Skip to content
Home » மாண்புறு மங்கையே – 19

மாண்புறு மங்கையே – 19

இங்கோ, யாரும் சாப்பிடவில்லை, உணவை மறந்து உணர்வை மறந்து ஆளுக் கொரு மூலையில் கிடந்தனர். உள்ளே சுடர், தூங்க முயன்றவளை தூங்க வைத்து அவளோடு இருந்தவன் வெகு நேரம் சென்றே வெளியே வந்தவன் அவர்களை பார்க்க, அவர்களது இருப்பே அவனது மனதை பிசைந்தது. ‘எப்படி கலகலப்பா இருந்த குடும்பம். ஒரு துரோகத்தினால் களையிழந்து இருக்குதே இதை எவ்வாறு சரி செய்ய?’ என யோசித்தான்.

கண்ணீரை சிந்திய படியே ஆரஞ்சிம்மாள், மதி, தெய்வானை இருக்க இதுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணியவன், “வீட்ல பொம்பளைங்க இருந்தாலே இப்படி தான் பா! எந்நேரம் பார்த்தாலும் அழுதுட்டும் மூக்க சிந்திட்டு ச்ச ச்ச்.” என அவன் அலுத்துக் கொள்ள அனைவரின் கவனமும் அவன் மேல் செல்ல, மதிக்கு கோவம் வந்தது.

“என்ன நாங்க எந்நேரம் அழுத்துட்டு மூக்கை சிந்திட்டு இருக்கோமா?”

“பின்ன இல்லையா? ஒண்ணுன்னா போதும் ஓ- ன்னு அழறது. முடியலப்பா, கண்ணுல வாட்டர் பாலஸ் வச்சிருப்பீங்க போல எதுக்கு எடுத்தாலும் கண்ணீரை வடிக்கறது. ஆம்பளங்க நாங்க என்ன அழுதுட்டா இருக்கோம் கடந்து போக என்ன பண்ணலாம் நாங்க யோசிக்கல நீங்க தான் அதை நினைச்சி நினைச்சி கண்ணீர் சிந்திட்டே இருக்கறது.” என நொடித்து கொண்டான்.

“ஆம்பளைங்க, நீங்க மரக்கட்டயா இருந்தால் நாங்க என்ன பண்றது டச்சப்? உங்களுக்கு தான் உணர்வு இல்ல எங்களும் இல்லனு நினைக்கறீயா? நீங்களாவது நாலு இடம் சுத்திட்டு பிரிண்ட்ஸ், குடி, சிகரெட் னு உங்க பீலிங் மறக்க எடுத்துக்கிறீங்க, ஆனால் நாங்க அப்படியா? நாலு சுவர தவிர வேறு போக்கு இடமில்ல, சும்மா வாய்க்கு வந்தத பேசாத.” அவள் சீரியஸாக பேச,

“அடியே குண்டச்சி, ஏன் டி சீரியஸா பேசுற? நானே இவங்க நிலமைய மாத்த கேலி கிண்டல் பண்ணா, நீ பேமினிசம் பேசிட்டு இருக்க? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு டி சிட்ஸ்வேசன புருஞ்சுக்கோ டி.” அவளிடம் கெஞ்ச,

“அட எருமை முன்னாடியே சொல்ல மாட்டீயா? கத்த விட்டு காலையில் மறந்த பசிய தூண்டி விட்ட, இப்ப பசிக்கிதே.” என வயிற்றை தடவ,

“எஸ் குண்டச்சி, இனி நாம போடுற சண்டையில அப்படியே எல்லாரும் சாப்பிட வர வைக்கனும் ஓகே வா?” எனவும்

“டீல்” என்றாள்.

“ஆங் என்ன சொன்ன? நாங்க சிகரெட் தண்ணீ அடிச்சு பீலிங்க மறக்கறோமா? நாங்க அப்படி பண்ணா நீங்க என்னடி பண்றீங்க? கவலை மறக்க நல்ல கொட்டிக்கிறீங்க தானே? அப்பப்பா கொஞ்சம் கூட கவலை இல்லாம எப்படி தான் கொட்டிக்கறீங்களோ பாரு முன்னாடி எப்படி தொப்பை போட்டிருக்கு அரிசி மூட்டை !” எனக் கேலி செய்ய அவனை முறைத்தவள்.

“ஏன் ஏன் நீங்க பீர் அடிச்சி தொப்பையை வளர்த்துக்கலயா? என்னமோ எங்களை மட்டும் சொல்ற? ஏன் நாங்க குண்டா இருந்தால் உங்களுக்கு ஏன் வலிக்குது? உன் காசையா தின்னு நான் குண்டாயிருக்கேன், என் அப்பன் காசுல தின்னு நான் குண்டா இருக்கேன் உனக்கு என்ன வந்தது டச்சப்…?”

“என் மாமா காசு டி! நீ திங்க இந்த வயசான காலத்துல அவர் உழைக்க வேண்டியதா இருக்கு.” என தலையில் அடித்துக் கொள்ள,

“அதான் ஆசையா என்ன பெத்தாருல பெத்த என்னைய வளர்க்க வேணாமா? வளர்க்கணும்ன்னா உழைச்சு தான் ஆகனும். என்னமோ ஊருல நடக்காத விஷயத்தை உங்க மாமா பண்ற மாதிரி பேசுற? நான் சாப்பிட அவர் உழைச்சு தான் ஆகணும்.” எனவும்,

“அவர் உழைக்கறாருன்னு அளவா சாப்பிடுறீயா டி, அப்பா லேடி காடோத்கஜன் மாதிரி தின்னுட்டே இருக்க? என் அத்தை உனக்கு ஆக்கி போட்டே காலத்த கழிக்க வேண்டியதா இருக்கு?” என்று தலையில் அடிக்க,

“ஏய் இவ்வளவு கஷ்ட படுறவங்க எதுக்கு என்னைய பெத்தங்களாம்?”

“யாரு உன்னைய பெத்தா தவுட்டுக்குல வாங்கினோம். ஆனா, பாரு உனக்கு சாப்பாடு போட்டு எங்க சொத்து தான் அழியுது?” என்றான்.

அவர்கள் இருவரது சண்டைய கவலை மறந்து சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தனர் நால்வரும். அவர்களின் அரவம் கேட்டு சுடரும் எழுந்து வந்து நின்று பார்த்தாள்.

“யாரா டா தவுட்டுக்கு வாங்கினோம் சொன்ன? உன்னை தான்டா புண்ணாக்கு வாங்கினாங்க என் புண்ணாக்கு.” என்றாள்.

“நான் புண்ணாக்குனா, நீ சோத்துமூட்டை டி.” என்றான்.

“நான் சோத்து மூட்டையா?”

“ஆமா, நீ சோத்து மூட்டையா தான். பாரு எல்லாரோட சாப்பாட்டையும் சாப்பிட்டு சோத்து மூட்டையா நிக்கற.”

“யோவ் நாங்க எங்கயா எல்லாரோட சாப்பாட்டை சாப்பிட்டேன். அவிங்க போடுற மிச்சம் சொச்சத்தை தான் டா நான் சாப்பிடுறேன். இவிங்க வேணாம்னு வைக்கறத சாப்பிடுறடதே என் பொழப்பா போச்சு.”

“ஆத்தி மிச்சம் சொச்சம் சாப்பிட்டே சோத்து முட்டையா இருக்கீயே, உனக்கு தனியா ஆக்கி வச்சா, என்ன வா இருப்ப?” என அவன் வாயை பிளக்க, கலைச்சுடர் சிரித்தே விட்டாள்.

அவள் சிரிப்பை பார்த்து நிம்மதியடைந்தவன் இன்னும் பேசுமாறு சைகை செய்தான்.

“யோவ், என்ன கலாய்க்கிறீயா? எங்க அப்பா காசு வீணாகக் கூடாது இருக்க மிச்ச சொச்சத்தையும் நானே திங்கறேன். இப்ப கூட பாரு, இந்த தெய்வானை மீன் குழம்பையும் மீனை வச்சுட்டு சாப்பிடாம வேஸ்ட் பண்ணிட்டு இருக்கு. அதை நினைச்சி காலையில இருந்தது பீல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? எனக்கு இருக்க அக்கறை, இங்க இருக்க யாருக்கும் இருக்கா பாரேன். இதுல உன் மாமா காசை நான் அழிக்கிறேன் சொல்ற, உன் மாமா காசை கரியாக்குறது உன் அத்தை தெய்வானை தான். அத என்னானு கேட்க ஆளே இல்ல வருத்தபடுற என்னை தான் எல்லாரும் பேசுறாங்க.” சீரியஸ்ஸாக காமெடி செய்து கொண்டிருந்தாள்.

“யாரு டி உங்க அப்பா காசை கரியாக்கினது?” தெய்வானை வரிஞ்சு கட்டுக்கிட்டு வர, “நீ தான், அங்க சமைச்சு வச்சது யாருக்கு… சொல்லு தெய்வானை, யாருக்கா அது யாருக்காக? இந்த மீன் குழம்பும்? வாசனை இழுக்குற பொறுச்ச மீனும் யாருக்காக? அது யாருக்கா?” என பாட்டாவே படிக்க,

“உங்களுக்காக தானே டி சமைச்சேன்.” எனவும், “எங்களுக்காக சமைச்ச சரி, எங்கள சாப்பிட கூப்பிட்டியா நீ?” எனக் கூறவும் நாக்கை கடித்தவர் மணியை பார்த்தார்.

“உன் கடமை நீ சரியா செய்யாதனால என்னை இவன் கத்த விட்டுட்டு இருக்கான். பாரு, என் தொப்பை கூட பசியின் கொடுமையினால வாடி போயிருச்சு.” தன் தொப்பையை தடவ,

“அரிசி மூட்டைக்கு பீலிங்க் பாரு.” என தலையில் அடித்து கொள்ள, “இவன் என்ன சோத்து மூட்டை னு சொல்றான். இதை தட்டி கேட்க ஆளே இல்ல பச்… நான் யாரோ தானே.” வருத்த படுவது போல நடிக்க,

“நாங்க இருக்கேன் பப்ளு.” சுடர் ஆஜராக கார்த்திக்கும் கலைமதியும் கண்ணடித்துக் கொண்டனர்.

“மாமா, என் அரிசி மூட்டை” என்று கூறியவள் நாக்கை கடித்து விட்டு, “சாரி பப்ளு, என் தங்கச்சிய அப்படி சொல்லாதீங்க மாமா.” ஆதரவாக பேச, “இதுக்கு அவனே தேவல” மதி பாவமாக முகத்தை வைக்க அங்கே சிரிப்பலைகள் தான் .

“சரி சரி நேரமாச்சி வாங்க சாப்பிட” அவிழ்க மேசையை நோக்கி நடக்க, இவர்களின் கூத்தில் அனைத்தையும் மறந்து சாப்பிட அமர்ந்தனர்.

சரியாக கார்த்திக் போன் வர, வெளியே சென்று பேசி விட்டு வந்தவனும் அமர்ந்து உண்டான். அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன் பேச ஆரம்பித்தான்.

“மாமா நான் கலைய சென்னைக்கு கூட்டிட்டு போலாம் இருக்கேன்.” அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சுடர் புரியாமல் ‘எதற்கு?’ என்று பார்க்க, ‘எல்லாம் நன்மைக்கே’ அவனும் கண்களை மூடி திறந்து நம்பிக்கை மொழிந்தான்.

6 thoughts on “மாண்புறு மங்கையே – 19”

  1. Avatar

    சூப்பர்… அடுத்து சுடர் என்ன செய்ய போறான்னு பார்க்க வெயிட்டிங்!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *