பூ 12
அன்றைய பொழுது முழுவதும் அவன் அவளை நாடி நாடி வர அவளோ வெட்கப் பூக்களுக்கு இடையில் அவன் தேடியது எல்லாம் தாராளமாய் வழங்கினாள்.
அவன் வெற்று மார்பில் தஞ்சம் கொண்டு அவனது தாடையை தடவியபடி “உண்மையிலேயே உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்று அவன் கண்களை எட்டிப் பார்த்து வினவினாள்.
“ரெண்டு பேரும் எப்படி இருக்கோம் பாரு” என்று வெட்கத்துடன் கேட்டவன், “இப்பவும் உனக்கு இந்த சந்தேகம் அவசியமா?” என்று அவள் தலையில் முட்டினான்.
“இது ஒரு விதமான ஈர்ப்பு. மனுஷனா பிறந்தா இந்த தேவை இருக்க தான் செய்யும். அதுக்காக உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு அர்த்தம் ஆகாதே! மனசுல நான் வந்துட்டேனா?” என்று கேட்ட குரலில் சற்று பிடிவாதம் இருந்தது.
“ருத்தும்மா இதென்ன பேச்சு? உன்னை கல்யாணத்துக்கு முன்னாடியே ‘பார்க்க நல்ல பொண்ணா தெரியறாளே’ன்னு நினைச்சிருக்கேன். சமையல் தெரியாம முழிக்கிறச்ச பார்க்க பாவமா இருந்துது. நீ கேட்காமலே உனக்கு ஒவ்வொண்ணும் நான் செய்தேனே. இதெல்லாம் உன் மேல ஒண்ணுமே தோனாமலா? இனி இப்படி ஒரு கேள்வி கேட்காத.”என்று அவளை தன்னோடு அள்ளிக் கொண்டு அவளுக்கு பேச இடம் கொடுக்காமல் அவளிடம் மீண்டும் தன் தேடலைத் தொடர்ந்தான்.
தாம்பத்யம் என்பது உடலால் இணையும் உறவு மட்டும் இல்லையே! இருவரும் கூடிக்களித்தாலும் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் மற்றவர் மனம் அறிந்து நடப்பது தானே அது!
ஏன் தன்னிடம் அவள் அந்த கேள்வியை முன் வைக்க வேண்டும் என கோகுல் சிந்திக்காமல் போனான். ஆனால் தன்னை மனம் நிறைந்து தான் மனைவியாக ஏற்றிருக்கிறான் என்ற எண்ணம் பெண்ணவளுக்கு தித்திப்பை ஏற்படுத்த இம்முறை அவனை அவளே அதிகம் நாடினாள்.
அன்றைய நாள் இளமை விருந்தில் கழிய, வயிறை இருவரும் மறந்து போயினர்.
மறுநாள் காலை அவளுடன் சென்று காவிரியில் குளித்து விளையாடி பொழுதை கழித்தாலும் முதல் நாள் போல வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் காலை உணவை வாங்கி உண்டனர்.
“பாட்டி ஆத்துக்கு போயிருந்தா இந்நேரம் மாப்பிள்ளை விருந்து நடந்திருக்கும். கடையில இட்லி சாப்பிட வச்சுட்டேன்னு என் மேல கோவம் இல்லையே! ” என்று கணவனை கேட்க,
“அங்க அந்த விருந்து கிடைக்கும் ஆனா இந்த விருந்து கிடைக்குமா?” என்று இடையோடு அவளை இழுக்க,
“ச்சு, கிருஷ். போதும் பாடாப்படுத்துறீங்க” என்று தலை கவிழ்ந்தாள்.
“பிரம்மச்சாரியா இருந்தவனை இப்படி லோ லோன்னு பின்னாடி அலைய வச்சுட்டு என்னை குறை சொல்ற பாத்தியா?” என்று சட்னியை அவள் கன்னத்தில் தடவினான்.
“ஐய்ய காரம்.” என்று துடைத்தபடி,
“ஆமா நான் ரம்பா, ஊர்வசி மாதிரி மயக்கி இவரை அலைய வச்சோம்! அதென்ன பிரம்மச்சாரி? உங்களுக்கு இருபத்து எட்டு இருக்காது?” என்று இழுக்க,
“இருந்தா.. இங்க பார் என்னிக்கு இந்த பூணலை போட்டு பிரம்மச்சரியம் எடுத்தேனோ அன்னில இருந்து நேத்து வரை ஐயா கரை படாத பிரம்மச்சாரி. வேற சிலது இருக்கு.. ஆனாலும் நான் நல்லவன் தான். என்னை உன்கிட்ட தான் இழந்துட்டேன்.” என்று அவளை வம்புக்கு இழுத்தான்.
“நல்ல கதை இது. பொண்ணு நான் தானே உங்ககிட்ட என்னை இழந்தேன்னு சொல்லணும்” என்று கை முஷ்டியை அவன் விலாவில் இடிக்க,
“எத்தனை காலத்துக்கு அதையே சொல்வேள்? ஏன் சுத்தமான கற்போட நான் உன்கிட்ட என்னை இழந்தேன்னு சொன்னா உனக்கென்ன நட்டம்?” என்று அவன் இயல்பாக கேட்டுவிட்டு கை அலம்ப எழுந்து சென்று விட,
“அதான் எனக்கு தெரியுமே!” என்று கண் சிமிட்டி தனக்கு மட்டுமே கேட்பது போல கூறிக் கொண்டாள்.
மதிய உணவுக்கு அவன் சமைத்துத் தருவதாக சொல்லவும் இருவரும் அருகில் இருந்த கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தனர்.
அவன் சமையலறையில் அழகாக சமையல் வேலையை செய்து கொண்டிருக்க, மேடையில் அமர்ந்து அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
“ஏய் உனக்கு மதியம் சாப்பாடு வேணுமா வேண்டாமா? அப்படி பார்க்காத” என்று அவளை செல்லமாய் மிரட்டியபடி காய் நறுக்கிக் கொண்டிருந்தான் கோகுல்.
“என் புருஷன் நான் பார்ப்பேன். நீ யாருய்யா என்னை பார்க்க கூடாதுன்னு சொல்ல?” என்று யாரிடமோ சண்டையிடுவது போல தாவி இறங்கி வந்தவள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு,
“இந்த பப்பாளிப்பழம் என்னோடது.” என்று காது மடலை கடித்து வைத்தாள்.
“நான் வெண்டைக்காய் கறி பண்ண நெனச்சா நீ என்னை தின்ன பிளான் பண்ணுறியா?” என்று அவளை மடியில் சேர்த்துக் கொண்டான்.
சமையல் ஒருபுறம், காதல் மறுபுறம் என்று கழிய இருவருக்குள்ளும் நிலையான புரிதலும் அன்பும் மலரத் துவங்கியது.
அன்றைய இரவும் தாம்பத்யம் தித்தித்தது.
காலை அவனுக்கு முன் எழுந்து குளித்து தங்கள் உடமைகளை தயாரா நிலையில் வைத்து அவனுக்கு அருகே அமர்ந்திருந்தாள்.
கொட்டாவி விட்டபடி எழுந்தவன், “காலைல என்ன ஒரு திவ்யமான காட்சி. என்ன அழகு!” என்று அணைக்க வர,
“ஐயா நேரமாகுது. என் பாட்டி சாமியாடுறதுக்கு முன்னாடி ஶ்ரீரங்கம் போகணும். எப்படி எழுந்து கிளம்பி வர ஐடியா இருக்கா? இல்ல இந்த கோகுல கிருஷ்ணனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடணுமா?” என்று கேலி செய்து தள்ளி நின்றாள்.
“பாடு பாடு. கேட்டுண்டே எழுந்து கிளம்பறேன்” என்று விளையாட்டாக கூறி அவன் குளிக்க விரைந்தான்
ஆனால் அவள் ஏதோ பாடலை வாயில் முணுமுணுத்து ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.
அவன் தயாரானதும் கால் டாக்சி அழைத்து கிளம்பி விட்டனர்.
ஶ்ரீரங்கத்தில் கோவிலுக்கு இரண்டு தெருக்கள் தள்ளி தான் பாட்டியின் வீடு. அதுவும் அக்ரஹாரம் தான். ஆனால் ஜீயபுரம் போல வெறிச்சோடி இருக்காது. அங்கே பாட்டிகளும், நடுத்தர வயது மக்களுமே அதிகம். இளம் வயதினர் வேலை, வியாபாரம் என்று திருச்சியில் செட்டில் ஆகி விட வைதீகம் பார்ப்பவர்கள் மட்டுமே அங்கே எஞ்சி இருந்தனர்.
ஆனால் ஶ்ரீரங்கம் அப்படி இல்லை. ரங்கனின் காலடியில் இருக்கும் இனிமையை எந்த உத்யோகஸ்தர்களும் மகிழ்ந்து களித்தனர்.
பாட்டி ஆத்துக்கு கிளம்பி விட்டதாக ஆருத்ரா பாட்டிக்கும், கோகுல் தன் தந்தைக்கும் தகவல் கொடுத்து விட்டனர்.
பாட்டி வீட்டின் வாயிலில் சிறிய கூட்டமே காத்திருந்ததும் கோகுலுக்கு கிலியானது.
“என்ன ருத்தும்மா இது? என்ன வாசல்ல ஒரே கூட்டம். சின்னதா பந்தல் வேற போட்டு இருக்கே!” என்று வினவ,
“அங்க தானே வரிங்க? அந்த கூத்தெல்லாம் நேரில் நீங்களே பாருங்க” என்று சலிப்புடன் கூறினாள் ஆருத்ரா.
வீட்டினுள் நுழையும் முன் ஆலம் சுற்ற நான்கு பேர் வந்தனர்.
அவன் சட்டைப் பையில் பணம் இல்லாது விழிக்க, ஆருத்ரா அவன் கையில் யாருக்கும் தெரியாத வண்ணம் ரூபாய் நோட்டுகளை திணித்தாள்.
நன்றியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அதனை தட்டில் வைக்க அதை இடதுபுறம் நின்றிருந்த மாமி வாங்கிக் கொண்டார்
“மாப்பிள்ளை பசையுள்ள ஆளு தான் ஆளுக்கு ஐநூறு கொடுத்திருக்கார்” என்று பெருமை பேச,
“எல்லாம் வழியை விடுங்கோ. பிரயாணம் பண்ணி வந்தவாளை உள்ள விடாத வாசல்ல என்ன பேச்சு?” என்று சந்தானலஷ்மி /யின் குரல் கணீரென்ற ஒலித்தது.
“இந்தா வந்துட்டாங்க நாட்டாமை” என்று அவன் காதருகில் கேலி செய்தாள் ஆருத்ரா.
“ஏய் பாட்டியை அப்படி சொல்லாத” என்று அவன் கண்டிக்க,
“ஊருக்கு போகும்போது நீங்க என்ன சொல்றீங்கன்னு பாக்க தானே போறேன்” என்று கள்ளச் சிரிப்பு ஒன்றை வெளியிட்டாள்.
அதை ஒதுக்கியவன், நேராக உள்ளே சென்று பாட்டியின் பாதங்களில் பணிய, அவனுடன் வந்த அவளும் நமஸ்கரித்தாள்.
அவள் எழுந்து கொண்ட பின் அவன் அபிவாத்யை கூறும்போது அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“நல்லா ஷேமமா இருங்கோ ரெண்டு பேரும்” என்று பாட்டி கண்ணீர் விழிகளை மறைத்து வாழ்த்தினார்.
“அப்பப்பா என்ன ஒரு அடக்கம்” என்று அவன் காதில் மீண்டும் இவள் கேலி செய்ய,
“ஏய் நான் நல்ல பையன் தான்” என்று சட்டமாக கூறினான்.
“ஓ நல்லா தெரியுது” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேச,
“இந்த காலத்து பொண்கள் எல்லாம் உடனே புருஷாளை கைக்குள்ள வச்சுக்கறேள் டிம்மா.” என்று ஒரு எழுபது வயது மாமி அங்கலாய,
“ஆத்துல இருந்து மாமா வரலையா மாமி, எங்களை பார்த்ததும் அவரை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேளா?” என்று அதனையும் கேலியாக்கினாள்.
“அச்ச்சே. அதெல்லாம் ஒன்னும் இல்லடிம்மா, கல்யாணத்தன்னிக்கு சமத்தாட்டம் இருந்தியே! இன்னிக்கு நொடிக்கு நொடிக்கு ஆத்துக்காரன் காதை கடிக்கிறியே அதைச் சொன்னேன்” என்று விளக்கம் வேறு கொடுத்தார்.
“அவர் கிட்ட இவால்லாம் இருந்தா உங்களுக்கு கம்பர்டபிளா இருக்கான்னு கேட்டேன் மாமி. நம்மளை நம்பி வந்தவரை நாம தானே கவனிக்கணும்” என்று சாதாரணம் போலவே முகத்தை வைத்துக் கொண்டு அவள் பேச, கோகுல் அவள் வாயடிக்கும் திறமையை அன்று தான் கண்டதால் ஆச்சரியத்துடன் நோக்கினான்.
வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்மணி, சமையல் செய்ய வரும் மாமி மட்டுமே வீட்டில் இருக்க,
“சாப்பிடலாமா பா” என்று அன்பாய் கோகுல கிருஷ்ணனை கேட்டார் பாட்டி.
“இல்ல பாட்டி இப்போ தானே வந்தோம். சித்த நேரம் ஆட்டும்” என்று பவ்யமாக பதிலளிக்க,
“இந்த ஸ்லாங்.. என்னிடம் வரவில்லையே அதன் காரணம் என்னவோ பிராண நாதா?” என்று மீண்டும் அவன் காதில் பேச, இம்முறை அவன் பதில் தரும் முன்,
“ஆருத்ரா கொஞ்சம் உள்ள வா” என்று அவளிடம் கூறி விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார்.
ஜீயபுரம் வீட்டை ஒப்பிட்டால் இது சிறிய வீடு தான் ஆனால் நவீன வசதிகள் இருந்தது. ஆனால் இங்கே இருந்த இயல்பான மனநிலை இல்லாமல் ஏதோ இறுக்கம் சூழ்வதை உணர்ந்தான் கோகுல்.
எழுந்து சென்ற ஆருத்ராவின் நடையே துள்ளலாக இருந்தது. சென்னையில் பாந்தமாய் தரைக்கு வலிக்காமல் நடந்தவள், ஜீயபுரத்தில் நடக்கவே இல்லை. எல்லாம் ஓட்டம் தான். இங்கே துள்ளல் என்று மனையாளை நினைத்தவன் தனிமையில் ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்தான்.
உள்ளே சென்ற ஆருத்ராவை காய்ச்சி எடுத்துவிட்டார் சந்தானலஷ்மி.
“ஏன்டி எவ்வளவு நல்லது சொல்லி அனுப்பி வச்சேன். நல்ல குடும்பம். ஒத்த பையன். அவா அம்மா அப்பாவை அணுசரிச்சு உன்னால வாழ முடியாதா? நேத்து சுபா பேசும்போது கூட ஏதோ தப்பா புரிஞ்சின்டு பேசறாளாட்டம் இருக்குன்னு நினைச்சேன் டி. ஆனா இல்ல. நீ அப்படித்தான் இருக்க. அதான் நானே என் கண்ணாலே பார்க்கறேனே. ” என்று அவளை கோபித்தவர்,
“என்ன டி பழக்கம்? எல்லார் முன்னாடியும் ஆத்துக்காரனை ஈஷிண்டு உகாந்துகறது? எப்பப்பார் அவன் காதுல என்ன பேச வேண்டி இருக்கு? கொஞ்சமானம் இங்கிதம் வேண்டாமா? அப்பறம் பள்ளிக்கூடம் காலேஜெல்லாம் போய் என்ன தான் டி படிச்சேள்?” என்று அவளை வறுத்தார்.
“பாட்டி என்ன பேசற நீ? அவர் என் புருஷன். அவர் கிட்ட பேசாம நான் யார் கிட்ட பேசுவேன்?” என்று எதிர்கேள்வி கேட்க,
“இதே போல தான் உன் மாமியார்ட்ட வாயாடி இருக்க. அதான் அவ போன் பண்ணி உங்க பேத்தி லட்சணம் தெரியுமான்னு கேட்கறா. ஏன் இப்படி மானத்தை வாங்கற? திருச்சி வந்தா நேரா இங்க வராம உன்னை யாரு அந்த ஆத்துக்கு போக சொன்னது? அதோட ரெண்டு நாள் ஆளில்லாம பூட்டிக் கிடந்த வீட்டுக்கு அவரை அழைச்சிண்டு போய் தங்கி இருக்க. ஒரு வார்த்தை சொல்லத் தோனித்தா உனக்கு? இல்ல அங்க ரெண்டு நாள் தங்க வேண்டிய அவசியம் என்னங்கறேன்?” என்று அவளை கேள்வியால் துளைத்தார்.
மாமியார் பாட்டியை அழைத்து பேசி இருக்கிறார் என்றதும் ஒரு மாதிரியாக மாறிவிட்டது ஆருத்ராவின் முகம், அதிலும் அங்கே தங்க எடுத்த முடிவு அவளுடையது இல்லை. இன்று தான் கோகுலின் அருகே அமர்ந்து இப்படி ரகசியம் பேசுகிறாள். சென்னையில் சோஃபாவில் அமர்ந்தாலும் தள்ளியே தான் அமர்வாள். அவளை என்னவென்று எண்ணி மாமியார் இப்படியெல்லாம் பாட்டியிடம் குறை கூறி இருக்கிறார் என்று வெதும்பியவள் மனதில் முதல்முறையாக மாமியாரை எண்ணவே கசந்தது.
அன்னை போல அவரை எண்ணவில்லை என்றாலும் மரியாதையும் அன்பும் வைத்திருந்தாள். கண்ணாடிக் குவளையை கீழே போட்டு நொறுக்குவது போல அவர்களுக்குள் மலர இருந்த உறவை அவள் பாட்டியிடம் குறை கூறி நொறுக்கி விட்டார் சுபாஷிணி.
பாட்டி அதன் பின் என்ன பேசினார் என்று ஆருத்ரா காதில் வாங்கவில்லை. அவள் எண்ணமெல்லாம் எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்பதிலேயே இருந்தது.
பாட்டி மதிய உணவை இருவருக்கும் சிரித்த முகமாக பரிமாற, பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டு எழுந்து விட்டாள் ஆருத்ரா. அதற்கும் திட்டு வாங்க மறக்கவில்லை.
அருகில் இருந்தாலும் குற்றம், விலகி நடந்தாலும் குற்றம். பாட்டியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.
அவள் இங்கே வந்தால் தங்கும் அறைக்குள் சென்று முடங்கினாள்.
அவள் எப்படி சாப்பிடுவாள், எவ்வளவு சாப்பிடுவாள் என்று இந்த சில நாட்களில் அறிந்திருந்த கோகுல், அவளது இன்றைய நடவடிக்கை கண்டு குழம்பினான்.
அவளுடன் அந்த அறையில் தங்கிக் கொள்ளும்படி சந்தானலஷ்மி கூறியதும் வேகமாக அவ்வறைக்கு அவன் வர,
“பக்கத்துல கீர்த்தனா மாமி கூப்பிட்டா என்னன்னு கேட்டுட்டு வரேன்’ என்று வெளியேறினாள்.
போகும் அவளை புரியாமல் பார்த்த கோகுல் அறைக்குள் அங்கும் இங்கும் நடக்க, தன் வீட்டில் முதல் எட்டு நாட்கள் எப்படி அவளது பொருட்கள் அந்நியத்தனமாக இருந்ததோ அப்படித்தான் இந்த அறையும் இருந்தது.
அவளது கல்லூரி புத்தகங்கள் எல்லாம் இருக்க, அதை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் இடையிடையே அழகிய ஓவியங்கள் பென்சிலால் வரையப்பட்டு இருந்தது. திறமையானவள் தான் என்று தன் மனைவியை அவன் மெச்சிக் கொள்ள, அவளோ வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ரங்கனின் பாதம் தேடி பூட்டிய கோவில் கதவின் அருகில் அமர்ந்திருந்தாள்.
பல பக்தர்கள் மத்தியில் அவள் அமர்ந்திருக்க, நிம்மதி வேண்டி மட்டுமே கடவுளை நாடும் தான் ஒரு சுயநலவாதியா! இல்லையா? என்று மனதில் தர்க்கம் செய்து கொண்டிருந்தாள்.
Interesting and super😍😍😍😍
பாட்டி, மாமியார் எல்லோருமே ஒரே கட்சியோ? பாவம் ஆரு
Maami eppdiye pesittu erunthaangannaa gokul reaction vera maathiri erukkum 😎😎😎
அதானே…பெருசுங்களுக்கு..புதுசா கல்யாணம் ஆனவா எல்லாம் நெருக்கமாக இருந்தா புடிக்கதே..😡😠..அப்போ எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னு தெரியல..🤦🤦
Nice moving sis…. இந்த அம்மாஞ்சி ( கோகுல கிருஷ்ணன்) எப்படி மாறிட்டாள்…. நேக்கே.,அதிசயமா இருக்கு…🤔🤔🙄 நன்னா….இருந்தா சரி…..☺️☺️☺️♥️♥️❤️❤️💕💕💕
மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
(அத்தியாயம் – 12)
கிருஷ்ஷூம் ஆருவும் ஓரளவுக்காவது ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு நல்லபடியா வாழ்க்கையை வாழத் தொடங்கிட்டாங்களேன்னு
நினைச்சேன். அதுக்குள்ள இந்த சந்தானலஷ்மி பாட்டி ஏதேதோ பேசி அவ மூடை அப்செட் பண்ணதும் இல்லாம, ஒரேநாளுல எல்லாத்துக்கும்
மூடுதிரை போட்டுடுவாங்க போலவே…?
இதுல சுபா மாமி, மகனையும் மருமகளையும் மறு வீட்டு விருந்துக்கு அனுப்புற மாதிரி அனுப்பி வைச்சிட்டு, பின்னாடியே போன்கால்ல
போட்டுக் கொடுக்கிற வேலையை வேற செமையா செய்துட்டாங்க போல.
ஆனா, இந்த பாட்டி தான் கொஞ்சம் பேத்தி மேல அன்பை காட்டினா குறைஞ்சா போயிடுவாங்க…? அவளை புரிஞ்சுக்கவே மாட்டேன்ங்குறாங்களே…?
அது சரி, இவ ஏன் இப்ப ஆம்படையான் கிட்ட மூஞ்சை தூக்கி வைச்சிட்டிருக்கான்னு
தெரியலையே..? அவனுக்கே தெரியாத அவங்கம்மா டபுள் கேம் ஆடியிருக்கிறாங்கறது
இவ சொன்னாத்தானே அவனுகுக்கேத் தெரியும்.
அடேய் கோகுல கிருஷ்ணா…
பேசாம தனிக்குடித்தனம் போய்டுடா…! இல்லைன்னா, உன்னோட அம்மா, உன்னை தலையை பிச்சுக்க வைச்சிடுவா.
😃😃😃
CRVS (or) CRVS 2797
Spr going… Ella maamiyarume ipti thana avanga than puthusu…
Iva intha v2 ponnu thana purinjikka maatangla….. Nice moving waiting for nxt epi💕💕💕💕💕
Paati neengale aaru va purinjikama ippadi pesuringa mamiyar vera ena solli pesinagalo inum overa panranga pa ava paatuku adakama tha ava husband kuda thane pesura itha poi thappa pesuringa
Patti yum mamiyar um aaru kita korai ah mattumae than pakkura ga ippo than ava gokul kita free ah pesuna and avanga rendu per kita yum purithal nu onnu vandhu chi athuku la aval ah upset panra thu pola rendu ladies um indha velai ah parthu vachi taga
அருமையான பதிவு
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌
அச்சோ என்ன தான் ஆச்சு இந்த ஆச்சிக்கும்
மாமியாருக்கும்
ஆரு என்னத்த
செய்வளோ
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா மாமியாரும் குறை மட்டும் தான் தெரியும் கண்ணுக்கு
இத்தனை வயசாகிருந்தாலும் கொஞ்சம் கூட அந்த பாட்டிக்கு அறிவே இல்ல
அருமையான பதிவு