Skip to content
Home » மாண்புறு மங்கையே – 14

மாண்புறு மங்கையே – 14

ஆதவன் ஆட்சி சற்று முன்னே தொடங்க, அது சற்று முன்னாக இருந்தாலும் இவர்கள் எழுவது என்னவோ அவன் உச்சிக்கு வந்த பிறகு தான். டாட் லிட்டில் பிரின்சஸ் என்று பெருமை பீத்திக் கொள்ளும் வகையினர் இவர்கள்.

இன்று ஞாயிறு என்பதால் மட்டுமே சுடர் மதியுடன் சேர்ந்து தாமதமாகவே எழுவாள். மற்ற நாட்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமாகவே எழுந்திடுவாள். ஆனால் மதிக்கோ, ‘என்னக் கவலை’ இன்னும் அரசு, பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பரீட்சை இருக்கா? இல்லையா? வைப்போமா? வேணாமா? இந்த ரீதிலே இருக்க, அவர்களோ விளையாட்டு, உறக்கம், உணவு என்றே இருக்கின்றனர்.

இருவரும் மார்ஸ்ஸில் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்க, அவர்களை பூமிக்கு அழைத்து வர அறைக் கதவை மெல்ல திறந்து அந்த மை இருட்டில் அடிமேல் அடிவைத்து வந்தான் கார்த்திக். சுவரை ஒட்டிச் சுடரும், முன்னால் மதியும் படுத்திருந்தனர்.

தன் செல்லில் டார்ச்சர் அடித்து பார்க்க, மதி முகத்தை மறைக்கவில்லை, சுடர் தலைவரை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மதியின் பாதத்தை, மெல்ல சுரண்ட, முதலில் காலை உதறினாள். மீண்டும் அவ்வாறே சுரண்ட, மீண்டும் அவளும் உதறினாள். மீண்டும் செய்ய, பயந்து போய் எழுந்து அறையை நோட்டம் விட்டாள். அவளுக்கு எதுவும் தென்பட வில்லை, மீண்டும் உறங்க, மறுபடியும் அதயே தான் செய்தான். எழுந்து அமர்ந்து விட்டாள்.

கண்ணை கசக்கிக்கு கொண்டு பார்க்க, இருட்டில் நின்ற கார்த்திக்கின் உருவத்தை கண்டு கீழே விழுந்து பயத்தில் கத்த, சுடர் எழுந்து லைட்டைப் போட்டாள். கீழே விழுந்த மதியை பார்த்து வாய்விட்டே சிரித்தான்.

“டச்சப் நீயா…?” என அதிர்ந்தவளை கண்டு மீண்டும் சிரித்தவன், “நானே சும்மா சொல்லக் கூடாது குண்டச்சி, ஹாலிவுட் ரேஞ்சுக்கு இல்லனாலும் கோலிவுட் காஞ்சனா பட பேயை பார்த்தது போல பயந்தேல, கார்த்திக் செம ஹாப்பி அண்ணாச்சி.” என்றவன் அவள் முறைப்பில் மேலும் சிரித்தான்.

இவர்களது அலப்பறையில், தன் முகத்தை மறைக்க மறந்த சுடர் அப்படியே உட்கார்ந்து இருந்தாள். சிரித்துக் கொண்டே பார்வையைச் சுடர் பக்கம் திருப்ப, அவன் சிரிப்பு உதட்டிலே உறைந்து போய் விட்டது.

ஒரு பக்கம் வெண்ணெய் முகமும் மறுபக்கம் வெந்த முகமுமாக இருக்க, இதய துடிப்பை நிற்க வைத்த அதிர்ச்சி அது. தான் காண்கிறது கற்பனை, கனவென்று மூளை, மனதிடம் அவன் மன்றாட இரண்டும் அமைதியாக இருந்து உண்மை என்று எடுத்துரைத்தன.

கண்கள் கலங்கி போக நா ஒட்டிக்கொள்ள, பேச்செழவில்லை அவனுக்கு. அவனை கண்டதும் தலை குனிந்தாள்.

“க…, க … கலை எ … என்ன இ … இது?” ஒட்டிய நாவைப் பிரித்து கஷ்டப் பட்டு வார்த்தைகளை உதிர்த்தான்.

அவளோ, குனிந்த தலையை நிமிர்த்தாது உடல் குலுங்க அழுதாள். “கலை, உன்கிட்ட தான் கேக்குறேன். பதில் சொல்லு டி.” குரல் மாற அவளது உடல் நடுங்கியது.

“அக்கா, முகத்துல ஆசிட் அடிச்சுட்டாங்க மாமா.” மதி சொல்ல,

“யாரு…?”

“தெரியல மாமா. போலீஸ் அவங்களை தேடிட்டு இருக்காங்க.”

“எப்போ நடந்தது?”

“ஆறு மாசம் இருக்கும் மாமா.”

“ஆறு மாசம்” என மேலும் அதிர்ந்தவன் கோபத்தில் பல்லைக் கடிக்க, “பேருக்கு தான் நான் மாமால்ல, மத்தபடி வாட்ஸப்ல வாழ்த்து சொல்ற சொந்தக்காரங்க போல தானே நான் இல்ல?”

“ஊர்ல இல்லேன்னா உறவே இல்லைனு அர்த்தமா? அப்படியே எங்க எல்லாரையும் மறந்திடுறது?” வலியை வார்த்தையில் காட்டினான்.

“நீ என்னை என்ன நினைக்கற எனக்கு தெரியாது. ஆனா, நான் உன்னை என் பொண்டாட்டியா தான்டி நினைக்கறேன். எதையும் மறைக்க கூடாது, எல்லாத்தையும் சொல்றவன் நான். ஆனா நீ, ஆறு மாசமா இவ்வளவு பெரிய விசயத்தை மறச்சி பேசிட்டு இருந்திருக்க, நான் வீடியோ கால் பேச சொல்லும் போதெல்லாம் நீ மழுப்பினது காரணம் இப்ப தான் புரியுது. ஏமாத்திட்டேல டி நீ.” என்னும் போதே முகத்தை மறைத்து வெடித்தழுதாள்.

“மாமா…” என மதி இழுக்க, “பேசாத, நீ கூட என்னை ஏமாத்திட்டேல குண்டச்சி…!” எனக் கண்ணீர் வடித்தான். அங்கு பெருத்த அமைதி நிலவ, “மாமா… அத்தே…” எனக் கத்தினான்.

அவனது கத்தலை எதிர்பார்த்தது தான். வந்தவர்கள் அவன் முன் தயங்கி நிற்க, “நான் உங்க மருமகன் இல்லையா மாமா? நான் யாரோ வா?” எனக் கேட்க, “உன் கோபம் நியாயமானது தான் டா. நீ சென்னையில இருந்தால், உன்கிட்ட சொல்லாம இருந்திருப்போம்மா? நீயே அங்க அகதி போல் தானே இருந்த, இதுல நாங்க இத சொல்லி மேலும் உனக்கு கஷ்டத்த கொடுக்க நினைக்கல. எங்கள நம்பு கார்த்திக், நாங்க சொல்லிருந்தால் இந்த ஆறுமாசம் நிம்மதி இல்லாம தவிச்சு போயிருப்ப. உடனே வர முடியாத சூழ்நிலைய எண்ணி உன்னை நீயே வருத்திட்டு இருந்திருப்ப. எங்களுக்கு தெரியாதா நீ சுடர் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கனு. அதே பாசம் அவளும் உன் மேல வச்சிருக்கா, புரிஞ்சுக்கோ கார்த்திக்.”

அவர்கள் சொல்லும் நிதர்சனம் உண்மை தான். தனியாக மாட்டிக்கொண்ட வேளையில், ‘இந்தச் செய்தி தன்னை என்னென்ன செய்து இருக்குமோ?’ என எண்ணயிலே உடல் அதிர்ந்தது.

“மருமகனே, எங்களுக்கு நீயும் சுடரும் வேற வேற இல்லையா. அவ கஷ்டபடுறத மட்டும் இல்ல, நீ கஷ்டபடுறத எங்களால தாங்கிக்க முடியாது. உன்னை பார்த்ததுக்கு அப்றம் தான் யா எங்களுக்கு முழு உயிரே வருது. எங்கள தப்பா எடுத்துக்காத கார்த்திக்.” எனவும் அமைதியானான்.

“நான் கலைக்கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா.” என்றதும் மூவரும் கீழே அறையை விட்டுச் சென்றனர். இன்னமும் உடல் குலுங்கி அழுதவாறு தான் இருந்தாள்.

“கலை, என்னை பாரு” என்றான். அவளோ மாட்டேன் என்பது போல தலையசைக்க, “என்ன பாரு டி” என்று அதட்ட, நிமிர்ந்து அவனை பார்த்தவள் சட்டென அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள். அவளை அணைத்துக் கொண்டவன்,

“எங்க நான் உன் முகத்தை பார்த்து உன்னை வெறுத்திடுவேனோ தானே உன் பயம்.” அவள் மனதை சரியாக படிக்க, மேலும் உடல் குலுங்கி அழுவதிலே பதிலை தெரிந்துக் கொண்டான். “இந்த ஆசிட் உன் முகத்த வேணா மாத்தி இருக்கலாம். ஆனா உன் குணத்தையோ, மனசையோ மாத்தல, அதெல்லாம் பார்த்து தான் உன்னை காதலிச்சேன். உன் முகத்தை பார்த்து இல்ல. எத செஞ்சா என்னை நம்புவ?”

“என்னை மன்னிச்சிடு மாமா. இந்த முகம் என் மேல் இருக்க நம்பிக்கையே இழக்க வைக்கிது. எனக்குள்ள இருக்க தைரியம், தன்னம்பிக்கை, எல்லாத்தையும் கட்டி போட்டிடுச்சு. நான் நானா இல்ல மாமா. என் முகத்தை பார்த்து மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்ற பயம் எனக்குள்ள நிரந்தரமா இருந்திடுச்சு. அதான் நீயும் என்னை பார்த்து முகத்தை சுழிப்பீயோனு பயம், என்னை ஓட வச்சது. எல்லாரும் என்னை தேத்துறாங்க தான். ஆனாலும் அதில இருந்து வெளிய வர கஷ்ட படுறேன் மாமா.” என்று அழுபவளின் மேல் கோபம் வந்தாலும் கோபத்தை காட்டும் நேரம் இது இல்லை என்று எண்ணியவன், அவள் முகத்தை இரு கைகளில் தாங்கிக் கொண்டவன்,

“இந்த முகம், கொஞ்ச வருஷத்துக்கு அப்றம் சுருங்கிப் போகும், அப்ப நீ என் முகத்தை பார்த்து முகம் சுழிக்க போறாங்கனு பீல் பண்ணுவீயா? இல்ல அது தான் உலக நியதினு அக்ஸப்ட் பண்ணிப்பீயா? இதான் பேக்ட் அக்ஸப்ட் பண்ணிப்ப தானே. இதையும் நீ அக்ஸப்ட் பண்ணிக்க தான் வேணும். யார் எப்படியோ பார்க்கட்டும், அதுவா நம்ம வாழ்க்கைக்கு முக்கியம்? உன் வழி, பிறரோட பார்வையில இல்ல. நம்ம கூட பயணிக்க நிறைய பேர் இருந்தாலும், ஒரு சிலரை மட்டும் நாம ரிலேசன்ஷிப் குள்ள அக்ஸப்ட் பண்ணுவோம். மத்த எல்லாருமே பாசிங் கிளைவுட் தான். அந்தப் பாசிங் கிளைவுட் பீபுலோட ரீயாக்சனுக்காக நீ ஏன் பீல் பண்ற? உன் கூட ரிலேசன்ஷிப்ல ஜாயின் பண்ண யாரும் உன் முகத்தால சேர்ந்தவங்க இல்ல, உன் கேரக்டர்னால சேர்ந்தவங்க தான். ப்ளீஸ், உன்னை நீயே டிஸ்கரேஜ் பண்ணிக்காத கலை. மோடிவேட் யூர் செல்ப் கலை.” என்றான். அவன் கைகளுக்கு இருந்தே ‘சரி’ என்று தலையை அசைத்தாள்.

“இப்போவாது என் மேல நம்பிக்கை இருக்கா…?” எனக் கேட்டதுக்கும் அவ்வாறே பதிலளிக்க, அவளது வடு இருந்த கன்னத்திலே முத்தம் வைத்தான். விழிகளை மூடினாள். மேலும் அவனது விழிகள் அவளழிதளை சுற்ற, அதற்குள் மதி, “ம்கூம் ம்கூம்…” தன் இருப்பை காட்டினாள்.

இருவரும் விலகினர். “யோவ், டச்சப் தனியா பேசுனும் சொன்ன. ஆனா, நீ பேசுறது மாதிரியே தெரியலயே. என்னைய்யா பண்ற என் அக்காவ?”

“ஆங்… உங்க அக்காவ வசியம் பண்றேன். ஆளா பாரு கரடியாட்டாம். நேரங்கெட்ட நேரத்தில வந்துட்டு கேள்விய பாரு குண்டச்சி…!” என அவளை திட்ட,

“யோவ், நீ தான்யா நேரங்கெட்ட நேரத்தில எங்க தூங்கத்த கெடுத்த கரடி. மிட் நைட்ல வந்து சண்டை போட்டுட்டு இருக்க, போய்ய்யா வெளிய…!” என்றவளை ஏகத்துக்கும் முறைத்தவன் கட்டிலிருந்து எழ, அவளோ மீண்டும் வந்து தன்னிடத்தில் படுத்து போர்வையை போர்த்திக் கொண்டாள்.

அருகே இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து, அவள் முகத்தில் தண்ணீரை ஊற்றி விட்டு ஓடியே போய் விட்டான்.

“ஆஆஆஆ…” கடுப்பில் கத்த, சுடருக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. காலை உணவை முடித்து விட்டு கதிரிடம், நடந்த விடயத்தை எல்லாம் முழுதாக கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக். அப்போது ரித்திக்கும் வதனாவும் வந்தனர்.

“வாங்க ரித்திக், வாங்க வதனா” என கதிர் இருவரையும் வரவேற்று கார்த்திக்கிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

“இவன் கார்த்திக், எங்க வருங்கால மாப்பிள்ளை.” என்றதும் ரித்திக் அதிர, வதனாவின் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த எரிதழலில் பனி பெய்தது போல இருந்தது.

தெய்வானை இருவருக்கும் காபி கலந்து வந்து கொடுத்தார். சுடர், கார்த்திக் பக்கத்தில் வந்து அமர, ரித்திக்கிற்கு எரிந்தது. தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தவன் வதனாவிடம் கண்ணைக் காட்ட, அவளும் சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்பா, சுடருக்கு ஏன் சர்ஜரி பண்ணக் கூடாது? ரித்திக், ஸ்கின் டாக்டர் தானே, அவர் மூலமாவே, நாம சுடருக்கு சர்ஜரி பண்ணலாம். நீங்க என்ன சொல்றீங்க?” வதனா கேட்டிட,

அதைக் கேட்டு தெய்வானைக்கும் கதிருக்கு மகிழ்ச்சியே, கார்த்திக் யோசனையில் ஆழ்ந்தான். சுடருக்கு அதில் விருப்பமே இல்லை.

“ரொம்ப சந்தோசம்மா. நீங்க ரெண்டு பேரும் என் பொண்ணுக்காக எவ்வளவு யோசிக்கறீங்க? உங்களுக்கு நாங்க என்ன செய்ய போறோமோ?”

“என்னம்மா நீங்க? சுடர் எனக்கு தங்கை அவளுக்காக நான் இதை செய்ய மாட்டேனா, உங்க முடிவு என்ன? சுடர், உன் முடிவென்ன? உனக்கு ஓ.கே வா?”

“எனக்கு இதுல விருப்பம் இல்ல.” என்றதும் அனைவரும் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன்மா வேணாங்கற?” கதிர் கேட்க,

“இல்லப்பா இந்த முகத்தோடு தான் நான் சாதிக்க போறேன். பிளாஸ்டிக் சர்ஜரி பண்றதுனால எனக்கு காண்பிட்டேன்ட் வந்திடாதுப்பா. இந்த முகமும், இந்த வடுவால ஏற்பட்ட அவமானமும் தான், நான் இழந்த தன்னம்பிக்கைய எனக்கு திரும்ப கொடுக்குது. நான், என் கனவை அடைஞ்சதுக்கு அப்றம் சர்ஜரி பண்ணிக்கறேன். இந்த முகத்தோட தான் நான் பியூட்டி பார்லர் ஆரம்பிக்கணும். ப்ளீஸ் என்னை யாரும் கம்பெல் பண்ணாதீங்க.” என்றாள் தீர்க்கமாக.

அதன் பின் யாரும் எதுவும் பேசவில்லை, “சாரி கார்த்திக், உன்கிட்ட கேட்காம முடிவு எடுத்துட்டேன் நினைக்காதீங்க? இது தான் என் முடிவு.” என்றிட அவனும் ஏதோ யோசிக்க கதிரின் அலைப்பேசி அடித்தது. அதில் முத்துவை கைது செய்த செய்தியை கூற அதிர்ந்தார்

7 thoughts on “மாண்புறு மங்கையே – 14”

  1. Kalidevi

    Siper karthik un kitta ava nalla aluthu irukuratha sollita eni nee tha avala pathukanum .etho yosikura but intha vathana ku punishment kedaikanum konjam avala intha velai panitu ipo avale athuku treatment pana poralam. Ithula rithik vera eriuthu avanuku karthika patha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *