அத்தியாயம் 19
கீர்த்திவாசனிடமும் லவனிகாவிடமும் விடைபெற்றான் பவேஷ்.
“மாம்ஸ். கண்டிப்பா மேரேஜுக்கு வர்றீங்க. நான் உங்களை எதிர்பார்த்துட்டே இருப்பேன்.”
“வர்றேன்டா. வர்றேன் வர்றேன். இங்க இருந்த பத்துநாள்ல நூறு தடவைக்கும் மேல சொல்லிட்ட. காது வலிக்கிது.”
“வலிச்சா நல்லது தான? மறக்க மாட்டீங்க இல்ல?”
“அப்ப, உன்னாலயும் மறக்க முடியாத அளவுக்கு ஒன்னு கொடுத்து அனுப்பவா.?” என்று கை ஓங்கிட,
“மாம்ஸ் ப்ளைட்ல போகணும். நீங்க எமர்ஜென்ஸி வார்ட்ல அட்மிட் பண்ணிடாதீங்க! சீனியர் நீங்க, கொஞ்சம் பொறுப்பா இருங்க!” என ஓங்கிய கரத்தைப் பற்றிக் கொள்ள, அவனின் பின்வாங்கலில் இருவரது முகத்திலுமே புன்னகை அரும்பி இருந்தது.
ஆடவர்களின் பேச்சை அமைதியாய் பார்த்திருந்தாள் லவனி.
“என்ன பேபி, எதுவும் பேசாம இருக்க?”
“என்ன பேசணும்.?”
அவன் திகைத்து, “நான் நாட்டை விட்டுப் போறேன் பேபி. கொஞ்சமாது ஃபீல் பண்ணு.”
“அப்படி எல்லாம் எந்த ஃபீலிங்ஸும் வரல எனக்கு!”
“உன் மனசு என்ன கல்லா பேபி.?”
“ஆமா, பாறாங்கல்லு. அதுல ஃபீலிங்ஸ் எல்லாம் எதிர்பார்த்துடாத!” என்று கீர்த்தி சிரிக்க, “உங்களை நான் செண்ட்ஆஃப் பண்ட வந்தேன் பவேஷ். ஆனா நீங்க, இப்படிப் பிகேவ் பண்ணுறீங்க? எனக்குப் போலியா நடிக்க எல்லாம் தெரியாது!” எனக் காட்டமாய் பதில் உரைத்து முறைத்தாள் அவள்.
“சில் பேபி. சும்மா விளையாட்டுக்குத் தான.? எப்பவும் சீரியஸாவே இருக்காத!” என்று அவன் சமாதான முயற்சியில் இறங்க, விமானத்திற்கான அறிவிப்பு ஒலித்தது.
“சரி கைஸ், நான் கிளம்புறேன். பாய் மாம்ஸ். டேக்கேர் பேபி!” எனச் சொல்லிச் செல்ல, இருவரும் கையசைத்து அனுப்பி வைத்தனர்.
அவள் மகிழ்ந்தனிற்கு கைப்பேசியில் இருந்து அழைப்பு விடுத்தபடி அங்கிருந்து நகர, “மிஸ் லவனிகா!” என்று அழைத்து நிதானிக்க வைத்தான் கீர்த்தி.
கேள்வியாய்ப் பார்த்திட, “காஃபி.?”
“ஏன்.?”
“கொஞ்சம் உன்கிட்டப் பேசணுமே?”
“என்ன விசயம்.?”
“ஒரே வார்த்தையில சொல்ல முடியாது. கொஞ்சம் டைம் தேவைப்படும். சோ.. கட்டாயப்படுத்தல உன்னை. விருப்பம் இல்லேனா, போ!” என்று அவன் தோளைக் குலுக்கிட, ஆராய்தலுடன் நோக்கினாள் லவனி.
அவளிற்குமே, ‘பேசினால் நல்லது!’ என்றே தோன்றியது. முந்தைய சந்திப்பின் பொழுது அவர்களிற்குள் நடந்த உரையாடல்கள் எதையும் மறக்கவில்லை பாவை. மது போதையிலுமே, அன்று நல்ல நிதானத்திலேயே இருந்தாள்.
எப்பொழுதும் நேருக்கு நேராய் எவரையும் எதிர்கொள்பவள், கீர்த்தியிடமும் அப்படித்தான் பேசி இருந்தாள்.
எனினும், அவளின் நேரடி பேச்சிற்கு ஒரு எல்லை உண்டு. தனது மனதில் இருக்கும் சற்றே மென்மையான உணர்வுகளை, அந்நியரிடம் எந்நிலையிலும் வெளிகாட்டிட மாட்டாள். ஆனால், அன்றைய நாளில் உட்சென்றிருந்த மது, அவளையும் மீறி நுண்ணிய உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தி விட்டது.
அவன் அதை எப்படி எதிர்கொண்டான் எனத் தெரியவில்லை. ஆனால், தன்னை பலவீனமான பெண்ணாய்க் காட்டிக் கொள்ள லவனி விரும்பவில்லை. இறுதியாய் பேசி, இன்றோடு அவனுடனான சந்திப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணி, சம்மதித்தாள்.
விமான நிலையத்திற்கு வெளிப்பக்கம் வந்து, அருகே இருந்த தேநீர் விடுதியின் மேஜை ஒன்றைச் சுற்றி போடப்பட்ட இருக்கைகளில், எதிரெதிரே அமர்ந்தனர்.
அவர்களை வரவேற்று உபசரித்த பணியாளனிடம், ‘ஒன் காஃபி!” என்ற கீர்த்தி, அவளைக் கேள்வியாய்ப் பார்த்தான்.
“கிரேப் ஜுஸ். தனித்தனியா பில் கொண்டு வாங்க!” என மொழிந்து தனது மனநிலை யாதென மறைமுகமாய் காட்டிவிட்டு, “என்ன பேசணும்?” என்றவாறு அவன் பக்கம் திரும்பினாள்.
மெலிதாய்ப் புன்னகைத்தவன் அன்று தனது கைப்பேசியில் பதிவு செய்த அவளின் காணொளியை இயக்கிக் கொடுத்தான்.
அரை நிமிடக் காட்சி அது.
“சோ வாட்.?” என அவள் திருப்பிக் கொடுக்க, “எனக்கு இந்த வீடியோல இருக்கிற லவனிக்கிட்ட பேசணுமே?”
“அன்னைக்கு டிரிங்க் பண்ணி இருந்ததால, ஐ ஜெஸ்ட் லாஸ்ட் மை கண்ட்ரோல். எப்படிப் பார்த்தாலும் நான்தானே அது! சொல்லுங்க.”
மறுத்துத் தலை அசைத்தவன், “இல்ல. அவ வேற, நீ வேற! ஐ லைக் ஹெர், மிஸ் லவனிகா.”
அதிர்ச்சியுடன் பார்த்தவள், “வாட் யூ மீன்?”
“அந்த நியாயவாதியை எனக்குப் பிடிச்சிருக்கு. அவ, என்கிட்ட அடிவாங்க ரெடியா இருந்தா தெரியுமா? ஆனா, இப்ப எதிர்ல இருக்குற நீ அதை அக்செப்ட் பண்ணிக்க மாட்ட.”
“இப்ப என்ன? நான் அன்னைக்கு உங்களை அடிச்சதுக்கு, நீங்க திருப்பி அடிக்கணுமா.?”
“பார்ட்டி அன்னைக்கு நாம பேசுனது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கு தான.?”
“யா!” என்றவள் வேறுபக்கம் பார்வையைத் திருப்ப, “அப்ப, நான் அன்னைக்குச் சொன்ன பதிலைத் திரும்பவும் ரீவைண்ட் பண்ணிப் பாரு!”
‘எனக்கு உன்மேல கோபம் இருக்குதான். அதுக்கு நான் எப்படிப் பதிலடி கொடுக்கணுமோ, அப்படிக் கொடுத்துக்கிறேன். ஆனா, இப்படி இல்ல!’ என அவன் உரைத்தது நினைவிற்கு வர, “இப்ப, என்ன வேணும் உங்களுக்கு.?”
“என்னோட பேர் தெரியுமா, உனக்கு.?”
“தெரியாமலா உங்கக்கூட இப்படி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன்?”
“எங்க, பேரைச் சொல்லு பார்ப்போம்.?”
“மிஸ்டர், உங்களுக்கு டைம் பாஸ் பண்ண நான்தான் கிடைச்சேனா?”
“ப்ளீஸ்..”
சட்டென்று அமைதியாகி விட்டாள் லவனி. அவனின் குரலும் அதன் தொனியில் வெளிப்பட்ட இளக்கமும், முக பாவனையும் இதுவரை எந்த ஆடவனிடத்திலும் அவள் காணாதது. அதேநேரம் அந்த ‘ப்ளீஸ்..’ என்ற ஒற்றைச் சொல், தான் நினைக்கும் அளவிற்கு எதிரே இருப்பவன் கடுமையானவன் அல்ல என்பதற்கு குணச்சான்று வழங்கியது.
இந்நொடியில் மட்டும் அல்லாது, முந்தைய சந்திப்பின் போது அவள் மகிழ்ந்தனிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தின் பின் இருக்கும் மரியாதை நிமித்தமான அவ்வுணர்வை அவன் மிகச்சரியாய் கணித்ததும், சற்றே மதிப்புணர்வை பாவைக்குள் கொடுத்து இருந்தது.
ஆடவனின் அன்றைய பேச்சிலுமே இதே அளவிற்கான குரல் இளக்கம் இருந்ததை, தற்போது அவளின் நினைவுக் கூறுகள் பகுத்து உரைத்திட சற்று குறுகுறுப்புடனே அவனை நோக்கினாள்.
எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே அவளைப் பார்த்திருந்தான் கீர்த்தி.
‘முதல் சந்திப்பிற்கும் இப்போதைய உரையாடலிற்கும் தான் எவ்வளவு வேறுபாடு.?’ என்ற எண்ணம் எழுவதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.
அவனிடம் வாக்குவாதம் செய்ய விருப்பம் இல்லை லவனிக்கு. தான் அறியாது நிகழ்ந்த தவறைத் திருத்திக் கொள்ள நினைத்தாள். அதனால் சற்று சுமூகமாகவே பேச முயன்றாள்.
“உங்க பேரு கீர்த்திவாசன், போதுமா.?”
மெலிதாய்ச் சிரித்தவன், “ஆனா, அன்னைக்கு நீ அப்படிக் கூப்பிடலயே.?”
ஏனோ அவளது இதழ்களிலுமே புன்னகை அரும்பியது.
“கே.வி.னு கூப்பிட்டேன். ஞாபகம் இருக்கு.”
“ஐ லைக் இட், வென் யூ கால் மீ தட்.”
“சரி சொல்லுங்க, வாட் யூ வாண்ட்.?”
“இப்படிச் சிரிச்சு சாஃப்டா பேசுற லவனிகாவை எனக்குப் பிடிச்சிருக்கு. அன்னைக்கு, நீ டிரிங் பண்ணி இருந்த டைம்ல தான் உனக்குள்ள, ஐ சீ ஹெர்.”
குழப்பத்துடன் நோக்கியவள், “சோ.?”
“வில் யூ மேரி மீ? கோல்டா இல்லாம, கொஞ்சம் ப்ளஸண்டா என்கூட லைஃபை ஷேர் பண்ணிக்கிறியா.? அண்ட் ஐ ப்ராமிஸ் யூ, நானும் உனக்கு உண்மையா இதே எக்ஸைட்மெண்டோட என்னோட லாஸ்ட் மினிட் வரைக்கும் உன்கூட இருப்பேன்.”
வியப்பும் திகைப்புமாய் அவனைப் பார்த்தவள், “கே.வி. ஆர் யூ ஜோக்கிங்?”
“அஃப்கோர்ஸ் நாட், டியர்.”
“சில்லி!” என்றவள் எழுந்து செல்ல, “மேடம் பில்!” என உரைத்தபடி எதிரே வந்தான் தேநீர் விடுதியின் பணியாளன்.
அவளிற்கு ஒருநொடி முந்திக் கொண்ட கீர்த்தி இருவரது பானத்திற்குமான பணத்தைச் செலுத்திட, முறைத்தாள் பாவை.
அவன், “இதுவே முன்னாடினா, எப்படி ரியாக்ட் பண்ணி இருப்பேன்னு தெரியல. பட் இப்ப சிரிப்புதான் வருது!” என்றிட, “என்னைப் பத்தி என்ன தெரியும்? எப்படி த்ரீ டைம்ஸ் மட்டும் மீட் பண்ண ஒரு பொண்ணுக்கிட்ட, மேரேஜுக்குப் பிரபோஸ் செய்ய முடியிது உங்களால?” என வினவி விட்டு அவள் நடக்க, ஆடவனும் உடன் இணைந்து எட்டு வைத்தான்.
“ஃபோர் டைம்ஸ்.”
உணவகத்தின் வாயிலருகே சற்றே நிதானித்தவள் கேள்வியாய்ப் பார்த்திட, “உன்னை நான் செகண்ட் டைம் பார்த்தது, பவேஷோட வீட்டுல. அட் தட் மொமெண்ட் ஐ அண்டர்ஸ்டூட் ஹு ஆர் யூ. அண்ட் வாட் யூ வாண்ட்.”
“எக்ஸ் கியூஸ் மீ?” என ஒருவர் உள்ளே செல்வதற்காக அவர்களிடம் வழிவிடும் பார்வையால் கேட்டிட, இருவரும் நடந்தபடி பேச்சைத் தொடர்ந்தனர்.
“அதுனால தான் பார்ட்டியில என்னை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிற மாதிரி ரியாக்ட் பண்ணீங்களா.?”
மறுத்துத் தலையசைத்த கீர்த்தி, “உண்மையைச் சொல்லணும்னா, அந்த சுச்சுவேஷனை எப்படி ஹேண்டில் பண்ணுறதுனு தெரியல. ஏன்னா முதல் ரெண்டு சந்திப்புமே, ரெண்டு எக்ஸ்ட்ரீம்ல இருந்தது. சோ, நான் அமைதியா இருந்துட்டேன். நீயா வந்து பேசுன பின்னாடிதான், ப்ச்ச்..” எனத் தோளைக் குலுக்கிப் புன்னகைத்தான்.
“எனக்கும் இப்ப அப்படித்தான் இருக்கு. ஐ டோண்ட் திங்க், ஐ காண்ட் மேக் எனி டிஸிசன்ஸ் ரைட் நவ்.”
எஜமானி வருவதைக் கண்ட மகிழ்ந்தன் வாகனத்தை இயக்கித் தயாராய் நிறுத்த, அவளிற்கு இரண்டு எட்டு முன்னால் வந்த கீர்த்தி வண்டியின் கதவைத் திறந்து விட்டு, “போய், உட்காரு!” என்றான்.
“எனக்குக் கை இருக்கு கே.வி.”
“உனக்காக ஒருத்தர் ஒன்னு செய்யும் போது, ஜெஸ்ட் அக்செப்ட் இட் டியர்.”
“டோண்ட் கால் மீ டியர், ஓகே.?” என்றபடி அவள் அமர, “ஓகே!” என உரைத்து கதவை அடைத்து இறங்கி இருந்த கண்ணாடியின் வழியே லவனியை நோக்கினான்.
“என்ன.?”
“ஐ அண்டர்ஸ்டேண்ட், வாட் யூ ஆர் திங்க்கிங். டேக் யுவர் டைம். இஃப் நோ இஸ் யுவர் ஆன்ஸர், டோண்ட் ஹெஸிடேட் டூ சே. ஐம் ரெடி டூ அக்செப்ட் இட்.”
லவனி இமைக்கத் தோன்றாது அவனை பார்க்க, “ஆனா பதிலை சொல்ல ரொம்ப லேட் பண்ணிடாத. அப்புறம் லைஃப்ல அடுத்த ஸ்டேஜுக்கு மூவ் ஆகுறது எனக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடும். சீ யூ. பார்த்து டிரைவ் பண்ணு மகிழ்.” என இருவரிடமும் உரைத்து, சிறிய தலை அசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.
அவளோ நடப்பது ஒன்றும் புரியாமல் பதுமையைப் போல் அமர்ந்திருக்க, எஜமானியைப் பார்த்துப் புன்னகைத்த படி வாகனத்தை இயக்கினான் மகிழ்ந்தன்.
இருபது நிமிடங்கள் கடந்து போக,சற்றே இயல்பிற்கு மீண்டருந்தாள் லவனி.
அருகே இருந்தவனைப் பார்த்தவள், “என்ன மேன், ரொம்ப நேரமா சைலண்டா இருக்க. நீ, அப்படிப்பட்ட ஆள் இல்லையே.?”
“நான் இல்ல மேடம். நீங்கதான் அமைதியா இருந்தீங்க. நான் உங்களைத் தொந்தரவு செய்யாம இருந்தேன். அவ்வளவு தான்.”
ஒரு பெருமூச்சியை விட்டவள், “ஹீ பிரபோஸ் மீ, மகிழ்.”
அவன் முகத்திலோ உடல்மொழியிலோ எவ்வித மாற்றத்தையும் காட்டாது இயல்பாய் அவளைப் பார்க்க, “என்ன, அவ்வளவு தானா உன் ரியாக்ஷன்?”
“எனக்கு முன்னாடியே தெரியும் மேடம்.”
பெரிதும் அதிர்ந்தவள், “வாட்? பட் ஹௌ?”
“அன்னைக்குப் பார்ட்டி முடிஞ்சு நாம கிளம்புறப்ப, சார் உங்களைப் பார்த்த பார்வையிலயே நான் புரிஞ்சிக்கிட்டேன்.”
“நம்மளை செண்ட்ஆஃப் பண்ணது பவேஷ் தான.? கே.வி இல்லையே அந்த டைம்ல?”
“மேல் மாடியில நின்னுட்டு இருந்தாரு.”
“உஃப்.” என்று வாயால் மூச்சை வெளிவிட்டவள், “ஐ காண்ட் பிலீவ் திஸ்.”
“கோபம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும் மேடம்!” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாது சாலையில் கவனத்தைச் செலுத்தினான்.
இருக்கையில் பின்பக்கமாய்ச் சாய்ந்தபடி, “நான் அடிச்சதுக்குப் பதிலா, என்னை எடுத்துக்கப் பார்க்கிறான். ராஸ்கல்!” என முணுமுணுத்தவளின் இதழ்களில் காரணமின்றி குறுநகை ஒன்று வந்து ஒட்டிக் கொண்டது.
“பானுமா, இன்னைக்கு இன்னொருத்தருக்கும் சேர்த்து சமைக்கிறீங்களா.?” எனப் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட மகிழ்ந்தனிடம், கரண்டியை ஆட்டிக் காட்டினாள் அவள்.
“என்ன பானுமா?”
“வர வர உன்னோட அராஜகம் எல்லை மீறி போகுது. இங்க, நீ வேலைதான் பார்க்குற. உன்னோட சொந்த வீடு இல்ல.”
“அது எனக்கும் தெரியும்.”
“அப்புறம், அது வேணும் இது வேணும்னு அப்பப்ப ஆர்டர் போடுற? நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன், என்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு.”
முகத்தைச் சுருக்கி குழந்தை போல் பார்த்தவன், “நான் கோபமா போறேன்!” என்றுவிட்டுச் செல்ல, “இவன் கோபத்தைத் தூக்கிக் கடல் தண்ணியில தான் போடணும். நிமிசத்துல காணாம போயிடும்!” எனத் தனக்குத்தானே உரைத்தபடிச் சமையல் வேலையைச் செய்தாள் பானு.
உணவு வேளையில், தான் உண்ணாது பிளாஸ்டிக் டப்பாவில் அதனை எடுத்து வைத்த மகிழைக் கவனித்தவள், “ஏய், என்ன செய்யிற.?”
“சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!”
“அதைத் தட்டுல போட்டு சாப்பிடுறதுக்கு என்ன?”
“எனக்கு இல்ல, என்னோட ஃப்ரெண்டுக்கு.”
“இது என்ன ஹோட்டல்னு நினைச்சியா? பார்சல் பண்ணி கொண்டு போறதுக்கு.?”
“வீடுனு நல்லாவே தெரியும். அதுனால தான் எடுத்து வைக்கிறேன்.”
“என்னய்யா உன்னோட பிரச்சனை.?”
“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் பானுமா. நான் வேலை இல்லாம இருந்த அஞ்சு மாசமும், சாப்பாடு போட்டு, தங்க இடம் தந்து, செலவுக்குப் பணமும் அப்பப்ப சின்ன சின்னதா வேலையும் கொடுத்து சொந்தத் தம்பி மாதிரி பார்த்துக்கிட்டாரு. அவருக்கு, நான் பதிலுக்கு எதுவுமே செஞ்சது இல்ல.
குடும்பம் எல்லாம் வெளியூர்ல இருக்காங்க. இங்க தனியா இருக்காரு. எப்பவும் ஹோட்டல் சாப்பாடு தான். நீங்க நல்ல ருசியா சமைக்கிறீங்களா? அதான், ஒருநாளைக்கு அவருக்கு வீட்டுச் சாப்பாடு கொடுக்கலாம்னு எடுத்து வைக்கிறேன்.”
“இதை முதல்லயே சொல்லுறதுக்கு என்ன?”
“எங்க என்னை சொல்ல வீட்டீங்க.?”
“சரி, இருக்கிறதை அப்படியே கொண்டு போ.”
“உங்களுக்கு.?”
“நான், வேற ஏதாவது செஞ்சு சாப்பிட்டுக்கிறேன்.”
“தேங்க்ஸ் பானுமா.₹ என்று உணவுடன் கிளம்பியவனின் அன்றைய மிச்சப் பொழுது பிரபாகரனுடன் கழிந்தது.
இரவில் இல்லம் திரும்பிய பொழுது, “சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குனு, சார் சொன்னாரு பானுமா!” என்று அவளிடம் ஒரு பையை நீட்டினான்.
“என்ன இது.?”
“உங்களுக்காக நான் வாங்கிட்டு வந்தது.”
பிரித்துப் பார்த்தாள் பானுமதி. வாடாமல்லி நிறத்தில் புடைவை இருந்தது.
“எனக்கு வேண்டாம். இனிமேல் எதையும் வாங்கிட்டு வர்ற பழக்கம் வச்சுக்காத!” என்று குரலில் காட்டத்துடன் உரைத்துத் திருப்பிக் கொடுத்தாள்.
“பானுமா, எதுக்குக் கோபப் படுறீங்க.?”
“எனக்குப் புடைவை வாங்கித் தர நீ யாரு.?”
அவன் பதில் சொல்லாது புன்னகைக்க, இருவரையும் மாடியில் நின்றபடி கவனித்திருந்த லவனி மெல்ல கீழ் இறங்கி வந்தாள்.
“மகிழ், பானு மேரேஜ் ஆனவ. தெரியுமா உனக்கு?”
“தெரியுமே மேடம்.”
“நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் உன்னை. நீ அவளைக் கேர் பண்ணுறது ஓகேதான். பட், அதுக்குனு ஒரு லிமிட் இருக்கு.”
“நான் எல்லை தாண்டலனு எனக்கு நல்லாவே தெரியும். அதோட இன்னொன்னும் தெரியும், பானு அவங்க கணவரைப் பிரிஞ்சு ரெண்டு வருசம் ஆச்சுன்னும்.” என்றிட, இரு பெண்களுமே அவனை அதிர்வுடன் நோக்கினர்.
Super super😍
Next ena
Super sis nice epi 👌👍😍
💛💛💛💛
KV ( keerthivasan) thaan surprise kuduthaarunu parthaa….Inga magizh yum adirchiya ….tharaaru…,,😎
Magizh mari irukanum apadi nu thonura mari nadanthukuran la