மகா கயலை ஓங்கி ஒன்று அறைந்தவுடன் கயலுக்கு அவளது அடிவயிற்றில் சுளிர் என்று வலி ஏற்பட்டது அம்மா என்று வேகமாக கத்தினாள் பிறகு மருத்துவர்கள் உள்ளே வந்து இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு கயலுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்கள் …
அடுத்த அரை மணி நேரத்தில் கயலுக்கு நல்ல முறையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள் குழந்தையின் சத்தம் கேட்பதற்கும் நிலா வேணி இருவரும் மருத்துவமனைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது தேர்வு முடிந்தவுடன் வருண் இருவரிடமும் சொல்லிவிட்டான் இருவரும் தனது துறை ஆசிரியர்கள் இடம் சொல்லிவிட்டு வேகமாக அவர்களது வண்டியில் கிளம்பி வந்தார்கள்…
வீட்டில் உள்ள அனைவருமே வந்திருந்தார்கள் அனைவருமே என்றால் உதிரன் முகில் இனி மூவரும் வந்திருந்தார்கள் பிறகு அனைவரையும் குழந்தை பார்ப்பதற்காக நின்று கொண்டு இருந்தார்கள் நிலா வேகமாக ஓடி வருவதற்கும் நர்ஸ் வந்து இங்கு யார் நிலா என்று கேட்பதற்கும் சரியாக இருந்தது நிலா அமைதியாக நர்ஸ் அருகில் போய் நிற்பதற்கும் நீங்கள் தான் நிலவா உங்கள் கையில் தான் குழந்தையை தர சொன்னார்கள் என்று சொன்னவுடன் நில அமைதியாக கையை நீட்டியுடன் குழந்தையை நிலா கையில் கொடுத்துவிட்டு நர்ஸ் சென்று விட்டார்..
நிலா அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள் பிறகு அம்பிகா அன்பு அறிவு என கயலின் மாமனார் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பார்த்தார்கள் ஆனால் குழந்தை நிலாவின் கையில் தான் இருந்தது பிறகு மகா அருகில் போய் நின்றால் மகா கையில் குழந்தையை கொடுத்தால் மகா குழந்தையை பார்த்துவிட்டு அப்படியே பெரியம்மா மாதிரி இருக்கிறது என்று சிரித்தால் கயல் மாமியார் அம்பிகாவும் அதையே சொன்னார் …
ஆமாம் மகா சம்மந்தி மாதிரி தான் இருக்கு குழந்தை என்று சொன்னார் பிறகு குழந்தை குறை மாசத்தில் பிறந்ததால் வாங்கி கொண்டு சென்றார்கள் கயலுக்கு இன்னும் குழந்தை பிறக்க ஒன்றை மாதம் இருக்கிறது எட்டரை மாதத்திலே கயலின் பையன் பிறந்து விட்டான் பிறகு குறை மாதத்தில் பிறந்ததால் இங் பெட்டியில் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள் ….
சுகப்பிரசவமாக இருந்தாலும் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தீர்கள் சரி என்று விட்டு இனி வேணி இருக்கிறேன் என்று சொன்னதற்கு மகா ஒரே வார்த்தையாக நம் வீட்டு ஆட்கள் யாரும் இங்கு தங்க வேண்டாம் நான் முத்துவின் அம்மாவையும் வேணியின் அம்மாவையும் வரச் சொல்லி இருக்கிறேன் அவர்கள் உடனிருந்து பார்த்துக் கொள்வார்கள் ….
நீங்கள் அனைவரும் வீட்டிற்க்கு செல்லுங்கள் என்று உடன் அனைவரும் மகாவை பார்த்து முறைத்துவிட்டு கயலையும் பார்த்துவிட்டு கயலிடமும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்கள் நிலா மாலை வரை கயல் அருகில் இருந்துவிட்டு இரவு 7:30 மணி போல் சென்றாள் அன்பு தான் அவளை வந்து கேட்டில் இறக்கிவிட்டு சென்றான் மகா மகிழ் இருவரும் இப்பொழுது மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள் ….
மூன்று மாதம் முடிந்த பிறகு மருத்துவமனை சென்று செக் அப் செய்து கொண்டு வந்துவிட்டு பிறகு மாடிப்படி ஏறலாமா என்று கேட்டதற்கு ரொம்ப ஏறக்கூடாது என்று லதா சொன்ன பிறகு நான் காலையிலும் மாலையிலும் தான் ஏறுவேன் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் எதுக்காகவும் ஏற மாட்டேன் என்ற பிறகு சரி என்று அனுப்பி வைத்தார் அதனால் இருவரும் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள் …
அவ்வப்போது அவர்களுக்கு தோன்றினால் பூந்தோட்டத்தில் இருக்கும் அரைக்கும் வந்து தங்கிக் கொள்பவர்கள் மகா மாடிப்படி ஏறிக்கொண்டே பரவால்ல கயலோட பையன் அவங்க பாட்டி மாதிரியே இருக்கான் முட்டை கண்ணு போட்டு கிட்டு முழிகிறான் கழுத்துல ஒரு மச்சமும் இருக்கு என்று சொல்லிக் கொண்டே ஏறினால் வீட்டில் உள்ள அனைவருக்கும் சிரிப்பு வந்தது…
மகா சென்ற பிறகு காவேரி சுந்தரியிடம் எனக்கு என்ன முட்ட கண்ணா டி என்று கேட்டார் சுந்தரி சிரித்து கொண்டே பின்ன இல்லையா அண்ணி என்று கேட்டுக்கொண்டே சுந்தரியும் சிரித்தார் காவேரி சுந்தரியை பார்த்து முறைத்து விட்டு இறுதியில் சிரித்து விட்டார் கோதையும் கோவிலுக்கு சென்று வருகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு குழந்தையை பார்த்துவிட்டு வந்து விட்டார் பாண்டியம்மா பாட்டி நேரடியாகவே தனது மகளிடம் வந்து நான் கயலை பார்க்க செல்கிறேன் என்று சொன்னார் …
காவேரி முறைத்தார் எனக்கு பெத்த பிள்ளையை விட பேரப்பிள்ளை பெரிது என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு தனது கணவனையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் முத்து இருவரையும் மருத்துவமனை அழைத்துச் சென்று பிறகு வீட்டுக்கு அழைத்துக் கொண்டும் வந்து வீட்டிலும் விட்டுவிட்டேன் சுந்தரியும் காவேரி மட்டும்தான் இதில் கயலின் குழந்தையை பார்க்காதவர்கள் ….
காவேரி அமைதியாக சுந்தரி பார்த்தார் ஏன் உனக்கு பொய் சொல்லி விட்டோ இல்ல நேரடியாக சொல்லி. விட்டோ போய் பார்க்க தோன்றவில்லையா ஒரு வேலை நீ போய் பார்த்துவிட்டு வந்து விட்டாயோ என்று கேட்டார் சுந்தரி காவிரியை பார்த்து சிரித்துவிட்டு அண்ணி காலையிலிருந்து நான் உங்களுடன் தான் வீட்டில் இருக்கிறேன் நான் சென்றேனா இல்லையா என்று உங்களுக்கு தெரியும் என்று கேட்டார்…
சரி உனக்கும் போக வேண்டுமென்று என்ற விருப்பம் இல்லையா என்றார் அண்ணி எனக்கு போக வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது ஆனால் போக விருப்பமில்லை என்றார் காவிரிக்கு கண்கள் கலங்கியது சுந்தரி காவேரி கையை இறுகப் பற்றினார் அவரது கண்ணில் சுந்தரியின் கையை வைத்துக்கொண்டு காவேரி அழுதார் …
ஒன்றுமில்லை அண்ணி அனைத்தும் சரியாகிவிடும் என்றவுடன் காவேரி சுந்தரி தோளில் தட்டிவிட்டு அவரது அறைக்கு அமைதியாகச் சென்று விட்டார் எழில் கந்தன் மணி அனைவருக்கும் போன் செய்திருந்தான் அவர்கள் இருவரும் சென்று குழந்தை மற்றும் கயல் இருவரையும் பார்த்து விட்டு வந்து விட்டார்கள் வேலு முதல் ஆளாக சென்று பார்த்துவிட்டு வந்தார் இப்படியே நாட்களும் சென்றது …
வேணி நிலா இருவருக்கும் இறுதியாண்டு தேர்வு முடிந்து விட்டது அவர்கள் கல்லூரியின் பேப்பர் திருத்தம் நடந்து கொண்டு இருந்தது அப்பொழுது மகிழ் எழில் என்று வரவேற்பரையில் நின்று ஒருநாள் இரவு நேரத்தில் கூப்பிட்டான் அவன் எழில் என்று கூப்பிட்டு உடன் வீட்டில் உள்ள அனைவரும் வந்து வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தார்கள் ….
அவன் கூப்பிடும் போது இரவு ஏழு மணி இருக்கும் என்ன மகிழ் என்று கேட்டுக் கொண்டே எழில் அறையில் வந்து நின்றான் டேய் மகாவை ஒரு ஐந்து நாட்கள் பார்த்துக் கொள்கிறாயா என்று கேட்டான் மகாவும் மகிழின் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்திருந்தாள் எழில் மகிழிடம் ஏன் எங்கு செல்கிறாய்? என்ன ஆயிற்று என்று கேட்டான் இல்லை டா கம்பெனி விஷயமாக முக்கியமாக சொல்ல வேண்டி இருக்கிறது …
ரொம்ப நாட்களாக நான் இன்னும் செல்லவில்லை இப்போது சென்று ஆக வேண்டும் என்றவுடன் மகா கீழே இறங்கி வந்தவள் மாமா எழிலுக்கு பேப்பர் திருத்தும் வேலை வெளியூரில் போட்டிருக்கிறார்கள் அவன் 10 நாட்கள் செல்ல வேண்டி இருக்கிறது என்றால் சரிடா நீ போயிட்டு வா என்றான் மகிழ் எழில் இல்லடா நான் அதற்கு பதில் போகாமல் விட்டு விடுகிறேன் நீ சென்று வா என்றான்…
அப்போது மகா தான் இருவருக்குமே முக்கியமானது தான் இருவரும் சென்று வாருங்கள் அது தான் வீட்டில் இத்தனை பேர் இருக்கிறார்களே ஒன்று பிரச்சனை இல்லை என்றால் காவேரி மகாவை முறைத்தார் மகா காவேரியை பார்த்து சிரித்தால் அப்பொழுது கந்தனும் மணியும் தான் முன்னாடி வந்து நீங்கள் இருவருமே சென்று வாருங்கள் அதான் நாங்கள் இத்தனை பேர் இருக்கிறோம் அல்லவா நான் அண்ணன் கந்தன் அண்ணன் நிலா மூவரும் மகா உடனே சென்று அவளை பார்த்துக் கொள்கிறோம் என்றார் …
பிறகு மகாவும் கண்ணை மூடி திறந்த பிறகு இருவருமே அன்று இரவு அவர்கள் வேலையை பார்க்க கிளம்பினார்கள் அன்றிலிருந்து மூவரும் ஐந்து நாட்கள் மேலே படுத்து கொண்டார்கள் மணியும் கந்தனும் தான் சமையல் செய்தார்கள் மகாவிற்கு இப்பொழுதெல்லாம் வாந்தி வர ஆரம்பித்துவிட்டது நிலா சமைக்கிறேன் என்று சொன்னதற்கு வேண்டாம் நாங்கள் சமைக்கிறோம் என்று சொன்னார்கள் சரி என்று நிலாவும் முழு நேரமும் தனது அக்கா உடனே இருந்தால் ….
மகாவிற்கு அவளது கல்லூரியிலே பேப்பர் திருத்தம் இருந்ததால் அவள் தினமும் அவளது கல்லூரிக்கு சென்று வந்தால் இப்படியே ஐந்து நாட்களும் சென்றது வேணி நிலா இருவருக்கும் தேர்வு முடிந்ததிலிருந்து வீட்டில் அனைவரும் மேற்கொண்டு ஏதாவது படிக்கிறீர்களா இல்லை வேலைக்கு செல்கிறீர்களா என்று கேட்டுப் பார்த்தார்கள் ஆனால் இருவரும் அவர்கள் வாயை லேசாக கூட திறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் ….
வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது இருவரும் அமைதியாகவே இருந்தார்கள் மகா இருவரிடமும் என்ன படிக்கப் போகிறீர்கள் இல்லை என்ன மேற்கொண்டு செய்யப் போகிறீர்கள் என்று எதுவும் கேட்கவில்லை ஐந்து நாட்களுக்குப் பிறகு இரவு 11 மணி போல் மகிழ் வந்தான் மகிழின் வண்டி சத்தம் கேட்டு சுந்தரி அவன் ஐந்து நாட்களுக்குப் பிறகு வருகிறேன் என்று சொன்னதால் வரவேற்பறையிலே உட்கார்ந்திருந்தார் ….
மகிழ் வந்தவுடன் கதவை திறந்து விட்டார் வேணியும் தூங்காமல் தான் இருந்தால் அவள் அவளது அறையில் இருந்து வந்து கதவை திறப்பதற்கு வந்தால் வேணி சுந்தரியை பார்த்துவிட்டு சிரித்தாள் மகிழ் தனது தாயை பார்த்துவிட்டு வேணியை பார்த்து சரி வேணி நீ போய் தூங்கு என்று விட்டு தனது தாயைப் பார்த்தான் அவரும் அமைதியாக அவரது அறைக்கு சென்று விட்டார் பிறகு மகிழ் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு மொட்டை மாடிக்கு சென்றான்…
அவன் லேசாக கதவைத் தட்டியுடன் கந்தன் மணி இருவரும் எழுந்து கதவை திறந்தார்கள் பிறகு மகிழைப் பார்த்துவிட்டு நிலாவை கை தாங்களாக தூக்கினார்கள் நிலா தூக்கத்தில் நான் வரமாட்டேன் என்றால் மகிழ் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு அவள் இங்கே தூங்கட்டுமா என்றால் இல்லடா நாங்கள் அழைத்துக் கொண்டு செல்கிறோம் என்றவுடன் நிலாவை கந்தன் கைத்தாங்கலாக அவரது அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தார் …..
அவர்கள் இருவரும் நிலாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வருவதை தண்ணீர் எடுக்க வந்த சுந்தரி பார்த்து சிரித்தார் மகிழ் வந்து விட்டான் அதனால் தான் என்றார்கள் எனக்கு தெரியும் நான் பார்த்து விட்டேன் என்று உடன் சரி அவளை விடுங்கள் நான் அழைத்து செல்கிறேன் என்றார் சுந்தரி இல்லை நானே அழைத்து சொல்கிறேன் என்று கந்தன் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார் …..
நிலாவை கை தாங்களாக அழைத்து வருவதை பார்த்துவிட்டு காவேரி என்ன என்று கேட்டார் கந்தன் தான் மகிழ் வந்து விட்டான் அவர்கள் இருவரும் பார்த்த ஐந்து நாட்களுக்கு மேல் ஆகுவதால் நான் தான் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன் என்றவுடன் காவேரி சிரித்து விட்டு இருவருக்கும் இடையில் நிலாவை படுக்க வைத்தார் …
மூவரும் கீழே இறங்கியவுடன் மகா மகிழையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ் மகாவை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்துக் கொண்டு அவளது காது மடலில் முத்தம் வைத்தான் மகிழ் ரொம்ப நாட்களுக்கு பிறகு நெருங்குவது இப்பொழுது தான் மகாவின் கண்களில் இருந்து கண்ணீர் மகிழின் கையில் பட்டு தெறித்தது மகிழ் மயிலு என்றான் மாமா நான் பேசிய வார்த்தை உன்னை என்னிடம் நெருங்க முடியாத அளவிற்கு செய்து விட்டதல்ல என்றால்….
ஒன்றுமில்லை மயிலு இனிமேல் அதை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தம் வைத்தான் மகா மகிழையே பார்த்துக் கொண்டிருந்தால் மகிழும் மகாவையே பார்த்து கொண்டிருந்தான் மகிழ் மகாவை பார்த்துக் கொண்டிருந்து விட்டு என்ன என்றான் மகாவின் பார்வை மகிழ் கண்ணை விட்டு கீழே இறங்கவில்லை ….
மகிழ் மகாவையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அவளது பார்வை தன் கண்ணை விட்டு நீங்கவில்லை என்றவுடன் மகா ஐ நீட் யூ என்றான் மகிழ் கேட்டதற்கு மகா ஒத்துக் கொள்வாளா அவர்கள் இருவரும் மனதலவிலும் உடல் அளவிலும் ஒன்றாக அவர்கள் விருப்பத்தோடும் நிதானத்தோடும் ஒன்றிணை வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
nice