Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-15

மனதில் விழுந்த விதையே-15

அத்தியாயம்-15

Thank you for reading this post, don't forget to subscribe!

   ஆதேஷ், தமிழ் இருவரும் சஹானா மென்பனியிடம், அம்ரிஷ்-மிருதுளா பற்றி உரைத்ததும், மென்பனி போலவே சஹானாவுமே “மிருதுளா அப்படி திங்க் பண்ணிருக்க மாட்டா. அம்ரிஷ் சார் வேண்டுமின்னா சேஞ்ச் ஆனது உங்களுக்கு தெரியலாம். பட் மிருதுளா சான்ஸ் இல்லை.” என்று கூறவும் அம்ரிஷ் ஒரு பாதி கதவாக தட்டுகின்றானோ என்று ஆதேஷிற்கு பகீரென்றது.

  தமிழ் கூட சற்று யோசனைவயப்பட்டான்.

   வெளியே சென்ற ஜோடியான சாக்ஷியும், வேதாந்த் பைக்கில் சாய்ந்து அதை தான் கூறினாள். “எங்க மிருதுளா ஒரு நடிகன் என்று அம்ரிஷிடம் பழகலாம். நீங்க நினைக்கிற மாதிரி பாஸிபிள் குறைவு. அம்ரிஷ் சார் அவசரப்படறார். அவருக்கு மிருதுளா மேல இரக்கம் பிறந்திருக்கலாம். இஷா மேல கோபம் வரவும், டக்குனு தனக்கு துணையா ஒருத்தியை இஷா கண்ணுக்கு முன்ன நடமாட வைக்கணும்னு நினைச்சிருக்கலாம். அதனால தான் நாங்க நாலு பேர் இருக்கற பிக்சர்ல ஸ்மைலி பேஸ் போட்டு, ஆதேஷ் மீடியாவுல அப்லோட் பண்ணியதை பெரிசா கண்டுக்கலை. அம்ரிஷ் ஒரு சினி ஆக்டர். மிருதுளாவுக்குனு ஒரு அடையாளம் கூட இல்லை. அப்படியிருக்க அம்ரிஷ்.” என்று தோளைக்குலுக்கி கூறவும் வேதாந்த் அப்படியும் இருக்குமோ என்று யோசித்தாலும் நண்பன் இப்படி உருண்டு புரண்டு வந்திருப்பதையும் கருத்தில் வைத்துகொண்டான்.
இஷாவாது கெட்டவளென்று மறக்க ஒரு காரணம் போதும். புதிதாக மிருதுளாவை இழுத்து விட்டு அதற்கு வேறு சங்கடத்தை உருவாக்க வேண்டாமென்று தற்காலிகமாக முடிவெடுத்தான்.

  “எனிவே சாக்ஷி அம்ரிஷ் ஆக்டிவிட்டிஸ் மாறியதுக்கு காரணம், நாங்க மிருதுளாவா இருக்கும்னு கெஸ் பண்ணறோம். மேபீ என்னவானாலும் பொறுத்திருந்து பார்க்கலாம்.” என்று பேசியப்பின்னும் தயங்கினான்.

  “இன்னும் என்ன? கிளம்பலாம் வேதாந்த்.” என்று சாக்ஷி அவசரம் காட்டினாள்.

  “அங்க போய் என்ன பண்ண போற? கொஞ்சம் மெதுவா போகலாமே?” என்று சிடுசிடுத்ததும் சாக்ஷியோ என்னது?” என்றதும் “போகலாம்னு சொன்னேன்” என்று பைக்கை காட்டவும் எஸ்டேட் நோக்கி பயணம் தொடர்ந்தது. தனியா பேசலாம்னு பார்த்தா விடறாளா’ என்று மனதிலேயே நொந்தான்.

   சாக்ஷியும் வேதாந்த்தும் எஸ்டேட் வந்து சேர, அம்ரிஷ் சட்டையின்றியே உலாத்த வேண்டுமேயென அறைக்குள் இருந்தான்.

  தன்னால் தான் அம்ரிஷிற்கு காயப்பட்டதென மிருதுளாவுமே அறைக்குள் முடங்கினாள்.
 
     ஆதேஷ் தமிழ் இருவரும் வேதாந்த் வரவும் சாக்ஷியிடம் சொல்லிவிட்டாயா என்று பார்வையால் கேட்டு முடிக்க, “சொல்லிட்டேன்” என்றவன் வெளியே பரந்திருந்த குடைக்கு கீழ் அமைந்த மரச்சேரில் அமர்ந்தனர்.

   “மிருதுளா எங்க?” என்று சாக்ஷி கேட்க, “என்னால அம்ரிஷ் சார் உடம்பு புண்ணாகிடுச்சனு புலம்பிட்டு  இருக்கா.” என்று மென்பனி உரைத்துவிட்டு சஹானாவை தான் குறுகுறுவென பார்த்தாள்.

   சஹானாவுமே மென்பனியை தான் அசராது பார்த்தாள்.

   கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு “சாக்ஷி உன்னிடம் பேசணும்” என்று மென்பனி அழைக்க, “சாக்ஷி நானும் உன்னிடம் பேசணும்” என்று சஹானாவும் குதித்தாள்.

   சாக்ஷி ஆண்களை பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

   மூன்று பெண்கள் தோட்டத்தின் மற்றொரு பகுதிக்கு சென்றனர்.
மூன்று ஆண்கள் குடைக்கீழ் அமர்ந்த இடத்திலேயே இருந்தனர்.
  
  மென்பனி, சஹானா, சாக்ஷி மூவரும் புல்தரையில் கல்லூரி பறவையாக வீற்றிருக்க, “சாக்ஷி இங்க எதுவும் சரியில்லை. என்னவோ மாறுது.” என்று பூடகமாக மென்பனி சஹானாவை பற்றி கூற, “நானும் அதை தான் சொல்லறேன்.” என்று சஹானா மென்பனியை பற்றி குறிப்பிட்டாள்.

மென்பனிக்கு சஹானா-ஆதேஷ் இருவரும் நெருங்கி பழகுவதாக தோன்றியது. அதே போல சஹானாவுக்கு மென்பனி-தமிழ் நெருங்கிய நட்பில் திளைப்பதாகவே முடிவெடுத்தாள்.
 
   சாக்ஷியோ “நம்ம மிருதுளா மாறலை. நம்ம பிரெண்ட் பத்தி நமக்கு தெரியாதாடி, மிருதுளா சரியா இருக்கா. அம்ரிஷ் கூட பரிதாபத்துல பழகலாம். இங்கயிருக்கற வரை நாம வேறயெதுவும் இழுத்து விடவேண்டாம்.

  இடத்தை கொடுத்த இடத்துல மடத்தை பிடிக்கறாங்கனு நம்மளை தவறா யாரும் பேசிடக்கூடாது. நாம பிளான் பண்ணின மாதிரி டென் டேஸ்ல நம்ம வீட்டுக்கு போகலாம். மிருதுளா மேஜர் அதனால என் வீட்ல நானே தங்க வச்சிக்கறேன். அதை மீறி என்ன பண்ணிடப் போறாங்க.
   அரசியல்வாதினா கொம்பா.” என்று சாக்ஷி பேசவும் தங்கள் ஐயத்தை பனிப்போராக மறைத்து கொண்டனர் மென்பனி சஹானா இருவரும்.

  “அப்ப இரண்டு நாள்ல நாம சென்னை ரிட்டர்ன் போகணுமா?” என்று சஹானா கேட்கவும், “நம்ம வீட்டுக்கு போகணுமே சஹானா. இது அம்ரிஷோட எஸ்டேட். நாம தங்கியது அம்ரிஷ் பங்களா.

  அவர் செலிபிரெட்டி நாம சாதாரணமானவங்க. இவரோடவே இருக்க முடியாது. பத்து நாள் லீவு விட்டிருக்கோம். டான்ஸ் கத்துக்க வந்த ஸ்டூடண்ட்டோட பேரண்ட்ஸ் பத்து நாள் கழிச்சு வருவாங்க. டான்ஸ் கத்துக்க பீஸ் கட்டிட்டு நாம லீவு விட்டுட்டா அதுக்கு வேற நேம் கெட்டுடும்.” என்று சாக்ஷி கூறவும், சஹானாவுமே, “எனக்கும் ஸ்கூல்ல மியூசிக் மேம் வரலையானு பிரின்சிபால் படையெடுத்துடுவாங்க.” என்று வருந்தினாள்.

மென்பனி இருவரின் முன் “எனக்கு எங்கயிருந்தாலும் நோ பிராப்ளம். புதுக்கதை எழுதி வச்சிட்டு தான் பப்ளிஷ் பண்ண போகணும். நீங்க என்ன முடிவெடுக்கறிங்களோ அதுக்கு நானும் சம்மதிக்கறேன். மிருதுளாவை உன் வீட்ல வச்சிக்கோ. கொஞ்ச நாள் நாமலாம் ஒன்னா இருப்போம். நாம சேர்ந்திருந்தா மிருதுளா சித்தி திலகா அவ அப்பா கேசவன் அங்கிளை  சமாளிச்சிடலாம்.

   அந்த அரசியல்வாதி ராஜபாண்டியன் தான் எப்படி விரட்டனு ஒரே யோசனை.” என்றதும் மூவரும் “நாம எப்பவும் ஒன்னா இருந்தா பிரச்சனைகளை தூசியா மாத்திடலாம் சாக்ஷி. மிருதுளாவுக்கு நாம இருக்கறோம்.” என்று ஒருவருக்கு ஒருவர் நட்பை இப்படியே தொடர இணைந்தே இருந்தனர்.

   ஆண்கள் குழுவில் “அம்ரிஷ் சீரியஸா ட்ரை பண்ணறானாடா” என்று தமிழ் கேட்கவும், வேதாந்த் “அப்படி தான் தோணுது. அட்த சேம் சாக்ஷி என்ன சொல்லறானா, அம்ரிஷ் மிருதுளாவை வச்சி மீடியாவுல, இஷாவை பொறாமைப்படுத்த எங்க நாலு பேர் பிக் போட்டிருக்கலாம். மிருதுளா மேல இரக்கமா இருக்கும்னு சொல்லறா. அதோட மிருதுளாவுக்கு எந்த பீலும் இருக்காதுனு ஆணித்தரமா அடிச்சி சொல்லறா”

  “இதையே தான் மென்பனி சொன்னா” என்று தமிழும் “இதையே தான் சஹானாவும் சொன்னா” என்று ஆதேஷும் ஒரு சேர உதித்தனர்.

  வேதாந்த்தோ “டேய் என்னங்கடா ஆளாளுக்கு ஒரு பொண்ணு பெயரை ஜெபிக்கறோம்” என்றதும், என்றதும் தான் ஆதேஷ் “கரெக்ட் மச்சி. அம்ரிஷ் மிருதுளாவை பத்தி யோசிக்கறான். அந்த மிருதுளா பொண்ணு என்றால் கேர் எடுக்கறான்.

    தமிழ் அந்த ரைட்டர் பொண்ணு மென்பனி மேல மரியாதை வச்சி அவளை பத்தி உயர்வா பேசறான்.

  நான் சஹானாவிடம் ஓவரா தான் ஜோள்ளுவிட்டு பேசிட்டுயிருக்கேன் ஒத்துக்கறேன்

நீ சாக்ஷி கூட போற, வர்ற அதிகமா நீ நேரம் செலவு செய்தது அந்த பொண்ணுக்கூட தான்.
  
   ஏன்டா அம்ரிஷ் ஆல்ரெடி இஷாவால ரொம்ப ஹர்ட் ஆயிருக்கான். நம்மளை பின் தொடர்ந்து வந்து, இந்த பொண்ணுங்க மூலமாக நம்மளை ஏதாவது வம்புல மாட்டி வைக்க, யாராவது இந்த நாலு பேரை அனுப்பியிருப்பாங்களோ?” என்று சந்தேகத்தை கிளப்பிவிட்டான்.

    ஆதேஷின் இந்த சந்தேகத்தை மற்ற இருவருமே பெரிதுப்படுத்தவில்ல. “சாக்ஷியோட நடனப்பள்ளி பெயரை போட்டு நெட்ல சர்ச் பண்ணிட்டேன். உண்மையில அந்த ஸ்கூல்ல அவ டீச் பண்ணறா.” என்று வேதாந்த் இது  பொய்யான பிம்பத்தோடு வரவில்லை என்று அழுத்தமாய் கூறினான்.

    “நானுமே மென்பனி பெயரை போட்டு நெட்ல சர்ச் பண்ணினேன். அவளோட இ-புக் ஆன்லைன் காட்டுது. பேப்பர்-புக் ஏதோ பதிப்பக பெயரை போட்டு இருந்தது. புக் வேண்டும்னா கால் பண்ணினா கொரியர் அனுப்பி வைப்பாங்களாம்.” என்றான் தமிழ்.

வேதாந்த் ஆச்சரியமாய் தமிழை பார்த்து “டேய் நான் பார்த்தேன்னா அது வேற. நீ எப்படிடா இதெல்லாம் தேடின?” என்று வியந்தான். ஏனெனில் பெண்கள் விஷயத்தில் தமிழ் எப்பொழுதும் ஒதுங்கிடுவான்.

  ஆதேஷோ “நான் கூட முகநூல்ல சஹானாவோட பிக்சரை பார்த்தேன். ஆனா லாக் போட்டுவச்சிருக்கா.” என்று சோகமானான்.
  
   அடுத்த நிமிடமே “டேய் அதென்ன ஒவ்வொருத்தி மேல தனி தனியா நமக்கு இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. ஏன் ஒரே பொண்ணை நாம ரசிக்கலை? எனக்கென்னவோ இது அந்த பொண்ணுங்க நமக்கு விரிச்ச வலையா இருக்குமோ?” என்று மீண்டும் கூறினான்.

  “நாம என்ன பெரிய ஆளா? நான் டாக்டர், இவன் ஆர்மி, நீ ஆர்செரி நடத்தற ஸ்போட்ஸ் மேன்.” என்று வேதாந்த் கூற, “மச்சான் அம்ரிஷ் ஆக்டர், ஹீ இஸ் செலிபிரெட்டி, அந்த ஆங்கிள்ல யோசிச்சியா? எந்த பொண்ணுங்க தெரியாத ஸ்டேஞ்சரோட தங்குவாங்க? ஏதோ ரொம்ப நாள் பழகியவளுங்க மாதிரி நம்மளோட பிரெண்ட்லியா மூவ் ஆகறாங்க.” என்று ஐயத்தை தெரிவித்தான்.

  தமிழோ “நீ சொல்லறதை பார்த்தா நாலு பொண்ணுங்க, அம்ரிஷை பாலோவ் பண்ணி, கொடைக்கானல் போறதை தெரிந்து வாலண்டிரியா வந்து நம்மளோட பழகறாங்க அப்படி தானே?” என்று நக்கலாய் கேட்டான். தமிழிற்கு யார் மீதும் ஐயம் துளிர்க்கவில்லை.

  “நான் பழி போடலையே. யாரையும் பிளேம் பண்ணலைடா. அம்ரிஷ் லைப்ல புது பிரச்சனை வந்துடக்கூடாதுனு நினைக்கிறேன். எனக்குமே சஹானாவை பிடிச்சிருக்கு. அதுக்காக மனசுல தோன்றின சந்தேகத்தை உங்களோட பகிராம இருக்க முடியுமா?” என்று ஆதேஷ் தன்னிலையை உரைத்தான்.

  எப்பொழுதும் ஆதேஷ் வெளிப்படையான பேச்சு கொண்டவன். தமிழாவது உள்ளுக்குள் வைத்து பழகுவான், பேச தயங்குவான். வேதாந்த் யார் எப்படியென்று அதற்கு தகுந்து பழகுவான்.
   அம்ரிஷ் சினி பீல்ட் என்பதால் தேவையின்றி யாரிடமும் பழக மாட்டான்.

   “வாழ்த்துகள் டா முதல் ஆளா நம்ம செட்ல மனம் திறந்து சொல்லற. எனக்கும் சாக்ஷியை பிடிச்சிருக்கு.” என்றவன் தமிழை பார்த்தார்கள்.

   “மென்பனியை பிடிச்சிருக்கா பிடிக்கலையானு நான் முடிவு பண்ண முடியாது. பிகாஸ் நான் ஒரு ஆர்மிமேன். என்னை கல்யாணம் பண்ணினா அவளோட லைப்ல அவ சில எதிர்பார்ப்பை இழக்க நேரும். சோ என்னை சூஸ் பண்ணறது மென்பனி தான் டிசைட் பண்ணணும். பட் எனக்கு அவளை பிடிக்கும்.” என்று ஒப்புக்கொண்டான்.
 
    ஆதேஷ் மீண்டும் ஒர்முறை “டேய் இப்படி ஆளாளுக்கு ஒருத்தியை சூஸ் பண்ணறப்ப தான் என் சந்தேகம் கூடுது. அம்ரிஷ் மிருதுளா மேல சாப்ட் கார்னரா இருக்கான். அது நெல்லிகனி மாதிரி தெரியுது. உங்களுக்கு தெரியுதா?” என்று கேட்டதும் நண்பர்கள் ஆமோதித்து கொண்டனர்.

   “காய்ஸ் எதுனாலும் நாம கொஞ்சம் வேகத்தை குறைச்சிப்போம். இது டூ பாஸ்டா இருக்கு. முதல்ல இந்தளவு வேகம் வேண்டாம். அதோட அம்ரிஷ் பிரச்சனை முடியட்டும். அதுக்கு பிறகும் இவங்க பிரெண்ட்ஷிப் தொடர்ந்தா, நாம முடிவெடுப்போம். போன் நம்பர் தான் கொடுத்திருக்காளுங்களே.

சப்போஸ் ஆதேஷ் சொன்னது போல இவங்க ஏதாவது விவகாரத்தோட நம்மிடம் பழகினா, அப்ப அதுக்கேற்றது போல நாமளும் இருந்துப்போம்.” என்று வேதாந்த் கூறிமுடிவெடுக்க மற்றவர்கள் இருவரும் அதனை கடைப்பிடிப்பதாக சம்மதித்தனர்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
 

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *