Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 46

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 46

வேணி சமையலறைக்குள் நுழையும் வேளையில் காவேரி நீ இங்கு எதற்காக வந்தாய் வெளியே போ என்று உடன் வீட்டில் அனைவரும் காவேரியை பார்த்தார்கள் பிறகு வேணி எங்கு  இவர் தன்னை இவருடைய மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லையோ என்று பயந்தாள் அப்பொழுது காவேரி சிரித்துக் கொண்டே நான் உன்னை இங்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை இன்று தான் உனக்கு திருமணம் ஆகி இருக்கிறது அதனால் இப்பொழுதே வேண்டாம் என்றுதான் சொன்னேன் தவறாக எடுத்துக் கொள்ளாதே என்றார் சிரித்துக்கொண்டே வேணி ஒரு நிமிடம் அவரை பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றால் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி அதுக்கு ஏண்டி அப்படி சொல்கிறாய் என்றார் அப்பொழுது மகா சிரித்துக்கொண்டு பெரியம்மா வேணியிடம் விளையாடுகிறார்கள்இதில் என்ன பெரியம்மா இருக்கிறது என்று விட்டு நீ வா என்று வேணியை  அழைத்துக் கொண்டு சமையல் அறைக்கு சென்று அவளுக்கும் ஒரு சில வேலைகளை கொடுத்தால் அவளும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தால் அப்பொழுது மகா தான் பெரியம்மா ப்ளீஸ் அவளை இந்த வீட்டில் அவளாக இருக்க விடுங்கள் அவள் இங்கு பயந்து கொண்டு இருக்க வேண்டியதில்லைஇன்னும்  அவள் ஒன்றும் விருந்தாளி அல்ல இந்த வீட்டுப் பெண் அவள் என்ன செய்ய நினைக்கிறாளோ அதை செய்ய விடுங்கள் அதேபோல் அவள் தவறு செய்தால் தட்டி கேளுங்கள் தவறில்லை நீங்களும் அவளிடம் இந்த வேலை செய் அந்த வேலை செய் என்று உரிமையாக நடந்து கொள்ளுங்கள் என்றால்  அனைவரிடம் அனைவரும் மகா சொல்வதும் சரி என்பதால் அவளை அவள் போக்கில் விட்டார்கள்வீட்டில் உள்ள அனைவரும் அதை செய் இதை செய் என்று அவளுக்கு ஒவ்வொரு வேலையாக வைத்துக் கொண்டிருந்தார்கள் அவளும் சலைக்காமல் அவளால் முடிந்த வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் அப்போது நிலா தான் சிரித்துக் கொண்டே வந்து நீ இந்த வீட்ல யாரு என்று கேட்டால் வேணி சிரித்துவிட்டு ஏன் நான் யாரென்று உனக்கு தெரியவில்லையா என்று கேட்டால் சரி நீயும்  இந்த வீட்டில் ஒரு பொண்ணு தானே ஒன்னும் தப்பு இல்ல உனக்கு வேலை வைக்கணும் என்று தானே அக்கா சொல்லுச்சு என்றால் ஆமா அதுக்கு என்ன இப்போ என்று வேணி சிரித்துக் கொண்டே கேட்டாள்  நிலாவிடம் மட்டும் தான் அவள் சகஜமாக பழகினால் என்று தான் சொல்ல வேண்டும் நிலா சிரித்துக் கொண்டே சரி அப்ப எங்க அண்ணனோட டிரஸ்ஸை துவைத்து போடு என்றால் வேணி அதிர்ச்சி ஆகி பார்த்தால் வீட்டில் அனைவருக்கும் சிரிப்புதான் வந்தது நிலா அவ்வாறு சொன்னவுடன் அப்பொழுது முகில் தனது தங்கையிடம் இருக்கும் துணியை அவளிடம் இருந்து வாங்கி நானே துவைத்து கொள்வேன் என்றான் அப்போது வேணி இல்ல பரவால்ல என்று முகிலிடம் சொல்லாமல் நிலாவிடம் இருந்து அந்த துணிகளை வாங்கிக் கொண்டாள் பிறகு நிலாவை பார்த்து சரி துவச்சிட்டா போச்சு இதில் என்ன இருக்கிறது என்றால் சரி என்று வாங்கியும் கொண்டல் அப்போது நிலா அப்படியே என் துணியும் துவைத்தால் கூட கொஞ்சம் நல்லா இருக்கும் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை முறைத்தார்கள் சரி எடுத்துட்டு வாடி துவைத்து தருகிறேன் என்றால் நிலா சும்மா சொன்னேன் நீ அண்ணனுடையது மட்டும் துவச்சா போதும் என்றால் அப்போது மகா தான் அவள் விளையாட்டுக்கு சொல்றா துவைக்க சொல்லி உன்னுடைய விருப்பம் டா நீ அண்ணன் துணியை துவைப்பதும் துவைக்காமல் இருப்பதும் ஆனால் இப்பொழுது எதுவும் செய்ய வேண்டாம் இது சாப்பாட்டு நேரம் இப்பொழுது சாப்பிடலாம் சாப்பிட்ட பிறகு துவைக்கிறதை பற்றி யோசிக்கலாம் என்று வேணி கையில் இருக்கும் துணிகளை மகா வாங்கி ஒரு இடத்தில் வைத்தால் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்கள் பெரியவர்கள் அனைவருக்கும் சாப்பிட்ட பிறகு அசதியாக இருப்பது போல் இருந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறோம் என்று அனைவரும் அவர்கள் அறைக்குச்  செல்லும் பொழுது மகிழ் தான் வேணி என்று அழைத்தான் வேணியும் என்ன அண்ணா என்று கேட்டால் இந்த என்று அவளது கையில் ஒரு ஐந்து ஆறு சுடிதார் செட்டை வைத்தான் வேணி  என்ன அண்ணா என்று கேட்டால் அப்பொழுது மகிழ் காலேஜுக்கு போட்டு போக சுடிதார் அது மட்டும் இல்லாமல் எவ்வளவு நேரம் நீ சேரியிலே இருப்பாய் இந்தா சுடிதார் என்று கொடுத்தான் அவன் காலேஜுக்கு என்று சொன்னவுடன் வேணி மகிழையே பார்த்து கொண்டிருந்தான் மகிழ் தான் சிரித்துக் கொண்டே ஏன் உனக்கு காலேஜுக்கு செல்கிற ஐடியா இல்லையா என்று கேட்டான் இல்லை அண்ணா  ஆனால் இப்பொழுதே என்று விட்டு அமைதியாகி நிறுத்தி விட்டாள் இப்போதே என்ன வேணி திருமணம் ஆகிவிட்டது என்றெல்லாம் போகாமல் இருக்க வேண்டாம் நாங்கள் உன்னை படிக்க வைக்கிறோம் என்று சொன்னது உண்மைதான் அதேபோல் உன்னுடைய படிப்பு கெடும் அளவிற்கு நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் நீ எப்பொழுதும் போல் கல்லூரிக்கு செல்லலாம் என்றான் உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா என்று கேட்டான் தெரியுமே ஏன் என்று கேட்டாள்இல்லடா நாளைக்கு காலேஜுக்கு போறதுக்கு என்றான் வேணி ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு நாளைக்கே வா என்றால் ஆமாண்டா இதுல என்ன இருக்கு என்றான் இல்லன்னா இன்னைக்கு தானே கல்யாணம் ஆகி இருக்கு என்றாள் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் உனக்கு திருமணம் ஆகி விட்டது என்பதால் உன்னுடைய படிப்பு கெட வேண்டாம் மாநான் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் நாம் குலதெய்வ கோவிலுக்கு மட்டும் சென்று விட்டு வரலாம் நீ எப்பொழுதும் போல் காலேஜுக்கு சென்று வா என்றார் அவளும் சரி என்று விட்டு அமைதியாகி விட்டால் என்னுடைய புத்தகங்கள் எல்லாம் அம்மா வீட்டில் இருக்கிறது என்றால் மகிழ் தான் ஒன்றும் பிரச்சனை இல்லை எடுத்துக் கொள்ளலாம் என்றான் அண்ணா காலேஜில் வந்து பேசணும் என்றால் மகிழிடம் மகிழ் சிரித்துக் கொண்டே எனக்கும் தெரியும்டா அப்பா வந்து காலேஜில் பேசுவார்கள் என்றான் அப்பா வந்து பேசட்டும் ஆனால் என்று அமைதியாகிவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு நிலாவுடைய அண்ணனும் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து விட்டு அவரும் வரவேண்டும் அல்லவா என்றால் மகிழ் சிரித்துக்கொண்டே முகிலும் வருவான் அப்பா வந்து உன்னை சொல்லி விட்டு வருவார் என்றான் அப்பொழுது மணியும் கந்தனும் ஏன் நாங்கள் எல்லாம் வர வேண்டாமா உன்னுடைய புருஷனும் உன்னுடைய அப்பாவும் தான் வரவேண்டுமா என்று சிரித்துக் கொண்டே கேட்டார்கள் மாமா நீங்கள் மூவரில் யார் வந்தாலும் எனக்கு ஓகே தான் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனால் அவரும் வர வேண்டும் என்றால் மகிழ் மணியைப் பார்த்து மாமா நீங்க வேண்டுமானால் போய்விட்டு வருகிறீர்களா என்றான் அப்பொழுது மணி இல்ல மகிழ் வேலு மாமாவே போய்ட்டு வரட்டும் நான் போல என்றான் ஏன் மாமா எதாவது முக்கியமான வேலை இருக்கிறதா என்றான் முக்கியமான வேலை என்று இல்லை இருந்தாலும் மாமாவே அழைத்துக் கொண்டு சென்று கல்லூரியில் சொல்லிவிட்டு வரட்டும் என்றார் மணிஅப்பொழுது வேலு இல்லப்பா நாங்க மூணு பேருமே போல கல்லூரியில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான கரெக்டான பதிலையும் சொல்லி வேணிக்கு எந்த பிரச்சனையும் வராமல் சொல்லிவிட்டு உன்னால் தான் வர முடியும் அதனால் நீயே கல்லூரிக்குச் சென்று என்ன சொல்ல வேண்டுமோ சொல்லிவிட்டு நீயும் முகிலும் வேனியை விட்டுவிட்டு வாருங்கள் என்றார் வீட்டுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டதால் நீயே சென்று விட்டு வா மகிழ் முகிலையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று என்றார்கள் பிறகு மகிழும் சரி நானே நாளை கல்லூரிக்கு செல்கிறேன் என்று விட்டு அமைதியாகி விட்டான் சிறிது நேரத்திற்கு பிறகு மகிழ் மகாவை பார்த்து நாளைக்கு என்ன கிழமை என்று தெரியுமா என்றான் மகா சிரித்துக்கொண்டே ஏன் தெரியாமல் திங்கள்கிழமை என்றால்அப்போது இனி சிரித்துக் கொண்டே அண்ணன் உன்னை நாளைக்கு திங்கள்கிழமை என்று தெரியாமல் கேட்கவில்லை நாளை தான் நீ நிலாவுடைய கல்லூரிக்கு வேலைக்கு செல்வதாக இருக்கிறது இதற்காகத்தான் கேட்கிறார் நாளை நீ நிலாவுடைய கல்லூரிக்கு வேலைக்கு செல்கிறாய் தானே என்றால் வீட்டில் உள்ள அனைவரும் மகா என்ன சொல்லப் போகிறாள் என்று அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்மகா வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு இறுதியாக மகிழை பார்த்து முறைத்துக் கொண்டே நான் நாளை நிலாவுடைய கல்லூரிக்கு வேலைக்கு செல்கிறேன் என்றால் வீட்டில் அனைவருக்கும் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது அவள் ஏன் வேலைக்கு சொல்ல மாட்டேன் என்று சொன்னால் என்று யாருக்கும் தெரியாது இப்பொழுது எப்படி மனம்  மாறி நான் வேலைக்கு செல்கிறேன் என்று சொல்கிறால் என்றும் தெரியவில்லை ஆனால் எப்படியோ ஒன்று அவள் விருப்பப்பட்ட வேலைக்குச் சென்றால் சரி என்று மட்டும் மகிழ்ந்தார்கள் அப்பொழுது எழில் தான் எப்படி மகா நாளைக்கு வருவாய் என்று கேட்டான் மகா அதில் என்ன பிரச்சனை என்றால் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை நீ இப்போது வேலைக்கு சென்று கொண்டிருக்கும் கல்லூரியில் வேலையை விட்டு விட்டதாக சொல்ல வேண்டும் அல்லவா என்றான் வீட்டில்  உள்ள அனைவரும் அப்படி ஒன்று இருக்கிறது என்று எண்ணினார்கள் அப்பொழுது மகா சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை நான் ஏற்கனவே அந்த கல்லூரியில் சொல்லி விட்டேன் என்ன என்று கேட்டான் ஆமாம் நான் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நான் கல்லூரிக்கு இனிமேல் வரமாட்டேன் என்று வேலையை விட்டு நின்றதாக சொல்லியும் விட்டேன் லெட்டர் எழுதி கொடுத்து விட்டேன் அவர்கள் தான் நீங்கள் திங்கள்கிழமை தானே வேலைக்கு செல்கிறீர்கள் அதுவரை இந்த கல்லூரிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள் அதனால் தான் நான் நேற்று வரை சென்று வந்தேன் என்றால்எழில் அனைவரின் முன்னிலையிலும் எப்படி மகா கல்லூரிக்கு வர ஒத்துக் கொண்டாய் என்று கேட்டான் பிறகு வேந்தா என்று மகா அழைத்தால் அதன் பிறகு அனைவரும் இருக்கும்போது கேட்க வேண்டாம் தனியாக கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டான் எழில் நிலாவுக்கும் அந்த எண்ணம் தான் மனதிற்குள் ஓடியது மகா எப்படி நிலா படிக்கும் கல்லூரியில் வேலைக்கு செல்ல ஒத்துக் கொண்டாள் ..இதற்கு காரணம் மகிழா அதேபோல் வேணியை நாளை மகிழ் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும்போது மகிழ் சொல்லும் காரணங்களை கல்லூரியில் ஏற்றுக் கொள்வார்களா…வேணியை கல்லூரியில் சேர்த்துக் கொள்வார்களா என்பதையும் நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️சைலன்ட் லீடர்ஸ் கதையை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை சொல்லுங்கள் நீங்கள் உங்களுடைய கருத்தை சொல்லாமல் படிப்பதால் என்னுடைய கதை எப்படி செல்கிறது என்று எனக்கு தெரியவில்லை ப்ளீஸ் நீங்கள் சொல்லும் உங்களது விமர்சனங்களை வைத்து தான் நான் அடுத்தடுத்த பகுதியை எழுத தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன் ..ஸ்டிக்கர் மற்றும் காய்ன் கொடுத்து என்னை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி🙏

2 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 46”

  1. CRVS2797

    இதுல என்ன இருக்கு..? படிச்சிட்டே கல்யாணம் பண்றவங்களும் இருக்காங்க தானே..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *