மகிழ் மனதில் எப்படியாவது முகில் விரும்பும் பெண்ணை முகிலிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினான் பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் பிறகு வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்தும் சாப்பிட்டார்கள் சாப்பிட்டுவிட்டு எழில் மொட்டை மாடிக்கு சென்று விட்டான் இவனை எப்படியாவது சரி செய்து ஆக வேண்டும் முகிலை விட எழில் தான் ரொம்ப ஒரு மாதிரியாக இருக்கிறான் என்று எண்ணினான் மகிழ் எழிலை பார்க்க மொட்டை மாடிக்கு சென்றான் அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் மகா அவளுடைய அறைக்கு சென்று விட்டாள் இதில் முகில் நிலாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழ் சென்று எழிலிடம் டேய் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நான் தான் இதை எப்படியாவது சரி செய்கிறேன் என்று சொன்னேன் அல்ல அதன் பிறகும் நீ ஏன் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்றான் இல்லடா அண்ணா எனக்கு அதிகமாகவே பயமாக இருக்கிறது எங்கு அவன் காதலை இழந்து விடுவானோ என்று என்றான் டேய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தானே சொல்கிறேன் நம் வீட்டில் பேசிவிட்டு அவர்கள் வீட்டில் பேசலாம் எனக்கு ஒரு இரண்டு நாட்கள் டைம் கொடுங்கடா நான் அந்த பெண்ணுடைய தாய்மாமாவை பற்றி விசாரித்துவிட்டு தானே அடுத்த வேலை பார்க்க முடியும் எந்த ஆதாரமும் இல்லாமல் நாம் அந்த பெண் வீட்டில் சென்று பேச முடியாது அல்லவா நம் வீட்டிலும் பேசுவதற்கு ஏதாவது ஆதாரம் வேண்டும் அல்லவா கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என்றான் நீ சொல்வதெல்லாம் எனக்கு புரிகிறது ஆனால் என் மனதிற்கு புரியவில்லை என்றான் டேய் முகில் தான் அந்த பெண்ணை விரும்புகிறான் நீ என்னவோ இவ்வளவு பயந்து கொண்டிருக்கிறாய் என்றான் அண்ணா உனக்கு ஒன்று புரிகிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை உன்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய தவறு நடந்து இருந்தாலும் என்று விட்டு தனது அண்ணனைப் பார்த்தான் அவன் அமைதியாக எழிலை தான் பார்த்துக் கொண்டிருந்தான் பிறகு எழில் ஆரம்பித்தான் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய தவறு நடந்து இருந்தாலும் உன்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல மகா உடைய வாழ்க்கை மட்டும் இல்லை அதில் கயலுடைய வாழ்க்கையும் சேர்ந்து பாதித்திருக்கும் அதை மறந்து விடாதே நீயும் மகாவும் வேண்டுமானால் இந்த குடும்பத்திற்காக உங்களது காதலை விட்டுக் கொடுத்திருந்திருக்கலாம் ஆனால் கயல் என்ன செய்தால்அவளைப் பற்றி யோசித்து இருக்கிறீர்களா இருவரும் இப்பொழுது கூட நீங்கள் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் பெத்து தாயிடமே நிறைய சாபங்களை வாங்கிக்கொண்டு இத்தனை உறவுகள் இருந்தும் ஏதோ அனாதை போல் திருமணம் செய்து கொண்டு மனதில் ஆயிரம் வலிகள் உடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் எனக்கு அதுவே வருத்தமாக தான் இருக்கிறதுநீ கொஞ்சம் நாட்களாகினும் உன்னுடைய காதலை எங்கு இழந்து விடுவோம் என்று எப்படி பதறி இருப்பாய்? அதே போல் தானே மகாவிற்கும் இருந்திருக்கும் உங்கள் இருவரையும் விட கயல் உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று எப்படி எல்லாம் நினைத்து இருப்பாள் அதற்காகவே முதலிலே தன்னுடைய காதலை வீட்டில் சொல்லாமல் மறைத்து பந்த கால் நடுவரை வந்து அதன் பின்பு உங்களுக்காக அவள் காதலை கரம் பிடித்திருக்கிறாள் அதை நினைத்தாலே இப்பொழுது கூட எனக்கு நடுங்குகிறது அதேபோல் சூழ்நிலை முகிலுக்கும் வந்தால் என்று யோசித்துப் பார் அதை விட காவேரி அத்தையை பற்றி யோசித்தாயா ஏற்கனவே ஒரு மகள் இப்படி செய்து விட்டு சென்றிருக்கிறார் என்ற வருத்தம் அவர்கள் மனதில் இப்பொழுது வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படி இருக்கும் சூழ்நிலையில் முகில் விரும்பும் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ளாமல் அவன் நடப்பினமாக வாழ்ந்தால் காவேரி அத்தைக்கு முகிலுடைய விருப்பம் தெரிய வந்தால் அதன் பிறகு காவேரி அத்தை பற்றியும் யோசித்துப் பார்த்தாயா எனக்கு அவனுடைய காதல் கை கூட வேண்டும் என்று எண்ணமும் இருக்கிறது மொத்த குடும்பத்தின் மேல் இருக்கும் பாசத்தில் பயமும் இருக்கிறது எங்கே அவனுடைய காதல் கைகூடாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு அவன் காதலித்தது தெரிய வந்தது அந்த காதல் கைகூடவில்லை என்று தெரிந்தால் வீட்டில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு வருந்துவார்கள் ஏற்கனவே கயல் விஷயத்தில் வருந்தி கொண்டு தான் இருக்கிறார்கள் என்றான் மகிழ் இந்த அளவுக்கு டீப்பாக யோசிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் அவனும் முகிலுடைய காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணி நானே தவிர இந்த அளவிற்கு அவன் யோசிக்கவில்லை அப்பொழுது மகாவும் இவை அனைத்தையும் யோசித்து தான் இப்பொழுது பயத்தில் இருக்கிறாளா என்று யோசித்தான் பிறகு இப்பொழுது நாம் மகாவை பார்ப்பது ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்தான் அதன் பிறகு தான் என்ன அண்ணா யோசிக்கிற என்றான் மகிழ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவுடன் தான் இவ்வளவு தூரம் பேசிய பிறகு தனது அண்ணன் முகத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வை பார்த்துவிட்டு அண்ணா நீ போய் இப்போது மகாவை பாரு என்று விட்டு வேகமாக அப்படியே இறங்கி கீழே அவனது அறைக்கு சென்று விட்டான் அவன் சென்றவுடன் மகிழ் வேகமாக அவனுடைய அறைக்குச் சென்றான் அவன் செல்லும் பொழுது எப்பொழுதும் தான் படுக்க சொன்னால் கூட கட்டிலில் படுக்காதவள் இன்று தான் சொல்லாமலே இன்று தன்னுடைய கட்டிலில் படுத்திருப்பதை பார்த்தவுடன் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது எந்த அளவுக்கு இவளுக்கு வலி இருந்தால் இப்படி படுத்து இருக்கிறாள் என்று எண்ணி விட்டு வேகமாக சென்று அவளது அருகில் உட்கார்ந்து மகா என்றான் அவன் வந்து உட்காந்தவுடன் அவனது மடியில் தனது தலையை சாய்த்துக் கொண்டு மாமா என்றால் மயிலு என்னடி எதையாவது நினைச்சுட்டே இருக்க என்றான் எதுவும் இல்லை மாமா ப்ளீஸ் நான் இப்ப எதுவும் பேச விரும்பல என்றால் அவனுக்கு ஒரு மாதிரியா இருந்தது அவன் வேகமாக மயிலு என்றாள் மகா மகிழ் வயிற்றை கட்டி அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் சரி இப்பொழுது இவள் தூங்கி எழுந்தால் கொஞ்சம் சரியாக வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அவளது தலையை கோதிக் கொண்டே மனதில் முகிலுக்காக இல்லை என்றாலும் இவர்கள் இருவருக்காகவும் இந்த வீட்டிற்க்காகவும் அவனுடைய காதலை முதலில் சேர்த்து வைக்க வேண்டும் நாளை முதல் வேலையாக முகில் காதலிக்கும் அந்த பெண்ணின் தாய் மாமாவை பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே மகாவை பார்த்தான் மகாவிடம் சிரான மூச்சு இருப்பதை உணர்ந்து விட்டு அவளை தனது அருகில் உள்ள தலை காணியில் படுக்க வைத்து விட்டு அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தான் எத்தனை மாதங்கள் ஆகிறது டி நான் உனக்கு இது போல் முத்தம் கொடுத்து இத்தனை நாட்களிலும் ஆசையாக கொடுத்த முத்தம் ஆனால் இன்று என்று எண்ணி தன் கண்ணில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரையும் துடைத்து விட்டு அவளை பின் பக்கம் இருந்து கட்டி அணைத்துக் கொண்டு மகிழும் படுத்தான் மறுநாள் காலையில் மகா சிறிது தெளிவு பெற்று இருந்தால் என்று தான் சொல்ல வேண்டும் எப்படியாவது தன்னுடைய மகிழ் மாமா இதை சரி செய்து விடுவார் அது மட்டும் இல்லாமல் இன்னும் ஒரு மாத காலங்கள் இருக்கிறதே என்று எண்ணினால் அதே போல் தான் எழிலும் எண்ணினான் அதனால் இருவரும் எப்பொழுதும் போல் இருந்தார்கள் எங்கே தங்களுடைய வருத்தத்தை வெளியே காட்டிக் கொண்டால் வீட்டில் உள்ளவர்கள் தங்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்று இருவருமே எண்ணினார்கள் அதனால் இருவரும் எப்பொழுதும் போல் இருந்தார்கள் நிலாவை இரண்டு நாட்களாக முகில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லவில்லை வேலு உடனே கல்லூரிக்குச் சென்றுவிட்டு வேலு உடனே வீட்டுக்கும் வந்து விட்டாள் இப்படியே இரண்டு நாட்களும் சென்றது இரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை வேளையில் எழிலும் மகாவும் மகிழுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் மாலை 7 மணி போல் தான் அன்று மகிழ் வீட்டிற்கு வந்தான்சுந்தரி வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரையும் கவனித்தார் நிலா எப்பொழுதும் போல் இருப்பது போல் தான் அவருக்கு தெரிந்தது இனி உதிரன் இருவருக்கும் இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை என்று சுந்தரியே உணர்ந்திருந்ததார் அவர்களிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை மற்ற நால்வரின் முகமும் சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்தாலும் அவர்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று எண்ணினார் இன்று தன்னிடம் தன்னுடைய பெரிய மகன் ஏதோ ஒன்று சொல்கிறேன் என்று சொன்னானே அவன் எப்போது வருவான் என்று அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார் அவனும் இரவு 7:00 மணி போல் வீட்டிற்கு வந்தான் சுந்தரி தான் டீ போட்டுக் கொடுத்தார் இந்த இரண்டு நாட்களில் மகா வீட்டில் எந்த வேலையும் செய்யவில்லை காவேரி கூட சுந்தரி இடம் கேட்டார்மகா எங்கே சுந்தரி இரண்டு நாட்களாக காணவில்லை என்று அதற்கு சுந்தரி சிரித்துக் கொண்டே என்ன அண்ணி அவளுக்கு உடம்பு ஒன்னும் முடியலை தினமும் நின்று கொண்டு கிளாஸ் எடுக்கிற இல்ல அது மட்டும் இல்லாமல் வீட்டிலும் அடிக்கடி விசேஷம் வந்தது இல்லையா அவள் தானே அனைத்தையும் கவனித்து கொண்டாள் அதான் அசதியாக இருக்கிறாள் என்றார்இனியும் அவள் தானே இந்த வீட்டின் மொத்த பொறுப்பையும் பார்த்துக் கொள்ள போகிறாள் என்றார் காவேரியும் சிரித்துக்கொண்டே அமைதியாகிவிட்டார் என்ன உன் மருமகளுக்கு சப்போர்ட்டா என்று கேட்டுவிட்டு அப்புறம் நான் சப்போர்ட் செய்யாமல் வேறு யாரு செய்வார்கள் என்று விட்டு அமைதியாகிவிட்டார் சுந்தரியும் மகிழ் வந்துடன் சுந்தரி டீ கொடுத்தார் மகாவும் எழிலும் மகிழ் எப்பொழுது தனியாக கிடைப்பான் அப்போது பேசலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள் அனைவரும் வரவேற்பு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த பெரிய வீட்டிற்கு இளவேனில் தந்தை ராமு தாய் வசந்தி இருவரும். வந்தார்கள் அப்பொழுது கருப்பையா தாத்தா தான் என்ன ராமு இந்த நேரத்துல அதுவும் வீட்டுலையும் கூட்டிட்டு வந்து இருக்க என்று கேட்டார் ஐயா முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லானும் அதான் அவளையும் கூப்பிட்டு வந்து உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு என்றார் என்னப்பா அப்படி முக்கியமான விஷயம் அதுவும் ராத்திரியில என்று கேட்டார் ரொம்ப முக்கியமான விஷயம் தான் அதான் என்றார் சரி என்னையா என்று கேட்டார் கருப்பையா தத்தா அய்யா தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு தான் உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன்அவளுக்கு நாளை காலை கல்யாணம் வச்சிருக்கோம் என்றார் அப்பொழுது நிலா தான் வேகமாக அதிர்ச்சியாகி என்ன இளவேனிலுக்கு நாளைக்கு திருமணமா என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரும் இவள் ஏன் அதற்கு இவ்வளவு அதிர்ச்சியாகி கேட்கிறாள் என்று நிலாவையே பார்த்தார்கள்..நிலா ஏன் இவ்வளவு அதிர்ச்சியானால் அனைவரையும் விட ..முகில் இளவேனில் என்ற பெண்ணை தான் விரும்புகிறான் என்று வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்…மகிழ் மகா இருவரும் இளவேனில் திருமணத்தை நிறுத்துவார்களா..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
Acho ena ithu ippadi avasara kalyanam panranga ipo magizh ena seiya pora 2 naal time edutha ilavenil veetla ippadi panitangale
Interesting
அய்யய்யோ..! என்ன இப்படி குண்டைத் தூக்கி போட்டுட்டாங்க…? இப்ப முகில் இளவேணில் கல்யாணம் நடக்குமா..? நடக்காதா…???