Skip to content
Home » மாண்புறு மங்கையே- 2

மாண்புறு மங்கையே- 2

மங்கை 2

“அம்மா… அம்மா… அம்மா… எரியுது ரொம்ப எரியுது எ… என்னால முடியல… டாக்டர்.. என்னால முடியல ரொம்ப எரியுது டாக்டர்… ஆஆ… ஆஆ…!” தீவிர சிகிச்சை பிரிவில் அதிர்ந்து பேசாத அம்மங்கையின் அலறல் சத்தம்.

அவளை காப்பாற்றி கொண்டு வந்தவர்களின் வயிற்றையும் மனதையும் பிசைந்தது.

“நல்லா இருப்பானா அவன், நாசமா போயிடுவான். கட்டையில போறவன் சின்ன பொண்ணு கூட பார்க்காம நெருப்பை அள்ளி கொட்டினது போல ஊத்திட்டு போயிட்டானே படுபாவி பையன். யார் பெத்த பொண்ணோ வலி தாங்க முடியாம கத்துதே, இரக்கமே இல்லையா அவனுக்கு…” கலைச்சுடரை காப்பாற்றிய பாட்டி புலம்பினார்.

முகத்தில் மாஸ்க்கும் கண்ணில் கண்ணாடியும் அணிந்திருந்தவள், யாரோ ஒருவர் அழைக்க, தனது மாஸ்க்கை தாடையில் இறக்கி என்னவென்று கேட்பதற்குள் அவன் ஊற்றிய அமிலம் பாதி முகத்தை ஆக்கிரமித்து இருந்தது.

கண நேரத்தை பயன்படுத்தி அவர்கள் அங்கிருந்து செல்ல கண்ணாடி கீழே விழுக, அவளின் அலறல் சத்தம் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே இருந்த கோவில் வாசலில் பூக்களை கட்டிக் கொண்டிருந்த பாட்டியும் வாசலில் நின்ற பெண்ணும் கேட்டு பதறி கொண்டு வந்தனர். அவளது அலறல் கேட்டு சுத்தி இருப்பவர்கள் கூடினார்கள்.

“தண்ணீ கொண்டு வாங்க” என்ற அந்தப் பெண்ணின் கட்டளைகேற்ப சித்தால் வேலை செய்யும் ஒருவர், சாப்பாடு பையிலிருந்து இரண்டு லிட்டர் தண்ணீர் குடுவையை கொடுக்க, சுடர் முகத்தில் ஊற்றினாள்.

பக்கத்தில் இருப்பவரிடம் ஆம்புலன்ஸை அழைக்கச் சொல்லியவள், அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. ஆசிட் பட்ட இடத்தில் ஊற்ற தண்ணீர் குடம் குடமாய் தேவை படும். அந்தப் பெண்ணும் கிடைத்ததை வைத்தே முதலுதவி செய்தாள்.

ஆம்புலன்ஸூம் வர, கலைச்சுடரை ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா காலம் என்பதால் இருவரை தவிர்த்து அங்கே யாரையும் நிற்க விடவில்லை.

பாட்டியும் அந்தப் பெண்ணும் மட்டுமே இருந்தனர். சுடரின் உடமைகள் எல்லாம் அவளிடமிருக்க, சுடரின் அலைபேசி வழியாக கதிர்வேலுக்கு தகவல் சொல்ல தெய்வானையும் கதிர்வேலும் அடித்து பிடித்து ஓடி வந்தனர் தன் மகளை காண.

குளிர்ந்த நீர், அல்லது சுத்தமான நீரை ஊற்றுவது தான் அமிலம் பட்டவர்களுக்கு நாம் அளிக்கும் முதலுதவி. மருத்துவர்கள் சுடர் அணிந்த காதணிகளை கழுத்தில் அணித்திருந்த செயினை கழட்டினார்கள். அவள் அணிந்திருந்த சுடித்தாரை தலை வழியே கழட்டாமல் நறுக்கினார்கள்.

அமிலம் பட்ட இடத்தை தண்ணீரை தவிர வேற எந்த திரவியத்தையும் ஊற்ற கூடாது. அமிலத்தின் வீரியத்தை குறைக்கவே தண்ணீர் ஊற்றுக்கின்றனர்.

கதிர்வேலும் தெய்வானையும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பதறியபடி வந்து சேர்ந்தனர்.

“எங்க மா என் பொண்ணுக்கு என்னாச்சி? கதிர்வேல் அங்கிருந்த பெண்ணிடம் பதறி கொண்டு கேட்க, அந்தப் பெண் நடந்ததை கூறி அவளது உடமைகளை கொடுத்துட்டு விட்டுச் செல்ல, பாட்டியும் அவர்களிடம், “அந்த குழந்தை ரொம்ப வலியில் துடிச்சுச்சிப்பா, இனி கடவுள் தான் காப்பாத்தனும்.” ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு விட்டு சென்றார்.

அவர்கள் சொன்னதை கேட்டு அப்டியே அதிர்ச்சியில் அமர்ந்து விட்டார் கதிர்வேல். தன் மகளின் நிலையை எண்ணி கலங்கிப் போனார் தெய்வானை. மருத்துவர் வெளியே வந்தார்.

“என் பொண்ணுக்கு என்னாச்சி டாக்டர்…?”

“இந்த கொரோனா காலத்துல, அடுத்த நொடி உயிரோட இருப்போமானு தெரியமா வாழ்ந்துட்டு இருக்க, இந்த நேரத்தில இப்படி ஒரு கோர சம்பவம் மேலும் மனசுல ரணத்தை தான் தருது. சரியான நேரத்தில சரியான முதலுதவி செய்திருக்காங்க. அமிலத்தோட வீரியத்தை குறைக்க முடிஞ்சது. ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கோம். இனி சர்ஜரி மூலமா முயற்சி பண்ணலாம்…” என்று பெரு மூச்சை இழுத்து விட்டு சென்றார்.

இருவரும் உள்ளே செல்ல திறனற்று போயிருந்தனர். அந்த அறைக்குள் நுழைய, இருவரது நெஞ்சமும் படபடவென அடித்துக் கொண்டது.

மெத்தையில் படுத்திருக்கும் தன் மகளை காண, இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. யாருக்கும் தீங்கு இழைக்காத தன் மகளுக்கா இது நேர வேண்டும்.

“அம்மா, ஸ்கூல்ல நடந்த சில்க் பிரின்ஸ்ஸ் போட்டியில எனக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ். அம்மா, எதிர் வீட்டு அத்தை என் மகனுக்கு மருமகளா வர்றீயா கேட்டு கொஞ்சினாங்க மா. அம்மா இந்த சுடி எனக்கு எப்படி இருக்கு…? அம்மா பப்ளுக்கு பொறாமை மா…” அவளது அழகை காரணம் காட்டி நிகழ்வுகளை கூறிடும் போதே அவளது கன்னங்கள் மேலும் சிவக்க, அவளை சுற்றி வழித்து நெற்றி முறிப்பார்.

இன்றும் அவள் கன்னம் சிவந்து தான் போயிருந்தது. நெருப்பில் வாட்டியது போல், அவளது தோல் உறிந்து உள்ளிருக்கும் நரம்புகள் வெளியே தெரியும் படி கிடந்தாள். கண்ணாடி அணிந்திருந்தமையால் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை. இல்லையென்றால் பார்வை இழந்து தவித்து இருப்பாள்.

“யாருங்க என் பொண்ணை கஷ்ட படித்தினது. இவ்வளவு கொடுமையா தண்டிக்கிற அளவுக்கு என் பொண்ணு யாருக்கு என்ன தீங்கு செய்தாள்? எதுக்குங்க அவளுக்கு இந்த தண்டனை? யார் வாழ்க்கைய கெடுத்தா என் பொண்ணு..? ஏங்க இப்படி நடந்தது அவளுக்கு…? அவள் முகத்தை பாருங்க…” அவரது சட்டையைப் பற்றி கதறினார் தெய்வானை.

கதிர்வேலால் வாயை கூட திறந்து பேச முடியவில்லை. நெஞ்சடைத்து மூச்சு முட்டியது அவருக்கு.

வெண்பிளான் ஒரு கையிலும் ஆக்சிஜன் மாஸ்க் முகத்திலும் மாட்டியிருந்தது. சுடரோ மயக்கத்தில் இருந்தாள்.

“இவ எழுந்ததும் என்ன பதில் சொல்ல போறோம்ங்க…” மீண்டும் தெய்வானை கதிரை உலுக்க, பாவம் அவர் தான் பேச்சின்றி சிலை போல சமைந்து விட்டார் மகளின் இக்கோர நிலையை கண்டு.


“இப்படி அமைதியா இருந்து என்னை ரொம்ப சோதிக்காத டா. யார் அவ மேல ஆசிட் அடிக்கச் சொன்னா? யார் கிட்ட பணம் வாங்கின? எதுக்காக அவ மேல் ஆசிட் அடிக்க சொல்லணும்? பதில் சொல்லு மாரி, எதுக்கு டா அவளை பழி வாங்கணும்…?” அவன் சட்டையை பற்றி கர்ஜித்தான் முத்து.

“எனக்கு எதுவும் தெரியாது முத்து. நம்ம செல்லா அண்ணே வரச் சொன்னாரு போனேன். அவர் கட்டு கட்டா பணத்தையும் கொடுத்து பொண்ணு முகத்துல ஆசிட் அடிக்கச் சொன்னார். எனக்கு பணம் தேவைன்றத விட, உனக்கு தான் தேவைன்னு தெரியும். அதான் டா இந்த டீலுக்கு ஒத்துகிட்டேன். பொண்ணு முகத்தை கூட பார்க்கல, போட்டோ கூட கொடுக்கல, நம்ம முனிய விட்டு அந்தப் பொண்ண ஃபாலோவ் பண்ணச் சொல்லிருக்கார் செல்லா அண்ணே. நம்ம முனி சொல்ல தான் டா நான் பஸ் ஸ்டாண்ட்க்கு போனேன்.” அவனும் முத்துவின் பிடியில் இருந்து அனைத்தையும் ஒப்புவித்தான்.

“ஆஆ… ஆ..” மண்டையை பிய்த்து கொண்டு கத்தினான் முத்து. “முத்து எதுக்காக டென்ஷன் ஆகுற? இதெல்லாம் நாம பண்ற வேலை தானே? ஏன் டா கோபப்படுற…? அக்கா ஆப்ரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதுனால தான் டா இதுக்கு ஒத்துக் கிட்டேன்…” அவன் அழுதவாறே சொன்னான்.

“அவ நான் காதலிக்கிற பொண்ணு டா. செயின அக்கிறதும், திருடுறதும், அடிதடினு வேலையா வச்சிருந்த என்னை மாத்துனவ டா அவ. ஒரு சொல்லு தான் எதுவும் வேணான்னு ஒதுங்கிப் போய் வாழ்ந்திட்டு இருந்தேன். அதுக்குள்ள என் கையால் அந்த பாவத்தை பண்ண வச்சிட்டீயே. எப்படி அவ முகத்துல முழிப்பேன். என் காதலை எப்படி நான் சொல்லுவேன்? கெட்டவனா இருக்கும் போது எல்லாம் கிடைச்சது. நல்லவனா மாறும் போது தான் சோதனை எல்லாம் வருமாடா…” தலையில் அடித்துக் கொண்டான்.

“செல்லா அண்ணனுக்கு போன் போடு, யார் இத பண்ணச் சொன்னான்னு கேளு…? அவனை வெட்டிக் கொன்னு போட்டு ஜெயிலுக்கு போறேன் டா.” என்றே ஆத்திரம் தாங்காமல் கத்தினான் முத்து.

“என்ன பேசுற நீ…? செல்லா அண்ணனுக்கு தெரிஞ்சா கொல பண்ணிடுவார் நம்மள… வேணாம் டா, பணத்தை வாங்கிட்டு உன் மாமா கையில் கொடுத்துட்டு வா எங்கயாவது போயிடலாம்.” என முத்துவை சமாதானம் செய்ய, இன்னும் அடங்காத கோபத்தலிருந்தவன்,

“முடியாது மாரி, நான் கொலவெறியில இருக்கேன். எனக்கு அவன் யாருன்னு தெரிஞ்சே ஆகணும். இதுல நான் பின் வாங்கிறதா இல்லை. யாரை எதிர்த்தாலும் பரவாயில்லை, அவன் யாருன்னு கண்டிப்பா எனக்கு தெரிஞ்சே ஆகணும். நீ செல்லா அண்ணனுக்கு போன போடு…” என்றவன் முடிப்பதற்குள் மாரியின் அலைபேசி அலறியது. எடுத்து பார்க்கச் செல்லா தான்.

“முத்து, செல்லா அண்ணே தான் கால் பண்றாரு …” என்றான். அவனிடமிருந்து போனை பறித்தவன் அதை இணைத்து காதில் வைத்து பேச முயலும் போதே, அவரே பேசினார்.

“வேலைய முடிச்சிட்டீங்களா…?”

“ஆம்.. முடிச்சுட்டோம் அண்ணா. ஆனா அண்ணா…” என்னும் போதே, அவரது கட்டளை மட்டுமே இருந்தது.

“யார் கண்ணுலையும் படாம, நம்ம இடத்துக்கு வந்து சேருங்க…” அவ்வளவு தான் அழைப்பு துண்டுக்கப் பட்டது.

“ச்ச…” தன் இயலாமையால் மண்ணை காலால் உதைத்தான்.

“என்னடா சொன்னார் செல்லா அண்ணே…?” அவன் முகம் பார்த்தான் மாரி.

“அவர் இடத்துக்கு நாம வரணுமா, நம்மல கூப்பிடுறார்.” என்றான்.

“வண்டியை எடு, இன்னைக்கு அவன் யாருன்னு தெரிஞ்சே ஆகணும்.” என்றே சபதம் கொண்டவன் மாரி பின்னே அமர்ந்தான். வண்டி சீறிப் பாய்ந்தது.

அந்த அறையில் இருவரும் உயிர்ப்பில்லாமல் இருந்தனர். கலைமதியிடம் இருந்து வந்த அத்தனை அழைப்பும் பதிலற்று போனது. சுடர் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். அங்கே அவர்களைக் காண, காவல் அதிகாரிகள் வந்தனர்.

“சார்… சார்…” இரண்டு முறை அழைத்த பின்பு தான் அவருக்கு உயிர்ப்பே வந்தது.

“எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்துச்சி சார். என்னாச்சி உங்க பொண்ணுக்கு…?” என்றதும் சுடரை காமித்தார் தெம்பின்றி,

சுடரை பார்த்தவர், தன்னோடு வந்த கான்ஸ்டபிளிடம் ஏதோ சொன்னார். பின்பு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.


இருவரும் செல்லாவின் அரிசி மண்டி குடோனுக்கு வந்தனர். அங்கு தான் அவனது அத்தனை தவறுகளுக்கான அஸ்திவாரமே. இருவரும் செல்லாவின் முன் நின்றனர்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன். அவர்களை மேலும் கீழுமாய் ஆராய்ந்தான்.

“உங்களை யாரும் பார்க்கல தானே…?” என்றவரின் கண்கள் இன்னொருவனை பார்த்து மீண்டது. அவனும் அவனது பார்வையைப் புரிந்து நான்கு பணக்கட்டுகளை எடுத்து வந்து மேசையில் வைத்தான்.

“இல்ல அண்ணே, யாரும் பார்க்கல. கூட்டம் கூடுறதுக்குள்ள, அங்க இருந்து தப்பிச்சிட்டோம்.”

“ம்… இந்தப் பணத்தை எடுத்துட்டு ரெண்டு பேரும் ஒரு மாசத்துக்கு எங்கயாவது போங்க. இங்க இருக்கவே கூடாது. உங்களை நம்மாட்கள் கவனிச்சிட்டே தான் இருப்பாங்க. சீக்கிரம் கிளம்புங்க.” என்றவன் எழுந்து கிளம்ப,

“அண்ணே, ஒரு நிமிஷம்.” என்றதும் செல்லாவின் கால்கள் நின்றன.

“டேய் சும்மா இருடா…” மாரி அவனை அடக்கியும் அடங்காமல் நின்றான் முத்து.

“அந்த… அந்த…” என்று மென்று முழங்கியவன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “அந்தப் பொண்ணு மேல் யாருண்ணே ஆசிட் அடிக்கச் சொன்னது…?”

“தெரிஞ்சு என்ன பண்ண போற…?”அவன் முன் நக்கல் பாணியில் கேட்டான் செல்லா.

“சொல்லுங்க அண்ணே, யாரு ஆசிட் அடிக்கச் சொன்னா…?” அதிலே நின்றான்.

“தெரிஞ்சு என்ன பண்ண போற…?” மீண்டும் கேட்க, “கொல பண்ண போறேண்ணே.” என்றான் அவர் முன் விறப்பாக நின்று. அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் நின்றான் மாரி.

9 thoughts on “மாண்புறு மங்கையே- 2”

 1. Avatar

  Idhellam acid adikarthuku munnadi yosikanum ipo poi kolapanna poren nu solra…ne kolapannitu poita mattum ava mugam thirumba kedaikuma ila avaloda ethirkaalam enna apadinu konjm Achu uruthutha da ungalukku….ne love panra ponnu nu ivlo pannitu thudikura idhae Vera ponnungalukka irundha feel panniruka matinga…. modhala ungala tan kollanum….

  Super super sis …. waiting for next ud

 2. CRVS 2797

  போடா கிறுக்கா..! உன் காதலியா
  இருக்கிறதால உனக்கு வலி தெரியுதா…? இல்லைன்னா யாரோ..? எவரோன்னு யார் மேல வேணுமினனாலும் ஆசிட் ஊத்திட்டு போயிடுவியா என்ன ??

 3. Kalidevi

  Oru thar sonnathukaga oru ponnu mela acid adichitu ipo vanthu ava ena mathunava na nallavan aeiten ava kitta love eppadi solla poren nikura ithula adika so sonnavana kolla poriya konnuta sari aeiduma ellama vazhnaal muluka eni ava evlo kasta padanum theriuma love pana ipo poi sollu un love antha mugatha nera pathu

 4. Avatar

  இந்த விஷயத்துக்கான முதலுதவி என்னன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்!!. இவனோட காதலி இல்லாம வேர பொன்னுன்னா ஆசிட் அடிச்சு காசு வாங்கிப்பானா???… எவ்வளவு சுயநலம்!!?

 5. Avatar

  இவன் காதலினால இவனுக்கு வலிக்குது இதுவே வேற பொண்ணா இருந்தா பரவயில்லையா … பாவம் பண்ணிட்டான் தண்டனை அனுபவிக்கன்னும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *