Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-13

மனதில் விழுந்த விதையே-13

அத்தியாயம்-13

Thank you for reading this post, don't forget to subscribe!

   இஷாவிற்கு அம்ரிஷ் எந்தயிடத்தில் இருக்கின்றானென்று சுத்தமாக தெரியவில்லை. தனது பேட்டியால் அவமானமடைந்து முடங்கிவிடுவான். ஏதேனும் பிரச்சனையை பெரிசுப்படுத்தாதே என்று மாமனார் வந்து ஜீவனாம்சமாக சொத்தும் பணத்தையும் நீட்டுவார். விவாகரத்து பத்திரமும் தயாராக இருக்கும் கையெழுத்து போட்டு காதலனோடு தந்தையின் எதிர்ப்பை மீறி ஆடம்பரமாய் வாழலாமென்ற திட்டம் சரியாக தான் சென்றது.

   ஆனால் அம்ரிஷ் மனமுடைந்து அவமானமாக கருதாமல், ஆட்டம் பாட்டமென இருக்கவும், அதுவும் தன்னிலையை போட்டு மூக்கறுப்பு செய்யவும் திகுதிகுவென எரிந்தது. அதுவும் பெண்களோடு கொட்டம் அடிக்க எரிச்சலானது. இதில் அம்ரிஷ் பி.ஏ சம்பத் வேறு விவாகரத்து பத்திரத்தை நீட்டி ‘அம்ரிஷ் சார்  கையெழுத்து போட சொன்னார்’ என்று அவளை கேவலமாக உற்று நோக்கவும் குன்றிப்போனது என்னவோ அவள் தான்.
  
   ‘அம்ரிஷ் எங்கயிருக்கார்? அவரிடம் பேசணும்’ என்று இஷா கேட்க, “சாரி இஷா. சாரோட பிரைவேஸி ஸ்பாயில் ஆகும். விவாகரத்து வாங்கி விடுதலையாவதால, பத்து நாள் சார் ஹாப்பியா செலிபிரேட் பண்ணணும்னு முடிவெடுத்திருக்கார். எங்க போனார்னு யாருக்கும் தெரியாது. வேண்டுமின்னா அப்பாயின்மெண்ட் தர சாரிடம் பேசி வைக்கறேன் வெயிட் பண்ணுங்க” என்று உரைத்ததும் இத்தனை நாள் ‘மேடம், மேம், ஓகே மேம்’ என்ற பேச்சும் மரியாதையும் நொடியில் தவிடுபொடியாக உறைந்தாள்.

   பரஞ்ஜோதியும் மனீஷாவும் இப்படி இஷா நேரலையில் பேட்டி கொடுத்து தலையில் மண்ணை வாரிப்போட்ட மகளை கண்டு ஒன்றும் கூறமுடியவில்லை.

   இஷாவின் கேரக்டருக்கு யாரும் அம்ரிஷ் இருப்பிடமும் கூற முன்வரவில்லை. யாராவது பணத்தை தந்து அவன் எங்குள்ளான் என்று அறிந்திட முனைந்தாள். சமையல் ஆட்கள் முதல் டிரைவர், பி.ஏ என்று யாரிடமும், முன்பு முகம் கொடுத்து பழகாததால் இன்றும் அதே முகத்திருப்புதலை இவளிடம் காட்டினார்கள்.

   எங்கு சென்றாலும் புருவம் இடுக்கி, ‘இவளா?’ என்ற அலட்சியப் பார்வையையே சந்தித்தாள்.

  பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரை தான் பாம்பிற்கு மரியாதை. அது போல இஷாவின் மரியாதை நடிகர் அம்ரிஷின் மனைவி என்றதால் மட்டுமே என்பதை தாமதமாக உணர்ந்தாள்.

  உணர்ந்து இப்பொழுது பிரோஜனம் இல்லையே.

   சத்தியதேவனும் சௌந்தர்யாவும் மற்ற ஆகவேண்டிய முடிவுகளை எடுத்தனர்.

   பரஞ்ஜோதி கூட மகள் ‘அறிவில்லாமல் நடக்கின்றாள்’ என்று தோழனிடம் அலைப்பேசியிலேயே மன்னிப்பு கேட்டார்.

   சத்யதேவனோ தோழனை சந்திக்கமால் ‘என் மகனை ஆண்மையற்றவன் என்று மீடியால பேசி அசிங்கப்படுத்தியது போதும். இனி நட்பை முறிச்சிப்போம்.’ என்று நாகரிகமாய் தவிர்த்தார்.

   மனீஷா கூட சௌந்தர்யாவிடம் பதவிசமாய் பேச முனைய சத்யதேவை போல பூசி மொழுகி நட்பை முறிக்கவில்லை.
  மாறாக நேரிடையாகவே ‘என் பையனை இந்தளவு பேசிட்டா. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில ஓரளவு நல்ல பெயர் எடுத்தவன். கிசுகிசு என்றதுல விழாதவன். கண்ணியமா படம் நடிச்சி நல்லப்பெயரோட வாழறவன்.

   அம்ரிஷ் கூட போட்டோ எடுக்கவே எத்தனை ரசிகர் ரசிகைகள் க்யூவில இருக்காங்க. போயும் போயும் உங்க பொண்ணை கட்டி வச்சி என் மகன் வாழ்க்கை அழிஞ்சது போதும். இனியாவது அவன் நிம்மதியா இருப்பான். பொண்ணா பெத்துவச்சிருக்கிங்க? இதுக்கு நடிகைகளில் ஒருத்தியை கட்டி வச்சாலும் மானத்தோட நடமாட வச்சிருப்பாங்க. டீசண்டா விவாகரத்து வாங்கிட்டு போயிருப்பா. இப்படி மீடியா முன்ன உங்க மகளை அடிக்கடி காட்டி பிரபலமாகணும்னு, என் மகனோட வாழ்வை கொச்சைப்படுத்திட்டா.

  என் வாழ்க்கையில இனி உங்க பொண்ணு வந்தா என் பையன் நலனுக்காக லைசன்ஸ் கன் வச்சி கொண்ணுடுவேன்.’ என்று மிரட்டியிருநதார். என்னயிருந்தாலும் மகனை இப்படி பேசியதன் விளைவு அவ்வாறு பேச வைத்தது.

   சௌந்தர்யாவுக்கு இஷா மீது முதலிலிருந்த நல்ல மதிப்பு கிடையாது. நடிகையை விட ஓவராக சீனை போடும் பெண்ணாக எண்ணினார்.

    சௌந்தர்யா மனதில் வேதாந்த் போனில் சொன்ன பெண்ணை பற்றியே சிந்தனை ஓடத்துவங்கியது.
  
   வேதாந்த் ஆதேஷ் இருவரும் அம்ரிஷ் தாயாரிடம் மிருதுளாவை பற்றி நல்ல மதிப்பாக சொல்லி வைத்திருந்தனர். மிருதுளா என்றில்லை. மத்த மூவரையும் சேர்த்தே உரைத்திருந்தார்கள். சௌந்தர்யாவை பொறுத்தவரை ஆண்பெண் நட்பில் தவறாக எண்ணமாட்டார். அதே காதலென்றால் கூட மனசுக்கு பிடிச்சவங்க சேர்த்து வைத்து பாருங்க என்று தான் சுற்றத்தாரிடம் அறிவுறுத்துவார். அதனாலோ என்னவோ பெண்களோடு தங்குவதை குதர்க்கமாக பூதக்கண்ணாடியில் அலசவில்லை.

  மகன் பத்து நாள் என்ன, ஒரு மாதம் கூட இருந்து ரணத்திலிருந்த மனதை செதுக்கி மீண்டு வரச்சொல்லிவிட்டார்கள்.

   இன்று முழுக்க இன்டோர் கேம் விளையாட ஆரம்பித்தார்கள். சஹானாவும் ஆதேஷும் செஸ் விளையாட, தமிழும் மென்பனியும் கேரம்போர்டு ஆட ஆரம்பித்தார்கள்.

  மற்ற இரண்டு ஜோடிகள் சீட்டு கட்டை விளையாடினார்கள். இதே போல நேரம் கழிய, “வீட்டிலயே இருக்க போரடிக்கு. பேசாம மாட்டினாலும் பரவாயில்லைனு வெளியே போகலாமா? பிகாஸ் ஐந்து நாளுக்கு மேல ஆச்சு, தேடறதை குறைத்திருப்பாங்க.?” என்று சஹானா செஸ் காயினை நகர்த்தி கேட்டாள்.
 
   “அம்ரிஷ் எங்கயும் போகமுடியாது. உங்க பிரெண்ட் மிருதுளாவும் போகமுடியாது. பிறகு எப்படிங்க அறிவா கேட்கறிங்க” என்று ஆதேஷ் வாறினான்.

    “ஏன் போகமுடியாது அம்ரிஷோட டீ எஸ்டேட் இருக்கு. ஆனா அங்க ஆட்கள் நடமாட்டம் இருக்கும். வேண்டுமின்னா லீவு கொடுத்து எஸ்டேட்ல யாரும் வரவேண்டாம்னு சொல்லிட்டு நாம போகலாம். ஆனா இரண்டு நாள் வேலை நின்றிடும்” என்று வேதாந்த் அம்ரிஷை பார்த்தான்.

   “வாவ் மலையுச்சில உட்கார்ந்து கதை எழுதினா எப்படியிருக்கும்?” என்று மென்பனி கேட்க, “நடுங்கிட்டே கீழே விழுந்து பேய் கதை எழுதுங்க” என்று தமிழ் உரைத்திடவும் ‘பச்’ என்று சலித்தாள்.
  
   அம்ரிஷ் சிறிது நேரம் சிந்தித்தவன் “அதெல்லாம் வேலை மூன்றாவது நாள் பார்க்கட்டும். எனக்குமே இங்கயே இருக்கறதா பீல்லாகுது.” என்று உரைத்ததும் “அப்ப டீ எஸ்டேட்ல ப்ராப்பரா லீவு விட்டு வேலைப் பார்க்கறவங்களை அனுப்பிடு” என்று ஆதேஷ் சட்டென கூறவும், அங்கிருந்த டீ எஸ்டேட் நிர்வாகிக்கும் பணியாள் ராஜேந்திரனிடம், இரண்டு நாள் அங்கே தங்க வருவதாக கூறி, மற்றவர்களுக்கு விடுமுறையை அறிவித்திட பணித்தான்.

   அம்ரிஷின் உத்தரவு கிடைக்க பெற்ற டீ எஸ்டேட் நிர்வாகி ராஜேந்திரன் உடனடியாக பணியாட்களுக்கு விடுமுறையை அளித்தார்.

  ஏன் எதுக்கு என்று காரணமேயின்றி விடுமுறை கிடைக்க மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வேலை செய்யாமல் பணம் மட்டும் வந்திடுமே. சிலர் மட்டும் காரணம் கேட்டு குடைந்தனர். ‘உன் வேலையை பாருப்பா. எஸ்டேட்டுக்கு அதிகாரி வர்றாங்க’ என்று கூறிவிட்டார்கள். அதனால் துணை கேள்விகள் அறுப்பட்டது.

   அடுத்த நாள் அம்ரிஷ் அவன் தோழர்களோடு, ‘பென்டாஸ்டிக் போர்’ என்ற பெண்க்குழுவோடு  வந்தார்கள்.
 
அங்கே வேலைசெய்த முந்நூறு நானுறு தொழிலாளிகள் விடுமுறை என்றதால் எஸ்டேட் காலியாக காட்சியளித்தது.
   
   எஸ்டேட் நிர்வாகியுமே அம்ரிஷை கண்டு வணக்கம் வைத்து பூரித்தார்.

   மீடியா விஷயத்தை கேட்காமல் நாசூக்காக வரவேற்றார் எஸ்டேட் நிர்வாகி ராஜேந்திரன். “நாளை ஒரு நாள் நானும் என் பிரெண்ட்ஸும் இங்க தான் இருக்க போறோம். டிபன் லஞ்ச் டின்னர் அண்ட் ஸ்நாக்ஸ் டையத்துக்கு இங்க வந்துடணும். அரேஞ்ச் பண்ணிடுங்க. அதோட நாங்க இங்க இருக்கறது மீடியாவுக்கு தெரியக்கூடாது.” என்று கட்டளையிட்டான்.

  “அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க சார். புட் அரேஞ்ச்மெண்ட் எல்லாம் நானே பார்த்துக்கறேன்.” என்று தலைகுனிந்து மகிழ்ச்சியாய் சென்றார்.

    நான்கு ஆண்கள் நான்கு பெண்கள் மட்டும் அந்த எஸ்டேட் வீட்டில் வந்தனர்.

  “என்னப்பா இது? அந்த வீடாவது வீட்டை சுத்தி மரம் செடிகொடினு ரோட்டுக்கு கொஞ்சம் பக்கமா தெரிந்தது. இங்க நாம தனியா மலையுச்சில இருக்கற மாதிரி தெரியுது.” என்று சஹானா பேந்தபேந்த விழித்தாள்.
 
  மென்பனியோ “ஸ்டோரி ரைட் பண்ண செமையான பிளேஸ்.” என்று ரசிக்க தமிழோ “கதையை எப்படி ரைட் பண்ணுவிங்க?” என்று கேட்டான்.

   “ம்ம்ம் கையால தான்” என்று சாக்ஷி சொல்லவும்,

  “சாக்ஷி உதைப்பட போற. லேப்டாப்ல டைப் பண்ணுவேன்ங்க. கதை கான்சப்ட் யோசிச்சிட்டா மத்தது எல்லாம் தானா டைப் பண்ணுவேன்” என்றவள் பதில் தந்தாள்.
 
   “பேய் மாதிரி முழிச்சிட்டு கூட கதை எழுதியிருக்கா?” என்று மிருதுளா வாய் திறந்தாள்.

  “உங்க கதை புக்குக்கு மட்டும் போகுமா ? சினிமாவுக்கு எழுதுவிங்களா? இன்ட்ரஸ்ட் இருந்தா சொல்லுங்க. டைரக்டரிடம் சிபாரிசு பண்ணறேன்.” என்றான் நடிகன் அம்ரிஷ். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் எழுத்து திறமையால் உயர வேண்டும். சிபாரிசோ, குறுக்கு வழியோ தவிர்த்திடும் நியாயமான எழுத்தாளினி. அவனின் பலத்தில் உயர பிடிக்க முனைவாளா?

  “இதுவரை யோசித்தது இல்ல. அப்படி ஆசை வந்தா உங்களை காண்டெக் பண்ணறேன். உங்க நம்பர்?” என்று நாகரிகமாய் தவிர்த்தே மென்பனி கேட்டாள்.

   ஒவ்வொருத்தரின் அலைப்பேசி எண்ணை மற்றவர்கள் பகிர்ந்தார்கள். நம்பரை பதிவு செய்து அப்படியே பெயரையும் பதிவேற்றினார்கள்.

   அம்ரிஷோ “உங்க போன் நம்பர்?” என்று மிருதுளாவிடம் கேட்கவும், திருதிருவென விழித்தவள், “சாகப்போறேன்னு போனை அங்கயே வச்சிட்டேன். அதோட மயங்கிட்டேனா இவளுங்க வேற என்னை கிட்னாப் பண்ணும் போது போனையும் எடுத்துட்டு வந்திருக்கலாம். அதுல பிளைட் மோடு போட்டுட்டு கேமாவது விளையாட்டிட்டு இருப்பேன்.” என்று வருத்தமாய் பேசியவளை கண்டு முறுவல் புரிந்தான்.

   “போன்ல கேம் தான் விளையாடுவிங்களா?” என்றவனிடம் “இல்லை என் பிரெண்ட் இவளுங்களோட பேசுவேன்.” என்றதும் இதற்கு மேல் அவளிடம் எப்படி எண்ணை வாங்குவது? மற்ற மூவரின் எண்ணை பதிய வைத்தவன், மிருதுளாவின் மதிமுகத்தை தான் இதயத்தில் பதியவைத்தான்.

  இஷாவிடம் பதினான்கு மாதம் வாழ்ந்தவன், விவாகரத்து பெறும் முன், இப்படி புதிதாக அறிமுகமானவளிடம் மனம் சாய்கின்றதே. இது தவறல்லவா? என்று மனசாட்சி குடைய ஆரம்பித்தது.
 
     எப்பொழுதும் தன் இன்பதுன்பத்தினை நண்பர்களோடு பகிர்பவன், இந்தவுணர்வை பகிரலாமா என்று தன் மூன்று நண்பர்களை மாறி மாறி பார்த்தான்.

   ஆதேஷ் தன் அன்னையோடு சுமூகமாக பேச்சு வார்த்தையில் இருக்கின்றான். வேதாந்திடம் தந்தை அடிக்கடி தன் மனநிலையை கேட்டறிந்து கொண்டிருக்கின்றார்.

  தமிழிடம் பகிரலாமா என்று திரும்ப அவனோ மென்பனியை தீவிரமாய் கையை கட்டி ரசிப்பதை கவனித்தான்.

   ரசிக்கின்றானா? சாதாரணமாய்  பார்க்கின்றானா? என்று குழப்பமாய் மாறினான்.

  நேரங்கள் கடக்க பனியிரவில் குளிருக்கு இதமாய் போர்வைக்குள் நித்திரை பிடியில் மாறினார்கள்.

   இங்கு ஆண்கள் மனம் தான் அலைபாய்ந்ததா? இல்லை பெண்கள் மனமும் அலைப்பாய்ந்தது.

  ஆனால் நட்பென்னும் உறவை தவிர்த்து, யாரிடமும் நேசத்தை பகிராத மிருதுளா மட்டும், எந்தவித அலைபாயும் எண்ணத்தை, மனதிற்குள் இடம் கொடுக்கவில்லை. மாறாக தனிமையை நாடி அந்த இருட்டில் வெளியே வந்திருந்தாள்.
 
   தனியாக குளிரில் நடுங்கி மலையுச்சியில் ஏறத்துவங்கினாள்.

   அம்ரிஷ் ஜன்னல் வழியாக உருவத்தை கண்டவன், பெண்கள் தங்கிருக்கும் இடத்திற்கு வந்து சோதிக்க, அங்கே அவன் எண்ணியது போலவே மிருதுளா இல்லை.

அப்படியென்றால் நடந்து செல்வது அவள் தான் என்பதை மனம் எடுத்துரைக்க, டார்ச் லைட்டை எடுத்து கொண்டு அவளிடம் விரைந்தான். மலையுச்சியிலிருந்து விழுந்து சாகப்போகின்றாள். இன்னுமா அவள் மனம் தைரியத்தை இழுந்து வாடுகின்றது என்று விரைந்து ஓடினான்.

  அதற்குள் மலையுச்சியில் குன்றில் ஏறியவள், அங்கே எட்டி பார்த்தாள்.

     அம்ரிஷோ குதிரையை விட பாய்ந்து ஓடிவந்தான். அவள் குதித்து விடுவாளோயென்று.

   அவளிருக்குமிடம் நிமிடத்திற்குள் வந்தடைந்தவன், அவளை இழுத்து மறுபக்கம் சரித்திருக்க, பிடிமானமின்றி அவனையும் இழுத்து கொண்டவளோடு புரண்டான்.

  நாயகியோடு கட்டி புரண்டு., காதல் செய்த நாயகன் அம்ரிஷ் நிஜத்திலும் உருண்டான்.

  என்ன படப்பிடிப்பில் அவனது உடலில் சிறுகாயமும் நிகழ்ந்திடாது. இங்கோ “ஆஹ் அம்மா” என்று முனங்கலோடு ஆங்காங்கே சிராய்போடு குரல் வந்தது. கல்லும் மண்ணும் சேர்த்து உருளுவது அம்ரிஷ் உணரவும், எங்காவது உருண்டு, மண்டை கல்லில் படுமென மிருதுளாவை காத்திடும் நோக்கில் அவளது தலையில் கைவைத்து தன்நெஞ்சோடுஅணைப்பை இறுக்கினான்.

  -தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *