அத்தியாயம்-14
Thank you for reading this post, don't forget to subscribe!அம்ரிஷ் கையிலிருந்த டார்ச்லைட் ஒருபக்கம் ஒளியை உமிழ்ந்திருந்தது. நிலா வேறு ஒளியை பிரகாசிக்கவும் விழுந்து உருண்டு புரண்டவர்கள் ஒருயிடத்தில் நின்றதும் தான் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்த கையை விடுவித்தான்.
“அம்ரிஷ் சார் என்ன பண்ணறிங்க?” இருகையையும் தன் நெஞ்சில் வைத்தவள் கேட்டதும், அம்ரிஷ் அவள் மீது படர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்தான்.
“ஏன் மிருதுளா திரும்ப திரும்ப சாகப்போற? வாழ்ந்து பாரு. உனக்காக உன் பிரெண்ட்ஸ் எவ்ளோ சப்போர்டா இருக்காங்க.
பயந்து பயந்து சாகற. உன் வாழ்க்கையை நீ முடிவெடுக்க முடியாதா? எவன் கல்யாணம் பண்ண வந்தா என்ன? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு தைரியமா பேசு.
எப்பவும் உன் கூட யாரும் இருக்க மாட்டாங்க. அம்மா கிடையாது சித்தி தான். ஆனா அப்பா உன் அப்பா தானே பேசிப்பாரு. அதை மீறி போர்ஸ் பண்ணினா தனியா பகிரங்கமா ஒரு வேலையை பார்த்து ஹாஸ்டல்ல தங்கு.
அரசியல்வாதியால பிரச்சனை என்று பயந்தா அவர் மேல ஒரு கேஸ் கொடு.
உனக்கு வேலையை நான் அரேஞ்ச் பண்ணறேன். வேதாந்த் அண்ணா ஒரு லாயர் நானே சஜ்ஜஷன் பண்ணறேன். ஓகே வா?” என்று பேசவும் மிருதுளா முழித்தாள்.
“சூசைட் பண்ணறது முட்டாள்தனம் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். அதுவும் ரொம்ப கஷ்டமான விஷயம். அதுக்காக சூசைட் தான் சரியான சாய்ஸ் கிடையாது. இருக்கறது ஒரு லைப் வாழ்ந்து பாரு. நீ இப்படி தற்கொலைக்கு முயன்றது உன் பிரெண்ட்ஸுக்கு தெரிந்தா மனவேதனை அடைவாங்க” என்று பக்கம் பக்கமாய் பேசியவனை கண்டு இமை மூடி மூடி ஆச்சரியப்பட்டாள்.
“இப்படி தான் சூட்டிங்ல டயலாக் எல்லாம் பக்காவா பேசுவிங்களா அம்ரிஷ் சார்?” என்றதும் அம்ரிஷ் ‘ஙே’ என விழித்தான்.
மிருதுளாவுக்கு அவன் முகபாவமும், பேசுவதும் புரிந்ததும் சிரித்தாள்.
“அம்ரிஷ் சார் நான் சாக இங்க வரலை. இயற்கை அழகை ரசிக்க வந்தேன். நேத்தெல்லாம் ரூம்லயேயிருந்து தூங்கி வழிந்ததுல இன்னிக்கு தூக்கமே வரலை. அதான் வாக் பண்ணலாம்னு வந்தேன். அப்படியே என்னை அறியாம இங்க வந்துட்டேன்.
ரொம்ப அழகாயிருக்கு பிளேஸ்.” என்று பேசவும் அம்ரிஷோ பெண்ணவளை விசித்திரமாய் நோக்கினான்.
“எனக்காக என் பிரெண்ட்ஸ் கிட்னாப் பண்ணி, தனியா கார் எடுத்து, கொடைக்கானல் வரை பிளான் போட்டு, என்னை பாதுகாக்க முற்படும் போது, சாக துணிவேனா?
நமக்காக யாராவது ஒருத்தர் இருந்தாலும் அது நமக்கு யானை பலம் தானே.” என்றதும், “ஸ்ஆ” என்று முனங்கினான்.
“என்னாச்சு அம்ரிஷ் சார்?” என்று பதறவும், நீங்க வாக் பண்ணற ஐடியால வார் வச்ச செப்பள்ல வந்திங்க. நான் ஜஸ்ட் தூங்கிட்டு இருந்து உங்களை பார்த்து ஓடிவந்தேன். வர்றப்ப காப்பாத்துற வேகமா கல்லு குத்தியது மைண்ட்ல பதியலை. இப்ப உருண்டு புரண்டு முதுகு வேற குத்தி லைட்டா சிராய்ச்சி இருக்கு. கால்ல கல் குத்தவும் வலிக்குது. பேஸிக்கலி தங்க தொட்டில பிறந்தவனாக்கும்.” என்று கிண்டலாய் பேசியபடி மெதுவாக நடந்தான்.
“நல்லா ஓடிவந்து மொக்கை வாங்கிட்டிங்க. இதே படத்துல என்றால் ஹீரோயினை காப்பாத்தின ஹீரோவா தியேட்டர்ல க்ளாப்ஸ் கிடைச்சிருக்கும். இப்படி பல்ப் வாங்கிட்டிங்க” என்று மீண்டும் நகைத்தாள்.
அம்ரிஷோ மிருதுளாவை கொஞ்சம் கொஞ்சமாய் அளவிட்டான்.
நடிகை கூட மேக்கப் இல்லாமல் காண சகிக்காது என்பார்கள். இங்கே ஒருத்தி இயல்பாகவே அழகோவியமாக திகழ்கின்றாள்.
அந்த நிலாவும் இவள் முகமும் பளிச்சென்றிருந்தது.
பேசிக்கொண்டே தங்கள் இருந்த இடம் வந்ததும், வெளிச்சத்தில் அம்ரிஷை காணவும், “அச்சோ அம்ரிஷ் சார் ரத்தம்” என்று மயங்கினாள்.
“ஏய் மிருதுளா, மிருதுளா” என்று தாங்கியவன் கன்னம் தட்டினான்.
வேகமாய் அவளை கையிலேந்தி, சோபாவில் படுக்க வைத்து, தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தான்.
முகத்தில் தண்ணீர் தெளித்தபின், “அம்ரிஷ் உங்க மேல ரத்தம்” என்று மீண்டும் கையை சுட்டிக்காட்டினாள்.
அதன் பின்னே சட்டை பட்டனை கழட்ட முதுகு பக்கம் கல் குத்தியிருந்தது. கையில் சிராய்ப்பு என்றிருந்தது.
“அச்சோ உங்க பிரெண்ட் டாக்டர் வேதாந்த்தை எழுப்புங்க. என்னாச்சுனு பார்க்கட்டும்” என்று கத்தியவளின் வாயை பொத்தினான்.
“இந்த நேரம் எழுப்ப வேண்டாம். நாமளே பார்த்துக்கலாம்” என்று உரைக்க, ஒரு நடிகனின் தரிசனம் மிக நெருக்கத்தில் கிடைத்த பாக்கியம் பெற்றவளாய் மிருதுளா திக்கு முக்காடினாள்.
முதலுதவி பெட்டியை தேடி எடுத்து வந்தான்.
அம்ரிஷின் படிக்கட்டு தேகம், சட்டையில்லாமல் காணவே லேசான உதறல் மிருதுளாவிற்கு. இதில் ரத்த காயம் என்றதும் நடுக்கம் கூடியது.
முதுகு என்பதால் அம்ரிஷாலும் தனக்கு தானே உதவிக்கொள்ள முடியாது. அதனால் மிருதுளா தான் உதவவேண்டும். வேறு வழியில்லை.
மிருதுளா பஞ்சு கொண்டு முதலில் ரத்தத்தை ஒற்றி எடுத்து துடைத்தாள். பின்னர் டிஞ்சர் வைத்து துடைக்கவும் நடிகன் அவன் துடித்தான்.
தன்னால் தான் அம்ரிஷின் இந்த நிலையென்று பரிதவித்த மிருதுளாவோ மன்னிப்பு கேட்க, “அட ஒன்னும் ஆகலை. சின்ன அடியா தான் இருக்கும்.” என்று சமாதானம் செய்தான்.
மனதிற்குள் ‘நாளைக்கு வேதாந்த் எழுந்ததும் முதல் வேலையா வலியை சொல்லணும்.’ என்று நினைத்தான்.
“என்னால தான் உங்களுக்கு இந்த நிலை.” என்று கண்ணீர் வடித்தாள் மிருதுளா. அதெல்லாம் ஒன்னும் இல்லை மிருதுளா’ என்றவன் இரண்டு மூன்று கூறியும் “இல்லை என்னால எல்லாருக்கும் பிரச்சனை. என் பிரெண்ட்ஸ் பாவம். இப்ப நீங்க. நான் இதுக்கு பூமில பிறக்காம இருந்திருக்கலாம்” என்று பேசிக்கொண்டு போனவளின் கன்னம் பற்றினான்.
“ஏய் மிருதுளா என்ன பேசற? எனக்கு ஒன்னுமில்லை.” என்று கூறவும், அம்ரிஷ் கைகள் மிருதுளா கன்னம் பற்றியிருக்க, பின்னால் நகர்ந்தாள்.
அம்ரிஷ் அவள் கன்னம் பிடித்ததற்கு அவனுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. மாறாக “மிருதுளா நீ போய் தூங்கு.” என்று அனுப்பிவிட்டான்.
அம்ரிஷ் தனதறைக்கு வந்து குப்புறப்படுத்தான்.
முதுகில் சிலயிடத்தில் பேண்ட்எயிட் போட்டதால் லேசாய் வலித்தது. அடுத்த நாள் விடியலில் தான் உறங்கி வழிந்தான்.
நண்பர்கள் எழுந்ததும் ஆளாளுக்கு ”அம்ரிஷ் என்னடா ஆச்சு?” என்று பதற, “ஒன்னும் ஆகலைடா” என்றவன் எழுந்தான்.
அதே நேரம் மிருதுளா தன்னால் அம்ரிஷ் அடிப்பட்டதை எடுத்துரைக்க ஹாலில் அம்ரிஷ் வரவிற்காக காத்திருந்தனர்.
வேதாந்த் அம்ரிஷ் உடம்பை மீண்டும் ஆராய்ந்து டிரெஸ்ஸிங் செய்து முடித்தான்.
“பெயின் இருக்காடா?” என்று கேட்க, பெண்கள் குழு அதேநேரம் வரவும், ஆமாம் என்று கூறவந்தவன், மிருதுளாவை கண்டதும், “கொஞ்சமா தான்டா.” என்று மழுப்பினான்.
அம்ரிஷ் மிருதுளாவை பார்த்து பதில் சொல்லவும், வேதாந்த் அதனை கண்டு, மனசுக்குள் சிரித்து “எதுக்கோ பெயின் கில்லர் இன்ஞ்செக் பண்ணறேன்” என்றதும் அம்ரிஷ் பார்வையாலே நன்றியுரைத்தான்.
“ஏங்க சும்மாவேயிருக்க மாட்டிங்களா? பகல்ல போய் ரசிக்க வேண்டியது தானே.” என்று நண்பன் அடிபட்டதால் கடிந்தவாறு பேசினான் ஆதேஷ்.
“ஹலோ பாஸ் பகல்ல நிலா தெரியாது.” என்று சஹானா கூறவும், ஆதேஷ் இடுப்பில் கை வைக்க, தமிழோ “நீங்க ரசிங்க, ஆனா நைட் நேரம் அங்க நடந்து போகணுமா? சப்போஸ் கால் தடுங்கி உருண்டு விழுந்து உயிருக்கு சேதாரம் ஆச்சுனா என்னாயிருக்கும்?” என்று எடுத்துரைத்தான்.
மென்பனியோ “யா இவர் சொல்லறது கரெக்ட்” என்று ஆமோதித்தாள்.
சாக்ஷியோ வேதாந்திடம், “காயம் ரொம்பவா? மெடிசன் போதுமா? இந்தமாதிரி அடிபட்டா அதுக்கான டேபிளட் வச்சிருக்கிங்களா?” என்று கேட்டதும் தான் வேதாந்த் கைவிரித்து “கொஞ்சம் டேபிளட் வாங்கணும். மெடிக்கல் ஷாப் போகணும். அன்னைக்கு மாதிரி பைக்ல போய் வாங்கிட்டு வரலாமா?” என்று கேட்டான் வேதாந்த்.
“அதுக்கு சாக்ஷி எதுக்கு?” என்று மென்பனி கேட்க, தமிழும் “அதானே? அவங்க எதுக்கு?” என்று கேட்டார்கள். சாக்ஷிக்குமே வேதாந்த் கூப்பிடவும் செல்ல ஆசைப்பட்டாள். ஆனால் ஏன் இப்படி கூப்பிட்டான் என்று திகைப்பு தான்.
வேதாந்த் ஆதேஷிடம் கண் காட்டா, “டேய் அவங்க போகட்டும்” என்று கூறவும் தமிழுக்கு லேசான சந்தேகம் பிறந்தது.
ஆனால் அம்ரிஷ் மீது அல்ல வேதாந்த் மீது.
வேதாந்த் சாக்ஷியிடம் தனி பாதையில் செல்கின்றானோ என்று யூகித்தனர். அதுவும் உண்மையென்றாலும் தனியாக ஆதேஷ், அம்ரிஷை பற்றி விரிவாக தமிழிடம் கூற நேரம் பார்த்தான்.
டாக்டர் என்பதால் வேதாந்த் மருந்துகடையை தேடி வண்டியில் செல்ல சாக்ஷியும் பின்னால் அமர்ந்திருந்தாள்.
தனியாக கூப்பிட்டதற்கு காரணம் கேட்க, “மருந்து வாங்கிட்டு சொல்லறேன்” என்று கூறினான்.
முன்பு போலவே ப்ரவுஸிங் சென்டருக்கு சென்று தனது மெயிலை செக் பண்ணவும், தந்தை குருபிரசாத்திடமிருந்து மெயில் வந்திருந்தது. மிருதுளா சித்தி திலகா அவர் தந்தை கேசவன் மற்றும் ராஜபாண்டியன் ஆட்கள் எல்லாம் தங்களை ஒன்றாக ஒருயிடத்தில் அழைத்து சென்று சாக்ஷி பிறந்தநாளன்று போலீஸ் விசாரித்தார்கள். எங்களுக்கு தெரியாது என்றதை தான் அனைவரும் உதிர்த்ததாகவும், மென்பனி அண்ணா காரை கண்டறிந்து தர போலீஸிடம் கூறினார் என்றும் எழுதியிருந்தார். சஹானா அப்பா சுகுமார் அம்மா பவானி இருவரும் அவர்கள் மூத்த பெண்ணை காண அமெரிக்க செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பெரும்பாலும் சஹானா பெற்றோரோடு சாக்ஷி பெற்றோர் நன்கு பழக்கமென்பதால் இருவரும் பெரிதாக தங்களை பற்றி கவலைப்படவில்லையென்று கூறியிருந்தார்கள்.
“தட்ஸ் மை டாட் அண்ட் மாம்” என்று சாக்ஷி மகிழ்ந்தாள்.
வேதாந்த் அதற்குள் மருந்து மாத்திரை வாங்கிவரவும், “அப்பா நாங்க ரொம்ப பாதுகாப்பா இருக்கோம். பயப்படாதிங்க. அநேகமா மிருதுளா எதையும் பேஸ் பண்ணற பொண்ணா அவளே உணர்ந்து, விரைவில் உங்க முன்ன வருவோம். அரசியல்வாதிக்கு அல்வா தருவோம்.’ என்று அனுப்பிட்டு கீழே ‘லவ்யூ டேட் அண்ட் மாம்’ என்று அனுப்பினாள்.
முகத்தில் ஷாலால் கட்டிவிட, வேதாந்த் அவளையும் ஹெல்மெட் அணிந்து திரும்ப வீட்டை நோக்கி அழைத்து சென்றான்.
முன்பு போல செக்கிங் போஸ்ட்டில் புகைப்படம் வைத்து எந்த போலீஸும் மிருதுளாவையோ மற்ற மூவரையோ தேடவில்லை.
முக்கிய காரணம் மென்பனியின் கார் கொடைக்கானல் சந்திப்பிற்குள் நுழையவேயில்லை. அதனால் போலீஸ் சற்று அலட்சியமாக மாறிவிட்டனர்.
போனமுறை போல கொடைக்கானலில் முக்கிய பகுதியை தாண்டியப்பின் ஒருயிடத்தில் வண்டியை நிறுத்தினான் வேதாந்த்.
சாக்ஷி சுற்றிமுற்றி பார்த்து, “கேரட், மக்காசோளம் ன, வேர்கடலை எதுவும் விற்கலையே. வண்டி ஏன் இங்க நிறுத்திட்டிங்க?” என்று போன முறைப்போல ஏதேனும் வாங்க நிறுத்தியிருப்பானோ என கேட்டாள்.
“உங்கிட்ட கொஞ்சம் பேசணும் சாக்ஷி” என்றவன் தயங்கினான் வேதாந்த்.
வீட்டில் இங்கு ஆதேஷிற்கு தயக்கம் எதுவும் தேவைப்படவில்லை. அதுவும் தமிழிடம் தயக்கம் எதற்கு ஜிகிடி தோஸ்த் அல்லவா!
அதனால் தமிழிடம் “அம்ரிஷ் டோட்டலா மாறிட்டான்டா. நீ நினைச்ச மாதிரி நான் நினைச்ச மாதிரி இல்லை. படுபயங்கரமா மாறிட்டான்.” என்று அம்ரிஷ் மிருதுளா மீது ஒருவித சாப்ட் கார்னர் இருப்பதை கூறினான்.
தமிழ் சட்டென அம்ரிஷ் மாற்றத்தை மறுக்கவில்லை. அம்ரிஷ் மாறுதல் பச்சையாக தெரிகிறது. ஒன்றேகால் வருடம் மனைவி இஷாவுடன் வாழ்ந்தவன், அவள் ஆண்மைஅற்றவன், சைக்கோ, குடிக்காரன், செயின் ஸ்மோக்கர், இத்யாதியை அள்ளி வீச, புத்தரின் மறுவதாரமாக அமைதியாக மாறினான். நண்பனை மாற்ற கடினமென்று நண்பர்கள் நால்வரும் மண்டை குழம்ப, ஆனால் அதற்கு அவசியமின்றி மிருதுளாவின் வாழ்க்கை கஷ்டம் கேட்டு, தன் கஷ்டத்தை மறந்துவிட்டான்.
இரவில் மிருதுளா நிலவை ரசிக்க சென்றதும் அதை அம்ரிஷ் தவறாக எண்ணி காப்பாற்ற போய் விழுந்து புரண்டதும் கேட்க கேட்க, அம்ரிஷ் முகபாவணை மனக்கண்ணில் வந்து சென்றது.
தமிழிடம் ஆதேஷ் பேச வந்த கணம் மென்பனி தமிழின் சம்மதத்தோடு அவன் இருந்த அறையில் ஒளிந்து நின்று கேட்டாள்.
அம்ரிஷ் எப்படியோ மிருதுளா அந்த எண்ணத்துல இல்லை. நீங்க வேண்டுமின்னா வெளியே போன என் பிரெண்ட் சாக்ஷியிடம் கேட்டுப் பாருங்க. அவளுமே இதை தான் சொல்வா. சாக்ஷி வர லேட்டாகும்னா சஹானாவை அழைச்சிட்டு வர்றேன். அவளிடம் சொல்லுங்க. மிருதுளா என்ன நினைப்பானு.” என்று
மென்பனி கூற ஆதேஷோ “இப்ப தான் இங்க வர்றதுக்கு முன்ன சஹானாவிடம் சொன்னேன். அவங்களுமே இதை தான் சொன்னாங்க. சஹானா வாங்க” என்றதும் சஹானாவும் மறைந்து இருந்தவள் வந்தாள்.
எப்பொழுதும் கூட்டாக திருட்டு தனம் செய்யும் தோழிகள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவரை இந்த ஆதேஷ், தமிழ் அழைத்து பேச, தோழிகளிடம் கலந்துரையாடாமல் கமுக்கமாய் வந்ததால், ஒருவர் மாற்றி ஒருவருக்கு வேறொரு சந்தேகம் முளைத்தது. ஆனால் பகிரங்கமாக கேட்கவில்லை.
-தொடரும்.
-Praveena Thangaraj
Yellaaammm jodi serunthunga😂😂
Nice epi😍