Skip to content
Home » மாண்புறு மங்கையே – 16

மாண்புறு மங்கையே – 16

இதழில் இருந்து ரத்தம் வழிய, உடம்பில் அங்கே அங்கே வீங்கி ரெத்தம் கட்டிருக்க, காலில் விழுந்த அடியால் நொண்டினான்.

மிலானி இருவரிடம் உண்மையை கறக்க, இருவரையும் ஒரு வழியாக்கி விட்டாள். அவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் போதே அங்கே கதிர், சுடர், கார்த்திக், ரித்திக், வதனா வந்து சேர்ந்தனர். வதனாவிற்கு அவர்கள் வாங்கிய அடியை கண்டதும் உள்ளாற அனைத்தும் உறைந்து போயிவிட்டன. அனைத்தும் இயங்காமல் மொத்தமும் அவளை போல நின்று விட்டன.

அவர்களை கண்டதும் வெளிய வந்தாள், “இவனுங்க தான் பண்ணிருக்கானுங்க. இவனுங்க நொங்க கழட்டினாத்தான் யார் இத செஞ்சாங்கனு சொல்ல வைக்கணும்.” கையில் அவள் அணிந்திருந்த காப்பை இறக்கி விட்டவள் கை முஷ்டியை முறுக்கினாள்.

அதைக் கேட்டு வதனாவின் உயிர் என்றோ சென்று விட்டது. இங்கிருப்பது வெறும் ஜடம் மட்டுமே…!

“மேம், நான் கொஞ்சம் அவங்கிட்ட பேசிட்டுமா?” சுடர் கெஞ்ச, மிலானி யோசித்தவள், “ம்ம்… சரி” என்றாள்.

லாக்கப்பை திறக்க, இருவரும் நொண்டிய படியே வந்தனர். காலை தூக்கிய படியே வந்து நின்றனர்.

வெகு நாட்களுக்கு பின் தன் காதலியை பார்க்க எண்ணமிருந்தாலும் குற்றவுணர்வு அவனது தலையை நிமிர்த்த விடவில்லை. அவளது வதனத்தில் தன்னால் ஏற்பட்ட வடுவை காண அவனுக்கு சக்தியுமில்லை. ஏற்கெனவே செத்துக் கொண்டிருப்பவன் மீண்டும் சாக வா…!

“என்னை நிமிர்ந்து என் முகத்தை பாருங்க.” என்றாள். அவர்கள் இருவரும் தன் முகத்தை பார்க்க வேண்டும் தன் வலியென்னவென்று பார்க்க வேண்டும் எண்ண, அவனோ அவளுடைய வலியையும் சேர்த்தல்லவா அனுபவிக்கிறான்.

“பாருங்க…!” என்றே அவள் அதட்ட, இருவரும் பார்த்தனர். இருவருமே முகம் சுழிக்க வில்லை. மாறாக முத்துவின் கண்கள் வலியை காட்டியதை, உதடுகள் துடிக்க அழுகை தான் வந்தது. அவர்கள் அடித்ததை விட பெரிய தண்டனை இதுவே அவனுக்கு.

அவர்கள் முகம் சுழிப்பார்கள் நறுக்கென்று நாலு கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றம், அவன் வலியும் கண்ணீரும் அவளை ஏதோ செய்தது.

“சொல்லுங்க எதுக்காக என் முகத்துல ஆசிட் அடிச்சீங்க? யாரும் சொல்லி செஞ்சீங்களா? இல்ல அன்னைக்கு உங்களை போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்ததுக்காக என்னை பழிவாங்க இப்படி செஞ்சீங்களா? சொல்லுங்க எதுக்காக என் முகத்துல ஆசிட் அடிச்சீங்க. சொல்லுங்க.” கோபத்தில் ஆரம்பித்து கண்ணீரில் முடிக்க, அவளது ஒவ்வொரு கண்ணீரும் அவனுக்கு ஒரு துளி விஷமாய் உள்ளே இறங்கி உயிரை குடித்தன.

“மேம், நீங்க பெர்மிஷன் மட்டும் கொடுங்க, இவனை இங்கே அடிச்சே கொன்னுடுறேன். என் கலை இப்படி ஆக்குனவன சும்மா விடக் கூடாது மேம்.” சுடரை விளக்கிவிட்டு, முத்துவின் சட்டையை பற்றி நாலு அறை விட்டவன்,

“பணத்துக்காக, என்ன செய்றோம் ஏது செய்றோம் கூடவா டா உங்களுக்கு தெரியாது? பணத்த பார்த்தலே உங்க மூளை எல்லாம் மழுங்கிடுமாடா? ஏன்டா என் கலைய இப்படி பண்ணிங்க? நீங்க எல்லாம் உயிரோட இருக்கவே கூடாது நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை நீங்க உயிரோட இருக்கக் கூடாது.” என்று அவன் பிடியை இறுக்க, முத்துவின் கண்கள் மேலே சென்றன, இரண்டு காவல் அதிகாரிகள் அவனை கஷ்டப்பட்டு இழுத்தனர், அவன் பிடி தளர முத்து கழுத்தை பிடித்துக்கொண்டு இருமினான்.

“என்ன சார் நீங்க, நீங்களே தண்டனை கொடுத்தா நாங்க எதுக்கு இருக்கோம்? தள்ளி போங்க சார்.” மிலானி கோபத்தில் கத்த, “இந்த நாய்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலும் திருந்தவா போதுங்க. இவனுங்கள கொன்னா தான் மேம், என் ஆத்திரமே அடங்கும்.” இன்னும் குறையாத கோபத்தோடே கத்தினான்.

“என்ன மிஸ்டர் பண்ண எங்களுக்கே அந்த அதிகாரத்தை கொடுக்கல. இல்ல இவனை எல்லாம் பார்த்த நிமிசத்துல சுட்டிருப்பேன். அந்த அதிகாரம் இல்லாதனால இன்னைக்கு பெண் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லாம போயிட்டு இருக்கு.” அரசாங்கத்தின் மேல் இருந்த வெறுப்பை காட்டியவள், “நீங்க கோபப்படாதீங்க நாங்க எதுக்கு இருக்கோம் நாங்க பார்த்துக்கிறோம்.”

இன்னும் அவனது கோபம் குறையே வில்லை, முத்துவை கொலைவெறியுடன் பார்த்து நின்றான். “மாமா, முரட்டு தனமாக எதையும் பண்ணி உன் வாழ்க்கைய நீயே அழிச்சிடாத, கொஞ்சம் அமைதியா இரு.” சுடர் கெஞ்சவே, தன் கோபத்தை கட்டு படுத்த முயன்றான்.

“சாரி மேடம். அவன் எங்களோட வருங்கால மாப்பிள. என் பொண்ணு மேல இருக்க பாசத்துல கோவப்பட்டுட்டான் மன்னிச்சிடுங்க.” கதிர் கெஞ்ச, “இட்ஸ் ஓகே. அவர் கோபமும் நியாயமானது தான். ஐ கேன் அண்டர் ஸ்டாண்ட் சார்.!” என்றாள் முறுவலுடன்.

கதிர் சொன்னதும், முத்துவின் காதல் மனது மேலும் உடைந்தது. அவளுக்கு நான் சரியானவன் இல்லை என்று மூளை நிமிடத்திற்கு ஒரு முறையேனும் உணர்த்தினாலும், மனம் தான் அதன் பேச்சை கேட்டு அப்படியே நடக்கும் ஜீவனா என்ன, மீறி அடிபட்டு வரும் என்பது அறிந்ததிருந்தும் மனம் கேட்பதே இல்லை.

அவர்கள் இருவரை அருகில் பார்க்க மனம் வலித்தாலும், அவளது வாழ்க்கை முறிந்து விடாமல் இருந்தாலே போதும் என்றே எண்ணிக் கொண்டு முறுவலித்தான்.

கார்த்திக் அமைதியாகிட, சுடரின் கவனம் முத்துவின் மேல் சென்றது. “சொல்லுங்க, என்னை பழிவாங்க தான் செஞ்சீங்களா?”

“இல்லை” என்று தலையை மட்டும் அசைத்தவன், “உங்கள பழிவாங்க நான் உங்க மேல ஆசிட் அடிக்கல. என் அக்கா உயிரை காப்பாத்த பணம் வேணும். பணத்துக்காக தான் பண்ணினேன். ஆனால் நீங்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா இதுக்கு நான் சம்மதிச்சி இருக்க மாட்டேன்.” என்றவனை குழப்பத்தோடு பார்த்தவள்,

“அப்போ என் இடத்துல வேற பொண்ணு இருந்தால், உங்க அக்கா உயிர காப்பாத்த ஆசிட் அடிச்சிருப்பீங்க அப்படித்தானே?” என்றதும் தலை குனிந்தான்.

“நானு தெரிஞ்சு இருந்தால் அடிச்சிருக்க மாட்டேன் சொன்னீங்களே, ஏன் அப்படி சொன்னீங்க? நான் யாரு உங்களுக்கு?” எனக் கேட்கவும் அமைதியாக இருந்தான்.

“சொல்லுங்க, நான் யாரு உங்களுக்கு?” மீண்டும் துளாவ, “இந்த மிருகத்த மனுசனா மாத்தின தெய்வங்க நீங்க. நீங்க அன்னைக்கு பேசிட்டு போனதுக்கு அப்றம் நான் திருந்திட்டேன்ங்க. திருடற தொழிலை விட்டுட்டேன். நல்ல வேலையா தேடி உங்க முன்னாடி வந்து நிக்கணும் நினைச்சேங்க. ஆனா, நான் நினைச்சது நடக்கலங்க. மறுபடியும் உங்க முன்னாடி குற்றவாளியா தான் நிக்கறேன். எனக்குனு சொந்தமா இருக்கறது அக்கா, அவ உயிர காப்பாத்த பணம் தேவைப்பட்டது. நேர்மையா எல்லார் கிட்டயும் கேட்டு பார்த்தேன். நான் செஞ்ச பாவம் என்னை துரத்துச்சு, ஆசிட் அடிச்சா பணம் கிடைக்கும் சொன்னாங்க வேறு வழியில்லாம ஒத்துக்கிட்டேன். உங்க மேல் தான் ஆசிட் அடிக்க போறேன் எனக்கு தெரியாது. பஸ் ஸ்டெண்டுல நிக்கற பொண்ணு மேல ஆசிட் அடின்னு சொன்னாங்க அடிச்சேன்.” தன் காதலை தவிர அனைத்தையும் கூற அவள் முகத்தில் அதிர்ச்சியை சுமந்திருந்து.

“யார் பணம் கொடுத்து ஆசிட் அடிச்சீங்க?”

“செல்லா அண்ணா பணம் கொடுத்து தான், நாங்க ஆசிட் அடிச்சோம். ஆனா…” முத்து ஒத்துக்கு கொள்ள, அதை கேட்டு குழம்பியபடி யோசித்தாள் வதனா.

“ஆனா, என்னங்கடா?” மிலானி லத்தியை தூக்க,

மிலானியின் கவனம், மாரியின் பக்கம் சென்றது. “சொல்லு யார் அப்படி செய்ய சொன்னது?” எனக் கேட்டதும் அவன் வதனாவை தான் பார்த்தான்.

அவள் வேண்டாம் என்று தலையசைப்பதை பொருட்படுத்தாது வதனாவை காமித்து, “இவங்க தான் பணம் கொடுத்து செய்ய சொன்னாங்க.” என்றான்.

அங்கிருப்பவர்களால் அதை நம்ப முடியவில்லை. ரித்திக், இதை நம்பாமல் கோபமாக, மாரியின் சட்டையை பிடித்து, “யார காப்பாத்த யாரடா மாட்டி விடுற? உண்மை சொல்லுடா யார் இத செய்ய சொன்னா?”

“சார், நிசமா அவங்க தான். அவ அழக வச்சு என் வாழ்க்கையே பாழாக்கிட்டானு சொல்லி என்னை ஆசிட் அடிக்க சொன்னாங்க.” உண்மை மீண்டும் போட்டு உடைக்க, ரித்தக்கின் கைகள் அவன் சட்டையிலிருந்து விலக, இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை இரண்டே வரியில் சொன்னதும் வதனா தான் செய்ய சொல்லிருக்காளென்று ஊர்ஜிதமானது. அவன் வதனாவை பார்க்க அவளோ தரையில் அமர்ந்து வெடித்து அழுதாள்.

சுடருக்கு தலையே சுற்றியது சரிய இருந்தவளை தாங்கி பிடித்தான் கார்த்திக், “கலை, என்னாச்சு உனக்கு?” அவள் முகத்தை தட்ட, விழித் திறந்தவள், “கலை…!” அவள் முகம் பார்க்க, ஏமாற்றப்பட்ட வலி அப்பப்பட்டமாகத் தெரிந்தது.

கார்த்திக்கிடமிருந்து நகன்றவள், தரையில் அமர்ந்தழுகும் வதனாவின் அருகில் அமர்ந்து, “இப்ப கூட நான் நம்பல மேம், உண்மைய சொல்லுங்க நீங்க செய்யல தானே. நான் செய்யலன்னு சொல்லுங்க மேம்?”

“நான் தான் ஆசிட் அடிக்க சொன்னேன் சுடர். நான் தான் அடிக்க சொன்னேன்.” காவல் நிலையாமே அதிரும் படி கத்தினாள். பேரமைதிக்கு பின் சுடர் பேச ஆரம்பித்தாள்.

“ஏன் அப்படி பண்ணீங்க சொல்லுங்க? ஏன் என் முகத்தை அழிக்க சொன்னீங்க? நான் எப்போ பாழாக்கினேன்? நான் எப்போ உங்க வாழ்க்கைக்குள்ள வந்தேன்?” எனக் கத்தி கரைய,

“எப்போ நீ வேலைக்கு வந்தீயோ அப்ப, எப்ப நான் உன்னை தங்கச்சியா நினைக்க ஆரம்பிச்சேனோ அப்ப, எப்போ நீ வீட்டுக்கு வந்தீயோ அப்ப, எப்ப நீ என் புருசனுக்கு அறிமுகமானியோ அப்ப. உன்னால தான் ரித்திக்… என் ரித்திக் என்னை விட்டு போனான். உன்னால் தான் என் மேல காதலே இல்லைனு சொன்னான். உன்னால் தான் அவன் டிவோர்ஸ் தரேன் சொன்னான். எல்லாம் உன்னால உன்னால, உன் மேல வச்சே ஆபேர்னால தான்.” வெளியே சொல்ல முடியாமல் பூட்டி வைத்தது பூகம்பமாய் வெடித்தன.

“உனக்கு நீ, எனக்கு நான், நமக்கு எதுக்கு குழந்தை சொன்னவன் தான், அதே குழந்தை ஒரு ரீசனா சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்க என்னை விட்டு போ சொன்னான்…! அந்த இடத்துல நான் செத்துட்டேன். உனக்காக என்கிட்ட பேசுறான் உனக்காக உதவி பண்றான், உனக்கு பிரோபோஸ் பண்ண நகை எல்லாம் வாங்கி வைக்கறான். அதெல்லாம் பார்க்க பார்க்க உன் முகம் தான் எனக்கு ஞாபகம், அதை அழிச்சா கண்டிப்பா என் கிட்டயே வந்திடுவான் நினைச்சேன்… ஆனா, அப்பயும் இது உண்மையான காதல் எனக்கு முகம் முக்கியம் இல்லை அவ தான் முக்கியம்னு என் காதலை மிதிச்சிட்டு, உன்னை தேடி வர்றான்.. என்கிட்ட என்ன குறை இருக்கு சொல்லு சுடர், என்ன குறை? இத்தனை வருசமா நேசித்த என்னை ஏன் அவன் தூக்கி போட்டான்…? உன்னை ஏன் பிடிக்க ஆரம்பிச்சது? எங்க நான் அன்பு காட்ட தவறினேன்..? ஏன் எனக்கு துரோகம் செஞ்சான்?” சுடரை கட்டி அழுக,

“ஆனா, நான் உங்களுக்கு துரோகம் செய்யல மேம், என்னை ஏன் தண்டிச்சீங்க?” என்ற வார்த்தை அவளை சுட, சட்டென அவளிடமிருந்து விலகினாள்.

“நான் என்ன தப்பு செஞ்சேன், எனக்கு ஏன் இந்த தண்டனை?” என்று தன் முகத்தை காட்டி கேட்க, பதிலளிக்காது அவள் காலில் விழுந்தழுதாள்

7 thoughts on “மாண்புறு மங்கையே – 16”

  1. Kalidevi

    Unmai oru veliya vanthu thane agum vanthuduchi pathil sollu vathana throgam panathu un husband aana athuku punishment sudar ka pathil sollu ipo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *