Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 23

மனம் உன்னாலே பூப்பூக்குதே 23

பூ 23

பகலவனின் வருகையில் வையம் புது நாளை வரவேற்க, நிறைந்த தன் மணி வயிற்றை தடவியபடி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

காலை ஐந்து மணிக்கே வளைகாப்பு செய்து விட்டார் சந்தானலக்ஷ்மி. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீளம் என்று கெட்டி வளையலில் தங்க நிற சாந்து பூசி ஒரு கையில் இருபத்து ஒன்றும் மற்றொன்றில் இருபத்து இரண்டுமாக போட்டிருக்க, வேப்பிலைக் காப்பு, தங்கக் காப்பு, வெள்ளிக் காப்பு மூன்றும் கண்ணாடி வளையல்களுக்கு இடையே அங்கும் இங்கும் தலை காட்டியது.

சீமந்தம் செய்ய பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு மனைக்கு வரும்படி சாஸ்திரிகள் கூறி இருக்க, புடவையைக் கட்ட முடியாமல் திணறிய படி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

காலையில் ஆறு கஜம் புடவையை கட்டவே அவள் சிரமப்பட்டுப்போனாள். எட்டு மாதம் நிறைந்த வயிற்றில் பாவாடையை இறுக்க முடியவில்லை. மேல் வயிற்றில் கட்டினால் மூச்சு விட முடியவில்லை. ஒரு வாரமாகவே சிரமமாக உணர்ந்தாள் ஆருத்ரா.

இப்பொழுது ஒன்பது கஜம் கட்டிக்கொண்டு போக வேண்டும். மலைப்பாக இருந்தது அவளுக்கு.

பத்து நிமிடம் முயன்றவள், வெளியே தலையை நீட்டி அங்கிருந்த அத்தை, மாமி உறவில் உள்ளவர்களை அழைத்தாள்.

அவர்கள் வந்ததும், “என்ன டி பொண்ணே இது? இத்தனை நேரமா இப்படியே தான் உக்காண்டு இருந்தியா? முன்னையே கூப்பிட என்ன டி கூச்சம்?” என்று உரிமையாக கடிந்து கொண்டனர்.

“இல்ல அத்தை. எனக்கு கட்டத் தெரியுமேன்னு பார்த்தேன்.” என்று இழுத்தாள்.

“எப்படி அத்தை இதை பிள்ளையாண்டு இருக்கறச்ச கட்டிண்டு நிக்கறா? என்னால முடியல.” என்று அவள் சோர்வாகக் கூற,

“எல்லாமே பழக்கம் தான் டி. என் பாட்டி கடைசி நாள் வரை மடிசார் தான் கட்டிண்டா. நாம தான் சாதா புடவைக்கே இப்ப மூக்கால அழறோம். என் பொண்ணு ஜீன்ஸ் போட்டுண்டு தான் கல்யாணம் பண்ணிப்பாளோ என்னவோ? அப்படித்தான் செல்ஃப் முழுக்க வச்சிருக்கா. ஆனா அந்தந்த நேரம் அதது நடந்திடும் டி. நீயே அடுத்த குழந்தை வளைகாப்புக்கு யார் துணையும் இல்லாத கட்டிண்டு நிற்ப.” என்று கேலி செய்தார்.

உண்மை தானே என்னவோ! மனதால் நினைத்த ஆருத்ராவுக்கு அதன்பின் நிற்க நேரமில்லை.

சீமந்தம் முடிந்து மூக்கு பிழிந்ததும் என்னவோ ஒரு மாதிரி இருந்தது அவளுக்கு. ஆனால் அப்படியே சமாளித்து அமர்ந்து விட்டாள். எல்லாம் சில நொடி தான். இயல்பாகி விட்டது உடல்.

ஆனால் அடுத்தது தான் அவளது பொறுமையை சோதித்துப் பார்த்தது.

சொந்தம், பெரியவர்கள் என்று அனைவரையும் ஒன்றாக நிறுத்தி நமஸ்கரிக்க சொல்லிவிட்டு உணவு உண்ண சென்று விட்டார் சாஸ்திரிகள். ஆனால் சுபாவோ, ஒவ்வொரு உறவாக அழைத்து நமஸ்கரிக்க வேண்டும் என்று சொல்ல, விழுந்து எழுந்து நொந்து போனாள் ஆருத்ரா.

ஆதிநாதன் வீட்டின் வெளியே பந்தல் போட்டு நடந்து கொண்டிருந்த உணவுப் பந்தியைப் பார்க்க சென்றிருக்க, அன்னையை கடிந்து கொள்ளவும் முடியாமல், மனைவி அவஸ்திப் படுவதை பார்க்கவும் சகிக்காமல் கோகுல் முகம் கற்பாறை போல இருந்தது.

சில முறை அமைதியாக இருந்தவன், அடுத்து வந்து நின்றவர்களுக்கு அவன் அரை வணக்கமாக நமஸ்கரிக்க, பக்கத்தில் இருந்த தூரத்து சொந்தமான பாட்டி, “நீயும் அப்படியே பண்ணுடிம்மா, இடுப்பு வலிக்கப் போறது” என்று கரிசனையாக கூறினார்.

அதற்குப்பின் ஆருத்ராவால் நிமிர்ந்து நிற்கவே முடியவில்லை முதுகில் சுள்ளென்று வலி ஒன்று எடுத்துக் கொண்டே இருந்தது.

அன்னை எப்போதடா சமையல் அறை செல்வார் என்று காத்திருந்த கோகுல் அவர் அந்த பக்கம் செல்வதை கண்டவுடன் பின்னோடு சென்றான்.

“ஏம்மா அந்த மாமா தான் ஒரு தரம் நமஸ்காரம் பண்ணினா போதும் சொல்லிட்டு போனாரே! எதுக்குமா இப்படி ஆருத்ராவை கஷ்டப்படுத்துற? எத்தனை பேர் கிட்ட நமஸ்காரம் பண்ண சொல்லுவ? அவளுக்கு வலிக்காதா? அவளுக்கு இந்த மாசம் வயிறு ரொம்ப பெருசா வேற இருக்கு. டாக்டர் கவனமா இருக்கணும்னு சொல்லி தான் அனுப்பி வச்சாரு. நான் உன்கிட்ட சொன்னேனா இல்லையா?” என்று கோபமாக கேட்டதும்,

“நான் தாண்டா உன்ன பெத்தேன். ஒரு புள்ள பெத்த எனக்கு பிள்ளை உண்டாக இருக்கிறவளை எப்படி பார்த்துக்கணும்னு நல்லாவே தெரியும். குனிஞ்சு நிமிர்ந்து நமஸ்காரம் பண்ணினா அவளுக்கு தான் நல்லது. நாளைக்கு குழந்தை வெளியே வரச்ச அவளுக்கு சிரமம் இல்லாம இருக்கும். அந்த காலத்துல பெரியவா ஒன்னும் யோசிக்காம இதெல்லாம் செய்யல.” என்று தோளில் இடித்துக் கொண்டு நகரப் போனார்.

“நில்லுமா நானும் ஒன்னும் சாஸ்திர சம்பிரதாயம் தப்புன்னு சொல்றவன் இல்ல. நமஸ்காரம் பண்ணினா நல்லது தான். ஆனா வயித்து பிள்ளைக்காரி ஒரு தரம் பண்ணலாம் ரெண்டு தரம் பண்ணலாம் இப்படியாமா கணக்கு வழக்கு இல்லாம விழுந்து எந்திரிக்க வைப்ப? ஒரே நாள்ல இத்தனை தரம் பண்ணினா அவளுக்கு வலிக்காது?” என்று கோபமாக தன் மனதில் இருந்ததை கொட்டி விட்டான்.

“இங்க பாருடா எனக்கு அவகிட்ட எந்த விரோதமும் இல்ல. அவ நல்லதுக்கு தான் செஞ்சேன். போயி உன் அப்பாவுக்கு உதவியா அங்க பந்தியில எல்லாம் பரிமாறுறாங்களான்னு பாரு. எப்ப பார்த்தாலும் பொம்மனாட்டி விஷயத்துல தலையிட்டுண்டு” கோபமாக மகனை நகர்த்தி விட்டு சமையலறை விட்டு வெளியேறினார்.

அவன் தன் மனைவியை பார்க்க வந்தபோது அவளோ கட்டிலில் ஓரமாக உடை கூட மாற்றாமல் ஒருக்களித்து படுத்திருந்தாள்.

அவள் முகத்தில் அத்தனை சோர்வு இருக்கவும் இவ்வளவு நேரம் அமர்ந்திருந்ததும் நமஸ்கரித்ததும் நான் அவள் சோர்வுக்கு காரணம் என்று அவனாக எண்ணிக்கொண்டு அன்னையின் மேல் கோபத்தை இன்னும் கூட்டிக் கொண்டான்.

அவளை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாதவனாக பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக நின்றான்.

அவனது சீனியர் சற்று தாமதமாக வந்தவர் முதலில் தம்பதிகளை வாழ்த்தி விட்டு உணவு உண்ண வருவதாகக் கூறினார்.

இப்போது கோகுலுக்கு மேலும் சங்கடமானது. காலை 4 மணி முதல் அமர்ந்து கொண்டிருந்த ஆருத்ரா அப்போதுதான் சற்று தலை சாய்த்து இருக்கிறாள் உடனே சென்று எழுப்ப அவனுக்கு மனம் வரவில்லை.

“பரவால்ல சார் சாப்பிடுங்கோ. அப்புறம் போயி அவளை அங்க பார்ப்போம்.” என்று அவரை இலையில் அமர்த்த அவன் எவ்வளவோ முயன்றான். சரியாக அந்த நேரம் வந்த சுபா “வாங்கோ வாங்கோ” என்று அவரை வரவேற்று விட்டு மகனிடம்,

“சாரை ஆத்துக்குள்ள கூட்டிட்டு வா” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தார்.

அன்னையின் செயலில் மேலும் கடுப்பானவன், அவருடன் வீட்டிற்குள் சென்றான்.

சுபா நேராக சென்று மருமகளை தட்டி எழுப்பினார்.

“இந்த நேரத்துல என்னம்மா தூக்கம்? லேட்டா வரவா எல்லாம் உன்னை எங்கேன்னு கேட்க மாட்டாளா? எழுந்து வா” என்று விட்டு வெளியே வர,

நலுங்கியிருந்த உடையை சரி செய்ய முடியாமல் தவிப்புடன் நின்றாள் ஆருத்ரா.

எங்கிருந்து அத்தனை கோபம் வந்ததோ, கடகடவென்று தன் உடலில் சுற்றியிருந்த புடவையை உருவி தூரமாக எரிந்து விட்டு, காலையில் வளைகாப்புக்கு கட்டி இருந்த புடவையை கையில் எடுத்தாள். பாவாடையை தேடி அணிந்து புடவையை முடிந்தவரை வேகமாக கட்டிக்கொண்டு வருவதற்குள் மூன்று முறை அறைக் கதவை தட்டி விட்டார் சுபா.

எரிச்சல் அடங்காமல் வெளியே வந்தவள் அங்கே கோகுலின் சீனியர் ஆடிட்டர் சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டு முகத்தைத் திருத்திக் கொண்டாள்.

வந்தவருக்கு நமஸ்கரிக்க சொல்லி சுபா சொன்னதும் அமைதியாக நமஸ்காரம் செய்துவிட்டு ஓரமாக நின்று கொண்டாள்.

“அப்புறம் டெலிவரி எல்லாம் எங்க?’ என்று சம்பிரதாயமாக அவர் கேள்வி கேட்டதும்,

“அதெல்லாம் எப்பவும் போல பொண்ணாத்துல பண்றது தான். இன்னைக்கு சாயங்காலம் அவா பாட்டி அவள திருச்சிக்கு கூட்டின்டு போறா.” என்று சுபா முந்திக்கொண்டு பதில் கூறினார்.

ஆருத்ராவின் முகம் ஒரு நொடியில் அப்படியே சிறுத்துப் போய்விட்டது. தன் கணவன் ஏதாவது சொல்வானா என்று அவனை திரும்பிப் பார்த்தால், அவனும் அன்னையை ஒரு பார்வை பார்ப்பதும் சீனியர் ஏதோ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதுமாக அமர்ந்திருந்தான்.

ஆருத்ராவின் மனம் விட்டுப் போனது.

இனி ஒரு முறை இவனிடம் நான் இங்கேயே இருக்கிறேன் என்று கேட்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

சந்தானலஷ்மி பாட்டி வந்திருந்த உறவுகளுக்கு சீர் பட்சணம் கொடுத்து வழி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். அவரையும் தன் கணவனையும் ஒரு பார்வை பார்த்தவள் மீரா எங்கே என்று தேடத் துவங்கினாள்.

ஆதிநாதனுக்கு துணையாக அவளும் பந்தியில் ஏதோ செய்து கொண்டிருக்க அவர்களது அலுவலக நண்பர்கள் அப்போது தான் விழாவுக்கு வந்து சேர்ந்தனர்.

“காலைல ஃபங்ஷனுக்கு வர சொன்னா மத்தியானம் சோத்துக்கு சரியா வந்திருக்காங்க பாரு” என்று மீரா கிண்டல் அடித்தாள்.

ராம்ஜி அவளை ஒரு முறை பார்த்துவிட்டு நகர்ந்து ஆருத்ராவை சந்திக்க உள்ளே வந்தான். வந்தவன் பெரியவர்களுக்கு முதலில் வணக்கம் சொல்லிவிட்டு அதன் பின் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தான். அவனை மரியாதையாக அமர்த்தி பேசினார் சுபா.

ஆனால் மற்றவர்கள் அனைவரும் கூட்டமாக உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டமாக தனது தோழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதிலும் நித்தின் ஒரு பரிசு பொருளை அவள் கையில் கொடுத்து நண்பன் என்ற முறையில் அவள் பத்திரமாக பிள்ளை பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தனியே வாழ்த்தினான்.

அவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்துச் செல்லும்படி ஆருத்ரா மீராவிடம் கூறும் போது தான் கேத்தரின் வராததை கவனித்தாள்.

“கேத்தி எங்க?” என்று அவள் கேட்டதும் மீரா ‘பிறகு சொல்கிறேன்’ என்பது போல கண் ஜாடை காட்டி விட்டுச் சென்றாள்.

அவர்கள் எல்லாம் கலைந்து போனதும் எழுந்து தன் அறைப்பக்கம் நடக்கவிருந்த மருமகளை நிறுத்தி அவள் அருகில் வந்தார் சுபா.

“இனிமே ஆபீஸ் ஃப்ரண்ட்ஸ்ஸ கூப்டா வெளியில பந்தியிலே போய் பார்த்து பேசி சாப்பிட வச்சு அனுப்பிட்டு வரணும். இப்படி நடுக்கூடம் வரைக்கும் கூட்டிட்டு வரப்பிடாது.” என்று கறாராக சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார்.

அதே நடுக்கூடத்தில் கோகுலின் சீனியர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள் ஆருத்ரா.

அதன் பின் அவள் வெளியே வரவே இல்லை. பாட்டி கிளம்பலாமா என்று கேட்டுக் கொண்டு மாலை அவளுடைய அறைக்கு வந்த போது, எந்த பதிலும் கூறாமல் அமைதியாக தன் கைப்பையையும் மூன்று உடைகளையும் மட்டும் எடுத்து வைத்திருந்த பையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அதனைக் கண்ட சுபா, “என்ன ஒன்னும் எடுத்துக்காம போற?” என்றார் வேகமாக.

அப்போதாவது கணவன் ஏதாவது சொல்வான் என்ற எண்ணத்தில் அவனை பார்த்தாள்.

அவனும் தந்தையோடு இன்னும் யார் யாருக்கு அட்வான்ஸ் போக மீதி தொகையை கொடுக்க வேண்டும் என்று கணக்கு கொடுப்பதில் கவனமாக இருந்தான்.

பாட்டி அவளிடம் “ஊர்ல உன் டிரஸ் புதுசா எதுவும் இல்லையடா? வாங்கிக்கலாமா?” என்று அவள் தலையை வருடி கேட்டபோது,

பேசாமல் பாட்டியுடன் இருந்து விட வேண்டியது தான் இனிமேல் இங்கே இருந்து பிரசவம் பார்க்க வேண்டும் என்று தான் எண்ணக்கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

“பிரக்னன்சி டயத்துல போடுற டிரஸ்ஸ வாங்கிக்கலாம் பாட்டி.” என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு,

“கிருஷ் கொஞ்சம் உள்ள வர்றிங்களா?” என்று அழைத்தாள்.

“நாழி ஆறதும்மா. கொஞ்ச நேரம் போனா எமகண்டம் வந்துவிடும். அதுக்குள்ள கிளம்பணும். அவன்கிட்ட அப்புறம் போன் பண்ணி பேசிக்கோ.” என்று பதில் தந்தது சுபா தான்.

‘அதை நீங்கள் சொல்ல வேண்டாம்’ என்பது போல அழுத்தமான பார்வையை மாமியார் பக்கம் பார்த்துவிட்டு கணவனை பார்க்க அவனும் சங்கடமாக அமர்ந்திருந்தான்.

தான் அழைத்தும் எழுந்து வராத கணவனை கண்டு எரிச்சல் அதிகமானது ஆருத்ராவுக்கு.

தன் கைப்பையை திறந்து மருத்துவ கோப்புகள் இருக்கிறதா என்று சரி பார்த்தாள். மருந்து மாத்திரைகளை பார்த்தாள். அவ்வளவுதான் இனி கிளம்ப வேண்டியதுதான்.

கணவனிடம் இனி எதிர்பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. கிளம்புமுன் கணவனை அணைத்து ஒருமுறை ஆறுதல் தேட துடித்த மனதை இறுகப்பற்றி அடக்கினாள்.

வாசலை நோக்கி நகர இருந்தவள் மனம் கேட்காமல் கணவனை நோக்கி “நான் போயிட்டு வரேன்” என்று கூற அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

ஆதிநாதன் மகனது செய்கை புரியாமல் மருமகளையும் மகனையும் மாற்றி மாற்றி பார்த்தார்.

மாமனாரின் பார்வை உணர்ந்து “அப்பா நான் கிளம்புறேன் பா” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்து விட்டது.

கணவன் பதில் பேசாதது மேலும் அவளை இம்சித்தது. வாசலை நோக்கி நடந்தவள் பின்னால் திரும்பி கணவன் வருகிறானா என்று பார்க்க அவன் அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லை.

ஆதிநாதன் எழுந்து மருமகளோடு வந்தவர் அவள் கையில் இருந்த பையை வாங்கி சந்தானலஷ்மி ஏற்பாடு செய்திருந்த காரில் வைத்தார். மீரா தோழி கிளம்புகிறாள் என்று அருகே வந்தவள் அவளது கணவன் கூட வராமல் இருப்பதைக் கண்டு துணுக்குற்றாள்.

“அண்ணா எங்க?” என்று சத்தமாகவே அவள் கேள்வி எழுப்ப வாசல் படியில் இறங்கி வந்து கொண்டிருந்த சுபா,

“சீமந்தம் முடிச்சு பொறந்த ஆத்துக்கு போறச்சே ஆத்துக்காரன் வாசலுக்கு வந்தெல்லாம் விடை கொடுக்கக் கூடாது. அதான் அவன் உள்ள இருக்கான். பாத்து பத்திரமா போயிட்டு வா” என்று மருமகளிடம் கூறிவிட்டு சந்தானலஷ்மி இடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

மீராவால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை நேரம் இங்கு நடந்த எத்தனையோ விஷயங்களை இவர்கள் வீட்டு சம்பிரதாயம் என்று ஏற்றுக் கொண்டவளால் கிளம்பும் தன் தோழியின் முகத்தில் இருக்கும் சோகத்தை தாங்க முடியவில்லை.

நேராக கோகுல் முன் சென்று நின்றாள்.

“அண்ணா அவ கிளம்புறா. நீங்க இங்க உட்கார்ந்து இருக்கீங்களே!” என்ற கேள்வி எழுப்ப கண்களில் கண்ணீர் தளும்ப அவளை நிமிர்ந்து பார்த்தான் கோகுல்.

“நாம் போயி வழி அனுப்ப கூடாதுன்னு பெரியவங்க எல்லாம் சொல்லும்போது என்ன என்ன பண்ண சொல்ற மீரா?” என்று குரல் கமற அவன் வினவிய போது அவனை கடிந்து எதுவும் கேட்க மீராவுக்கும் மனம் வரவில்லை.

அவள் வெளியே சென்ற போது ஆருத்ராவின் கார் கிளம்பி விட்டிருந்தது. மீரா அதிர்வுடன் ஆதிநாதனிடம் கேட்க,

“நல்ல நேரத்தில் கிளம்பணும்னு சுபாவும் அவங்க பாட்டியும் கிளம்ப சொல்லிட்டாங்கம்மா” என்றவர் குரலில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை.

“என்ன அங்கிள் இதெல்லாம்?” என்று வருத்தத்துடன் அவள் கேட்க,

“நேரம், காலம், சாஸ்திரம், சம்பிரதாயம் அப்படின்னு இந்த பொம்பளைங்க பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நம்ம பிராக்டிகலா ஏதாவது சொன்னாலோ, இல்ல நிதர்சனம்னு ஏதாவது பேசினாலோ குடும்பத்துல சண்டைதான் வரும். அதனாலதான் சில நேரம் பிடிக்குதோ பிடிக்கலையோ பல்ல கடிச்சுட்டு ஆம்பளைங்க நாங்க அமைதியா போயிடுறோம்” என்று எரிச்சலுடன் மனைவியை முறைத்துக் கொண்டே கூறினார்.

சுபா அதை எல்லாம் சட்டை செய்து கொள்ளவே இல்லை. இவ்வளவு தூரம் மங்களத்தின் எண்ணத்தை எடுத்துக் கூறியும் சுபா மாறாமல் இருந்ததில் ஆதிநாதனுக்கு மிகுந்த வருத்தம். அதனால் அவர் அதனை காட்டிக் கொள்ளாமல் மனைவியோடு தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

கோகுல் கார் சென்ற வழியை வெறித்து கொண்டு நின்றான். அவன் மனம் அவன் வசம் இல்லாமல் அவள் பின்னோடு சென்றது போல வெறுமையாய் இருந்தது.

காரில் அமர்ந்திருந்த ஆருத்ராவின் மனமும் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்தது.

தன் கணவன் முதல் நாள் இரவு தான் தூங்கிய பின்னர் தான் வந்திருக்க வேண்டும். காலையும் விடியலுக்கு முன்னரே வளைகாப்பு இருந்ததால் அவனிடம் பேச நேரம் இருக்கவில்லை. சீமந்தம் தொடங்கியது முதலே அவன் அருகில் அமர்ந்து இருந்தாலும் அத்தனை பேருக்கு மத்தியில் அவன் முகத்தை அடிக்கடி பார்த்துக் கொள்ளவோ பேசவோ முடியவில்லை. மிகவும் சோர்வுற்று இருந்ததால் சற்று நேரம் அறையில் படுத்து இருந்தாலாவது கணவன் தன்னை தேடி வருவான் என்று உள்ளே அவள் நெடுநேரம் காத்திருக்க அப்போதும் அவன் வரவில்லை. கிளம்புவதற்கு முன் பேசவும் அவன் வரவில்லை கிளம்பும்போது வழி அனுப்பவும் அவன் வரவில்லை.

இனி அவனிடம் என்ன பேசி என்ன ஆகப் போகிறது? தன் மன உணர்வுகளை இத்தனை தூரம் தான் அவனுக்கு எடுத்துக் கூறியும் புரிந்து கொள்ளாமல் தன்னை ஒதுக்கிய அவனிடம் இனி தனக்கு என்ன இருக்கிறது? என்று வெறுமையாக உணர்ந்தாள்.

பின்னோக்கிச் செல்லும் மரங்கள் அவளை விட்டு விலகி ஓடுவது போல தன் கணவனும் அவளை விட்டு விலகி ஓடியது போலவே அந்த பேதை மனம் ஏதேதோ கற்பனைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டது.

கருசுமக்கும் பெண்ணிற்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் பல. முதல் பிரசவம் எனும் போது இயல்பாகவே ஒரு பெண்ணிற்கு இருக்கும் பயத்தையும் தாண்டி ஆருத்ராவின் மனதில் அந்த பயம் வேரோடிப் போயிருந்தது.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வரை பேத்தியை அவ்வப்போது கவனித்துக் கொண்டும் உண்ண ஏதாவது வாங்கிக் கொடுத்தும் நன்றாகவே கவனித்துக் கொண்டு வந்தார் சந்தானலஷ்மி.

ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவர் சோர்வுறுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

கண்டிப்பாக தன்னுடைய விசேஷத்திற்காக அவர் முன்னரே சற்று அலைந்து திரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களுமே அவருக்கு அந்த வயதில் அதிக அலைச்சலும் சிரமமும் தான்.

இதற்கே அவர் பத்து நாட்கள் உண்டு உறங்கி தன் உடலை கவனித்துக் கொள்ளாவிட்டால் பிரஷர் சுகர் என்று அதிகரித்து மேலும் சிரமப்படுவரே என்று அவர் உடல் நிலையின் மேல் அக்கறை கொண்ட பேத்தியாக மிகவும் கவலை கொண்டாள் ஆருத்ரா.

அவர் இறங்கி அவளுக்கு பால் வாங்கி வருவதாக சொன்னதும்,

“நானே போய் குடிச்சுட்டு வரேன் பாட்டி. வரும்போது உங்களுக்கு டீயா காபியா?” என்று கேட்டுவிட்டு காரில் இருந்து இறங்கி கை கால்களை மெல்ல அசைந்துக் கொடுத்தாள். நெடு நேரமாக பயணம் செய்திருந்ததால் பாதங்கள் இரண்டும் இட்லி போல வீங்கி போயிருந்தது.

இத்தனை நாட்களும் இப்படி வீங்கியிறாத தன் கால்கள் என்று வீங்கி இருப்பதை கண்டு பதறிப்போனாள்.

அவள் பதற்றமான முகம் கண்டு என்னவென்று விசாரித்தவருக்கு அவள் காலைக் காட்டியதும்,

“ஒன்னும் இல்லமா. ரொம்ப நேரமா காலை தொங்கவிட்டு உட்கார்ந்து இருந்த இல்லையா, அதான் நீர் கோர்த்து இருக்கும். வீட்டுக்கு போனதும் வெந்நீர்ல உப்பு போட்டு கொஞ்ச நேரம் கால வெச்சிருந்தா தான்போல  நீரெல்லாம் வடிஞ்சு போயிடும். கவலைப்படாதே, பாட்டி பார்த்துக்கிறேன்” என்று அக்கறையோடு கூறினார்.

இந்த வயதில் இவரை சிரமப்படுத்த வேண்டுமா என்று மிகவும் வருந்தினாள் ஆருத்ரா.

சென்று பாலை அருந்திவிட்டு அவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வந்தவள் மீதி இருந்த தூரத்தை காலை தொங்கவிடாமல் பக்கத்து சீட்டில் சற்று நீட்டி அமர்ந்தபடி பயணித்தாள்.

திருச்சி சென்று இறங்கியதும் இரவென்றும் பாராமல் அண்டைய அயலர் அனைவரும் அவளைக் காண திரண்டு வந்திருந்தனர்.

பயணக் களைப்பு கூட தீராமல் அவர்களை வரவேற்று உணவும் காபியும் கொடுத்து பாட்டி உபசரித்துக் கொண்டிருப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அடிக்கடி உன்னை பார்க்க வருவோம் டி பொண்ணே” என்று ஒரு மாமி சொல்லியதும், பாட்டிக்கு தினமும் இதே வேலையாக போய்விடுமோ தன்னை கவனித்துக் கொள்வதோடு வீட்டிற்கு வருபவர்களை உபசரித்துக் கொண்டிருந்தால் இன்னும் சரியாக கைத்தடி இல்லாமல் நடக்க முடியாமல் சிரமப்படும் இவர் மேலும் உடலை கெடுத்துக் கொள்வாரோ என்று யோசிக்க தொடங்கினாள்.

சாதாரணமாகவே பெண் பிள்ளைகள் தங்களின் மூத்த உறவுகளின் உடல்நிலை பற்றி சிந்திப்பது அதிகமாக இருக்கும். அதிலும் கரு கொண்டிருக்கும் அவள் ஏற்கனவே பல விஷயங்களை உள்ளே போட்டு குழப்பிக் கொண்டிருக்க தன்னால் பாட்டிக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற தேவையில்லாத பயமும் அவளை ஆட்கொண்டது.

அவளுக்கு இருக்கும் ஒரே உறவு வார் தான். அதிகமாக அவரிடம் ஒட்டுதல் இல்லாமல் போனாலும் இன்று தான் இப்படி வாழ காரணம் அவர் தானே! அந்த நன்றி உணர்வு நிறையவே இருந்தது அவளிடம்.

அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக திருச்சியில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்ற முடிவை எடுத்த போது எங்கே செல்வது என்ற கேள்வி அவள் கண் முன்னே பூதாகரமாக எழுந்து நின்றது.

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 23”

    1. Avatar

      Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr 👌👌👌👌👌👌

  1. Avatar

    இந்த கோகுல் இன்னும் அம்மா சொல்லறதுக்கு தலையாட்ட போறானோ … இவனுக்கு ஆருத்ரா உணர்வு புரியல

      1. Avatar

        இந்த மாமியார் மாறவே மாட்டார்களா.ஆருத்ரா பாவம் தான்.கோகுல் அப்புறம் வந்து அழைத்து சென்று விடுவான் என்று நினைக்கிறேன்.

  2. Kalidevi

    Super nice epi kandipa pregnant ah irukum pothu manasula thonurathu tha aaru ku ninaikirathu aana intha gokul amma over ah panranga gokul ku ena achi rna pesinanga therila apadi irukan vera aaru vera romba varutha patutu iruka ena aga potho

  3. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    ஜெயலட்சுமி கார்த்திக்
    (அத்தியாயம் – 23)

    அச்சோ..! இந்த மாமி திருந்தவே மாட்டாங்களோ…? இல்லை, இது தான் இவங்களோட நேச்சுரலோ ? அது சரி, சடங்கு சம்பிரதாயம்ன்னு சொல்லி சொல்லியே நல்லா இருக்கிற ஜோடியை பிரிச்சு வைச்சுடறாங்களே…? போகட்டும், ஆருத்ரா இப்படி கிளம்பி போகறச்ச வழி அனுப்ப கூட வராம, அவ முகத்தை கூட பார்க்க விடாம கோகுலை தடுத்துட்டாங்களே.. ஒருவேளை, இதுவே அவளை பார்க்கறது கடைசியா இருந்தா…. ஒரு பேச்சுக்கு சொல்றேன், அதற்கப்புறம் உட்கார்ந்துட்டு அழுவானோ…? எப்ப ஒரு மனைவிக்கு தைரியம் கொடுக்கணுமோ, ஆறுதலா இருக்கணுமோ… அப்ப அப்படி இல்லாம பண்ணிட்டு பின்னாடி வருத்தப்படறதால யாருக்கு என்ன இலாபம். ஃபாரின்ல எல்லாம் புள்ளை உண்டான நேரத்துல இருந்து டெலிவரி நேரத்துல கூட ஹஸ்பெண்ட் கூடவே இருக்க அலோட் பண்றாங்க. இங்க கூட இப்ப அதெல்லாம் சர்வசாதாரணம் ஆகி்டுச்சு. அதுவும் தவிர குழந்தை உண்டாகி டெலிவரி வரைக்கும் அப்பா முகத்தை பார்த்துட்டே இருந்தா, பிறக்கிற குழந்தை அப்பாவை அப்படியே
    வார்த்தெடுத்த மாதிரி பிறக்கும் என்கிறதும் உண்மை தான்.
    இதுக்கு என்ன சொல்லுவாங்களாம். போங்கடா.. நீங்களும் உங்க சம்பிரதாயமும்….!

    அது சரி, ஆருத்ரா பாட்டிக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறது சரி தான். ஆனா, அதுக்காக இந்த மாதிரி நேரத்துல எதாவது ரிஸ்க் எடுக்கப்போய் விபரிதமாகிடக்
    கூடாது தானே…? அச்சோ.. ்வ என்ன பண்ணப் போறான்னு தெரியலையே…???
    😮😮😮
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    இந்த கோகுல் கிளம்பறத்துக்கு முன்ன அவ கிட்ட ஆறுதலா இரண்டு வார்த்தை பேசி இருக்கலாம்

  5. Avatar

    Sasthiram sambrathaayam ah vida oruthar oda unarvu perusu nu kooda ah va thonala ivangaluku aaru already pregnancy mood swing la irundha atha innum increase panra mathiri la iruku innaiku nadanthathu ellam gokul ah blame panni mattum enna aaga poguthu avanga amma adi avar sonnathu ah yae keka ma than ah ivolo vum panraga

  6. Avatar

    சுபா மாமியை நெனச்சா எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *