Skip to content
Home » மாண்புறு மங்கையே – 20

மாண்புறு மங்கையே – 20

அனைவரின் கவனமும் கார்த்திக் மேல் தான் இருந்தது. ‘ஏன் அவன் அவ்வாறு கேட்டான்.’ என்ற கேள்வி அனைவரின் எண்ணத்திலும் ஓட, கதிரே வாய்விட்டு கேட்டார்.

“என்ன சொல்ற கார்த்திக்? எதுக்கு சுடர, சென்னைக்கு கூட்டிட்டு போறேங்கற?”

“என்ன தான் நாம சிரிச்சு பேசிக்கிட்டாலும் இன்னும் நீங்க யாரும் வதனா பண்ணின துரோகத்தை மறக்கல. முக்கியமா கலை, நம்ம முன்னாடி அவ சிரிச்சாலும், உள்ளுக்குள்ள அவ கஷ்டப் பட்டுக்கிட்டு தான் இருக்காள். அந்தக் கஷ்டத்துல இருந்து அவளை வெளிய கொண்டு வரணும்ன்னா நிச்சயம் இங்க இருந்தால் அது முடியாது மாமா. ஏதாவது ஒரு இன்சிடெண்ட் அந்தத் துரோகத்தை ஞாபகம் படுத்தும். மீண்டும் மீண்டும் காயத்துல படுற கை போல மேலும் மேலும் ரணத்தை தான் கொடுக்கும். அதுக்கு அவ என் கூட சென்னைக்கு வந்தால் புது ஆட்கள் புது சூழல் எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல மாற்றத்தை அவளுக்கு கொடுக்கும் மாமா. அதுக்கு தான் கலைய சென்னைக்கு கூட்டிட்டு போறேன் சொல்றேன்.” என்று விளக்கினான்.

அவன் சொன்னதை யோசிக்க சுடரோ மறுத்தாள். “வேணாம் மாமா, நான் இங்கயே இருக்கேன். எனக்கு புது ஆட்கள் புது சூழல் எதுவும் வேணாம் மாமா. எனக்கு இவங்களே போதும் புது ஆட்கள்னு பழகி மீண்டும் ஒரு துரோகத்தை என்னால சந்திக்க முடியாது மாமா, ப்ளீஸ்” என்று பிளற்றினாள்.

“என்ன கலை சொல்ற நீ? இவங்களே போதும்ன்னா, வீடே கதினு இருக்க போறீயா? வீட்லே ஒரு மூலையில, துரோகத்தை நினைச்சிட்டு அழுது கரைய போறீயா? மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கறதில்லை.

அதுக்காக மனுசங்களே வேணாம் சொல்லி செவ்வாய் கிரகத்தில வாழ்வேன் சொல்வீயா? எல்லா வகையான மக்களும் இருக்கத் தான் செய்வாங்க, அவங்களை சகிச்சிட்டு வாழச் சொல்லல கடந்து போனு சொல்றேன்.

கால்பந்து விளையாட்டை எடுத்துக்கோயேன், ரெண்டு அணியா பிரிஞ்சு விளையாடுவாங்க, நண்பர்களாகவே இருந்தாலும் எதிரணியினரா, இருந்து விளையாடி கோல் கை பத்துவான். நண்பன்னு சொல்லி விட்டுக் கொடுக்க மாட்டான்.

அதே போல எடுத்ததும் கோல் போட்டால் அதுல என்ன சுவாரஸ்யம் இருந்திட போது கலை? நம்ம கோலை தடுக்க நாலு பேர் நம்ம கவனத்தை திசை திருப்ப நாலும் பேர் நம்ம வெற்றியை பறிக்க ஒரு கூட்டமே இருக்கும். அவங்க எல்லாத்தையும் மீறி கோல் போடுறதுல தான் இருக்கு விளையாட்டோட சுவாரஸ்யம்.

அதே போல, எடுத்ததும் உன் கனவை அடைஞ்சிட்டா உன் வாழ்க்கையில என்ன சுவாரஸ்யம் இருந்திட போது சொல்லு? இப்படி நாலு பேர் உன்னை கஷ்ட படுத்த, உன் லட்சியத்தை தடுக்கனு ஆட்கள் இருக்கத்தான் செய்வாங்க. அதை தாண்டி நாம நம்ம லட்சியத்தை அடையனும் கலை. நல்லா யோசி தயங்காத. இந்த முகத்தை வைச்சிட்டு என்னால அங்க இருக்க முடியுமா? வாழ முடியுமா? எண்ணி தயங்காத.

இது உன் முடிவு தான். இந்தக் முகத்தோட நான் ஜெயிக்கணும் சொன்னது நீ தான். முடிவு எடுத்த பிறகு தயங்கிறது ரொம்ப தப்பு. நீ என்னை நம்பி வா.” என்றான் விழிகள் முழுவதும் காதலை தேக்கி.

சுடர் தயங்கி தன் தாய் தந்தையை பார்க்க? அவர்களும் அவளை அவ்வாறே பார்த்தனர்.

“எதுக்கு இப்படி ஒருத்தருக்கொருத்தர் பார்த்து தயங்கறீங்க? எனக்கு கார்த்திக் சொல்றது தான் சரினு படுது. எப்படியும் என் பேத்தி அந்த வீட்டுக்கு போய் தானே டா வாழ போறா அனுப்பி வையேன். உனக்கு இப்போ அவளை அனுப்ப தயக்கமா இருந்தால் ரோகிணிய வர சொல்லி ரெண்டு குடும்பமும் பேசி கொஞ்ச சொந்த பந்தங்கள கூட்டி கல்யாணத்தை முடிச்சி மொத்தமா அவளை அங்க அனுப்பி வையிங்கிறேன். நமக்கு சுடரோட சந்தோசம் தான் டா முக்கியம். இங்க இருந்து அவ, அந்த சனியம் பிடிச்சவளோடு நினைப்புல அழுது வடியணுமா? என் பேத்திக்கு வந்த கஷ்டக்காலம் எல்லாம் ஒழியட்டும் டா. இனியாவது அவ சந்தோசமா இருக்கட்டும் அதான் பஸ் எல்லாம் ஓடுதே. என் மவளை வர சொல்லுடா, இதுக கல்யாணத்த பேசி முடிச்சிடுவோம்.” எனவும்

“அப்பா இப்ப தான்யா கிழவி ஒரு நல்ல யோசனை சொல்லிருக்கு. வயசானால் அறிவு மங்கு சொல்லுவாங்க, ஆனால் நம்ம கிழவுக்கு ஷார்ப்பாகுதே எப்படி?” மதி கிண்டல் செய்ய,

“ஆமாண்டி வயசான அறிவு மங்கும் தான். ஆனா உனக்கு என் வயசு வந்தாலும் அறிவே வளராது. பாரு மீன் சாப்பிட சொன்னால் குரங்கு கொய்யா பழத்த சாப்பிடுறது மாதிரி சாப்பிடுற.” எனக் கேலி செய்ய அனைவரும் சிரித்தனர்.

“உன்னை பெருமையா சொன்னேன் பாரு என்னை சொல்லனும்.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“ம்கூம் … கதிரு நீ என்ன முடிவெடுத்துருக்க?”

“ம்மா, இதுல நம்ம முடிவு மட்டும் முக்கியம் இல்ல, வாழ போற இவங்க முடிவு தான் முக்கியம். அப்றம் ரோகிணிக்கு…” என இழுத்தார்.

“ரோகிணிக்கு என்னடா?” அவர் கேட்க, கதிர் கார்த்திக்கையும் சுடரையும் கண்டு சொல்ல தயங்கினார். அவனுக்கு அவர் சொல்ல வந்தது புரிந்தது.

“அம்மாக்கு சுடர்ன்னா இஷ்டம் மாமா. கண்டிப்பா அவளை எந்த நிலையிலும் ஏத்துப்பாங்க. நான் இன்னும் சுடருக்கு நடந்த விஷயத்தை சொல்லல. சொன்னால் வருத்த படுவாங்கனு தான் மறைச்சேன். உண்மை தெரிஞ்சா என்னை என்ன கதி ஆக்கப் போறாங்க தெரியல.” எனக் கூறி சிரித்தவன், “நான் அவங்க கிட்ட பேசி வர சொல்றேன் மாமா. பெரியவங்க பேசி எந்த முடிவை பார்க்க சம்மதம் தான்.” என்று சுடரைப் பார்க்க, அவள் தலை குனிந்து வெட்கம் கொண்டவள், “எனக்கும்” என்று தன் தட்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

சுடர், ஒத்துக் கொண்டது தெய்வானைக்கும் கதிருக்கும் பெரும் பாரம் இறங்கியது போல இருந்தது.


பிடிப்பட்ட மூவரையும் நாளை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலையில் இறங்கினாள். தன் வக்கீலை கொண்டு ஜாமீனில் எடுப்பதாகக் கூறிய கணவனிடம், “முழு மனதோடு தான் இந்த தண்டனை ஏற்க போவதாக கூறிய வதனா, அவனது உடல் நலம் கருத்தி, “குடிக்காதீங்க ரித்திக். எனக்கு நீங்க வேணும் ப்ளீஸ்.” எனக் கெஞ்சி சத்தியம் வாங்க, தன் மனைவியின் சந்தோசத்திற்காக சத்தியம் செய்தான்.

முத்து அரஸ்ட் ஆன செய்தியை கேட்டு நாகராஜ் மட்டுமே அவனை சந்திக்க வந்திருந்தான். அவனிடம், “ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று விளக்கம் கேட்க முடியவில்லை, தன் மனைவிக்காக தானே செய்தான் என்ற குற்றவுணர்வு அவனுக்கு இருக்க, அவன் கையை பற்றி மன்னிப்பு கோர்வதை தவிர வேற எதுவும் செய்ய வில்லை.

மீடனின் ஆட்சி வானில் தொடர ஏகாந்த வேலையில் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“அப்படி என்ன மாமா யோசனை உனக்கு? நான் வந்தது கூட தெரியாம?” எனக் கேட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து அவனது புஜத்தில் தலை சாய்த்தாள்.

காதலாய் அவனுடன் அவள் பேசாவிட்டாலும் காதலை வாய் மொழியில் சொல்லாவிட்டாலும் மனமுழுக்க அவனை தான் நிறைத்து வைத்திருக்கிறாள். வெறும் மாமன் மகன் மட்டுமல்ல அவன் அவளுக்கு, நல்ல தோழன் அவளுக்கு. காதலாக இருவரும் பேசாவிட்டாலும் அனைத்தையும் பகிர்ந்து நல்லது கெட்டது அலசி அவனவளுக்கு தீர்வு சொல்வதும் கேலிக் கிண்டல் அறிவுறை அதட்டல் என அவளுக்கு எல்லாமுமாக இருக்கிறான்.

தன் புஜத்தில் தலை சாய்த்திருந்தவளின் தயக்கத்தை அறிந்தவன், அவள் தாடையை கை வைத்து முகத்தை நிமிர்த்தி அவள் காது மடல் அருகே வந்து, “நீ என் கூட வாழப் போறீயா? இல்ல உன் அத்தை கூட வாழப்போறீயா?” எனக் கேட்டு பெண்ணவளை சிவக்க வைக்க, அவன் கையை தட்டி விட்டு தன் வெட்கத்தை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளை பின்னே அணைத்தவன், தோளில் தாடையை பதித்து, “பதில்?” என்று கேட்க, பாவையவளோ அவள் கைச் சிறையில் சிறைப்பட்டு பறக்க துடிக்கும் பட்டாம் பூச்சியாக பறக்க காத்திருக்க மேலும் அவனே, “அம்மா, நிச்சயம் சம்மதிப்பாங்க. நீயும் நானும் ஹாப்பியான லைவ் வாழத்தான் போறோம் கலை.” என்று கன்னத்தில் இதழைப் பதிக்க, அவன் அசந்த நேரம் அவனது சிறையிலிருந்து பறந்து விட்டாள் அந்தப் பட்டாம் பூச்சி.

மறுநாள் அனைவரும் நீதிமன்றத்தில் கூடி இருந்தனர் தீர்ப்புக்காக.

10 thoughts on “மாண்புறு மங்கையே – 20”

  1. Avatar

    கார்த்திக் நிதர்சனத்தை பேசினான்!!… என்ன தீர்ப்பா இருக்கும்!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *