அத்தியாயம்-12
Thank you for reading this post, don't forget to subscribe!அம்ரிஷ் காலை ஏழு மணிக்கு எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தப்போது, வேதாந்த் ஆதேஷை அடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
தமிழோ விலகிவிட்டு வேடிக்கை பார்க்காமல் தலையை கையால் ஊன்றி அமர்ந்திருந்தான்.
சாக்ஷியோ “வேதாந்த் ஆதேஷை அடிக்காதிங்க.” என்று தடுத்தாள்.
“அச்சோ நிறுத்துங்க” என்று மென்பனி ஒருபக்கம் தடுக்க பார்த்தாள்.
மிருதுளாவோ சஹானாவிடம் “அவர் அப்படி செய்தா ஏதாவது காரணமிருக்கலாம்.” என்று உரைத்திருக்க சஹானாவோ அடிவாங்குவதை தடுக்கவும் முடியாமல், சங்கடமாய் தவித்தாள்.
அம்ரிஷ் வரவும் சஹானாவோ “அம்ரிஷ் வர்றார்.” என்றதும் அடிதடியை தடையிட்டது போல நின்றனர்.
“என்ன பிரச்சனை? வேதாந்த் ஏன் அடிக்கிறான். எப்பவும் பிரச்சனை என்றால் நீ தான் தடுக்க பார்ப்ப, இப்ப நீயே அடிக்கிற? தமிழ் வேடிக்கை பார்க்கறான்?” என்று முகமலம்பி வந்தவன் கேட்டதும் ஆளாளுக்கு தலைகவிழ்ந்தனர்.
அம்ரிஷ் போன் அடிக்கடி நோட்டிபிகேஷன் சத்தம் கொடுத்து இருப்பை காட்டியது.
தன் ஆருயிர் நண்பர்களையும், புதிதாக கிடைத்த தோழிகளையும் பார்வையிட்டவன், மற்றவர்கள் சங்கடமாய், கோபமாய், தவிப்பாய், கையை பிசைவதை கண்டு ‘என்னாச்சு?’ என்று வந்தவன் மற்றவர்கள் விழிகள் அவனது போனில் நிலைப்பெற்றிருக்க, அதன் பின் தன் அலைப்பேசியை எடுத்தான்.
எடுத்ததும் நோட்டிபிகேஷன் காட்டவும் பார்வையிட்டவன் நெற்றி சுருங்கியது, கண்கள் இடுங்கியது. தாய் தந்தையரின் அழைப்பு வேறு வந்திருந்தது. தனது பி.ஏ சம்பத் வேறு தொடர்ச்சியாக அழைத்திருக்க கண்டான்.
நோட்டிபிகேஷனை மீண்டும் பார்வையிட்டவன், வரிசையாக பல கமெண்ட்ஸை வாசித்தான்.
‘U r a Rock star’
‘லவ் யூ டியர்.’
Good decision hero’
என்றததை ஒட்டிய கருத்தாக நிறைந்திருந்தது.
இஷாவை கழுவி கழுவி ஊத்தியிருந்தனர். அம்ரிஷ் போனிலிருந்து பார்வையை விடுத்து நண்பர்களை ஏறிட்டான்.
ஆதேஷ் மட்டும் தலைகுனிந்திருக்க, வேதாந்த் தமிழ் இருவரும், ஒரு சேர ஆதேஷை முறைத்தனர்.
மற்ற நான்கு பெண்களும் ஆதேஷை கண்டு அம்ரிஷை கையை பிசைந்து இருந்தனர்.
“உன் வேலையா ஆதேஷ்?” என்று தான் அம்ரிஷ் கேட்டான். ஆதேஷும் மறுத்திடவில்லை. “நான் தான்” என்று கடுகடு முகத்தோடு உண்மையை ஒப்புக்கொண்டான்.
“ஏன்டா உன் எதிர்ல பேட்டர்ன் போட்டது குத்தமா? இப்படி வச்சி செஞ்சுட்ட? என்ன அவசரம் நானே பதிலடி தந்திருப்பேனே? என்னை விட நீ இஷா மேல கோபமாயிருக்க?” என்று நிதானமாய் பேசினான்.
மற்ற நண்பர்களோ அம்ரிஷ் இப்படி சவகாசமாய் பேசுவதை கண்டு ஆச்சரியமானார்கள்.
தமிழ் அருகே வந்து, “உனக்கு ஆதேஷ் மேல கோபமில்லையா?” என்று திகைத்து கேட்டதும், “இருக்கு, கோபமிருக்கு, ஏன்டா இஷா அவளோட லவ்வர் பிக் போட்ட ஓகே. நம்ம சாக்ஷி பெர்த்டே செலிபிரேட் பண்ணின பிக்சரை எதுக்கு போஸ்ட் போட்ட?” என்று அதட்டினான்.
இந்நேரம் ஏன் போட்ட பிரச்சனையை எதுக்கு இழுத்த? என்று ஆர்பரிக்கும் அம்ரிஷை தான் எதிர்பார்த்தார்கள். இவனோ இஷாவின் போட்டோ போட்டதை விடுத்து, இந்த நால்வர்களின் புகைப்படம் போட்டதை கேட்கின்றானே என விழித்தனர்.
“நான் ஸ்மைலி போட்டிருக்கேன் அவங்க பேஸ் தெரியாது.” என்று ஆதேஷ் கூறவும், “மண்ணாங்கட்டி என்னோட போனை எடுத்து, என் லைப்ல நல்லது செய்ய, நீ இஷா லவ்வர் பிக்சர் போட்டது தப்பில்லை.
இவங்களோட பிக்சர் அப்லோட் பண்ணும் போது இவங்களிடம் பர்மிஷன் வாங்கியிருக்கணுமா? இல்லையா? ஸ்மைலி இருந்தாலும் தப்பில்லையா? மிருதுளாவை வேற தேடிக்கிட்டு இருப்பாங்க. இந்த நேரம் ஊரே பார்க்க போட்டிருக்க?” என்று திட்டி தீர்த்தான்.
இந்த நால்வரை இப்பொழுது தான் தெரியும். குறைந்தபட்சம் ஒரு வாரம் கூட முழுதாய் ஆகவில்லை. ஆனால் இஷாவோடு கணவன் மனைவியாக வாழ்ந்து வருடங்கள் நெருங்கியது.
இந்த மாற்றம் நல்லதென எண்ணுவதா? என்று தமிழ் சிந்திக்க, நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
மியூச்சுவல் டிவோர்ஸ் பதிவிடுவதால், இனி இஷா பற்றி கவலைப்பட தேவையில்லை என்று வேதாந்த் எண்ணம்.
ஆதேஷிற்கு எப்பொழுது இஷா அடிக்கடி சண்டையிட்டு அம்ரிஷை டார்ச்சர் செய்தாலோ, அப்பொழுதே பிடிக்கவில்லை.
அம்ரிஷின் அலைப்பேசியில் அவன் தந்தை சத்தியதேவன் அழைத்திருந்தார்.
நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தவன் சட்டென ”அப்பா” என்றவன் ஏழு பேரை பார்த்து போனை ஏற்று காதில் வைத்தான்.
“சொல்லுங்கப்பா” என்று ஆரம்பித்தவனிடம், “என்ன அம்ரிஷ் இஷாவை பத்தி பேசியது சரிதான். எதுக்கு மற்றொரு போஸ்ட் போட்ட? செலிபிரேட் பண்ணிட்டு இருக்கனு? உன் ரசிகர்களில் சிலர் ‘நீ அதுக்குள்ள அடுத்த பொண்ணை தேடி போறாதா.’ செய்தி பரவுது. ஆமா அந்த பொண்ணுங்க யாரு? வேதாந்த் ஏதோ நல்ல பொண்ணுங்க கொஞ்சம் பிராப்ளம், கொடைக்கானல்ல அறிமுகமானாங்கனு சொன்னான். அப்படியிருக்க உன்னால அவங்க லைப் ஏதும் ட்ரப்பிள் கொடுத்திடக்கூடாது.” என்று அறிவுறுத்தினார்.
“ஆதேஷ் தான் அப்லோட் பண்ணிருக்கான் அப்பா. அந்த கேர்ள்ஸ் முகத்தைல ஸ்மைலி போட்டு ஹிட் பண்ணிருக்கான்.
அதனால பாதிக்கப்பட மாட்டாங்க.
என்ன மீடியாவுல ஏதோ நாலு கேர்ள் பிரெண்ட்ஸ் கூட சுத்தறதா தவறா பேசும். இஷா பேசியதை விட தவறானது இல்லை. நான் இங்கயிருக்கற பொண்ணுக்கிட்ட சாரி கேட்டுக்கறேன்.
இஷா பத்தி இனி யோசிக்கப்போறது இல்லைப்பா. நீங்க பயப்பட வேண்டாம். மியூச்சுவல் டிவோர்ஸ் கொடுத்துட்டாலும் நான் ஹாப்பியா இருப்பேன். நீங்க பயப்படற அளவுக்கு நான் ஒடுங்கிடமாட்டேன்.
நான் இந்த இடைப்பட்ட நாட்களில் என் மனசுக்கு பக்குவம் வந்துடுச்சு. நானே பெர்த்டே முடிந்ததும் லைவ்ல வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள ஆதேஷ் எனக்காக இப்படி பண்ணிட்டான்.” என்று விவரித்தான்.
அவன் பேசிய தோரணையே தன்மனதில் இஷா என்பவளை உதறிவிடுவது நன்றாக தெரிந்தது.
அதனால் அம்ரிஷ் மனக்காயமின்றி இருப்பதை உணர்ந்தவராக சத்தியதேவன் இருக்க அவரு அருகேயிருந்த தாய் சௌந்தர்யா மகனிடம் பேச பிரியப்பட்டார்.
“அம்மா பேசணுமாம் டா” என்று போன் கைமாறியது.
“அம்மா” என்றதும், “கண்ணா அம்ரிஷ், ஆதேஷ் பதிவு போட்டது தப்பில்லை டா. நான் தான் அவனுக்கு அடிக்கடி போனை போட்டு, என் கஷ்டத்தை சொல்லி புலம்பிட்டே இருந்தேன். நீயும் என்னிடம் சரியா பேசலையா, ஆதேஷெடம் நான் தான் உன் போனை எடுத்து நீ போடறதா ஒரு பதிவாது மீடியா கண்ணுல படற மாதிரி போட சொன்னது. அவனை திட்டி அடிக்காத டா. எதுனாலும் என்னை திட்டு” என்று சௌந்தர்யா மகனிடம் ஆதேஷின் செயலுக்கு விளக்கம் அளிக்கவும், வேதாந்த் சோபாவில் தொப்பென அமர்ந்தான்.
ஆதேஷ் தான் இப்படி இடக்குமடக்காய் செய்தானென்று திட்ட ஆரம்பித்தாள். இது சௌந்தர்யா ஆன்ட்டி திட்டம் வகுத்து தந்ததை கேட்டதும் இனி ஆதேஷை திட்டி அடித்து புரோஜனம் இல்லையே.
அம்ரிஷ் “அம்மா போதும் இதோட முடிச்சிப்போம். என்னால் இஷாவோட இனி வாழ முடியாது. ஆதேஷ் பதிவுல மியூச்சுவல் டிவோர்ஸ் போட்டது போல தான் நான் இஷாவை தலைமுழுகறேன்.” என்று திடமாய் கூறியதும் மற்றவர்களும் நிம்மதியடைந்தார்கள்.
இஷா இஷா என்று பிணத்தியது அவன் தான். என் கெரியர்ல பிளாக் மார்க் வந்துடும் டா. அவளோட வாழணும். அவளை கன்வின்ஸ் பண்ணணும், அவளோட ஹாப்பியா மாலத்தீவுல இருந்தா ஜஸ்ட் என்னை பத்தி யோசிப்பா.’ என்று நண்பன் புலம்ப தானாக சௌந்தர்யா கவலைப்பட்டார்கள். அம்ரிஷ் பேச பேச, “டைய் கண்ணா. நீ பேட்டி கொடுடா. அந்த கழுதை நொந்து போகட்டும்” என்று ஆதரவு தரவும் அம்ரிஷ் சரிம்மா எதுவும் யோசித்து பீல் பண்ணாதிங்க” என்று தெம்பூட்டி அணைத்தான்.
அம்ரிஷ் பேசி முடித்து திரும்ப ஆதேஷ், வேதாந்த் அம்ரிஷை அணைத்து கொண்டார்கள்.
தமிழும் கங்ராஜிலேஷன் டா. நல்ல மாற்றம்” என்று தட்டிக்கொடுத்தான்.
அம்ரிஷ் பெண்கள் பக்கம் வந்து, “சாரி கேர்ள்ஸ், ஆதேஷ் என் நலனை யோசித்து உங்க பிக்சரை மிஸ் யூஸ் பண்ணிட்டான். மீடியாவுல உங்களோட நாங்க என்று கிசுகிசு வந்தா கொஞ்சம் எனக்காக பொறுத்துக்கோங்க” என்றவன் பார்வை சாக்ஷி மென்பனி சஹானா என்று பார்த்துக்கொண்டே வந்து மிருதுளாவிடம் நீண்டது.
“அட முகம் தெரியலையே விடுங்க” என்று மென்பனி கூற, “யா ரைட் சாக்ஷி கூறினாள்.
சஹானாவோ “நாங்க ஸ்டேஞ்சர் என்றாலும், இங்க தங்க பர்மிஷன் கொடுத்து, எங்களுக்கு ஹெல்ப் பண்ணறிங்க. அப்படியிருக்க நாங்களும் சின்ன உதவி பண்ணிட்டோம்னு நினைச்சிக்கறோம். டோண்ட் வொர்ரி அம்ரிஷ் சார். அவரை திட்டாதிங்க” என்று ஆதேஷிற்கு ஆதரவு கரம் நீட்டினாள்.
மிருதுளா வாயிலிருந்து வார்த்தை எண்ணும் முத்து உதிராமல் இருக்க, அம்ரிஷ் தவிப்பாய் நோக்கவும், “நீங்க பிரச்சனையிலயிருந்து மீண்டாளே போதும்” என்று கூறவும் அம்ரிஷ் புன்னகை விரிந்தது.
அம்ரிஷின் பி.ஏ சம்பத்திடம் அலைப்பேசியில் அழைத்து, “எந்த மீடியாவுல இருந்து போன் போட்டு, நியூஸ் கேட்டு, என்னை அணுக நினைச்சாலும், அம்ரிஷ் சார் அவர் மனைவியை டிவோர்ஸ் பண்ணறார். பிரெண்ட்ஸோட ட்ரிப் போயிருக்கார். இதை மட்டும் சொல்லு” என்று அறிவுறுத்தினான்.
“சார் அந்த கேர்ள்ஸ் யாருனு கேட்டா?” என்று தயங்கவும், அம்ரிஷோ “ஒன்லி பிரெண்ட்ஸ்” இதை தான் நீ சொல்லணும். அதை தவிர வேறெந்த வார்த்தையும் விடாதே.” என்று திட்டவட்டமாய் கூறினான்.
சம்பத் சரிங்க சார்” என்றதும் அம்ரிஷ் அணைத்துவிட்டு, காபி குடிச்சி பிரேக்பஸ்ட் சாப்பிடணும். ஹே கேர்ள்ஸ் இன்னிக்கும் நீங்களே சமைக்க முடியுமா? நேத்து சாக்ஷியோட பெர்த்டே செலிபிரேட். இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கறேன். என் சுதந்திர தினம். ப்ளீஸ்” என்று கோரிக்கையாக முகம் சுருக்கி குழந்தையாக கேட்டு நின்றான்.
அவன் மொத்தமாய் பெண்களிடம் பேசியது. பார்வை மட்டும் அனைவரையும் பார்த்து முடிவில் மிருதுளாவிடமே முடிந்தது.
மிருதுளாவோ “சமையல்? நாங்களா” என்று திணற, “அட நாலு எலிகள் கிடைச்சா சும்மா விடுவோமா. நாங்க சமைக்கறோம். டைம் பாஸ் பண்ண நாங்க ரெடி” என்று சஹானா சட்டென ஒப்புக்கொண்டாள்.
அதன் பின் என்ன மீண்டும் கொண்டாட்டம் துவங்க ஆரம்பித்தது.
அதற்கு நேர்மாறாக இஷா வீட்டில், “படிச்சு படிச்சு சொன்னோம். சினி ஸ்டார் கல்யாணம் பண்ணி நல்லபடியா இருன்னு. உன் லவ்வர் வேண்டாம்டினு. இப்ப பாரு நீ அவன் ஆண்மகனானு கேட்டு அம்ரிஷ் ஈகோவை தூக்கிவிட்டுட்ட. உன் லவ்வரோட இருக்கற படத்தை போட்டு மீடியால பதிவு பண்ணி உன் மேல தப்புனு பகிரங்கப்படுத்திட்டான்.
இனி ஜீவனாம்சம் மட்டும் தான் மிஞ்சும். மத்தபடி ஒரு மரியாதையும் கிடைக்காது. உறவுல, நட்பு வட்டத்துல மரியாதை கெட்டு மானம் போனது தான் மிச்சம். உன்னால என் நண்பனை இழந்ததாச்சு” என்று பரஞ்ஜோதி இஷாவை திட்டிவிட, மனிஷாவும் புலம்பி திட்டி சென்றார்.
‘அம்ரிஷ் இந்தளவு இறங்கி தரம் தாழ்த்தி பேசமாட்டான். அமைதியா விட்டுடுவான்னு நினைத்தாள். அதற்கு நேர்மாறாக இப்படி தன்னை தன் காதலன் புகைப்படத்தை பதிவிட்டதும் இல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து யாரோ நான்கு பெண்களோடு கொட்டமடிக்கிறான். யார் அந்த பெண்கள்? விலைக்கு வந்த விலைமகளா? அல்லது பெண் தோழிகள் பழக்கமா? இந்த பழக்கம் மெத்தை வரை செல்லுமா? இப்படி தான் இஷா நினைப்பு ஊர் மேய்ந்தது.
தான் எத்தனை விதமான அவச்சொல்லை அவமதிப்பை அம்ரிஷிற்கு இழைத்தோமென மறந்து அவன் எங்கேயிருக்கின்றான்? யானோடு இருக்கின்றான் என்று ஆராயும் நோக்கில் எட்டு பேரும் இருக்கும் இடத்தை ஜூம் செய்து செய்து பார்வையிட்டாள்.
கார்பெட் மற்றும் போர்வையால் மறைந்திருந்த கொடைக்கானல் இடம் அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை, கேக் கட் செய்ததும் போர்வையோடு இருந்த பேக்கிரவுண்ட் என்பதால் இஷாவுக்கு தான் தலைவிண்ணென்றது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
Saavu d isha…
Super