ஆகுவதால் கல்லூரிக்கு கிளம்பினாள் இப்படியே நாட்கள் உருண்டோடியது அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது நிலா வேணி இருவருக்கும் இன்னும் இரண்டு தேர்வு தான் இருக்கிறது அது முடிந்து விட்டால் அவர்களுக்கு இந்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்து விடும் இருவரும் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் மகா எழில் இருவருக்கும் தேர்வு எழுதும் அறையில் தேர்வு எழுதுபவர்களை பார்க்கும் டூட்டி போட்டு இருந்தார்கள்….

அப்பொழுது மகாவின் போன் அடித்துக் கொண்டே இருந்தது என்று சொல்லி அவர்கள் வேதியல் துறையில் இருக்கும் ஒரு ஆசிரியர் மகாவின் போனை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் என்ன சார் இவ்வளவு தூரம் என்று கேட்டால் இல்லை மேம் உங்களது போன் விடாமல் அடித்துக் கொண்டிருக்கிறது நீங்கள் தேர்வறையில் இருப்பீர்கள் என்று தெரிந்தும் போன் அடிக்கிறது என்றால் ஏதாவது எமர்ஜென்சியாக இருக்கும் என்பதற்காக எடுத்துக் கொண்டு வந்தேன் என்றவுடன் சரி சார் நீங்கள் எனக்காக ஒரு பைவ் மினிட்ஸ் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போனை வாங்கி பார்த்தால்….

அன்பு தான் போன் பண்ணி இருந்தான் வேகமாக போன் பண்ணி   என்ன மாமா என்று கேட்டால் கயல் தான் பேசினால் சீக்கிரம் வாடி எனக்கு வலி வந்துருச்சு என்ற உடன் மகாவிற்கு ஒரு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை சரி என்று விட்டு போனை வைத்து விட்டாள் சார் நீங்கள் கொஞ்ச நேரம் பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டால் சரி நான் என்றவுடன் வேகமாக கீழே இறங்கினாள் தனது துறை ஹெச் ஓடி  இடம் சென்று விளக்கத்தை சொன்னால் ….

மகா அப்பொழுது உனக்கு பதில் வேறு யாரவது டியூட்டியை பார்க்க வேண்டுமே என்றவுடன் மகா வேகமாக வந்து இப்போது தன்னிடம் பேசிய சாரிடமே கேட்டால் அவரும் ஒத்துக்கொண்ட பிறகு தனது துறை hd இடமும் சொல்லிவிட்டு படி இறங்கினால் அப்போது எழிலும் வேகமாக வந்தான் எழில் என்று உடன் எனக்கும் கயல் போன் செய்தால் நான் எனக்கு பதில் வருனை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் ….

அவனுக்கு  எக்ஸாம் டியூட்டி இல்லை என்று சரி என்று விட்டு இருவரும் கார் எடுத்துக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்றார்கள் அவர்கள் இருவரும் செல்லும் நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் மகிழ் இருந்தான் இருவரும் சென்றவுடன் அன்பு மகாவை பார்த்துவிட்டு மகா கயல் உன்னை வந்தால் பார்க்க சொன்னால் உள்ளே இருக்கிறாள் என்றவுடன் மகா வேகமாகச் உள்ளே சென்றாள்..

கயல் மகாவின் கையை பிடித்துக் கொண்டு இருந்தால் கயல் என்னாச்சு என்ன பண்ணுகின்றது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள் பிறகு மகிழை வர சொன்னாள் மகிழும் உள்ளே வந்தவுடன் மாமா மகாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் யாருக்காகவும் எந்த சூழ்நிலையும் விட்டுவிடாதீர்கள் என்றால் அந்த நேரத்திலும் மகா கயலை ஓங்கி ஒன்று அறைந்து இருந்தால் …

லூசு மாதிரி எதையாவது  யோசித்துக் கொள்ளாதே உனக்கு ஒன்றும் ஆகாது வயிற்றில் குழந்தை இருப்பதை மறந்து விடாதே உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது என்பதையும் மறந்து விடாதே உன்னை மட்டுமே நம்பி அன்பு மாமா இருக்கிறார் என்று அவள் சொல்லும் வேளையில் கயலுக்கு அடிவயிற்றில் சுளிர் என்று வேகமாக வலி ஏற்பட்டது அவள் வேகமாக கத்தியவுடன் மருத்துவர்கள் வந்து மகிழ் மகா இருவரையும் வெளியே போக சொல்ல விட்டு கயலை பிரசவ வார்டு இருக்கு அழைத்துச் சென்றார்கள் ….

கயலுக்கு பிரசவத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுப்பாளா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 98”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *