Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்-24

மயங்கினேன் நின் மையலில்-24

கிஷோர் பெயரை கேட்டதும் பூஜாவும் தருணும் அதிர்ச்சி அடைய, “அக்கா…. கிஷோர் போட்டோ வச்சிருக்கியா?’ என்று கேட்டாள் பூஜா.

Thank you for reading this post, don't forget to subscribe!

“இல்லடி அவர காதலிச்ச பொண்ணை அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட ஏத்துக்க மாட்டேன்னு சொல்லி  நிராகரிச்சதுனால அவர் மேல இருந்த கோபத்துல அவருடைய எல்லா போட்டோவையும் டெலிட் பண்ணிட்டேன். என்கிட்ட இப்ப அவரோட போட்டோ எதுவுமே இல்ல” என்று சொன்னாள் பூர்ணா.

உடனே தருண் புறம் திரும்பியவளோ “தருண் உங்க தம்பி போட்டோ உங்க போன்ல இருக்கா?”  என்று கேட்டாள்.

“ஆமா இருக்கு பூஜா….”  என்று சொன்னவனோ தன்னுடைய ஃபோனில் கிஷோரின் போட்டோவை தேட ஆரம்பித்தான்.

கிஷோர் போட்டோவை தேடி பிடித்து எடுத்தவனும், பூஜாவிடம் அதை காண்பிக்க, அவன் கையில் இருந்து போனை வெடுக்கின்று பிடுங்கியவளோ பூர்ணாவிடம் அந்த போட்டோவை காட்டி “அக்கா நீ காதலிச்சா கிஷோர் இவர்தானா?” என்று கேட்டாள்.

தருணின் மொபைலில் கிஷோரின் போட்டோவை பார்த்தவளோ அதிர்ச்சியாகி “பூஜா… உன்கிட்ட எப்படி இவரோட போட்டோ? அதுவுமில்லாம தருணோட தம்பின்னு சொல்ற. இங்க என்ன நடக்குது?”  என்று பூர்ணாவோ குழப்பமாக கேட்க

“அப்போ பூர்ணாவை காதலிச்சு ஏமாத்துனது உங்க தம்பி தானா தருண்?” என்று பூஜா அவனை பார்த்து கேட்டாள்.

“எனக்குமே எதுவுமே புரியல பூஜா. என்னோட தம்பி கொஞ்சம் ஜாலியான டைப்.  எல்லா பொண்ணுங்க கூடையும் கிண்டலா பேசுவான். ஆனா இப்படி ஒரு பொண்ணா காதலிச்சு வேணும்ன்னே ஏமாத்துற அளவுக்கு மோசமானவனான்னு எனக்கு தெரியலையே..” என்று தருண் சொல்ல,

“என்ன பேசுறீங்க தருண்?  கூட பிறந்த அண்ணனையே கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் ஏமாத்துனவன். அவனா ஒரு பொண்ண ஏமாத்திருக்க மாட்டான்?”  என்று பூஜாவோ அளவு கடந்த கோபத்தோடு கேட்டாள்.

பூஜா சொல்வதை பொறுமையாக கேட்டவனோ “இருக்கலாம் பூஜா… அவன் பூர்ணாவை ஏமாத்தி தான் காதலிச்சு இருக்கான். எல்லா கம்பெனிசும் நான் தான் ரன் பண்ணிட்டு இருந்தேன். ஆனா பூர்ணா கிட்ட அவன் ரன் பண்ணிட்டு இருந்தா சொல்லி இருக்கான். சின்ன சின்ன கம்பெனிஸ்க்கு நான் வேலை விஷயமா அவனை தான் அனுப்பி வைப்பேன். அப்படி ஏதோ ஒரு வேலை விஷயமா போனப்ப தான் பூர்ணா கம்பெனிக்கு போயிருப்பான் போல. இப்போ தான் எனக்கு எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா புரிய வருது” என்று தருண் என்று சொன்னான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனும் “அப்போ பூர்ணாவ ஏமாத்துனது இவரோட தம்பி தானா?” என்று பூஜாவை பார்த்து கேட்டான்.

அதைப் பார்த்த தருணும் “இல்ல… பூர்ணாவை ஏமாற நான் விடமாட்டேன். கண்டிப்பா என்னோட தம்பி கிட்ட பேசி பூர்ணாவுக்கு கிஷோருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று சொன்னான்.

தருண் சொன்னதை கேட்டு எரிச்சல் அடைந்த பூஜாவும் “என்ன தருண் பேசுறீங்க நீங்க? அக்கா சொல்றது, நீங்க சொல்றதை எல்லாம் வச்சு பார்க்கும்போது கிஷோர் அக்காவை மட்டும் லவ் பண்ணி ஏமாத்திருப்பான்ன்னு நினைக்கிறீங்களா? அக்காவை மாதிரி எத்தனையோ பொண்ணுங்களை லவ் பண்ணி ஏமாத்திருப்பான். அப்படி இருக்கும் போது எல்லா பொண்ணுங்களையும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? அது மட்டும் இல்லாம இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்ணா அக்காவோட வாழ்க்கை எப்படி இருக்கும்? உங்க தம்பி எவ்வளவு மோசமானவன்ன்னு  உங்ககிட்ட ஏமாத்தி சொத்தை எழுதி வாங்கும் போதே பாத்துட்டேன். இதுக்கு அப்புறம் அப்படி ஒரு கேவலமான ஜென்மத்தை நம்பி எங்க அக்காவ கல்யாணம் பண்ணி வைக்க முடியாது.”  என்று பூஜாவோ அழுத்தமாக சொல்லிவிட்டாள்.

“இந்த விஷயத்தை பொறுத்த வரைக்கும் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க போறது இல்ல பூஜா. உங்களுக்கு இன்னும் என்னை பத்தி முழுசா தெரியல. இந்த தருணோட இன்னொரு முகத்தை நீங்க இன்னும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. நான் சொன்னா சொன்னது தான். கண்டிப்பா பூர்ணாவுக்கும்  கிஷோருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன். இப்போ நீங்க கூட இருந்து பூர்ணாவை  பாத்துக்கோங்க.  டிஸ்சார்ஜ் ஆனதும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம். அப்புறம் பொறுமையா நேரம் பார்த்து உங்க அப்பா அம்மா கிட்ட  பேசி  உங்க வீட்ல பூர்ணாவை விட்டுறலாம். புரியுதா?” என்று சொன்னவனும் பூஜாவின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து வெளியே போய்விட்டான்.

தருணுக்கு இப்படியும் பேசத் தெரியும் என்பதை இப்பொழுதுதான் பார்க்கிறாள் பூஜா. அவன் பேசுவதற்கு எந்த வித பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்து விட்டாள்.

இப்பொழுது தன் அக்காவின் அருகில் உட்கார்ந்தபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தருண் வேகமாக வெளியே செல்வதை பார்த்த கண்ணணோ அவன் பின்னாலேயே போனான்.

“தருண்….”  என்று கண்ணன் அழைத்ததும் அவன் புறம் திரும்பினான் தருண்.

தருண் என்ன என்பது போல் பார்க்க, “நீங்க சொன்னது எல்லாம் உண்மையா? கிஷோர் கிட்ட பேசி பூர்ணாவுக்கு  கல்யாணம் பண்ணி வச்சுருவீங்களா?” என்று கேட்டான் கண்ணன்.

“ஆமா கண்டிப்பா…. தப்பு பண்ணது என்னோட தம்பின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படி என்னால அவனை திருத்தாம இருக்க முடியும் சொல்லுங்க? கண்டிப்பா நான் பூர்ணாவுக்கும் கிஷோருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்று சொன்னான் தருண்.

“ரொம்ப தேங்க்ஸ் தருண். இந்த விஷயத்துல உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா கண்டிப்பாக என்கிட்ட சொல்லுங்க. பூர்ணாவுக்காக நானும் என்னால முடிஞ்ச உதவியை பண்றேன்.”  என்று கண்ணன் சொன்னதும் அவன் சொன்ன வார்த்தைகள் தருணுக்கு வியப்பாக இருந்தது.

“சரி உங்க பேர் என்ன” என்று கேட்டான் தருண். பூஜாவின் மொபைலில் மை லைஃப் என்று தானே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் தருணுக்கு கண்ணனுடைய பெயர் தெரியவில்லை.

“கண்ணன்…”  என்று சொன்னான் அவன் புன்னகையோடு.

“அது சரி….. உங்களுக்கு எப்படி பூர்ணாவை தெரியும்? பூர்ணாவை எப்போ நீங்க பார்த்தீங்க?”  என்று தருண் கேட்டிட, செழியனுக்கும் பூர்ணாவுக்கும் திருமணம் நிச்சியமானது முதல், போலீசில் அடி வாங்கியது வரைக்கும் எல்லா விஷயங்களையும், பூஜா விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களை தருணுடன் பகிர்ந்து கொண்டான் கண்ணன்.

“வாவ் ….கிரேட்…. உங்கள நினைச்சா எனக்கு அவ்ளோ பெருமையா இருக்கு. தன்னோட அண்ணனை வேண்டாம்ன்னு சொல்லி தூக்கி போட்டுட்டு போன பொண்ணுக்காக இவ்வளவு பண்ணி இருக்கீங்க. அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க போய் அடி வாங்குவதெல்லாம் ஹைலைட்.  எந்த பையனும் இப்படி பண்ணி இருக்கவே முடியாது. ஆனால் இதுல எனக்கு ஒரே ஒரு சந்தேகம் கண்ணன். பூர்ணாக்காக நீங்க எதுக்காக இதெல்லாம் பண்ணனும்?”  என்று இப்பொழுது அவனுக்கு தேவையான விஷயத்தை மறைமுகமாக அறிந்து கொள்ள துணிந்தான் தருண்.

“பூர்ணான்னு இல்ல…. எனக்கு தெரிஞ்ச எந்த பொண்ணா இருந்தாலும் அந்த இடத்துல நான் அப்படித்தான் உதவி பண்ணிருப்பேன். ஏன் நீங்க அப்படி உதவி பண்ணியிருக்க  மாட்டீங்களா தருண்?”  என்று கண்ணனும் திருப்பி கேட்க

“கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச பொண்ணா இருந்தா உதவி பண்ணி இருப்பேன். ஆனா உங்க அளவுக்கு பண்ணிருப்பேனானு எனக்கு தெரியல. எனக்கு தெரிஞ்ச பொண்ணா இருந்து, பஸ்ல இப்படி பார்த்திருந்தேன்னா முதல் வேலையா அவங்க வீட்டுக்கு  போன் பண்ணி அவங்க பேரன்ஸ் கூடவே அனுப்பி வச்சிருப்பேன். உங்கள மாதிரி கூட தங்க வச்சு இப்படி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்க மாட்டேன்ன்னு நினைக்கிறேன். ஆனால் உண்மையாலுமே நீங்க கிரேட் தான்” என்று அவனை பெருமையாய் பேசினான் தருண்.

“இதுல பெருமைப்பட என்ன இருக்கு? ஒரு சக மனுஷனா ஒரு பொண்ணோட நிலைமையை அந்த இடத்தில புரிஞ்சு நடந்திருக்கேன். அவ்வளவு தான். வேற எதுவும் இல்ல”  என்று கண்ணன் சொன்னதும் “சரி கண்ணன்…. நீங்க எங்க ஒர்க் பண்றீங்க?”  என்று கேட்டான்  தருண்.

“பெங்களூர்ல  தான்”  என்று சொல்லியவனோ “நீங்க…?”  என்று கேட்டான்.

தருண் தன்னுடைய தம்பி கிஷோரை பற்றியும், சமீப காலமாக அவன் வாழ்க்கையில் நடந்த குழப்பங்கள் பற்றியும் கொஞ்சம் கூட யோசிக்காமல் கண்ணனிடம் பகிர்ந்து கொண்டான்.

அதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணனும் “என்ன சொல்றீங்க? இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன? ஆனா கிஷோர் இவ்வளவு கேவலமானவன்னு சொல்றீங்க, ஆனா அவரு கூட எப்படி பூர்ணாவை சேர்த்து வைக்க முடியும்?”  என்று கண்ணனும் புரியாமல் கேட்டுவிட

“நீங்க என்ன என்னோட தம்பியை கேவலமானன்னு எல்லாம் சொல்றீங்க? அவன் ஒன்னும் இந்த மாதிரி குணத்தோடயே பொறக்கல. சமீபகாலமா அவன் கூட இருக்கவங்க சரியில்ல. அதனால தான் இப்படி எல்லாம் நடந்துக்குறான். அது மட்டும் இல்லாம பூர்ணாவை காதலிச்சு ஏமாத்திட்டு, இப்போ என்னோட அத்தை பொண்ணு ஆதிராவை கல்யாணம் பண்ணிக்க போறான். ஆதிராவும் பூர்ணா  மாதிரியே ரொம்ப நல்ல பொண்ணு தான். இப்போ பூர்ணா கூட சேர்ந்து ஆதிரா வாழ்க்கை நாசமாகிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஆதிரா என்னோட கூட பொறந்த தங்கச்சி மாதிரி. ஆனா அவளோட வாழ்க்கையை எப்படி கிஷோர் கெடுக்க நினைக்கிறான்? அதான் எனக்கு புரியல. ஆனா கூட பிறந்த அண்ணனையே ஏமாத்துனவன் ஆச்சே… அவனுக்கு ஆதிரா எல்லாம் எவ்வளவு சின்ன விஷயம்?”  என்று அவன் கேட்ட கேள்விக்கு அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.

“என்னமோ தருண்… பூர்ணாவோட வாழ்க்கை சரியானா எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்”  என்று கண்ணன் சொன்னதும் “நீங்க பூர்ணாவோட வாழ்க்கைக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்களே…. உங்க அண்ணனோட வாழ்க்கை இப்போ எப்படி இருக்கு? அவருக்கு வேற பொண்ணு எதுவும் பாக்கறீங்களா?” என்று கேட்டான் தருண்.

“இல்ல தருண்…. இப்போதைக்கு அண்ணன் இன்னொரு கல்யாணத்துக்கு தயார் ஆகல. ஏற்கனவே பட்ட கஷ்டத்த அவனால இன்னும் மறக்க முடியல. அதனால இப்போதைக்கு யாரும் கல்யாணம் பத்தியும் பொண்ணு பத்தியும் பேச்சு எடுக்கிறதாவே இல்ல. எதுவா இருந்தாலும் நடக்கும் போது நடக்கட்டும்” என்று விரகத்தியாய் சொன்னான் கண்ணன்.

இவ்வளவு நேரம் கண்ணன் பேசுவது எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த தருணோ, இப்பொழுது அவனுக்கு தேவையான விஷயத்தை நேரடியாகவே அறிந்து கொள்ள முயற்சி செய்தான்.

“நீங்க பேசுறதை வெச்சு உங்களோட குணம் எனக்கு நல்லாவே புரியுது. ஆனா எனக்கு இன்னும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் பாக்கி இருக்கு” என்று தருண் சொன்னதும் “என்ன தருண் கேளுங்க?’  என்று கேட்டான் கண்ணன்.

“உங்களுக்கும் பூஜாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று தனக்கு வேண்டிய கேள்வியை நேரடியாகவே கண்ணனிடம் கேட்டு விட்டான் தருண்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *